நன்றியுரை

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வணக்கம் தோழமைகளே..

நான் உங்கள் யுவனிகா... மூன்று வருடங்களுக்கு முன்பு வரை முரட்டு வாசகியாக இருந்த நான்... எழுத வந்து இன்றுடன் மூன்று வருடங்கள் ஓடி விட்டது. என்னுடைய எழுத்தை ஏற்று, பல லட்சோப லட்சம் எழுத்தாளர்கள் மத்தியில்… என்னையும் ஒரு எழுத்தாளர் என்று அங்கீகரித்த என் வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். என் முதல் கதையிலேயே எழுத்தாளர் யுவனிகா என்ற அடை மொழியை மறைய வைத்து... "உன்னுள் என்னைக் காண்கிறேன்.." யுவனிகா என்ற அடை மொழியை என் முதல் கதையிலேயே கொடுத்தவர்கள் நீங்கள்.. அதற்கும் என் வாசகர்களுக்கு நன்றிகள் பலப்பல...

இந்த மூன்று வருடத்தில் பெரியதாய் நான் எதையும் சாதித்து விடவில்லை. இதுவரை ஆறு கதைகள் எழுதி இருக்கிறேன்... குட்டியாய் ஒரு தளம் ஆரம்பித்து இருக்கிறேன்… அவ்வளவு தான்... ஆனால் நிறைய நல்ல நட்புகளை பெற்று இருக்கிறேன்..

இந்த மூன்று வருடத்தில்... சில பல சொந்த வேலைகள் இருந்ததால், ஒன்றரை வருடம் சரியாக எழுத முடியாமலே எனக்கு போனது. எல்லாம் முடித்து திரும்பி வந்து பார்க்கும் போது... எண்ணற்ற இளம் எழுத்தாளர்கள் உருவாகி இருந்தார்கள். பாராட்டுதலுக்குரிய நல்ல விஷயமே 👏👏👏. சரி தான்… இவர்களுக்கு ஈடாக என்னால் எழுத முடியுமா? அப்படியே நான் எழுதினாலும் வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற எண்ணம் வந்தது. ஏன் என்றால் என் முதல் கதைக்கான வாசகர்களை காலம் தாழ்த்தி வந்ததால் அவர்களை நான் இழந்தது என்னமோ உண்மை தான்... ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் என் எழுத்தை மறுபடியும் ஏற்றுக் கொண்டீர்கள்... Love u friends...😘😘😘😘😘😘💙💙💙💙💙💙💙😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏

வளரும் எழுத்தாளரான எனக்கு என் முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுத்து வரும் அன்பையும் ஆதரவையும் இனி வரும் என் அனைத்து கதைகளுக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு... Once again thanks to all my lovely readers.. வாசகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் நிச்சயம் எழுத்தாளர்களாகிய நாங்கள் இல்லை…🍫🍫🍫🍫🍭🍭🍭🍭🍭🍭🐝🐝🐝🐝🐝

என்னுடைய கதைகள்...

1. உன்னுள் என்னைக் காண்கிறேன்....
நாயகன் : தேவேந்திர பூபதி
நாயகி : மித்ரஹாசினி
Site link...
Amazon link..

2. உன் காதலில் வெண்பனியாய் நான் உருக....
நாயகன் : அஷ்வத் கென்டிரிக்
நாயகி : கருங்குழலி
Site link..
Amazon link...

3. நீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே...
நாயகன் : சிற்பிவர்மன்
நாயகி : ரதிதேவி
Site link...
Amazon link...

4. என்னைத் துரத்தும் உன் நினைவுகள்....
நாயகன் : சுவேஷ்நந்தன்
நாயகி : கீதயாழினி
Site link...
Amazon link...

5. உறவாக வேண்டுமடி நீயே..
நாயகன் : அபிரஞ்சன்
நாயகி : யுகநந்திதா
Site link...
Amazon link...

6. சாதி மல்லிப் பூச்சரமே!!!
நாயகன் : மதிவேந்தன்
நாயகி : பூந்தென்றல்
Site link..
Amazon link...


நன்றி

யுவனிகா🌺
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN