எனை மீட்டும் இயலிசையே -17

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
17


குலுமணாலி....தேனிலவு தம்பதிகளின் சுவர்க்கம்..

இயலும் சத்யாவும் சென்னையில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து பூந்தார் விமான நிலையம் சென்று... பின் மணாலியை அடைந்தானர்....

இமய மலையின் இருக்கும் மிகச் சிறந்த சுற்றுலா தளம் மணாலி ஆகும்..

"புஜ்ஜி குளுருதுடி... "

"எனக்கும் தான் புஜ்ஜிப்பா.... "

" சரி வா குளிரை கம்மி பண்ணலாம்... "

"உங்க சேட்டை பத்தி தெரியும்... சீக்கிரம் கிளம்புங்க... சுத்தி பார்க்க போகலாம்.... "

"புஜ்ஜிமா.... நான் என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன்...... "

"புஜ்ஜிப்பா ப்ளீஸ்பா.... எனக்கு ஆசையா இருக்கு.... "

"சரி.... பட் ஒன் கண்டிஷன்... இன்னைக்கு ஒன் பிளேஸ் தான் போகணும்... "

"என் செல்ல புஜ்ஜிப்பா... "என்று அவன் அருகில் வந்து அவன் கன்னத்தை கிள்ள.... அந்த திருட்டு கள்ளனோ...

அவளை இடையோடு அணைத்துக் கொண்டு படுக்கையில் விழ...

"பர்ஸ்ட் என் புஜ்ஜிமாவ பாப்பேனாம்...அப்புறம் மத்தத பார்ப்பேனாம்.... ஜில்லுனு இருக்கடி புஜ்ஜி "என்று அவன் வேலையை காட்ட துடங்க...

"திருட்டு புஜ்ஜிப்பா...."என்று செல்லமாய் வைதாலும் அவளும் இசைந்து குடுத்தாள்....

வெள்ளி மலைச் சிகரம்

பணி பூசிய பெண்ணாய்

மலைமகள் நானி சிரித்திட

சூரியனின் தீண்டலில்

பொன் வண்ணம் குழைத்தாள் !!!!

மங்கை இவளோ அவளை ஆண்டவன்

தீண்டலில் வெட்கம் குழைத்தாள்

பொன் வண்ண மேனியோ

குங்குமத்தில் குழைத்த

ரோஜாவாகி போனது !!!


பிறகு குளித்து ரெடியாகி நாகர் கோட்டை சென்றனர்...

இப்படி அவர்கள் அங்கு இருந்த நாட்களில் கதான் தெக்சோக்லிங் கோம்பா.... நியாங்காமாபா கோம்பா (புத்த மடாலயங்கள் )....பீமன் மனைவி ஹிடிம்பா தேவி ஆலயம்.....ஸ்னோ பாயிண்ட் என்று அழைக்கப் படும் சோலாங் பள்ளத்தாக்கு... மற்றும் பல இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்...

மணாலியில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்தனர்... அங்கிருந்து ஆக்ரா சென்று தாஜ்மஹாலை கண்கலங்க ரசித்தனர்...

"புஜ்ஜிப்பா... ஒருவேளை எனக்கும் ஏதாச்சும் ஆச்சுன்னா... என்ன பண்ணுவீங்க... "

"இப்படிலாம் பேசுனா அடிச்சுடுவேன்டி... வந்துட்டா லூசு மாறி பேசிகிட்டு... "என்று அவளின் அருகில் இருந்து வேகமாக எழ.... அவன் கை பிடித்து தடுத்து அமர வைத்த இயல்

"நெருப்புண்ணா வாய் வெந்தராது புஜ்ஜிப்பா... சொல்லுங்க புஜ்ஜிப்பா... "

" ஆனால் நீ சொல்றத கேக்கும் போது மனசு வலிக்கும்டி.. சரி சொல்றேன் கேட்டுக்கோ... என்னால உன்னை பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது... நீ இல்லைன்னு தெரியற அடித்த நொடி என் இதயம் துடிக்கறத நிறுத்திருக்கும்....போதுமா... "

"ஐ லவ் யூ புஜ்ஜிப்பா... ஐ லவ் யூ சோ மச்....உங்களுக்காகவே நான் நூறு வருஷம் நல்லாருப்பேன் புஜ்ஜிப்பா..."என்று கண்ணீருடன் அவனை கட்டிக் கொண்டாள்....

"லவ் யூ டி புஜ்ஜி... "



கல்யாண மண்டபம் பரபரப்பாக இருந்தது.... இன்று இரவு இனியனிற்கும் நிரஞ்சனாவிற்கும் நிச்சயதார்த்தம்... நாளை திருமணம்.....

நிரூவின் வீட்டில் அவசரப்படுத்தியதால் இசை சத்யா தேனிலவு முடிந்து வந்த ஒரு மாதத்தில் திருமணம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது....

இனியன் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.. அவனுக்கு வருத்தமாக இருந்தது...

திருமண பேச்சு ஆரம்பித்த பொழுதில் இருந்து நிருவிற்கு பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறான்... ஆனாலும் பேச முடியவில்லை... இப்பொழுது கொஞ்ச நேரம் முன்பு தான் நிச்சயம் கூட முடிந்திருந்தது...

அப்போது நிரூ இவனை திரும்பி கூட பார்க்க வில்லை.. ஒருவேளை அவளுக்கு தன்னை பிடிக்க வில்லையோ என்று நினைக்க தொடங்கி இருந்தான்... அந்த நினைப்பு கூட வேதனையாய் இருந்தது... அவளை அவன் அந்த அளவுக்கு நேசித்தான்... அவளிடம் காதலை சொல்லவில்லையே தவிர காதல் இல்லாமல் இல்லை...

"ஸ்வீட்டா.... என்னாச்சு... ஏன் கவலையா இருக்க... "என்று இசை கேட்க இவன் காரணத்தை சொன்னான்..

"அப்டிலாம் இருக்காது ஸ்வீட்டா.... அவளுக்கும் உன்னை பிடிக்கும்.. உனக்கு என்ன.... நிரூவ பாத்து பேசணும் அவ்ளோ தான... நான் பார்த்துக்கறேன்.... நீ மாடில போய் வெயிட் பண்ணு... நான் கூட்டிட்டு வரேன்.. "என்று சொல்லிவிட்டு மணமகள் அறையை நோக்கி சென்றாள்...

அவர்களிடம் சென்று புகைப்படம் எடுக்க அழைத்து செல்வதாக சொல்லிவிட்டு மாடிக்கு அழைத்து சென்றாள்...

"நிரூ.... அண்ணா உன்கிட்ட தனியா பேசணும்னு சொன்னாங்க.... நீங்க பேசிட்டு இருங்க.... நான் கீழ வெயிட் பண்றேன்.. "என்று படிகளில் இறங்கி ஓடியவளை வழி மறித்தான் சத்யா..

"புஜ்ஜிமா... எங்க போய்ட்டு வறீங்க.. "

"இனியா நிரூ கிட்ட பேசணும்னு சொன்னாங்க... அதான் ஹெல்ப் பண்ணிட்டு வந்தேன்.... "

"எல்லார்க்கும் ஹெல்ப் பண்ற... என்ன மட்டும் கண்டுக்க மாட்டின்ர.. "என்று சோகமாய் கன்னத்தில் கை வைத்தவாறு படிகளில் அமர்ந்தான்... இயலும் அவன் அருகில் அமர்ந்தாள்... அவன் தோளை இடித்து கொண்டே...

"என் செல்ல புஜ்ஜிப்பா... கல்யாண அலைச்சல்ல நமக்கு நிக்க நேரம் இல்லாம சுத்திட்டு இருந்தாலும் நைட் உங்க புஜ்ஜி உங்க கூட தான இருக்கேன்... அப்புறம் என்ன வேணும்... "

"போடி புஜ்ஜி.... ஐ மிஸ் யூ தெரியமா.. "

என்று அவள் மடியில் படுத்து கொண்டான்.... "

"நானும் புஜ்ஜிப்பா... "என்று அவளும் அவன் மீது சாய்ந்து கொண்டாள்...



மாடியில் நிரூ கைகளை காட்டியவாறு சுவரில் சாய்ந்து கொண்டு வெட்ட வெளியை வெறித்திருந்தாள்.... இனியன் அவளை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்......

"நிரூ.... "

"ஏன் என்கூட பேச மட்டின்ர.... போன் பண்ணா எடுக்க மாட்டிங்குற... என்னை உனக்கு பிடிக்கலையா... வீட்ல என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கம்ப்பல் பண்ணாங்களா ... "

அதுவரை அமைதியாய் இருந்தவள் அவனது இந்த பேச்சில் கோவம் கொண்டு அவன் சட்டையை பிடித்திருந்தாள்...

"என்ன சொன்னீங்க... எனக்கு உங்களை பிடிக்கலையா... உங்களுக்கு ரொம்பவே தெரியுமா... முதல்ல உங்களுக்கு என்னை பிடிக்குமா... சொல்லுங்க பிடிக்குமா.... "

அவளின் இந்த தாக்குதலை எதிர் பார்க்காதவன்... "ரொம்ப.....பிடிக்கும் நிரூ.... "

"அப்படி பிடிச்சதுனால தான் என்னை வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்க சொன்னீங்களா.... நீங்க சொன்னதா எங்க வீட்ல அப்பா சொல்லவும் நான் எப்படி துடிச்சு போனேன் தெரியுமா... என் காதல் பொய்யா போயிருச்சேன்னு நான் எவ்ளோ வேதனை பட்டிருப்பேன் தெரியுமா.... உங்க போனுக்காக எத்தனை நாள் தவிச்சுருக்கேன் தெரியுமா.... இப்ப எல்லாம் சரியான உடனே தான் என் நியாபகம் வந்துச்சா.. இவ்ளோ நாள் நான் பட்ட வேதனைல ஒரு பகுதியாவது நீங்க அனுபவிச்சீங்களா.... "என்று முகத்தை மூடிக் கொண்டு அழுத்தவளை இழுத்து அணைத்தான் இனியன்....

"அழாத நிரூ.... வெளிய சொன்னா தான் வேதனையா... என் காதலை நீ உணரலையா... எனக்கு இருந்த பிரச்சனைகள்க்கு உன் நினைவுகள் மட்டும் தான்டி மருந்து.... அதே நேரம் இசை அந்த நிலைமையில் இருக்கும் போது நான் மட்டும் எப்படி சந்தோசமா இருக்க முடியும் சொல்லு... நீ சொன்ன மாதிரி காதலை சொல்லல தான்... அன்னைக்கு குட்டிமா கல்யாணம் முடிஞ்சதும் உன்கிட்ட சொல்ல நெனச்சிருந்தேன்.. ஆனால் அதுக்கு அப்புறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே... ஆனாலும் என்னை மன்னிச்சுடு நிரூ... உன்னை கஷ்டப்படுத்துனதுக்கு.... "என்று அவள் முகத்தை நிமிர்த்தியவன்

"ஐ லவ் யூ நிரூ.... என்னை கல்யாணம் பண்ணிக்கறயா.... "

அவள் சந்தோசத்துடன் ஆமாம் என்று தலையசைக்க....

அவள் நெற்றியில் முத்த மிட்டு "தேங்க்ஸ்டா செல்லக் குட்டி... "

அவளும் அதே போல் முத்த மிட்டு "ஐ லவ் யூ செல்ல குட்டா... "

அப்புறம் சில பல பரிமாற்றங்கள் முடிந்து இருவரும் கீழே வந்தனர்...

"மாப்ள.... நாங்க கீழ வந்துட்டோம்... "

"நீங்க வேணா போங்க மச்சான்... என் பொண்டாட்டி கூட எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... "

"அடி வாங்க போறீங்கப்பா.... போய் தூங்கற வழிய பாருங்க... வா நிரூ போலாம்... "

சத்யா பாவம் போல் போனவர்களையே பார்த்து கொண்டிருக்க... "தேங்க்ஸ் மாப்ள.... "

"எதுக்கு மச்சா... "

"குட்டிமாவ இப்படி பாக்க சந்தோசமா இருக்கு..."

"என் புஜ்ஜிமா எப்பவும் இதே சந்தோசத்தோட வச்சுக்குவேன் மச்சா...வாங்க போலாம்....."

"என்னங்க அண்ணி உங்க மூஞ்சி டால் அடிக்குது.... "

"அடி வாங்குவடி.... ஒழுங்கா எப்பவும் போல கூப்பிடு... "

"ஆனாலும் அண்ணி.... ஓகே ஓகே.. நிரூ.... "

"ஹ்ம்ம் அது..... "

அப்போது இரு உறவினர் பெண்கள் இவர்கள் வருவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தனர்....

"ஏண்டி மாலா... அந்த இசை பொண்ண திரும்பவும் அவ புருஷன் சேர்த்துகிட்டான் போலவே... "

"ஆமாம் அக்கா... இப்ப தான் அந்த புள்ள மூஞ்சில சந்தோசமே தெரியுது... "

"ஏதோ அந்த பையன் நல்லவனா இருக்க போய் இந்த புள்ள பண்ண தப்ப மன்னிச்சுட்டான்.... வேற யாராவதா இருந்தா அந்த புள்ள வாழாவெட்டிய வீட்டுல தான் இருந்துருக்கும்.... "

இதை கேட்ட இசை வேதனையில் அறைக்கு சென்று அழ ஆரம்பித்தாள்...அவள் பின்னாடி வந்த நிரூ..

"இசை அழாதடி... அவங்க உண்மை தெரியாம பேசறாங்க..... இரு நான் சத்யா அண்ணாட்ட பேசறேன்... "என்ற நிரூவை தடுத்த இசை...

"வேண்டாம் நிரூ.... அவரு ரொம்ப பீல் பண்ணுவாரு ... விடு நான் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவேன்.... நீ தூங்கு... காலைல நேரமே எழுந்திருக்கணும்...

"சரி நீயும் தூங்கு.. "என்று சொல்லிவிட்டு நிரூ கொஞ்ச நேரத்தில் உறங்கிவிட....

இசை உறக்கம் வராமல் தவித்தாள்... அவள் புஜ்ஜிப்பாவின் மடியில் படுத்து அழ வேண்டும் என்ற மனதை கட்டு படுத்தினாள்.... வீணாக அவனை வேதனைப் படுத்த விரும்ப வில்லை...

சத்யாவோ இது ஏதும் அறியாமல் வேலையில் மூழ்கி இருந்தான்....

காலை நேரம்....

இனியன் மணவரையில் பட்டு வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தான்... அய்யர் பெண்ணை அழைத்து வர சொல்ல இசை நிரூவை அழைத்து கொண்டு வந்தாள்.... ரோஜா வண்ண பட்டில் அழகாய் வந்தவளை தன் கண்களில் நிரப்பினான் இனியன்...

அதே நேரம் சத்யாவின் கண்கள் இசை மீதே இருந்தது.... தனக்கு பொறுத்தமான துளிர் பச்சை நிற புடவையில் மிளிர்ந்தவளை ரசிக்க இரு கண்கள் போதவில்லை....

அப்போது தான் கவனித்தான் இயலின் முக வாட்டத்தை...... தங்கள் திருமண நிகழ்வு நியாபகத்திற்கு வந்திருக்கும் என்று நினைத்து கொண்டான்.....

இதை பற்றி இயலிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டான்....

அய்யர் மந்திரம் ஓத இனியன் நிரஞ்சனாவை தன்னவள் ஆக்கி கொண்டான்.....

இயலை பார்த்து கொண்டிருந்த சத்யா அவள் அறைக்கு செல்வதை பார்த்து அங்கு சென்றான்....

"புஜ்ஜிமா ஏன் ஒரு மாதிரி இருக்க... "

"ஒண்ணுமில்ல புஜ்ஜிப்பா.... நைட் சரியா தூங்கலை... தலை வலி... அதான்... " என்று சமாளிக்க... அதை அவன் நம்பவில்லை என்பது அவன் பார்வையில் தெரிந்தது....

"சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு... "

"இல்லப்பா.. முன்னாடி போய் வந்தவங்கள வரவேற்க நிக்கணும்.... "

"சரி வா.... நானும் வரேன்.... "என்று அவளை அழைத்து சென்றான்...

போகும்போது ஒரு பெண்மணி அவர்களிடம் வந்தார்.....

"ஏம்மா இசை இது உன் புருஷன் தான... "

"ஆமாம்... நீங்க..... "

"நான் உங்க அப்பாவுக்கு ஒன்னு விட்ட அக்கா.....உனக்கு அத்தை முறை வேணும்.... உன் கல்யாணத்துக்கு கூட வந்திருந்தேனே..... நீ ஏதோ ஏமாத்திட்டனு இந்த தம்பி கோவிச்சுக்கிட்டு போச்சு... இப்ப மன்னிச்சு ஏத்துக்கிச்சா.... "

சத்யா கை முஸ்டி இறுக ஏதோ சொல்ல போக இசை கையை பிடித்து தடுத்து விட்டாள்...... அந்த பெண்மணி மேலும் தொடர்ந்தார்.....

"ஏதோ இந்த தம்பியா இருக்கவும் மன்னிச்சுருச்சு.... நீ விரும்புனதா சொன்ன அந்த பையன் என்ன ஆனான்... "அதற்குள் ஒருத்தர் அந்த பெண்மணியை அழைக்க...

"ஏதோ நடந்தது நடந்து போச்சு... இனிமேலாவது நல்ல பொண்ணா நடந்துக்க பாரு...."என்றவர் சத்யாவிடம் திரும்பி....

"தம்பி சின்ன புள்ள ஏதோ தெரியாம தப்பு பண்ணிருக்கு... நீங்க எதும் மனசுல வச்சுக்காதீங்க...."என்று சொல்லி விட்டு சென்று விட்டார்....

தலை குனிந்து கண்ணீரை கஷ்ட பட்டு அடக்கி கொண்டிருந்த இயலை இழுத்துக் கொண்டு மாடியில இருந்த தன் அம்மா அப்பாவுக்கு என்று ஒத்துக்கப்பட்ட அறைக்கு சென்றான்...

"என்னை எதுக்கு இயல் பேச விடாம தடுத்த.... அந்த அம்மா அப்படி பேசிட்டு இருக்கு நீ பாட்டுக்கு தலை குனிஞ்சுட்டு நிக்கற.... "

"வேற என்ன பண்ணனும் சத்யா... ஒவ்வொருத்தர் கிட்டயா போய் நான் தப்பு பண்ணலனு சொல்லனுமா.. என்னால சொல்ல முடியாது..... அப்படி சொன்னா அவங்க உங்களை திட்டுவாங்க... அதை என்னால கேக்க முடியாது.... அதோட இது அண்ணா கல்யாணம்.... இதுல என்னால எந்த பிரச்சனையும் வரக் கூடாது... நீங்களும் யார் கிட்டயும் எதும் சொல்ல கூடாது...

"நான் எதும் சொல்லல போதுமா... நீ இப்படி பண்றது இன்னும் என்னை குற்றவாளி ஆக்குது... செய்.... உன் இஷ்டப்படி என்னவேணா செய்.... ஆனாலும் கண்டிப்பா இப்படி சொன்னவங்க வாயாலயே.. நீ நல்லவ எந்த தப்பும் பண்ணலனு சொல்ல வைப்பேன்... "என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியே சென்று விட்டான்....

அப்போது துளசி சந்திரன் புகழ் மூவரும் உள்ளே வந்தனர்....

"அவங்க பேசறத கேட்டேன் செல்லம்மா.... ஏன் இப்படி பண்ண....."

"என்னால சத்யாவை தப்பா பேசறத தாங்க முடியாது அத்த..... அவங்க பேசினதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லத்த... "

"வேண்டாம் செல்லம்மா.... உன் வாய் தான் சொல்லுது... ஆனால் கண்ணுல வேதனை தெரியுது.... "அவள் தலையை குனிந்து கொண்டாள்....

"அண்ணி கவலை படாதீங்க.... சத்யா கண்டிப்பா ஏதாச்சும் பண்ணுவான்..... உங்களால் எப்படி அண்ணாவ தப்பா பேசறத தாங்க முடியாதோ.... அதே மாதிரி தான் அவனுக்கும்.... "

"என் கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லார்கிட்டயும் போய் உண்மைய சொல்லிட்டு இருக்க முடியாது புகழ்.... காலப்போக்குல எல்லாரும் மறந்துருவாங்க.... "என்று சொல்லி விட்டு அறையை விட்டு சென்று விட்டாள்... மற்ற மூவரும் கவலையுடன் இருந்தனர்....

சுமித்ரா நாதன் இனியன் மூன்று பேருக்கும் எதும் சொல்லவில்லை.... சொன்னால் அவர்களும் வருத்தமடைவர் என்று....

திருமணம் முடிந்து இனியன் நிரஞ்சனா அவர்கள் வீட்டிற்கு வந்துவிட இசை அவர்களுடன் அன்று தங்கி விட்டு அடுத்த நாள் காலை அவர்கள் மறு வீடு சென்ற பின் இசை மதியம் போல தங்கள் வீட்டுக்கு வந்தாள்....

இந்த இடைப்பட்ட காலத்தில் சத்யாவுடன் பேசமுடிய வில்லை.... அவன் கோவமாக இருந்ததால் இயலை தவிர்த்து வந்தான்...

அன்று இரவு எல்லோரும் தூங்க சென்று விட்டனர்... இயல் சத்யாவிற்காக காத்து இருந்தாள்.....

அப்போது வந்த சத்யா இசை அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் மாடிக்கு செல்ல...

"சத்யா..... நான் இன்னும் சாப்பிடல... " என்று சொல்ல அவன் திரும்ப வந்து சமையல் மேஜையின் நாற்காலியில் அமர்ந்தான்..

இசை அவனுக்கு மட்டும் பரிமாற....

"உனக்கு தட்டு வைக்கல.... "

"ஏன் தனியா வேற தட்டுல தான் சாப்பிடணுமா..... "

"என்கிட்ட மட்டும் நல்லா பேசு.... என்று முணுமுணுத்தவன்... அவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே தானும் சாப்பிட்டு முடித்தான்....

இசை சமையல் அறையை சுத்தம் செய்ய.. சத்யா தன் அறைக்கு சென்றுவிட்டான்.... இசை வரும் பொழுது தூங்குவது போல் கண்களை மூடிக் கொண்டான்....

இசையும் அவன் அருகில் சென்று அவனை அணைத்த வாரு படுத்துக் கொண்டாள்....

"புஜ்ஜிப்பா....... "

"புஜ்ஜிப்பா.............. "

"ம்..... சொல்லு.... "

"கோவமா இருக்கீங்களா ?... "

"இல்ல...... ரொம்ப சந்தோசமா இருக்கேன் ..... "

கொஞ்ச நேரம் அமைதியாய் கழிய பின்னர் தன் முதுகில் ஈரத்தை உணர்ந்தவன் அவசரமாய் அவள் புறம் திரும்பினான்.....

" பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப எதுக்கு அழற..."அவள் அழுகை மேலும் அதிகம் ஆக....

"புஜ்ஜி அழாத......புஜ்ஜிமா..... என்ன பாரு.... எதுக்கு இப்ப அழற....."

"புஜ்ஜிப்பா... அவங்க பேசுனது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு தான்...... அதுக்காக உங்களை எப்படி அவங்க கிட்ட விட்டு தர முடியும்... நீங்க அதுக்கு கோச்சுக்கிட்டு என்கிட்ட பேச மாட்டிங்கறீங்க......"என்று மேலும் அழ.....

"உன்னை என் முன்னாடியே அந்த அம்மா அப்படி பேசும்போது என்னால எப்படி சும்மா இருக்க முடியும்.... எனக்கு மட்டும் கஷ்டமா இருக்காத... "

"சாரி புஜ்ஜிப்பா..... "

"நீ அழுகைய நிறுத்து.. நான் மன்னிச்சுடுறேன்.... "

"அது நிக்க மாட்டிங்குது.... நான் என்ன பண்றது..... "என்று குழந்தை போல் சொன்னவளின் அழுகை சிறிது நேரத்தில் முழுதும் நிறுத்தப்பட்டது....... அவனின் ஆழ்ந்த முத்தத்தால்.....

பிறகு இசை தந்த பரிசுகள் அவன் கன்னத்தில் கண்ணில் இதழில் பதிய

ஊடல் கலைந்து கூடலில் களைத்து புஜ்ஜிமா அவள் புஜ்ஜிப்பாவின் மார்பில் துயில் கொண்டாள்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN