எனை மீட்டும் இயலிசையே -18(final)

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

18

கடந்த மூன்று வாரமாகவே சத்யா ரொம்ப பிஸியாக இருந்தான்.... ஓரிரு நாள் வீட்டிற்கு கூட வரவில்லை.....

நாளை அவர்களின் முதல் திருமண நாள்.... இரவு பதினோரு மணி ஆயிற்று.... அவனுக்காக காத்திருந்து சாப்பாட்டு மேஜை மீதே தூங்கி போயிருந்தாள்.....

"புஜ்ஜிமா.... எழுந்திரு.... "என்று எழுப்ப... இசையும் கண்களை கசக்கி கொண்டே எழுந்து அமர்ந்தாள்.... மூன்று வாரமாய் சரியாய் பேசாததால் சிறு கோவம் சத்யாவின் மீது.... அதனால் எதும் பேசாமல் எழுந்து அவனுக்கு பரிமாற ஆரம்பித்தாள்...

"நான்தான் வர லேட் ஆகும்னு சொல்லிட்டு தான போயிருந்தேன்... இப்படி முழிச்சிருந்து ஏன் உடம்ப கெடுத்துக்கற.... சரி சாப்டியா.. "

இசை அதற்கும் பதில் சொல்லாமல் சமையல் அறைக்கு செல்ல முயல....

சத்யா அவளை தடுத்து தன் மாடியில் அமர வைத்து இசைக்கு ஊட்டிக் கொண்டே அவனும் சாப்பிட்டு முடித்தான்...

அவன் மேலே செல்ல... இசையும் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி விட்டு மேலே சென்றாள்....

சத்யா கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருக்க.... இசை இரவு விளக்கை போட்டு விட்டு படுக்கையில் அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள்....

சத்யா அவளை நெருங்கி அணைத்து அவள் கன்னத்தின் மீது தன் கன்னம் வைத்து படுத்து கொண்டான்...

"என் செல்ல புஜ்ஜிக்கு என்ன கோவம்.. "

"என் கிட்ட யாரும் பேச வேண்டாம்... "

அவளை திருப்பி தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன்... அவள் குழல் ஒதுக்கியவாறே....

"சாரிடி புஜ்ஜி.... ரொம்ப வேலை... அதான்.... நாளைக்கு ஈவினிங்ல இருந்து பிரீ ஆகிடுவேன்.... "

"போங்கப்பா.... எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா... "என்று கண்கள் கலங்க அவன் மார்பில் முகம் புதைத்தாள்...

நெஞ்சில் ஈரம் உணர்ந்தவன் "புஜ்ஜிமா இதுக்கெல்லாம் அழலாமா... "என்று கேக்க மேலும் அவனோடு ஒன்றினாள்..

அதில் கிறங்கி போனவன்... "புஜ்ஜிப்பா பேட் பாய் ஆகிடுவேன் புஜ்ஜி... "

"பரவாயில்ல.... " என்று முகத்தை விளக்காமலே கூறி மேலும் அவன் வேற்று மார்பில் குருகுருக்க

"கொல்லரடி... "என்றவன் அவள் கார் குழலில் கதை அளக்க இனிய சங்கீதம் இதமாய் மீட்ட பட்டது.

காலை இசை எழும் பொழுது சத்யா அருகில் இல்லை.... அன்று ஏனோ அனைவரும் பரப்புடன் இருந்தனர்... புகழும் வீட்டில் இல்லை... சந்திரனும் துளசியும் கூட ஏதோ விசேஷம் என்று மதியம் கிளம்பி சென்றனர்...

மூன்று மணி போல் சத்யா வந்தான்...

" புஜ்ஜிமா போய் குளிச்சிட்டு வா... ஒரு பக்கம் போகணும்...... "

"எங்கப்பா... "

"சஸ்பென்ஸ்.... சீக்கிரம் கிளம்பு... இல்லைனா... நானே குளிக்க வச்சிடுவேன்... "

"இல்லல்ல நானே போறேன் என்று ஓடியே போய் விட்டாள்.... "

குளித்து விட்டு வெளியே வந்தவள் கண்களில் ஒரு பரிசு பெட்டி பட்டது... அதை எடுத்து பார்த்தாள்... அதில்

"என் செல்ல புஜ்ஜிமாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.... "என்று எழுத பட்டிருந்தது.....

அப்போது அவளை பின்னிருந்து அணைத்த சத்யா

"ஹாப்பி அன்னிவெர்சரி டி புஜ்ஜி... ஐ லவ் யூ சோ மச் புஜ்ஜிமா.... "

"தேங்க்ஸ் புஜ்ஜிப்பா.... ஐ லவ் யூ டூ.. "

" இதை பிரிச்சு பாரு...."என்று பரிசு பெட்டியை சொல்ல.... இசை அதை பிரித்தாள்....

அதில் அழகிய வேலைப் பாடுகள் கொண்ட இள ரோஜா நிற லெஹங்கா இருந்தது.... அதன் அழகு கண்ணை பறித்தது....

"அழகா இருக்கு புஜ்ஜிப்பா.... "

"நீ போட்டுக்கிட்டா இன்னும் அது அழகா இருக்கும் புஜ்ஜிமா..."என்று சொன்னவன்

"ராஜி... இங்க வாங்க... "என்று அழைக்க... ஒரு இளம் பெண் உள்ளே வந்தாள்....

"புஜ்ஜிமா... இவங்க உன்னை ரெடி பண்ணுவாங்க..... நானும் போய் கிளம்பி வரேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்....

இசைக்கு எதுக்கு இப்போ இதெல்லாம் என்று தோன்றினாலும் தயாராக ஆரம்பித்தாள்......

கைகளில் கல் வைத்த ரோஜா நிற வளையல்கள் நெற்றியில் ஒற்றை ரோஜா போல் ஜொலித்த நெற்றி சுட்டி... கழுத்தில் இரு ரோஜாக்கள் பின்னியது போல் இருந்த நெக்லஸ்.... அதே மாடலில் காதணி... முடியை அலங்கார கொண்டையிட்டு அதன் ஒரு வளைவில் செயற்கை ரோஜாக்களை வைத்து முன்னால் இரு முடியை அழகாய் எடுத்து விட்டிருந்தனர்....

கண்களில் லேசான மை இட்டு இமைகளுக்கு லேசாக அழகூட்டி ரோஜா நிற இதழை மேலும் ரோஜாவாக்கி

மொத்தத்தில் நடந்து வரும் ரோஜா போலவே அழகாய் இருந்தாள்..

"மேடம்....ரொம்ப அழகா இருக்கீங்க.... என் கண்ணே பட்டிடும் என்று காதோரம் சிறு மை தொட்டு வைத்தாள்....

பிறகு அந்த பெண்ணும் கிளம்பி விட.. புதிதாய் ஒரு படபடப்பு நெஞ்சில் வந்தது.....

அப்போது உள்ளே வந்த சத்யா இசையை கண்டு லையித்து போய் நின்றான்... அவன் கண்கள் ரசனையுடன் அவளை நோக்கியது....

அவனும் அவளுடைய உடைக்கு ஏற்றவாரு ரோஜா நிற ஷெர்வாணி அணிந்திருந்தான்... அவன் கண்களை நேராக காண முடியாமல் தரையை பார்த்திருந்தாள்....

இசையின் அருகில் சென்ற சத்யா..

"புஜ்ஜிமா ரோஜா தோட்டம் மாதிரி ஜில்லுனு இருக்கற... உன் கண்ண விரிச்சு பாத்தா நான் பிளாட் ஆகிடுவேன்... இப்ப அதுக்கு மை போட்டு எழ முடியாம பண்ற.... அப்புறம் இந்த உதடு.... என்னை கூப்பிட்டுகிட்டே இருக்கு.... சின்னதா ஒரு முத்தம் வச்சுக்கவா.. லிப்ஸ்டிக் கலையாம...."

"போலாம்ப்பா... லேட் ஆச்சு.... "என்ற குரல் காற்றாய் தான் வந்தது....

"போலாம்... போலாம்... "என்று சொன்னவன் அவளை நோக்கி குனிய...

அந்த நேரம் பார்த்து கைபேசி அழைக்க...

"நிம்மதியா ஒரு முத்தம் குடுக்க விடமாட்டாங்க....."என்று அலுத்து கொண்டே அலை பேசியை எடுக்க... அந்த இடைவெளியில் இசை அவன் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு வெளியே சென்று விட்டாள்....

"ஹலோ.... ஹலோ.... சத்யா.... "

"என்னடா..... "

"சரி சரி கத்தாத....தொந்தரவுக்கு மன்னிக்கவும்.... லேட் ஆகிடுச்சு.... அதை சொல்ல தான் கூப்பிட்டேன்.... "

"வரேன் வரேன்.... "என்று சொல்லிவிட்டு கீழே சென்று பார்க்க இசை காரில் அமர்ந்திருந்தாள்... வீட்டை பூட்டி விட்டு... காரை ஸ்டார்ட் செய்தான்...

"எங்கப்பா போறோம்.. சஸ்பென்ஸ் தாங்கல.... "

"இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிற போகுது.... "

பின்னர் இருவரும் அமைதியாய்... வர வேண்டிய இடத்துக்கு வந்தடைந்தனர்...

அவர்கள் வந்த இடம் இசை சத்யா திருமணம் நடந்த மண்டபம்......

கீழே இறங்கி மண்டபத்தை பார்த்தவள் கேள்வியாய் சத்யாவை நோக்க... அவன் இசையின் கை பிடித்து அழைத்து சென்றான்...

அங்கு திருமண வரவேற்பு விழா என்று இவர்கள் இருவரின் பெயர் எழுதி இருக்க.. அதை பார்த்த இசை..

"சத்யா.... நமக்கா வரவேற்பு...... "

"ஆமா இயல்.... நமக்கு தான்..... "

"விளையாடாதீங்கப்பா... ஒன் இயர் கழிச்சு யாராச்சும் வைப்பாங்களா... "

"நான் வைப்பேன் புஜ்ஜிமா.... உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்..... உள்ள போலாம் வா.. "என்று உள்ளே அழைத்து சென்றான்...

மண்டபத்தின் உள்ளே சென்றவள் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது... அவர்கள் ஒட்டு மொத்த குடும்பம் இவர்களை வரவேற்றனர்....

அன்று திருமணத்திற்க்கு வந்த அனைவரும் வந்திருந்தனர்......

சத்யா இயலை மேடைக்கு அழைத்து சென்றான்....

பின் ஒவ்வொருவராக வந்து வாழ்த்து கூறி பரிசு கொடுத்து விட்டு சென்றனர்...

அப்போது அன்று இசையை பேசிய அத்தை வந்தார்.....

"இசைமா அத்தைய மன்னிச்சுடுமா... அன்னிக்கு உண்மை தெரியாம பேசிட்டேன்..... ஒரு வாரம் முன்னாடி சத்யா தம்பி வீட்டுக்கு வந்து எல்லா விஷயத்தையும் சொல்லுச்சு... நீ நல்ல பொண்ணுடா.... நூறு வருஷம் உன் புருஷன்னோட நல்லா இருக்கனும்" என்று வாழ்த்தி விட்டு சென்றார்...

இன்னும் சில பேர் கூட இப்படியே சொல்லிவிட்டு செல்ல இசையால் நிற்க கூட முடிய வில்லை... சத்யாவின் கைகளை அழுந்த பற்றி கொண்டாள்....

"என்னாச்சுடா.... "

அவள் ஒன்றுமில்லை என்று தலை அசைக்க... அவளை அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான்.... தானும் அருகில் அமர்ந்தான்...

"ரிலாக்ஸ்டா.... "

அப்போது தினேஷ்சும் அழகியும் மைக்குடன் மேடை ஏறினர்.......

"எல்லாருக்கும் வணக்கம்... எல்லாரும் எங்களை மன்னிச்சிடுங்க... நானும் அழகியும் இசையோட ஸ்கூல் பிரண்ட்ஸ்...இசை கல்யாணத்துல நடந்த பிரச்சனைக்கு நாங்க தான் காரணம்... "என்று சொல்ல கூட்டம் சலசலத்தது... இசையின் வீட்டிற்கும் சத்யாவின் குடும்பத்துக்கும் தெரியும் என்பதால் அமைதியுடன் இருந்தனர்....

தினேஷ் அன்று நடந்தவற்றை சொல்லி அதற்கான காரணத்தையும் சொல்லினர்..

அதன் பிறகு சத்யா எழுந்து மைக்கை வாங்கி பேசினான்......

"தினேஷ் அழகி பண்ணினது இயல் மேல இருக்க பாசத்துல பண்ணிட்டாங்க.... நான் தான் அவசரபட்டு தப்பா புரிஞ்சுட்டு தப்பு பண்ணிட்டேன் எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க..... "

"சூழ்நிலை மனுஷன தப்பு பண்ண வைக்குது.... மத்தபடி என்னோட நண்பர்களும் என் கணவரும் தப்பானவங்க இல்லை.... மன்னிப்பு கேக்க வேண்டியதும் இல்லை.... நீங்க எல்லாரும் வந்து கலந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி.... "என்று சொல்லிவிட்டு இசை கீழே இறங்க சத்யாவும் கீழே வந்தான்...

இசையிடம் வந்த அவளது தோழிகள் அனைவரும் சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்தனர்.....

பிறகு அனைவரும் சாப்பிட சென்றனர்....

இயலின் பக்கத்தில் சத்யா அமர்ந்து சாப்பிட..... இசை அவன் புறம் திரும்பவே இல்லை.... சாப்பிட்டு கொண்டிருந்த இசை திடிர் என்று எழுந்து ஓட சத்யாவும் பின்னே சென்றான்...

அங்கு இசை வாந்தி எடுத்து கொண்டிருந்தாள்..... அவள் அருகில் சென்று தலையை பிடுத்து விட்டான்.

"என்னாச்சு டா.... உடம்பு சரி இல்லையா... "

இசை எதுவும் பேசாமல் முகம் கழுவிக் கொண்டு விலகி செல்ல..

"இப்ப எதுக்கு என் கிட்ட மூஞ்சிய திருப்பிட்டு போற.....என்று கேட்க இயல் மயங்கி அவன் மீதே சரிந்ததாள்...

அவன் பதறி அனைவரையும் அழைக்க எல்லோரும் சேர்ந்து இசையை மருத்துவமனை அழைத்து சென்றனர்.... அங்கு இசையை பரிசோதித்து விட்டு வந்த மருத்துவர் இசை கர்ப்பமாக இருப்பதாக சொல்லி வாழ்த்திவிட்டு சென்றார்.....

சத்யா வேகமாக இசை இருந்த அறைக்குள் சென்றான்..... இசை சோர்வாக சாய்ந்து அமர்ந்திருந்தாள்....

"புஜ்ஜிமா..... நமக்கு ஒரு புஜ்ஜிகுட்டி வர போகறாங்க.... எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா... "

தன் அருகில் நின்ற அவனின் வயிற்றில் முகம் புதைத்து இடையை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்....

"என்னடா பண்ற.... இந்த மாதிரி நேரத்துல அழ கூடாதுடா.... "

"ஏன்ப்பா இப்படி பண்ணீங்க......... எதுக்கு எல்லார்கிட்டயும் போய் மன்னிப்பு கேட்டீங்க..... என் சத்யா யார் கிட்டயும் மன்னிப்பு கேக்க கூடாதுப்பா... எனக்கு சந்தோசமாவே இல்லப்பா.... "

"அப்டிலாம் சொல்ல கூடாது.... உன்னை யாரும் எங்கயும் எதும் சொல்லக் கூடாதுடா... "

"ஆனாலும்... "என்றவளின் உதட்டில் ஒற்றை விரல் வைத்தவன்...

"உஸ்ஸ்.... புஜ்ஜிமா.... இனிமேல் அதை பத்தி பேச கூடாது.... நம்ம திங்கிங் எல்லாம் நம்ம புஜ்ஜிகுட்டி மேல தான்..."என்று அவள் வயிற்றில் முத்தம் வைக்க

"புஜ்ஜிப்பா... கூசுது..... "என்று கூச்சத்தில் நெளிந்தாள்.....

"யப்பா சத்யா.... உங்க ரொமான்ஸ் முடிஞ்சா நாங்க உள்ள வரலாமா.... "என்று புகழ் கேட்க..

சத்யா இசையின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு அனைவரையும் அழைத்தான்....

அனைவரும் வந்து வாழ்த்து சொல்லி சத்தம் போட.... நர்ஸ் வந்து கூட்டம் போட வேண்டாம் என்று சொன்ன பின் ஒவ்வொருவராக வெளியே சென்றனர்....

கடைசியாக அழகியும் தினேஷ்சும் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தனர்....

"இசை அவங்கள மன்னிச்சிரேன்.. "

இசை அவர்கள் இருவரையும் அருகில் அழைத்தாள்.....

"சாரி இசை... "

"எத்தனை தடவ தான் கேப்பீங்க.... உங்க மேல இருந்த கோவம் எப்பயோ போயிருச்சு..... என் மேல அவ்ளோ பாசமா..... உங்கள போல பிரண்ட்ஸ் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்.....ஐ லவ் யூ பிரண்ட்ஸ்... "என்று இருவர் கைகளையும் பிடித்து கொண்டாள்...

"தேங்க்ஸ் இசை.... எங்களை புரிஞ்சிக்கிட்டதுக்கு.... "என்று சொல்லும் போதே குரல் கரகத்தது.....

"பிரண்ட்ஸ்குள்ள நோ தாங்ஸ் "

"நோ சாரி..... "

ஒரு வழியாக பாசப் போராட்டம் முடிந்து இசை சத்யாவுக்கு தனிமை குடுத்து வெளியே சென்றனர்.....

அவர்கள் சென்றபின் சத்யா இசையை கையில் ஏந்தினான்...

"அழகு புஜ்ஜிமா...... "என்று சொல்லி அவள் இதழை சிறை பிடித்தான்....

ஐந்து வருடங்கள் கழித்து.......

" சித்தப்பா...... சித்தப்பா..... எழுந்திருங்க..... "என்று புகழை எழுப்பி கொண்டிருந்தாள் இயல் சத்யாவின் செல்ல மகள் யாழினி....

"யாழ் குட்டி....சித்தப்பா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன்டா.... டையர்டா இருக்கு..... "என்று மீண்டும் தூங்க செல்ல....

"சித்தப்பா..... அதெல்லாம் முடியாது..... எழுந்திருங்க..... டான்ஸ் ஆடலாம்.... "

"போய் உங்க அப்பா கூட ஆடு செல்லம்... மீ பாவம்.... "

"அப்பா அம்மா கூட ஆடிகி ட்டு இருக்காங்க.... அவங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாது... நீங்க சும்மா தான தூங்கறீங்க... வாங்க ஆடலாம்... "

"இதுக்குன்னே... நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்.... "

"நீங்கல்லாம் 90's கிட்ஸ் சித்தப்பா.... அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க.... "

"நல்லா வளத்து வச்சிருக்கீங்கப்பா புள்ளைய.... "

"சித்தப்பா............. "

"இருடா வரேன்..... சரி என்ன பாட்டு "

"ரவுடி பேபி........ "

"இன்னைக்குமா....... "

"ப்ளீஸ் ப்ளீஸ்...... "

"அம்மாக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு.... "என்று புலம்பிக் கொண்டே பாட்டை போட்டான்....

ஹே என் கோலி சோடாவே

என் கறி கொழம்பே

உன் குட்டி பப்பி நான்

டேக் மீ டேக் மீ

ஹே என் சிலுக்கு சட்ட

நீ வெயிட்டு காட்ட

லவ் சொட்ட சொட்ட

டாக் மீ டாக் மீ

ஹே மை டியர் மச்சான்

நீ மனசு வெச்சா

நம்ம ஒரசிக்கலாம்

நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

ஹே மை டியர் ராணி

என் ட்ரீம்'ல வா நீ

நம்ம ஒண்ணா சேர

பயர் பத்திக்கிருச்சா.....

புகழும் யாழினியும் கீழே புகழ் அறையில் ஆட.... மேலே சத்யாவின் அறையில்.....

ஏய்.......

எனக்கு உன் மேலதான்

உனக்கு என் மேலதான்

ஏதோ ஒண்ணே ஒண்ணு இருக்கு

லைட்டா புத்தி வர

லூசா சுத்தி வர

ஓகே சொல்லுரியா எனக்கு எனக்கு

ஆர்ட்டுக்குள்ள ( Heartukulla ) பச்ச குத்தியே

போகாத என் பச்சக் கிளியே

பேசாம நீ பத்த வச்சியே

காட்டு கொஞ்சம்

பச்ச பச்ச பச்சக் கொடியே

ஆர்ட்டுக்குள்ள பச்ச குத்தியே

போகாத என் பச்சக் கிளியே

பேசாம நீ பத்த வச்சியே

காட்டு கொஞ்சம்

பச்ச பச்ச பச்சக் கொடியே....

என் பச்சக் கிளியே

என் பச்ச பச்ச பச்சக் கொடியே

என் பர்ஸ்டு லுக்குலயே (Firstu looku)

உசுர விட்டேன்

பெஸ்ட்டு பிரண்ட எல்லாம்

கலட்டி விட்ட

அய்யோ பாவமுன்னு

ஓகே பன்ற

இல்ல இல்ல இல்ல

திங் பண்ணி சொல்ற

அடடா கண்ணம்மா

என்ன பொன்னம்மா

ஹாட்டு வாட்டரதா

ஆர்ட்டுக்குள்ள ஊத்திட்டியே மா

வா வா செல்லம்மா

பீலிங்ஸ் என்னம்மா

லவ்வ சொல்றதுக்கு

லாஜிக் எல்லாம் பாக்குறியே மா

எனக்கு உன் மேலதான்

உனக்கு என் மேலதான்

ஏதோ ஒண்ணே ஒண்ணு இருக்கு இருக்கு

லைட்டா புத்தி வர

லூசா சுத்தி வர ஓகே சொல்லுவனே

உனக்கு உனக்கு

ஆர்ட்டுக்குள்ள பச்ச குத்தியே.....

போகாத யா பச்சக் கிளியே

ஏய்

ஆர்ட்டுக்குள்ள பச்ச குத்தியே

போகாத என் பச்சக் கிளியே

பேசாம நீ பத்த வச்சியே

காட்டு கொஞ்சம்

பச்ச பச்ச பச்சக் கொடியே

ஆர்ட்டுக்குள்ள பச்ச குத்தியே

போகாத என் பச்சக் கிளியே

பேசாம நீ பத்த வச்சியே

காட்டு கொஞ்சம்

பச்ச பச்ச பச்சக் கொடியே

என் பச்சக் கிளியே

என் பச்ச பச்ச பச்சக் கொடியே...

என் பச்ச பச்ச பச்சக் கொடியே...

என் பச்ச பச்ச பச்சக் கொடியே....

சத்யாவும் இசையும் அடி களைத்து இருந்தனர்.....

"ஹா...... புஜ்ஜிப்பா.... முடில...மூச்சு வாங்குது....... "

"ஆமாம் புஜ்ஜி..... ஆனால் நீ முன்னாடி விட செமயா ஆடர...."

"போங்கப்பா.... டெய்லியும் இதே தான் சொல்ரீங்க.... எனக்கு வேலை இருக்கு.... நான் கீழ போறேன்... "

"இரு என்ன அவசரம்.... "என்று இழுக்க அவன் மீதே வந்து விழுந்தாள்....

ஆடியதால் முகம் முழுதும் வேர்த்து இருக்க அதை தன் முகம் கொண்டு துடைத்தவன்.. அவள் வெற்றிடையை பற்றி மேல தூக்கினான்....

இசை அவன் தோளில் கை ஊன்றி அவன் முகத்தோடு தன் முகத்தை உரசினாள்....

"ஒண்ணா குளிச்சிட்டு கீழே போலாம்... "

"வேண்டாம்.....வேண்டாம் புஜ்ஜிப்பா.... "

"உன் வாய் தான் வேணாங்குது...உன் கண்ணு வேணும்னு சொல்லுதே... "

"திருடன்..... கண்டு பிடுச்சுட்டான்... "என்று வெட்கம் கொண்டு...

"போங்க புஜ்ஜிப்பா.... "

"இப்படி சிணுங்கி சிணுங்கியே ஆள கவுத்துடு.... "என்று அவளை அள்ளி கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து ஷவறை திருகினான்....

"புஜ்ஜிப்பா.... யாழ் குட்டி வந்துருவா.... "

"அவ சமத்துடி.. நம்மள டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு... அவங்க சித்தப்பா கூட ஆடிட்டு இருப்பா..... "என்று அவளை இறுகி அணைக்க

"புஜ்ஜிப்பா..... "என்ற குரல் காற்றாய் வரும் முன் அவள் இதழை சிறை பிடித்திருந்தான்.......

என் கண்ணுக்குள் நுழைந்து

இதயம் வருடி

இதமாய் காதல் சுகம் தந்து

உன் பிரிவால் நான் இறந்து

உன் வரவால் மீண்டும் உயிர்

பெற்றேன்...

உன் ஒவ்வொரு அசைவும்

என் உயிருக்குள் நுழைந்து

எனை தீண்டிட

என் வாழ்வில்

உன் புன்னகையால்

எனை மீட்டிடும் இயலிசையே...

சுபம்

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN