😍💘உனக்காக வாழ நினைக்கிறேன், அத்தியாயம்-8💘😍

Priyamudan Vijay

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
8

“ஆமா டி.. ஷர்மிளாவ கொன்னதே நான் தான்..” என்று ப்ரனீஷ் கூறவும்,
“டேய்.. ஏன் டா அப்படி செஞ்ச...?” என்று ஷண்மதி கேட்கவும்..
“அவளும் உன்னைய மாதிரி தான்.. பெரிய துப்பறியும் நிபுணர்னு நினைப்பு.. நான் எவள என்ன செஞ்சா அவளுக்கு என்ன? நான் இதுவரைக்கும் நிறைய பெண்கள நாசம் பண்ணிருக்கேன். யாருட்டையுமே மாட்டிக்கல.. ஆனா, இந்த அர்ஜூனோட ஆஸ்பித்திரில வேலை பார்க்குற நர்ஸ் கிட்ட நெருங்கும் போது, இந்த ஷர்மிளா பார்த்துடுச்சு. அந்த நர்ஸ் என்னைய பத்தின எல்லாத்தையும் ஷர்மிளா கிட்ட சொல்லிட்டா. இத அர்ஜூன் கிட்ட அவ சொன்னா, என்னைய போலிஸ் கிட்ட அனுப்பிடுவான் அவன். அதான் அவள கொல்லாம்னு நினச்சேன். அதுக்கு சரியான சந்தர்ப்பமா தான் கேமரால் நீர்வீழ்ச்சி பாலத்தில நடந்த சம்பவம். அர்ஜூன் அடிக்கையில நான் தான் அவள தள்ளிவிட்டேன். அர்ஜூன் என்னமோ அவன் அடிச்ச வேகத்துல தான் ஷர்மிளா கீழ செத்துச்சுனு நினச்சுட்டு இருக்கான். பிரபாவும் நம்பிட்டான். போலிஸ் பிரச்சன கூட இல்லாம பண்ணிட்டான் பிரபா. எனக்கு வசதியா போச்சு. அப்பறம் பார்த்தா, இந்த ஷர்மிளா செத்தாலும் ஆவியா வந்து துறத்துனா. அவளுக்கு பயந்து நான் இருக்கையில தான் பிரபா, அர்ஜூன விட்டு ட்ரீட் பண்ண சொன்னான். ஆனா, ஷர்மிளா.. அர்ஜூன் இங்க மொரிஸியஸ் வந்ததும் என்னைய தொல்ல பண்ணுறத நிறுத்துச்சு. ஹப்பானு நினச்சேன்...பார்த்தா, நேத்து வந்து, ‘நீ தான் என்னைய கொன்ன-ங்கற விசயம் நாளைக்கே எல்லோருக்கும் தெரிய போகுதுனு சொன்னா.. அதுக்கேத்த மாதிடி நீயும் என்னைய பின்தொடர்ந்த.. உன்னைய விட்டுபிடிச்சு ஷர்மிளா மாதிரியே போட்டு தள்ளிடலாம்னு முடிவு பண்ணேன்.. இப்போ அதான் பண்ணப்போறேன்....” என்று அவளை பென் எடுத்து அவள் கழுத்தில் குத்த முயர்ச்சிக்க.. உடனே கதவைத் திறந்துக்கொண்டு, பிரபாவும், அர்ஜூனும் வந்தனர். இதை சற்றும் எதிர் பாராத ப்ரனீஷ்..முதலில் ஷண்மதியை குத்தப்போக.. அவளோ, த துப்பட்டாவில் மாட்டியிருந்த ஊக்கை வத்தி ஒரே குத்து குத்தினாள். ப்ரனீஷ் வலியில் அலறிய நொடியில், அவனத் தள்ளிவிட்டு மாடிப்படியில் ஏறினாள்..பிரபாகரன், அர்ஜுன் அவனை அடிக்க.. இருவரின் மூட்டிலும் பேனாவை வைத்து குத்தி..இறக்கினான்.. அப்பொழுது தான் அர்ஜூனுக்கு புரிந்தது அது வெறும் பேனா அல்ல, கனமான ஊசி என்று. வலியில் இருவரும் கத்த.. ப்ரனீஷோ,
“இன்னும் கொஞ்ச நேரத்துக்கு உங்கனால அசைய முடியாது டா. அதுக்குள்ள..அர்ஜூனோட அன்புக் காதலிய கொன்னுட்டு வந்திடுறேன். அது என்னவோ அர்ஜூனோட பொண்டாட்டியும் என் கையால தான் செத்துச்சு... அவன் காதலியும் என் கையால தான் சாக போகுது.. பை-பை..!!!!” என்று கூறிவிட்டு மாடிக்கு விரைந்தான் ப்ரனீஷ்.
ப்ரனீஷ் மொட்டை மாடிக்கு வருவான் என்று சற்றும் எதிர்பாராத ஷண்மதி, பின்நோக்கி நடக்க.. ப்ரனீஷ், கையில் அந்த ஊசிப்பேனாவுடன் நடந்து முன்னேறினான்.. பயத்தில், ஷண்மதி பின்னே பின்னே சென்று, கட்டிடத்தின் நுனியில் நின்றாள். அவன் பேனாவை ஓங்கி குத்தவர, அதற்க்குள் போலிஸுடன் அர்ஜூனும், பிரபாகரனும் மாடிக்கு வந்துவிட்டனர்..
“ஹான்ட்ஸ்-அப்” என்று போலிஸ் துப்பாக்கியை வானை நோக்கி சுட..அந்த சத்தத்திற்க்கு அதிர்ந்த ப்ரனீஷ், பேனாவைக் கீழே போட்டான். ஆனால், அதே நேரத்தில் இந்த சத்ததில் மிரண்ட ஷண்மதி, அதிர்ச்சியில் கால் நழுவி, அந்த அந்து மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தாள். ப்ரனீஷுக்கு விளங்குப் போட்டுக்கொண்டிருந்த போலிஸ், அர்ஜூன், பிரபாகரன் அனைவரும் கட்டிடத்தின் நுனியில் இருந்து பார்க்க, தலையில் இரத்தம் வழிய, இருந்தாள் ஷண்மதி.
“ஷண்ண்ண்ண்மதிதிதிதி...” என்று அந்த இடமே அலற கத்திய அர்ஜுனிடம் பிரபா,
“ஷண்மதி, நம்ம கிட்ட காலையிலே எல்லாத்தையும் சொன்னதால நம்ம, முன்னாடியே வந்துட்டோம். ஆனாலும்....” என்று இழுக்க..
“காப்பாத்த முடியல....” என்று, மண்டியிட்டு கத்தி அழுதான் அர்ஜூன்.
“உன்னைய உயிரா நேசிச்சும், அத உங்கிட்ட சொல்ல முடியாம தவிச்சேன்... ஷர்மிளாவோட இழப்புனால, நான் போலிஸ் கிட்ட சரணடையுற நிலை வரும்போது, நீ தனியா நின்னுடுவியேனு தான் மதி, உங்கிட்ட என் காதல மறச்சேன்... ஆனா, நீ இப்படி என்னைய நிரபராதியா ஆக்கிட்டு நீயும் என்னைய விட்டுப் போயிட்டியே மதி...” என்று கதறி அழுதுக்கொண்டிருந்தான் அர்ஜூன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN