பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 5

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member




பிரம்ம கமலம் அல்லது நிஷகாந்தி (Epiphyllum oxypetalum) என்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர் பூக்க்க்கூடிய தாவரமாகும். இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடியாகும்.[1] இதன் வெண்ணிறம் கொண்ட மலரானது, மூன்றுவிதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். இந்த மலரானது பொதுவாக சூலை மாதத்தில் இரவில் மலர்ந்து சில மனிநேரங்களில் குவிந்துவிடும்.

இத்தாவரம் தென் அமெரிக்காவின், மெக்சிக்கோ காடுகளைக் பிறப்பிடமாக கொண்டது. அங்கிருந்து இது உலகமெங்கும் பரவியுள்ளது. இது பரவிய இடங்களில் இதைச்சுற்றி உள்ளூர் தொன்மங்களும் முளைத்துள்ளன. இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்று அறியப்படுகிறது. புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகில் பூவாக வருவதாக அவர்கள் கருதுகின்றனர். ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்று இது அறியப்படுகிறது. ஏசு பிறந்தபோது அவரைக்காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக இதை அவர்கள் பார்க்கின்றனர்.[2]

இது தமிழ்நாட்டிலும் பரவலாக வளர்கிறது. இது கள்ளி இனத்தைச் சேர்ந்ததால் இதன் தண்டை வெட்டி வைத்தாலே இது வளரக்கூடிய தன்மை கொண்ட செடி ஆகும்.[3]


பூ 5


சுட்டெரிக்கும் சூரிய கதிர்கள் தன் ஆதிக்கத்தை மண்ணில் செலுத்திக்கொண்டு இருக்க "அம்மா பஸ் வந்துட போகுது லஞ்ச பாக்ஸ் ரெடியா" என்று தன் தலை பின்னலை சரி செய்தபடி அவசர அவசரமாக கேட்டாள்.

அடுப்படியில் வேலையை பார்த்துக் கொண்டு இருந்த மரகதம் டேபிள் மேலதான் வைச்சி இருக்கேன்…. கண்ணே தெரியாது இரு வறேன்..." என்று தன் முந்தானையால் லஞ்ச் பாக்ஸை துடைத்து அவளிடம் நீட்டியவர் "அவசரம், அவசரம், எல்லாத்துலேயும் அவசரம் எது எங்க இருக்குன்னு பாக்குறது இல்ல... எல்லாம் கையில எடுத்து கொடுக்கணும்... காலைல கொஞ்சம் சீக்கிரமா எழுந்திரிச்சாதான் என்ன?" என்று தலையில் ஒரு கொட்டு வைக்க

ஆ... என்று கத்தியவள் "லஞ்ச் பாக்ஸ் வைக்கும் போதே இங்க வைக்கிறேன்னு சொல்லனும் அதுக்கு போய் கொட்டுவாங்களா?" என்று முகத்தை சுருக்கி தலையை தேய்த்தபடியே லஞ்ச் டப்பாவை வாங்கி தன் பேகில் வைத்துக் கொண்ட தேவா தாயை முறைத்தபடி கிட்டதட்ட ஓடினாள் என்றே சொல்ல வேண்டும்.

கல்லூரிக்கு நேரத்திற்கு செல்லும் பழக்கம் உடைய தேவாவிற்கு இன்றைய தாமதத்திற்கு காரணம் விசாகன் தான். தன்னை பார்க்காமல் சென்று விட்டானே என்ற கடுப்பில் தாயை முறைத்த வண்ணமே சுற்றி கொண்டு இருந்தவளின் கோபம் விசாகனின் மேல் பாய்ந்தது... கூடவே மனது சுந்தரன் அலைபேசியில் கூறிய விசா என்ற அழைப்பில் வந்து நின்றது. 'விசான்னு கூப்பிட்டாங்களே அவரு பெயர் என்னவா இருக்கும் விஸ்வா வா... விஷ்ணு வா…. இல்லை விஸ்வமா... என்னவா இருக்கும்... விசா ஆனா நல்லாதான் இருக்குல' என்று மனதில் நினைத்து… விசா விசா என்று ஓசை இல்லாமல் அழைத்து அவனின் பெயரை ஆராய்ந்து கொண்டே இருந்ததில் இரவு நேரம் கழித்து உறங்கி விட காலை எழுந்து கொள்ள தாமதமாகியது..


'மக்கு மக்கு' என்று தலையில் தட்டிக் கொண்டவள் 'நைட்டு முழுக்க சிடு மூஞ்சிய பத்தியே யோசனை பண்ணிக்கிட்டு இருந்ததுல காலைல எழுந்துக்க நேரம் ஆகிடுச்சி இப்போ பஸ் போயிருக்கும் சே…. அவன் பேர் என்னவா இருந்தா உனக்கென்ன… இப்போ என்ன பண்றது என்று வீதியில் புலம்பியபடி நடந்தவளை "ஹே… தேவா வா வா சீக்கிரம் வா" என்று மேகலா பஸ்ஸில் இருந்தபடி அவளை அழைக்கவும் அவசரமாக ஓடிவந்து அதில் ஏறிக் கொண்ட தேவா மேகலாவின் பக்கத்தில் அமர்ந்து ஆசுவாச மூச்சை வெளியிட்டாள்.

"ஏன் புள்ள லேட்டு எனக்கு திக்கு திக்குன்னு இருந்துச்சி நீ வருவியோ வரமாட்டியோன்னு" என்று கேட்ட மேகலா அப்போதுதான் அவளின் சிவந்த கண்களை கண்டாள். "ஏய் என்னடி கண் எல்லாம் சிவப்பா இருக்கு" என்றதும்.

திருதிருவென முழித்தவள் "அது ஓடிவந்தேன்ல கண்ணுல தூசி விழுந்து இருக்கும்... பச் ஒரே எரிச்சலா இருக்கு" என்று தன் கைகுட்டையால் கண்களை துடைத்தவள் தோழி நம்பிவிட்டாளா இல்லையா என்று கண்ணை கசக்கும் சாக்கில் அவளை பார்த்தாள். தேவாவின் எண்ணம் 'ஊர் பெயர் தெரியாத ஒருவனை பற்றிய ஆராய்ச்சியில் தூங்கவில்லை என்று கூறினால் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வாளோ' என்ற நினைப்பில் பொய்யை கூறினாள்.

"ரொம்ப கசக்காதடி" என்று அவளின் கைகளை விலக்கிவிட்ட மேகலா அதன் பிறகு கல்லூரி கதைகளை பேச தொடங்கி விட தேவாவிற்கும் அப்பாடா என்று இருந்தது. அது எல்லாம் கல்லூரி செல்லும் வரை தான் என்பது அவளுக்கு அறிய வாய்ப்பில்லை.

தற்காலிகமாக அவனது நினைப்பை தோழியின் பேச்சு மறக்கடிக்க கல்லூரி நிறுத்தம் வந்ததும் இருவரும் நடக்க ஆரம்பித்தனர். பதினைந்து நிமிட பயணத்தில் கதைகளை பேசியபடி வர தன்னை கடந்து செல்லும் பைக்கில் இருந்த நபரை கண்டதும் அருகில் இருந்த தோழியையும் மறந்து "ஹலோ என்னங்க... என்னங்க... விசா…" என்று அவனை துரத்த இதை சற்றும் எதிர்பாராத தோழியோ "என்னடி தேவா... யாரு ,யாரு அது.. ஏய் நில்லுடி யார பார்த்துடி இப்படி கத்திக்கிட்டு ஓடுற" என்று அவளை தொடர்ந்து மேகலாவும் ஓடினாள்.

பைக்கில் சென்ற விசாகனோ ஒரு ஹோட்டலின் முன் வண்டியை நிறுத்தி இருந்தான். விசாகனை துரத்தி வந்தவள் அவனை காணாது திகைத்து நிற்க விசாகனின் வாகனம் நான் இங்கு இருக்கிறேன் என்று காட்டிக் கொடுத்துவிட்டு நின்றிருந்தது. அதனை தடவி பார்த்தவள் ஒரு மெல்லிய புன்னகை இதழில் உருவாக உள்ளே செல்ல மேகலாவோ அவளின் செயல்களை திகைத்து போய் பார்த்து இருந்தவள் மேலும் தேவாவின் செயல்களை அறிய உள்ளே சென்றாள்.

தன்னுடன் வந்த தோழியை மறந்தவள் சாப்பிட அமர்ந்த விசாகனுக்கும் சுந்தரனுக்கும் முன்னால் போய் நின்று அவனை குறுகுறுவென பார்த்தாள்.

தங்களுக்குள் பேசியபடியே இருந்தவனோ தங்கள் முன்னே நிற்பது உணவக ஊழியர் என்று நினைத்து கோப்புகளில் உள்ளதை பற்றி விவாதித்தபடி குனிந்த தலை நிமிராமல் "2 காபி" என்று விசாகன் கூறியதும் இருக்கோ இல்லையோ என்கின்ற ரீதியில் இருந்த இடுப்பில் இருபுறமும் கையை வைத்து ஒரு வீரனை போல் முறைத்து நின்றவளது விழிகள் அவனை கூர்மையாய் நோக்கியது...

மனமோ 'அப்பாபா அழகன் டா நீ' என்று செய்தியை உறைக்க அதை கடிவாளமிட்டு நிறுத்தியவள் அசையாது அவ்வாறே நின்று இருக்க அவள் செல்லாததில் கோபம் கொண்டவனாக "அதான் சொல்லிட்டேனே இன்னும் என்ன நிக்குறிங்க" என்று அவளை நோக்கி நிமிர தேவாவை கண்டவன் புருவ முடிச்சுடன் யார் என பார்த்தான்.

"என்ன அப்படி பாக்குறிங்க" என்று காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தவள் "நேத்து உங்கள பார்க்கனும்னு எவ்வளவு ஆர்வமா இருந்தேன் தெரியுமா? நான் மேகலா வீட்டுக்கு போன பின்னாடி வந்து இருக்கிங்க எனக்கு உங்க மேல செம கோவம் வந்தது தெரியுமா?" என்று பேசிக்கொண்டே போனவளை

"ஏய் ஏய் வந்த, நின்ன, உட்கார்ந்த, நீ பாட்டுக்கு பேசிட்டே போற... முதல்ல நீ யாரு? என்னை உனக்கு எப்படி தெரியும்?" என்றான் எரிச்சல் மண்டிய குரலில்.


"அட ராமா..... என்னை தெரியலையா? அட என்னை தெரியலையா? நான் தான் தேவா தேவசேனா" என்றாள் என்னமோ அவளின் பெயரை கேட்டவுடனே அவனுக்கு தெரிந்து விடும் என்பது போல வீட்டுக்கு சென்றவன் அவளை பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை அட அவள் பெயரை கூட தெரிந்துக் கொள்ள கூட முனையவில்லை இருளில் சந்தித்ததினாள் அவள் முகம் அவ்வளவாக நியாபகமில்லை அதுவும் அல்லாது விசாகனுக்கு இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் அவளை எல்லாம் மறந்தே விட்டான் என்று தான் கூற வேண்டும். அவள் முகம் அவனுக்கு சுத்தமாக நியாபகம் இல்லை என்பதுதான் உண்மை இதை அறியாத தேவாவோ வலவலவென்று பேச அவனுக்கு 'எங்கே இருந்துடா இந்த பைத்தியம் வந்தது' என்ற மனநிலையில் இருந்தான்.

"தேவா... வா" என்று அவள் பெயரை கூறி பச்சென்று பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன் "தலையும் புரியாம வாலும் தெரியாம தேவான்னு சொல்ற உன் பெயர் சொன்னவுடன் தெரிஞ்சிக்க நீ என்ன இந்த ஜில்லா கலெக்டரா…. எனக்கு வேற வேலை வெட்டி இல்லன்னு நினைச்சியா?" என்றான் கோபமாக

"அட போங்க என்னை தெரியலன்னு சொல்றிங்க... முழுசா 2 மணிநேரம் உங்ககூட இருந்து இருக்கேன் என்னை நினைவு இல்லன்னு சொல்றிங்க.... என்ன கொடுமை இது" என்று தலையில் கைவைத்து "அது மட்டும் இல்லாம விசான்னு உங்க பெயரை ஒருத்தன் சொன்னதுக்காக ராத்திரி முழுக்க உங்க பெயரை ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்த என்னை தெரியல!!" என்றதும் அனைத்தும் புரிந்து போனது சுந்தரனுக்கு…

அவன் தானே விசாகனுடைய பெயரை விசா என்று அழைத்து அவளிடம் வாங்கி கட்டிக்கொண்டது. "இதுல உங்க பெயர் விஷ்வா,விஷ்ணு, விஸ்வம்னு" இருக்குமோன்னு என்று தன் விரல்களை நீட்டி நீட்டி "இதுல எதுவா இருக்கும்னு யோசிச்சி யோசிச்சி தலைவலியே வந்துடுச்சி எனக்கு இன்னைக்கு காலேஜ் பஸ்ஸூக்கு கூட லேட்டாதான் வந்தேன்". என்று நீண்டதொரு விளக்கத்தை கொடுத்தவளை தடுத்து நிறுத்த வழி தெரியாமல் விழி பிதுங்கி பேசுற வாய் ஓயவே ஓயாதா என்று கடுப்பாகி போனா விசாகன்.

"அதெல்லாம் இருக்கட்டும் இப்ப எதுக்கு இங்க வந்த? என் பெயர்ல உனக்கு எதுக்கு ஆராய்சி?" என்றவனின் குரல் கடுமையாக இருந்தது. 'அட அதை யாரவது கேட்ட என்ன நினைப்பாங்கன்னு கூட தெரியாம இங்க வந்து உன் பெயரை ஆராய்ச்சி பண்ணேன்னு சொல்றாலே' என்று கடுப்பாகி போனான் விசாகன்.

"ஹீ…. " என்று அசடு வழிந்து மழுப்பலாக சிரித்தவள் "சும்மா ஒரு ஆர்வம் அவ்வளவு தான்... சொல்லுங்க உங்க பெயர் என்ன?" என்றாள் தெரிந்து கொண்டே தீரவேண்டும் என்ற முனைப்பில்

உப் என்று காற்றை வெளியேற்றி தன்னை நிதானபடுத்தியவன் அவள் அலப்பறையில் கடுப்பாகி முதல்ல நீ ஏன் என்னை பாக்கனும்

"அது வந்து பாக்கனும் ஆமா ஏன் பாக்கனும்?" என்று யோசித்தவள் "ஹாங் நியாபகம் வந்துடுச்சி" என்றவள் "தேங்க்ஸ் சொல்லத்தான், தேங்க்ஸ்" என்றபடியே உங்க பெயர் என்றாள். அவள் கேட்டதும் விசாகனை முந்திக்கொண்ட சுந்தரன் "அது விசான்னா விசாகன் மா" என்றிட அவனை அப்போதுதான் கவனித்த தேவா "அப்போ இவருக்கு போன் பண்ணது நீங்க தானா?" என்று கேட்டு அவனை ஏற இறங்க பார்வையை ஓட்டியவள்

"அப்படி தூங்கர நேரத்துல என்ன பேச்சு வேண்டி கிடக்குது?? நிம்மதியா தூங்க விடுங்க தூக்கம் ரொம்ப முக்கியம் தெரியுமா??" என்று அவனை ஒரு பிடி பிடித்தவளை விசித்திரமாக நோக்கியது விசாகன் என்றாள் ஆச்சரியம் கலந்த சுவரஸ்யமாக பார்த்தான் சுந்தரன்.

'அய்யோ இவ என்ன இப்படி பேசுறா?' என்று நெற்றியில் கைவைத்து அழுத்திக்கொண்டவன் "நிறுத்து நிறுத்து" என்று கடுமையாக கூறிட படக்கென வாயை மூடிக்கொண்ட தேவாவை நோக்கியவன் தேங்க்ஸ் சொல்லிட்டல கிளம்பு எனக்கு வேலை இருக்கு என்றவனை பாவமாக பார்த்தவள் அவன் கடுமையான முகத்தை கவனித்ததும் இதுக்கு மேல இங்க இருந்தா 'பார்வையாலையே எரிச்சிடுவார் போல' என்று நினைத்து தேவா இருக்கையை விட்டு எழுந்து வேக நடையிட்டு வெளியே வந்தாள்.

அவளின் அலப்பறைகளை பார்த்தபடி பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்த மேகலா எச்சிலை கூட்டி விழுங்கியபடியே தன் அருகில் வந்ததும் "என்னடி நடக்குது இங்க?" என்றாள் பதட்டமான குரலில்

"அன்னைக்கு என்னை வீட்டுல விட்டார்ல அதுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு அப்படியே அவரோட பெயரை தெரிஞ்சிக்கலாம்னு" என்றதும் அவளை கொலைவெறியுடன் பார்த்தாள் மேகலா

இருவரும் ஹோட்டலை விட்டு வெளியேறியதும் அடைமழை பெய்து விட்டது போல் ஒரு அமைதி அப்பா பொண்ணாடா அவ என்ன வாய்.என்று தனக்குள்ளே நினைத்தவன் தலையை அழுந்த கோதி தன்னை இயல்பாக்கி கொள்ள முனைந்தான். நண்பனின் செய்கைகளை சிரித்தபடி பார்த்திருந்த சுந்தரன் என்ன மாப்ள உன்னை பேசவே விடாம மொத்தமா பேசிட்டு போயிட்டா என்றான் கேலியில்

திரும்பி அவனை முறைத்தவன் கைகளால் அவனுக்கு வாயை மூடு என்று கோவத்துடன் சைகை செய்து கழிவறையை நோக்கி நகர்ந்தான்.

அவன் உள்ளே சென்றதும் தேவசேனாவின் துடுக்குதனமான பேச்சும் வெள்ளந்தியான குணமும் சுந்தரனை வியக்கவைத்தாலும் விசாகனின் மேல் அவள் கொண்ட அக்கரையை எண்ணி மகிழ்ந்து தான் போனான்.

இந்த ஏழெட்டு வருடங்களாக நண்பனின் விரைப்பான முகமும் அழுத்தமான சுபாவமும் அவனை இறுகவைத்து இயல்பை தொலைக்க வைத்ததை அவன் அறிவானே அதனாலேயே இந்த பெண் அவன் வாழ்க்கையில் வந்தாள் விசாகன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.

நீ நினைப்பது நான் மனது வைத்தால் மட்டுமே நடக்கும் என்ற ரீதியில் அவன் முன்னே வந்து நின்ற விசாகன் கிளம்பலாம் டா பார்ட்டி வந்துட்டாங்களாம் என்றான்.

"மாப்ள" என்று ஆரம்பிக்கும் முன்னமே "செம காண்டுல இருக்கேன்டா வந்தவ கடுப்பாக்கிட்டு போயிருக்கா லொடலொடன்னு வெண்கலபானை கடைக்குள்ள யானை புகுந்தாமாதிரி என்ன சத்தம் முடியலடா ப்ளீஸ் நீயும் உன் பங்குக்கு ஆரம்பிக்காதே கொஞ்ச நேரம் அமைதியா இரு அங்க போய் பேசாலாம்" என்று அத்துடன் அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தான் விசாகன்.

அரைமணி நேர பயணத்தில் அவர்கள் காண வேண்டிய இடம் வந்துவிட சண்முகம் தான் அவர்களை வரவேற்றார். "வாங்க தம்பி வாங்க" என்று அழைத்து செல்ல அங்கு நின்றிருந்தவரை பார்த்ததும் "ஐயா உங்க நிலமா" என்றான் ஆச்சர்யத்துடன்

"தம்பி நீங்களா நான் வேற யாரோன்னு பார்த்துட்டு இருந்தேன். நீங்கன்னு தெரிஞ்சதுல ரொம்ப சந்தோஷம்" என்றவர் சாட்சாத் தேவாவின் தந்தை சௌந்தரலிங்கம் தான்.


"எனக்கு நீங்கன்னு தெரியாது தம்பி இந்த இடம் உங்களுக்கு கொடுக்குறதுல பரம திருப்தியா இருக்கு" என்று விசாகனிடம் பேசிக்கொண்டு இருக்க யார் இவர் என்று பார்த்துக்கொண்டு இருந்தான் சுந்தரன்

சுந்தரனின் பார்வையின் அர்த்தம் புரிந்து அவனிடம் திரும்பிய விசாகன் "வெண்கலபானை கடைக்குக்குள்ள ஒரு யானை வந்து போச்சே அதோட அப்பா" இவர் என்று அவனுக்கு புரியும் தினுசில் கூறிட "சுத்தி சுத்தி உன்னை மட்டுமே புயல் மையம் கொண்டு சுழட்டுதுன்னு சொல்லு" என்று கூறிய சுந்தரனின் குரலில் கேலி இழையோடியது.

"எனக்கு உங்க இடம் ரொம்ப பிடிச்சிருக்கு வில்லங்கமும் பார்த்துட்டா ஒரு வாரத்துலையே பத்திரபதிவு பண்ணிடலாம்" என்று விசாகன் கூறவும்

அவனை தொடர்ந்து "ரொம்ப சந்தோஷம் தம்பி சண்முகத்திடம் பத்திரம் ஜெராக்ஸ் இருக்கு நீங்க வில்லங்கம் பார்த்துட்டு சொல்லுங்க இது என் மனைவி வழி வந்த சொத்து என் பொண்ணுக்கு போய் சேரதுதான் முறை அதுதான் ஒரு வீடு நல்லவிலைக்கு படியவும் இதை வித்து அதை வாங்கிடலாம்னு இருக்கேன்". என்ற சண்முகத்திடம் இருந்து பத்திரத்தை வாங்கியவன் 'எல்லாம் பார்த்துட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ. அவ்வளவு சீக்கரமே பண்ணிடலாம் உங்களுக்கு பிரச்சனை இல்லையே"


"இல்லதம்பி அட்வாண்ட்ஸ் பண்ணிட்டேன். அதுனால பிரச்சனை இல்லை' என்றவரிடம் சிறிது நேரம் பேசியவன் அப்படியே தன் நண்பனையும் அறிமுகபடுத்திவிட்டு அங்கிருந்து விடைப்பெற்று கிளம்பிட சுந்தரன் மட்டும் மனதிற்குள் 'எங்க சுத்தியும் நீ சேர்ர இடம் தேவசேனான்னு வருது பார்ப்போம் யாருக்கு எங்க இருக்கோ' என்று எண்ணினாலும் அந்த பெண்ணால் மட்டுமே நண்பனின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்பினான்

பார்த்த அரைமணி நேரத்தில் சுந்தரன் எடுத்த முடிவு சரியாக இருக்குமா...

தேவாவின் கலகலப்பான வெள்ளந்தி சுபவாமும், விசாகனின் அழுத்தமான கரடுமுரடான சுபவாமும் எதிரெதிர் துருவங்களாக இருக்கையில் இவர்களின் வாழ்வில் சுவாரஸ்யம் கூடுமா?? அல்லது பதட்டம் உருவாகுமா?? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்..…
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN