உன்னாலே உனதானேன் 17

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விமானம் தரையிறங்கியதும் செக்கிங் முடித்துக்கொண்டு ஒரு மணிநேரம் கழித்து வெளியே வந்த வினய் தன் அண்ணனை அழைத்தான்.
அழைப்போ எடுக்கப்படாமல் இருக்க மீண்டும் முயற்சி செய்தான். இரண்டாவது அழைப்பும் எடுக்கப்படாமல் இருக்க ரேஷ்மிக்கு அழைத்தான். அது செயலிழக்கப்பட்டுள்ளதாக கூறியது வாய்ஸ் மெசேஜ்.

மீண்டும் அபியிற்கு முயற்சிக்க முயலும் போது அபியே அழைத்தான்.

“அபி எத்தனை தடவை கால் பண்ணுறது??? நான் லாண்டாகிட்டேன். நீ என்ரன்சுக்கு வர்றியா??” என்று கூற மறுபுறம் பதிலில்லை...

“ஹலோ அபி லைன்ல இருக்கியா??”

“கவின் நீ டாக்சி பிடிச்சி ஆர்.எச் ஆஸ்பிடலுக்கு வா...”

“அபி யாருக்கு என்னாச்சு??? எதுக்கு ஆஸ்பிடல் வர சொல்லுற??” என்று பதற்றத்துடன் கேட்க

“கவின் லேட் பண்ணாம உடனே கிளம்பி வா.. இங்க வந்து பேசிக்கலாம்..” என்று விவரம் ஏதும் கூறாது அழைப்பை துண்டித்துவிட்டான் அபி.
வினயோ யாருக்கு என்னவென்று தெரியாது பதறியவன் தாமதிக்காது டாக்சி பிடித்து அபி கூறிய ஆஸ்பிடலுக்கு சென்றான்.
செல்லும் வழிநெடுக ரேஷ்மிக்கு முயற்சிக்க அது செயல்படவில்லை...யூ.எஸ் இருந்து புறப்படும் போதும் மனதில் எழுந்த கலக்கம் இப்போது விஸ்வரூபம் எடுத்து அவனை அச்சுறுத்தியது... அன்னைக்கு ஏதே என்று எண்ணியவன் அவருக்கு ஏதும் நடவாது காப்பாற்றுமாறு இறைவனை பிரார்த்தித்தப்படி வந்தான்.

அரைமணித்தியாலத்தில் அபி கூறிய ஆஸ்பிடலை அடைந்தவன் வாசலில் கண்டது அவனது தோழன் தினேஷை. அவனருகில் சென்றவன்

“தினு யாருக்கு என்னாச்சுடா??? அபி எங்கடா??” என்று கேள்விகணைகளை தொடுக்க அதற்கு பதிலலிக்காது வினயின் லாக்கேஜினை எடுத்துக்கொண்டிருந்தான் தினேஷ்.

அவனை தடுத்து நிறுத்தியவன்

“தினு சொல்லு யாருக்கு என்னாச்சு??? எதுக்கு அபி ஹாஸ்பிடல் வரசொன்னான்??? நீயும் எதுக்கு ஹாஸ்பிடல் வந்த?? அம்மாக்கு... அம்மாக்கு... ஏதாவது...” என்றவனுக்கு வார்த்தைதள் வரவில்லை...

“அம்மாக்கு ஏதும் இல்லை கவின்... ஆனா..??”

“ஆனா என்னடா??எனக்கு ரொம்ப பயமா இருக்குடா... சொல்லுடா..” என்று தினேஷை உலுக்கினான் வினய்.

“ரேஷ்மிக்கு...” என்று தினேஷ் ஆரம்பித்ததும் தினேஷின் சட்டையை கொத்தாக பிடித்தவன்

“ரேஷ்மிக்கு என்னடா?? சொல்லுடா....” என்றவாறு தன்னை உலுக்கிய வினயை தடுத்த தினேஷ்

“கவின்.... ரேஷ்மிக்கு... ஆக்சிடன்ட் ஆகிருச்சு டா... இப்போ ஐ.சி.யூ ல இருக்கா..” என்றதும் தினேஷின் சட்டையை விட்டவன் ஒரு அடி பின்னால் சென்றவன்

“தினு விளையாடாத.. உண்மையை சொல்லு...” என்று மனதினுள் அனைத்து தெய்வங்களையும் தினேஷ் இல்லை என்று சொல்லவேண்டும் என வேண்டிக்கொண்டு கேட்க

“கவின்... உண்மையா தான் சொல்றேன். உன்னை பிக்கப் பண்ண ரேஷ்மியும், அனு பாப்பாவும், அபி அண்ணாவும் வந்திருக்காங்க... அனு பாப்பா ஏதோ கேட்டானு அண்ணா காரை பார்க் பண்ணிட்டு போனப்போ தான் லாரி வந்து இடிச்சிருச்சிருக்கு...”

“அனு பாப்பா???”

“அபி அண்ணா அனு அடம் பண்ணானு அவளையும் கூட்டிட்டு போயிருக்காங்க.... காருல ரேஷ்மி மட்டும் தான் இருந்திருக்கா...”
அதை கேட்டவனுக்கு அந்த காட்சி கண்முன்னே வர கண்கள் இரண்டும் நீர் வடித்தது....

அவனது நிலைமை உணர்ந்த தினேஷ் வினயை ஆறுதலாக அணைத்துக்கொண்டு ஆறுதலளிக்க முயன்றான். வினயிற்கோ தன் கலக்கத்திற்கு காரணம் ரேஷ்மியிற்கு நடந்த விபத்திற்கான முன்னறிவிப்பா??? ஐயோ என்று கதறியது வினயின் மனம்.

பதறிய மனமே என்னவள் எங்கே என்று வினவ அப்போது தான் ரேஷ்மியின் நிலையை இன்னும் தெரிந்துகொள்ளவில்லை என்றுணர்ந்தவன் தினேஷிடம்

“தினு இப்போ ரேஷ்மி எப்படி இருக்கா??? டாக்டர் என்ன சொன்னாங்க???”

“டாக்டர் இன்னும் எதுவும் சொல்லலை....அபி அண்ணா, அண்ணி, அம்மா எல்லாரும் உள்ளுக்கு தான் இருக்காங்க... வா நாம உள்ள போவோம்...” என்று தினேஷ் கூற தாமதிக்காது தினேஷுடன் ஆஸ்பிடலினுள் சென்றான் வினய்.

அங்கு ஐ.சி.யூ வாசலில் அனுவை தோளில் தாங்கியவாறு அபி நின்றிருக்க ரியாவும் வீரலட்சுமியும் அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் அருகே சென்ற வினய்

“அண்ணா” என்றழைக்க அப்போதுதான் வினய் வந்ததை அறிந்தனர் அனைவரும் . அபி தோளில் துயில் கொண்டிருந்த அனுவை தடவிக்கொடுத்தான் வினய்.

அதற்கிடையே அவனருகே வந்தே வீரலட்சுமி

“கவின் வந்துட்டியா?? டாக்டர் எதுவுமே சொல்லமாட்டேன்குறாங்கபா... எனக்கு ரொம்ப பயமா இருக்குபா.... ரேஷ்மிக்கு ஒன்னும் ஆகாதுல....” என்று சிறுபிள்ளையாய் மாறி வினயிடம் கேட்க அவனோ யாரேனும் தனக்கு ஆறுதல் சொல்லமாட்டார்களா என்று உள்ளுக்குள் கலங்கினான்.

ஆனாலும் தான் கலங்கினால் அன்னையும் கலங்கிவிடுவார் என்று உணர்ந்தவன்

“அம்மா உங்க மருமக நல்லாபடியா பிழைச்சி வருவா...நீங்க கவலை படாதீங்க..” என்று கூறியவனின் குரலிலோ அத்தனை கலக்கம்...
அப்போது டாக்டர் வெளியே வர அவரை சூழ்ந்து கொண்டனர் குடும்பத்தினர்.

அவரோ ரேஷ்மி பிழைப்பது கடினம் என்று ஒரு இடியை அவர்கள் தலையில் இறக்கினார். எதுவானாலும் 24 மணித்தியாலத்திற்கு பின்பே சொல்லமுடியும் என்று கூறிவிட்டார்.அவரது வார்த்தையில் முற்றிலும் உடைந்துவிட்டான் வினய்.
ஆனால் மறுநொடியே அவனுள் ஒரு திடம் உருவானது..

“ இல்லை ரேஷ்மிக்கு எதுவும் ஆகாது.... நான் உயிரோடு இருக்கும் வரை அவ என்கூட தான் இருப்பா..... அவளுக்கு தெரியும் நான் அவளை எங்கேயும் போகவிடமாட்டேனு.... அவ மறுபடியும் என்கிட்ட வந்திடுவா... வந்து ஏன்டா என்னை விட்டுட்டு போனனு சண்டை போடுவா... ஷிமி என்கிட்ட வந்திடுமா.. என்னை விட்டு எங்கேயும் போயிராத... உன் வினய்க்காக இதை கூட செய்யமாட்டியா???” என்று புலம்பியவனின் தோளில் கரம் பதித்தான் அபி.

“அண்ணா ரேஷ்மிக்கு எதுவும் ஆகாது.. டாக்டர் ஏதோ தெரியாமல் சொல்லுறாரு... அவ நல்லா தான் இருக்கா...ரேஷ்மிக்கு ஒன்னும் இல்லை அபி..”என்று வேதனையாய் வார்த்தைகளை வெளியிட்டவனை பார்க்கையில் அபியினால் துக்கத்தை அடக்கமுடியவில்லை..
வினயின் புலம்பலில் கண்விழித்த குழந்தை...

“சித்து... சித்தி... சித்தி....” என்று அழத்தொடங்க குழந்தையை வாங்கி அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தான் வினய்.
விபத்தை நேரில் பார்த்த குழந்தைக்கு தன் சித்திக்கு ஏதோ ஆகிவிட்டது என்று மட்டும் புரிந்தது.. அதனாலேயே ரேஷ்மியை கேட்டு அழுதது...

மறுபுறம் வீரலட்சுமியை கட்டிக்கொண்டு ரியாவும் அழ அவ்விடமே கண்ணீர் கம்பலையாய் இருந்தது...அனைவரையும் ஒருவாறு தேற்றிய அபி ரியாவிடம் குழந்தையையும் அன்னையையும் அழைத்து செல்ல சொன்னான்.

ரியாவும் வீரலட்சுமியும் ஒரு சேர மறுக்க குழந்தையை காரணம் காட்டி வீட்டிற்கு போகச்சொன்னான்.வினய் இருந்த நிலையிலோ எந்த மாற்றமும் இல்லை... அனைவரும் வீட்டிற்கு செல்ல வினயும் அபியும் மட்டும் ஆஸ்பிடலில் இருந்தனர்.
வினயை பார்த்திருந்த அபியிற்கு அவனது உணர்வுகள் துடைக்கப்பட்ட முகம் ஒரு வித கலக்கத்தை கொடுத்தது...
தான் என்ன ஆறுதல் கூறினாலும் அவனது துக்கத்தை ஆற்றாது என்று புரிந்த போதிலும் அடிக்கடி வினயிடம் ஆறுதல் வார்த்தைகள் உரைத்தபடியே இருந்தான் அபி.
அவ்வாறு இருவரும் அங்கிருந்த இருக்கையில் இருக்க அவர்களருகே வந்த நர்ஸ் டாக்டர் அழைப்பதாக கூற வினயை அழைத்துக்கொண்டு டாக்டரின் அறைக்கு சென்றான்.

அறைக்குள் வந்த வினயையும் அபியையும் அமரச்சொன்ன டாக்டர்

“மிசிஸ் கவினயனோட இப்போதைய நிலைமையை சொல்ல தான் உங்களை வரவழைத்தேன். எஸ் அ டாக்டரா பேஷன்டோட நிலைமையை அவங்க குடும்பத்துக்கு தெரிவிக்க வேண்டியது என்னோட கடமை...” என்று கூறி சில விநாடிகள் அமைதி காத்தவர்

“சாரி டூ சே சிஸ்... மிசிஸ் கவினயனோட நிலைமை ரொம்ப மோசமாகிட்டே போகுது... ஹெவி பிளாட் லோஸ்... அதோட நிறைய உள் காயங்களும் வெளிக்காயங்களும். அதோடு அவங்க தலையில் ஏதோ இரும்பு பொருளில் அடிப்படிருக்கு போல இருக்கு... உள்ளுக்குள்ள என்னென்ன நேவ்ஸ் டேமேஜ் ஆகியிருக்குனு ஸ்கேன் ரிப்போர்ட் வந்ததும் தான் தெரியும்.... அவங்க இன்னும் இருபத்திநான்கு மணிநேரத்துக்குள்ள அவங்களுக்கு கான்சியஸ் வந்தா அவங்க பிழைப்பதற்கான சான்ஸஸ் இருக்கு... இல்லைனா...” என்று டாக்டர் நிறுத்த வினயிற்கோ கை கால் உதறலெடுக்க ஆரம்பித்தது.. அபியின் கைகளை இறுக்கி பிடித்து கொண்டான் வினய்.

இனிமேல் வினயால் பேசமுடியாது என்று அறிந்த அபி டாக்டரிடம் கேட்க வேண்டிய சந்தேகங்களை கேட்டுவிட்டு வெளியேறினான்.
வெளியே வந்த வினய் மறுபடியும் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான் வினய். அவனருகே அமர்ந்த அபியிற்கு வினயை எவ்வாறு ஆற்றுவதென்று தெரியவில்லை... ஆனாலும் அவனது துக்கத்தை பகிர்ந்துக்கொள்ள ஆறுதலே அவசியம் என்று உணர்ந்தவன்

“கவின் டாக்டர் சொல்லிட்டாரேனு நீ மனசை தளரவிட்டுறாத.... இப்படி டாக்டர்ஸ் பிழைக்கவே மாட்டாங்கனு கை விரிச்ச எத்தனையோ பேர் மீண்டு வந்து நம்ம முன்னுக்கு நடமாடிட்டு இருக்காங்க... ரேஷ்மியும் அப்படி தான். நீ வேணும்னா பாரு.. ரேஷ்மி அடுத்த இருபத்திநான்கு மணிநேரத்துல கண்முழிச்சி டாக்டஸ்ஸிற்கும் நமக்கும் ஷாக் கொடுக்க போற... அவ உனக்காகவாவது மீண்டு வருவாடா... நீ மனசை தளரவிட்டுறாத...நம்ம ரேஷ்மி பழையபடி நம்மகிட்ட வருவா..” என்று அபி கூற அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்த வினய் இருக்கையில் இருந்து எழுந்தவன் ஐ.சி.யூவை மறைத்திருந்த கண்ணாடி வழியே தன்னவளை பார்த்திருத்தான்.

உடல் முழுதும் கட்டுக்களாய் இருக்க உடலில் பல வயர்கள் ஒவ்வொரு புறமாக படர்ந்திருந்தது. இமையிரண்டும் மூடியிருக்க மூச்சு மட்டும் சீராகயிருந்தது....புயலில் சிக்கிய புல்லாய் கட்டிலில் கண்மூடி படுத்திருந்தவளை கண்ணாடி துளை வழியே பார்த்தவனது உள்ளம் நொடிக்குநொடி வேதனை எனும் கறையானால் அரிக்கப்பட்டது...

தாயகம் திரும்பியதும் தன்னவளை காணும் ஆவலுடன் வந்தவனுக்கு குற்றுயிரும் குலையுயிருமாய் இருப்பவளை கண்டு வேதனை சகிக்கவில்லை. தான் அவளை விட்டுச் சென்றதே அவளது இந்நிலைக்கு காரணம் என்று தன்னையே விபத்திற்கு காரணமாக்கினான்.
வேதனை நொடிக்கொரு தரம் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை. ரேஷ்மியின் உரையாடல்களும் பிம்பங்களும் மனதில் தோன்றி வினயை இன்னும் வதைத்தது.. அவனது ஒரு மனமோ இம்சையில் சிக்கித்தவிக்க ரேஷ்மிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்திருந்தது...
தன்னுள்ளே உழன்றவனுக்கு சுற்றி நடப்பவை எதுவும் கருத்தில் பதியவில்லை...

அபி உணவருந்த அழைத்தது கூட தெரியாமல் தன்னுள்ளே உழன்றிருந்தான் வினய். இவ்வாறு இரவு முழுவதும் உறங்காமல் இருந்தவன் காலையிலும் அவ்வாறே இருக்க காலையிலும் உணவு வேண்டாம் என்று மறுத்தவனை வற்புறுத்தி சாப்பிட அழைத்து சென்றான் அபி.
காண்டின் சென்று வந்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது...

உன் போன்ற புன்னகையால் என்வாழ்வை குடிப்பவள் யார்...
உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார்...
ஒரு தொடர்கதையே இங்கு விடுகதையே
அந்த விடையின் எழுத்தை எந்தன் விதி வந்து மறைத்ததா.....
பொங்குதே கண்ணீரும் பொங்குகுதே
கண்களில் உன் பிம்பம் தங்குதே.....
 

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 17
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN