கனவே கலையாதே

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கருமையின் பிடியில்
மதியின் மடியில்
அகிலமே அமைதியாய்
ஓய்வெடுக்க,
என் சிந்தை மட்டும்
கூச்சல் போட்டு
எனக்குள்ளே உலாவி
அடுக்கி வைத்த
நினைவுகளை
பிரித்து பார்த்து
காட்சியாக பிடித்து
படமாக ஓட்டும்
இன்ப கனவே!
தயவு செய்து
நிஜமாக மாறாதே...
மாற்றம் பெற்றால்
நீயும் என்னை
ஏமாற்றி விடுவாய்...
 
Back
Top