ஈரவிழிகள் 26

C

Chitra Purushothaman

Guest
Subhasya seekram😁😍😊. Kaiyoda rendu kalyanatthaiyum mudichidunga author madam!😀
Excellent going👌👌👏👏
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Subhasya seekram😁😍😊. Kaiyoda rendu kalyanatthaiyum mudichidunga author madam!😀
Excellent going👌👌👏👏
கல்யாணம் முடிந்தா😍😍நானும் அக்கடானு உட்காருவன்😁😁😁 நன்றிங்க சிஸ்🤗💞
 

P Bargavi

Member
சுந்தரத்தின் முப்பதாவது வயதில் அவரின் முதலாளி சொக்கலிங்கம் அவருக்கு வரன் தேட... நிரந்தரமாய் ஒரு வேலையில் இல்லாமல் எடுபிடியாய் இருக்கும் சுந்தரத்திற்கு பெண் தர பெண் வீட்டார் மறுக்க...

“சுந்தரம் நீ ஒரு தொழிலை ஆரம்பி டா.. அது எப்படி உன்னை எடுபிடின்னு சொல்லலாம்...” கேட்ட சொக்கலிங்கம் ஏகத்துக்கு குதித்தார்.

உழைப்புக்கு அஞ்சாதவர் சுந்தரம் என்பது அவருக்கு தெரியும். சொக்கலிங்கத்திற்கு கார் ஓட்டுவதிலிருந்து.. கணக்கு வழக்கு பார்ப்பதில் ஆரம்பித்து.. ஏன் சில நேரத்தில்... நேரத்திற்கு சரக்குகள் செல்ல வேண்டும் என்பதால்... மூட்டைகள் முதற்கொண்டு சுமந்தவர், முதலாளிக்கு ஏற்ற விசுவாசி. அதனாலேயே இவர் தொழில் பற்றி சொல்ல... சுந்தரத்திற்கு தயக்கம் தான். பணத்திற்கு எங்கு போக... அதுவும் தப்போது இரண்டு தங்கைகளை வேறு கூடவே வைத்து பார்த்துக் கொள்ளணும்..

“இங்க பார் சுந்தரம்.. என் கிட்ட வேலை செய்யறவங்க யாரா இருந்தாலும் என்கிட்டயிருந்து வேலையை விட்டு போகும்போது... அவங்களுக்கு ஒரு தொகையை பணமா கொடுப்பேன். அதுவுமில்லாம சம்பளத்தில் ஒரு சதவீதத்தை முன்பே எடுத்து வைப்பேன்.. இந்தியா போகும் போது அவங்க மனசும்.... முகமும் நிறைந்து போகட்டுமேன்னு நினைப்பேன். அதனால் இவ்வளவு நாள் உன் சம்பளத்தில்
பிடித்தம் செய்த பணம் இருக்கு... தரேன். அதை வைத்து நீ தொழிலை ஆரம்பி... ஒரு ரெண்டு மூணு வருஷத்தில் மேலே வந்திடு... பிறகு போய் பொண்ணு கேட்போம்...” சொக்கலிங்கம் பெரியமனிதராய் நடந்து கொள்ள..

அவர் அறிவுரை படி தொழிலை ஆரம்பித்து சுந்தரம் சற்றே வளர்ந்த பிறகு... வரன் தேட... இப்போது இரண்டு தங்கைகளின் பொறுப்பை தட்டிக் கழித்தால் தான் பெண் தருவேன் என்று சொல்லி விட... அதன் பிறகு சுந்தரம் தனக்கு வரன் பார்ப்பதையே தடுத்து விட்டார்.

சுந்தரத்திற்கு ஓங்கு தாங்கான உடல். அக்கட்டுடல் எல்லாம் பெயர் தெரியாத ஒரு ஜுரத்தால் உருக்குலைந்து போனது.

பத்து வருட தொழில் ஆட்சிக்கு பிறகு ... சொக்கலிங்கத்திற்கு வந்த ஒரு பெரிய ஆர்டரை... “என் சிஷ்யன் சுந்தரம்... என்னை நம்பி இவன் கிட்ட தாங்க.. இவன் முடித்து தருவான்...” அன்று இப்படி சொல்லி அதை சுந்தரத்திற்கு கிடைக்க செய்ய... முதலாளியின் நம்பிக்கையைக் காப்பாற்றவும்... பெரிய அளவில் கிடைத்திருக்கும் ஆர்டரை தக்க வைக்கவும்... சுந்தரம் இரவு பகலாய் உழைக்க.. அதில் வைரஸ் ஜூரம் அவரை தாக்க.. கேசம் கொட்டி உருக்குலைந்து போனார் அவர்.

அப்போது தட்சன் பிறந்திருந்த சமயம் என்பதால்.. கிளியம்மா ரேகா உடன் தங்கி விட்டார். வள்ளி வெளியூரில் படித்துக் கொண்டிருந்தாள்... கலா எட்டி கூட பார்க்கவில்லை. வீடு முழுக்க வேலையாள்... கேட்டதை சமைத்து மேஜையில் அடுக்க ஆட்கள்... ஆனால் அதை அன்பாய் பரிமாறி... அரவணைத்து கேசம் கோதி... தலைபிடித்து விட்டு... பாசமாய் இரண்டொரு வார்த்தைகள் ஆறுதலாய் சொல்லி கவனித்துக் கொள்ளத் தான் அவருக்கு உறவுகள் இல்லை.

அப்போது தான் முழுமையாக உடைந்து போனார் சுந்தரம். உடலை விட மனதளவில் அதிக பாதிப்பு... அதனாலேயே எதன் மேலும் பிடிப்பில்லாத வாழ்க்கை... எல்லோரிடமும், ‘நீ பேசுறியா பேசிக்கோ... உனக்கு இது வேணுமா வாங்கிக்கோ.. அவ்வளவு தான்..’ என்றானார். இதனால் அவர் மேலேயே அவருக்கு பற்று இல்லாமல் போனது. அதன் விளைவு... ஒரு யோகியின் தோற்றம் அவருடையதானது.

அண்ணன் அதீத சிரமத்தில் இருப்பதை அறிந்து வள்ளி... கிளியம்மாவோடு வந்து அவரைக் காண... சிதைந்து போய் படுக்கையில் இருந்தார் சுந்தரம். மகனை அப்படி காணவும், “ராஜாத்தி... உன் அண்ணனுக்கு மட்டும் ஒருத்தி இருந்திருந்தா... இவன் இப்படி இருப்பானா... என் உசுரு போகிறதுக்குள்ள.. இவனுக்கு வாழ்க்கையில் ஒருத்தியை நிறுத்திட்டேனா.. பெறகு என் உசுரு நிம்மதியா போகும்...” கிளியம்மாவின் அரற்றலில் பதினேழு வயது வள்ளிக்குள் விழுந்தது அந்த எண்ணம்.. எப்படியாவது அண்ணன் வாழ்வில் ஒரு அண்ணியைக் கொண்டு வரவேண்டும் என்பது தான் அது.

அதன் பிறகு அதற்கான ஆயத்தத்தில் ரேகாவும் இவளும் தங்களுக்கு தெரிந்தவர்களை வைத்து மறைமுகமாய் அண்ணனுக்கு வரன் தேட.. இதோ அவள் அண்ணனே... தன் மனதில் உள்ள பெண்ணை இவர்களுக்கு கோடிட்டு காட்டிவிட்டான்.

காலை வேளை உணவின் போது, “அண்ணா, அண்ணி பேரு என்ன ண்ணா...” இரவு முழுக்க அண்ணன் சொன்னவளைத் தன் அண்ணியாகவே வரையறுத்து மனதில் வைத்துக் கொண்டவளுக்கு... விடிந்ததும் அவளைப் பற்றி அறியும் ஆவலில்... அண்ணனிடம் வள்ளி இப்படி கேட்டு விட..

சுந்தரத்திற்கு ஒன்றும் புரியாத நிலை. அதில் புருவம் சுருங்க, “யாரு பாயி கெசில்...” என்று கேட்க

“அதான் ணா.. நேற்று பேசும்போது உங்க மனசிலே இருந்தவங்கன்னு சொன்னீங்களே... அவங்க தான்.. நம்ம அண்ணி ணா...”

தற்போது விஷயம் புரிபடவும், “வாயை மூடு... என்ன பேச்சு இது... நான் சொன்ன எதார்த்தமான ஒரு வார்த்தையை வச்சிட்டு... அவங்களுக்கு எப்போதோ திருமணம் நடந்து இப்போ அவங்க இன்னொருத்தர் மனைவியா கூட வாழலாம்.. நீ என்னையும் அவங்களையும் இப்படி இணை கூட்டி பேசலாமா... தப்பு பாயி கெசில்...” சுந்தரம் தன்மையாய் கண்டிக்க

அப்போது தான் நிகழ்காலத்தை உணர்ந்தாள் வள்ளி. ‘ஆமா இல்ல.. இருபத்தைந்து வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு. பின்ன இப்போ அவங்களுக்கு திருமணம் நடந்தேறி இருக்காதா.. எப்படி இதை நினைக்காமல் போனேன்... மக்கு மாதிரி பேசி இருக்கனே..’ என்ற எண்ணத்தில் தன் தவறை வலியோடு உணர்ந்தவள்,
“தப்பு தான் ணா... ஆனா அவங்க கணவரும் எனக்கு அண்ணா தான்... அதனாலே... அவங்களை அண்ணினே அழைச்சிக்கிறேன்...” மெல்லிய குரலில் இவள் தன் மன உறுதியாய் சொன்னவள் அதன்பிறகு கார்மேகத்தின் மகளை மறந்து தான் போனாள். அதற்கு அவளுக்கு அவள் படிப்பு உதவ... ரேகாவை கவனிக்க என்று அதிலும் கரைந்து போனாள்.

அன்று ரேகாவுக்கு சீமந்த நிகழ்வு நடந்தேறிக் கொண்டிருக்க... அந்நேரம் வள்ளியின் கைப்பேசிக்கு அழைப்பு வரவும்... அதை உயிர்ப்பித்து செவிக்கு கொடுத்தவள் “ஹேய்... கீர்த்தி அண்ணா.. எப்படி இருக்கீங்க... உங்க தோஸ்து... என் உயிர் தோழன்... எப்படி இருக்கார்...” இவள் ஆர்ப்பாட்டமாய் கேள்விகளை அடுக்க

“ஹேய்... சரவெடி... போதும் உன் சினிமா பட பெயரை எல்லாம் நிறுத்து... விட்டா இன்னும் அடுக்கிட்டே போவ போல...”

கீர்த்தியின் பதிலில், “என்ன ணா செய்யறது... உங்க நண்பர் இப்போதைக்கு சினிமாவில் வர்ற பெயரா தான் இருக்கார்.. இன்னும் இந்த வள்ளியின் மனதில் ஹீரோ அளவுக்கு உயரலையே...” பொய்.. பொய்.. சுத்த பொய்... அது அவளுக்கே தெரிந்திருந்தாலும்... தன் நெஞ்சறிய பொய்யுரைத்தாள் இவள்.

“அடி கழுதை இதை மட்டும் என் குமரன் கேட்கணும்...” கீர்த்தியின் வாதத்தில் இடைவிட்டியவள்

“கேட்டுட்டாலும்... அப்படியே எட்டு ஜில்லாவும் பார்க்க என்ன தூக்கிட்டு போய்... கம்பத்துல கட்டி வச்சிடுவாரோ...” வெளியில் தான் இவ்வார்த்தை. ஆனால் மனதிற்குள், ‘தாலி கட்டிடுவாரோ..’ என்று கேட்டுக் கொண்டாள்.

“அவனை வம்பு செய்யறதே உனக்கு வேலையா போச்சு... இருக்கட்டும் இருக்கட்டும்... இங்க வருவயில்ல அப்போ ஒரு நாள் அவன் கிட்ட வசமா சிக்கத் தான் போற...” கீர்த்தி போலியாய் மிரட்ட

“ஹாஹ்ஹா! மாத்தி சொல்றிங்க.. உங்க சிடுமூஞ்சி இளா... என் கிட்ட தான் சிக்கப் போறார் பாருங்க...” இவள் கெத்து காட்ட

“அம்மா தாயே.. உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா... சுந்தரம் அண்ணா... தட்சன் எல்லாம் எப்படி இருக்காங்க... நீ ரேகா கிட்ட போனை கொடு...” என்று இவன் சொல்லவும் பின் பரஸ்பர விசாரிப்புகளில் போன் கை மாறியது.

ஐந்தாம் வகுப்போடு தன் படிப்பை நிறுத்திக் கொண்ட சுந்தரத்தின் மேல்.. எப்போதும் பரஞ்சோதி வாத்தியாருக்கு... பாசமும்.. பரிவும் அதிகம். அதன் தாக்கம் சுந்தரத்தின் குடும்பத்துடன் இன்று வரை அவரை தொடர்பில் இருக்க வைத்தது. அவரின் மூலம் சுந்தரத்தின் குடும்பத்துக்கு அறிமுகமானவன் தான் கீர்த்திவாசன்.

கீர்த்திக்கு தெரிந்த பெண்ணொருத்தி... மலேசியாவில் தங்கி படிக்க நினைக்க... அப்போது அவளுக்கு நம்பகமான ஒருவரின் துணை அந்நாட்டில் வேண்டும் என்பதால்... இவன் பரஞ்சோதி வாத்தியாரை அணுக... அவர் கை காட்டியது தான் சுந்தரத்தின் குடும்பத்தை.

முதலில் நட்பாக ஆரம்பித்த உறவு... பின் தான் தெரிந்தது.... கீர்த்தியின் குடும்பமும், சுந்தரத்தின் குடும்பமும் தூரத்து சொந்தத்தில் ஏதோ ஒரு உறவு என்று. வள்ளிக்கு கீர்த்தியிடம் அதீத ஒட்டுதல்.. அதேமாதிரி தான் அவனும். அதில் இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகம் பேசி கொள்ள.. அப்போதெல்லாம் கீர்த்தியின் பேச்சில் நண்பனான இளங்குமரன் அதிகம் வந்து போவான். இவன் எதார்த்தமாக தான் பேசுவான். நண்பனின் படிப்பு... தொழில்... வேலை... அக்கா பாசம்.. இருவரின் கலாட்டா... இப்படி அடுக்கிக்கொண்டே இவன் போக.. அது பதின்ம வயதுப் பெண்ணான வள்ளிக்கு இளங்குமரன் விஷயத்தில் ஆர்வத்தையும்... ஒருவித ஈர்ப்பையும் உருவாக்கியது.

ஆமாம்... அதில் அவனின் முகம் காணாமல்.... குரல் கேட்காமல்... தன் மனதை இளங்குமரனிடம் பறிகொடுத்தாள் பெண்ணவள். அப்போது தான் அவள் கல்லூரியில் அடி எடுத்து வைத்த சமயம் என்பதால்... இது ஏதோ சாதாரண ஈர்ப்பு என்று தான் அவள் முதலில் நினைத்தது. ஆனால் அது அப்படி இல்லை என்பதை இந்த ஐந்து வருடத்தில் கண்டு கொண்டாள். சினிமாவில் வருவது போல்... இதென்ன பார்க்காமலே... பேசாமலே காதல்! அவளுக்கே இது குறித்து வியப்பு தான். ஆனால் என்ன ஆராய்ந்து என்ன... அவள் இதயத்தில் தான் குமரன் சட்டமாய் அமர்ந்து கொண்டானே.

இதில் ஒரு அம்சம் என்னவென்றால் தன் அண்ணன் சொன்ன பெண்ணின் தம்பி தான் இந்த இளங்குமரன் என்பது வள்ளிக்கு தெரியாது... கீர்த்தியும் சொன்னதில்லை. அவனுக்கு என்ன அவசியம் இருக்கு.. நண்பன் குடும்பத்தைப் பற்றி இவர்களிடம் பேச... அதனால் தன் நண்பனின் வீர தீர பராக்கிரம செயல்களைப் பற்றி மட்டும் தான் பேசுவான். வள்ளியிடமாவது குமரனைப் பற்றி பேசியிருக்கிறான். ஆனால் நண்பனிடம் வள்ளி குடும்பத்தைப் பற்றி பேசியதில்லை இவன். இவர்கள் உறவு முறையில் சொந்தம் என்று ஆன பிறகு... பேச இவன் விழையவில்லை. ஆனால் நண்பனைப் பற்றி மட்டும் பேசி... வள்ளியின் இதயத்தில் விதையிட்டு... அது விருட்சமாக வளர கீர்த்தி தன்னை மீறி வழி செய்தான் என்றால் அது தான் நிதர்சனம்.

ரேகா வளைகாப்பின் மறுவாரம் அவளின் மாமியார் பர்வதம் மரணித்து விட... அந்த துக்கத்திலிருந்து மீள்வதற்குள்... அடுத்து வந்த இரு தினங்களில்... கிளியம்மாவும் ஈசனடி சேர்ந்து விட.. அவரின் மறைவில் முழுவதுமாக உடைந்து போனது வள்ளி தான். நல்லவேளை.. அந்நேரம் ரேகாவுக்கு அதிதி, அஸ்மி என்று இருவரும் பிறக்கவும்.... அஸ்மியைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு... தன் மனக்காயத்தைப் போக்கிக் கொண்டாள் வள்ளி.

பின் இது தான் பிரபஞ்சத்தின் நியதி என்று உணர்ந்து வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டவள்... ஒருநாள் பரஞ்சோதி வாத்தியாரை அழைத்து தன் அண்ணன் சொன்ன கார்மேகத்தின் மகளைப் பற்றி விசாரித்தவள்... மீனாட்சியின் புகைப்படத்தைக் கேட்க... அண்ணன் மணக்க இருக்கும் பெண்... அவர் மனதிற்கு பிடித்த பெண் போல் பார்க்கவேண்டும் என்பதால் தான்... இவள் மீனாட்சியைப் பற்றி விசாரித்து புகைப்படம் கேட்டது.

ஆனால் இன்னும் மீனாட்சிக்கு மணமாகவில்லை என்று வாத்தியார் சொல்லவும்... இவள் தனி மனுஷியாய் துணிந்து அவர்களை பெண் கேட்டால் தருவார்களா என்று கேட்டு வைக்க... அப்போது தான் மீனாட்சியின் வாழ்வில் நடப்பதை எல்லாம் வாத்தியார் ஒன்றுவிடாமல் சொல்ல... மனதால் நொறுங்கிப்போனாள் இவள். இப்போதும், மீனாட்சிக்கு ஒரு தம்பி இருக்கிறான்... அந்த வீட்டில் அவளுக்கு ஆதரவு அவன் தான் என்பதை வாத்தியார் சொல்லவில்லை... அவருக்கு சொல்ல தோன்றவுமில்லை.

இதையெல்லாம் கேட்ட பெண்ணவளின் மனதோ... அன்று அவளுள் இருக்கும் நாயகனை அதிகமாய் தேடியது. இவள் தன் மேல் படிப்பை இந்தியாவில் உள்ள நாட்டு மாடுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு பகுதியாய் எடுத்திருக்க... அதற்கு உதவியாய் இவள் கீர்த்தியை அணுக... அதற்கு இவள் மனதை அறியாமலே அவன் கை காட்டியது இளங்குமரனைத் தான். அது சார்ந்து நண்பனின் படிப்பு... தொழில்... அவனின் புகைப்படம் என்று இவன் இவளுடைய வாட்ஸ் அப் செயலியில் அனுப்பியிருக்க... அண்ணனுக்கு ஒரு வாழ்வு அமையும் வரை தன்னவனின் புகைப்படத்தைக் காண கூடாது என்ற முடிவில்... அதை திறக்க கூடாது என்று இருந்தவளின் மனதோ.. இன்று அவளையும் மீறி அவளின் நாயகனை காண விழைந்தது.

படுக்கையில் சரிந்தவளோ... அவன் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து... “இளா... அண்ணி வீட்டில் இருக்கிறவங்க எல்லாம் மோசம் இளா... நீங்க எனக்காக அவங்க கிட்ட சண்டை போடுங்க. பெண் தர மாட்டாங்களாம்… அது எப்படி அவங்க சொல்லலாம்.. ரமேஷ் மாமா வந்து பொண்ணு கேட்பார்... என் அண்ணியை என் அண்ணனுக்கு கட்டி தர சொல்லுங்க. என் அண்ணிக்கு யாரும் இல்லன்னு நினைத்திட்டு இருக்காங்களா... நான் சொல்றேன் என் இளா என் சார்பா வந்து சண்டை போடுவாருன்னு சொல்லுவேன். அண்ணி தற்கொலை முடிவுக்கு எல்லாம் போனாங்களாம்... யார் வந்து பொண்ணு கேட்டாலும் அண்ணியை கட்டி தர மாட்டாங்களாம்... என்ன இது அராஜகம்... நீங்க கேளுங்க இளா...”

முதல் முறை தன்னவனின் புகைப்படத்தை காண்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல்... அவன் தன்னவன் என்ற நிலைப்பாட்டில்... இவளின் நிழல் அண்ணிக்காக... அவனின் நிஜ தமக்கைக்காக... அவனையே தூது அனுப்பினாள் இந்த பெண்ணவள்... அதுவும் வாய் விட்டே . அழுகையின் ஊடே இவள் தன்னவனிடம் பேசப்பேச... அவள் பக்கத்தில் படுத்திருந்த அஸ்மி... இவள் ஒவ்வொரு குரலுக்கும் கையை... காலை.. உதைத்துக் கொண்டு ஊ... ஆ... என்று குரல் எழுப்பவும்...

பெண்ணவள் என்ன நினைத்தாளோ... அப்போது அவள் மனதில் என்ன இருந்ததோ... மகளை சுற்றி தன் இடது கையை அரணாய் இட்டவள்... வலது கையில் உள்ள கைப்பேசியை உயர்த்திக் காட்டி... “அஸ்மி பாப்பா... இங்க பாருடா... அப்பா பாரு டா... அப்பா சொல்லுங்க... ப்பா... ப்பா.. உன் அப்பா கிட்ட சொல்லி... அத்தையை இங்க அனுப்பி வைக்க சொல்லு டா... நாம இந்தியா போகலாமா...” ஏதோ பித்து பிடித்தவள் போல்... இவள் தன் மனதில் உள்ளதை எல்லாம் பிறந்து ஐந்து மாதமே ஆன அஸ்மியிடம் கொட்டிக் கொண்டிருந்தாள். அவள் மன உளைச்சலுக்கு யாரிடமாவது தன் மனதை அவள் கொட்ட வேண்டும்.. அதற்கு அவளுக்கு அஸ்மியும்.. இளங்குமரனும் கிடைத்து விட்டார்கள்..

அண்ணன் அன்று சொன்ன போதே... மீனாட்சியை விட்டுக் கொடுக்க மனமில்லை இவளுக்கு. தற்போது அவளைப் பற்றி அனைத்தும் தெரிந்த பிறகு... மீனாட்சி தான் தன் அண்ணி என்றே முடிவு செய்தாள் பெண்ணவள். கூடவே அவளின் இன்றைய நிகழ்வு... குமரன் தன்னுடைய கணவன் என்ற நிலைப்பாட்டையும்.... அஸ்மிக்கு அவன் தந்தை என்ற அடையாளத்தையும்... அவளையும் மீறி தந்திருந்தது.

அதன் பிறகு மும்முரமாய் இவள் மீனாட்சியைப் பற்றிய விசாரிப்பில் இறங்க.. அப்போது கீர்த்திவாசனின் வாய் மொழியாக அறிந்தது தான் மீனாட்சியும்... இளங்குமரனும்.. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் என்று. அதை கேட்டவளுக்கு இன்ப அதிர்ச்சி… நிச்சயம் அவள் இதை எதிர்பார்க்கவே இல்லை… அது போதுமே... பின் மடமடவென்று இவள் தன் அண்ணனை முன்னிறுத்தி விஷயம் அனைத்தையும் வாங்க.. அனைத்தையும் சொல்லி முடித்தான் கீர்த்தியும். ஆனால் மறந்தும் தன் மனதில் குமரன் இருப்பதை வெளிப் படுத்தவில்லை இவள்.

அதன் விளைவு.. ஒரு நாள் தன்னவன் புகைப்படத்திடம், “நீங்க பட்டுவா... உங்களை அண்ணி... பட்டுன்னு தான் கூப்பிடுவாங்களாமே... நீங்க அண்ணிக்கு செல்லமா.. ஆனா அண்ணி எங்க வீட்டுக்கு வந்த பிறகு... நான் தான் அவங்களுக்கு செல்லம்... ஒகே வா பாஸ்? பட்டு.. என்ன ஒரு சில்க்கி பேர்! நானும் உங்களை பட்டுனு கூப்பிடவா... பட்டு... பட்டு... பட்டு...” இவளின் ஒவ்வொரு அழைப்புக்கும்... வள்ளி வயிற்றின் மேல் தலை சரித்து... பொம்மையைக் கடித்த படி விளையாடிக் கொண்டிருந்த அஸ்மி... “ஹம்...” கொட்டவும்.. இவளுக்குள் ஒரு சிலிர்ப்பு.

“ஹேய்... குட்டி வாண்டு... நீயும்... அப்பா மாதிரி உன் பேரும்... பட்டா... பார்ரா... என் பேபியை... அப்போ என் வாழ்க்கையில் இரண்டு பட்டு வந்திருக்காங்களா... அத்தைக்கு உன் அப்பா பட்டுனா... எனக்கும்... உன் அப்பாவுக்கும் நீ தான் பட்டு... சரியா...” மகளிடம் கேள்வி கேட்டு கொஞ்சம் கொஞ்சி அன்று முழுக்க ஆர்ப்பரித்தது... வள்ளியின் நெஞ்சம்.

இதெல்லாம் குமரனுக்கு வரன் பார்க்கிறார்கள் என்ற பேச்சு அவளை எட்டும் வரை தான். இதை அறிந்ததும் அவள் கவலைக்குள்ளாக தப்போதும் இவள் அஸ்மியிடம் தான் தன் மனதைக் கொட்டினாள்.


“பாரு பட்டு... உன் அப்பாவுக்கு பொண்ணு பார்க்கறாங்களாம்... நான் இங்கே இருக்கேன்... அவரோட மக நீயும் இங்க இருக்க... நம்மளை பற்றி யோசிக்காம... பொண்ணு பார்க்கறாங்களாம் பொண்ணு.. நாம இரண்டு பேரும் விட்டுடுவோமா என்ன... விட கூடாது பட்டு... உன் அப்பா வேற எந்த பொண்ணு கழுத்திலும் தாலி கட்ட கூடாது. நாம இரண்டு பேரும் இந்தியா போறோம்... உன் அப்பாவை தட்டுறோம்.. தூக்குறோம்... சரியா?” மனதில் வலி நிறைந்திருந்தாலும்... உருவம் இல்லா தன் காதலை இழக்க விருப்பம் இல்லாமல் மகளுடன் டீல் பேசினாள் இவள். அதற்கு அஸ்மி தன் பொக்கை வாயை காட்டி.. ஹம்.. கொட்டி தாயின் திட்டத்திற்கு கை கொடுப்பது போல் ஆர்ப்பரிக்க.. அதில் குமரன் தங்களை விட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கை துளிர்ந்தது வள்ளியின் மனதில்.
Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN