பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 15

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

பூ 15

விசாகன் திட்டி விரட்டி விட்டதும் அவளுடைய கண்கள் இரண்டும் அவனை ஒரு வெறுமை பார்வையே பார்த்தது. ஏனோ அவனுக்கு அதை யோசிக்க கூட மனம் இல்லையோ என்று உள்ளம் கலங்கியது. தான் ஹீரோவாக நினைத்துக் கொண்டு இருக்கிறவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று நினைத்தாள். அதே எண்ணத்துடன் வீதியில் இறங்கி நடந்து வந்தவள் பேருந்துக்காக நின்றிருந்தாள்.


அவள் சென்ற 20 நிமிடத்தில் அவ்விடத்தை விட்டு கிளம்பி விட்ட விசாகன். அவளை கடந்து போகும் சமயம் பேருந்துக்காக காத்திருந்தவளின் கண்களில் பட்டுவிட அவனையே பார்த்திருந்தவள், கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தி, வந்த பேருந்தில் ஏறி அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.


என்ன தான் திடமான பெண்ணாய் இருந்தாலும் தன் நெஞ்சில் பூத்த முதல் காதலை உதாசினப் படுத்தியதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை கண்ணீராய் உதிர்ந்து இருந்தது. கண்களை மூடி சீட்டில் சாய்ந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியே மனதில் எழுந்தது.


……


அவளிடம் கடிந்து விட்டு வீட்டிற்கு போகும் எண்ணமில்லாமல் தென்னந்தோப்பிற்கு வந்தவன் அமர்வதற்காக அங்கே இருந்த கயிற்றுக்கட்டிலில் படுத்துவிட்டான். கண்களை மூடி முகத்தை கையால் மறைத்தது போல் வைத்து படுத்து இருந்தவனின் போன் அலர அதை எடுக்க கூட மனமில்லாதவன் போல் அப்படியே படுத்து இருந்தான். இரண்டு மூன்று அழைப்புக்கள் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்க அதை எடுத்து பார்த்தவன் சலிப்புடனே போனை ஆன் செய்து காதில் பொருத்தி இருந்தான்.


"டேய் எங்கடா இருக்க"


"தென்னந் தோப்புல இருக்கேன் என்ன விஷயம்" என்றான் விசாகன் எடுத்த எடுப்புலையே


"என்னை வேலை பாக்குற இடத்துக்கு வரசொல்லிட்டு நீ அங்க என்னடா பண்ற" என்று சுந்தரன் காய்ந்திட


"அங்க இருக்க வேலைய பார்த்துக்கோ அதுக்கு தான் உன்னை வர சொன்னேன்" என்றவன் மறுவார்த்தை அவனிடம் வரும் முன் போனை அணைத்து அதை சைலன்டில் போட்டு இருந்தான் விசாகன்.


ஒரு சில சமயங்களில் தோப்பு தொறவு வயக்காடு என்று சென்று வரும் அப்பத்தா அன்று தென்னந்தோப்பிலும் மாந்தோப்பிலும் வேலை நடக்க ஒரு முறை சென்று வரலாம் என்று இருந்தவர் அங்கிருப்பவர்களுக்கு வெயிலுக்கு இதமாய் மோரும் கொண்டு வந்தார்.


"ஏலேய் முத்து இங்கனா வா" என்று அழைத்து வேலை செய்யும் பெண்மணியிடம் இருந்ததை வாங்கி அனைவருக்கும் ஊற்றி கொடுக்க சென்னவர், தூரத்தில் பேரன் படுத்து இருப்பது அவருக்கு தெரிய. அதை தெளிவுப்படுத்திக்கொள்ள


"ஏலேய் முத்து என் ராசாவா அங்கன படுத்து இருக்கறது?" என்ற தில்லையின் கேள்விக்கு ஆமாம் என்று பதில் உரைத்த வேலையாள் பணியை பார்க்க சென்று விட கையில் ஒர் மோர்குவலையை பேரனுக்கு என்று வேலையாளிடம் வாங்கி கொண்டவர் விசாகனை நோக்கி நடையை போட்டார்.


தில்லை எழுபதுகளில் இருந்த போதும் உடலாலும் மனதாலும் இன்னும் 50 தாண்டாது திடமாக இருந்தார். கட்டிலில் படுத்து இருந்த விசாகனின் கால்களை பற்றியவர் பேரனுக்கு இதமாய் பிடித்து விட அந்த தொடுதலில் கண்களை திறந்தவன் அவரை பார்த்ததும் மனம் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சாவகாசமா எழுந்து அமர்ந்திட்டான்.


பேரனின் கலக்கம் நிறைந்த முகம் அவருக்கு வருத்தத்தையும் கவலையையும் கொடுக்க "என்ன ராசா இங்க வந்து படுத்து இருக்க" என்று வாஞ்சையாக கேட்டவர் கையில் வைத்திருந்த மோர் குவலையை அவனிடம் நீட்ட, அதை வாங்கி குடிக்காமல் கையிலையே வைத்திருந்தான்.


"ராசா என்னய்யா யோசனையாவே இருக்க… ஏதாவது" என்று ஆரம்பிக்கும் போதே அப்பத்தா என்று அவரின் பேச்சை தடைசெய்து


"ஒன்னுமில்லாததை நீ தான் யோசிச்சி யோசிச்சி கஷ்டபடுற" என்று அவரை சமளித்து அங்கிருந்து எழுந்து விட


"என் ராசா உன்னை நினைச்சி நிதம் நிதம் இந்த கட்ட கவலப்படுதுயா... உன் முகம் பார்த்து கோவமா இருக்கியா, கவலையா இருக்கியா, யோசனையா இருக்கியான்னு தெரிஞ்சிக்கிறேன் யா... இந்த முகம் உனக்கு மனசுல கவலை இருக்கேன்னு எனக்கு சொல்லுதே யா…" என்று கவலையாக கூறியவர் "உன் மனசுக்குள்ள எதையும் வைச்சி மருகாத யா…"


"உன் ஆத்தா அப்பன் போனதுல இருந்து இந்த பாவி உனக்காக மட்டும் தான்யா உசிர கையில புடிச்சிக்கிட்டு இருக்கேன்... " என்று பேரனின் நிலையை கண்டு கரகரத்த குரலில் கூற


உள்ளுக்குள் ஏதோ உடைவது போல உணர்ந்த விசாகன், தன் கைகளால் தில்லையின் கரங்களை பற்றிக்கொண்டு "உன்னை ரொம்ப கஷ்டப்பட வைக்கிறேன்ல அப்பத்தா" என்றவனை அமைதிபடுத்தியவர்


"இல்லையா... என் ராசாவால என்னைக்கும் நான் கஷ்ட படமாட்டேன்..." என்று அழுத்தம் திருத்தமாக கூறியவர் "எல்லாம் ஒரு நாள் சரியா போகும் யா நீயும் சந்தோஷமா இருப்ப யா" என்று அவனுக்கு ஆறுதலை கூறி தேற்றிட சற்று தெளிந்து இருந்தான் விசாகன்.


……


அன்று கல்லூரி விடுமுறை நாள் யோசனையோடவே மேகலாவுடன் வெளியே செல்ல கிளம்பி இருந்தாள் தேவா. பொதுவாகவே கல்லூரி விடுமுறை நாட்களில் தோழிகளுடன் பொழுதை கழிப்பது அவளுடைய வழக்கம். கடந்த ஒரு வாரமாக கழுவும் மீனில் நழுவும் மீனாக கண்களில் சிக்காத விசாகனின் போக்கை கண்டு அவளுக்கு சிரிப்புதான் வந்தது… இனி தேவசேனாவை காணவே கூடாது என்ற முடிவை எடுத்திருந்த விசாகன் அவளை சந்திப்பதை அறவே தவிர்த்து வந்தான்.


இரண்டாம் வாரம் சாமுண்டி கோவிலில் விளக்கேற்ற போகும் போது தாயுடன் சென்றவள் விசாகனின் அப்பத்தாவை சிநேகிதமாக்கி கொண்டாள். அவளின் பேச்சும் செயல்களும் தில்லையின் மனதில் இடம் பெற போதுமானதாக இருக்க எண்களை பறிமாறிக் கொள்ளும் அளவிற்கு நட்பாகினர். அடுத்த வாரம் எப்போது வரும் என்று ஆவலாக காத்திருக்க ஆரம்பித்தார் தில்லை.


தவிர்க்க முடியாத சில காரணத்தால் பள்ளி தலையமை ஆசிரியர் அவனை அழைத்து மும்மரமாக பள்ளி வேலை தொடர்பான விஷயங்களில் சில திருந்தங்களை பேசிக்கொண்டு இருக்க, விசாகனின் செல்போன் குறுந்தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்பவும் பேசிக்கொண்டே அதை திறந்து பார்த்தவன் முகம் சட்டென மாறியது.


Hello hero sir…


Good morning


என்ற குறுந்தகவல் வந்திருந்தது. ஒருவாரமாக தினமும் வரும் தகவல் அதை அலட்சியம் செய்து விட்டிருந்தான். ஆனால் இன்று புதிதாக ஹீரோ என்று வரவும் கொஞ்சம் அதிர்ச்சியாகினான்.


வாட்சப்பில் வந்த எண்ணை திறந்து பார்க்க அதில் ஹீரோயின் என்று இருந்தது.


மெசேஜையும் அந்த எண்களையும் அழித்தவன் சட்டையில் போனை வைத்துவிட்டு மீண்டும் தலைமை ஆசிரியரிடம் பேச்சினை தொடர்ந்திட மறுபடி குறுந்தகவல் வந்ததற்கான ஒலி வர கொஞ்சம் தயக்கமாகவே அதை எடுத்து பார்த்தான்.


"குட் மார்னிங் சொன்னா திரும்பி சொல்லனும்"


என்று செய்தி வர இப்போது அதை அழிக்காமல் பற்களை கடித்தபடி போனை அணைத்து பாக்கெட்டில் வைத்தவன் முகத்தில் கோவமும் குடிகொண்டு இருந்தது. தலைமை ஆசிரியர் முன் அதை மறைக்க அரும்பாடுபட்டு போனான்.


மரத்தின் பின்புறம் மறைந்து இருந்தவள் அவனுடைய முக மாற்றத்தினை ரசித்துக்கொண்டு இருந்தாள். 'என்னை அழ வைச்ச இல்ல யாருன்னு தெரியாம திண்டாடு' என்று நினைத்தவள் ஒன்றும் தெரியாத பெண் போல அவனை கடந்து சென்றவள் யாரும் அறியாவண்ணம் கண் இமைக்கும் நேரத்தில் கண்ணடித்து பறக்கும் முத்தம் ஒன்றையும் கொடுத்தவள் மறுபடி பாவப்பட்ட ஜீவனை போல் முகத்தை வைத்துக்கொண்டு சென்றாள். அவர்களை கடந்து


தலைமை ஆசிரியர் முன்னால் மிகவும் பணிவான பெண்களை போல் சென்றவர்களை அடையாளம் தெரிந்துக் கொண்டவர் அவர்களை அருகில் அழைத்து "எங்க இந்த நேரம்" என்று அவர் கேட்க.


"மறுபடியும் பள்ளியை புதுப்பிக்கறத கேள்விப்பட்டோம் சார்... நாங்க இருந்த பழைய ஸ்கூல் அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்" என்றிட


"Ok good ma .என்றவர் தேவாவை கண்டதும் நீ நீ…. தேவசேனா தானே பண்ணிரண்டாம் வகுப்புல பள்ளியிலே முதல் மாணவியா வந்த பொண்ணு தானே இப்போ என்னம்மா பண்ற" என்று கேட்க


பார்வை முழுவதும் ஆசிரியரிடம் இருந்தாலும் கவனம் அனைத்தும் விசாகனிடமே இருந்தது... தன்னை பற்றி கூறும் போது அவன் புருவங்கள் வியந்து பின் சுருங்கியதும் அதன்பிறகு தன்னை கவனிப்பதையும் உணர்ந்தவள் "B.sc computer science சார்" என்றிட


"நல்லா படிமா நல்லா படிச்சி உன் அப்பாவுக்கு பெயரை வாங்கி தரணும் என்று வாழ்த்தி அனுப்பியவர்" மீண்டும் அவனிடம் பேச்சை திரும்பியவர்.


அவளை பார்த்தவாறே "நல்லா படிக்கிற பொண்ணு பிரைட் பீயூட்சர் இருக்கு... பட் கிரமத்துல படிக்க வைக்கனுமே... அவன் வந்தான் இவன் வந்தான் நல்ல வரன்னு கல்யாணம் பண்ணி வைச்சி வாழ்க்கையே குட்டி சுவராக்கிடுவாங்க" என்று அவளுக்காக பேசியவர் பின் அவர் வந்த வேலையை பற்றி பேசிய பின் அங்கிருந்து கிளம்பி விட்டார்.


தலைமை ஆசிரியர் சென்றதும் கோவமாக சுந்தரா என்று உரக்க அழைத்தவன் அவன் வந்ததும் "வேலை நடக்குற இடத்துல இவங்கலாம் யாருடா உள்ள விட்டது? அப்புறம் ஏதாவது ஒன்னுன்னா நாம பொறுப்பாக முடியாது... முதல்ல அவங்களை வெளியே போக சொல்லு" என்றான் கண்டிப்புடன்.


அவன் கை காட்டிய திசையை பார்த்த சுந்தரன் 'ஆத்தா உன் வேலையா இது… நல்ல செய்ற மா' என்று உள்ளுக்குள் நகைத்தாலும் வெளியே நண்பனுக்கு தெரியாதவாறு மறைத்து இருந்தவன் "இதோடா சொல்றேன்" என்றவாறே நேரே அவர்களிடம் விரைந்தான்.


"என்ன இன்னைக்கு காலையில உங்க ஆளுக்கு தரிசனம் கொடுத்தாச்சி போல" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் வினவினான் சுந்தரன்.


சுந்தரன் கேட்டதும் அவள் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சியை வெளிக்காட்டியவள் "அது அது உங்களுக்கு எப்படி அவர் சொல்லிட்டாரா?" என்றாள் படபடப்புடன்.


எதுக்கு இந்த படபடப்பு அவனோட நடவடிக்கைய பார்த்தாலே தெரியலையா உன்னை பார்த்தாலே அந்த இடத்தை விட்டு விரட்ட சொல்றான் நீ காலேஜ் கிளம்பும் போது வர்றவன். நீ வர்றத்துக்கு கொஞ்ச நேரம் முன்னாடியே கிறம்புறான். இந்த ஒரு வாரமாவே அவன் நடவடிக்கைகளை பார்த்துட்டு தானே இருக்கேன்" என்று அவனும் பதிலைக் கொடுக்க


"இன்னும் புகையும்ணா இப்போ தானே பத்த வைச்சி இருக்கேன்" என்று போனை எடுத்து அவன் முன்னே ஆட்டியவள் "முதல் வெடி குண்டு இதுல தான் அனுப்பி இருக்கேன். ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க" என்றிட


"என்ன குண்டா ?"


"ம் குண்டு தான் வாட்ஸப்ல அனுப்பி இருக்கேன் யாரு அனுப்பினான்னு தலைய பிச்சிக்கிட்டும்" என்று சிரித்திட


"நீ நடத்துமா" என்று அவளை ஏற்றி விட்டவன் நண்பன் தன்னை கவனிக்கிறான் என்று தெரிந்ததுமே "இங்க எல்லாம் வரக்கூடாது வேலை நடக்குற இடம்" என்று அவர்களிடம் உரக்க கத்தினான்.


தேவா சுந்தரனிடம் தாழ்மையான குரலில் "இன்னைக்கு இது போதும் மீதியை இன்னொரு நாள் வச்சிக்கிறேன்" என்று அவனிடம் விடை பெற்றவள் விசாகனை கடந்து போகும் சமயம் மீண்டும் கண்ணடித்துவிட்டு இம்முறை உதட்டை குவித்து முத்தம் கொடுக்க அதிர்ந்தே போனான் விசாகன்.


"தேவா…" என்று மேகலாவின் அழைப்பில் அவளை தொடர்ந்து ஓடியவள் "என்ன புள்ள" என்றிட


"மரியாதையா உண்மைய சொல்லு எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?"


"சும்மாதா புள்ள படிச்ச ஸ்கூல் பாத்துட்டு போகலாம்னு தோனுச்சி"


"இல்லையே எனக்கு சந்தேகமால்ல இருக்கு... அந்த அண்ணா... நீ...இதெல்லாம் பாக்கும்போதே எனக்கு என்னமோ பயமாவே இருக்கே என்னை புலம்ப வைச்சிட்டியே டி" என்றாள் மேகலா


"உப் என்று மூச்சை வெளியே தள்ளிய தேவா அடியே நானே மாட்டினாலும் இதுக்கும் மேகலாவுக்கும் எந்த சம்மந்தம் இல்லன்னு லெட்டர் எழுதி வைச்சிட்டு போறேன் போதுமா" என்றிட


"என்னடி ஓடி போற மாதிரி பேசற ஆத்தி பாதகத்தி எனக்கு யமன் உன் அண்ணா ரூபத்துல தெரியுதே!!! ஒன்னா வகுப்புல ஏதோ சண்டைய போட்டோம்னு வந்து ஓட ஓட வெரட்டினது கண்ணு முன்னாடி போகுதடி" என்று தலையில் கை வைத்து அமர


"அட சீ …. வா சொல்றேன்" என்று அவளை ஓரமாக தள்ளி சென்றாள் தேவா…
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN