பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 16

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member



பூ 16


தேவசேனா செய்த காரியத்தில் விசாகனின் முகம் இறுகி இருக்க அருகில் வந்தவனது அரவத்தை கூட உணராமல் சிலை போல் இருந்தவனை உலுக்கி நடப்பிற்கு கொண்டு வந்தான் சுந்தரன்.


"டேய்... மாப்ள என்னடா ஏன் இப்படி நிக்குற" என்றான் சுந்தரன் எதுவும் தெரியாதவனை போல்


கோபத்தில் பற்களை நரநரவென அரைத்து உக்கிற பார்த்தவன் "ஒன்னுமில்லை" என்று கூறி செல்போனை மீண்டும் எடுத்து பார்த்தான்.


'ஒன்னுமில்லையா என்கிட்டயே ஒன்னுமில்லையா… எதுவரை போறேன்னு பார்க்கலாம்' என்று எண்ணம் தோன்ற


"அங்கிருந்து போவது போல் கால்களை நகர்த்தியவன் என்ன மாப்ள ஏதாவது முக்கியமான விஷயம் போன்ல வந்து இருக்கா… போனையே வெறிச்சி வெறிச்சி பாக்குற" என்றான் அவள் என்ன அனுப்பி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள.


சுந்தரன் மெசேஜை பற்றி கேட்கவும் முறைப்புடனே "தஞ்சாவூர் கல்வெட்டுல பதிக்கற அளவுக்கு ஒரு மண்ணும் இல்லை ஏதோ ஒரு வெட்டி தண்டம் நேரம் போகாம கண்ட கண்ட மெசேஜை அனுப்பி இருக்கு…" என்றிட


"அப்படியா! அதுக்கு ஏன்டா இந்த முறைப்பு…" என்றவன் "அது என்ன மெசேஜ் நானும் பாக்குறேன்" என்று அதை வாங்க முயல பட்டென அனைத்து அதை சட்டையில் திணித்தவன் "தேவையில்லாத வெட்டி வேலை எல்லாம் செய்டா ஆனா தேவை இருக்க எதையும் பார்க்காதே உன்னை காலையிலையே பேங்குக்கு போக சொன்னேன் இங்க வந்து நிக்கிற" என்றான் அங்கிருந்து அவனை அனுப்ப முற்பட


"அவன் அவ்வாறு கூறியதும் என்ன ஆச்சு மாப்ள" என்று அருகில் வந்து அவன் நெற்றியை தொட்டு பார்த்த சுந்தரனை


"ப்ச்… என்னடா பண்ற" என்று கடுகடுத்தான் விசாகன்.


"பின்ன, ஏன்டா உளர்ற சன்டே அதுவுமா உன் சொந்தக்காரன் பேங்க துறந்து வச்சிட்டு உட்கார்ந்து இருக்கானா சம்மந்தம் சம்மந்தமில்லாம பேசுற... அப்புறம் நான் என்னன்னு நினைக்கிறது" என்றான் சற்று குரலை உயர்த்தியபடி


"எதையோ நினைச்சிட்டு போ... என் உயிரை மட்டும் வாங்காதே" என்றவன் முகம் அவ்வளவு கடினத்தன்மையை பெற்று இருந்தது.


….


வெண்பனி முத்துக்களை சூரியன் தன் ஆயிரம் கிரணங்களை கொண்டு வாரி அணைத்து முத்தமிட்டு தன்னுள் பொதிந்து வைத்துக் கொள்ளும் இளங்காலை பொழுதில் விசாகனின் அலைபேசியில் அழைப்பு வந்தது.


தொடர்ந்து வந்த மெசேஜ்கள் அவனை கோபமடைய செய்து இருக்க எந்த வகையில் அவளை பாதித்தேன் என்று புரியாமல் குழம்பி அதே நினைவில் இரவு நெடுநேரம் முழித்து இருந்தவன் தாமதமாக தான் உறங்கினான்.


முதல் இரு நாட்கள் தொடர்ந்து வந்த மெசேஜ்களால் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தவனுக்கு அதை யார் அனுப்பி இருப்பார்கள் என்று வினா எழ அவன் முன் முதலில் தோன்றிய உருவம் தேவசேனா தான் வேறு யாரும் தனக்கு இதுபோல் அனுப்ப வாய்ப்பு இல்லை என்று அனுமானித்தவன் சந்தேகத்தோடே


மறுநாள் பள்ளி வேலைக் காரணத்தை வைத்துக் கொண்டு அந்தியூருக்கு சென்றான்.


வழியில் சௌந்தரலிங்கத்தை பார்த்துவிட்டவன் இவனே வலிய சென்று பேச்சி கொடுத்தான் அவரிடம். "எப்படி இருக்கிங்க அய்யா".


" வாங்க தம்பி… நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க... பார்த்து ரொம்ப நாள் ஆன போல இருக்கு... வேலை எல்லாம் எப்படி நடக்குது தம்பி என்றவர் வாங்களேன் வீட்டுக்கு போய் பேசலாம்" என்று அழைப்பு விடுக்க


"நல்லா இருக்கேன் அய்யா வேலையும் நல்லா தான் போயிட்டு இருக்கு" என்றவன் வீட்டுக்கு இன்னோரு நாள் கட்டாயம் வறேன் என்றவன் போனை பரிசோதனை செய்ய "அய்யா உங்க போன் கொஞ்சம் கொடுக்க முடியுமா என் போன் சுவிட் ஆப் ஆகிடுச்சி ப்ரெண்டுக்கு போன் பண்ணனும் மெட்டிரியல் வாங்க சொல்லி" என்றிட


"அதுக்கென்ன தம்பி இந்தாங்க" என்று அவர் போனை நீட்டிட


அதை வாங்கியவன் போன் செய்வது போன்றே அந்த எண்ணை பதிவு செய்த எண்களில் தேடவும் தேவாவின் எண்களாக அதை கண்டவுடன் உறுதி செய்து விட்டான் இது அவளுடைய வேலை தான் என்று அவருக்கு சந்தேகம் வராமல் இருக்க அதில் இருந்து தன் இன்னொரு நண்பனுக்கு அழைத்து சில வார்த்தைகள் பேசியவன் பின் அவரிடம் இருந்து விடைபெற்று சென்றான்.


இது தேவசேனாவின் வேலை என்று புரிந்து போன அவனுக்கு இதை எப்படி தடுப்பது என்று புரியவில்லை… தான் கண்டு கொள்ளாமல் போனால் அவள் நிச்சயம் தன் போக்கை கண்டு இவனை மாற்ற முடியாது என்று கருதி அவளே மாறிவிடுவாள் என்று எண்ணியவன் அவளையும் அவளின் தகவல்களையும் தவிர்த்து அலட்சியம் செய்வது போல் இதுவரையும் நடந்துக்கொண்டான்


மறுபடி அவனுடைய அலைபேசி ஒலியை இசைக்க கண்களை மூடியபடியே அதை எடுத்து ஆன் செய்வதற்குள் அணைந்து போய் இருந்தது. கஷ்டபட்டு கண்களை திறந்து பார்த்தவன் கண்களுக்கு முதலில் தேவா அனுப்பிய குறுந்தகவல் தான் தெரிந்தது.


"Hello hero sir good morning


Have a colourful day "


என்று அனுப்பி இருக்க அதை மூடி அணைத்து வைக்கும் சமயம் அதே எண்ணிலிருந்து அழைப்பும் வந்தது.


அதை எடுக்காமல் தவிர்த்து விட்டான் அடுத்த முறையும் அழைப்பு வர அந்த சத்தத்தில் விசாகனின் அறைக்கே வந்துவிட்டார் தில்லை.


அவன் அறையின் கதவை திறந்தவர் "ராசா முழிச்சிட்டு தான் இருக்கியா போன் அடிச்ச சத்தம் வந்தது அதான் எடுக்க வந்தேன்" என்றிட


"நான் பாத்துக்குறேன் அப்பத்தா" எனும் போதே அழைப்பு வர அவரின் முன்னே அதை அலட்சியம் செய்ய முடியாமல் போனை எடுத்து காதில் பொருந்தி இருந்தான்.


"ம்." என்று சீற்றலோடு வந்தது விசாகனின் குரல்


"ஹலோ ஹீரோ நான் தான் தேவா பேசுறேன்" என்றிட


"ம் அதான் தெரியுதே... மேசேஜ் அனுப்பிதான் உயிரை வாங்கின பார்த்தா… இன்னைக்கு பேசவும் ஆரம்பிச்சிட்டியா?" என்று கடுகடுத்தான் அவன்.


விசாகனுக்கு தன்னை தெரிந்து விட்டது என்று கேட்டதும் பேய் முழி முழித்தவள் "எப்படி கண்டுபிடிச்சிங்க?" என்றாள் சிறிய குரலில்.


"எப்படியோ கண்டுபிடிச்சேன் இப்போ அது எதுக்கு உனக்கு எதுக்கு இந்த மாதிரி சல்லி தனமா வேலை பண்ற" என்றான் காரமாக


"என்னை கண்டுபிடிச்சும் ஏன் என்கிட்ட எதுவுமே கேட்காம இருந்திங்க?" என்றாள் பாவமான குரலில்


"இப்படியே விட்டாலாவது நீ திருந்துவன்னு பாத்தா கால சுத்தி சுத்தி வர என்னை விட்டு தொலை உன் தொல்லை தாங்க முடியல சே…" என்று கடுப்பாக பேசிட


"ஏன் காலையிலையே கோவமா பேசுறிங்க உங்க கிட்ட பேச எவ்வளவு ப்ராக்டீஸ் பண்ணிட்டு வந்தேன். ஆனா நீங்க பேசுறது கேட்கும் போது அடுத்த வார்த்தை பேசவே வர மாட்டேங்குது" என்று குறைப்பட்டு கொண்டவளின் மேல் கண்மூடி தனமாக வெறுப்பு தான் வந்தது.


"ஏய் உனக்கு எப்படி சொல்றது நான் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது உனக்கு என்ன வயசு அதுக்குள்ள கண்டதை எல்லாம் செஞ்சிட்டு இருக்க" என்று அவளை திட்டிவிட


அவனின் வார்த்தைகள் காயப்படுத்தினாலும் "காதலை சொல்ல வயசு இருக்கா ஹீரோ சார்… எனக்கு அது எல்லாம் தெரியாது உங்க கூட இருந்தா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன் அது மட்டும் நல்லா தெரியும்" என்றிட


"உனக்கு அறிவு இருக்கா இல்லையா படிக்கிற வயசுல கண்ட கண்டதையும் பார்த்துட்டு உளறிக்கிட்டு இருக்க என்னை பார்த்து ஒரு மாசம் இருக்குமா அதுக்குள்ள உனக்கு என்ன தெரிஞ்சிடுச்சின்னு இப்படி பண்ற" என்று எரிந்துவிழ


"உங்கள தெரிஞ்சது ஒரு மாசமோ, ஒரு வருசமோ... உங்க கூட இருந்தா மட்டும் தான் பாதுகாப்பா இருக்கா போல நினைக்கிறேன். என் அண்ணன் எங்க அப்பாக்கு அப்புறம் அந்த மாதிரி உங்ககிட்ட மட்டும் தான் உணர்ந்து இருக்கேன். அதை நானே தெளிவு படுத்திக்கிட்டு தான் உங்ககிட்ட சொன்னேன்" என்றிட


"ஒரு முறை சொன்னா புரியாது முட்டாள்... பைத்தியம் மாதிரி பேசுறத நிறுத்திட்டு... போய் உறுப்படுற வழிய பாரு இனி என்னை பார்க்கவோ பேசவோ முயற்சி பண்ணாதே என்னையும் நிம்மதியா இருக்க விடு" என்று அவளை காயப்படுத்தி போனை அணைத்தான்.


விசாகனின் பதிலில் சோகமாக ஆனவள் அப்படியே அமர்ந்திருக்க தேவா… "அடியே எழுந்திரிக்கலையா?" என்று வந்தார் மரகதம்.


இன்னும் மகள் படுக்கையிலையே இருப்பதை பார்த்து "இன்னும் மகாராணிக்கு பொழுது விடியலையோ?" என்று ஜன்னல் திரைச்சீலையை ஒதுக்கி விட்டவர் அவள் சோர்ந்த முகத்தை கண்டு அருகில் வந்தார்.


"ஏண்டி ஒரு மாதிரி உட்கார்ந்து இருக்க என்று கேட்டும் அவளிடம் பதில் இல்லாது போக உன்னைத்தாண்டி ஏதாவது சண்டையா உனக்கும் மேகலாவுக்கும்" என்று இப்போது அவளின் அருகில் அமர்ந்து கேட்க இல்லை என்று தலையை ஆட்டியவளின் நெற்றியை தொட்டு பார்த்தார் மரகதம்


"ஒன்னும் இல்லயேடி நல்லாதானே இருக்க அப்புறம் ஏன் புள்ள ஒரு மாதிரி இருக்க" என்றதும் தாயின் மடியில் படுத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.


"அடியே சொன்னாதானே என்னன்னு தெரியும்" என்று சற்று அதட்டலாகவே அவர் உரைத்தாலும் மனது மகளுக்கு என்னவோ என்று துணுக்குற்றது.


"ப்ச் " என்று அன்னையின் மடியில் இருந்து எழுந்தவள் "சும்மா ஒரு பத்து நிமிஷம் படுக்க விடுறியாமா என்ன என்னன்னு கேட்டுக்கிட்டே இருக்க" என்று கூறி விறுட்டென எழுந்து நின்றுவிட்டவள் "எனக்கு ஒன்னும் இல்ல நைட்டெல்லாம் படிச்சேன் பர்ஸ்ட் செம் வரப்போவுது இல்ல அதான் கொஞ்சம் டென்ஷனா இருந்தேன். வேற ஒன்னுமில்லை தெய்வமே…" என்று அவரை கையெடுத்து வணக்கியவள் நான் காலேஜிக்கு கிளம்புறேன் என்று அங்கிருந்து அகன்று விட்டாள்.


"உனக்கு இருக்க வாயிக்கு வர்றவன் கொடுக்குற அடியில வாயி தன்னாலையே மூடிக்கும் பாரு என்னை நல்லா ஏய்ச்சிக்கிட்டு இருக்க" என்று அவளை பாராட்டியவர் அவளுக்கு மதிய உணவை டப்பாவில் அடைக்க அடுப்படி புகுந்தார்.


இதற்கிடையில் விசாகனின் நிலத்தின் மேல் போடப்பட்ட வழக்கு சம்மந்தமாக வக்கீல் அவனிடம் பேச அழைத்திருந்தார் அதே நேரம் ரத்தினமும் வீட்டில் ரகளையை ஆரம்பித்து இருந்தான்.


"இன்னைக்கு அவனை ஒரு கை பாக்காம விட மாட்டேன்" என்ற வீராப்புடன் பேசிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பிக் கொண்டு இருந்தான்.


"என்னடி எகத்தாளமா பண்ணிக்கிட்டு கிடக்கீங்க... நான் யாரு எப்படி பட்டவன்னு தெரியாம ஆத்தாலும் மகளுமா சேர்ந்து வேலை காட்டுறிங்களோ…" என்று சட்டையை எடுக்க அனைத்தும் துவைக்காமல் இருந்தது…


"சே… வீடா இது ஒரு சட்டையும் துவைக்கல... இதை கூட செய்யாம என்னடி பண்ணுறிங்க ரெண்டு பேரும்… திண்ணுட்டு திண்ணுட்டு தண்டமா வீட்டுல இருக்கிங்க" என்று சட்டையை எடுத்து மனைவியின் முகத்தில் விட்டெறிந்தான்


இதையெல்லாம் கேட்டபடியே வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்த அமுதா மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "நான் தான் சொன்னேன் துவைக்க கூடாதுன்னு" என்று முன்னே வந்து நின்றாள்.


"நான் பார்த்து வளர்ந்த கழுதைக்கு இத்தனை திமிரா... கொழுப்பு கூடி போச்சி... அப்பனையே எதிர்த்து வாய் பேசுற அளவுக்கு வந்துட்ட யாரை எதிர்த்து பேசுற?" என்று அவளிடம் எகிறிக்கொண்டு செல்ல


"சும்மா துள்ளாதிங்க நீங்க பண்ற பாவத்துக்கு உங்களுக்கு துவைச்ச சட்டை ஒன்னுதான் கேடா…"


"பண்ண போறது படுபாதகம் ஒருத்தனை எவ்வளவு தான் ஏமாத்துவீங்க இதுக்கு உங்களுக்கு எல்லாம் செய்து ராஜ உபச்சாரம் பண்ணி அனுப்பனுமா" என்று சீற்றமாக கூறியவள் அங்கிருந்து செல்ல


"நில்லுடி தறுதல நாயே எவன் கொடுத்த தைரியம் டி இவ்வளவு பேச்சி வருது…" என்று மகள் என்றும் பாரமால் வார்த்தைகளை உமிழ


அவன் கூறிய வாரத்தைகள் தலையில் இடியாய் இறங்கிட ஸ்தம்பித்து நின்றவள் அவனை தீ பார்வையில் நீயெல்லாம் ஒரு ஜென்மமா என்ற ரீதியில் பாரத்துவிட்டு விறுட்டென்று வேலைக்கு சென்றுவிட்டாள்.


பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக தற்போதுதான் வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள். B.sc படித்து இருந்தவள் தொலை தூர கல்வியின் மூலம் மேற்படிப்பை தொடர்ந்து கொண்டு இருக்கிறாள். அப்பனின் யோக்யதை என்னவென்று பெண் பார்க்க வந்த அன்று கண்டுக்கொண்டாளோ அன்றிலிருந்து பிடிவாதமாக வேலைக்கு சென்றுக்கொண்டு இருக்கிறாள்.


கணவனின் சொல்லை கேட்டதும் அதிர்ந்து நின்றவர் தன்னை சுதாரித்து வெளியே சென்ற மகளை பார்த்துவிட்டு அதே சினத்துடன் "நீ நல்லா இருப்பியா யா நீ பெத்த பொண்ணையே இப்படி வாயிக்கு வந்த மாதிரி பேசுறியே சீ நீயெல்லாம் மனுசனா தூ" என்று கீழே பார்த்து உமிழ்ந்தவர் உள்ளே செல்ல


அதில் வெறிக்கொண்டவன் போல் மனைவியை அடிக்க வந்தவனின் ஒரு கையை பிடித்தவர் "இந்த அடிக்கற வேலை எல்லாம் நிறுத்திக்கோ... நீ கேட்ட கேட்டுக்கு உனக்கு குடும்பம் குழந்தை குட்டி" என்று அவனின் கையை தட்டி விட முயன்றவரை வேகமாக தள்ளி விட்டவன் "என்னடி பேச்சி ரொம்ப அதிகமாகுது யாரை நம்பி என்னை எதிர்த்து பேசுற உன்னை விட்டு வச்சு இருக்கிறதே சொத்துக்காகதான்... இன்னைக்கு போயிட்டு வந்து உனக்கும் உன் பொண்ணுக்கும் வைக்கிறேன்டி வேட்டு" என்று உறுமியவன் டவுனை நோக்கி பைக்கில் சொக்கனுடன் சென்றான். தேளுக்கு கொடுக்கில் விஷம் பாம்பிற்கு நாக்கில் விஷம் நாகரத்தினத்திற்கு உடலெல்லாம் விஷம் என்பதை போல் நடந்துக்கொண்டான்.





அவனிடம் பேசிய பின் மேலும் ஒரு 3 நாட்கள் அவனை காணவே முடியவில்லை என்பதை விட அவள் கண்களில் பட்டுவிடக்கூடாது என மிகவும் கவனமாக நடந்துக்கெண்டான்.


ஊரில் பெரிய மனிதர், நல்ல குடும்பம் நன்றாக படிப்பவள் வேறு, புத்திக்கெட்டு போய் இவ்வாறு திரிகிறாள் என்று நினைத்தவன் அவளிடம் இருந்து கொஞ்சம் அல்ல நிறையவே விலகி இருந்தான். அவன் போறாதா காலமோ என்னவோ எவ்வளவு விலகிட வேண்டும் என்று நினைத்தானோ அதற்கு இரு மடங்காக அவனிடம் நெருங்கி இருந்தாள் அவள்.


எதிர் எதிர் முனைகள் ஒன்றை ஈர்க்கும் என்ற விதிக்கு ஏற்ப நடந்து கொண்டு இருந்தது அவனுக்கு. வக்கீல் வர சொல்லி இருந்ததனால் அவருடைய அலுவலகத்திற்கு சென்றிருந்தான்.


தேவாவும் மேகலாவும் கல்லூரி செல்வதற்காக பேருந்தில் இருந்து இறங்கிய சமயம் எதிர்புறம் நின்றிருந்த விசாகனை பார்த்துவிட அவசர அவசரமாக அவனிடம் பேசுவதற்காக சாலையை கடந்து அவனிடம் ஓடினாள் தேவா.


"ஏய் எங்கடி ஓடுற" என்ற மேகலாவின் குரலை காற்றில் கலக்கவிட்டவள் அவன் பைக்கின் முன் புறம் நின்று சற்று இளைப்பாறினாள்.


"ஹப்பா பார்த்துட்டேன்…"


"மிஸ் பண்ண கூடாதுன்னு நினைச்சிட்டே ஓடிவந்தேன் புடிச்சிட்டேன்" என்று அவனுடைய பைக்கின் மீது கையை வைக்க


ஓடிவந்து மூச்சிவாங்க நின்றவளை பார்த்ததும் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தவன் "ஏய் கையை எடு" என்று பற்களின் இடுக்கில் வார்த்தையை வெளியேற்றி கண்களில் கனலை வைத்து அவளை பார்த்தான்.


"யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சமாச்சும் பயம் இருக்கா உனக்கு... எத்தனை முறை சொன்னாலும் புரியாதா... வீணா என் பின்னாடி சுத்தி உயிரை வாங்காத" என்று திட்டி விட்டு பைக்கில் இருந்து கீழே இறங்க.


அவன் இப்படி தான் பேசுவான் என்று தெரிந்தாலும் கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு… அவனை கண்ட மகிழ்ச்சியில் இருக்கும் இடத்தை மறந்து ஓடி வந்தவளுக்கு அவன் கூறிய வார்த்தைகளில் கண்களில் நீர் திரண்டது. அவள் அழுவதில் போவோர் வருவோர் அவர்களை ஒரு மாதிரி பாரத்துக்கொண்டு செல்வதையும் பாரத்தவன் "ஏய் அழுவதை நிறுத்து" என்று அவளை பார்த்து கையை இறுக்கியவன் "இப்ப எதுக்கு சீன் கிரியேட் பண்ற" என்று அழுத்தமான குரலில்.


டவுனுக்கு சொக்கனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு வந்த ரத்தினத்தின் பார்வையில் இவர்கள் நின்று கொண்டும் அவள் கண்களை துடைத்துக்கொண்டும் இருக்கும் காட்சிகள் பட "டேய் சொக்கா விரசா வுடுடா வண்டிய அந்த பக்கம்" என்று அவனுக்கு கட்டளையாய் கூறியவன் கண்களில் எரிக்கும் சக்தி இருந்தாள் தேவா இந்நேரம பஸ்பம் ஆகி இருப்பாள்.


"என்னம்மா பொண்ணு பார்த்தா பெரிய இடத்து பொண்ணு மாதிரி இருக்க கண்ணை வேற கசக்குற?" என்ன என்று நல்லதை பேசுபவன் போல் பெரியமனிதன் தோரணையில் நின்றிருந்த ரத்தினம் இருவரையும் மனதில் எடைபோட்டபடி பார்த்தான்.


அவன் பார்வையும் பேச்சும் விசாகனுக்கு கோவத்தை கிளப்ப "ப்ச் உனக்கு தேவை இவ்லாத விஷயம் மரியாதையா இடத்தை காலிபண்ணு" என்று ரத்தினத்திடம் கடுகடுத்தவன்


நீ காலேஜிக்கு கிளம்பு என்று தேவாவையும் அங்கிருந்து அனுப்ப பார்த்தான்.


"ஹோ.. கதை அப்படி ,அப்படி போகுதா… நான் என்னோமோன்னு நினைச்சேன்…" என்று தேவாவை பார்த்து கேளியாக கூற பொது இடம் என்பதால் கையை இறுக்கி "நீ போ தேவா" என்று உரக்க கத்திட்டான் விசாகன்.


"என்னடா என்ன மிரட்டுரியோ… உன்னைபோல பலபேரை பார்த்தவன்டா இவளுக்கு பரிஞ்சிக்கிட்டு வர இவ யாரு உனக்கு... இவளுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்…" என்றான் குற்றம் சாட்டும் நோக்கோடு


அவனின் சட்டையை பிடித்து "ஒழுங்கா போயிடு கோவத்தை கிளறி என் கையால அடிவாங்காத உன்னை மாதிரி அசிங்கத்தை கையால கூட தொடக்கூடாதுன்னு இருக்கேன்" என்று எரிச்சலாய் கூறிட


"ஹோ.. என்னை பார்த்தா எரிச்சலா இருக்கா உண்மைய சொன்னா கசக்குதா இவளை கட்டிக்கிட்டியா இல்ல…" என்று சொல்லும் முன்னரே ஓங்கி ஒரு அறை விட்டு இருந்தான் விசாகன்.


விசாகன் அடித்ததில் ரத்தினம் குடிக்க என்று வைத்திருந்த பாட்டிலை வண்டியில் உடைத்து என்னை என்னையே அடிச்சிட்ட இல்ல என்று கையில் இருந்ததால் அவனை குத்த போக அவனை தள்ளி விட்டதில் ரத்தினத்தின் கையில் இருத்த கண்ணடி பாட்டில் தேவாவின் கையை பதம் பார்த்து இருந்தது. அதை கண்டதும் ரத்தினத்தின் முகத்தில் ஒரு அறையை விட்டவன் அவனை தள்ளி விட்டு அவளிடம் ஓடினான்.


அதுவரையிலும் பிரம்மையில் இருந்தவள் மேல் பாட்டில் படவும் அய்யோ அம்மா என்று கையை பிடித்து வலியில் துடித்தாள்.


"ஹேய் தேவா தேவா…" என்று கூவிக்கெண்டு அவள் அருகில் விசாகன் சென்றிட பாட்டிலின் கூர்முனை கையில் பட்டதில் நரம்பு வெட்டுப்பட்டு அதிக ரத்தப்போக்கு உண்டானது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN