நின் முகம் கண்டேன் பகுதி 4

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Part 4

வார முதல் நாள் காலை நேர பரப்பரப்புடன் அலுவலகத்துக்கு தயாராகி கொண்டிருந்தாள் வைஷூ
" வைஷூ லஞ்ச்சுக்கு வத்த குழம்பும் கோஸ் கூட்டும் வச்சி இருக்கேன்".உஷா
" சரிங்க அத்த குல்லு தூங்கறா இன்னும் எழுந்துக்கல அவ எழுந்ததும் ஏதாவது சேட்ட பண்ணா டேபிள் மேல டிராயிங் புக் கிரயான்ஸ் வெச்சி இருக்கேன் சும்மா வம்பு வலத்தினா அம்மா வரைய சொன்னான்னு சொல்லுங்க கொஞ்சம் அடங்குவா."
வானதிக்கு ஆண்டு விடுமுறை என்பதால் அவளை சமாளிக்கும் வழிமுறைகளை தன் அத்தைக்கு கூறி கொண்டிருந்தாள்.
"பிறந்தது முதல் உடன் இருக்கும் எனக்கு தெரியாதா? உன் பொண்ணுக்கு டிராயிங்னா பிடிக்காதுன்னு நீ பார்த்து போய்ட்டு வா என்றார் இதழில் நகையுடன் .
" ஒகே அத்த பை "என்று முகம் மலர்ந்தாள் .
கருப்பு நிற ஜீன்ஸ் பேன்ட் இளமஞ்சள் நிறத்தில் காலர் வைத்த டாப் அணிந்து தலைவாரி உச்சியில் சிறு கிளிப் இட்டு முடியை முதுகில் படர விட்டிருந்தாள் . நெற்றியில் சிறிய பொட்டு வைத்து அலுவலகத்திற்கு செல்ல தனது ஸ்கூட்டியில் அமர்ந்து நேரம் பார்த்தவள் "சுதா இன்னும் என்னடி பண்ற?என்று வாய் விட்டு புலம்பினாள்

("என்னடா? இவ இப்படி இஞ்ச்.பை இஞ்ச சொல்றாளே னு திட்டாதிங்க மக்காஸ் பிளிஸ் என் ஆசைக்கி இத கொஞ்சம் பொறுத்துக்குங்க ." )

சிறிது சிறிதாக பொறுமையை இழந்து கொண்டிருந்த வைஷூவின் பொறுமையை முழுமையாக சோதித்து சுதா இறுதியில் பார்கிங் வந்து சேர்ந்தாள் .
" வாம்மா வா ரொம்ப சீக்கிரமே கீழ இறங்கி வந்துட்ட என்று கோபம் கலந்த எரிச்சலுடன் கை கடிகரத்தை பார்த்துக்கொண்டு கூறினாள் வைஷூ . தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டே
"அட போம்மா நீ வேற இந்த ஞாயிற்றுக்கிழமை ஹாயா இருந்துட்டு மண்டே ஆபீஸ் போகனுமுன்னாலே எரிச்சல் வருது இதுல ஸ்கூல் கூட லீவு விட்டுடாங்க தான்யாவ பாத்துக்க அம்மாவ வர சொல்லி இருக்கேன் " என்று வாகனத்தை உயிர்பித்து அலுவலத்திற்கு புறப்பட்டு சென்றனர் .

M M TOWERS என்ற பெயர் பொறித்த ஏழு மாடி கட்டிடத்தின் முன் நின்றது அவர்கள் வாகனம் . செக்கியூரிட்டி கேட்டை திறந்து விட இருவரும் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு அவசர அவசரமாக தங்களது அலுவகத்திற்கு செல்ல லிப்டினுள் நுழைந்தனர் .

தங்களது builders க்கு சொந்தமான அந்த கட்டிடத்தில்
முதல் தளத்தில் வங்கியும்,அதற்கு அடுத்த மூன்று தளங்களில் மென்பொருள் நிறுவனமும் ,அதற்கு அடுத்த மூன்று தளங்களில் அவர்களுடைய அலுவலகமும் இயங்கி கொண்டிருக்கிறது .

லிப்டினுள் நுழைந்தவர்களை ஹாய் வைஷூ என்றது ஒரு குரல். அவசரத்தில் கவனிக்காமல் லிஃப்ட்டில் நுழைந்ததற்கு தன்னையே நொந்து கொண்டாள் வைஷூ .

"என்னடி இப்ப என்ன செய்ய போற " என்றாள் சிறிது கலவரத்துடன் சுதா .
ஏய் நீ இருக்கியே....... உனக்கு ஏன் ? இப்படி உதறுது நீ சும்மா இரு ஏதாவது கேக்கட்டும் நான் பாத்துக்குறேன்"என்று சுதாக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள் வைஷூ .

"ஏய் நான் என்ன அவன பாத்தா நடுங்குறேன் எல்லாம் உன்ன பாத்துதான்டி உன் கோபத்த கையால் காட்டுவியோ ,
இல்ல வார்த்தையால காட்டுவியோ பாவம்டி அவன்" என அவனுக்காக பரிதாபபட்டாள்

"வைஷூ இன்னைக்கு உன் கூட கொஞ்சம் தனியா பேசனும் afternoon லஞ்ச்ல பேசலாமா"என்றான் ராகவ்.

ராகவ் அந்த கட்டிடத்தின் தளத்தில் இயங்கும் மென்பொருள் நிறுவனத்தின் CEO . கடந்த ஒரு வருடமாக வைஷூவை சின்சியராக காதலித்து கொண்டிருப்பவன் .
இன்று தன் எண்ணத்தை வெளியிட்டுவதற்காகதான் இந்த அழைப்பு . அவன் வைஷூவை பார்பதை வைத்தே அனைவரும் அறிந்து இருந்தனர் .

இதை கேட்டதும் சுதாவின் கை தானாக ஆட்டம் கண்டது . இதை கண்ட வைஷூ சுதாவின் கையில் சிறிது அழுத்தம் கொடுத்து இன்னைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டனும் என்று மனதில் நினைத்தவள்

"ம் சரி மிஸ்டர் ராகவ் afternoon meet பண்ணலாம் "என்றாள் .

இவர்கள் இருவரும் தங்களது அலுவலகத்தை அடைந்தபோது எப்போதும் போல் இயல்பாகவே இருந்தாள் வைஷூ் . சுதாவின் மனநிலை தான் சற்று கலங்கி இருந்தது இதன் பிறகாவது அவள் வாழ்க்கை சீராக வேண்டுமே என்று தோழியின் வாழ்வை நினைத்து சற்றே கலக்கம் ஏற்பட்டது .

சுதா அவளுடைய செக்க்ஷனிற்கு சென்று அலுவலக பணிகளில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள் . வைஷூ தான் முடிக்க வேண்டிய ப்ராஜெக்டின் இறுதி கட்ட பணிகளை சரிபார்த்து கொண்டிருந்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை இதற்கிடையே நானுமிருக்கிறேன் என்று வயிற்றில் கடமூடாவென சத்தமிட்டு தலைவலியை உண்டாக்க கைகடிகாரத்தை பார்த்தவளுக்கு பசி என்பது உறைத்தது .

"ஏய் இன்னும் என்ன பண்ணிகிட்டு இருக்க எல்லாரும் லஞ்ச் சாப்பிட போய்ட்டாங்க வா நாமளும் போலாம் பசி வயத்த கிள்ளுதுடி " என்று கூறிக்கொண்டே வைஷூவின் கேபினுக்குள் நுழைந்தாள் சுதா.

ஹா ஹா... இங்கே அதுக்கும் மேலே சிறு குடல் பெறுங்குடலை திங்குது .அந்த ராகவ் சொல்றத வேற காது கொடுத்து கேக்கனும். இப்படியே போனேன்னா பசியில அவன ஏதாவது செஞ்சாலும் செஞ்சிடுவேன் ஏதுக்கு வம்பு வா சாப்பிட்டே போறேன் . என்றவள் உஷா கட்டிகொடுத்ததை எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் பின்புறத்தில் இயங்கிய கேண்டீனை நோக்கி சென்றனர் .
அவர்கள் வழமையாக அமர்ந்து சாப்பிடும் இடத்தில் சாப்பிட அமர்ந்தனர் .அந்த நேரம் இவர்கள் இருக்கும் இடத்திற்கு '"நான் இன்னைக்கு உங்க கூட சாப்பிடலாமா ?என்று தயக்கத்துடன் கேட்டான் ராகவ் .

தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வைஷூ சம்மதமாக தலை அசைக்க வந்து அமர்ந்தான் . அவன் ஆர்டர் செய்த உணவினை கேன்டீன் நபர் கொண்டு வந்து டேபிள் மீது வைத்து சென்றதும் உங்களுக்கு ஏதாச்சும் ஆர்டர் பண்ணவா ? என்றான் அக்கறையாக .
அவன் அக்கறையில் எரிச்சலுற்றவள் நாசுக்காக எங்களுக்கு வேண்டாம் என்றாள் .

"அதான் பேச வரேன்னு சொல்லிட்டேன்ல. அப்புறம் இந்த பக்கி இங்க எதுங்கு வந்திருக்கு ? " என்று மனதில் நினைத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

அப்புறம் வசுதா என்ன? ஒன்னும் பேசமாட்டிறிங்க என்றான் .அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை ராகவ் என்றாள் அவசரமாக "சே மனுசன் வேலை செய்யுறதே சாப்பிடத்தான் இவன் அதையும் கெடுக்குறானே ! அடுத்த நிமிசம் என்ன ஆகுமோன்னு டென்ஷனா இருக்கு " என்று உள்ளுக்குள் தவித்து கொண்டிருந்தாள் வசுதா .

இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதைப்போல் முகத்தில் எந்த வித உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் உண்டு முடித்தாள் வைஷூ.

அப்புறம் ராகவ் நீங்க என்கிட்ட பேசனும்னு சொல்லி இருந்திங்களே என்ன அது? என்றாள் கேள்வியாக அவனை பார்த்து .
"ம்.... ஆமா உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும் " ராகவ் .
"வைஷூ மேனேஜர் இன்டிரியல பத்தி பேசனுமுன்னு சொன்னார் நான் போறேன் நீ பேசிட்டு வா" வசுதா .
" ம் " வைஷூ.
இருவரும் கேன்டின் அருகில் இருந்த மரத்தின் கீழ் நின்றிருந்தனர் .சிறிது நேர அமைதிக்கு பின் எனக்கு நிறைய வொர்க் இருக்கு உங்களுக்கும் வோர்க் இருக்குமுன்னு நினைக்கிறேன். நீங்க சொன்னா நான் கிளம்புவேன்" என்றாள் சிறிது இறுக்கத்துடன்.

பலவாறு மனக்கண்ணில் தன் காதலை சொல்ல முன்னோட்டம் பார்த்தவன் இவள் கூறிய முகபாவத்தில் பட்டென போட்டுடைத்தான் .

" I love u வைஷூ நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன் . என் மனசுல இருக்கறத ரொம்ப நாள் உன்கிட்ட சொல்லனும் இருந்தேன் உன்னோட டிரான்ஸ்பர்னால இதை இதுக்கு மேல தள்ளிபோட்டா என் காதல் உன்கிட்ட சொல்லமுடியாம போய்டுமோன்னு பயம் வந்துடுச்சி அதன் இன்னைக்கு சொல்லிட்டேன் . என்று அவளுடைய பதிலுக்காக காத்திருந்தான் .

எதற்கும் அசரமாட்டேன் என்ற பாவனையுடன் "சரி என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? ". வைஷூ

"உனக்கு ஒரு குழந்தை இருக்கு என்பது வரையும் தெரியும் "என்றான் சுருக்கமாக

"ஹோ...அப்போ எல்லாம் தெரிஞ்சிதான் வந்து இருக்கிங்க . எப்படி உங்களுக்கு என்கிட்ட இப்படியெல்லாம் பேச தோனுது
ஒரு குழந்தை இருக்குன்னு தெரிந்தும் கூட " என்றாள் கோபமாக

"முதல் வாழ்க்கை சரியில்லாத போது ஏன்? இன்னோரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடாது? " என்றான் ராகவ்

"நான் உங்க கிட்ட கேட்டேனா எனக்கு ஒரு வாழ்க்கை கொடுங்கன்னு எனக்கு உங்க காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம்"என்றாள் நறுக்கு தெரித்தார்போல்.

சிறிது தடுமாறியவன் "உடனே பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சு சொல்லு ... பிளிஸ் வைஷூ" என்றான் ராகவ்

இதுல எனக்கு யோசிக்க எதுவும் இல்லை மிஸ்டர் ராகவ்
"காதலை கம்ப்பல் பண்ணி வரவழைக்க முடியாது அது தானா வரனும் என்னால உங்க காதல ஏத்துக்க முடியாது இப்போன்னு இல்ல எப்போ கேட்டாலும் இதுதான் என்னுடைய பதில்" .

ஏன்னு தெரிஞ்சிக்கலாமா? இன்னும் உங்க பழைய வாழ்க்கைய பத்தி தான் நினைக்கிறிங்களா? அதுதான் இல்லைன்னு கேள்வி பட்டேனே!!! தன்னை புறக்கணிக்கிறாள் என்பதை விட தான் காதல் புறக்கணிக்கப் பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ள சற்று தடுமாறியவன் தன்னை நிதானித்துக் கொண்டு வினவினான் .

மிஸ்டர் ராகவ் உங்ககிட்ட இதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... இருந்தாலும் உங்க காதலுக்கு மதிப்பு கொடுத்துதான் இவ்வளவு.நேரம் பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன் . என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு என் வாழ்க்கைய பத்தி பேச நீங்க யார்? என் தாலிக்கும் அதை என் கழுத்தில் கட்டினவருக்கும் மட்டுமே என் வாழ்க்கையுலேயும் மனசுலயும் இடமிருக்கு அவர தவிர்த்து வேற யாருக்கும் இடம் இல்லை .

நீங்க என்னை நினைப்பதை விட்டுட்டு உங்களுக்கு ஏத்த நல்ல பெண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்குங்க .இதை சொல்ல நீ யார்னு?? நினைச்சா ... உங்க இஷ்டம்" என்றவள் தோல்களை குலுக்கி "இதுக்கு மேல சொல்ல ஓன்னும் இல்ல பை . என்று கூறி அந்த இடத்தை விட்டு அலுவலகத்தை
நோக்கி நடந்தாள்

ராகவ் மறுபேச்சு பேச தோன்றாது அவள் செல்வதையே கண்.இமைக்காமல் வெறித்திருந்தான் .

லிஃப்ட்னுல் நுழைந்தாள் ...கைகள் படபடத்தது . தன் நெஞ்சில் உரசிய தாலியை தொட்டு பார்த்தவளின் விழிகள் ஓரம் கண்ணீர் துளிர்த்தது . தாங்கள் பிரிந்த காரணம் நினைவிற்கு வர துளிர்த்த விழி நீரை கை விரல்களால் சுண்டியவள் தற்காலிகமாக தன் எண்ணத்திற்கு கடிவளாமிட்டு மனதினை ஒரு நிலைபடுத்தியும் பணியினை தொடரமுடியாமல்
மேலும் மேலும் அவளின் கடந்த காலம் நினைவுக்கு வர அலுவலகத்தில் பர்மிஷன் கேட்டு சுதாவிடம் கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்தவளுக்கு தலை வின்னென்று தெரித்தது .

அத்தையிம் கூறி காபியை வாங்கியவள் தன் அறைக்கு சென்று மெத்தையின் மேல் துயில் கொண்ட தன் மகளை கண்டு அருகில் அமர்ந்தவள் தான் திருமண பந்ததில் இணைய காரணமான நிகழ்வுகளை மனக்கண்ணில் காட்சிகளாக உருவகபடுத்தினாள் .
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN