என்னுடைய கதைக்கு காஞ்சனா சகோதரி கொடுத்த reviewஉங்கள் அன்புக்குஎன் பிரியங்கள் சிஸ்
இமை தேடும் ஈரவிழிகள்
நாயகன் - இளங்குமரன்
நாயகி - ஏழிசைவள்ளி
முதலில் ஆசிரியர் யுவனிகாவுக்கு ஒரு பெரிய கை குலுக்கல். இப்படி ஒரு கோணத்தில் கதையை யோசிப்பவர் மிகச் சிலரே.. அந்த சிலரில் யுவனிகாவின் பெயர் இடம் பெற்றதற்கு பாராட்டுகள் தோழி
மெல்லிய இதமான சாரல் மழை போன்று கிராமத்து சூழலில் ஆரம்பிக்கிறது கதைக்களம். நாயகனின் அக்கா மீனாட்சியை வீட்டில் நடத்தப்படும் விதத்தோடு நகரும் கதை இடை இடையே அக்கா தம்பி பாசத்தோடு பயணிக்கிறது.
நாயகன் குமரன் தாயின் மறு உருவமான தன் அக்காவின் பாசத்துக்கு கட்டுப்பட்டு அவளுக்காகவே வாழ்கிறான். படித்த கிராமத்து இளைஞனாக குணத்திலும் நடத்தையிலும் நம் மனதையும் வசப்படுத்துகிறான்.
நாயகனின் திருமணத்தன்று தடாலடியாக கையில் குழந்தையுடன் நாயகி வள்ளியின் பிரவேசம்.. கல்யாணம் நாயகி வள்ளியுடன்.. ஆஹா.. வந்துடுச்சி twist என்று அந்த இடத்தில் சூடுபிடிக்கிறது கதை. அதன் பிறகு, அடுத்து என்ன.. வள்ளி ஏன் குமரன் வாழ்விற்குள் வந்தாள் என்று நம்மை பல கேள்விகள் கேட்க வைத்து.. ஆவலோடு காத்திருக்க வைத்து.. விறுவிறுப்பாக அழகாக நகர்கிறது கதை.
நாயகன் குமரன் தன் அக்காவிடம் காட்டும் பாசமாகட்டும்.. வள்ளி தன் அண்ணனிடம் காட்டும் பாசமாகட்டும்.. எண்பதுகளில் நாம் வாழ்ந்த அல்லது நாம் பார்த்த பல குடும்பத்தை நினைவூட்டுகிறது. நிச்சயம் அந்த இடங்கள் எல்லாம் நம் மனதை நெகிழச் செய்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்களையும் நிச்சயம் ஏங்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
நாயகி வள்ளியை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.. இப்படி ஒன்றை ஒரு பெண்ணால் செய்ய முடியுமா என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கிறாள். அவள் பேசும் வசனமும்.. செய்யும் செயல்களும் நம்மை ரசிக்க வைக்கிறது.
நாயகன் நாயகிக்கு இடையேயான காதல் பரிமாற்றங்கள் எல்லாம் cute love
பாசம் என்ற பெயரில் மீனாட்சி செய்யும் அலப்பறைகள் எல்லாம் வேற லெவல்.. குறிப்பாக குமரன் - வள்ளி திருமணத்தன்று அவள் செய்வது எல்லாம் ஒரு பக்கம் நம்மையும் மீறி சிரிக்க வைக்கிறது.
நாயகன், நாயகி தவிர மற்ற கதாபாத்திரங்களுமே நம் நினைவில் நிற்கின்றனர்.., குழந்தை அஸ்மி, வாத்தியார், தாத்தா என சொல்லிக்கொண்டே போகலாம். நிஜ வாழ்வில் நாம் காணும் பல திருந்தாத ஜென்மங்களையும் படைத்து மிக இயல்பாய் காட்டியிருக்கிறார். அப்பா - மகள் பாசம்.. அண்ணன் - தங்கை பாசம்.. அக்கா - தம்பி பாசம்.. அக்கா - தங்கை பாசம்.. நண்பனின் பாசம் என பாசத்திற்கு பஞ்சமில்லை. கண்டிப்பாக வாசகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பாசமலர் இது
யுவனிகா இதுபோன்று மேலும் பல படைப்புகள் படைத்து புகழ்பெற்று வாழ்வில் வெற்றிடைய வாழ்த்துகிறேன்.
நன்றி