review - இமை தேடும் ஈரவிழிகள்

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னுடைய கதைக்கு காஞ்சனா சகோதரி கொடுத்த review💜💜💜💜உங்கள் அன்புக்கு🤗🤗🤗என் பிரியங்கள் சிஸ்💞💞💞💞

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இமை தேடும் ஈரவிழிகள்
நாயகன் - இளங்குமரன்
நாயகி - ஏழிசைவள்ளி

முதலில் ஆசிரியர் யுவனிகாவுக்கு ஒரு பெரிய கை குலுக்கல்🤝🤝. இப்படி ஒரு கோணத்தில் கதையை யோசிப்பவர் மிகச் சிலரே.. அந்த சிலரில் யுவனிகாவின் பெயர் இடம் பெற்றதற்கு பாராட்டுகள் தோழி👏👏💐💐💖💖

மெல்லிய இதமான சாரல் மழை போன்று கிராமத்து சூழலில் ஆரம்பிக்கிறது கதைக்களம். நாயகனின் அக்கா மீனாட்சியை வீட்டில் நடத்தப்படும் விதத்தோடு நகரும் கதை இடை இடையே அக்கா தம்பி பாசத்தோடு பயணிக்கிறது.

நாயகன் குமரன் தாயின் மறு உருவமான தன் அக்காவின் பாசத்துக்கு கட்டுப்பட்டு அவளுக்காகவே வாழ்கிறான். படித்த கிராமத்து இளைஞனாக குணத்திலும் நடத்தையிலும் நம் மனதையும் வசப்படுத்துகிறான்.

நாயகனின் திருமணத்தன்று தடாலடியாக கையில் குழந்தையுடன் நாயகி வள்ளியின் பிரவேசம்😲😲.. கல்யாணம் நாயகி வள்ளியுடன்.. ஆஹா.. வந்துடுச்சி twist😃😃 என்று அந்த இடத்தில் சூடுபிடிக்கிறது கதை. அதன் பிறகு, அடுத்து என்ன.. வள்ளி ஏன் குமரன் வாழ்விற்குள் வந்தாள் என்று நம்மை பல கேள்விகள் கேட்க வைத்து.. ஆவலோடு காத்திருக்க வைத்து.. விறுவிறுப்பாக அழகாக நகர்கிறது கதை.

நாயகன் குமரன் தன் அக்காவிடம் காட்டும் பாசமாகட்டும்.. வள்ளி தன் அண்ணனிடம் காட்டும் பாசமாகட்டும்.. எண்பதுகளில் நாம் வாழ்ந்த அல்லது நாம் பார்த்த பல குடும்பத்தை நினைவூட்டுகிறது. நிச்சயம் அந்த இடங்கள் எல்லாம் நம் மனதை நெகிழச் செய்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்களையும் நிச்சயம் ஏங்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.

நாயகி வள்ளியை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.. இப்படி ஒன்றை ஒரு பெண்ணால் செய்ய முடியுமா என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கிறாள். அவள் பேசும் வசனமும்.. செய்யும் செயல்களும் நம்மை ரசிக்க வைக்கிறது.

நாயகன் நாயகிக்கு இடையேயான காதல் பரிமாற்றங்கள் எல்லாம் cute love 💖💖💖

பாசம் என்ற பெயரில் மீனாட்சி செய்யும் அலப்பறைகள் எல்லாம் வேற லெவல்😉😉.. குறிப்பாக குமரன் - வள்ளி திருமணத்தன்று அவள் செய்வது எல்லாம் ஒரு பக்கம் நம்மையும் மீறி சிரிக்க வைக்கிறது🤣🤣.

நாயகன், நாயகி தவிர மற்ற கதாபாத்திரங்களுமே நம் நினைவில் நிற்கின்றனர்.., குழந்தை அஸ்மி, வாத்தியார், தாத்தா என சொல்லிக்கொண்டே போகலாம். நிஜ வாழ்வில் நாம் காணும் பல திருந்தாத ஜென்மங்களையும் படைத்து மிக இயல்பாய் காட்டியிருக்கிறார். அப்பா - மகள் பாசம்.. அண்ணன் - தங்கை பாசம்.. அக்கா - தம்பி பாசம்.. அக்கா - தங்கை பாசம்.. நண்பனின் பாசம் என பாசத்திற்கு பஞ்சமில்லை. கண்டிப்பாக வாசகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பாசமலர் இது💓💓💓

யுவனிகா இதுபோன்று மேலும் பல படைப்புகள் படைத்து புகழ்பெற்று வாழ்வில் வெற்றிடைய வாழ்த்துகிறேன்.

நன்றி🙏🙏🙏
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பரணி சிஸ் என் கதைக்கு தந்த review 💜💜💜உங்கள் அன்புக்கு என் பிரியங்கள் சிஸ்💞💞💞🤗🤗🤗🤗

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

யுவனிகா எழுதிய 'இமை தேடும் ஈர விழிகள்'அழகான கிராமத்து கதை.காதலே பிடிக்காத ஹுராே இளங்குமரன், தனக்கு பிடித்த மானவனை திருமணம் செய்ய எந்தextreme க்கும் செல்லும் நாயகி ஏழிசை வள்ளி(அழகான பெயா்).கிராமத்து பாணியில் அக்கா தம்பி பாசம்.கூட்டுக் குடும்பத்தின் பாச பிணைப்பை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறாா்.Well done YUVANIKA. You are also a besty in this site.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா சுரேஷ் சிஸ் என் கதைக்கு தந்த review 💞💞💞💞உங்கள் அன்புக்கு💜💜💜என் பிரியங்கள் சிஸ்🤗🤗🤗🤗🤗

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

யுவனிகா வின் ஈரவிழிகள்..
தாயில்லா வீட்டில் தமக்கைகளே பலருக்கு தாய். தாயையே எட்டி உதைக்கும்போது தமக்கை எம்மாத்திரம். உதாரணம் புருஷோத்தமன்..
ஆனால் தாயுமானவனாய் வளர்த்த அண்ணனுக்காக பொய் சொல்லி தன் காதலனையும் கைபிடிக்கும் வள்ளி. தப்பே செய்யாமல் அக்காவின் ஒரு பார்வையில் தாலி கட்டிவிட்டு உணர்வு களை கட்டுப்படுத்த முடியாமல் வெடிக்கும் குமரன்... சுயநலத்தின் மொத்த உருவமாக கலா அண்ணிகள்..

ஒரே கதையில் மனிதர்களின் அனைத்து இயல்புகளை யும் சொல்லிவிட்டீர்கள். சூப்பர் ஸிஸ். முடிவும் அருமை....
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என் கதைக்கு சாரதா சாரு சிஸ் தந்த review 💖💖💖 உங்கள் அன்புக்கு💜💜💜💜என் பிரியங்கள் சிஸ்🤗🤗🤗🤗

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இமை தேடும் ஈரவிழிகள்

ஆர்தர் :யுவனிகா

அண்ணன் தங்கை
அக்கா தம்பி பாசம் பற்றிய கதை

பொறுப்பற்ற தந்தைக்கு பிறந்த மூத்த மகள் மீனாட்சி

அவளுக்கு பின் மூன்று ஆண் மகவுகள்

சொத்திருந்தும் பாசமில்லா உறவுகள்

கடைசி தம்பி இளங்குமரனின்
சகோதரியாய் தாயாய் மீனாட்சி மாற

வீட்டு பொறுப்பு துறந்து நாட்டாமை செய்யும் சுயநல தந்தையின் பொறுப்பேற்ற தன்மையால்

தன் இளமை பருவம் இழந்து குடும்பத்தில் வேலைகாரியாகும்
மீனாட்சி

முத்த தம்பி புருஷோத்தமன் சுயநல பிண்டம்

பணத்தாசை கொண்டு தமக்கையை யே தரக்குறைவாய்பேசும் சுயநல பிசாசு

இதெல்லாம் காணாது தன் சுகம் தேடும் தகப்பன்

இப்படி நகரும் பொழுது இளங்குமரன் திருமணத்திற்கு வருகிறாள் ஒரு கன்னிப்புயல்
கையில் ஒரு குழந்தையுடன்

இளங்குமரனுக்கும் தனக்கும் திருமணம் முடிந்ததென சாட்சிகளுடன்

இங்கே கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் ஆசிரியர்

குமரன் இது பொய் தாலி கட்ட மாட்டேன் என அடம் பிடிக்க
தமக்கை யின் கட்டாயத்தில்
தாலி கட்டுகிறான்

கட்டியவளை தாரமாக்க எண்ணாமல்
வந்த தடம் அறிய கிளம்புகிறான்

திரும்பிய பக்கமெல்லாம் தோல்வியே கிட்ட தமக்கை மேல்
பாசம் காட்டும் தாரம் மேல் இவனுக்கும்
நேசம் பிறக்க
இவனே அறிகிறான் அவனவளின்
பின் புலத்தை

இவனைப்போன்றே
பொருப்பற்ற பெற்றோருக்கு பிறந்த மூத்த மகனாய் நடராஜன்

மூன்று தங்கைகள்
மூத்தது பணப்பேயாய் இருக்க
உணர்வுகள் மரத்து பாசம் ஒன்றே
போதும் என சாதுவான
தனயனின் மனமறிகிறாள்
ஓர் நாள்
பதின் பருவத்தில் மேகமலையில்
ஓர் மீன்விழியாழை கண்டு
மையல் கொண்டதாய்

உழைப்பில் உயர்ந்த பின் தமக்கான தாரமாய் அவளை வரிக்க நினைக்க
வாழ்க்கை வஞ்சிக்க
வஞ்சியை மறந்து வாழ்நாள் கடந்திட்டதாய் உணர்ந்தான்

தனயனுக்காக தேடல் தொடங்கிய
வள்ளிமயில்
கண்டறிந்தது
தான் மையல் கொண்ட மன்னனும்
தனயனின் மனம் கவர்ந்தவளும்
ஓர் வீட்டு பிள்ளையென

தமக்கை பாசமும்
தனயன் பாசமும்
வென்னு மீனாட்சி சுந்தரனுடன்

மலேசிய மண்ணின் மணமகளாக

மங்களமாய் முடிந்தது கதை

படித்த கண்களும் ஈரமாகி யது

வாழ்த்துக்கள் ஜீ

இனி எழுதுங்க கைகளுக்கு

என்னையும் டேகஙபணணுங்கோ ஜீ மகிழ்வேன்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN