அத்தியாயம் - 3

Arthi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"கொரங்கு மாதிரி, அதானே ஹா...ஹா... ஹா "மாயா கைபேசியில் பேசியவாரு வீட்டுக்குள் நுழைந்தாள். அனைவரும் அவளை திரும்பி பார்க்க, அவள் புன்னகையுடன் உள்ளே வந்தாள்.

"சரி டி, நா ஈவ்னிங் கால் பன்றேன் பை!" என்று கைபேசியை வைத்தாள். "மாயா, இங்க வா, யார் வந்திருக்கா பாரு?" கஸ்தூரி அழைக்க அவளும் அவர்கள் முன் சென்று நின்றாள்.

மாறனை அடையாளம் காண முடியாமல் யார் என்பது போல் கஸ்தூரியை பார்த்தாள். "மாறா, மாயா அடையாளம் தெரியாம மாறிட்டா தானே?" அவர் புன்னகையுடன் வினவ மாயாவின் முகமோ மாறியது.

"என்னது மாறனா?? சின்னவயசுல எலி குட்டி மாதிரிதானே இருந்தான் இப்போ என்ன ஆறடில வாட்ட சாட்டமா வந்து நிக்குறான். நாம மண்டய ஒடிச்சத மனசுல வச்சிருப்பானோ, பழிவாங்க இப்போ அட்டாக் பண்ணா நம்ம நிலைமை என்ன ஆகும்??" அவள் மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருக்க,

"ஆமா அத்த, நீங்க சொல்லுறது சரிதான். அப்போ நல்லா சாம்பார் பூசணி மாதிரி இருந்தா, இப்போ முருங்கைக்காய் மாதிரி இருக்கா?" சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் கூறினான்.

"என்ன???!!! நா முருங்கக்காயா?!😖 நல்லா உருளைக்கிழங்கு மாதிரி இருந்துட்டு என்ன பத்தி பேச வந்துட்டாரு சீமராஜா 😏" பற்களை கடித்தவாரு கூறினாள்.

"மாயா, பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவ?" கஸ்தூரி கடிந்துக்கொள்ள, "அதை அங்கேயும் சொல்லுங்க" அவள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள்.

"ஏண்டா இன்னும் அவள சீண்டிட்டே இருக்க. இன்னொரு தடவ மண்டை உடயனும்னு ஆசையா இருக்கா?" ராஜாராம் கேலி செய்ய, "அய்யோ!! அதெல்லாம் இல்ல மாமா, நா மனசுல தோன்றியதை மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமா சொல்லிட்டேன். அதுக்குன்னு உங்க பொண்ணு அரிவாள தூக்கிட்டு வந்துற போறா, காப்பாத்துங்க மாமா" அவன் கலவரமாக கூற, ராஜாராம் வாய்விட்டு சிரித்தார்.

"மாமா!!" இனிமையான குரல் உற்சாகத்துடன் ஒலித்தது. அவன் மலர்ந்த புன்னகையுடன் திரும்பினான்.

"குட்டிமா!!" மகிழ்ச்சியாக அழைத்தான், மீனாவும் அவனிடம் ஓடி வந்து அவன் அருகில் நின்றுக்கொண்டாள். "மாமா, எப்படி இருக்கீங்க?" உற்சாகமாக அவள் வினவ, "நல்லா இருக்கேன் டா மா, நீ எப்படி இருக்கே? நல்லா வளர்ந்துட்ட, ஆனாலும் இன்னும் என்னோட குட்டிப்பாப்பா தான். அந்த குழந்தை குணம் மட்டும் இன்னும் மாறல" பாசமாக கூறினான்.

"உங்கள பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. ஏன் இவ்வளவு நாளா என்ன பாக்க வரல?" சோகமாக கேட்டாள்.

"வர சந்தர்ப்பம் அமையல டா, இப்போ வந்துடேன்ல, இனி ஒவ்வொரு வருஷமும் வந்து உன்ன பாத்துட்டு போறேன் சந்தோசமா?" அவன் வினவ, அவள் அழகாக சரி என்று தலை அசைத்தாள்.

"சமையல் ஆச்சு, எல்லாரும் சாப்பிட வாங்க" கஸ்தூரி அழைக்க, "வாங்க மாமா சாப்பிடலாம், அம்மா சாப்பாடு சூப்பரா இருக்கும்" என்று கூறி அழைத்துச் சென்றாள் மீனா.

"அத்த, சாம்பார் சூப்பர், பொரியல் கூட்டு அத விட சூப்பர், ரசம் வேற லெவல். பாயசம் தேன் மாதிரி இருக்கு" அனைத்து உணவையும் ரசித்துக்கொண்டே சாப்பிட்டான். கஸ்தூரியும் ஆசையாக பரிமாறினார்.

"தினமும் அம்மா கையால சுவையா சாப்பிட்டாலும் அத்த சாப்பாடு தனி சுவைதான் இல்ல மாமா?" அவரை வம்பிலுக்க, "ஆமா மாப்பிள" என்று அவர் சிரித்தார். "அத்த, உங்க சமையல் பத்தி பேசினா மாமா சிரிக்குறாரு" அவரிடம் கண்ணடித்து விட்டு கூறினான். "என்ன டா, இப்படி மாட்டி விட்டுட்டே" என்றார் அவர் கலவரமாக.

"என்னது!! என்னப்பா உன் மாமா என்ன சொல்லுறாரு" பூரிக்கட்டையுடன் வந்து நின்ற மனைவியை பார்த்து இன்னும் கலவரமானார்.

மாறனோ வாய் விட்டு சிரித்தான். "அத்த, அவரு எதுவும் சொல்லல, நான்தான் உங்க மேல பயம் இருக்கானு செக் பண்ணேன். பரவால பயம்லா நிறையவே இருக்கு" சிரித்தவாறு கூறினான், கஸ்தூரியும் பதிலுக்கு சிரித்துவிட்டார்.

"மாயா, மாமாவ பாத்தியா?" மகிழ்ச்சியாக அறைக்குள் வந்தாள் மீனா. "நானே செம்ம கோபத்துல இருக்கேன். இன்னும் கோப படுத்தாதே!" எரிச்சலுடன் கூறினாள். மீனாவின் முகம் அவள் வார்த்தைகளில் வாடியது. அவள் எதுவும் பேசாமல் வெளியேற முற்பட்டாள்.

"ஹே, சாரி, நா வேற கோபத்துல உன்ன திட்டிட்டேன்" வருத்தத்துடன் கூறினாள் மாயா.

"ம், ஏன் உனக்கு என்ன கோபம்?" இயல்பாக கேட்டாள் மீனா. "வீட்டுக்கு ஒரு வானரம் வந்திருக்கே, அதான்" கடுகடுத்தாள்.

"மாயா! மாமாவ அப்படி எல்லாம் சொல்லாதே. இத கேட்டா அவர் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு. அவரு இவ்வளவு நாள் கழிச்சு நம்மள பாக்க வந்திருக்காரு, அவர போய் இப்படி திட்டுறியே" சோகமாக கூறினாள் மீனா.

"இல்ல மீனா, நா இந்த மாதிரி யாரையும் பேசி நீ பாத்திருக்கயா? நானே இப்படி பேசுறேனா, நான் எந்த அளவுக்கு இரிடேட் ஆயிருப்பேனு நெனச்சு பாரு" என்று கூறி அவன் தன்னை சீண்டியதை கூறினாள்.

"அது சும்மா உன்கூட இயல்பா பேசுறதுக்காக சொல்லி இருப்பாரு. அத நீ பெருசா எடுத்துக்காதே. இப்போ வா சாப்பிடலாம்" அவள் கை பிடித்து இழுத்தாள். "எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு" என்று கூறி மறுத்தாள்.

"சரி, அப்போ நானும் சாப்பிடல ஆனா ரொம்ப பசியா இருக்கு." சோகமாக கூறினாள் மீனா. "ஏன் டி, என்ன டார்ச்சர் பன்றே. சரி வா, நானும் வரேன், சாப்டிடலாம்" என்று எழுந்தாள்.

"என் செல்ல அக்கா" அவள் கன்னத்தை கிள்ளி அவளுடன் நடந்தாள் மீனா. இருவரும் சமையல் அறையை அடைந்தனர். நல்ல வேளையாக மாறன் ராஜாராமுடன் வெளியில் சென்றிருந்தான்.

இருவரும் சாப்பாட்டை சுவைத்து உண்டனர். "இந்தா முருங்கைக்காய் கூட்டு சூப்பரா இருக்கு சாப்பிட்டு பாரு" மாயாவின் தட்டில் முருங்கை காய் கூட்டை வைத்தாள் மீனா. அதை பார்த்ததும் அவளுக்கு அவன் வார்த்தைகள் நினைவில் வர, எரிச்சல் ஆனாள்.

"எனக்கு வேண்டாம், இன்னொரு தடவ அந்த பேர சொன்ன கொன்னுடுவேன்" அவளை முறைத்துவிட்டு சாப்பிட தொடங்கினாள்.

"என்ன இவ, வித்தியாசமா நடந்துக்கிறா! என்னவோ?" என்று எண்ணிக்கொண்டு சாப்பிட தொடங்கினாள் மீனா.

"அம்மா, எனக்கு வெளிய வேல இருக்கு. நா போய்ட்டு வரேன், வர ஈவ்னிங் ஆகும்" என்று கூறி வண்டி சாவியை எடுத்து கொண்டு கிளம்பினாள் மாயா.

"சீக்கிரம் வந்துரு" என்று கூறி அவளை வழி அனுப்பினார் கஸ்தூரி.
.
.
.
"சரி அத்த, நா கிளம்புறேன். நீங்க எல்லாரும் அடுத்த வாரம் வந்துருங்க. நாங்க எல்லாரும் உங்களுக்காக காத்துகிட்டு இருப்போம்" புன்முறுவலுடன் கூறினான் மாறன்.

"கண்டிப்பா பா, ஆனா நீ இன்னொரு நாள் இருந்திட்டு போகலாம்ல. இன்னிக்கே கிளம்பனும்னு சொல்றே" என்றார் வருத்தமாக.

"ஊர்ல மத்த ஏற்பாடெல்லாம் செய்யணும் அத்த, இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்" என்று கூறி இருவரிடமும் ஆசி பெற்றான்.

"நல்லா இருப்பா" இருவரும் வாழ்த்தினர்.

"மாமா, அத்த இது உங்களுக்கு" என்று கூறி ஒரு துணி பையை கொடுத்தான். "என்ன பா இது, இதெல்லாம் எதுக்கு?" அவர்கள் வினவ, "அதெல்லாம் எதுவும் பேச கூடாது. கும்பாபிஷேகத்துக்கு புது துணி கொடுத்து தான் அழைக்கணும். நீங்க கும்பாபிஷேக நாள்ள இதைத்தான் போட்டுக்கணும், சரியா?" என்றான் அன்பாக.

"சரி பா. உன் விருப்பம்தான்" என்றனர் புன்னகையுடன்.

"இது மீனுக்கு, மீனு இது உனக்கு பிடிச்சிருக்கா?" என்றான் பாசமாக. "சூப்பரா இருக்கு மாமா" என்று கூறி ஆசையாக பெற்றுக் கொண்டாள்.

"இது மாயாவுக்கு, அவ வந்தா இத கொடுத்திரு" என்று இன்னொரு பையை அவள் கையில் கொடுத்தான். "சரி மாமா" என்று அவள் அதையும் பெற்றுக் கொண்டாள்.

"இந்தா, இத பிடி" என்று கஸ்தூரி ஒரு பையை கொடுக்க. "அத்த, நாங்க தான் வாங்கி தரணும்" என்ற அவனை மேலும் பேசவிடாமல், அவர் பேசினார்.

"அதுதான் பா எங்க குலதெய்வம். நாங்களும் செய்யணும். நீ எதும் பேசாத, இத வாங்கிக்கோ" என்று அவன் கையில் கொடுத்தார், அவன் மேலும் மறுக்காமல் அதை பெற்றுக் கொண்டான்.

அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான். ராஜாராம் அவனை வழியனுப்ப ரயில் நிலையம் வரை சென்றிருந்தார்.

"அம்மா நல்லா இருக்காதானே பா? அவள பாக்கணும் போல இருக்கு" வருத்தத்துடன் கூறினார் ராஜாராம். "அம்மாக்கு எந்த குறையும் இல்ல மாமா, நல்லா இருக்காங்க. உங்க எல்லாரையும் பாத்தா இன்னும் சந்தோச படுவாங்க. நீங்க எல்லாரும் வரபோறீங்கனு பாத்து பாத்து எல்லாம் செஞ்சுட்டு இருக்காங்க" என்றான் முருவலுடன்.

"சந்தோசம் பா, அம்மாவ பாத்துக்கோ. வீட்டுக்கு போய்ட்டு போன் பண்ணு பா" என்று கூறி விடையனுப்பினார்.
.
.
"மாயா, இந்த டிரஸ் உனக்கு பிடிச்சிருக்கா?" அவள் கையில் வைத்திருந்த பையை கொடுத்தாள் மீனா.

"நல்லா இருக்கு மீனு, கும்பாபிஷேகத்துக்கா?" என்றாள்.

"ஆமா, மாமா வாங்கிட்டு வந்தது" என்று அவள் கூற, இவளுக்கு கோபம் வந்தது.

"எனக்கு இந்த கலர் பிடிக்கல, எனக்கு இது வேண்டாம்" என்று கூறி துணி பையை அவளிடம் கொடுத்து விட்டு சென்றாள்.

"இது நம்ம அத்த நமக்காக ஆசையா வாங்கி கொடுத்து அனுப்பினது, அத வேணாம்னு சொன்னா அவுங்க கஷ்டப்படுவாங்க. அப்புறம் உன் இஷ்டம்" என்று முகத்தை சோர்வாக வைத்துக்கொண்டாள்.

"சரி கொடு, இதையே போட்டுக்குறேன். நீ ஒருத்தி தான் என்ன ஒரு நிமிஷத்துல மாத்திடுறே" என்றாள் சோர்வாக.

"ஏனா!! நான் உன் செல்ல தங்கச்சி" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் மீனா. மாயாவின் கோபம் தணிந்து புன்னகை மலர்ந்தது.
 

Author: Arthi
Article Title: அத்தியாயம் - 3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN