ஞாபகங்கள் தாலாட்டும் 5

Avira

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் அருகே குழந்தை போல உறங்கும் கணவனை பார்த்த நந்தினியின் முகத்தில் அழகிய புன்னகை விரிந்தது.வேகமாக தன் கணவனின் தூக்கத்தை கலைக்கும் அலாரத்தை ஆப் செய்தவள், மெதுவாக எழுந்து அமர முயற்சித்தாள் அவளை ஒரு இரும்பு கரம் இடையில் தடுக்க அந்த கையை தன் கணவனின் தூக்கம் கலையா வண்ணம் எடுக்க முயற்சித்தாள் அந்த கள்ளனின் பிடியோ இரும்பாக இருந்தது, அவன் தூங்கவில்லை என்பதை உணர்ந்தவள்," என்னங்க டைம் ஆயிடுச்சு நான் போகனும் , " என்று கூறி சினுங்கினாள்.

" இனி..... இந்த அழகான விடியலோட பனி உடம்புக்கு குளிருது அதுக்கு நீ தான் மருந்து," என்று கூறி மேலும் அவள் மீது படர்ந்தான் அந்த கயவன்.

‌அவன் அயர்ந்த நேரம் அவனிடமிருந்து தப்பித்த நந்தினி அவனுக்கு பழிப்புகாட்டிவிட்டு பாத்ரூமில் சென்று கதவடைத்துகொண்டாள் .அவளது சிரிப்பு சத்தமே அறைமுழுவதும் நிரம்பி இருந்தது.

அவளின் செயலில் கடுப்பான ஷிவா ," எங்க போனாலும் எங்கிட்ட தானே வரனும் அப்ப உன்னை என்ன பண்றேன் பாரு ," என்று கடுப்புடன் எழுந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் முகத்தில் புண்சிரிப்புடனும் கையில் காபியுடனும் தன் கணவனை நோக்கி சென்றாள் நந்தினி.

நந்தினியை நிமிர்ந்தும் பாராமல் தன் கப்பை அமைதியாக எடுத்த தன் கணவனை ஆசையுடன் பார்த்த நந்தினி அவன் அருகே இடித்துக்கொண்டு அமர்ந்தாள்.

அவளை கடுப்புடன் பார்தவன் , சற்று தள்ளி அமர்ந்தான். அவனை மேலும் தொந்தரவு செய்யாமல் அவனை பார்த்தவண்ணம் அமைதியாக அமர்ந்தாள்.அவன் காபி குடித்து முடிக்கும்வரை காத்திருந்தவள் வேகமாக அவனை இழுத்து தன் மடிமீது சாய்த்துக்கொண்டு," அப்பப்பா......என்ன கோபம் வருது, பாருங்க இந்த மூக்கு எவ்ளோ செவந்து போய் இருக்குனு ," என்று கூறிக்கொண்டே அவனை மூக்கின் மீது கிள்ளினாள்.

" ஆ.....ராட்சஷி வலிக்குதுடி....," என்று கூறிக்கொண்டே அவளை விட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.

அவனது கோபம் குறையவில்லை என்பது புரிந்தது கொண்டவள், அவனை மேலும் சமாதானம் செய்ய முடியாமல் அமைதியாகவே இருந்தாள், அவளின் மனம் அவளை கடந்த காலத்திற்கு இழுத்து செல்ல முயற்சிக்க அவளது கடந்த காலமும் கண் முன்னால் விரிந்தது.
வெகுவாக முயற்சித்து தன்னை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்த நந்தினி தன் கண்கள் சிந்திய இரு துளிகளை துடைத்துக்கொண்டு தன் வேலைகளை கவனிக்க சென்றாள்.

தன் தேவதையை எழுப்பி அவளை நர்சரிக்கு தயார் செய்தவள், அவளின் பள்ளி வாகனத்தில் அவளை அனுப்பிவிட்டு தன் கணவனுக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு தானும் கிளம்பினாள்.

அவளின் இளமஞ்சள் நிறத்திற்கு சிவப்பில் மெல்லிய வெள்ளை பூக்கள் போட்ட அந்த புடவை பாந்தமாக பொருந்த சிறு ஒப்பனையுடன் வெளியே வந்த தன் மனைவியை காதலுடனும் கேள்வியுடனும் நோக்கினான் ஷிவா.

அவனின் காதல் பார்வையை ஒதுக்கி வைத்துவிட்டு அவனை பார்த்த நந்தினி," சூப்பர்மார்கெட்டில பார்த்த என் பிரண்டு லலிதா இன்னைக்கு அவங்க வீட்டுக்கு வர சொன்னதா சொன்னேன் ல ?? மறந்துட்டீங்களா??"என்று தன் கணவனிடம் கேட்டாள்.

ஒரு சிறு தலையசைப்புடன் அதை ஆமோதித்ததவன் அமைதியாக உள்ளே சென்றுவிட்டான்.

தன் கணவனின் இந்த மௌனமும் கோபமும் முற்றிலும் புதிதாக உணர்ந்த நந்தினி," தன் கடந்த காலத்தை தெரிந்துகொண்டிருப்பறோ ??" என்ற எண்ணம் தோன்ற அது ஒரு சிறு அச்சத்தையும் கொடுத்தது.

ஒரு பெருமூச்சுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தவள் வேகமாக தயாராகி தன் தோழியின் இல்லம் நோக்கி சென்றாள்.

*************

நந்தினியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்த லலிதா வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டதும் குழந்தையாய் துள்ளிக்குதித்து சென்று கதவை திறந்து தன் தோழியை கட்டி அணைத்து வரவேற்றாள்.

" எப்படி இருக்க லலி?? வீட்ல யாரும் இல்லையா ?? அமைதியா இருக்கு??"

" நான் நல்லா இருக்கேன் நந்து , என் மாமியார் என் பொண்ண கூட்டிகிட்டு ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க, என் வீட்டுக்காரரு வேலைக்கு போயிருக்காரு , மதியம் வரைக்கும் நமக்கே... நமக்கான நேரம், "

"வாவ் லலி ...நீ மாறவே இல்லை , உனக்கு இப்பவுமே தனிமைதான் ரொம்ப பிடிக்கும்ல??"

" ஆமா நந்து தனிமை ஒரு சுகம்...."

தோழிகள் இருவரும் தங்களின் நட்புலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர். இடை இடையே கொரிப்பதற்கு காரமும் குடிப்பதற்கு காபியும் வயிற்றினுள்ளே சென்றது.

சுவாரசியமான பேச்சின் இடையே லலிதாவின் செல்பேசி அழைக்க அதற்கு உயிர்கொடுத்தவள்," ம்.....ஓ....சரிங்க இதோ வந்திடறேன்," என்று கூறி தயக்கத்துடன் நந்தினியை நோக்கினாள்.

" என்ன உன் முழியே சரியில்லையே என்ன பிரச்சினை?"

" ஹி...ஹி....நீ அறிவாளி நந்து....அது வந்து என் ஹஸ்பென்ட் ஒரு சின்ன வேலை சொல்லியிருக்காங்க நான் ஒரு ஹாஃப் அன் அவர் ல வந்திடவா??? உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே??"

"இதுல எனக்கு என்ன பிரச்சினை இருக்கப்போகுது டா நீ போயிட்டு வா நான் வெயிட் பண்றேன்.நோ ப்ராப்ளம்."

" தாங்கஸ் நந்து...சீக்கிரமா வந்திடறேன்."

" அடி வாங்காம போயிட்டு வா.."

வீட்டை விட்டு வெளியே போக தயாரான லலிதா நந்தினியை பாரத்து," யாரு கதவை தட்டுனாலும் திறக்காத நான் ஒரு.சாவி வெச்சிருக்கேன் சோ நானே கதவை திறந்துக்குவேன்." என்றாள் மீண்டும்.

" இதே இதோட பத்து தடவை.சொல்லிட்ட லலி கவலை.படாம போயிட்டு வா நான் பார்த்துகறேன்" என்றாள் தைரியமூட்டும் வகையில்.

லலிதாவின் வீட்டில் தனியே விடப்பட்ட நந்தினி ஹாலில் இருந்த புத்தகங்களை ஆராய துவங்கானாள்.அதில் ஒரு வார புத்தகத்தின் அட்டையில் " வளரும் நேனோடெக்னாலஜி" என்ற தலைப்பை பார்தவளிற்கு சந்தேகமின்றி கௌதமின் நினைவே தோன்ற அவனுடனான தனது கடந்த கால நினைவுகளை எண்ணத்துவங்கினாள்.

காதலை இருவரும் வெளிப்படுத்தும் முன்பு இருந்த நெருக்கத்தை விட அவர்களின் நெருக்கம் அதிகரித்தது.

" நந்து....உன்னை பார்கனும் போல இருக்கு."

" ம்.....அது முடியாதே கௌதம்."

" ஏன்டி டக்குனு முடியாது னு சொல்ற."

" ம்...அப்போ கொஞ்சம் யோசிச்சு முடியாது னு சொல்லவா??"

" ம்ச் ...ஒன்னும் தேவையில்லை போ...."

" ஹே...சென்னையில தான் என்னோட சொந்தகாரங்க முக்கால்வாசி பேரு இருக்காங்க யாரு எப்போ எங்க போவாங்கனு சொல்ல முடியாது.யாரு கண்லயாவது நான் மாட்டுனேன் அவ்ளோதான்."

" சரி சரி எனக்கு புரியுது ஆனாலும் ஒரு சின்ன பேராசை அவ்ளோதான்," கூறியவன்...," ஹேய்....இரு இரு அம்மா கால் பண்றாங்க.நான் பேசிட்டு வரேன்."என கூறினான்.

" முடியாது.... நான் கட் பண்ண மாட்டேன்.நீயும் கட் பண்ணிண கொண்ணுடுவேன்."

" ஏய் ப்ளீஸ் டி அம்மா கால் பண்றாங்க."

" அதுக்கு நான் என்ன பண்ண முடியும்."

" இராட்சசி இரு கான்ஃபிரன்ஸ் போட்றேன் நீ ம்யூட் பண்ணிக்கோ."என்றவாறு தன் தாயுடனான பேச்சுகளிலும் அவளை இனைக்க அவன் தயங்கியதில்லை.இருவருக்கும் இடையே ரகசியங்கள் என்ற ஒன்று இல்லாமலே இருந்தது.வாழ்க்கை இனிமையாக கழிய அந்த கரிய தினமும் வந்தது.


தன் நினைவுகளில் மூள்கி இருந்தவளை செல்பேசியின் ஒலி தடை செய்ய அதில் தன் கணவனின் பெயரை கண்டவள் அதற்கு உயிர் கொடுத்தாள்," ஹாய்....."

" எங்க இருக்க நந்து??"

" லலி வீட்ல .....ஏங்க என்னாச்சு??"

" உன்னை எப்ப வந்து பிக் அப் பண்ணணும்?"

" நான் கால் பண்றேன்ங்க..உங்களுக்கு எதுவும் வேலை இருக்கா??"

" ம்...ஒரு சின்ன அசைன்மென்ட் வந்நதிருக்கு சிட்டிய விட்டு அவுடருக்கு போகனும் அதான் உன்னை கேட்கலாம்னு.போட்டேன்."

" கவலை படாம போயிட்டு வாங்க நான் ஆட்டோல போய்கிறேன்.பக்கத்தில தானே ஒன்னேம் பிரச்சினை இல்லை."

" ம்...சரிமா அப்போ வீட்டேக்கு போயிட்டு மெசேஜ் பண்ணு.வைக்கிறேன்."

" என்னங்க வைக்காதீங்க...."

" என்னம்மா?? டேக் கேர்...."

"ம்.....தேங்கஸ்டா..." என்றவாறு காலை கட்.செய்யவும் லலி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

" யாரு மேடம் ஃபோன்ல உங்க ஆளா...?"

" ம்....அவங்கதான்."

" சொல்லு நந்து உன்னவர் பத்தி சொல்லு."

" அவங்க பேரு ஷிவசந்திரன் ஜேர்னலிட்ஸ்டா இருக்காங்க.என்.மேல.நிறைய அன்பு இருக்கு அதிகம் பேச.மாட்டாங்க மனச வெளி.படுத்த தெரியாது ஆனால் அதிக பாசம் உண்டு."

நந்தினி சொல்வதை கேட்ட லலிதா ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள் பின் நந்தினியை நோக்கிய லலிதா," நந்து .....நான் ஒன்னு சொல்லனும்...நீ தப்பா எடுத்துக்க மாட்டியே??" என்று கேட்டாள்.

அவள் கேட்கப்போவதை பற்றி அறிந்திருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் ," கேளு லலி எங்கிட்ட என்ன தயக்கம்?" என்று குரலில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் கூறினாள்.

" நீயும் கௌதமும் எப்படி பிரிஞ்சீங்க??"

இதழில் ஒரு வறண்ட புன்னகை தவழ," எத்தனையோ காதல் எப்படி எப்படியோ பிரிஞ்சிடுச்சு ஆனால் எங்க காதலுக்கு எதிரி வெளிய இல்லை , " என்று நிறுத்தியவள் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் தொடர்ந்தாள்," எங்க வீட்டில எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிகிட்டு இருந்தாங்க , நான் கௌதம எங்க வீட்ல வந்து பேச சொன்னேன்.

அவனும் பேசுறதுக்கு தயாரா இருந்தான்.ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வர்றேனு சொன்னவன் வரவே இல்லை, அவனோட மொபைலும் சுவிட்ச் ஆப் ," அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.

அவளது மனநிலையை யூகித்த லலி, அவளின் அருகே வந்து ஆறுதலாக கைகளை பற்றினாள் .

லலியை புன்னகையுடன் நோக்கிய நந்தினி," அவ்ளோதான் லலி அதுக்கப்பறம் அவன் எங்க இருக்கான்??என்ன செய்றான்??ஏன் வரலை??அவனுக்கு என்னாச்சு??இப்படி எதுவுமே தெரியாது, இத்தனை வருஷத்துக்கு அப்பறம் உன்னை சந்திச்ச அதே நேரத்தில அவனோட சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டேன்," என்று குரலில் எந்த வித உணர்ச்சிகளும் வெளிப்படுத்தாமல் கூறி முடித்தாள்.

இத்தனை நேரமும் கீழே குனிந்து பேசிக்கொண்டிருந்தவள் நிமிர்ந்து நோக்க அங்கே நின்ற அந்த நபரை கண்டவள் தன் நினைவுகள் தொலைய கீழே சரிந்தாள்.

தன் வீட்டின் வரவேற்பறையில் துவண்ட கொடியென் கிடந்த நந்தினியை பார்த்த லலிதாவின் நெஞ்சம் குற்ற உணர்வில் தவிதத்து, திரும்பி அந்த நபரை நோக்கியவள்,"பாருங்க நல்லா பாருங்க ஒரு மணி நேரமா எந்த வித உணர்வும் இல்லாம படுத்து இருக்கா??உங்களுக்கு இப்ப சந்தோஷமா?இதுக்கு தானே நீங்க ஆசைப்பட்டீங்க??தயவுசெய்து இங்க இருந்து போயிடுங்க," என்று கைகள் கூப்பி கெஞ்சினாள்.

அவளது கெஞ்சலங்களை கேட்டவன், ஒரு நிமிடம் தயங்கிவிட்டு பின் மீண்டும் லலிதாவை நோக்கி," ப்ளீஸ்...என்னால ஏற்பட்ட இந்த பிரச்சனை யை நானே தான் சரி பண்ணணும்.அது மட்டும் இல்லை உங்க தோழியும் சந்தோஷமா இல்லை , இது நீங்க அவங்களுக்கு செய்யிற உதவி தான், ப்ளீஸ்............," என்று மன்றாடி கேட்டவனை பார்தவள் சிறு மனம் இரங்கினாள்.

**************

ஆழ்ந்த நிலை தூக்கத்திலிருந்து எழுந்தது போல திடீரென்று எழுந்து அமர்ந்தாள் நந்தினி. தன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து பார்தவளின் நினைவில் தான் கடைசியாக பார்தவனின் முகம் நிழலாட..., வேகமாக லலிதாவை தேடினாள் , அவளை எங்கும் காணாததால் எழுந்து வீட்டினுள்ளே அவளது பேரை அழைத்துக்கொண்டே சென்றாள்.

ஒரு அறையினுள்ளே சத்தம் கேட்க அந்த அறையினுள்ளே சென்று தன் தோழியை தேடினாள், அவளின் பின்னால் கதவடைக்கும் சத்தம் கேட்டு திரும்பி நோக்கியவள் சிலையானாள்.
 

Author: Avira
Article Title: ஞாபகங்கள் தாலாட்டும் 5
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN