கதவை திறந்தவன் அங்கே தன் தந்தையை எதிர்பார்க்கவிலல்லை என்பது.அவனது முக மாற்றத்திலிருந்தே தெரிந்து கொண்டவர் அதை பற்றி ஏதும் கூறாமல் உள்ளே நுழைந்தார்.
" அப்பா....என்ன திடீருனு வந்திருக்கீங்க??"
" ஏன் நான் வரகூடாது ?"
" அப்படியெல்லாம் இல்லையா திடீருனு வந்திருக்கீங்களேனு கேட்டேன்."
" வர வேண்டிய வேலை வந்திடுச்சு.சரி நீ உடனே என்கூட கிளம்பு."
" எங்கபா கிளம்பனும்.?"
" எங்கனு சொன்னாதான் சார் வருவீங்களோ?"
" அப்படியில்லபா அடுத்த மாசம் ஃபைனல் எக்ஸாம் வருது அதுக்கு ப்ராஜெக்ட் இன்னும் முடிக்கலை.வேலை இருக்குபா."
" அதெல்லாம் எனக்கு தெரியும் நீ முதல்ல என்கூட மும்பை கிளம்பு,"என்ற தன் தந்தையை புரியாமல் பாரத்த கௌதம்," அப்பா....நீங்க என்ன சொல்றீங்க நான் இப்ப மும்பை வந்தா இங்க படிப்பு என்ன ஆகும்."
" கௌதம் இப்ப நீ கிளம்பு மத்ததை அப்பறமா பேசிக்களாம்." என்று கண்டிப்புடன் கூறிய தந்தையை வேறு வழி தெரியாமல் பின் தொடர்ந்தான்.
இருவரும் கௌதம் தந்தையின் காரில் பயணம் செய்ய கௌதம் தன் செல்பேசியில் நந்தினிக்கு மெசேஜ் அனுப்ப முயல," கௌதம் உன் ஃபோன கொடு என் மொபைல் ல சார்ஜ் இல்லை," என்று கூறி அவன் மொபைலை கை பற்றியவர் அதற்கு பின் அவனிடம் அதை கொடுக்கவில்லை.
************
அன்று நடந்தவற்றை நந்தினியிடம்.கூறி.முடித்த கௌதம்,"
அன்னைக்கு இப்படி தான் என் மொபைல் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆச்சு அதுக்கபுறம் என் கையில மொபைல் கிடைக்கிலை நந்தினி." என்று கூறி நிறுத்தினான்.
" ஏதாவது பேசு . நான் ஏன் வரலைனு உனக்கு தெரிஞ்சுக்க வேணாமா??"
" அதை தெரிஞ்சு நான் என்ன பண்ண.போறேன் கௌதம்."
" ம்.......இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை நன் சொல்றேன்.
நான் படிச்ச காலேஜ்ல இருந்து என் மேல புகார் போயிருக்கு நான் ஒழுங்கா காலேஜ் வரதில்லை னு , இப்படியே போனா அவனால பரீட்சை எழுத முடியாது அப்படீனு வார்னிங் லெட்டர் எங்க அப்பாவுக்கு போயிருக்கு, அதனால தான் அவரு எங்கிட்ட எதுவுமே சொல்லாமா அவசரமா என்னை மும்பை அழைச்சுகிட்டு போயிட்டாரு,
நானும் உங்கிட்ட பொறுமையா பேசி புரிய வைச்சகடலாம் னு நினைச்சேன், ஆனால் மும்பை ல நான் கிட்டதட்ட ஜெயில் ல தான் இருந்தேன்.
எனக்கு இரண்டு பேரு எப்பவும் காவலுக்கு இருப்பாங்க , மொபைல் பரிமுதல் பண்ணிடாங்க, ஒரு வருஷம் என் படிப்பு முடியுற வரை இதே நிலைமைதான். ஒரு வருஷம் கழிச்சு நான் சென்னைக்கு வந்து பார்த்தபோது எல்லாமே என் கைய விட்டு போயிடுச்சு னு புரிஞ்சிக்கிட்டேன்.உன்னை பார்க்க முடியாத குற்ற உணர்ச்சி ல திரும்ப மும்பைகே போயிட்டேன்,உன்னை கஷ்டப்படுத்துனது என் மனச உறுத்திக்கிட்டே இருக்குது , என்னை மன்னிச்சிடு நந்து....." என்று அவனும் உடைந்த குரலில் கூற அவனது நிலைகண்டு வருந்தியவள் பின் தன் கண்களை துடைத்துக்கொண்டு ," கௌதம் நான் உன்னை உண்மையா நேசிச்சேன், இல்லைனு சொல்ல ல ஆனால் நீ திடீருன்னு காணாம போய்ட, நான் என்ன பண்ண முடியும் சொல்லு?அதனால எனக்கு வேற வழி தெரியாம தான் நான் கல்யாணத்திற்கு சம்மதிச்சேன்."
இந்த இடத்தில் ஒரு சிறு இடைவெளி விட்டு கௌதமை நிமிர்ந்து நோக்கினாள், அவன் மெதுவாக தன்நிலை அடைந்துகொண்டிருந்ததை கண்டவள் அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.
" கல்யாண வாழ்க்கை சந்தோஷமானதாக இருந்தாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவரை நெருங்க விடாம என்னை தடுக்குது அது என்ன னு இன்ன வரைக்கும் எனக்கு புரியலை, அவரு என் மேல கோபமா பேசாம இருந்தாலோ இல்லை கொஞ்சம் என்னை விட்டு விலகுனாலோ எனக்கு எங்க நம்மளோட முதல் காதல் அவருக்கு தெரிஞ்சிடுச்சோனு பயமா இருக்கும்.
என் கணவரை கல்யாணம் செய்துகிறதுக்கு முன்னாடியே உன்னை விரும்பி இருந்தாலும், என்னோட காதல் எனக்கு குற்ற உணர்ச்சிதான் கொடுக்குது, என் கணவருக்கு துரோகம் செய்ற உணர்வு தான் எனக்கு கொடுக்குது, " என்று கூறி நிறுத்தினாள்.
" எனக்கு உன் நிலை புரியுது டா ஆனாலும் இப்படி முகம் கொடுத்து கூட பேசக்கூடாதா...," என்று குரலில் ஏக்கம் வழிந்தோட கேட்டான்.
" அப்போ.....நான் எப்படி உணர்ந்தாலும் கஷ்டப்பட்டாலும் உனக்கு ஒன்னுமில்லை உனக்கு உன் மனசு தான் முக்கியம் அப்படிதான?" என்று குரலில் கோபம் கொப்பளிக்க கூறினாள்.
" நான் அப்படி சொல்ல வரலை ஒரு விஷயம் வேண்டாம்னு நாம ஒதுங்கி போகும்பொழுது தான் நம்மை மனசு அது வேணும்னு அடம்பிடிக்கும்,அதனால ஒதுங்கி போகாம நீயும் நானும் பேசிட்டாவது இருக்கலாமே?"
" கௌதம்..கௌதம்...உனக்கு புரியலையா நான் என்ன சொல்ல வர்றேனு?? ஆட்டோகிராப், சில்லுனு ஒரு காதல் இன்னும் இது மாதிரி படங்கள்ல ஒரு ஆண் தன்னோட முன்னால் காதலியை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தலாம் அது இந்த உலகம் தப்பு னு சொல்லாது, ஆனால் அதே சமயம் ஒரு பெண்ணோட கடந்த காலத்து ஆத்மார்த்தமான காதலோ இல்லை நிரைவேறாத ஒரு தலை காதலோ அவளோட கணவனுக்கு தெரியவந்தா அந்த கணவன் எப்படி நடந்துக்குவான் அப்படீனு யாராலையும் யூகிக்க முடியாது, இதுதான் நம்ம சமூகம் , தயவுசெஞ்சு என்னை புரிஞ்சுக்க முயற்சி செய், என்னை என் குடும்பத்தோட நிம்மதியா வாழ விடு ," என்று கைகளை கூப்பி கூறிய நந்தினியின் முகத்தில் வருத்ததிற்கு பதிலாக வேண்டுகோளே நிறைந்திருக்க அமைதியாகவும் திடமாகவும் எழுந்த கௌதம் தன் பழைய கம்பீரத்துடன்," மன்னிச்சிடு நந்தினி இதுவே நம்ம கடைசி சந்திப்பா இருக்கும், இந்த நிமிஷத்தில இருந்து நான் உன் முன்னாடி வர மாட்டேன்," என்று கூறி திரும்பி நோக்காமல் அந்த அறையை விட்டும் லலிதாவின் வீட்டைவிட்டும் வெளியேறினான்.
அவன் வெளியேற காத்திருத்த நந்தினி கால்களை மடித்து முகத்தை அதில் புதைத்து அழத்தொடங்கினாள், அவளை நெருங்கிய லலிதாவோ தன் தோழி மனபாரம் தீரும் மட்டும் அழுகட்டும் என்று விட்டுவிட்டு அவளது தலையை ஆதுரத்துடன் தடவி கொடுத்தாள்.
சிறிது சிறிதாக தன்நிலை அடைந்த நந்தினி தன் கண்களை துடைத்துக்கொண்டு தன் தோழியை நோக்கினாள்.
" நந்து....என்ன தான் கௌதம் மேல தப்பே இருந்தாலும் நீ இவ்வளவு கோபமா சொல்லாமா கொஞ்சம் நிதானமா சொல்லியிருக்களாம், பாவம் அவரு முகமே சரியில்லை," என்று கூறினாள்.
ஒரு விரக்தி சிரிப்பை உதிர்த்த நந்தினி," லலி...நீ என்னை புரிஞ்சுகிட்டது அவ்ளோதானா?? கௌதம் என்னை உயிரா நேசிக்கிறான் , அவனால என்னை மறக்க முடியாது , நான் அவங்கிட்ட அன்பா ஆறுதலா சொல்லி இருந்தேனா அவனோட மனசு திரும்ப என்னை தான் நாடும்.இதுவே அவனை குற்றம் சாட்டுற மாதிரியும் என் சந்தோஷத்தை கெடுக்குற மாதிரியும் பழி போட்டா நான் நல்லா இருக்கனும் னு நினைச்சு என்னை விட்டு விலகிடுவான்.அதனால தான் அவனை நான் காயப்படுத்துனேன்.அவனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு அதை அவன் சந்தோஷமா வாழனும், என்னோட அத்தியாயம் முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும், "என்று உணர்சியற்ற குரலில் கூறினாள் நந்தினி.
தன் தோழியை ஆற்றாமையுடன் நோக்கிய லலிதா," கேட்க கூடாது தான் தப்பா எடுத்துக்காத நீ அவனை மறந்து உன் வாழ்க்கை யில சந்தோஷமா தானடா இருக்க?என்று கேட்டாள்.
" வேணும் னா மனசுல இருக்கறதும் வேணாம் னா அழிச்சிக்கிறதுக்கும் அது என்ன டைரியா லலி...மனசு என்னால கௌதம மறக்க முடியலை சொல்ல போனா என் மனசுல அவன் கல்வெட்டா பதிஞ்சிட்டான், நான் செய்யிற ஒவ்வொரு வேலையிலயும் அவனோட ஞாபகம் கலந்திருக்கும்.இத்தனை வருஷமும் அதை நான் மறக்கனும் அப்படீனு நினைச்சேன் ஆனால் என்னால முடியலை, ஆனால் இப்போ...," என்று கூறி நிறுத்தினாள்.
"ஆனால் இப்போ என்னாச்சு நந்து??"என்று பதட்டத்துடன் கேட்ட தன் தோழியை பார்த்து மெல்லிய புன்னகை பூத்த நந்தினி,"என் வாழ்க்கையில கௌதமோட அத்தியாயத்தை நான் மறக்க போறது இல்லை , அது என்னோட பொன்னான நாட்கள் நான் ரொம்ப சந்தோஷமா இருந்த நாட்கள் அதை நான் பொக்கிஷமா என் மனசுல பாதுகாக்கக் போறேன், அந்த நாட்களை நினைச்சு இனிமே நான் வருத்தப்பட போறது இல்லை , அந்த நினைவுகளை நினைச்சு சந்தோஷப்படபோறேன்.....," என்று கூறினாள்.
"ஆனால் இந்த திடீர் மாற்றம் எதனால எனக்கு புரியலை?"
" லலி....கௌதம நான் எந்த அளவு நேச்சிச்சேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் , இந்த நாலு வருஷமும் அவனை என் மனசுல இருந்து நீக்குறதுக்கு நான் முயற்சி செஞ்சேன்.
என் கணவர் கிட்ட உரிமையோட நெருங்க தயங்குனேன் ,அதுக்கு காரணம் கௌதமும் அவனோட காதலும் னு நினைச்சேன்.எங்க திரும்ப அவன் கூட பேசுனா என் மனசு அவனுக்காக ஏங்குமோனு பயந்தேன். ஆனால் இப்பதான் ஒரு உண்மையை புரிஞ்சுகிட்டேன்.இப்ப நான் அவனை நேர்ல சந்திச்ச போது எனக்கு எந்த வித சலனமும் தெரியலை .அவன் கூட பேசிய நாட்கள் எல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது ஆனால் அந்த நினைவுகள் எனக்கு குற்ற உணர்ச்சி குடுக்கலை உதட்டுல ஒரு புன்னகை தான் கொடுத்துச்சு , அப்பதான் புரிஞ்சது
என் மனசுல நான் கௌதமோட நினைவுகளை நீக்க முடியாது ஆனால் அதே நேரத்தில அந்த ஞாபகங்கள் என்னை எந்த விதத்திலும் பாதிக்காதுனு புரிஞ்சிக்கிட்டேன். அந்த நினைவுகள் மனசுல வரும்போது ஒரு சுகம் கொடுக்கும் , சந்தோஷம் கொடுக்கும்.என்னை எந்த விதத்திலயும் பயமுடுத்தாது . இது எல்லாதுக்கும் காரணம் நீ தான், நான் மட்டும் கௌதம திரும்ப பார்காம இருந்திருந்தேனா இந்த உண்மை எனக்கு புரியாமலே போயிருக்கும் நான் என்ன ஆகியிருப்பேனு எனக்கே தெரியலை, தாங்க்யூ......லலி....," என்று கூறி அவளை அணைத்துக்கொண்டாள்.
தன் தோழியின் முகத்தில் தெரிந்த பிரகாசத்தை கண்ட லலிதாவிற்கு தன் தோழியின் வாழ்வு மீண்டுவிட்ட சந்தோஷம் தோன்றியது.
இனி அவளின் காதல் அவளுக்கு குற்ற உணர்ச்சி கொடுக்காது என்ற நம்பிக்கையில் சந்தோஷத்துடனும் தன் கணவனை காணும் ஆவலுடனும் பாட்டுபாடிக்கொண்டே தன் வீடு நோக்கி சென்றாள் நந்தினி.
அவளின் வாழ்வு அவள் கணவருடன் இனி நலமாக வளமாக இருக்க வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்.
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்.....
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்......
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்.......
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்......
ஞாபகங்கள் மழையாகும்...
ஞாபகங்கள் குடையாகும்....
ஞாபகங்கள் தீ மூட்டும்.....
ஞாபகங்கள் நீரூற்றும்.....
(தொடரும்......)

Author: Avira
Article Title: ஞாபகங்கள் தாலாட்டும் 7
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.