பூ 35

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

வானில் தோன்றும் முழு மதி நாளுக்கு நாள் வளர்ந்து தேய்வது போல நாட்களும் தொய்வின்றி கரைந்துக்கொண்டே தான் இருந்தது. காலையில் பரப்பரப்புடன் கல்லூரிக்கு கிளம்பி அவனுடன் பைக்கில் பயணத்தை மேற்கொள்பவள் அந்த ஒரு மணிநேரத்தில் அவனுடன் மனதிற்குள்ளயே பேசிக்கொள்வாள் இப்போது பேச்சிகள் உண்டு தேவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ பேசுகிறாள். மொத்தமாக கணவன் என்ற உரிமையுடன் அல்ல ஒரே அறையை பகிர்ந்துக் கொள்கின்றனர் என்ற முறையில் பேச்சிகள் கொஞ்சம் வளர்ந்துதான் இருந்தது.​


காலை கல்லூரி செல்பவள் மாலை அவனுடனே வந்து இறங்குவாள் தில்லையுடன் சிறிது நேர பேச்சி அதன் பின் தன்னுடைய வேலையை முடிப்பவள் மீண்டும் புத்தகத்துடன் உறவாட அமர்ந்துவிடுவாள் இரவு அவன் வந்தவுடன் இரவு நேர உணவை முடிப்பவள் மறுபடி படிப்பில் மூழ்கிவிடுவாள். நாட்களும் அதன் போக்கில் சென்று கொண்டு இருக்க வார இறுதி நாள் கல்லூரி விடுமுறை தினமாக இருந்தாலும் எப்போதும் எழுந்துக்கொள்ளும் நேரத்திற்கே எழுந்த தேவா மணியை பார்க்க 6.30 யை தாண்டவில்லை அவளுக்கு முன்னறே எழுந்த விசாகன் கொள்ளையில் இருந்த தோட்டத்தில் நேற்று வாங்கி வந்த சில ரோஜா செடிகளை பதித்துக்கொண்டு இருந்தான். இதை அறியாதவளோ அவன் வெளியே சென்று விட்டான் என்று நினைத்தபடி முகம் கழுவி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவள் ஆற அமர நடந்து வந்து கொள்ளை புற திண்ணையில் அமர்ந்திருந்த தில்லையுடன் வந்து அமர்ந்துக்கொண்டாள்.


அவளைக் கண்டவரோ "என்னத்தா இன்னைக்கும் வெள்ளனே எழுந்துட்டியா? இன்னைக்கு விடுப்புதானே சித்த தூங்கறது" என்று கரிசனமாய் கூறிட


"உறக்கம் கலைஞ்சிடுச்சி பாட்டி" என்றவளுக்கு அப்போதுதான் செடிகளுக்கு நீர்பாய்ச்சி கொண்டிருந்த விசாகன் கண்களுக்கு அகப்பட்டான். அவள் வரும்போதே பார்த்து விட்டவன், அவளிடம் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு வேலையை செய்து கொண்டு இருந்தான். 'அட இவர் இங்கதான் இருக்காரா!' என்று தன்னுக்குள்ளயே சொல்லி கொண்டவள் பொன்னி கொடுத்த காபியை கைகளில் வாங்கிக்கொண்டாள்.


காபியை அருந்திக்கொண்டே பார்வையாலையே தன் ஹீரோவை வருடிக் கொண்டிருந்தவளை "ஏலேய் முத்து ஏன் இவ்வளவு நேரம் கழிச்சி வர்ற? துரைக்கு கலெக்டர் வேலை பாக்குறோம்னு நினைப்போ!" என்ற தில்லையின் சத்ததில் தேவாவின் பார்வை முத்துவின் மீது பதிந்தது.


"அட நீ வேற ஆத்தா... வயத்து எரிச்சலை கிளப்பிக்கிட்டு நான்தான் படிக்காத தற்குறியா போயிட்டேன், எம் புள்ளையாவது நல்லபடியா படிச்சி பெரிய உத்யோகத்துக்கு போகும்னு கனவை கண்டா அந்த சிரிக்கி பெத்த மவளுக்கு படிக்க கசக்குது.. எனக்கு சொல்லி தர தெரியாது என் பொஞ்சாதிக்கும் தெரியாது தெரியாததை புள்ளைக்கு என்னான்னு சொல்லி கொடுக்குறது... இல்ல யாருக்கிட்ட போய் நிக்குறது" என்று புலம்பிட


வாயில் கை வைத்துக்கொண்ட தில்லை "அட நீ என்னடா இப்படி சொல்ற? பள்ளிக்கூடம் எதுக்கு இருக்கு தெரியாததை சொல்லி கொடுக்கத்தானே" என்றார்.


இந்த சம்பாஷனைகளை கேட்டுகொண்டு இருந்த தேவா "முத்தண்ணே உங்க பொண்ணு எத்தனாவது படிக்குது?" என்றிட


"எட்டா வகுப்பு கண்ணு" என்றான் முத்து


"ஒன்னு செய்யுங்க, தினமும் சாயங்காலம் உங்க பொண்ணை இங்க கூட்டிட்டு வாங்க நான் சொல்லி தறேன்.. சொல்ற விதத்துல சொல்லி தந்தா புரிஞ்சி படிப்பாங்க அண்ணே கவலைபடாதிங்க" என்றிட


"கண்ணு உங்களுக்கு சிரமமா இருக்கும்ல" என்றதும்


"முத்து அதான் சனா சொல்லிட்டா ல கூட்டிட்டு வந்து விடு, அவ பாத்துக்குவா" என்றான் மனைவி மீது வைத்த நம்பிக்கையினால்


"அம்மாடி உனக்கு கஷ்டம் இல்லையே த்தா.. பாவம் யா அவன் ரொம்ப ஆசைய வைச்சி இருக்கான் புள்ள படிக்கும்னு" என்று பேத்திக்காவும் பார்த்தவர் முத்துவின் நிலையை அறிந்து அவனுக்காவும் பேசினார்.


"சொல்லிக் கொடுக்குறதுல என்ன பாட்டி கஷ்டம் இருக்கு இன்னும் சொல்ல போன எனக்கு சொல்லிக் கொடுக்குறதுன்னா அவ்வளவு பிடிக்கும்... நான் படிச்சி என் ஸ்கூல் இல்ல இல்ல காலேஜிக்கே ப்ரோப்பசர் ஆகனும்னு தான் என் ஆசை தெரியுமா?" என்று தன்போக்கில் பேசிக்கொண்டே சென்றாள்.


முத்துவிடம் ரோஜா செடிகளுக்கு பாத்தி வெட்ட கூறிக்கொண்டு இருந்தவனுக்கு மனைவியின் ஆசைகள் தெரியவும் 'பரவாயில்லை குட்டச்சிக்கு எயிம் கூட இருக்கே' என்று நினைத்து ஆச்சர்யபட்டான் விசாகன்.


"உனக்கு கஷ்டம் இல்லன்னா சரிதான் கண்ணு" என்றிட சிரிப்புடனே குடித்த காபி டம்பளருடன் அங்கிருந்து அகன்றவளை தில்லை விசாகன் இருவருமே இந்த வீட்டிற்கு சந்தோஷத்தை தர வந்த தேவதையாய் பார்த்தனர்.


விசாகனும் தேவாவின் பள்ளி தலைமை ஆசிரியர் அவளின் படிப்பை பற்றி கூறியதில் இருந்து அவள் நன்கு படிப்பவள் என்று தெரிந்துக்கொண்டவன் அவளின் படிப்பு முடியும் வரை அவளிடத்தில எந்த சலனமும் ஏற்படத்த வேண்டாம் என்று சற்று அமைதியாகத்தான் வலம் வந்தான். இருந்தும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மனைவியின் அழகும் அவளின் செய்கையும் மனதில் சிறு சபலத்தை ஏற்படுத்திவிடுகின்ற பொழுதெல்லாம் வீட்டிற்கே வராமல் மில்லில் வேலை இருப்பதை போல் காட்டிக்கொண்டு அங்கயே இருந்து விடுவான்...


முத்துவின் ஒரு பெண்ணிற்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தவளுக்கு இன்று அக்கம் பக்கம் தெருவில் இருந்து இருபது இருபதைந்து பிள்ளைகள் படிக்கின்றனர். மாலை கல்லூரி முடிந்து வருபவள் சிறிது நேர ஓய்விற்கு பின் பிள்ளைகளுடன் அமர்பவள் 8 மணியை போல தான் எழுந்துக்கொள்வள். சில சமயங்களில் மொட்டை மாடியில் சில சமயங்கிளில் வீட்டிற்கு முன் இருந்த பெரிய வராண்டாவில் என்று பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டு இருப்பாள். அது போல சமயங்களில் அவள் சொல்லி கொடுக்கும் பாங்கினை பார்த்து இவளுக்குள் இப்படி ஒரு திறமையா என்று விசாகனே வியந்து இருக்கிறான். முத்துவின் பெண்ணிற்கு கூட படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்க முத்து மனைவியுடன் வந்து நன்றி கூறினான்.


தேவாவின் படிப்பை மையமாக வைத்து விசாகன் விலகி நின்றிருக்க அப்போதெல்லாம் தேவாவின் மூளை தேவையில்லாமல் அவனின் காதலை தூசி தட்டி எழுப்பி தன்னை பிடிக்காமல் தான் வெறுக்கிறானோ அமுதாவை நினைத்து கலங்குகிறானோ என்று கண்டதையும் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு கண்ணீரில் கரைவாள். மீண்டும் எப்போதும் போல் தன்னை எந்த விதத்திலும் அது பாதிக்கவில்லை என்று தனக்கு தானே சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு மீண்டும் படிப்பதில் கவனத்தை திருப்புவாள். தனக்கு இருக்கும் ஒரே பிடிப்பு படிப்பு மட்டும் தான் என்று மூளை அறிவுறுத்திக் கொண்டு இருக்க அதை விட வாழ்க்கையின் பெரிய பிடிப்பு விசா என்பதை அவளது மனது லட்சம் முறை உரக்க கூறிக்கொண்டு இருந்தது...


கடந்த இரண்டு மாதங்களாக தேவாவை எங்கும் அழைத்து செல்லவில்லை, தில்லைக்கு இருவர் முகத்திலும் இருப்பதை வைத்து எதையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை திருமணம் நடந்த புது ஜோடிகளை போல் நடந்துக் கொள்ளாமல் பட்டும் பாடாமல் பேசும் இவர்களது ஒட்டாத தன்மை பெரியவரான அவருக்கு ஏதோ தவறாக பட தேவா வீட்டில் இருக்கும் வார இறுதியில் தில்லையின் தொடர் நச்சரிப்பின் காரணமாக அவளை டவுனிற்கு அழைத்துச் சென்றான் விசாகன். அவனுக்கும் ஆசை தான் அவளை வெளியே எங்காவது அழைத்துச்செல்ல வேண்டும் அவளுடன் பொழுதை கழிக்க வேண்டும் என்று ஆனால் படிக்கும் அவளை தொந்தரவு செய்ய மனமில்லாதவன் தன் ஆசைகளுக்கு தடை விதித்து இருந்தான் இன்று தில்லையின் மூலம் அவளை வெளியே அழைத்து செல்ல வாய்ப்பு கிடைக்கவும் தில்லையை மனதில் கொண்டாடி தீர்த்து விட்டான் விசாகன்.


அவன் அழைத்து வரும்போதே கோவிலுக்கு செல்லமாட்டான் என்று அறிந்து வைத்திருந்தவள் எங்கே கூட்டிச்செல்ல போகிறானோ என்ற ஆர்வத்துடன் அவன் பின்னிருக்கையில் அமர்ந்து இருந்தாள். அவளுடைய மனதும் இந்த நாளை ஆசையுடன் தான் கழிக்க நினைத்தது முதலில் வைகை அணைக்கு அழைத்து சென்றான்.


வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் மேல் நின்றிருந்த தேவா நீர்பகுதியை பார்த்திருக்க அவளை மட்டுமே பார்த்திருந்தான் விசாகன். அவளுடைய ஒவ்வொரு அசைவையும் ரசித்தவனுக்கு அவள் மேல் நிலைத்திருந்த கண்களை எடுக்க முடியவில்லை நீர்நிலையை பார்த்துக்கொண்டு இருந்தவள் "வைகை ஆத்து தண்ணிய இவ்வளவு கிட்ட நின்னு பாக்கறது ரொம்ப அழகா இருக்குல.. எங்க எப்பாக்கூட சின்ன வயசுல வந்தது அப்புறம் இங்க வர்றதுக்கு நேரமே கிடைக்குல ஒரு முறை அண்ணன் கூட கூட்டிட்டு வந்து இருக்கான் எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிப்பே தட்டல இப்பக்கூட ரொம்ப ரொம்ப அழகா தெரியுது" என்று தன்னையும் மறந்து உறச்சாகத்துடன் கூறிட


தேவாவின் சிரிப்பையே இமைக்காமல் பாரத்திருந்தவன் ஆமா நீ சிரிக்கும் போது கூட ரொம்ப அழகா இருக்க என்றான்... வெட்டவெளியில் அடிக்கும் காற்றிற்கும் அவன் மெதுவாக சொன்னதன் காரணத்தினாலும் அவளுக்கு சரியாக கேட்காமல் போக என்ன என்ன சொன்னிங்க என்றாள் அவன் முகம் பார்த்து


அவளின் திடீர் கேள்வியில் சுதாரித்துக்கொண்ட விசாகன் வீயூ நல்லா இருக்குன்னு சொன்னேன்... நான் கூட வந்து ரொம்ப நாள் ஆகுது... காலேஜ் படிக்கும் போது பிரெண்ட்ஸ் கூட வந்தேன் அப்புறம் வர நேரம் கிடைக்கல" என்றவன் "அந்த பக்கம் நிக்காத சனா இங்க வா" என்று தன்னுடன் நிற்க வைத்துக்கொண்டவன் சிறிது நேரத்திற்கு பிறகு "ரொம்ப நேரம் நிக்குற கால் வலிக்கும் வா அந்த பக்கம போய் உட்காரலாம்" என்று அவளை அழைத்தான்.


அணைக்கு இருபுறமும் பூங்கக்கள் அமைக்கப்பட்டு இருக்க முன் புறம் உள்ள சிறிய பாலத்தின் வழியே பூங்காவிற்குள் வந்தவர்கள் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு திடலில் அமர்ந்தனர்.


இதழில் உறைந்த புன்னகையுடனே ரொம்ப நாளுக்கு அப்புறம் மனசு ரொம்ப லேசா ரிலாக்ஸா இருக்கு இருக்க பிரச்சனை எதுவுமே மண்டை கொடையலப்பா என்றாள் தன்னையும் மீறி வெளிப்பட்டு இருந்தது அந்த வார்த்தைகள். தேவா சொன்ன பிறகுதான் அவன் இருப்பதை உணர்ந்து நாக்கை கடித்துக்கொண்டாள்.


அவள் செய்கையில் சிரிப்பு உண்டாக கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தாளே மனசுக்குள்ள சந்தோஷம் தன்னாலே வந்துடும் சனா... எப்பவும் பிரச்சனைய கண்ணுக்கு முன்னாடி வைச்சி பாக்காதே பூதாகரமா தெரியும் உன்னை விட்டு தள்ளி வைச்சி பாரு அப்பதான் உனக்கு அதுக்கான தீர்வு கிடைக்கும் என்றான் அவளின் கூற்றினை அமோதித்து.


ம் என்றவாறு கன்னத்தில் தவழ்ந்துக் கொண்டிருந்த முடியை கதோரம் எடுத்து விட அது அடங்காமல் சுதந்திரமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டுக்கெண்டு இருந்ததை கண்டவனுக்கு தன் உரிமையை எடுத்துக்கொண்டதை எண்ணி


அதன் மேல் செல்ல பொறாமைக்கூட வந்தது இருந்தும் அதை ரசிக்கவே செய்தான்.


சுற்றி சுற்றி பார்வையை ஓட்டி சிறுவர்களின் விளையாட்டை ரசித்து அமர்ந்துக்கொண்டு இருந்தவளுக்கு ஊஞ்சள் ஆடும் ஆசை வர சட்டென எழுந்துக் கொண்டு ஊஞ்சள் பக்கம் நகர்ந்தாள் கைகளால் சங்கிலியை வருடிக்கொண்டு இருக்க அவள் ஆசையை அறிந்து உட்காரு சனா ஆட்டி விடுறேன் என்றான்.


தயக்கமாகவே இல்ல இது எல்லாம் சின்ன பசங்க விளையாடுறது என்று மறுத்து அதில் அமர கூச்சப்பட்டு விலகி நிற்க


யார் சொன்னா இது எல்லாம் சின்ன பசங்க மட்டும் விளையாடுறதுன்னு என்று எதிர் கேள்வி கேட்டவனை ஆச்சர்யமாக பார்க்க அவள் தோள்களை இறுக்கமாக பற்றி அமரவைத்து ஊஞ்சலை ஆட்டி விட்டவன். அவள் நேர் எதிர் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்து தன் அலைபேசியில் அவள் அறியாதவாறு சில புகை படங்களை சேகரித்துக்கொண்டான். தன் மனதில் இருக்கும் சின்ன சின்ன ஆசைகளுக்கு கூட மதிப்பை கொடுக்கும் அவன் குணம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது சிறிது நேரம் அங்கே பொழுதை கழித்தவர்கள் மதிய நேரம் நெருங்கவும் தேனீயில் பெரிய உணவு விடுதிக்கு சென்று உணவை முடித்தவர்கள் அடுத்த சென்ற இடம் தான் இருவருக்கும் ஏற்பட்டிற்கும் சுமுகமனநிலையை கெடுக்க வைத்து


கல்யாணம் ஆனா தினத்திலிருந்து இன்று தான் அவளுடன் தனிமையாக நேரத்தை கழிக்கிறான் இன்னும் அவளுடன் இருக்க வேண்டும் என்று ஆசை மனதில் தோன்ற படத்திற்கு அழைத்து செல்லலாம் என்று முடிவை எடுத்தவன் அரங்கத்தில் அமர்வதற்கு டிக்கட்டை எடுத்து அவளை அழைத்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தான்.


படத்திற்கு போகலாம் என்று முடிவை எடுத்தவன் அது எந்த படத்திற்கு என்ற முடிவை ஆராய்ந்து எடுத்து இருக்கலாம் ஒரு நாயகன் இரு நாயகிகளை கொண்ட படம் போல எந்த வித முன்யோசனையும் இன்றி அரங்கத்தில் அமர்ந்தனர் இருவரும். படம் ஆரம்பிக்கும் போதே சந்தர்ப்ப வசத்தால் தான் காதலித்த பெண்ணை விடுத்து வேறு ஒரு பெண்ணை மணக்க நேரிடுகிறது கதாநயகனுக்கு, காதலியையும் மறக்க முடியாமல் மனைவியையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவதிப்படும் ஹீரோவை பார்த்தவளுக்கு கடுப்பாய் இருந்தது முதலில் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி தவித்துக்கொண்டு இருப்பவளுக்கு இப்போது அந்த நாயகனை நினைத்து கோபம் தான் வந்தது அதே கோபம் விசாகனிடம் திரும்ப காரணமே இல்லாமல் சண்டைக்கு தயாரனாள் தேவா படம் பாதி ஓடிக்கொண்டு இருக்கும் போதே தியேட்டரில் இருந்து வெளியே வர என்னவோ ஏதோ என்று விசாகனும் அவள் பின்னாடியே அவளை அழைத்துக்கொண்டு வந்தான்.


காது கேட்காதவள் போல் விறு விறுவென்று வர ஏய் சனா நில்லுடி என்று வேகமாக அவளை தன் புறம் நோக்கி இழுத்து நிற்க வைக்க அங்க நின்றிருந்த சிலர் ஏதோ தனியாக வந்த பெண்ணிற்கு பிரச்சனை என்று தவறாக நினைத்து அருகில் வந்து என்னம்மா என்ன பிரச்சனை ஏப்பா தம்பி நீ யார் என்று குரல்களை உயர்த்த


நீங்க யாரு உங்களுக்கு என்ன வேண்டும் என்று முதல் ஆளாய் அவர்களை வினவி இருந்தாள் தேவா. தேவாவின் கேள்வியில் திகைத்த அருகில் இருந்தோர் இல்லம்மா உன்கிட்ட வம்பு இழுத்தாப்போல இருந்தது என்று கூறவும்.


நான் உங்கள கூப்பிட்டேனா என்னை காப்பத்துங்கன்னு ரோட்டுல என்ன நடந்தாலும் உடனே வந்துடுவிங்களா யா உங்களுக்கு எல்லாம் வேலை வெட்டியே இல்லையா என்றவள் அவரு என் புருசன் நான் அவரு பொண்டாட்டி இது போதுமா இல்ல கல்யாணம் ஆன போட்டோ எடுத்துட்டு வந்து காட்டனுமா முதல்ல நீங்க இடத்தை காலிபண்ணுங்க அட போங்க சார் என்று படபட என பொறிந்தவள் அங்கிருந்து அவனை இழுத்துக்கொண்டு பார்க்கிங் ஏரியாவிற்கு வந்துவிட்டாள்.


அவள் பதிலில் அங்கு கூட்டத்தில் இருந்தவர்கள் மட்டும் இல்லை நட்ட நடு ரோட்டில் தேவையில்லாமல் பேச்சிக்கு இடம் கொடுத்து விட்டோமே என்று விசாகனும் சங்கடமாகத்தான் உணர்ந்தான்


பார்க்கிங்கில் இருந்து வண்டியை எடுத்தவன் உட்காரு சனா என்றான் குரலில் கடுமையை கூட்டி


ஏறி அமராமல் சட்டமாய் கையை கட்டி நின்றிருந்தவளிடம் இப்போ என்னடி பிரச்சனை உனக்கு என்றான் சலிப்பாக


செம கோவத்துல இருக்கேன் பேசாம இருங்க என்றவளின் குரலும் சரியில்லாமல் தான் இருந்தது


என்ன கோவமா இருக்கியா நியாயமா பார்த்தா தேவையில்லாம ரோட்டுல போறவன் வர்றவன் நம்மள பாக்குற மாதிரி நடந்துகிட்ட உன் மேல தான் நான் கோபப்படனும் என்று கூறிட


சொல்லுங்க இன்னும் என்ன என்ன சொல்லனும்னு தோனுதோ எல்லாம் சொல்லுங்க உங்களுக்கு தான் நான் ஆகாத பொண்டாட்டி ஆச்சே என்று குரலில் அத்தனை ஆத்திரத்தையும் சேர்த்து கொட்டி இருந்தாள்.


ஏய் என்னடி பேசுற எதுக்கு எதை முடிச்சி போடுற இப்போ என்ன நடந்து போச்சின்னு இந்த கத்து கத்துற என்றான் என்ன ஆனது என்று புரியாத கோவத்தில்


இன்னும் என்ன ஆகனும் அதான் எல்லாம் ஆகிப்போச்சே என்றவள் தன் முந்தானையை உதறி இடுப்பில் சொருகி இருந்தாள்.


இன்று அதிசயமாய் இருவரும் ஒன்றாக வெளியே போக போறோம் என்ற சந்தோஷத்தில் அழகிய வேலைபாடுகள் நிறைந்த இளம்பச்சை நிற ஷிப்பான் புடவையை அணிந்து இருந்தவள் இந்த கருமத்தை பாக்க இவ்வளவு அலங்காரம் தேவையா எனக்கு என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.


அவள் செய்கைகள் அவனுக்கு விசித்திரமாக தெரிய இப்போ என்னடி என்றான் கடுப்பாக


ஊர்ல எத்தனையோ படம் ஓடுது இந்த படத்துக்கு என்னை ஏன் கூட்டுட்டு வந்திங்க என்றாள் கண்களை உருட்டி


படத்துக்கு என்ன சனா நல்லா தானே இருந்தது என்றான்


எப்படி நல்லா இல்லாம போகும் பொண்டாட்டியா ஒருத்தி வந்தாலும் முதல்ல காதலிச்சவ மனசு விட்டு போகமா இருக்காளே அப்போ உங்களுக்கு இந்த படம் பிடிக்கத்தானே செய்யும்


சனா அது படம் டி அதுக்கும் எனக்கும் எதுக்கு முடிச்சை போடுற என்றான்


என்னவோ போங்க ஆனா இது எல்லாம் எனக்கு சரியா படல என்று அழுத்தமாக கூறி பைக்கில் ஏறி அமர்ந்தவள் பிடிமானத்திற்கு அவனை கூட பிடிக்காமல் தள்ளியே அமர்ந்தாள்


காரணம் தெரிஞ்சிடுச்சு இனி பேசி ப்ரயோஜனம் இல்ல வீட்டுக்கு போனதும் முதல் வேலை என்ன என்ன படங்க இந்த டைப்ல இருக்குன்னு முதல்ல தெரிஞ்சி வைச்சிக்கனும் என்று நினைத்தான். வீட்டிற்கு வந்ததும் வராததுமாக தலைவலி என்று கூறிக்கொண்டு அறைக்குள் சென்று விட்டாள் தேவா


இரவு அறைக்குள் நுழைந்தவன் அவள் படுத்திருப்பதை கண்டு சனா இருக்கியாடி என்று கேட்டுக்கொண்டே கட்டிலில் அமர்ந்தான்


இங்க இல்லாம வேற எங்கே போகபோறேன் கேள்விய பாரு என்று உள்ளுக்குள் அவனுக்கு கவுன்டர் கொடுத்தலும் " இருக்கேன்" என்றாள் கோபத்தோடு


பா... என்ன காரம் என்று அவள் பேச்சை நினைத்தாலும் ஏன் இவ்வளவு கோவம் சனா என்றான்


தேவா தெரியவில்லை என்று கூறிட அவள் உடல் குலுங்குவதை கண்டு அவள் அழுகிறாள் என்று அறிந்துக் கொண்டவன் ஏய் சனா எதுக்கு அழுகற என்றான் எழுந்து அமர்ந்து அதட்டலாக


கண்களை துடைத்துக்கொண்டே நான் ஏன் அழுகுறேன் ஏன் கஷ்டப்படுறேன்னே தெரியல என்றாள் விரக்தியாக


அப்போ நிறைய கேள்விக்கு பதில் தெரியல ம் சரி இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில் என் கிட்ட இருக்கு என்ன தெரியுமா


என்ன


பொறாமை


என்னது என்று வியப்பாய் எழுந்து அமர்ந்தாள்.


உனக்கு என் மேல இருக்க காதல் தான் இது எல்லாத்துக்கும் முக்கிய காரணம். யாரு யாரை விரும்பினாலும் உனக்கு பொறாமையா இருக்கு என் காதல் முடிஞ்சி போன கதை சனா நீ அதை பாலீஷ் போட்டு புதுசா மாத்திக்கிட்டு இருக்க என்று அமைதியான குரலில் கூறினான்


உங்க மேல எனக்கு காதல்... அதனால எனக்கு இப்போ எல்லார் மேலயையும் பொறாமை... சபாஷ் நல்ல கண்டுபிடிப்பு என்று இரு கைகளையும் தட்டியவள் அவன் காதலை பற்றி பேச விருப்பம் இல்லாமல் எனக்கு தூக்கம் வருது என்று படுத்துவிட்டாள்.


குட்டச்சிக்கு அவசரம் அதிகம் சொன்னாலும் புரஞ்சிக்க முயற்சி பண்ண மாட்டேன்னு அடம் புடிக்கிற உன்னை என்னதான்டி செய்றது ராட்சசி சரி முல்ல நீ படிப்பை முடி அப்புறம் உன்கிட்ட என் காதலை எப்படி காட்டனுமோ அப்படி காட்டி உன்னையே மறக்க வைக்கிறேன் அதுவரை இப்படியே நினைச்சிட்டு இரு அப்பதான் நானும் உன் கூட ஒட்டாம விலகியே இருப்பேன்... என்றபடி விட்டத்தை பார்த்து படுத்தவன் கண்களை மூடினான். அவளின் கோபத்தை ரசித்தான் தன் மேல் வைத்திருந்த அதிகப்படியான அன்பே இவ்வாறாக உருப்பெற்று இருக்கிறது என்பதை அறிந்து கொண்டவன் அதை நினைத்துக்கொண்டே தூங்கி இருந்தான்... அவளுத்குதான் இன்று பார்த்த படம் கண் முன்னால் நடப்பது போல் தோன்றி தூக்கத்தை கெடுத்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN