முடிந்தது... எல்லாமே முடிந்தது போலத்தான் அவளுக்கும் தோன்றியது. ஏன் அவனுக்குமே அப்படிதானே தோன்றி இருக்கும்? வந்த வேலை என்ன? இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன? தான் எப்படி அவன் மனைவி ஆக முடியும்? மனதால் பல வருடங்களுக்கு முன்பே சவமடித்து விட்ட கனவுகள் ஆயிற்றே.
அருகில் கணவன் என்று அமர்த்திருப்பவனை எப்படி ஏறெடுத்து பார்ப்பாள்? நாடகம் ஆடி அவனை மணந்து கொண்டதாய் அல்லவா நினைத்து இருப்பான். அப்படித்தான் நினைத்தேன் என சொல்வது போல் கடினமுற்றிருந்தது அவன் முகம். இப்பொழுது அவள் வனமோகினி இல்லை. திருமதி வசீகரன் வனமோகினி. ஒரு காலத்தில் அப்படித்தானே அனைவரும் அழைப்பார்கள் என்று எண்ணி பூரித்திருந்தாள். இப்பொழுது கிடைத்து விட்டதே என்று பூரிக்க கூட முடியாமல் கூனி குறுகியல்லவா அமர்ந்திருந்தாள்.
தனக்கு கல்யாணம் ஒரு கேடா? அதுவும் இந்த நல்லவனோடா? அதற்கு என்ன தகுதி தனக்கு இருக்கு? இறுதி வரை துணை வருவேன் என்று மீளாத் துயரத்தில் அவளை தள்ளி விட்டு அற்ப ஆயுளில் அவளை நிர்கதியாக்கி விட்டு அவள் காதலன் வாசுதேவன் மறைந்து ஒரு வருடம் கூட ஆகவில்லையே, அதற்குள் அவளுக்கு திருமணமா? தன்னிலை உணர வனமோகினிக்கு சிறிது நேரம் ஆயிற்று. வசீகரன் திருமணத்திற்கு வந்தவள், தற்போது மணமகளாய் அவன் தந்த தாலியை வாங்கி விட்டிருந்தாள். அதிர்ச்சி ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கம், தன்னிரக்கம் ஒரு பக்கம் மென வன மோகினி பெரிதும் துவண்டிருந்தாள்.
இயந்திர கதியாய் வசீகரன் இழுத்த இழுப்பிற்கு திருமண சடங்கில் கண்களில் ஈரம் கோர்க்க வனமோகினி எல்லாவற்றையும் செய்தாள்.
இரண்டு மணி நேரம் முன் அவன் திருமண வைபவத்தில் அவளும் தானே சந்தோசமாய் கலந்து கொண்டிருந்தாள். மனதால் கொண்ட வலிகள் மறைய மறைய கொஞ்சம் கொஞ்சமாய் வாசுவின் நினைவிலிருந்து தன்னை மீட்டு கொண்டு வந்தவளை, கல்யாணம் என்று பத்திரிக்கையோடு வந்து நின்ற வசீகரனின் வேண்டுகோளுக்காய் எந்த வைபவங்களிலும் கலந்து கொள்லாமல் தவிர்த்து வந்தவள் , அவனுக்காக மட்டுமே அங்கு வந்தாள். அவன் நட்பிற்காக மட்டுமே அங்கு வந்தாள்.
ஆனால் அங்கு நடந்ததோ வேறு. சைலஜா அப்படி செய்வாள் என்று அவள் எதிர்ப்பார்க்க வில்லை.தாலி கட்டும் தருணத்தில் வசீகரனையும் வனமோகினியையும் இணைத்து எப்படியெல்லாம் பேசி விட்டாள். நினைக்கையில் வனமோகினிக்கு உடம்பெல்லாம் கூசியது.பள்ளி பருவத்தில் நட்பினுள்ளே வந்த காதல், பன்னிரண்டு வருடங்கள் கழித்து அவர்களுக்கே எமனாய் வருமென்று யாரவது சொல்லியிருந்தால் வனமோகினி சிரித்திருப்பாள்.
ஆனால் வந்து விட்டதே.அப்பொழுதே அது இனக்கவர்ச்சி அது இதுவென்று வெட்டிக் கொண்டு சென்றவள் வனமோகினிதானே.
பின் எதை கொண்டு இப்படி இவள் குற்றசாட்டுக்களை அடுக்குகிறாள்? அவள் வீசி எறிந்த டைரி வனமோகினியுடையது. 17வயதில் அவள் எழுதிய அவள் அறியாமல் வசீகரன் களவாடிய அவளுடைய காதல் டைரி.
இது போதுமே இந்த கல்யாணம் சுக்கு நூறாய் உடைய.கல்யாணம் நடக்க சில தினங்கள் இருக்க, வசீகரனை தேடி அவன் அறைக்கு சென்றிருந்த சைலஜா அவன் இல்லாதிருக்க,அவன் அறையில் உரிமையாய் நுழைந்தாள். அவனுக்கு கொடுக்க வைத்திருந்த பரிசை ஸர்ப் ப்ரைசாக கொடுக்கலாம் என்று அவனுடைய வார்ட் ரோபில் ஒளித்து வைக்கும் வேளையில் அகப்பட்டது அந்த டைரி.
முகப்பில் மூங்கில் காட்டின் நடுவில் ஏரியில் எட்டி பார்க்கும் பால் நிலா போன்ற அட்டை போடப்பட்டிருந்தது. அதில் அவள் பெயர்... அவனோடு இணைந்த அவள் பெயர்.வசீகரவனமோகினி.
சைலஜாக்கு இடிவிழுந்தது போல இருந்தது. பக்கம் பக்கமாய் குண்டு குண்டு கையெழுத்தில் மோகினி வசீகரன் பள்ளி நாட்கள், சண்டை, காதல், கனவுகள் எல்லாமே எழுதியிருந்தது.
எதிலும் முதன்மையை விரும்பும் அவளால் அவள் தந்தை பார்த்து வைத்த வசீகரனின் பின்னால் இப்படி ஒரு கதை இருப்பதை ஜீரணிக்க இயலவில்லை. டைரியோடு அவன் வீட்டை விட்டு சென்றவள், தாலி கட்டும் வரை அமைதி காத்து அவனை சந்தி சிரிக்க வைத்தாள். கூடவே மோகினியையும் அவமானப்படுத்தினாள். கல்யாணம் நின்று போயிற்று. காலில் விழாத குறையாய் கெஞ்சிய மோகினியை சைலஜா மதிக்கவே இல்லை.
"அப்போவே அப்டினா, நீயும் இவனும் கல்யாணம் முடிஞ்சா கூட எனக்கு தெரியாம காதலிப்பீங்கடி, அவன் மொக ராசி அப்படி, பெயரிலே தெரியலையா? நீ மோகினி, அவன் வசீகரன் னே.. அப்பா எனக்கு இவன் வேணாம், இந்த கல்யாணத்த நிறுத்துங்க ", சாமியாடி விட்டு ஓய்ந்த சைலஜாவின் பேச்சுக்கு மறுப்பு பேச அவருக்கு துணிவில்லை.
அம்பலம் சொத்துக்கு ஒத்த வாரிசு அவள் தானே,அவளை கலங்க வைக்கிற கல்யாணம் அவருக்கும் பிடிக்கல.
நேரே வசீகரன் சட்டையை பிடித்தவர் "அயோக்கிய ராஸ்கல், இவ்ளோ தில்லு முள்ளு பண்ணித்தான் எம் பொண்ண அடையணும்னே நெனைச்சியா? தொலைச்சிடுவேன் படுவா !, காரித்துப்பி விட்டு ஷைலுவை அழைத்து சென்றார்.
நடந்தது அவனுக்கும் அதிர்ச்சி தானே. அருகில் நின்ற தந்தையை முறைத்தான்.
"சொன்னேன் தானே எனக்கு இந்த கல்யாணம் கருமாந்திரம் வேணாம் வேணாம்னு, கேட்டிங்களா அப்பா? அம்மாவோட இறுதியாசை அது இதுனு என்னை இப்படி தலை குனிய வெச்சிட்டிங்களே, இப்போ திருப்பதியாப்பா? .எரிமலையாய் வெடிக்கும் வசீகரனை பார்க்கவே அவன் அப்பா பரமனுக்கு பயமா இருந்தது. நிலைமை கை மீறி போவது தெரிந்தது.
"இவளால் தானே இவ்வளவும் நடந்தது?இவளை காதலித்தேன் என்று தானே என்னை அவள் அசிங்கபடுத்தினாள்?
இனி என்ன இவளை மணந்து கொண்டு விட்டால் எல்லாம் சரி ஆயிடும் இல்லையா? பாவி அன்னிக்கு என்னைய தவிக்க விட்டு போன, நட்பு அது இதுனே நீ தானேடி பிரிஞ்சு போன? காலம் முழுக்க உன் நட்புதான்டா எனக்கும் வேணும் னு அப்பவும் சத்தியம் வாங்கி என்னை சாகடிச்சிட்டே போன, இப்ப இந்த அவமானமும் உன்னாலதாண்டி,நீ தந்த வலிக்கு நான் காலம் முழுக்க உனக்கு தர்ற தண்டனைல இருந்து உனக்கு விடிவே இல்லடி !"
தர தர வென்று மோகினி கையை பிடித்து தன் அருகில் அமர்த்தியவன், அவள் மறுக்க மறுக்க அந்த தாலியை அவளுக்கு கட்டினான்.
தொடரும்..