மூங்கில் நிலா -2

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அப்பொழுதைக்கு எதுவும் பேசக்கூடிய நிலையில் அங்கே யாரும் இல்லை.அதைப் பற்றி நினைத்துப் பார்க்க கூட வசீகரன் விரும்பவில்லை. பெரிய தொழிலதிபரான பரமன் கண்ணாம்மாவின் கடைசி மகன் வசீகரனின் திருமணம் இப்படி கேலி கூத்தானது அவன் தந்தைக்கு வருத்தமே என்றாலும்சிறு வயதிலிருந்தே வனமோகினியை நன்கு அறிந்தவரே.

நிலைமையை சீர்படுத்த வேண்டிய மனைவி அங்கு இல்லாதது பரமனுக்கு பெரும் துயரமே. ஒரு கார் விபத்தில் அவருடைய அன்பு மனைவி கண்ணம்மா அவரையும் ஆண் பிள்ளைகள் இருவரையும் பரிதவிக்க விட்டு இறந்து போனார்.
நல்ல வேளை, பரமனின் மூத்த மருமகள் மகிழினி நிலைமை சுதாரித்துக் கொண்டு அடுத்து ஆக வேண்டியதை கவனிக்க ஆரம்பித்தாள்.

திருமணம் முடிந்ததும் வனமோகினியை வசி ஏறெடுத்தும் பாராமல் தன் காரில் ஏறி சென்று விட்டான்.
மருள மருள விழித்துக் கொண்டிருந்த வனமோகினியை அழைத்துக் கொண்டு மற்றவர்களும் பின் சென்றனர்.
வனமோகினியின் திடீர் திருமணத்தை ஊட்டியில் இருந்த அவளுடைய பெற்றோருக்கும் தெரியப்படுத்தித்தினர்.
செய்தி அறிந்த வனமோகினியின் பெற்றோருக்கு மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் ஒருங்கே ஆட்கொண்டது. கல்யாணம் ஆகாமலே இறந்து போனவன் நினைவில் துறவி போல வாழ்ந்தவளை துணைவி ஆக்கி கொண்டவன் அவளுடைய உற்ற தோழனே என்ற விஷயமே அவர்களுக்கு பெரும் ஆறுதலாய் அமைந்தது.

மகள் வாழ்க்கை மலராமலே கருகி விடுமோ என்று அனுதினமும் மறுகி கொண்டிருந்தவர்களின் வயிறு குளிர்ந்தது போல இருந்தது.
பாவம் வசிக்கும் மோகினிக்கும் தீர்க்கப்படாத கணக்கு நெடுங்காலமாய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருப்பது அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது.

சென்னையில் மாருதி ட்ராவல் ஏஜென்சிஸ் நடத்தும் பரமனுக்கு பல தொழில்களும் இருந்தன. குடும்ப தொழில்களை வசீகரனும் அவன் அண்ணன் ஆதிரனும் தந்தையோடு சேர்ந்தே கவனித்து வந்தனர். என்றாலும் ஊட்டியில் இருக்கும் அவர்கள் தேயிலை எஸ்டேட் வசியின் பொறுப்பிலே இருந்து வந்தது. இயற்கை விரும்பியான வசீகரன் அவன் தாய் மறைவிற்கு பின் ஊட்டிக்கே சென்று விட்டான்.
தேவை என்றால் மட்டுமே அவனை சென்னையில் பார்க்கலாம். இந்த திருமணமும் அவன் அன்னையின் இறுதியாசை என்றே அவன் தந்தை படாத பாடுபட்டு சம்மதிக்க வைத்திருந்தார்.

வனமோகினி வசிப்பதும் அங்கே தான். வன மோகினி தந்தைக்கும் சொந்தமாய் காய் கறி பண்னை இருக்கின்றது. வன மோகினி வேலைக்கு சென்று சம்பாதிக்கும் அவசியம் இல்லாதவள் தான். இருந்தாலும் வாசுவின் மரணம் கொடுத்த வலிகளை மறக்க flower shop
ஒன்று நடத்தி வந்தாள். பூவேலி என்று அழைக்கப்படும் அந்த கடையும் அதை சார்ந்த நிலமும் பார்க்கவே அழகாக இருக்கும்.
கடைக்கு பின்னால் அமைந்திருக்கும் சிறு மூங்கில் தோட்டமும் அதனோடு இணைந்திருக்கும் சிறு குளமும் பார்க்கவே இரம்யமாய் இருக்கும்.

அந்த நிலம் மோகினிக்கு அவளுடைய தாத்தா கொடுத்த பரிசு ஆகும். அவரை போலவே தோட்ட கலையில் ஆர்வம் உள்ள அவளுக்கு அந்த இடத்தை அவளது பிறந்தநாள் பரிசாக தந்திருந்தார். வகை வகையாய் வரிசை கட்டி நிக்கும் மரங்கள் எல்லாமே ஒவ்வொரு நினைவுகளை சொல்லும். அவள் தாத்தா ஆரம்பித்த நர்சரி அங்குதான் உள்ளது. வனமோகினி அதையும் சேர்த்துத்தான் நிர்வகித்தாள். வித்தியாசமான ரசனையில் வனமோகினி தயாரிக்கும் போக்கே , பூக்கூடை அந்த பகுதியில் மிக பிரபலம். தேவைக்கு தகுந்த மாதிரி பூக்களை அடுக்கி உடன் இலவசமாய் வாழ்த்து கவிதைகளும் எழுதி இணைத்து தருவாள்.

திருமணம் முடிந்த அன்றே ஊட்டிக்கு கிளம்ப வேண்டும் என்று வசீகரன் திட்ட வட்டமாய் சொல்லி விட்டான். அவன் பிடிவாதம் அவன் வீட்டார் நன்கு அறிந்ததே.அவளுக்குமே அது தெரிந்தது தானே.
அனைவரிடமும் விடை பெற்று கொண்டு வனமோகினி கிளம்பி விட்டாள். மறக்காமல் அந்த பாழும் டைரியை எடுத்து கொண்டு.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN