சங்கீதம்🎼3🎼

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சங்கீ்தம் 3

கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி

பாடல்: கண்ணுக்கு மை அழகு

படம் : புதிய முகம்
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

தன் மனம் என்னும் பெட்டகத்தில் பத்திரபடுத்திய அவளின் நினைவுகளை தீண்டாமல் தீண்டி சென்றவளின் பிம்பத்தை தற்காலிகமாக ஒதுக்க நினைத்தவனால் அவ்வளவு சுலபமாக அவளை ஒதுக்கித்தள்ள முடியவில்லை….

தார் சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தவனுக்கோ அவன் கண் முன் வந்து நின்றாள்... அவன் கருத்து முழுவதும் நிறைந்தாள்... அவன் மூளைக்குள் உட்கார்ந்து அவனை ஒரு வழியாக்கிக் கொண்டு இருந்தாள்...

'என்னை பார்க்கவே இல்லை அவ.. ஒரு வேலை அவளோட கண்ணுக்கு நான் தெரியவே இல்லையா?... என் முகம் அவளை பாதிக்கலையா?... இல்ல என்னை மறந்துட்டாளா?' என்ற கேள்விகள் அவனை இம்சித்துக் கொண்டிருந்தன. அவளை பற்றிய யோசனையுடன் வந்தவனுக்கு நண்பனின் அடுத்த அழைப்பு எரிச்சலைத்தான் கொடுத்தது.

நண்பனின் அழைப்பில் சட்டென மூண்ட எரிச்சலில் "என்ன டா உனக்கு அதான் வறேன்னு சொல்லிட்டேன்ல?" என்றான் கடுப்புடன்.

"டேய் டேய் பொறுமை டா உனக்கு அங்க ஏதாவது பிரச்சனையா?" என்றான் முத்து நண்பனின் குணமறிந்து

"அது பச் ஒன்னுமில்லை" என்றதும்

"இல்ல மச்சி சொல்லு... உனக்கு ஏதாவது வேலை இருந்தா... அதை பாரு… கீர்த்தி அம்மாவை சாய்ந்தரம் கூட போய் பார்த்துக்கலாம்…. இப்போ ஓகே தானாம்" என்றான் முத்து.

"சே…" என்று கைபேசியால் தலையில் தட்டிக்கொண்டு 'அவளை நினைச்சி கிட்டு இவன் கிட்ட என் கோவத்தை காமிச்சிட்டேனே' என்று வருத்தப்பட்ட சர்வேஷ்வரன்

"சாரி டா… ஒன்னுமில்லை இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்... பக்கத்துல தான் இருக்கேன்" என்றான். பொறுமையாகவே

"சரி வா மாப்ள ஆஸ்பிட்டல் முன்னாடியே வைட் பண்றேன்... நான் எதுக்கு போன் பண்ணேன்னா கீர்த்தி மாமாவும் அக்காவும் வந்து இருக்காங்கலாம்... அந்த ஆளுக்கு என்னைய பார்த்தாலே, பச்சை மிளகாயை கடிச்சா மாதிரிதான் முகத்தை வைச்சிக்குவான்... அதான் உன் கிட்ட முதல்லலயே சொல்லலாம்னு நினைச்சேன்" என்று கவலையாக கூறினான் முத்து.

"கவலைப்படாத மாப்ள பாத்துக்கலாம்…" என்று நண்பனுக்கு நம்பிக்கையை கொடுத்தவன் "நீ வைட் பண்ணு இதோ வந்துடுறேன்" என்று கூறியவன் முத்து போனை வைத்ததும தன் தலையை உலுக்கிக் கொண்டு 'தப்பு மேல தப்பை பண்ற டா சர்வேஷா…. நிதானமா இரு'

'அவ நினைப்புலயே எல்லார்கிட்டயும் எரிஞ்சி விழறடா' என்று தன்னை தானே திட்டிக்கொண்டு 'முதல்ல முத்துவை பாக்கலாம் அப்பறம் இவளைப் பத்தி யோசிக்கலாம்... '

'கொஞ்ச நேரம் மனசுக்குள்ளயே இருடி ராட்சசி...... மூனு வருஷம் என் மனசுலயே இருந்த இன்னைக்கு கண்ணு முன்னாடி வரவும் ஒன்னும் புரியல உன்னை நினைச்சியே இன்னைக்கு எல்லார்கிட்டயும் மொக்க வாங்க போறேன் … வெளிய வந்து என்னை சிரிப்பா சிரிக்க வைச்சிடாத தாயீ " என்று தன் இதயத்தை தட்டி செல்லமாய் சொல்லிக் கொண்டவன் நண்பனை பார்க்க சென்றான்.

இதில் அவனே எதிர் பார்க்காதது ஒன்று இன்று மாலை அவளை காண நேரிடும் என்பது.

💐💐💐💐💐

சிதம்பரத்தை சுற்றியுள்ள தெருக்களின் நீள அகலத்தை அளந்தவள் "பாட்டி…., தாத்தா…., ஆதி பாப்பா…". என்று அவர்களை தேடியபடி வீட்டிற்குள் நுழைந்தாள் பைரவி. அவளை தொடர்ந்து அருமை தம்பி அர்ஜூனும் வந்தான்.

பைரவியையும் அர்ஜூனையும் பார்த்ததும் "அப்பாடா வந்துட்டிங்களா?" என்று ஆஸ்வாச பெரூமூச்சை வெளியேற்றினாள் தாரணி.

"என்ன அண்ணி எதுக்கு இந்த பெருமூச்சி…" என்று தாரணியின் கைகளில் வீற்றிருந்த குழந்தையை வாங்கி கொண்டவள் அர்ஜூன் கையில் இருந்த பொம்மையை காட்டி

"ஹே குட்டி பையா உனக்கு இந்த பொம்மைய பிடிச்சி இருக்கா" என்று குழந்தையிடம் பேசி பொம்மையை வைத்து விளையாட்டு காட்டினாள் பைரவி.

"எவ்வளவு சொல்லியும் கேட்காம ரெண்டு பெரும் வண்டியை எடுத்துக்கிட்டு வெளியே போயிட்டிங்க... துளசி அத்தைக்கிடை நான்தான் திட்டை வாங்கினேன்". என்றவள் வெளியே சென்று வந்த அவர்களுக்கு குடிக்க தண்ணீரைக் கொடுத்தாள்.

பச் என்று சலித்துக் கொண்ட பைரவி "அடிக்கடி வந்து பழக்கப்பட்ட ஊர் தானே அண்ணி... எதுக்கு பயப்படனும் 3 வருஷத்துல அப்படி ஒன்னும் மாறிடலையே... நான் அவ்வளவு க்ரவுடா இருக்க சிட்டிலையே வண்டி ஓட்டிட்டு போவேன்... இங்க போகமாட்டேனா?" என்று தாரணியிடம் கேள்வியை எழுப்பியவள்

"அம்மாவுக்கு எப்பவும் பயம் தான் விடுங்க பாத்துக்கலாம்" என்றபடி வீட்டை பார்வையால் சுழற்றியவள் எங்க அண்ணி யாரும் இல்ல என்றாள்.

"நாளைக்கு பங்கஷன் ல எல்லாரும் ஆளுக்கு ஒரு வேலையா உள்ள இருக்காங்க பையூ... இவனை வைச்சிக்கிட்டு தான் ஒன்னும் பண்ண முடியல" என்று அலுத்துக்கொண்ட தாரணி அவள் கைகளில் இருந்த பொம்மையை பார்த்ததும் "ஹே அதே பொம்மை மாதிரி இருக்கு... பரவாயில்லை இங்கேயே கிடச்சிடுச்சா... எங்க வாங்கின" என்றாள் ஆச்சர்யத்தோடு

"அது எஸ் எஸ் ன்னு ஒரு சூப்பர் மார்க்கெட் அண்ணி... புதுசா திறந்து இருக்காங்க போல, எல்லா பொருளும் நல்லா இருக்கு... பங்கஷன் முடிஞ்சதும் ஒரு முறை போயிட்டு வரனும்" என்றபடி சுழலும் ஃபேனுக்கு அடியில் அமர்ந்தவள் "டேய் அர்ஜூன் அந்த டிவிய கொஞ்சம் போட்டு விடுடா" என்றாள்.

'இவ என்ன இவ்வளவு சாதரணமா எஸ் எஸ் சூப்பர் மார்க்கெட்டுன்னு சொல்றா?.... அதை நடத்துறது யாருன்னு தெரியுமா தெரியாதா ஒரு வேலை அண்ணனை பார்க்கலையோ?' என்று யோசனையில் மூழ்கினாள் தாரணி.

"உன் கூட தானே நானும் வந்தேன்... எனக்கும் தான் வெயில்" என்றபடி டிவியை உயிர்பிக்காமலேயே அர்ஜூனும் அமர்ந்திட இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் நேரம் துளசியும் அவரை தொடந்து விஜயேந்திரனும் வந்தனர்.

"எப்போ பையூ... வந்த கொஞ்ச நேரம் உன்னை கவனிக்கல உடனே வெளியே கிளம்பியாச்சில்ல... எவ்வளவு சொல்லி கூட்டிட்டு வந்தேன்?" என்றார் துளசி படபடவென்று.

பைரவியை துளசி கடிந்துக் கொள்ளவும் அங்கு வந்திருந்த சசீ "துளசி நீ தேவை இல்லாம பயப்புடறேன்னு நினைக்கிறேன். பையூ தைரியமான பொண்ணு அரவிந்த் அர்ஜூன் எப்படியோ பைரவியையும் அப்படியே டீரிட் பண்ணு... ஓவர் ப்ரடக்டீவ்வா இருக்காத துளசி... அவளுக்கு அதுவே சலிப்பாகிடும்" என்று பைரவியின் மனதை அறிந்து சசீதரன் கூறினார்.

நேற்றிலிருந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார் துளசியின் நடவடிக்கைகளை ஒரு தாயின் பயம் அவருக்கு தெரிந்து இருந்தாலும் பைரவியிடம் அவர் காட்டும் கட்டுப்பாடுகள் அவருக்கு சிறுபிள்ளை தனமாய் தான் தோன்றியது.

குழந்தை பொம்மை உடைந்து விட்டது என்று அழுததின் காரணமாக தான் பைரவி வெளி சென்றாள் அதுவும் அர்ஜூனுடன் தான் சென்றிருக்கிறாள் என்று தாரணி கூறியும் அதை ஏற்காது பைரவியை கடிந்து கொள்வது அவருக்கு வருத்ததை கொடுத்தது.

"மாமா நான் எதுக்கு சொல்றேன்னு உங்களுக்குமா புரியல" என்றார் துளசி சற்று சங்கடத்துடனே

"ஏன் புரியாம…. நல்லாவே புரியுது துளசி... அதுக்குதான் சொல்றேன் ஒரு அம்மாவ நீ பயப்புடுறது நியாமாபட்டாலும், இது அவ ஊர்தானே, அவளை மீறி யார் என்ன செய்துட முடியும்… நாங்களும் அவளுக்காக இருக்கோம் இல்லையா... மூனு வருஷத்துக்கு முன்னாடியே துணிஞ்சி நின்னவ இப்போ நிக்க மாட்டாளா?... அவளை பார்த்துக்க தெரியாதா" என்று சசீதரன் பைரவிக்கு ஆதரவாய் பேசவும்

"அப்படி சொல்லுங்க அண்ணா எப்பவும் ரெண்டு பேருக்குள்ள ஒரே சச்சரவுதான்…. யாரை சமாதானம் செய்றதுன்னே தெரியல... துளாவுக்கும் சொல்லிட்டேன் அவ தைரியமான பொண்ணுன்னு தேவையில்லாம பயப்படாதன்னு ஆனா அவ தான் தேவை இல்லாம கவலைப்படுறா... ஊர்ல இருக்கும் போது கூட தெரியல அண்ணா இங்க தான் ரொம்ப ப்ரொட்க்டீவ் வா இருக்கா" என்றபடி அமர்ந்தார் தீரன். தீரனுக்கும் துளசி இவ்வாறு இருப்பது கஷ்டமாகத்தான் இருந்தது.

"ம் ஆமா சசீப்பா "… என்று தந்தை கூறியதை அமோதித்தவள்,"நான் என்ன ப்ரிஜில் இருக்க ஆப்பிலா? உயிர் உள்ள மனுஷி தானே.... ஊர்ல இருந்து வரும்போதே பஞ்சாயத்து தான் இப்படி இரு அப்படி இருன்னு நாம எதுக்கு சசீப்பா மத்தவக்களுக்காக மாறனும் நாம என்ன தப்பு செய்தோம் மாறுவதற்கு" என்றாள் பையூ சலுகையாக

அவளுக்கு அந்த எண்ணம் தான் எங்கே அப்போது கூறினாள் தாயின் கோபம் இன்னும் அதிகமாகுமோ என்று அதை தவிர்த்திருந்தாள். சில நாட்கள் பெரிய தகப்பன் சசீயின் வளர்ப்பில் இருந்தவளாயிற்றே இருவரின் கருத்தும் எப்போதும் போல் இப்போதும் ஒன்று போலவே தான் இருந்தது.

தன்னை பெரிய மாமாவிடம் குறை சொல்லும் மகளையும் கணவரையும் முறைத்த துளசி போதும் டி என்று சைகை செய்ய இன்னும் அன்னையை வெறுப்பேற்றும் எண்ணம் கொண்டவள் "சசீப்பா நான் எனக்கு பிடிச்ச டிரஸ் போட்டுக்கலாம் ல"

"ஒ தராளமா போடுக்கோ பையூ" என்று சசீ கூறியதும் தாயை பார்த்த பைரவி கோணல் சிரிப்பை உதிர்க்க

"உன்னை" என்று அருகில் வந்த துளசியிடம் போக்கை காட்டி ஓடிய பைரவி நடராஜனிடம் தஞ்சம் புகுந்தாள்.

"அட என்னம்மா நீ…. நீ, படிச்ச பொண்ணு உன் மகளுக்கு தைரியம் சொல்லி கூட இருப்பியா அதை விட்டுட்டு யார் என்ன சொல்லுவாங்கன்னு பார்த்துக்கிட்டு இருக்க …. ஊருக்கு பயந்தா நாமா வாழ முடியுமா?" என்று துளசியிடம் கூறியவர்

"உனக்கு என்ன தோனுதோ அதை செய் பையூ மா… அடுத்தவங்களுக்காக நாம ஏன் மாறனும்றது கரெக்டுதான்… நம்ம மனசுக்கு மட்டும் உண்மையா இருந்தா போதும் டா..." என்றவர்

"போங்க... போய் வேலைய பாருங்க... வளர்ந்த பொண்ணு அவளுக்கும் நாம சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்ல சாயங்காலம் கோவிலுக்கு போகனும்..." என்று அந்த பேச்சை வீட்டின் மூத்தவரான நடராஜன் அத்துடன் முடித்துவிட அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

இதில் எதிலும் கலந்துக்கொள்ளாமல் யோசனையுடன் தன்னிடமிருந்து மகனை வாங்கிய தாரணியின் முகம் பார்த்த பைரவி

"என்ன அண்ணி ரொம்ப நேரமா யோசனையிலேயே இருக்கிங்க... நானும் நீங்க ஏதாவது எனக்கு சப்போர்ட்டா அம்மாகிட்ட பேசுவிங்கன்னு பார்த்தா!!!! கண்ணை எதுலையோ சொறுகி விட்டா மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க இந்த உலகத்துலயே இல்ல போல" என்றாள் கிண்டலாக

"அப்படியா என்ன... என்ன பேசிக்கிட்டிங்க பையூ… ஏதாவது முக்கியமான விஷயமா?" என்றாள் தாரணி ஏதும் அறியாது

"நல்லா கேட்டிங்க போங்க.. அது ஒரு பெரிய கதை அதை... விடுங்க அப்புறம் சொல்றேன் உங்க மனசுல என்ன ஓடுது ம்" என்று புருவம் உயர்த்தினாள்.

"ஆமா எனக்கு உன்கிட்ட கேட்டே ஆகனும்... இல்ல தலையே வெடிச்சிடும்" என்ற தாரணி "அந்த கடை யாருதுன்னு தெரியுமா பையூ"

"தெரியாது அண்ணி... யாரோடது' என்று சாதரணமாக கேட்டாள் பைரவி.

"அது சர்வேஷ்வரனோட கடை பையூ" என்று தாரணி கூறியதும் அந்த பெயரை கேட்ட பைரவிக்கு தன்னிச்சையாக விரல்கள் நெற்றியில் இருந்த தழும்பை வருடியது...

நினைவுகள் அனைத்தும் மூன்று வருடங்களுக்கு பின்னோக்கி நகர்ந்து தன்னை பரிவுடன் நோக்கிய சர்வேஷின் முகம் மட்டுமே அவள் மனகண்ணில் தோன்றி மறைந்தது.

சிலையாய் சமைந்தவளை பையூ ஏய் பையூ என்று தாரணி அவளை உலுக்கவும் சுயம் பெற்றிட, மெல்லிய குரலில் "அவனை பார்த்தியா" என்று தாரணி கேட்டதும் "இல்லை" என்னும் விதமாக தலை அசைத்தவள் "அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவனை பார்க்கும் சந்தர்ப்பமே கிடைக்கல அண்ணி... பார்த்தா கண்டிப்பா பேசனும்" என்று கூறியவளின் குரல் மாறுபட்டு ஒலித்தது.

"அதுக்கு என்ன தாராளமா பேசலாம்... பங்கஷன் முடியட்டும் பேசலாம்.. சரியா... இப்போ வா வேலைய முடிக்கனும் தாத்தா வேற கோவிலுக்கு போக நேரமாச்சின்னா சத்தம் போடுவாங்க" என்றாள் அவள் இருக்கும் நிலையறிந்து அவளை திசை திருப்பினாள்.

முயன்று தன்னை மீட்டவள் "இன்னைக்காவது பாட்டி கோவிலுக்கு வருவாங்களா அண்ணி?" என்றாள் எதிர்பார்ப்போடு

"தாத்தா கட்டாயம் வரனும்னு சொல்லி இருக்காரு பையூ... வந்துடுவாங்கன்னு தான் நினைக்கிறேன்" என்றாள் தாரணி நம்பிக்கை கொண்டவளாக

"அது எப்படி வராம போறாங்கன்னு நானும் பாக்குறேன்... இந்த ஊர் நியாமெல்லாம் எனக்கு மட்டும் தானா அவங்களுக்கு இல்லையா … கோவில் எல்லாருக்கும் பொது தானே அந்த பெரிய மனுஷன் ஏதோ சொல்லிட்டாருன்னு போகாமா இருப்பாங்களா கட்டாயம் வந்துதான் ஆகனும் வாங்க போவோம்"
என்ற பைரவி தாரணியுடன் உள்ளே சென்றாள்

💐💐💐

தாயின் ஆசைக்காக பாசிபச்சை நிறத்தில் பட்டு பாவடையும் ராபீன் ப்ளூ நிறத்தில் தாவணியும் அதற்கேற்ற நகைகளையும் அணிந்து இருந்த பைரவியின் முகத்தில் வருத்தத்தின் சாயல் அப்பட்டமாய் தெரிந்தது.

அவளுக்கு மட்டும் அல்லாது குடும்பமே அப்படித்தான் இருந்தது.
பெரியவரான நடராஜன் தாத்தாவிற்கும் மனது சற்று சங்கடமாக இருந்தது.

கிட்ட தட்ட 35 வருடங்களாக கோவில்களுக்கு மட்டுமல்லாது வேறெந்த விசேஷங்களுக்கும் செல்லாதவர் சுப்ரஜா. தான் உண்டு, வீடு உண்டு, தன் மக்கள் செல்வங்கள் உண்டு.. என்று வாழ்பவர் பேத்தி எவ்வளவு எடுத்து சொல்லி வற்புறுத்தியும் இன்றும் கோவிலுக்கு வர மறுத்தவர் வீட்டில் மற்ற வேலையாட்களோடு இருந்துக் கொண்டார்.

மனைவி ஏன் தயங்குகிறாள் எதற்காக வர மறுக்கிறாள் என்று தெரிந்தும் அவரை மாற்றமுடியாமல் கனத்த இதயத்துடன் தாங்கள் கண் மூடுவதற்குள் என்றாவது ஒரு நாள் உன்னை பார்க்க வைச்சிடு இறைவா என்ற வேண்டுதலுடன் சந்நிதியை நோக்கி நடத்தார் நடராஜன். நடந்ததை எதையும் மாற்ற முடியாதே என்ற வருத்தம் இன்னும் அவருக்குள் உழன்றது.

தங்களுக்கு முன்னால் நடந்து செல்லும் தந்தையை கண்டவர் "எப்போ தான் அண்ணா அப்பா முகத்துல சந்தோஷத்தை பார்க்கறது... எவ்வளவு சொல்லியும் அம்மா பழசையே நினைச்சிட்டு எங்கேயும் வராம இருக்காங்க" என்று வருத்தமாக ஒலித்தது தீரனின் குரல்

"என்ன செய்றது விஜி... நாம எவ்வளவு வற்புறுத்தியும் வராதவங்க... பையூ சொல்லியாவது வருவாங்கன்னு எதிர்பார்த்தேன்… பச் அதுவும் முடியல நம்ம வீட்டு சந்தோஷமான நேரத்துல அம்மா கூட இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு
டா" என்றார் சசீதரனும் கரகரப்பான குரலில் .

"ஏன் பாவா…. விடுங்க…. இது இன்னைக்கு நேத்திக்கா நடக்குது… இதை பேசி பேசியே மாமா மனசை சங்கடபடுத்தாதிங்க" என்று கமலம் கணவரிடம் கூறிட

பெருமூச்சுடன் "ஏனோ கா இதை எல்ல ம் என்னால அக்சப்ட் பண்ணவே முடியல… என்னைக்கோ யாரோ சொன்னாங்கன்னு அத்தை வராதது கஷ்டமாதான் இருக்கு…. நமக்கே இப்படி இருக்கும்போது மாமாவுக்கு எவ்வளவு மனசு கஷ்டமா இருக்கும்…" என்று நடராஜனின் நிலையறிந்து துளசி உரைக்கவும் அவர்களுடன் நடந்து வந்துக்கொண்டு இருந்த பைரவிக்கு மனது தாளவே இல்லை…

இவர்களையெல்லாம் கடந்து ஒரே ஓட்டமாக தாத்தாவிடம் ஓடி சென்ற பைரவி அவர் கையை பிடித்தபடி நடராஜர் சந்நிதானத்தில் அடியெடுத்து வைத்தாள். தாதாவின் முகம் பார்த்தவளுக்கு அவரின் மனவேதனை முகத்தில் தெரிய

என்ன நினைத்தாளோ இறைவனின் முன் கண்களை மூடி கை குவித்தவள் மனதில் ஈசனை உருவேற்றியபடி அவனை துதித்து பாட ஆரம்பித்திருந்தாள்.

மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…

நடராஜர் பத்திலிருந்து இரண்டாம் பத்தை தன் ஊன் உருக உயிர் உருக தானும் அதில் கரைந்தவளாய் பாடிட அதின் பொருள் உணர்ந்தவர்களோ அந்த பாடலில் குறிப்பிட்டுள்ள அத்தனை அம்சங்களும் தன் கண்களின் முன்னால் ஆடியது போன்ற பிரம்மையில் நின்றுக் கொண்டிருந்தனர். என்றால் நடராஜனோ தன் உயிரில் கலந்த மனைவி தனக்குள் இருந்து இவை அத்தனையும் கண்ணாரக் கண்டதை போன்ற ஒரு உணர்வில் இருந்தார். பேத்தியின் குரலில் அந்த இறைவனையே கண்ட ஒரு நிறைவை பெற்றிருந்தவர்

பேத்தியினை கண்களால் மெச்சிக்கொண்டு அவள் தலையில் கை வைத்து வருடியவர் தீபாராதனையை கண்களில் ஒற்றிக்கொண்டு மனநிம்மதியுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

தாத்தாவின் முகம் சிரித்தபடி இருப்பதை கண்ட தாரணி "பையூ நீ அழகா பாடி தாத்தாவோட மனசையே மாத்திட்ட... உன் குரல்ல அவ்வளவு ஜாலம் இருந்துச்சி... இந்த தில்லை நடராஜோரோட சேர்ந்து அத்தனை அம்சங்களும் ஆடியது போல ஒரு உணர்வு... ப்பா அதை சொல்ல வார்த்தையே வரல... என் கண் மூடி கேக்கும்போது எல்லாம் மனசுல காட்சிகளா ஓடுச்சி" என்று பைரவியை மனதார பாரட்ட

"பாத்திங்களா துளசிமா நடந்த எல்லாத்துக்கும் காரணம் பையூ தான்... அவதான் தாத்தாவோட மனசயே லேசாக்கி இருக்கா" என்று அரவிந்த் தன் பெரியன்னையிடம் தங்கையை பற்றி புகழ்ந்து கூறிட

"பின்ன வாய் இருக்குல்ல அர்வி... செய்யத்தான் வேணும் … பாட்டு கத்துக்கிட்டா மட்டும் போதுமா… பராவாயில்ல ஏதோ உன்னால முடிஞ்சதை பண்ணி இருக்க" என்று பையூவிடம் வீரப்புடன் கூறுவதை போல கூறிய துளசி மகளைப் பாராட்ட

"எப்பா எல்லாரும் நல்லா கேட்டுக்குங்கோ... வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி... உங்க வாய்ல இருந்து இப்படி ஒரு வார்த்தையாம்மா... என் காதுகளையே என்னால் நம்பமுடியவில்லையே" என்று நாடகபாணியில் பேசியவளின் காதை வலிக்காமல் பிடித்த துளசி "ரொம்ப கொழுப்பு கூடி போச்சிடி" உனக்கு என்று சிரித்தார்.

"அவ எப்படி இருந்தாலும், இப்போ அப்பா சிரிச்ச முகமா இருக்கறது அவளாளதான்..." என்றவர் இளைய மகளை ஒரு கையால் பற்றிக்கொண்டு மறுகையால் பேரனை தூக்கிய சசீதரன் தந்தையின் பின்னால் செல்ல அவரை தொடர்ந்து பெரியவர்கள் சென்று விட தாரணி அரவிந்த் அர்ஜூன் அவர்களை பின் தொடர்ந்தனர்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN