தாரகை யின் மாயோன்

மாயோன் -1

சஷ்டியை நோக்க சரவண பவனார் கந்த‌ சஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருக்க கல்பனா தேவி மனமுருகி அந்த முருகனை வேண்டினார்.

"முருகா உன்கிட்ட நான் கேட்கறது எல்லாம் ஒன்னே ஒன்னு தான் .என் மகன் இருக்கானே , அவன் தான் கார்த்திக் ராஜன்..அவனுக்கு அந்த கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைக்கிற புத்தியைக் கொடுப்பா .. உன்மேல நான் கொண்ட பக்தியால் தானே அவனுக்கு உன்னுடைய பெயரை வைத்தேன்.." என்று வேண்டிக் கொண்டிருந்தார்.

அதே நேரம் அங்கே உணவு மேஜையில் இருந்த அனைத்துப் பொருட்களும் கீழே உருண்டு உடைந்தது...

அந்த சத்தத்தைக் கேட்ட கல்பனா தேவி," அச்சோ காலையிலேயே ஆரம்பிச்சிட்டானே..."என்று நினைத்தவர் அவசர அவசரமாக பூஜை அறையில் இருந்து வெளியே வந்தார்.

அங்கே அனைத்து பொருட்களும் சிதறி கிடக்க அதை பார்த்து , மானசீகமாக தன் தலையில் கை வைத்தவர் எதிரில் இருப்பவனை பார்க்க அவனோ தன் கைகளை கட்டிக்கொண்டு சாவகாசமாக தன் அம்மாவை முறைத்தான்.

இவர் யாருக்காக மனமுருகி வேண்டினாரோ அவனின் ஆட்டத்தில் ஒன்றுதான் இதுவுமே..

'அச்சச்சோ இன்னைக்கு என்ன பிரச்சனை தெரியலையே..?'

"கார்த்திக் என்னப்பா என்ன ஆச்சு ஏன் இப்படி கோபப்படுறே..."

"நான் ஏன் கோபப்படறே உங்களுக்கு தெரியாது அப்படித்தானே இங்கே டேபிள் மேல பாருங்க மா.. எப்படி இருக்கு கொஞ்சமாவது இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு சுத்தம் னா என்ன தெரியுதா..?"

'அச்சோ முருகா இதெல்லாம் அவனுடைய வேலையா தான் இருக்கும் .ஃநைட் லேட்டா வந்து சாப்பிட்டுட்டு இப்படி போட்டு வெச்சிருக்கானே ..'

"கார்த்திக் நானே பாவம் பா...எவ்ளோ வேலைதான் தனியே செய்வேன் . சொல்லு பாக்கலாம்..."என்று தனது அடுத்த அஸ்திரத்தை எடுத்தார் கல்பனா தேவி.

"அம்மா இதெல்லாம் ஒரு காரணமா சொல்லாதீங்க .. வேலைக்கு ஆள் வெச்சுக்கோங்க சொன்னா அதையும் கேட்கிறதில்லை ...எங்க அந்த எருமைமாடு கூப்பிடுங்க. அவனை வெளியே..."🙄🙄🤔🤔

"கார்த்திக் நீ கோபப்படாதடா அவன் அவன் இன்னும் எந்திரிக்கல... அவன் எந்திரிச்சதும், நானே அவனை கிளீன் பண்ண சொல்றேன்..."

"பாரேன்.. உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா..? நான் இப்படி போனதும் அவனை மடியில் படுக்க வெச்சிட்டு
கொஞ்சுவீங்க..."என்ற கார்த்திக் வேகவேகமாக மாடியேறினான்.

"அச்சோ முடியலையே இந்த மனுஷன் இந்த நேரம் பார்த்து எங்கே போனாரோ...? முருகா என்னைக் காப்பாத்தேன் ..." என்று புலம்பிய கல்பனா தேவி தன் மகன் பின்னே மாடி ஏறினார்..😀😀

கார்த்திக் ராஜன் மாடியில் உள்ள மற்றொரு சயன அறைக்கு படுத்துக்கொண்டிருந்த அவனின் மீது பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றினான்.

அவனின் செயலில் சுகமாக துயில் கொண்டவன் எழுந்து அமர்ந்து எதிரில் இருப்பவர்களை பார்த்து
கல்பனா தேவியை அருகே அழைத்தவன் அவளின் முந்தானையை எடுத்து தன் முகத்தை துடைத்தவன் ,"அம்மா உன் பெரிய பிள்ளையை வேற ஏதாவது வித்தியாசமா யோசிச்சிட்டு வந்து என்னை டார்ச்சர் பண்ண சொல்லு ஓகேவா... இன்னும் ஒரு அரைமணி நேரத்தில் எனக்கு சூடா காபி சக்கரை தூக்கலா போட்டு எடுத்துட்டு வாமா.. என்றவன் ...

போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு.." என பாடிக்கொண்டே அந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி படுத்து தனது தூக்கத்தை தொடர்ந்தான் அபிஷேக் ராஜன் கார்த்திக் ராஜனின் அன்பான, பாசமான உடன்பிறப்பு..

கார்த்திக் ராஜன் இதில் கடும்கோபம் கொண்டவன் அவனின் போர்வையை இழுத்து" டேய் எருமை மாடு உனக்கு கொஞ்சமாச்சும் சூடு ,சொரணை இருக்கா இல்லையா ..?

எத்தனை தடவை சொன்னாலும் நீ அடங்கவே மாட்டியா ஏன்டா ஏன்டா நீ எல்லாம் ஒரு ஜென்மம் னு சுத்திட்டு இருக்கிற... என்று தனதருமை தம்பியை திட்டிக் கொண்டிருந்தான்.

ஆனால் அபிஷேக் ராஜன் எதையும் காதில் வாங்காமல் மீண்டும் போர்வையை எடுத்தவன் இழுத்து போர்த்தி தூங்க ஆரம்பித்தான்.

கல்பனா தேவி இருவரையும் எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாதவர் தனது பெரிய மகனை கண்டிக்கும் விதமாக கார்த்திக் ,"தூங்கற பிள்ளையை ஏன்டா இப்படி படுத்துறே... உனக்கு தூக்கம் வரலையா விடு.. அவன் ஃநைட் இரண்டு மணி வரைக்கும் படிச்சிட்டு தூங்கியிருப்பான்..."

"அம்மா சும்மா என்னை கடுப்பேத்தாதீங்க அவன் இரண்டு மணி வரைக்கும் படிச்சான் .. நீங்க பார்த்தீங்க அட போங்கம்மா... ஃபோன்ல யார் கூடவாவது கடலை போட்டுட்டு இருந்திருப்பான்..

யாருக்கு தெரியும் அந்த பிசாசு இவன் கூடவே சுத்திட்டு இருக்குமே அது கூட வெட்டி கதை அளந்து இருப்பான்.. அதுக்கும் வேற வேலை இல்ல இவனுக்கும் வேற வேலை இல்ல ..."
என்றான் கார்த்திக்.

"அம்மா என்னை பத்தி என்ன வேணா சொல்ல சொல்லு தேவையில்லாம மத்தவங்கள பத்தி பேச வேண்டாம்..."என்றான் அபிஷேக்.

கார்த்திக்கு தெரியும் அவன் யாரைப் பற்றிப் பேசினால் கோபப்படுவான் என்று அபிஷேக்கை கோபப்படுத்தி பார்க்க எப்போதும் கார்த்திக் இந்த முறையை தான் கையில் எடுப்பான்.

"ஆமா இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...,நீங்க கொடுக்கிற இடத்தில் தான் இவன் இவ்வளவு ஆட்டம் போடறான் ..."என்றான்.

சரவண ராஜன் அறை வாசலில் நின்று கொண்டு தனது மனைவி மக்களை பார்த்தவர் தன் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

கார்த்திக் தன் அப்பாவை பார்த்து கோபம் கொண்டவன் , " சிரிங்க இவனெல்லாம் ஒரு நாள் கண்டிப்பா அனுபவிப்பான். எதையும் ஒரு முறையா செய்ய மாட்டேங்கறான். இவன் என்ன தான் படிக்கறானோத் தெரியல ..."என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.

"ஏங்க வந்துட்டீங்களா இவனுங்க இரண்டு பேரும் காலையிலேயே ஆரம்பிச்சுட்டானுங்க .நீங்க கரெக்டா எஸ்கேப் ஆகிடுவீங்க என்னால முடியலைங்க... எனக்கு ஒரே டயர்டா இருக்கு ப்ளீஸ் எனக்கு சூடா ஒரு காபி போட்டு எடுத்துட்டு வரீங்களா...?"

"விடுடா கல்பனா இவர்களைப் பற்றி உனக்கு தெரியாதா சின்ன வயசுல இருந்து பார்த்துகிட்டு தானே இருக்கோம் .சரி உனக்கு நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.." என்று நகர,

அபிஷேக் , "அப்பா எனக்கும் காபி நல்லா ஸ்ட்ராங்கா இருக்கணும் சரியா இந்த அம்மாவைக் காபி போட சொன்னா அதில் டேஸ்டே இருக்காது..."

"அடேய் என்னடா இப்படி சொல்றே.. இனி என்கிட்ட காபி கேளு உனக்கு இருக்கு, போடா போ உங்க அப்பாவே இனி உனக்கு தினமும் காபி போட்டுத் தருவார் நல்லா குடிச்சுக்கோ..."

"அச்சோ என் செல்ல மம்மி என் செல்ல குட்டிக்கு இவ்ளோ கோபம் வருது, நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் ..நான் பாவம் தானே..! அம்மா இப்போதான் அந்த ஸ்டிரிக்ட் ஆபிஸர் ஆடிட்டுப் போறான்.இப்போ நீயும் இப்படி சொன்னா நான் எங்கே போவேன்னு சொல்லு பார்ப்போம்...

சரிமா நீங்க இரண்டு பேரும் உட்காருங்க. உங்க இரண்டு பேருக்கும் நான் காபி கொண்டு வரேன்..." என்றவன் வேகமாக கீழே இறங்கி சமையல் அறைக்குள் புகுந்தான்‌ அபிஷேக் ராஜன்.

"ஏங்க இவனுங்க இரண்டு பேரும் சின்ன வயதிலிருந்தே இப்படித்தான் இருக்கானுங்க ..எனக்கு இவனுங்களை நெனச்சாலே கஷ்டமா இருக்குங்க..."

"விடுடா எல்லாம் போகப் போக சரியாயிடும் நீ உன் மனசை போட்டு குழப்பிக்காத..." என்று சரவணன் தன் மனைவியையும் தன் தோளில் சாய்த்து ஆறுதல் கூறினார்.

"சரிங்க நீங்க சொல்றீங்க நானும் நம்பறேன்...சரி வாங்க சின்னவன் கீழே போய் இருக்கான்... இரண்டும் மறுபடியும் முட்டிக்கப்போகுது...என சரவணராஜன் சிரிக்க ஆமா நல்லா சிரிங்க என் நிலைமையை பார்த்தா உங்களுக்கு அவ்ளோ சிரிப்பா இருக்கா...?"

"என்னமா இப்படி சொல்லிட்ட என்னுடைய ஹோம் மினிஸ்டர் நீதானே .அப்போ நீ தான் இதையெல்லாம் பார்க்கனும் .உன்னை கஷ்டப்பட்ட விட்டுட்டு நான் சும்மா இருப்பேனா ..? இந்த சரவணன் இருக்க பயம் ஏன் ...?"

"ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல .. சரி வாங்க கீழே போகலாம்..."

சமையலறையில் அபிஷேக் ராஜன் தன் பெற்றோருக்கும், தனக்கும் சேர்த்து காபி போட்டவன் தன் அண்ணனுக்கு மிகவும் பிடித்த கிரீன் டீயை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்கு சென்றான்.

" கார்த்திக் கிரீன் டீ குடிச்சிட்டு கிளம்பு டா..."

"சரி சரி குடிக்கறேன் , போ போய் சீக்கிரமா குளிச்சிட்டு கிளம்பற வழியை பாரு.. இன்னைக்கு உன் மேல எந்த கம்ப்ளைய்ன்ட்டும் வரக்கூடாது புரியுதா...?"

"சரிடா சரிடா எப்போ பாரு கடப்பாறையை முழிங்கின மாதிரி முறைச்சிக்கிட்டு சுத்தாதே.. ."என்றவன் கார்த்திக் அடுத்த வார்த்தை சொல்வதற்குள் வெளியே ஓடிவந்தான் அபிஷேக் ராஜன்.

அங்கே நின்னா என்ன நடக்கும் அவனுக்கு தெரியாதா என்ன?

அடுத்த இரண்டாவது நிமிடம் கார்த்திக் ராஜன் வீடே அதிரும் படி அம்மா என்று கத்தினான்.
இந்த சின்னவன் என்ன செய்தானோ...?🤔🤔😂😂

இரவு நேரம் மனதில் எந்த பயமும் இல்லாமல் தனியாக பயணம் செய்கிறாள் மங்கையவள் .

காரின் எதிரில் திடீரென்று வந்தவரை பார்த்து வண்டியை நிறுத்துகிறாள்...அவர் இவளிடம் நெருங்கி அவளை கீழே இறங்க சொல்ல இவளோ அவரின்
பார்வைக்கு கட்டுபட்டவளாய் கீழே இறங்கினாள்.

"வா வா சீக்கிரம் வா.."

"ப்ளீஸ் என்னை விடுங்க இப்போ எங்கே
கூப்படறீங்க ..."

"ஏய் நான் சொல்றே இல்லை .. இது நீ இருக்க வேண்டிய இடம் இல்ல என் கூட வந்துரு.."

"என்ன சொல்றீங்க நீங்க நான் ஏன் உங்க கூட வரணும் ...நான் எங்க அம்மா, அப்பா கூட தான் இருப்பேன் .உங்களுக்கு அடிக்கடி இதே வேலையா போச்சு .இனி நீங்க என் வாழ்க்கையில் வராதீங்க நீங்க வந்ததில் இருந்து என்னுடைய தூக்கம் போச்சு போங்க.."

"ஏய் உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா..? என்று திரும்பிப் பார்த்த அந்த உருவத்தைப் பார்த்த இனியா பயந்து நடுங்கியவளாக அம்மா அம்மா என்று கத்தியவள் மயங்கி சரிந்தாள் .
 
மாயோன் - 2
கார்த்திக் எப்பொழுதும் கிரீன் டீ அப்படியேதான் குடிப்பான் .ஆனால் அபிஷேக் வேண்டுமென்றே தேன் கலந்துக் கொடுக்கவும் கார்த்திக் அதை குடித்தவன் அம்மா என்று கத்தினான்.
அப்போதுதான் தனது சிறிய மகன் போட்ட காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்த கல்பனா தேவி அவன் போட்ட சத்தத்தில் வேகமாக கார்த்திக்கின் அறைக்கு சென்றார் .
"அவன் என்ன செய்து வெச்சிருக்கான் பாருங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா போடுங்க .இல்லையா நானே போட்டுக்கறேன்..." என்று கார்த்திக் மீண்டும் சத்தம் போட்டான்.
இதில் நொந்து நூடுல்ஸான கல்பனா 😀😀'காலையில் ஒரு காபியை கூட நிம்மதியாக குடிக்க விட மாட்றானுங்களே..' என்று நினைத்து பெரிய மகனை சமாதானம் செய்தவர் டீ கப்புடன் கீழே வந்தார்.
அங்கே அபிஷேக் காபியை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருக்க அவனைப்பார்த்து முறைத்தார் கல்பனா..
"என்னமா எதுக்கு இப்போ முறைக்கிறீங்க. நான் என்ன உங்க பெரிய மகன் போல காலையில் எழுந்து காச்சு மூச்சு சொல்லி கத்திக்கிட்டா இருக்கேன்...நல்ல பிள்ளையா லட்சணமா அவனுக்கு கிரீன் டீ தானே போட்டுக் கொடுத்தேன்...."என்றவனை..
காதைப் பிடித்து திருகிய கல்பனா, "டேய் ஏண்டா இப்படி படுத்தறே உங்க இரண்டு பேரிடமும் பெரிய போராட்டமா இருக்குடா..."என்றவர் சமையலறைக்குள் செல்ல,
அப்போது சரவணராஜன் கையில் கிரீன் டீயுடன் வந்தவர் "கல்பனா எதுவும் பேசி டென்ஷனாகாத மா .
இதை எடுத்துக்கொண்டு போய் அவன்கிட்ட கொடு ... உன் சின்ன மகன் அவன் கத்தும் போதே என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்..." என்றிட ,
இப்பொழுது அப்பாவும் ,பிள்ளையும் சேர்ந்து சிரிக்க கல்பனா வேறுவழியில்லாமல் இருவரையும் திட்டித் தீர்த்தவர் மீண்டும் தனது மகனுக்கு கிரீன் டீயை எடுத்துக் கொண்டு சென்றார்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் அப்படி தானே மக்களே ..😀😀
இனியா அந்த உருவத்தை பார்த்தவள் இதுவரை சாதாரணமாக முகமாக இருந்த அந்த நபரின் முகம் இப்பொழுது தீயில் கருகி சதையெல்லாம் தொங்கி கோரமாக காட்சியளித்தது.
அந்த உருவம் தனது உண்மையான முகத்தை அவளுக்கு காண்பித்து சத்தமாக சிரிக்க அதில் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த இனியா பயத்தில் அங்கேயே மயங்கி சாய்ந்தாள்.
அங்கே வந்த வேறொருவன் தண்ணீர்
தெளித்து அவளை எழுப்பினான் .
இனியா கண் விழித்து பார்த்தவள் அங்கே இருப்பவனை கண்டதும் முகம் மலர அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அவனோ அவளின் முதுகை நீவி விட்டவன் " அழாதே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா...? தனியா இப்படி வராதேன்னு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்... அவன்தான் உன்னைத் தொடர்ந்து வரானே..? நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறே சரி வா வீட்டுக்கு போகலாம்..."
"இல்ல நானே போய்க்கிறேன் உங்களுக்கு எதுக்கு தொந்தரவு .."என்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு கூறியவள் எழுந்து நிற்க முடியாதவளாய் மீண்டும் கீழே விழப் போக "இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என்ற மாயோன் அவளை கைத்தாங்கலாக பிடித்து நிற்க வைத்தான்.
திடீரென்று அந்த மாயோன் காணாமல் போக மீண்டும் அந்த உருவம் அவளின் முன் வந்து நின்றது .அந்த உருவத்தைக் கண்டு மீண்டும் அலறிய இனியா அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள்.
ஓட ஆரம்பித்தவள் யார் மீதோ மோதி நிற்க மறுபடியும் அந்த மாயோன் அவள் எதிரில் காட்சி தந்தான்.
"என்னை விட்டுட்டு எங்க போனீங்க நீங்க ...மறுபடியும் அந்த ஆள் வந்தான் தெரியுமா...?" என்ற இனியா அவளை அணைத்துக்கொள்ள அவனும் அணைத்தவன் அவள் முகத்தை நிமிர்த்த அந்த மாயோனை பார்த்தவள் மீண்டும் அலறியவள் அங்கிருந்து ஓடினாள்.
" என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க .."என்று அலறியவள் அங்கே குட்டையாக இருந்த நீரை கவனிக்காமல் அதில் கால் தடுக்கி கீழே விழுந்தாள்...
"இனியா எந்திரி இன்னைக்கும் ஆரம்பிச்சட்டியா ..?ஏன் இப்படி பண்ற ..."அவளின் அம்மா அவளை உலுக்க அதில் தன்னிலை அடைந்தவள் அதாவது தூக்கம் கலைந்த இனியா தன்மீது ஈரமாக இருப்பதை உணர்ந்தவள்," அம்மா என்ன இது..? இப்போ எதுக்கு என் மேல தண்ணி ஊத்தி இருக்கீங்க..."
"அடியேய் நான் ஏன்டி உன் மேல தேவையில்லாம தண்ணி ஊத்தறே... நானும் இவ்வளவு நேரமா உன்னை எழுப்பிக்கிட்டே இருக்கேன்.கத்தறியேத் தவிர கண்விழிக்க மாட்டேங்கறே...
ஏன்டி இப்படி பண்ற மறுபடியும் ஃப்ரண்ட்ஸ் கூட ஊர்சுத்தினியா...? கண்ட நேரத்தில் வெளியே போகாதே காத்து ,கருப்பு அடிச்சிடும் சொன்னா நீ கேட்கவே மாட்டியா ..?பெண்பிள்ளையா லட்சணமா இருடி .உன்னை கட்டிக்க போறவன் என்ன பாடுபடப் போறானோ தெரியலையே..."
(ஹ ஹ ஹ.... அது அவனின் தலையெழுத்து.... 😀😀)
"அச்சோ அம்மா அப்போ இதெல்லாம் கனவா ...நான் கூட உண்மையோ நினைச்சு பயந்துட்டேன் ... "என்றவள் 'அந்த மாயோன் உண்மையாகவே என் வாழ்க்கையில் இருக்கக் கூடாதா' என்று நினைத்தவள் சரி சரி நான் தூங்கறேன் .என்னை தொந்தரவு பண்ணாதே.." என்று இனியா மீண்டும் தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.
ஆனால் இனியாவின் அம்மா லக்ஷ்மியின் தூக்கம் காணாமல் போனது. 'தன் மகள் தினமும் இப்படி கனவு காண்கிறாளே ...ஏன் தெரியலையே ...'என்று பயந்தவர் தூக்கத்தை தொலைத்தார்.
லட்சுமி காலையில் எழுந்தவர் தன் கணவரை அழைத்து இரவு நடந்த விஷயத்தை கூற ,"என்ன சொல்ற லட்சுமி..."
"ஆமாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு ,இதுக்கு முன்னாடி எப்போதாவது ஒரு தடவைதான் இப்படி கனவு கண்டு அலறுவா... இப்போ அடிக்கடி இப்படி நடக்குது..."
"சரி சரி விடு லட்சுமி அவ வயசு பொண்ணு தானே ..? பேய் படம் பார்த்திருப்பா இல்லை யாராவது அந்த மாதிரி கதை சொல்லியிருப்பாங்க.. அதனாலதான் இப்படி அவளுக்கு கனவு வருது ...
நான் அவகிட்ட விசாரிக்கிறேன் இப்போ எதுவும் அவளை தொந்தரவு பண்ணாதே அவ காலேஜ்க்கு போயிட்டு வரட்டும் ..." என்றார் சிவக்குமார்.
சென்னையில் மிகப் பிரபலமான கல்லூரி... இனியா தனது இருசக்கர வாகனத்தில் தேவதை போல அங்கே சென்று இறங்கினாள். அவளுக்காக ஒரு பெரிய கூட்டமே அங்கு காத்திருந்தது.
இனிய பார்க்கிங் ஏரியாவில் தனது வண்டியை விட்டவள் வேகமாக ஓடிச் சென்று அங்கிருந்தவனின் தோளில் உரிமையாய் சாய்ந்தவள், " டேய் எனக்கு ஃநைட் மறுபடியும் அந்தக் கனவு வந்துச்சு ...எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.."
"ஏய் என்னடி சொல்ற மறுபடியுமா ..?நீ ஒன்னு பண்ணு ரௌடி பேபி ...அம்மா அடிக்கடி சொல்லுவாங்க நைட் படுக்கப் போறதுக்கு முன்னாடி சாமி கும்பிட்டு படுக்கச் சொல்வாங்க. நீ அதை இன்னைக்கு செய்து பாரு.. மறுபடியும் கனவு வந்தால் என்ன செய்யலாம்னு பார்க்கலாம் .. என் ரௌடி பேபி இதுக்கெல்லாம் பயப்படுவாளா என்ன..?
"அப்படியா சொல்றே எனக்குதான் சாமி கும்பிடுறது கஷ்டமாச்சே டா..."
என்றவள் ஹி ஹி ஹி என்று இளித்தாள்.
"அடியேய் வாலு என்னடி இப்படி பேசற மனசார மனமுருகி அந்த முருகனை வேண்டிக் கோ உனக்கு எந்த கனவும் வராது ..."
"ஓகேடா ஓகே ஓகே நீ சொல்றதே செய்யறேன் .மறுபடியும் உன் புராணத்தை ஆரம்பிச்சிடாதே,.."
"ஏய் குட்டிப்பிசாசு உனக்கு இருக்க வாய் இருக்கு பாரு ,இந்த மாதிரி வாய் பேசி தான் என் அண்ணா உன்னை திட்டிக்கிட்டே இருக்கான். உன்னால நானும் சேர்ந்து திட்டுவாங்கறேன்..."
"என்னடா இது அநியாயமா இருக்கு ,ஏன்டா உங்க அண்ணாவை நான் இதுவரை பார்த்ததுகூட கிடையாது .அவர் ஏன் என்ன திட்றார்...?"
"ஏய் பைத்தியம் அம்மா பிறந்தநாளுக்கு நீ அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்திருந்தியே அப்போ அவன் பக்கத்து ரூம்ல தான் இருந்தான். நீ பண்ண அட்டகாசத்தில் அவன் வெளியே வந்திருக்கான் ...
அப்போ தான் நீ நம்ப வானரங்கள் கூட சண்டை போட்டுட்டு இருந்தியே . அதை பார்த்ததிலிருந்து உன்னை திட்டிகிட்டே இருக்கான் ..அவனை பொறுத்தவரைக்கும் பெண் பிள்ளைங்க அமைதியா இருக்கனும் ,எதுவும் தேவை இல்லாம பேசக் கூடாது. அதே நேரத்துல அவங்க வாழ்க்கையிலே முன்னேறனும்.. நல்லா படிக்கனும் ,தைரியமா இருக்கனும் ,அப்படின்னு சொல்லிட்டே இருப்பான்..."
"ஏன்டா அபி உன் கூடப்பிறந்துட்டு அந்த சிடுமூஞ்சி ,ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ஏன்டா இப்படி இருக்கார்..."
"அதை ஏன் டி என்கிட்ட கேட்கறே.. அவங்கிட்டயே கேளு..."
"ஏன்டா டேய் எருமை .நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா..? மீ பாவம் டா.. அந்த ஸ்டிரிக்ட் ஆபிஸரை நான் பார்க்க கூட விரும்பல.. எங்கிருந்து பேசறது. ஆளை விடு சாமி..."
"இனியா அவரை இப்படி பேசாதே.. அவர் சரியாதான் சொல்றாரு அன்னைக்கு நீ ஓவரா வாய் பேசின..."என்று அங்கே வந்தாள் தீபா.
தீபா இவள் இனியா, அபிஷேக்குடன் படிப்பவள்.
தீபாவிற்கு இவர்களை பார்த்தாலே எப்பவும் பொறாமை தான்.
"ஆமாண்டா வந்துட்டாள் கார்த்திக் ராஜன் நாமத்தை சொல்லிக்கிட்டே இருக்கும் இந்த பைத்தியம்.. சரி உன்னை யார் இப்போ இங்கே அழைச்சா..." என்றான் அன்பு.
"டேய் ஓவரா பேசாதடா .அவர் சரியாதான் சொல்றாரு .நாம அன்னைக்கு பண்ணது ரொம்ப அதிகம். மத்தவங்க வீட்டுக்கு போய்ட்டு அப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண யார் தான் சும்மா இருப்பாங்க..."
"அபி இங்க பாருடா விட்டா இவ உனக்கு அண்ணியா வந்துடுவா போலிருக்கு கவனமாக இருடா ..."என்றான் பாலாஜி.
"ஏய் இரண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருங்க டா ... விடு தீபா அவங்க விளையாட்டுக்கு பேசுறாங்க கோச்சுக்காதே..." என்றான் அபிஷேக்.
"சரி விடு அபிஷேக் இவங்களைப் பத்தி எனக்கு தெரியாதா..?" என்றவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.
இனியா ,"என்னடா இவள் வேகமா ஓடுறதை பார்த்தா நம்ம ஸ்ருதி வந்துட்டு இருக்கா போல.."
"அதில் உனக்கு என்ன சந்தேகம் இனியா. நம்ம ஸ்ருதி தான் வரா.."
என்றான் பாலாஜி.
அனைவரும் தீபாவை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அங்கே வந்த ஸ்ருதி," என்னடா அந்த பிசாசு இங்க வந்துட்டு போகுது.."
"ஸ்ருதி என்ற பேய் வந்ததால அந்த பிசாசு இங்கேயிருந்து ஓடிப்போச்சு.." என்ற அன்புவை வெளுத்து வாங்கினாள் ஸ்ருதி.
"இனியா இங்க பாரு நான் சொல்றதெல்லாம் உனக்கு புரியுது தானே..?இன்னொரு நாள் நான் உனக்கு அண்ணாவை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் ...அவன் இதற்கு கண்டிப்பா ஒரு சொல்யூஷன் சொல்வான்..."
"ஓகே டா உன் அண்ணா புராணத்தை நிறுத்து போலாம் வா..."
இவர்கள் ஐவர் குழு எப்பொழுதும் எங்கே சென்றாலும் ஒன்றாக சுற்றி வருவது மட்டுமே இவர்களின் தலையாய கடமை. அதேநேரம் அனைவருமே படிப்பில் சுட்டி .
அபிஷேக் ராஜன் ,இனியா ,ஸ்ருதி ,பாலாஜி ,அன்பு இவர்கள் அனைவரும் தாங்க அந்த ஐவர் படை.
அபிஷேக் இவனுக்கு தன் நண்பர்களை யாராவது ஏதாவது சொன்னா அவர்களிடம் சண்டைக்குப் போவான் .இது கார்த்திக் ராஜனின் காதுக்கு எப்படியும் எட்டி விடும் .
கார்த்திக் ராஜனின் உயிர் நண்பன் புவனேஷ் அபிஷேக்ராஜனின் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறான் .அவன் அனைத்தையும் சொல்லி விடுவான்.
பிறகு என்னங்க இந்த ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் கார்த்திக் ராஜன் அவனுக்கு அட்வைஸ் பண்றேன்னு ஒரு வழி பண்ணிடுவான்..
இது எப்பவும் அந்த குடும்பத்தில் நடப்பது தாங்க ..இவங்க இரண்டு பேரின் நடுவில் மத்தளமாய் மாட்டிக்கிட்டு முழிப்பது கல்பனா தேவிதான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN