மூங்கில் நிலா -14

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இப்படி நாட்கள் கரைய, வனமோகினிக்கு தாலிப் பிரித்து கோர்க்க வனியின் பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
கல்யாணம்தான் திடிர்னு நடந்திருச்சு. மற்ற சடங்குகளாவது சரியாய் நடக்க வேண்டும் என்பதே அவர்கள் அவா.
வசி வனியிடம் இதைப் பற்றி பேசவும் அவர்களும் சரியென்றனர்.கூடவே திருமண விருந்தையும் சேர்த்து வைத்து விடுவதாய் திட்டம்.
வனியும் வசியோடு உற்சாகமாய் கிளம்பி விட்டாள்.வசிக்கும் சந்தோசமே.வனிக்கூடவே ஒட்டிக் கொண்டு திரியலாமே.

வனியின் வீடும் விசாலமாய் பெரிதாகவே இருந்தது.வனி ஒற்றைப் பிள்ளையாய் நின்றுவிட, அவளோடு விளையாட்டுத் தோழிகளாய் குலாம் அமைக்கவே அவளுடைய சித்தப்பாக்கள் ஆளுக்கு மூன்று மூன்று பெண் பிள்ளைகளையும் அத்தை அறிவழகி வழி மூன்று பெண் பிள்ளைகள் என வனியின் ஈடுக்கு பெற்று வைத்திருந்தனர்.

வனியோடு சேர்த்து 10 பெண் பிள்ளைகள் அந்த வீட்டையே அல்லி இராஜ்யம் செய்தனர்.படிப்பு வேலை என்று ஒவ்வொருவராய் பருவத்தில் பிரிந்து செல்ல வனியின் விஷேசத்தில் ஒன்று கூடினர். அனைவரும் வனியை பார்த்த சந்தோசத்தில் "டேய் கண்ணா வந்திட்டியா? பார்த்து எவ்ளோ வருஷங்கள் ஆச்சு? ஜோரா வளர்ந்திடியேனு " ஆளாளுக்கு அவளை மொய்த்துக் கொண்டனர்.

அவளும் "வாங்கடி எம் வஞ்சிங்களா..இந்த கண்ணணை விட்டுட்டு எல்லோரும் எஸ்கேப் ஆயிடிங்களேடி"மோகமாய் கண்ணடித்தாள்.
வனி அனைவரையும் கட்டிக் கொண்டாள். தூரத்தில் நின்று இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வசிக்கு எதுவும் புரியவில்லை.
வனியை இவர்களும் கண்ணா என்று விளிப்பதும், அவள் இவர்களை பார்த்து ஒரு ரொமான்ஸ் லுக் விடுவதும் வசிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவன் முழிப்பதைக் கண்ட அவன் மாமியார் சுமதி தான்,
"என்ன தம்பி இப்படி அசந்துட்டிங்க? இவளுங்க கொட்டத்தைப் பார்த்தா?
இவங்க பொறந்ததிலிருந்தே இப்படிதாம்பா, நமக்கு ஆண் வாரிசுகள் இல்லை. இந்த 10 வானரங்களை வெச்சு மேய்க்கவே எங்களுக்கு நேரம் போதாது. அதுவும் உன் பொண்டாட்டி இருக்காளே, ஜகத்ஜால கில்லாடி. மொத வந்து சாப்பிடுங்க மாப்பிள்ளை. அப்புறமாய் இவங்க கதைய சொல்றேன். " வசியை சாப்பிட அழைத்தார்.

வனியை அழைத்து வசிக்கு உணவு பரிமாற சொன்னார். கூடவே அவளுடைய தங்கைகள் அத்தை மகள்கள் சேர்ந்துக் கொண்டு வசியை கலாய்த்து விட்டனர். அனைவரும் கல்யாணம் ஆனவர்களே.கடைசியாய் திருமணம் முடித்தவள் வனியே. அதனாலே அனைவரும் இந்த வைபவத்திற்கு கூடி விட்டனர்.உணவிற்கு பின் வசியை அனைரும் சூழ்ந்து கொண்டனர். சிரிப்பும் கேலியுமாய் வசியை படுத்தி எடுத்தனர்.அங்கே வந்த வனியின் அம்மா கையில் அவளுடைய சிறு வயது ஆல்பம் இருந்தது. ஒவ்வொன்றாய் வசி பார்த்துக் கொண்டே வந்தான்.

குண்டு கன்னங்கள், உருட்டி விட்ட சோழிப் போல கண்கள்.சுருள் கேசம். வனி வெண்ணெய்ல செய்து வைத்த அம்முள் பேபி போல இருந்தாள். அதில் ஒரு படத்தில் வனி கண்ணனாகவும், மற்றவர்கள் கோபிகைகளாகவும் எடுத்துக் கொண்ட படம் வசியை மிகவும் கவர்ந்தது.அதைப் பற்றி அவன் மாமியாரிடம் கேட்க, அவரும்

"சின்ன வயசில் இவங்களுக்கு ராதாகிருஷ்ணா நாடகம் போடறது ரொம்ப புடிக்கும் தம்பி.

எப்பவும் கண்ணனாய் நம்ப வனிதான் இருப்பாள். மித்தவங்க எல்லோரும் கோபிகைகள் வேஷம் போடுவாளுங்க.அந்த மாய கண்ணன் என்னென்ன சேட்டை பண்ணுவானோ, அத்தனையும் வனி அழகாய் செய்வா. அழகாய் அவள் கண்களை உருட்டி மோகமாய் ஒரு பார்வை பார்ப்பாள். அவள் பொண்ணுனு மறந்து இவளுங்க எல்லாம் அவள் மேலே மோகம் ஆயுடுவாளுங்க.
கண்ணா கண்ணானு வனியை சுத்தி சுத்தி வம்பு செய்வாங்க. பார்க்கவே சேட்டையா இருக்கும்பா. அவளை யாராச்சும் கண்ணானு கூப்பிட்டாலே வனிக்கு ரொம்ப புடிக்கும்பா " அவர் கூற வசி வனியை குறும்பாய் நோக்கினான்.

வனியும் வெட்கத்தில் தலை குனிந்தாள். அதற்குள் மற்ற பெண்களின் கணவன்மார்களும் வந்து விட இடமே குதூகலமாயிற்று.வனியை தனியே பிடிப்பதற்கு கூட வசிக்கு அவகாசம் கிடைக்கல.நீண்ட காலத்திற்கு பிறகு கிடைக்கும் இந்த மாதிரி சந்தோசம் வசிக்கு ரொம்ப பிடித்திருந்தது.அது வனியின் பூர்வீக வீடு என்பதால் விசாலமாகவே கட்டி வைத்திருந்தனர்.10 பெண்களுக்கும் 10 அறைகள் என்று பிற்காலத்தில் வனி தாத்தா கட்டி வைத்தது. அனைவரும் அவரவர் அறைகளில் அடைந்துக் கொள்ள வசிக்கு வனியோடு தங்கவே ஏற்பாடு செய்திருந்தனர்.

வனியின் அறை அழகாகவே இருந்தது. ஒரு மூலையில் கலவையாய் புத்தகங்களும், ஸ்கூல்டைம் வனி வென்ற கோப்பைகளும் அணிவகுத்து நின்றிருந்தன.அவளுடைய மெடிடேஷன் கார்னர், அரை தியானத்தில் அமர்ந்த புத்தர் சிலை இவைகளைத் தாண்டி பள்ளிபருவத்தில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்தை வனி பெரிதாய் சட்டமிட்டு வைத்திருந்தது வசியை பள்ளி பருவத்தை நினைக்க வைத்தது.தன்னிச்சையாய் அவன் கைகள் அந்த படத்தை வருடிக் கொடுத்தன.அதற்குள் வனியும் அறைக்குள் வந்து விட்டாள்.வசியை பார்த்து லேசாக புன்னகையித்தாள். வசி பேச ஆரம்பித்தான்.

"இப்போதானே தெரியுதே.. உன்ன கண்ணானு கூப்பிட்டா ஏன் அம்மணி அம்பிட்டு குஷி ஆவறீகனு.
என்ன என்ன விஷமங்கள் பண்ற நீ.. அதானே ஸ்கூல்டைம் அப்படி என்னை படுத்தி எடுத்த அறந்தவால் அல்லி ராணி "
வசி கூறிக் கொண்டே சிரிக்க வனி அவனுக்கு பழிப்புக் காட்டினாள்.

"பேசாமல் வந்து படு வசி. தூக்கம் அப்பிட்டு வருது. நல்ல சாப்பிட்டேன் வேறே. இப்ப யாராச்சும் என் கால்களைப் பிடிச்சு விட்டா சுகமாய் தூங்கிடுவேன்" மெலிதாய் கொட்டாவி விட்டவாறே படுக்கையில் சாய்ந்தாள்.

"என்ன ஒரு ராஜவாழ்க்கை உனக்கு. வாடி நா புடிச்சு விடறேன் "தயக்கமே இல்லாமல் வசி வனியின் கால்களை பிடிக்கத் தொடங்கினான்.வாழைத் தண்டுகளைப் போல பளபளத்த மஞ்சள் கால்கள் வசியின் கைகளில் வெண்ணெய்யாய் வழுக்கின.
வனி வேண்டாம் என்று தடுப்பாளா என்ன? புடிச்சு விடுடா ராசா என்ற வாக்கில் உறங்கிப் போனாள்.

அப்பொழுதுதான் வனியின் கால் விரல்களில் மெட்டி இல்லாததை வசி கவனித்தான்.அவசர கதியில் அல்லவா அவளைக் கைப் பிடித்தான் அன்று. மெட்டிக்கும் மேனி அணைக்கும் கூரை புடவைக்கும் அவன்தான் அன்று வேலை வைக்கவே இல்லையே.தன்னால் முடிந்ததை சரி செய்யவே அவன் மனம் விரும்பியது.

அவன் வனமோகினியை அப்படி கட்டிக் கொள்ள அவனுக்கும் விருப்பம் இல்லையே. 17 வயதில் வனி அவள் கல்யாண கனவுகளையும் சேர்த்து தானே எழுதி வைத்திருந்தாள். ஒவ்வொரு வரிகளும் அவனுக்குத்தான் மனப்பாடம் ஆயிற்றே.
உறக்கம் மெல்ல அவனையும் அணைக்க, வனி நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு, அவளருகில் வசியும் உறங்கிப் போனான்.
நடு இரவில் பழக்க தோஷத்தில் கட்டி அணைத்து உறங்கும் உருண்டை தலையணை இல்லாத நிலையில் வனி வசிமேல் காலைப் போட்டுக் கொண்டு இறுக்கியணைத்துக் கொண்டு உறங்கினாள்.

வசிக்கு அவள் தொடுதல் உணர்வு விழிப்புணர்வைக் கொடுத்தாலும் இளம் சூடு கொண்ட அவளை அணைத்துக் கொண்டு தூங்கவே செய்தான். பல நாட்களுக்கு பிறகு இருவருக்கும் நிம்மதியான உறக்கத்தை நித்ரா தேவி வழங்கினாள்.
மறு நாள் காலையில் முதலில் விழித்த வனிக்கு வெட்கமே இல்லாமல் வசியின் வெற்று மார்பில் தூங்கியதை நினைத்து வெட்கம் பிடுங்கி தின்றது. சட்டென எழுந்து உடைகளை சரி செய்தவள், நிர்மலமாய் உறங்கும் வசியை நோக்கினாள்.

அவன் முகத்தில் அவளால் ஏற்பட்ட தழும்பை மென்மையாக வருடினாள். அவனிடமிருந்து அசைவு வருவதைக் கண்டு ஓசைப் படாமல் குளியறைக்குள் புகுந்துக் கொண்டாள். அதற்குள் வசியும் விழித்துக் கொண்டான்.வனி குளித்துவிட்டு வரும் வேளையில் அவள் கட்டிலில் மெரூன் வர்ண பட்டு புடவையும் அதற்கு தோதாய் நகைகளும் மல்லிச் சரமும் ஒரு தட்டில் வைக்கப் பட்டு அவளுக்காய் காத்துக் கொண்டிருந்தன.

வனிக்கு மிக பிடித்த வர்ணம் மெரூன் ஆகும். அதில் பட்டு புடவை கிடைக்கவே அதிகம் குஷி ஆகி விட்டாள்.
அந்த நேரத்தில் அறைக்குள் நுழைந்த வசி, அந்த தட்டை அவள் கையில் கொடுத்தான்.

"வேணிமா இது உனக்காக நான் வாங்கியது.நம்ப மேரேஜ் ரொம்ப தடாலடியா நடந்திருச்சு, அதுக்கு நானும் ஒரு காரணம் இல்ல, நமக்கு கல்யாணம் நடந்தா எப்படிலாம் நடக்கனும் நீ ஆசை ஆசையா எழுதி வெச்சது எனக்கு தெரியும்,

என்னால் கல்யாணத்தை மாற்ற முடியாது, பட் நீ ஆசைப்பட்ட புடவைய வாங்கித் தர முடியுமே. முன்னமே இந்த சாரி ஜுவேல்ஸ் எல்லாமே வாங்கிவெச்சது தான். எல்லாமே உனக்காக தான். எடுத்துக்கோடா " காதலோடு வசி நீட்டிடவும், கருகிவிட்ட காதலில் பீனிக்ஸ் பறவைப் போல அவளுடைய நினைவுகள் உயிர்த்தெழ ஆரம்பித்தன.

சிறு தலையசைப்போடு அதை வாங்கிக் கொண்டாள்.அப்படியே அவளை விட அவனுக்குத்தான் மனசு வரலை.
"டேய் கண்ணா நா உனக்கு புடவை கட்டி விடட்டுமா? அலங்காரம் பண்ணி விடட்டுமா? "வசி குழந்தைப் போல கேட்க வனி கல கலவென சிரித்தாள்.

"டேய் ராஸ்கல் இதெல்லாம் உனக்கு செய்ய வருமா? இல்ல ஸ்கூல் டைம் மாதிரி எதாவது prank பண்ணலாம்னு பார்கறியா?"
வனி கண்களை உருட்ட, வசி சிரித்தான்.

"இல்லடா பேபி, அம்மாக்கு சாரி காட்ட நான்தான் ஹெல்ப் பண்ணுவேன்.
உன்ன மாதிரி நீண்ட கூந்தல் அவங்களுக்கு, நான்தான் சில சமயங்கள் சீவி பின்னல் போடுவேன்.அம்மாவே அசந்து போய்டுவாங்க. Future லே பொண்டாட்டிக்கு சேவை பண்ண இப்போவே தயார் ஆவறியா போக்கிரினு கிண்டல் பண்ணுவாங்க " வசி சொல்ல சொல்ல வனி அடக்கமாட்டாமல் சிரித்தாள்.

"சரி சரி ஏதோ சொல்றே, நானும் நம்பறேன். மவனே ஒழுங்கா சாரி கட்டி விடல, அப்புறம் வனமோகினி, வனகாளி ஆயுடுவா பார்த்துகோ "

பத்து நிமிடத்தில் வனிக்கு அழகாய் சாரி கட்டி விட்டான் வசி. கோவில் சிலை போல வரிவடிவம் வனிக்கு.
முறையாய் பரதம் பயின்றதால் வனிக்கு உடல் வாகு அழகாய் அமைந்திருக்கும். உடையவனே அவளை உடுத்தி விட மேலும் அழகாய் தெரிந்தாள். வனியின் நீண்ட கூந்தலை வாரி தளர்வாய் பின்னலிட்டு, ஒரு பந்து மல்லிகை சரத்தையும் அவள் கூந்தலில் சூட்டினான். உரிய ஆபரணங்களும் சேர தங்கச் சிலைப் போல நின்றவளை பார்த்து வசியே மயங்கி விட்டான்.
சாதாரண நாட்களில் ஜீன்ஸ்சும் டாப்ஸ்மாய் அலைபவளை புடவையில் காணும் பொழுது அவள் பெண்மை பரிபூரணமாய் பளிச்சிடுவதை வசி கண்டான்.

வசியின் நேர்த்தியான அலங்காரம் வனிக்கும் திருப்தியளித்தது.
"டேய் கேடி எப்படிடா இப்படி? நம்பவே முடியல போ, எவ்ளோ அழகா சாரி கட்டி விட்டுருக்க. இதற்கு உன் கைக்கு தங்க காப்பு போடலாமே "அவள் உற்சாகமாய் கூற வசி இல்லாத காலரை இழுத்து விட்டுக் கொண்டான்.

" காப்பு வேணாம் கண்மணி, மாமனுக்கு நச்சுனு ஒரு கிஸ் கன்னத்தில் கொடுத்தாலே போதுமாம்" வசி குறும்பாய் கன்னத்தை நீட்ட வனியா இவனிடம் சரண் அடைவாள்? மெல்ல மெல்ல அவன் அருகில் வந்தவள், அவன் கன்னத்தை தடவுவது போல நின்று, அவன் அசந்த நேரத்தில் நறுக்கென்று அவன் இடுப்பைக் கிள்ளி விட்டு ஓடி விட்டாள்.

வசி வலியால் கத்த, அதை நின்று கேட்க அவனுடைய தேவி அங்கே இருந்தால் தானே.
"கிராதகி கழுதை வயசு ஆச்சு, இன்னும் வாலு மட்டும் அடங்குதா பாரேன்,
இவளை வெச்சி நான் குடும்பம் நடத்தி குட்டிகளை ப் பெத்த மாதிரிதான் "
வசி வாய் விட்டே புலம்ப,
அவனுடைய மற்ற சகலைகளும் அப்போதுதான் அவனை அழைத்துச் செல்ல அறைக்குள் வந்தனர்.
"விடு மச்சி இவளுங்க குசும்பே இப்படிதான். 10ம் 10தலை இராவணிகள்.
உங்களுக்கு முன்னுக்கு இந்த குடும்பத்தில் வாக்கப் பட்டு வந்தவங்க நாங்க, கூட்டமா சேர்ந்தாலுங்க நம்ம ஜோலி காலி
" சகலைகளில் ஒருவன் கலாய்க்க வசிக்கும் சிரிப்புதான்..



 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN