மூங்கில் நிலா - 16

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மேலும் பல இடங்களை சுற்றியவர்கள் அலைந்து களைத்து ஹோட்டல் திரும்பினர். இருவருக்கும் ஒரே அறைதான்.
வனி வீட்டில் வசியோடு ஒன்றாய் தங்கியதிலிருந்து வனிக்குள் இருந்த தயக்கம் பெருமளவு குறைந்து விட்டிருந்தது.
ஆகவே வசியோடு படுக்கையை பகிர்ந்து கொள்வதில் அவளுக்கு தயக்கம் இல்லை.

அதே ஹோட்டலில்தான் confrence என்பதால் மூன்று நாட்கள் கோலாலம்பூரில் கழித்தனர். அதற்குள் சில மலாய் வார்த்தைகளைக் கூட வனி கற்றுவிட்டிருந்தாள். வந்த வேலை முடிந்து விட்டிருந்ததால், வசிக்கு வனியை கூட்டிக் கொண்டு திரிய வேண்டும் என்றே தோன்றியது. அதன் படி வனியை மலாக்கா அழைத்து சென்றான். UNESCO உலக அமைப்பின் மூலம் தொன்மை நகரமாக அறிவிக்கப்படடிருந்த அம்மாநிலத்தில் போர்த்துகீசியர்களின் ஆண்ட அடையாள சின்னங்கள் மிச்சமிருந்து. பெருமளவில் வெளிநாட்டினர் கூடும் இடமாகவும் பண்டார் மலாக்கா விளங்கியது.

கடல் கடந்து தமிழன் கோலோச்சிய அவ்விடத்தின் விவரங்களை வசி கூற கூற வனி கேட்டு சிலிர்த்தாள்.
இரவில் தெருவெங்கும் மின் விளக்கில் களைக் கட்டிய ஜோன்கேர் ஸ்ட்ரீட்க்கு அழைத்து சென்றான்.

"வேணிமா உனக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும். உணவுகளின் சொர்கம்ணு இந்த ஊருக்கு ஒரு பெயரே இருக்கு.

வித விதமான சைனீஸ் மலாய் இந்திய உணவுகள் சுட சுட இங்க கிடைக்கும். அதனாலே இங்கே வெளிநாட்டவர்கள் அதிகம் வருவாங்க. கிரிஸ்மஸ் டைம் போர்த்துகிசிய வம்சாவளியினர் வீடுகளை வண்ண வண்ண விளக்குகளை வெச்சு அலங்கரிப்பாங்க. பார்க்கவே அமரிக்கையா இருக்கும் "வசி கூற கூற மின் விளக்குகளின் உபயத்தில் அந்த இடமே வித்தியாசமாயிருந்தது.

சனி ஞாயிறுகளில் அங்கே கூட்டம் அலைமோதும். அன்றும் அப்படியே. இடையில் வசிக்கு போன் அழைப்பு வர, வனி முன்னே செல்வதாய் சைகை செய்தாள். அடுத்த தெருவில் தான் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் இருந்ததால் தனியாகவே சுற்றி வர முடிவு செய்தாள். நேரம் ஆக ஆக கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது.சின்ன சந்து போல இருந்த தெருவில் கடை பரப்பியிருந்ததால் ஜனத்திரள் அதிகரிக்க அதிகரிக்க வனிக்கு மூச்சுமுட்டியது. சும்மாவே அவளுக்கு கூட்டம் ஆகாது. தலை சுற்றல் வரும். பச்சை மலை காற்றை சுவாசித்து வாழ்ந்தவளுக்கு இந்த ஜனத்திரள் ஒத்துக்கல.

தலை சுற்ற ஆரம்பித்தது,மெல்ல தடுமாறி விழ இருந்தவளை பின்னாலிருந்து தாவி அணைத்தது இரு வலிய கரங்கள்.
தொடுத்தலில் இருந்தே அது வசியென்று வனி அறிந்துக் கொண்டாள் . பின்னாலிருந்து அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன்,
"என்னடா செல்லம் என்ன பண்ணுது? ஏன் தடுமாறர" பதறியவன் தன் புறமாய் வனியை திருப்பி பிடித்தான்.
முகத்தில் முத்து முத்தாய் வியர்வை அரும்பியிருக்க வனியை பார்த்தே வசி புரிந்துக் கொண்டான்.
வனிக்கு காற்றோட்டம் தேவை என புரிந்தவன் மெல்ல ஜனத்திரளில் இருந்து வனியை பிரித்து கூட்டம் அதிகம் இல்லாத இடமாய் பார்த்து அவளை அமரவைத்தான்.

குடிக்க அவளுக்கு தண்ணீர் தந்து தன் நெஞ்சோடு அணைத்து அவளை ஆசுவாசப்படுத்தினான்.
அவள் கைப் பையிலிருந்த மூலிகை இன்ஹேலோரை நாசி அருகே வைத்து வனியை சரி செய்தான். மிகவும் களைத்திருந்த வனியைப் பார்க்கவே வசிக்கு பாவமாய் போயிற்று. ஹோட்டல் அருகில்தான் ஆனால் வனிக்கு நடக்க கூட தெம்பு இல்லை.வசி பேசவே இல்லை. இலாவகமாய் வனியை வசி தூக்கிக் கொண்டான். பூக்குவியலை போல அவன் மேலே துவண்டவளை அலுங்காமல் அறைக்கு தூக்கி வந்தான்.

குடிக்க பாலும் பிரட்டும் அறைக்கே வரவழைத்து வனிக்கு ஊட்டி விட்டான். வனிக்கும் பசிதான்.எதுவும் பேசாமல் அவன் ஊட்டியதை சாப்பிட்டாள்.உணவு உள்ளே இறங்கியதும், கொஞ்சம் தெளிந்தவளாய் தெரிந்தாள் .

"என்னடா கண்ணா நீ, உனக்கு எப்ப இருந்து இப்படி ஒரு பிரச்சனை? நான் மட்டும் கவனிக்காம இருந்திருந்தா கீழே விழுந்திருப்படா" மெல்ல அவள் தலைக்கோதி விசாரித்தான்.

"தெரியல வசி, கொஞ்சம் கொஞ்சமாய் நான் மனிதர்களை விட்டு தனிமையை நேசிக்க ஆரம்பிச்ச தருணமாய் இருக்கலாம்".

"அதிக நேரம் பூவேலில தானே நான் இருக்கேன். திடீர்னு இப்படி கும்பலில் மாட்டிகிட்டா மூச்சு முட்டுது. தலை சுத்தும். இந்த மனித கூச்சல், அதிக வெளிச்சம் எனக்கு ஆவறது இல்லை."

"ரொம்ப நாள் கழிச்சு உன் கூட வெளியே வர்றேன், எனக்கு எதும் ஆவதுணு ஒரு நம்பிக்கைதான், பட் இப்டி ஆச்சு. சாரிடா. என்னால உனக்குதான் ரொம்பவே கஷ்டம்" தயங்கி தயங்கி இயம்பியவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.
அவள் முன்னுச்சியில் இதழ் பதித்தவன்,

"வேணி உனக்கு நான் இருக்கேன்டா, நீ இப்படி இல்ல, என்னோட அந்த சிங்கக் குட்டி இப்படி இல்லையாம். எல்லாம் சரி ஆயிடும் பேபி " மேலும் அணைப்பை இறுக்கினான். வனியும் அவனை விட்டு விலகவில்லை.
உறங்குகையில் கண்டிப்பாக வனி உளறுவாள் என்று ஊகித்த வசி, அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு, கைகளை அரண் போல வைத்தே உறங்கினான்.வசியின் இதயத்துடிப்பே வனிக்கு தாலாட்டாய் கேட்க நிம்மதியாக உறங்கினாள்.

மெல்ல மெல்ல அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த பனித்திரை உடையத் தொடங்கியது அவர்கள் அறியாமலே.
இரண்டு வார மலேசியா பயணம் வனிக்கும் வசிக்கும் ஒரு வித நெருக்கத்தை தந்து விட்டிருந்தது.இப்பொழுதெல்லாம் தன்னிச்சையாகவே வனி வசியின் தேவைகளை கவனித்தாள் எனலாம்.அவனும் தான் அவ்வப்போது நண்பனாய் கணவனாய் காதலனாய் வனியின் மேல் அன்பு காட்டினான்.

இவ்வாறு நாட்கள் கழிய, ஒரு நாள் வசி வெகு நேரம் கழித்தே வீடு திரும்பினான். கழுத்து டை தளர்ந்து, கண்கள் சிவந்து, தலை கலைந்து வந்திருந்த வசி வனிக்கு புதியது.குடித்திருந்தான் போலும் நடை தள்ளாடியது. வனிக்கு கலக்கம் பாதி கோவம் பாதிணு கலந்து கட்டி நின்றது.எதுவும் பேசாமல் வசியை அவன் அறைக்கு அழைத்து சென்று படுக்க வைக்க முயன்றாள் .
அவனோ சண்டித்தனம் பண்ண, வனிக்கு பொறுமை எல்லை கடந்தது. அவளுக்கு தெரிந்து வசி மது அருந்துவது கிடையாதே.
"என்னடா இது புது பழக்கம்? இப்படி குடிச்சிட்டு அழிச்சாட்டியம் பண்றியே. அப்படி என்னதான் ஆச்சு உனக்கு? "வனி வசியை உலுக்கி விட்டாள்.

அவள் கேட்டதுதான் தாமதம், வசி வனி மடி மேலே சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டான். வனி பதறி விட்டாள்.
"என்னாச்சு மாமா உனக்கு, ஏன்டா அழுவற, சொல்லுடா " அவனை தேற்ற முயன்றாள்.

"நாளைக்கு அம்மா பர்த்டே வனி, அம்மா இறந்ததும் அன்னிக்குதான். அதுவும் என்னை பார்க்க இங்க வரணும் வந்த அப்போதான் அந்த விபத்து நடந்தது. சம்பவம் நடந்த இடத்திலே அம்மா இறந்துட்டாங்க வனி".
"என்னை பார்க்க வந்து தானே அவங்க இல்லாம போயிட்டாங்க. என்னால அந்த குற்ற உணர்ச்சியை தாங்கிக் முடியலமா. அதனாலே தான் சென்னைக்கு அப்பா கூட இருக்க கூட எனக்கு மனசு இடம் தரல.

அம்மா ஞாபகம் இங்க தானே அதிகம் இருக்கு. இங்கேயே அவங்க நினைவுகளை இறுத்தி வெச்சு வாழதான் நான் ஊட்டில இருந்தது. "

"எனக்கு அம்மா அப்புறம் நீ, ரெண்டு பேர்தான் பொக்கிஷம் மாதிரி கிடைச்சவங்க, ஏதோ ஒரு தருணத்தில் உங்க ரெண்டு பேரையும் நான் தவற விட்டிருக்கேன். அதற்கு நான் குடுத்த விலை அதிகம். நீ இப்படி இறுகிப் போக காரணம் நான்தானே? அம்மா இந்த உலகத்தை விட்டு போகவும் காரணம் நான்தானே? வலிக்குதுடா"வசி மனதில் உள்ள அனைத்து வலிகளையும் வனியிடம் கொட்டித் தீர்த்தான்.வனிக்கும் கண்களில் நீர் சுரந்தது.

"இல்ல மாமா நீங்க எந்த தப்பும் பண்ணல, அம்மாக்கு அவ்ளோதான் ஆயுசு, ஏஞ்சல் மாதிரி நம்ம கூடவே அவங்க இருப்பாங்க மாமா.
நானும் உங்க கூடவே இருப்பேன் மாமா".வசியை கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள்.
பின் ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு, வசியின் ஆடைகளை மாற்றிப் படுக்க வைத்தாள்.

அந்த நிலையிலும் வசியின் கைகள் வனியின் கைகளைப் பற்றியிருந்தது.
"என்ன விட்டு போயிடாத பேபி, திரும்ப உன்னை தொலைக்க என்னால முடியாதுடி"வசி உளற,

"இல்ல மாமா நான் இங்கதான் இருக்கேன். உங்க கூடத்தான் இருக்கேன் ", அவன் தலைக் கோதி தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.
ஒருவாறு மனம் அமைதியடைந்து வசி வனி மடியிலே சிறு பிள்ளை போல உறங்கிப்போனான். வனியும் அவன் தலைக் கோதியபடியே உறங்கிவிட்டிருந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN