“கவின், அந்த டிரெஸ்ஸிங் டேபிளை பெட் ரூமில் வைக்க சொல்லு...”
“ஆஹ்... மெல்ல... மெல்ல... கண்ணாடி தொட்டி உடைஞ்சிட போகுது... இதோ இங்கே ஜன்னலை பார்த்த மாதிரி அந்த மீன் தொட்டியை வைங்க...”
“டேய் தேவா... ஊஞ்சல் எடுத்துட்டு வராங்க பாரு... நான் சொன்ன மாதிரி பின் புற தோட்டத்தை ரசிக்கிற மாதிரி லானில் மாட்ட சொல்லு... அதன் பக்கத்திலே இந்த லவ் பேர்ட்ஸ் கூண்டையும் கட்ட சொல்லு...” இப்படியாக சுற்றி சுழன்று... தன் கம்பெனியிலிருந்து வந்து வேலைகளை செய்து கொண்டிருந்த வேலையாட்களுக்கு... அதை சீராக எங்கெங்கே எப்படி
எப்படி வைக்க வேண்டும் என்று விதுனதிபாகரன் உத்தரவிட்டுக் கொண்டிருக்க...
மகன் பரபரப்பாய் இங்கும் அங்கும் ஓடி வேலை வாங்குவதை வலது கையால் கன்னத்தை தாங்கிய படி... உணவு மேஜையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் தமிழரசி.
இன்று காலையில் தான் புதுவீட்டிற்கு பால் காய்ச்சி குடித்தனம் வந்தார்கள். இதை பங்களா என்றும் சொல்ல முடியாது... அதற்காக நடுத்தர மக்கள் வசிக்கும் சாதாரணமான வீடு என்றும் சொல்ல இயலாது. இதை மேல்தட்டினர் வசிக்கும் இல்லம் என்று சொல்லலாம். ஆனால் தமிழரசியைப் பொறுத்தவரை இது பெரிய மாளிகை...
புதிதாய் வீடு தேடும்போதே உறுதியாய் மகன் சொல்லியிருந்தான்... அனைவரும் கூட்டுக் குடும்பமாய் ஒன்றாய்... இருக்க வேண்டும் என்று. அதன் முடிவில் தான் வீடும் தேடினான். தான் இவ்வளவு சொல்லியும் மருமகளை அழைத்து வரும் முடிவில் மகன் இருக்கிறானே என்பதை அறிந்த தமிழரசி...
இறுதியாக உபயோகித்தது... “இங்க பாருடா திபா.. நான் வயசு வந்த பிள்ளைங்களை வச்சிகிட்டு இருக்கேன். தன்யா... நீ... நாம... இப்படி எல்லாரும் இருக்கப் போறது என்னமோ ஒரே வீட்டுல தான். என் பிள்ளைகளுக்கு மனசு இப்படி அப்படி அலைபாயும்... இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. நான் சொல்றதைக் கேளு... உன் தங்கைகளுக்கு கல்யாணமாகும் வரைக்கும் தன்யாவை இங்க அழைச்சிட்டு வராத. இவ்வளவு நாள் இருந்தது இருந்துட்டா... இன்னும் கொஞ்ச நாள் அவ அவங்க அம்மா வீட்டுல இருக்கட்டும்... எல்லா கடமையும் நீ முடித்த பிறகு வேணும்னா பார்த்துக்கலாம்...” என்று தமிழரசி வெளிப்படையாய் மருமகள் வருவதைத் தடுக்க... அதற்கெல்லாம் அசருபவனா விதுனதிபாகரன்...
“ஆஹ்... மெல்ல... மெல்ல... கண்ணாடி தொட்டி உடைஞ்சிட போகுது... இதோ இங்கே ஜன்னலை பார்த்த மாதிரி அந்த மீன் தொட்டியை வைங்க...”
“டேய் தேவா... ஊஞ்சல் எடுத்துட்டு வராங்க பாரு... நான் சொன்ன மாதிரி பின் புற தோட்டத்தை ரசிக்கிற மாதிரி லானில் மாட்ட சொல்லு... அதன் பக்கத்திலே இந்த லவ் பேர்ட்ஸ் கூண்டையும் கட்ட சொல்லு...” இப்படியாக சுற்றி சுழன்று... தன் கம்பெனியிலிருந்து வந்து வேலைகளை செய்து கொண்டிருந்த வேலையாட்களுக்கு... அதை சீராக எங்கெங்கே எப்படி
எப்படி வைக்க வேண்டும் என்று விதுனதிபாகரன் உத்தரவிட்டுக் கொண்டிருக்க...
மகன் பரபரப்பாய் இங்கும் அங்கும் ஓடி வேலை வாங்குவதை வலது கையால் கன்னத்தை தாங்கிய படி... உணவு மேஜையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் தமிழரசி.
இன்று காலையில் தான் புதுவீட்டிற்கு பால் காய்ச்சி குடித்தனம் வந்தார்கள். இதை பங்களா என்றும் சொல்ல முடியாது... அதற்காக நடுத்தர மக்கள் வசிக்கும் சாதாரணமான வீடு என்றும் சொல்ல இயலாது. இதை மேல்தட்டினர் வசிக்கும் இல்லம் என்று சொல்லலாம். ஆனால் தமிழரசியைப் பொறுத்தவரை இது பெரிய மாளிகை...
புதிதாய் வீடு தேடும்போதே உறுதியாய் மகன் சொல்லியிருந்தான்... அனைவரும் கூட்டுக் குடும்பமாய் ஒன்றாய்... இருக்க வேண்டும் என்று. அதன் முடிவில் தான் வீடும் தேடினான். தான் இவ்வளவு சொல்லியும் மருமகளை அழைத்து வரும் முடிவில் மகன் இருக்கிறானே என்பதை அறிந்த தமிழரசி...
இறுதியாக உபயோகித்தது... “இங்க பாருடா திபா.. நான் வயசு வந்த பிள்ளைங்களை வச்சிகிட்டு இருக்கேன். தன்யா... நீ... நாம... இப்படி எல்லாரும் இருக்கப் போறது என்னமோ ஒரே வீட்டுல தான். என் பிள்ளைகளுக்கு மனசு இப்படி அப்படி அலைபாயும்... இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. நான் சொல்றதைக் கேளு... உன் தங்கைகளுக்கு கல்யாணமாகும் வரைக்கும் தன்யாவை இங்க அழைச்சிட்டு வராத. இவ்வளவு நாள் இருந்தது இருந்துட்டா... இன்னும் கொஞ்ச நாள் அவ அவங்க அம்மா வீட்டுல இருக்கட்டும்... எல்லா கடமையும் நீ முடித்த பிறகு வேணும்னா பார்த்துக்கலாம்...” என்று தமிழரசி வெளிப்படையாய் மருமகள் வருவதைத் தடுக்க... அதற்கெல்லாம் அசருபவனா விதுனதிபாகரன்...
இதுவரை மனைவியை விட்டுப் பிரிந்து இருந்ததே தவறு என்று நினைப்பவன். திரும்பவும் அந்த தவறை செய்வானா என்ன... யார் என்ன சொன்னாலும்... ஏன் அவன் மனைவி தன்யாவே மறுத்தாலும்.. அவனின் குடும்பம் என்ற அங்கம் மனைவியோடு தானே. அதனால் வேறு ஒரு ஏற்பாட்டை செய்திருந்தான் இவன்.
இருந்தாலும் அன்னையின் வார்த்தையைக் கேட்டு மனம் ரணமானது என்னமோ உண்மை... பின்னே அவனுக்கு மட்டும் தங்கைகள் வாழ்க்கை மேல் அக்கறை இல்லையா... 'அப்படி என்ன நானும் தன்யாவும்... ஒட்டி உறவாடி இழைய போகிறோம்... இல்லை ஓடிப் பிடித்துத் தான் விளையாடிட போறோமா... குடும்பத்தில் மூத்தவன் என்ற முறையில் எனக்கு மட்டும் நாகரீகம் தெரியாத என்ன? அதிலும் நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் தங்கைகள் வாழ்வு பாழா போகும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்'...
இப்படி எல்லாம் தன்னுள் வாதிட்டவனுக்கு... அன்னையின் மேல் கோபம் தான் எழுந்தது. ஆனால் அதை இப்போது வெளியிட்டால் அன்னையின் பிடிவாதம் இன்னும் அதிகமாகும் என்பதை உணர்ந்தவன்... ஏதும் வாதிடாமல் வீட்டை மாற்றிக் கொண்டான். வேறு வழியில்லாமல் அரை மனதாய் கூடவே இங்கு வந்து விட்டார் தமிழரசி.
அதுவும் இல்லாமல் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகன், படித்து... வெளிநாட்டு வேலைக்குச் சென்று... கை நிறைய சம்பாதித்து... இன்று வீட்டிற்காக செய்யும் முதல் செலவுகள் இவைகள் என்பது அவர் அறிந்ததே. கூட, மகள் சித்ரா சொன்ன போதனைகள் வேறு இன்றும் தமிழரசியின் காதுகளில் ஒலித்துக் கொண்டு தான் இருந்தது.
“ம்மா... நீ கஷ்டப்பட்டு அண்ணனை படிக்க வைச்சி வெளிநாடு எல்லாம் அனுப்பின... அண்ணனும் இப்ப சம்பாத்தித்து பணங்காசு… வீடு... காருனு நல்ல வசதியா இருக்கு. அதை எல்லாம் நீ அனுபவிக்காம எவளோ ஒருத்தி மருமக என்ற பெயர்ல சுகமா அனுப்பவிக்கணுமா... அது எப்படிம்மா நாம விட்டுட முடியும்?... முதல்ல அண்ணன் சொல்றதுக்கு எல்லாம் ஆமாம் சாமி போட்டு அவர் வழிக்கு நீ போ... பிறகு அண்ணன் கிட்டயிருந்து அவளை எப்படி பிரிக்கணுமோ அப்படி அந்த ராங்கிக்காரி தன்யாவை பிரிச்சிடலாம்.... என்ன சொல்ற?” இப்படி எல்லாம் தாயை உருவேற்றி தான் புது வீட்டுக்கு வர சம்மதிக்க வைத்தாள் சித்ரா.
மகள் சொன்னதைக் கேட்டு ஏதோ ஒழிந்து போகுது என்று தான் தமிழரசியும் நினைத்திருந்தார். ஆனால் இன்று மகன் தன் மனைவிக்காகப் பார்த்துப் பார்த்து செய்வதை எல்லாம் கண்டவருக்கு காதில் புகை வராத குறை தான். பின்னே... அவர் மகன் மனைவி என்ற பெயரில் யாரோ ஒருத்திக்கு இல்ல செய்கிறான்... தாங்குமா தாய் உள்ளம்...
“திபா... என்ன டா இது... இப்படி காசை எல்லாம் கரியாக்கி... பொருளா வாங்கி குவிச்சிருக்க. ஏன்... அந்த பட்டத்து மகாராணி இத்தனை வசதிகள் இல்லனா இங்க வந்து வாழா மாட்டாளாமா.... நம்ப குடும்ப நிலவரம் தெரிந்து தான டா மருமகளா வந்தா... பின்ன எதுக்கு இந்த ராங்கித்தனம்...” தமிழரசி மனம் பொறுக்காமல் கேட்டு விட
வேலையாட்களை ஒரு பார்வை பார்த்த விதுனதிபாகரன்... தாயை நெருங்கி, “இப்படி எல்லோரும் சூழ இருக்க... பேசுகிற பேச்சா மா இது? இது சரியில்ல மா. தன்யா... உங்க மருமக... என் மனைவி... என்னமோ அவளை யாரோ மாதிரி பேசுறிங்க... அவ இந்த வசதிகள் எதையும் கேட்கல... ஒரு கணவனா நான் தான் இதையெல்லாம் என் மனைவிக்கு செய்றேன்...” என்று இவன் தாழ்ந்த குரலில் விளக்க
“க்கும்... கணவனாம் கணவன்.... மனைவி என்ற எண்ணம் முதலில் அவளுக்கு இருக்கணும் டா... ஏன் டா திபா... உனக்கு கணவன் என்ற பதவி மட்டும் தான் இருக்கா...” அதாவது நாங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரிய மாட்டோமா என்பது போல் தமிழரசி பேச்சை வளர்க்க
அதில் கோபமுற்றவன் தாய்க்கு பதில் தர எத்தனித்த நேரம்.. “அண்ணாஆஆஆ....” என்ற அழைப்புடனும்... ஆர்ப்பாட்டத்துடனும் ஓடி வந்த குலமதியும்... தவமதியும்.... வந்த வேகத்தில் ஆளுக்கொரு புறமாய் அவன் தோளை பற்றிக் கொண்டு.... அண்ணனுடன் வட்டமடிக்க...
அதில் “ஹேய்... என்ன... மெல்ல மெல்ல....” என்று தமையனின் குரலும் ஆர்ப்பாட்டமாய் ஒலித்தது...
சலுகையாய் அண்ணனின் தோளில் சாய்ந்து கொண்ட இருவரும் ஒரு சேர ஒரே குரலில் “என் செல்ல அண்ணா... இந்த வீடு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... அதிலும் எங்களுக்காக நீ வாங்கி தந்திருக்கிற கட்டில் மெத்தை... பீரோ... டிரெஸ்ஸிங் டேபிள்... மீன் தொட்டி.... ஊஞ்சல்.... லவ் பேர்ட்ஸ் இன்னும் இன்னும் எல்லாமே சூப்பர் ணா....” என்று இருவரும் மனமுவந்து சொல்ல
“நிஜமாவே உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று இவன் அன்பாய் கேட்க
“ம்ம்ம்ம்...” என்று குதித்த இருவரும் “எல்லாமே ண்ணா.. இந்த வீடு கூட பிடிச்சிருக்கு...” என்று சொன்ன குலமதி.... அங்கிருந்த மீன் தொட்டியைப் பார்த்து விட்டு...
“ஹேய் தவமதி இங்க பாரேன்... மேலே நம்ம அறையில் இருக்கிற மாதிரி இங்கையும் மீன் தொட்டி... அட ஊஞ்சல் கூட டி...” என்று இவள் தவமதியை பேச்சில் இழுக்க
“வாவ்! ஆமா டி...” என்ற தவமதி தமையனிடம், “அண்ணா... என்ன ணா இது... மேல் வீட்டுக்கும் கீழ் வீட்டுக்கும் ஒரே மாதிரி எல்லா பொருளும் வாங்கி இருக்க... ஏன் ணா?...” என்று கேட்க
“எதுக்கா? அட மக்கு புள்ள... மேலே, கீழ... இரண்டிலுமே நாம் தான் தங்க போறோம்... கீழ நானும் உன் அண்ணியும் இருக்க... மேலே அம்மாவும் நீங்களும் இருக்கப் போறீங்க... அப்போ இரண்டு இடத்துக்கும் பொருட்கள் வேணுமில்ல... அதான்...” என்ன தான் இவன் தங்கைகளுக்கு விளக்கம் சொன்னாலும்... அவனின் பார்வையோ தாயிடம் தான் இருந்தது. அதாவது உங்க கேள்விக்கு பதில் கிடைத்ததா என்பதாக இருந்தது.
தாய் அன்று அப்படி ஒரு வார்த்தைகளை உதிர்க்கும் போதே... விதுனதிபாகரன் முடிவு செய்து விட்டான். அவனால் தங்கைகளையும் விட முடியாது... மனைவியையும் விட முடியாது என்று. அதனால் தான் மேலே தாய் தங்கைகள் வசிக்க... கீழே தாங்கள் வசிக்க என்று முடிவு செய்து... அதற்கு தோதாய் கிடைத்த இவ்வீட்டுக்கும் குடி வந்து விட்டான்.
நான் ஒண்ணும் என் தங்கைகளை விடவில்லை என்ற பதிலே அவன் பார்வையில் தேங்கியிருக்க... அதையெல்லாம் தமிழரசி படித்தாலும்... கண்டு கொள்ளவில்லை.
மாறாக, “ஹூம்...” என்று பெருமூச்சை வெளியிட்டவர்... “என்னத்த சொல்ல... நான் இவ்வளவு சொல்லியும் தன்யாவை அழைச்சிட்டு வரன்னு சொல்ற... என்னமோ போ... மூணு பொட்ட பிள்ளைகளை நான் வச்சிட்டு இருக்கேன். அதிலும் வயதுக்கு வந்த பிள்ளைகளுக்கு... எப்ப என்ன ஆகும்ன்னு நானே வயித்திலே நெருப்பை கட்டிட்டு இருக்கன். இதிலே இவன் பொண்டாட்டியோட ஒரே வீட்டில் இருக்கன்றான். என்னமோ... ஆத்தா மகமாயி... நீ தான் என் குடும்பத்தையும் என் மகள்களையும் காப்பாத்தணும்...” என்று அன்று படித்த அந்த பாட்டையே திரும்பப் படித்து தன் அதிருப்தியைக் காட்டிய தமிழரசி…
இறுதியாய், “இங்க வந்து ஏன் டி என் வாய் பார்த்துட்டு இருக்கீங்க... போங்க போங்க.. மேலே போய்... வாங்கியிருக்கற பொருளை எல்லாம் அது அது இடத்திலே ஒழுங்கா அடுக்கறாங்களா பாருங்க...” என்று பெரும் குரலெடுத்து மகள்களை விரட்டியவர்... பின் மகனுக்கு மட்டும் கேட்கும் படி “அங்க தங்கைகளை அம்போன்னு விட்டுட்டு... இங்க பொண்டாட்டிக்காக பார்த்துப் பார்த்து அடுக்குறான். ஏதாவது கேட்டா பாசம்... பாயாசம்னு பொங்குவான்...” இப்படியாக சொல் அம்பை தாய் வீசி விட்டுச் செல்ல... துடித்து தான் போனான் மகன் .
அவனும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்... எல்லா விஷயத்திலும் நல்லதோர் குணவதியாய் நடக்கும் தாயார்... மருமகள் என்ற சொல்லில் மட்டும் மாறி விடுகிறாரே... அதிலும் தன்யாவை அறவே வேண்டாம் என்று தான் சொல்கிறார். இந்த வீட்டிற்கு குடி வருவதற்குள்... தமிழரசி ஆயிரத்தெட்டு முட்டுக்கட்டைகளை போட்டு விட்டார்.
தான் இப்படி எல்லாம் தன் தாயிடம்... இடி பட்டு பேச்சு வாங்கி அனைத்தும் செய்ய.... ஒரு மனைவியாய் இன்று பால் காய்ச்சும் வைபோகத்துக்கு கூட வரவில்லை அவள். மனையாளும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவேண்டும் என்பது தான் இவனின் விருப்பமும் கூட. அதையே இவன் வல்லவனிடம் சொல்லி... மனைவியை அனுப்பச் சொல்ல... அவளோ, “வீடு பால் காய்ச்சுறதுனா... அவருக்கு நிறைய வேலை இருக்கும் அங்கிள். அப்ப அவர் என்ன கவனிப்பாரா... இல்ல வீட்டை கவனிப்பாரா... அதனால அவங்க குடி போன பிறகே நான் வீட்டுக்கு போய்க்கிறேன்...” என்று மறுத்து விட்டாள். ஏனோ எல்லா விஷயத்திலும் தழைந்து போகும் குணம் பெற்ற தன்யரித்விகாவால்.... தன் கணவனின் விஷயத்தில் மட்டும் தழைந்து போக அவளாலேயே முடியவில்லை. அவளின் இயல்பையையும் மீறி தான் செயல்படுகிறாள்.... அதன் விளைவே தற்போதைய அவளின் விவாகரத்து பத்திரம்.
இரண்டு தினங்கள் சென்று இன்று தன்யா கணவன் வீட்டிற்குச் செல்ல இருக்கிறாள். அவளை அழைத்துச் செல்ல கணவன் வராததால்... தந்தை மகிழ்வரதனே மகளை அழைத்துச் செல்வது என்று முதலில் முடிவாக... ஆனால் அந்த முடிவிலும் தற்போது மாற்றம் வந்துள்ளது. அதாவது கணவன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வருகிறேன் என்று சொன்ன தந்தையும் வர இயலாமல் போக...
இதோ தனி மனுஷியாய்... கணவன் வீட்டிற்குச் செல்ல தயாராகி விட்டாள் தன்யா. அவள் அப்படி தனியே செல்வதைக் காண வக்கீல் வல்லவனுக்கு தான் மனது கேட்கவில்லை. உடனே தன்யாவை கைப்பேசியில் அழைத்தவர், “தன்யா... உன் கணவரால் வர முடியாதுன்னு முன்பே சொன்னதால் தான்... வரதன் உன்னை அழைச்சிட்டு போறதா சொன்னான்... இப்போ அவனும் கம்பெனி வேலை சம்மந்தமா வர முடியாத சூழ்நிலை ஆகிடுச்சு. அதற்காக நீ தனியா போகணுமா... ஒரு இரண்டு மணி நேரம் பொறுத்திரு... நான் வந்து உன்னை அழைச்சிட்டு போறன்...” என்று பரிவாய் சொல்ல
“வேண்டாம் அங்கிள்... நான் கிளம்பறேன். நான் என்ன தனியாவா போக போறன்... அதான் டிரைவர் தாத்தா இருக்காரே... அவர் என்னை அழைச்சிட்டு போவார். உங்களுக்கு சிரமம் வேணாம் அங்கிள்...” இவள் இதமாய் மறுக்க
“இதில் என்ன சிரமம் தன்யா... நான்...”
அவரின் வார்த்தைகளை இடைவெட்டியவள், “அங்கிள் இன்னும் நான் நோயாளி இல்ல. ப்ளீஸ்... என்னை தனியா விடுங்க...” என்று இவள் கெஞ்சாத குறையாய் சொல்ல... அதை அரை மனதாய் ஏற்றார் அவர்.
முறைப்படி கணவன் அல்லது தந்தையாவது இவளை அழைத்துச் செல்ல வேண்டும். இருவரும் வரவில்லை... இவளாவது என்னை விட உங்கள் இருவருக்கும் உங்கள் வேலைகள் தான் முக்கியமா என்று சண்டையாவது போட்டிருக்கணும். எதுவும் அற்று... கணவனுக்கு கொடுத்த வாக்குக்காக... இதோ தனியாக கிளம்பிவிட்டாள் பெண்ணவள்...