“என்ன டி... சொல்ற... அப்போ நீ தனியாவா வந்த!?” என்று அதிர்ச்சியுடன் கேட்கும்போதே தன்யாவுக்குப் புரிந்து விட்டது கணவன் தன்னை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை என்று... அதுவே பெண்ணவளின் மனதிற்கு சற்றே இதத்தைத் தர.. கூடவே, ‘இதில் என்ன இருக்கு... நான் எங்கும் தனியா தானே போவேன்... இதென்ன எனக்குப் புதுசா?’ என்று எண்ணவும் வைத்தது.
ஆனால் விதுனதிபாகரன் அப்படி நினைக்கவில்லை. அவனுடைய தங்கைகள் எங்கு சென்றாலும்... அதற்குரிய பாதுகாப்புடன் தான் அவர்களை அனுப்பி வைப்பான். எங்கும் யாரையும் தனியாக விட மாட்டான். அப்படி இருக்க, இன்று முதல் முறையாக அவனுடைய மனைவி தனியாக வந்திருக்கிறாள் என்றால் இவனுக்கு எப்படி இருக்கும்... கூடவே, ‘அப்போ இவ என்னைத் தேடவே இல்லையா?’ என்பதே ஆண்மகனுள் இன்னும் கோபத்தைப் படர வைக்க... அதுவே தன்னவளை உறுத்து விழிக்கவும் வைத்தது.
அதையெல்லாம் கண்டு நடுங்க பெண்ணவள் என்ன பழைய தன்யரித்விகா வா... அவளும் கை வேலையில் கவனமாக இருந்தபடி “ஆமாம்” என்று தலையசைக்க...
“என் கிட்ட சொல்லியிருக்கலாம் இல்ல?” இவன் உறும
அங்கு பெண்ணவளுக்கும் கோபமோ... அதில் ஒரு வித வேகத்துடன் கணவன் புறம் திரும்பியவள், “நான் எப்ப வரன்னு நீங்க என்னை அழைச்சி கேட்டிங்களா... இல்ல என்ன அழைத்து வரேனாவது சொன்னீங்களா... நானா தான் வந்தேன்… வீட்டுக்கு வந்த பிறகாவது நீங்க இங்க இருந்திருக்கலாம். முதல் முறையாக உங்க வீட்டுக்கு வரேன், மருமகளா இல்ல… யாரோ சொந்தகாரங்க வீடு போல வந்தேன். வந்த பிறகு எப்ப வந்தன்னும் நீங்க கேட்கல… atleast உங்க தங்கைகளை அழைத்தாவது நான் வந்துட்டனானு விசாரிச்சிங்களா... எல்லாத்துக்கும் மேல உங்க நம்பர் என் கிட்ட இல்லை சாமி… போதுமா... வந்தவளை ஏன் வந்த என்ற மாதிரியே... குறுக்கு விசாரணை செய்ய வேண்டியது” என்று பொரிந்தவள் கடைசி வாக்கியத்தை மட்டும் தன்னுள் முணுமுணுத்தபடி.. விழிகளை ஒரு நொடி மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு... “இங்க பாருங்க… இதை எதையும் நான் கேட்கல... இனியும் கேட்க மாட்டேன்... நமக்குள்ள நடந்தது... என்னைப் பொறுத்த வரை பொம்மை கல்யாணம்... உங்களைப் பொறுத்த வரை பிடித்தமில்லாத திருமணம்... நமக்கான இன்றைய உறவே விவாகரத்து வரை தான்... நீங்க வர சொன்னீங்க நான் வந்தன் நாளைக்கு போக சொன்னா நான் போய்டுவன்... அதுவரை எனக்கு சில கடமைகள் இருக்கு அவ்வளவு தான்...” அதாவது உங்களுக்கு இல்லாத கடமை எனக்கு இருக்கு என்பதாக அதே அறிவிப்பு குரலில் சொன்னவள்... திரும்ப எத்தனிக்க.. பாவம் அதை அவளால் செயல்படுத்த தான் முடியவில்லை.
ஏனென்றால்... அப்படி ஒரு ஆழ்ந்த அணைப்பில் கணவனின் கைப்பிடியில் சிக்கியிருந்தாள் பெண்ணவள். பிடித்தம் இல்லையாமே… அந்த வார்த்தையே ஆண்மகனுள் கோபத்தை எழ செய்ய மனைவியை இழுத்து அணைத்திருந்தான் விதுனதிபாகரன்.
அதை விட, 'பொம்மை கல்யாணம் என்று சொல்லி விட்டாளே… எங்களுக்குள் நடந்ததா பொம்மை கல்யாணம்?'… என்று மனதிற்குள் பொருமியவன்..
“எது டி பொம்மை கல்யாணம்… எது…” ஆண்மகன் குரல் உச்சஸ்தானியியில் ஒலிக்க.. கோபத்தில் அவன் உடல் இறுகியது… கூடவே அவன் அணைப்பும். ஆண்... பெண்... என்ற உறவில் இவர்கள் இருவருக்குமே... இது முதல் அணைப்பு... அதிலும் திருமணத்திற்குப் பின் இத்தனை ஆண்டு இடைவேளைக்குப் பின் இருவருக்கும் கிடைத்த முதல் சந்திப்பில் நேர்ந்த ஸ்பரிச நிகழ்வு. இதில் கணவன்... மனைவி இருவரும் சற்றே தடுமாறி தான் போனார்கள்.
தன் மனதிற்கு இனியவள் என்ற நிலையில் ஆண் தடுமாறி நிற்க.... இவர் தன்னவர் என்ற நிலையில் பெண் தடுமாறி நிற்க... பேச்சற்று காமம் அல்லாமல்.. ஏன்... காதலே அல்லாமல்... அணைத்த இந்த அணைப்பு... இருவரையும் தத்தம் வெறுமையை விரட்டியது என்றால் அது தான் நிதர்சனம். இருவரின் இதய துடிப்பைத் தவிர அங்கு வேறு ஓசைகள் இல்லை.
ஆண்மகன் தன் கரங்களை மனைவியின் முதுகில் ஆதரவாய் படர விட்டு இன்னும் அணைப்பை இறுக்க... கணவன் அணைப்பு தந்த மயக்கத்தில்... பெண்ணவளின் கரங்களும் உயர்ந்து தன்னவனின் முதுகில் படர்ந்தது. இதில் விந்தையிலும் விந்தை... இவ்வணைப்பில் ஆண்மகனை விட... பெண்ணவளின் தேகம் தான் சிலிர்த்து அடங்கியது. அதைக் கண்டு கொண்ட மன்னவனோ... தன் நெஞ்சில் பதிந்த தன்னவளின் முகம் நிமிர்த்தி... அவளின் காதல் மொழிகளை முகத்தில் காண விழைய... அங்கு விழி மூடியிருந்த பெண்ணவளின் விழிகளோ கண்ணீரை சிந்த ஆயத்தமாவது போல்... கருமணிகள் உருண்டோட அவளின் உதடுகளோ மெல்லிய நடுக்கத்தைத் தத்து எடுத்திருந்தது. மொத்தத்தில் தன்யரித்விகா, உணர்வுகளின் குவியலாய்… வெடித்து சிதற துடிக்கும் எரிமலையாய் இருக்க... அதைப் படித்தவனோ... தன் முத்தத்தால் மனைவியை ஆராதிக்க நினைத்தவன் உதடு பதிக்க நினைத்தது என்னமோ தன்னவளின் இதழில் தான்... ஆனால் அதை செய்ய விடாமல் அவனுள் தயக்கம் மேலிடவும்.... நானா தயங்குவது என்று தன்னுள் கேட்டுக் கொண்டவனின் மனமோ... தன்னுடைய செயல்கள் எதுவும் தன்னவளை காயப்படுத்தி விடக் கூடாது... தன்னுடைய பிம்பம்... இனி தன் மனைவியின் மனதில் தவறாய் பதிய கூடாது என்று நினைக்க... விளைவு மெல்லிய... மிக மெல்லிய இதழ் ஒற்றலை... தன்னவளின் பிறை நெற்றியில் நேசத்துடன் ஆண்மகன் பதிக்க... அவன் நேசத்தை உணரும் நிலையில் தான் பெண்ணவள் இல்லையே. கணவன் முத்தத்தில் தன் நிலை உணர்ந்து ஒரு வேகத்துடன் மனைவி விலகவும்... இவன், “ரிது...” என்ற அழைப்புடன் தன்னவளின் கரத்தைப் பற்ற முயல... கணவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை பெண்ணவளும் சிறிது கேட்டிருக்கலாம்...
இப்படி கணவனோடு ஒன்றிவிட்டோமே... என்ற கோபத்தில், “உங்களுக்கு மட்டும் இது பிடித்தம் இல்லாத திருமணம் இல்ல... எனக்கும் தான்... சோ விருப்பம் இல்லாமல் இணைந்த நம்ம பந்தத்தில்... அதாவது நம்ம வாழ்வில்... இனி இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்...” என்று கோபம் மேலிட பேசியவள்.. பின் ஓட்டமும் நடையுமாய் விருந்தினர் அறை நோக்கி விரைய...
தன்னவளின் வார்த்தைகளில்... ஆண்மகனின் முகமோ ஒரு வித தீவிரத்தை தத்தெடுத்தது... பாவம் பெண்ணவளும் அதைக் காணவில்லை.
மனைவியின் நோக்கம் புரிந்தவனாக... அவளுக்கு முன்பாக விரைந்து அவ்வறையின் வாசலில் தன்னவளை மறித்தார் போல் நின்றவனோ, “நம்ம அறை அங்கு இருக்கு ரிது..." என்று தங்கள் அறையை இவன் சுட்டு விரலால் சுட்டிக் காட்ட

‘இவ்வளவு சொல்லியும்... இப்படி சொல்றாரே’ என்ற எண்ணத்தில் பெண்ணவள் உடல் நடுங்க... முகம் சிவந்தது கோபத்தினால் தான். ‘எல்லாம் தான் உருகி நின்றதால் தானே?’ என்ற எண்ணத்தில்,
அதனால் “ஒரு வருஷம் நான் உங்க வீட்ல இருப்பேன் என்பது தான் டீல்...” இவள் தங்களுடனான உறவை நினைவுபடுத்த
“தப்பு தப்பு... என் மனைவியா... என் வாழ்வில்.. என் கூட என் அறையில் நீ இருக்கனும் என்பது தான் என் டீல்...” இவன் சாவகாசமாய் திருத்த
கோபத்தில் “நான் அங்கு வரல...” பெண்ணவள் பிடிவாதம் காக்க...
அடுத்த நொடி, “வா டி என் முயல் குட்டி” என்றவன் மனைவியைக் கையில் ஏந்தி.. தங்கள் அறை நோக்கி நடையைப் போட... அதில் இவள் சற்றே திமிர...
ஆனால் கணவனின் பிடி இறுக்கமாக இருக்கவும், “விதுன்... விடுங்க...” என்று பெண்ணவள் கெஞ்சவும்... ஒரு நொடி மனைவியின் அழைப்பில் இன்பமாய் அதிர்ந்தவனோ பின் தன்னவளைப் பூ போல் கட்டிலில் சாய்க்க.. பெண்ணவளுக்கோ இயலாமையில் கண்ணீர் உதயமானது. கதவை அடைத்தவன்... விளக்கை அணைத்து விட்டு... மனைவியின் பக்கத்தில் படுத்து பெண்வளின் முதுகை தன் நெஞ்சோடு அணைக்க... தன்யரித்விகாவின் அழுகையோ இன்னும் அதிகமானது.
“ரிது...” என்று இவன் அழைத்து.. தன்னவளுக்கு சொன்ன சமாதான வார்த்தைகள் எல்லாம் அவள் ஏற்காமல் போக...
“ரிது பழச எல்லாம் மறந்துடுடி.. என்னை எவ்வளவு வேணா திட்டு.. பேசு.. சண்டை கூட போடு.. ஆனா இப்படி அழாத” அவன் உணர்ந்து சொல்ல
“ரெண்டு வருஷமா நான் அழதுட்டு தான் இருக்கேன்… இது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல… அப்பறம் என்ன சொன்னீங்க… நான் பேசனுமா உங்களுக்கு… நான் பேச மாட்டேன்… ரெண்டு வருஷமா மவுன சாமியாரா இருந்தது யாராம்… நான் பேச மாட்டேன்…” பெண்ணவளின் குரல் நலிந்து ஒலித்தாலும்… கோபத்தில் உடலோ இறுகியது.
மனைவியின் வார்த்தையில் தன்னை வெறுத்தவனாக “ரித்விகா....” என்று தன்னவளை அழுத்தி... அதட்டி அழைக்க... அதில் உடல் அதிர இரண்டு கரங்களாலும் தன் வாயைப் பொத்தியவளோ ஒரு கேவலுடன் இன்னும் தன்னை சுருக்கி கொண்டாள் பெண்ணவள்...
மனைவியின் செயலில் தன்னையே நொந்தவனோ தன்னவளை அப்படியே பூமாலையாய் தூக்கி தன் மார்பையே அவளின் தலைக்கு மஞ்சமாக்கி... தன்னோடு இறுக்க அணைத்து, “எதையும் யோசிக்காம பேசாம தூங்கு டி... புதுசா நாம இன்று தான் வாழ்வ ஆரம்பிக்கறோம் ன்னு நினைச்சிக்க” என்றவன் தானும் தூங்க முயற்சிக்க... ஆனால் அவனால் உறக்கம் கொள்ள முடியவில்லை... விளைவு ஆண்மகனின் நினைவுகளோ அவனையும் அறியாமல்... இருவரின் திருமண நிகழ்வை நோக்கி பயணித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு...
எப்போதும் விதுனதிபாகரனின் வீடு சற்று கலகலப்பாய் இருக்கும். அண்ணன்... தங்கைகள் என்று அனைவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்து... வம்பிழுத்து... பேச்சும் சிரிப்பும் நிறையும் அவர்கள் வீட்டில்... பிள்ளைகளுடன் தமிழரசியும் அந்த கலகலப்பில் கலந்து கொள்வார். கடலழகன் எப்போதுமே அனைவரின் செயல்களை தூர நின்று தான் ரசிப்பார்... ஆனால் தற்போது ஒரு வார காலமாய் தாயின் முகம் களையிழந்து இருப்பதும்... மகன் காணும் போது எல்லாம்... தாய், பூஜை அறையில் வேதனையான முகத்துடன் நிற்பதுமாய் இருக்க... இதைக் கண்டவன் எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்து தாயிடம் அது பற்றி பேச வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவன்... ஒருநாள் கல்லூரி முடித்து வந்ததும் தாயிடம் என்ன ஏது என்று அழுத்தி கேட்க...
கண்ணீருடன் அனைத்தையும் ஒப்புவித்தாள் தமிழரசி... அவரும் தான் அந்த பாரத்தைத் தனியாளாய் எத்தனை நாள் சுமப்பார். கடலழகனும், தமிழரசியும் நற்தம்பதிகளே. அன்பு... பாசம் காதல்... என்று இருவரும் அதில் திளைத்து வாழ்ந்தவர்கள். கடலழகன்... தன் மனைவி, பிள்ளைகள் மீது அதீத பாசம் வைத்திருந்தார். அந்த பாசமும்... அவர் விரும்பிய பகட்டு வாழ்வும் தான்... அவரை அத்தகைய செயலை செய்ய வைத்தது. மனைவிக்கும்... பிள்ளைகளுக்கும் அவர்கள் கேட்காமலே... விரும்பியதை வாங்கித் தர வேண்டும் என்று அவர் நினைக்க... அதற்கு அவருடைய பொருளாதாரம் இடம் தரவில்லை. விளைவு... மகிழ்வரதனின் கம்பெனியில் கணக்கராய் வேலை செய்தவர் கம்பெனி பணத்தை கையாடல் செய்து விட... அவரின் நேரம் முதலாளியான சசிரேகாவிடம் கையும் களவுமாய் பிடிபட்டுக் கொண்டார். தன் ஆளுமையைக் காட்ட சசிரேகாவுக்கு சொல்லித் தரவா வேண்டும்... கடலழகனை அழைத்து அவரை உண்டு இல்லை என்று செய்தவர்... இறுதியாய்... போலீசில் கடலழகனை ஒப்படைக்க இருந்த நேரம்... கடலழகன் மானத்திற்கு அஞ்சி மகிழ்வரதனிடம் சரணடைந்து அழுது கெஞ்சி வேண்டவும்... கடலழகனோ திருடிய பணத்தைத் திரும்பி தந்தால் சிறை செல்ல வேண்டியதில்லை என்று முடித்தார். பின்ன... அவர் கெஞ்சலில் வேறு என்ன தான் மகிழ்வரதனால் செய்ய முடியும். ஏதோ இதோடு விட்டாரே என்று நினைக்க முடியாமல் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது... கடலழகன் தன் மூன்று பெண் பிள்ளைகளின் திருமணத்திக்கு என்று தலா ஐந்து லட்சம் என பதினைந்து லட்சத்தைக் கையாடல் செய்தவர்... அதை இரட்டிப்பாக்க யாரோ முகம் அறியா ஒருவரிடம் வட்டிக்கு விட்டிருக்க... வாங்கியவன் ஏமாற்றி விட... அவ்வளவு தான் மொத்தமாய் பதினைந்து லட்சமும் பறிபோக... கம்பெனியிலும் மாட்டிக் கொண்டார் கடலழகன். தற்போது பணத்திற்கு என்ன செய்வது... இவர்களோ நடுத்தர வர்க்கம் எனவே கணவன் மனைவி இருவருக்கும் ஒன்றும் புரியாத நிலை...
தமிழரசி சொல்லி முடிக்க... விதுனதிபாகரனுக்குள் அதிர்ச்சி... ‘அப்பா திருடுவாரா!... மற்றவர் பொருளுக்கு ஆசை படக் கூடாது... நீதி... நேர்மை... ஒழுக்கம்னு சொல்லிக் கொடுத்து எங்களை வளர்த்த என் அப்பா திருடுவாரா?’ இது தான் அவன் அதிர்ச்சிக்கு முதல் காரணம். ஆனால் நடந்து விட்டதே.. இனி என்ன செய்ய...
தங்கள் குடும்பம் இருக்கும் சூழலில்... அதிலும் தான் M.B.A இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் வேளையில்... அவர்கள் கொடுத்த கெடுவில் நான்கு நாள் முடிவதற்குள் எப்படி பதினைந்து லட்சத்தைப் புரட்ட முடியும்.. எந்த ஒரு சொத்தோ சேமிப்போ இல்லையே... தன்னால் பணத்தைத் தான் புரட்ட முடியாதே தவிர... வேறு ஒன்றை நிச்சயம் செய்ய முடியுமே...
“ம்மா... அழாதிங்க... அப்பா செய்தது மிகப்பெரிய தவறு... ஆனா ஒரு மகனா அந்தப் பணத்தை என்னால திருப்பித் தர முடியும்... வேலை கிடைத்ததும் இரண்டு வருஷத்தில அதை நான் தந்துடுவேன்... அதுவரை அந்த முதலாளி எனக்கு அவகாசம் தந்தா போதும்மா… நான் அவரை சந்தித்துப் பேசுறேன்..” மகன் தன் நிலையில் தந்தையின் பாரத்தைச் சுமக்க நினைக்க... அகமகிழ்ந்து தான் போனார் தமிழரசி.
தான் தாய்க்கு கொடுத்த வாக்கு படி... விதுனதிபாகரன் மகிழ்வரதனை சந்தித்துப் பேச முதலில் பிடி கொடுக்கவில்லை அவர். ஏதோ ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் இல்லையே... பதினைந்து லட்சம்… எதை நம்பி அவகாசம் தர முடியும். அதுவும் இந்த சின்னப் பையனை நம்பி... பெரியவருக்கு யோசனை தான்.
அவர் தயங்கவும்... “சார், உங்க தயக்கம் எனக்குப் புரியுது… நான் தொழிற்கல்வி படிச்சிருக்கேன்… படிப்பு முடியும்போதே நானும் என் நண்பனும் சேர்ந்து தொழில ஆரம்பிச்சிடோம்… இப்ப அவன் டிரெய்னிங்காக வெளிநாட்டுல இருக்கான்… தொழிலதிபர் நீலகண்டன் சார உங்களுக்குத் தெரியும் தான?”
அவனுடைய கேள்விக்கு “ம்ம்..” இவர் பதில் தர
அவருடைய மகன் தான் என் நண்பன் கார்த்திக்… இப்ப தொழில அவர் தான் பார்த்துக்கிறார்… நான் இந்த வருட படிப்பு முடித்ததும் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கு… திரும்ப வந்ததும் எங்க தொழிலை முழுமையா நான் பார்த்துப்பேன்… பிறகு உங்க பணத்தை முழுமையா தந்துடுவேன் சார்… பதினைந்து லட்சம் எனக்கு அதிக தொகை தான்... ஆனா நிச்சயம் என்னால முடியும் சார்” என்று இவன் தன் நிலைமையை எடுத்து சொல்ல... மகிழ்வரதன் இன்னுமே தயக்கம் கொள்ள
“சார், என் அப்பா செய்தது மிகப் பெரிய நம்பிக்கை துரோகம்… ஆனாலும் அவர் மகன உங்க எதிர்ல அமர வச்சி நீங்க பேசும் போதே உங்க பெருந்தன்மையும், குணமும் தெரியுது… என் தந்தைய நீங்க போலீஸ்ல பிடிச்சி தந்திருந்தா… இப்ப நான் திருடன் மகன்… எனக்கு மட்டும் இல்ல என் மூன்று தங்கைகளுக்கும் இந்தப் பெயர் கடைசிவரை நிலைக்கும்… பிறகு எப்படி சார் அவங்களுக்குத் திருமணம் நடக்கும்… ஒரு ஆண்மகனா நான் வெளிநாடு சென்று என் கறையை போக்கிக்கிட்டாலும்… என் தங்கைகளுக்கு எப்படி சார் போகும்… நான் மதிப்பு மரியாதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன் சார்… ஆனா அதை விட இப்ப என் தங்கைகள் வாழ்வு தான் பெருசா தெரியுது..” என்றவன் சட்டென்று கை கூப்பிய படி “அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சி தரனும் சார்… ஒரு அண்ணனா அதுவும் என் கடமை தான” என்று நிதானாமாய் இவன் தன் பக்க வாதத்தை வைக்க
எத்தனை வியாபாரிகளைச் சந்தித்து இருப்பார் மகிழ்வரன்… விதுனதிபாகரனின் சொல்லாடலில்.. இவன் எதிர்காலத்தில் பெரிய ஆளாய் வருவான் என்று நினைத்தவர்… பிறகு முடிவை சொல்லுவதாக சொல்லி அவனை அனுப்பி வைத்தார் இவர்.
ஆனால் முடிவு?