நெஞ்சம் 19

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கோவில் பூஜைக்குச் சென்று வந்ததிலிருந்து தன்யாவின் மனது சற்று சமண் பட்டது என்றே சொல்லலாம்.. திருமணமான புதிதில் கணவனின் பாராமுகத்தில்.. பல முறை சஞ்சலப் பட்டவளின் அகம் எடுத்த இறுதி முடிவே விவாகரத்து என்பதாகும்..



அந்த விவாகரத்தைக் கூடக் கணவன் கேட்பதாக நினைத்து தான் தன்யா தர விழைந்தது. ஆனால் அதைக் கணவன் கேட்டிருக்க மாட்டானோ என்ற ஐயம் தற்போது அவள் மனதில் உதயமாகியிருக்க.. அது உண்மை என்ற நிலையில் தான் கணவனின் இன்றைய பேச்சும் செயலும் இருக்க.. அதையே திரிசங்கு சொர்க்கமாய்ப் பெண்ணவளும் உணர.. அதை முழுமையாக உணர முடியாமல் அவளைக் குழப்பியது மாமியாரின் அன்றைய பேச்சு.


அன்று

மகன் தாய்நாடு வரயிருக்கும் சமயம் பல திட்டங்களைத் தீட்டியது தமிழரசியின் மனது.. அவருக்குத் தன்யாவின் குடும்பத்தைப் பிடிக்கவில்லை.. அதிலும் கணவன் கழுத்தில் கத்தியை வைத்து நடந்த இத்திருமணத்தை அறவே வெறுத்தார்.. கணவனைக் காப்பாற்ற, குடும்ப மானத்திற்காக என்று முதலில் இத்திருமணத்தை ஏற்றுக் கொண்டவர் கணவனின் இறப்புக்குப் பிறகு முழுமையாக எதிர்த்தார் என்றே சொல்லலாம். அதன் விளைவு மருமகள் தங்கள் வீட்டுக்கு வருவதற்குள் மகனின் வாழ்விலிருந்து அவளை விலக்க நினைத்தது..


அதற்குத் தக்க நேரம் பார்த்து இவரும் தன்யாவின் வீட்டிக்குச் செல்ல.. பெற்றோர் இல்லாத காரணத்தால் தன்யாவே வந்தவரை வரவேற்று உபசரிக்க



ஆரம்பப் பேச்சே தமிழரசி “நான் உன் கிட்ட தனியா பேசனும்” என்க



காரணம் தெரியாவிடிலும்.. சின்னவள் அவரைத் தன் அறைக்கு அழைத்துச் செல்ல… அவளின் வீட்டைப் பார்த்து அதிசயத்தார் என்றால்.. தன்யாவின் அறையைக் கண்டு தமிழரசி வாயைப் பிளந்தார் என்றே சொல்லலாம் “இவ்வளவு பணம் இருக்கற திமிர்ல தான் என் பிள்ளைய விலைக்குப் பேசினாங்களா உன்னைப் பெத்தவங்க” என்று எடுத்த எடுப்பிலே தமிழரசி அங்கலாய்க்க



“நீங்க என்ன சொல்றீங்க” தன்யா அதிர்ச்சியுடன் கேட்க



“ஆமா... உன் குடும்பத்துக்கு ஒன்னும் தெரியாது.. அதிலும் நீ பச்ச மண்ணு உனக்கு எதுவும் தெரியாது பார்.. இதை நான் நம்பனும்”


“சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது அத்த”


“இந்தா இந்த அத்த.. நொத்த உறவு எல்லாம் இங்க வேணாம் சொல்லிட்டேன்.. என்ன டி நினைச்சிட்டு இருக்கீங்க பணத் திமிரா உங்களுக்கு.. என் புள்ள ஊருக்கு வர மாட்டேன்னு சொல்றான்.. எல்லாம் யாரால உன்னால.. இங்க பார் நான் சுத்தி வளைச்சிப் பேச வரல.. என் புருஷன் உங்க கம்பெனி பணத்த எடுத்திருந்தா அவருக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டியது தான.. அதென்ன சீக்காலியான உன்ன என் பையன் தலையில கட்டுறது ஏன் நீ விலை போக மாட்டியா.. உன் வீட்டுல என்னென்ன தகிடுதத்தோம் செய்து உன்னைய கட்டிக் கொடுத்தாங்க தெரியுமா... என் பிள்ளைக்கு உன்னைக் கட்ட இஷ்டமே இல்ல.. இன்னும் சொல்லப் போனா உன்ன அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது.. எங்கையாவது அவனுக்கு நீ பொருத்தமா இருக்கியா. என் மவன் ராசாவாட்டம் இருக்கான்... நீ தேவாங்கு மாதிரி இருக்க.. அதை எல்லாம் விடு.. விஷயத்துக்கு வரேன் இப்ப என் பிள்ள உன் கிட்ட விவாகரத்துக் கேட்குறான்” வந்தவர் ஆடு ஆடு என்று ஆடி இறுதியில் பொய்யை உண்மை போல் சொல்ல



இவ்வளவு நேர பேச்சில் தன்யா திகைத்தாள் என்றால்.. கடைசி வார்த்தையில் அதிர்ந்து “அத்த” என்ற கூவலுடன் இவள் இடைவெட்ட



“ஏய்.. அப்படிக் கூப்பிடாதன்னு சொல்றேன் இல்ல.. என் பையன் கையில கால்ல விழுந்து தான் இந்தத் திருமணத்த நான் நடத்தினேன்.. அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப புரியுது.. அவன் அப்பாவ முன்னிருத்தி தான் உங்க கல்யாணம்... இப்ப தன் அப்பாவே உயிரோட இல்லன்னும் போது உன்னைத் தலைமுழுகிறன்னு சொல்றான்.. அதைப் பற்றி உன் பெத்தவங்க கிட்ட பேச தான் நான் இப்ப வந்தது.. கடைசியில இங்கு யாரும் இல்ல அதான் நீ இருக்கியே.. இங்க பார் இப்படிப் பார்க்காம.. பேசாம.. இங்க நீ, அங்க அவன்னு இருக்கற இந்த உறவு எதுக்கு... அறுத்து விடறது தான் சரி.. என் பிள்ளையோட விருப்பமும் அதான்.. போதும் அவன் வாழ்விலிருந்து நீ முழுசா விலகு” என்று ஆங்காரத்துடன் தமிழரசி பேசவும்



விக்கித்து நின்றாள் தன்யா.. அவளுக்குத் திபாகரனின் தந்தை செய்த திருட்டோ அதன் பொருட்டு நடந்த இத்திருமணப் பேச்சுவார்தையோ எதுவும் தெரியாது.. எல்லாம் புதிதாய் இருக்க.. வாழ்வே கசக்க தன் நிலை எண்ணி வருந்தியவள் “ஆனா அத்..” அத்தை என்று அழைக்க வந்தவள் பின் “நீங்க கேட்பது விவாகரத்து” என்று கசந்த குரலில் நினைவுருத்த



“இவ்வளவு நேரம் நான் என்ன எருமமாடு பஸ் ஓட்டுச்சினா சொல்லிட்டு இருந்தேன்.. அதான் அந்த விவாகரத்த தான் தந்துட்டுப் போன்னு சொல்றேன்” தமிழரசியும் நான் விடுவேனா என்றிருக்க



என்ன, ஏது என்ற உண்மை நிலை தெரியாததால் “அவரு என் கிட்ட பேசட்டும்.. பின் நிச்சயம் அவர் கேட்கற விவாகரத்த நான் தரேன்.. முதல்ல அவரு இந்தியா வரட்டும்.. பிறகு பேசிக்கலாம்” இவள் தற்காலிகமாய் இவ்விஷயத்தைத் தள்ளிப் போட நினைக்க



“உனக்கு வெக்கமா இல்ல.. என் பிள்ள உன்னைப் பார்க்கவே பிடிக்கலன்னு சொல்றான்.. நீ அவன் கிட்ட பேச நினைக்கிற.. ச்சீ.. இங்க பார் நீயா விவாகரத்து தந்துட்டா உனக்கு நல்லது.. அப்புறம் நாங்க உன்ன அசிங்கப்படுத்தாம விட மாட்டோம்.. அவன் வர்றதுக்குள்ள சட்டு புட்டுன்னு அதற்கான ஏற்பாட்ட பண்ணு.. அது தான் உனக்கும் நல்லது என் பிள்ளைக்கும் நல்லது” தமிழரசி அதட்டி உருட்டி மிரட்டி தன்யாவை விவாகரத்து செய்யச் சொல்ல.. இவ்வளவு நாளிருந்த விடை தெரியா கேள்விகளுக்கு விடையாக.. தன் மன சஞ்சலங்களுக்கு வடிகாலாக.. பெற்றோரின் அரவணைப்பும் இல்லாமல்.. யாருடைய ஆதரவும்.. வழிகாட்டுதலும் இல்லாமல்.. இவை எல்லாவற்றையும் விட மாமியாரின் பேச்சை நம்பி கணவனின் விருப்பத்திற்காக விவாகரத்துப் பத்திரத்தை அனுப்பி வைத்தாள் தன்யரித்விகா.



பழசை நினைத்தவளின் மனம் நத்தையாய் சுருண்டு போனது.. இவளும் இதுவரை கணவனிடம் விவாகரத்தைப் பற்றிப் பேசவில்லை. அவளின் எண்ணம் எல்லாம் நீ விவாகரத்து கேட்ட... நான் தந்துட்டேன்… இந்த ஒரு வருடம் உன் வீட்டில் தங்க சொன்ன.. நான் இருக்கேன்.. பிறகு போய்டுவேன் இப்படியான மனநிலை தான்.. ஒருவேளை ஏன் விவாகரத்துப் பத்திரம் அனுப்பின என்று திபாகரன் கேட்டிருந்தால் அன்றைய உண்மையைப் பகிர்ந்திருப்பாளோ என்னமோ...



இன்று

ஒரு நல்ல நாளில் தன் பெற்றோரின் சம்மதத்துடன் கார்த்திக் சித்ராவைப் பெண் பார்த்து.. பூ வைத்து விட.. அதில் அதே மாதத்தில் திருமணமும் உறுதியாக.. அதற்குப் பிறகான திருமண வேலைகளில் தன்னைப் புகுத்திக் கொண்டார்கள் தன்யாவும்… திபாகரனும்



நலுங்குக்கு, சீர்வரிசை பொருட்கள் வாங்க என்று கற்பகமும்.. தமிழரசியும் சென்று வர.. சித்ராவுக்கு வேண்டியதை வாங்க.. அவளைப் பார்லர் அழைத்துச் செல்ல என்று தன்யா பார்த்துக் கொள்ள.. மற்ற வேலைகளைக் கார்த்திக்குடன் இணைந்து திபாகரன் செயல் பட.. மொத்தத்தில் அந்த வீடே கல்யாணக் களை கட்டியது.



திருமணத்திற்குப் புடவை எடுக்கத் திருநெல்வேலி வள்ளியூரில் உள்ள அசோகாவுக்குச் செல்வது என இரு வீட்டாரும் முடிவு செய்திருக்க.. அன்றைய தினம் திபாகரனுக்கு ஒரு மீட்டிங் இருக்கவும்.. பிரபுவின் துணையோடு கடைக்கு தமிழரசி.. கற்பகம்.. சித்ரா.. தன்யா.. காயத்ரி என வீட்டுப் பெண்கள் மட்டும் செல்வது என முடிவானது.



அன்றைய தினம் முகூர்த்த புடைவையோடு தாலி கொடியையும் சேர்த்து எடுப்பது என முடிவானதால்.. தமிழரசிக்குத் தன்யாவை உடன் அழைத்துச் செல்ல விருப்பம் இல்லை. மகன் இல்லாததால் பல மாய்மாயங்களைச் செய்தவர்.. அதட்டிப் பேசி தன்யாவை வீட்டோடு இருக்க வைத்து விட்டே மற்றவருடன் கிளம்பினார் அவர்.



தன்யா மட்டும் வீட்டிலிருக்க.. சற்று நேரத்திற்கு எல்லாம்.. அழைப்பு மணி ஒலிக்கவும்.. இவள் கதவைத் திறக்க அங்கிருந்த கணவனைக் கண்டு ஆச்சரியமானவள் “என்னங்க எதாவது மறந்துட்டிங்களா” என்று பெண்ணவள் கேட்க


“எதுவும் இல்ல நீ கிளம்பு” என்று பரபரப்புடன் அவன் பதில் தர


“எங்க”


“டைம் இல்ல ரிது.. அங்க நமக்காகக் கடையில எல்லோரும் வெயிட் பண்ணுவாங்க நீ ரெடியா இருக்கனா வா” என்றவன் உள் சென்று வீட்டைப் பூட்ட அங்கிருந்த சாவியை எடுத்துக் கொண்டு முன்னே நடக்க


“மீட்டிங்னு சொன்னீங்க”


“அது evening தான்… program change.. கிளையன்ட் வர லேட்டாகுமாம்” இயந்திரமாய் இவன் பதில் தர



மாமியார் பேசின பேச்சுக்கு செல்லத் தயங்கியவள் “சரி அதுக்கு எதுக்கு நான்.. நீங்க கடைக்குப் போக வேண்டியது தான” என்று வர மறுக்க



அதில் கணவன் முறைத்த முறைப்பில் அமைதியானாள்.. எதுக்குடா வம்பு என்ற நிலையில் கிளம்பியிருந்தாள் இவள்.. கிளையன்ட் மீட்டிங் மாறியதால் திபாகரன் கடைக்குச் செல்ல எத்தனித்த நேரம்… தன்யா தங்களுடன் வராத விஷயத்தைத் கற்பகம் இவனிடம் பகிர.. கோப மிகுதியில்.. கால் டாக்ஸியை புக் செய்து வீட்டிற்கு வந்து இதோ மனைவியைத் தன்னுடன் அழைத்துக் கொள்ள...



அதே நேரம் இரு குடும்பமும் கடையில் புடவைப் பிரிவிற்குள் நுழைய.. வந்த வேகத்தில் சரியாக மனைவியுடன் அவர்களோடு கலந்திருந்தான் திபாகரன்… சித்ராவுக்குப் பிடித்த மாதிரியே எடுக்கச் சொன்னார்கள் கார்த்திக் குடும்பத்தார். முகூர்த்த புடவை முடிய.. வீட்டில் உள்ளவர்களுக்கும்.. மற்றவர்களுக்கும்.. முறை செய்யவும் இன்னும் சிலதை திபாகரன் மனைவியையே எடுக்கச் சொல்ல.. எள்ளும் கொள்ளும் வெடித்தது தமிழரசி முகத்தில்.. அதோடவே தவமதிக்கும், குலமதிக்கும் தன்யா பாவாடை தாவணியைத் தேர்வு செய்ய… அகமகிழ்ந்து போனான் கணவன்.



பின் அனைவரும் உணவு உண்டு.. நகை கடைக்குச் செல்ல.. தாலி கொடி வாங்கியதும்.. கார்த்திக்கு செய்ய வெண்டிய முறைக்குச் சில நகைகளை எடுத்த பின்.. தன்யா மற்றும் குலமதி.. தவமதிக்கு.. விண்டேஜ் மாடலில் ஒரே மாதிரி அட்டிகையைத் திபாகரன் தேர்வு செய்ய… முகத்தில் கனல் வீசியது தமழிரசிக்கு.


அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை திபாகரன்.. என் மனைவிக்கு உண்டான மதிப்பும், உரிமையும் நீங்க என்ன தருவது… அதை நான் என்னவளுக்குத் தருகிறேன் பாருங்கள் என்று தான் இருந்தது அவன் செயல். நகைகளை வாங்கி முடியவும் கார்த்திக்கின் தந்தையிடம் வந்தவன் “அங்கிள் எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு உங்களுக்குத் தெரியும்… நான் அதிக நேரம் இங்கிருக்க முடியாது… அதான் முக்கியமானது முடிந்ததே… மற்றதுக்கு எல்லாம் அம்மாவும் சித்தியும் கூட இருந்து பார்ப்பாங்க.. சோ நானும் ரிதுவும் கிளம்பறோம்” என்று மரியாதைக்காக அவரிடம் பகிர்ந்தவன்



பின் யாரிடம் எப்பேச்சும் அற்று.. அனைவருக்கும் பொதுவாக ஒரு தலை அசைப்பை தந்து விட்டு திபாகரன் மனைவியுடன் கிளம்ப



தமிழரசியோ “பார்த்தியா கற்பகம்… என்னையும் என் பொண்ணையும் நடுத்தெருவுல விட்டுட்டு.. அவன் பொண்டாட்டியோட ஜோடி போட்டுகிட்டு எப்படிப் போறான் பாரு.. அம்மான்னு இப்ப எல்லாம் என்னை அவன் மதிக்கிறதே இல்ல” என்று மகனின் பாராமுகத்தில் அவர் மூக்கை சிந்த



கற்பகமோ “என்ன க்கா.. பொண்ணுக்கு நல்லது செய்யும் போது இப்படிக் கண்ணைக் கசக்குற… அவனுக்கு முக்கியமான வேலை.. தன்யாவும் சோர்ந்து தெரியவும் கையோட கூட்டிட்டுப் போய்ட்டான்… இன்னும் சிலது எல்லாம் சித்ராவுக்கு நாம வாங்கனுமே.. நீ வா நாம அதைப் பார்ப்போம்” என்று கூறி தமிழரசியைத் திசை திருப்பி விட அது கொஞ்சம் வேலை செய்தது என்றே சொல்லலாம்.



காரில் கணவன், மனைவி இருவரிடமும் பேச்சின்றிப் போக... வீட்டுக்கு வந்ததும் மனைவியை வாசலிலே இறக்கி விட்டு இவன் அலுவலகம் செல்ல எத்தனிக்க “கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகக் கூடாதா.. டயர்டா தெரியறிங்களே” என்று கணவனின் சோர்ந்த முகத்தைக் கண்டு பெண்ணவள் அக்கறையுடன் கேட்க



அதற்குச் சம்மதித்து மனைவி கதவைத் திறந்ததும் வீட்டினுள் வந்தவன்.. கையோடு கதவை அடைத்து “ரெஸ்ட் எல்லாம் வேணாம் ஆனா நிச்சயம் பூஸ்ட் வேணும்” என்றவன் மனைவியை இறுக்க அணைத்து அவள் முகத்தில் முத்த மழை பொழிய


கணவனின் இந்தத் திடீர் தாக்குதலில் பேச்சற்று தன்யா வாயைப் பிளந்தபடி நிற்கவும்.. அதில் ரசனையோடு தன்னவளின் கீழ் உதட்டை வருடியவனோ “இந்த உதடு என்ன ரொம்ப டெம்ட் பண்ணுது டி” என்றவன் கணவன் பார்வை பார்கக



அதில் முகம் சிவந்த பெண்ணவளோ தலையைத் தாழ்த்திக் கொண்டு “என்ன இது இப்படி எல்லாம்” என்று திணற



அதில் தன்னைத் தொலைத்தவனாக மனைவியின் தாடையைச் சுட்டு விரல் கொண்டு நிமிர்த்தி “இதுவே லேட் டார்லிங்… சரி விடு விட்டதுக்கு எல்லாம் சேர்த்து இனி வட்டியோட வாங்கிக்கிறேன்” என்று உல்லாசமாக மொழிந்தவன் “அம்மா வர வேணாம்னு சொன்னா.. நீ என் கிட்ட சொல்ல மாட்டியா.. நான் உன்ன அப்படியே விட்டுடுவேனா டி.. ஹாங்.. இனி எதையும் என் கிட்ட சொல்லிப் பழகு” என்று இவன் கண்டி

ப்போடு சொல்ல… அகம் தெளிந்தது பெண்ணவளுக்கு.
 
Back
Top