உறக்கத்திலிருந்து விழித்த திபாகரன் முதலாய் கேட்ட மனைவியின் வார்த்தைகளை ஏதோ பிதற்றுகிறாள் என்று தான் நினைத்திருந்தான். ஆனால் நேரம் செல்லச் செல்ல மனைவி உதிர்த்த வார்த்தைகள் யாவும் அப்படி இல்லை என்பதைக் கட்டயம் காட்டியது. ஏதோ தங்களின் திருமணத்திற்குப் பிறகு தான் மனைவி கண்ணீரில் கரைகிறாள் என்று இவன் நினைத்திருக்க, அப்படி இல்லை தான் பிறவி எடுத்ததே கண்ணீரோடு தான் என்று தன் ஒவ்வொரு வார்த்தையாலும் நிரூபித்தாள் பெண்ணவள். அதுவும் சாதாரணமாகவா... அவளின் ஏக்கங்கள் விசும்பலாய் வெளிப்பட, அவளுக்குக் கிடைத்த ஒதுக்கங்கள் கண்ணீராய்க் கரைந்தது. அவளின் வலிகள் எல்லாம் வார்த்தை என்னும் வாள் கொண்டு சரம் கோர்க்க... மொத்தத்தில் இத்தனை வருட அவளின் அன்புக்கான போராட்டங்கள் எல்லாம் அப்பத்தாவின் இறுதிநாளான இன்று எறிமலையாய் வெடித்துச் சிதற, இறுதியாய் முத்தாய்ப்பாய் மனையாள் உதிர்த்த விதுன் அத்தான் என்ற வார்த்தை ஆண்மகனின் அகத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியது.
தாய் தந்தையரின் அன்பில் இந்த வயது வரை திகட்டத் திகட்ட வளர்ந்த திபாகரனுக்கு மனைவியின் ஏக்க வார்த்தைகள் குத்தீட்டியாய் அகத்தைத் தாக்க. “பாவி… பாவி… ஒரு வார்த்தை நீ என் கிட்ட சொல்லலியே டி… தாயின் அரவணைப்புக்காக ஏங்குவன்னு தான நான் உன்ன அங்க விட்டேன்… இப்படி எதுவும் தெரிஞ்சிக்காம போய்ட்டனே டி, பார்த்தே இராத என்ன நீ நினைக்க மாட்டன்னு நான் நினைச்சிருக்க… அத்தான் என்ற அழைப்பால் உன் மனசுல என்ன சுவீகரிச்சி இருக்கியே டி... எப்படி டி எப்படி… உன் அப்பத்தா நான் தான் உன்னுடையவன்னு காட்டியதாலவா... அய்யோ நான் பாவியா இருந்திருக்கனே... பெரிய பணக்காரனா நெஞ்சை நிமிர்த்திக் கிட்டு நான் உன் முன்னாடி வந்து நிக்கனும்னு நினைச்சனே... ஆனா இப்ப உன் முன்ன நான் ஒரு குற்றவாளியாகத் தான டி நிற்கறேன், ஏன் டி இப்படி என்ன கொல்ற… உன் அன்புக்கு முன்ன என் அன்பு ஒன்றுமே இல்ல டி கண்ணம்மா... தங்கம் இங்க பார் உன் அத்தான் இருக்கேன், என் செல்லம் அழலாமா, இனி எதற்கும் என் பட்டும்மா அழக் கூடாது, நீ என் தேவதை டி.. எனக்கே எனக்குன்னு அந்தக் கடவுள் படைத்த தேவதை நீ” தன் நேச வார்த்தைகள் மனைவியைத் தீண்டாது என்று தெரிந்தும், தன்னவளின் மனக்குமுறலை ஆற்ற… இவன் கண்ணீருடன் பிதற்ற.. ஆனால் முழிப்பும் அல்லா உறக்கமும் அல்லாத மயக்க நிலையிலிருந்த மனையாளின் இதயபீடத்தை அது அலங்கரிக்கத் தான் செய்தது. இறுதியில் திபாகரனைத் தேற்ற தான் அங்கு ஒருவரும் இல்லை. ஏனோ கணவன் மனைவி இருவருக்கும் அன்றைய இரவு வலி நிறைந்த இரவாகத் தான் கழிந்தது.
விடியலில் கண்விழித்த திபாகரன் கண்டது தன் நெஞ்சில் தலை சாய்ந்திருக்கும் மனையாளின் வதனத்தைத் தான்… அதிலும் இரவு முழுவதும் இருவரும் அமர்ந்த நிலையிலேயே உறங்கியிருக்க.. இரவின் தாக்கத்தில் மனைவிக்கு இனி தன் காதலோடு சேர்த்து அவள் இழந்த அன்பையும் அரவனைப்பையும் தான் தர வேண்டும் என்று நினைத்தவனின் கரங்களோ தன்னவளை இன்னும் ஆரத் தழுவி கொள்ள.. இனிதே தன்னவளை உச்சி முகர்ந்தான் இவன்… அதே உறுதியுடன் எழுந்து சென்று தன் காலை வேலைகளை முடிக்க… பத்து மணி தாண்டியும் எழவில்லை தன்யா. மனைவியின் நிலை உணர்ந்து இன்று அலுவலகம் செல்லவில்லை திபாகரன், ‘இரவும் சரியா உண்ணல, இப்ப இவ சாப்பிட்டு தூங்கினா நல்லா இருக்குமே’ என்ற எண்ணத்தில் கட்டிலில் தன்னவளை நெருங்கி அமர்ந்து அவளின் நெற்றி முடி ஒதுக்கியவன் “குட்டிமா மணி ஆச்சி எழுந்திருங்க” என்று சிறு குழந்தையை எழுப்புவது போல் இவன் எழுப்ப
அதில் சற்றே நெளிந்த தன்யா “ப்ச்சு… அப்பத்தா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறனே” என்ற சினுங்களுடன் புரண்டு கணவனின் மடியில் தலை வைத்து வாகாய் அவன் இடுப்பையும் கட்டிக் கொள்ள, மழைச்சாரல் தான் மன்னவன் மனதிற்குள்.
“என் செல்லம் இல்ல.. மணி பத்து டா” என்றவன் மனைவியின் தலை கோத
“ம்ஹீம்… 5 mints... பேபி பாவம் தான” இவள் இன்னும் வாகாய் கட்டிக் கொண்டு கொஞ்ச
அப்பத்தாவின் இறப்போ… நேற்றைய கண்ணீரோ தற்சமயம் தன்னவளுக்கு நினைவில்லை என்பதை உணர்ந்தவனோ… மென்னகையோடு மனைவியின் இரு கரங்களையும் உயர்த்தித் தன் தோள்களுக்கு மாலையாக்கி… அதைத் தன் வலது கையால் இறுக்கப் பற்றியபடி இடது கரத்தை மனைவியின் முதுகில் கொடுத்து சற்றே தன் முகம் நோக்கி மனையாளை உயர்த்தியவனோ… அவளின் மூக்கோடு தன் மூக்கை உரசிய படி “ஓய்.. ரிது டார்லிங்.. இன்னைக்கு முழுக்கக் கும்பகர்ணி மாதிரி தூங்கலாம்னு இருக்கியா.. பசிக்குது டி செல்லம்” என்று இவன் சொல்ல
அதில் “அச்சோ..” என்று ஒருவித வேகத்துடன் எழுந்தவள் நேரத்தைக் காண.. அப்போது தான் அவளுக்கு நிதர்சனம் உரைத்தது “என்ன விதுன் எழுப்பியிருக்கலாம் இல்ல.. இப்படியா தூக்கிட்டேன்.. என்ன நீங்க ஆபிஸ் போக..” என்றபடி எழுந்து பாத்ரூம் வரை சென்றவளின் வார்த்தையோ முழுமை பெறாமல் தேய்ந்தது… காரணம் நேற்றைய இழப்பு அவளுக்கு நினைவு வர… உடல் தோய முகம் கசங்க, கண்கள் கலங்க “இதோ சீக்கிரம் வரங்க” என்ற முணுமுணுப்புடன் இவள் பாத்ரூமுக்குள் நுழைய, சீக்கிரம் தன்னவளை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு பெருமூச்சை வெளியிட்டான் திபாகரன்.
நாட்கள் அதன் போக்கில் நகர.. அப்பத்தாவின் பதினாறாம் நாள் காரியத்திற்குச் சென்று… மனைவியைத் தன் கண் பார்வையிலேயே வைத்து… தன்னுடனேயே அழைத்து வந்து விட்டான் இவன். அதில் ஏக போகப் பெருமை தான் மகிழ்வரதனுக்கு, தன் மகளைக் கண்ணுக்குள் வைத்து மருமகன் தாங்குகிறானே, இதை விட வேறு என்ன வேண்டும் தந்தைக்கு, இதில் கூடுதல் அம்சமாக மாமனார் மருமகன் உறவு மேம்பட, மகளைப் பற்றி அவனிடம் பேசும் அளவுக்கு வந்திருந்தார் மகிழ்வரதன்.
பிறகான நாட்களில் காலையில் தாமதமாக அலுவலகத்துச் செல்பவன்… மாலை சீக்கிரமே வீட்டுக்கு வர… இடையிலும் மனைவியை அழைத்துப் பேச தவறவில்லை இவன். ஏனோ அவளைத் தன் நெஞ்சுக்குள் வைத்துப் பொதித்துக் கொள்ள வேண்டும் என்றே இவன் உள்ளம் ஆவல் கொண்டது.
அன்றைய தினம் பொது விடுமுறை, தமிழரசி ஒரு விழாவிற்குச் சென்றிருக்க.. மனைவி மற்றும் இரு தங்கைகளுடன் வெளியே செல்ல திட்டமிட்டு இருந்தான் திபாகரன். அதுவும் தாங்கள் வாங்கிய புதுக் காரில் முதல் முறையாக வெளியே செல்லப் போகிறோம் என்பதில் ஒரே குதூகலம் தான் குலமதிக்கும், தவமதிக்கும்.
வீட்டைப் பூட்டிக் கொண்டு இவர்கள் வாசலுக்கு வர, குலமதி “அண்ணி, எங்க கூட பேக் சீட்ல உட்காருங்க… நாம மூணு பேரும் ஜாலியா, பேசிட்டே.. பாட்டு கேட்டுட்டே போகலாம்” என்றவள் தன்யாவைத் தங்களுடன் அமரச் சொல்ல
“ஆமா.. ஆமா.. அண்ணி வாங்க.. இங்க வாங்க” தவமதியும் அழைப்பு விடுக்க
“ஓய் வாண்டுகளா, போதும்… போதும்.. நான் என்ன டிரைவரா, அதெல்லாம் உன் அண்ணி முன்னாடி தான் உட்காருவா.. என்ன ரிது அப்படித் தான” என்றவன் மறைமுகமாக முன்னே அமரச் சொல்லித் தன் மனைவிக்கு இவன் அழைப்பு விட
அதை எல்லாம் கேட்பவளா தன்யா, இவள் வேண்டும் என்றே கணவனைப் பார்த்துக் கொண்டே பின் சீட்டில் அமர்ந்து கொள்ள… அதில் தங்கைகள் இருவரும் கேலியுடன் புன்னகைக்க.. இனிதே ஆரம்பித்தது இவர்கள் பயணம்.
அப்படி இவர்கள் அனைவரும் வந்தது குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்குத் தான். முதலில் அங்குள்ள மகாதேவரை பக்தியுடன் வணங்கியவர்கள்… பின் அருவியில் குளித்துக் கொட்டம் அடித்து… மனமே இல்லாமல் நேரம் கடந்த பிறகே அதுவும் திபாகரன் அதட்டிய பிறகே மதிய உணவை முடித்தவர்கள்.. பின் அவனிடம் கெஞ்சி கொஞ்சி படகு சாவாரிக்குச் சென்று படகிலும் கொட்டம் அடிக்க… திபாகரன் தான் இவர்கள் மூவரையும் சமாளிக்க முடியாமல் திணறினான். இறுதியில் அங்குள்ள பூங்காவிற்கு வர.. அப்பாடா என்று அங்கிருந்த புல் தரையில் கண்கள் மூடி படுத்து விட்டான் திபாகரன். அவனுக்கு இப்படிக் குடும்பமாய் வருவது முதல் தடவை இல்லை. ஆனால் குடும்பத்தில் மனைவியுடன் வருவது இது தான் முதல் முறை… மனைவியின் அன்றைய புன்னகை முகத்தைக் கண்டதில் அகம் முழுக்க மத்தாப்பாய் ஒளிர்ந்தது இவனுக்கு. அதையே நினைத்து இவன் படுத்திருக்க… கணவனின் சோர்வை உணர்ந்த தன்யா.. இரவு உணவை முன்னமே முடித்துக் கொண்டு விரைவிலேயே வீட்டுக்குச் செல்ல எத்தனிக்க… மறுபேச்சின்றி அனைவரும் கிளம்பினார்கள். பின்னே எல்லோருடைய உடலும் அங்கு ஓய்வுக்குத் தானே கெஞ்சியது… உணவுக்குப் பின் குலமதியும்… தவமதியும் பின் இருக்கையில் அமர்ந்ததும் உறங்கி விட… காருக்குள் இருந்த கணவன் மனைவி இருவருமே அந்த இரவு நேர பயணத்தை ரசித்தார்கள் என்றே சொல்லலாம்.
தன்யா இது போல் தாய் தந்தையருடன்.. பிக்னிக்கோ, வெளி நாடு பயணமோ சென்று இருக்கிறாள் தான்.. அப்போதெல்லாம் இவளுடன் இவள் பெற்றோரின் பி.ஏ அல்லது கேர் டேக்கர் உடனிருக்க… ஏதோ கடமைக்கென்று அங்கு சுற்றி வருவாள் இவள். ஆனால் இன்று குடும்பமாய் அதிலும் வயதில் சிறிய பிள்ளைகளுடன் சென்றதில்… பார்த்த அனைத்தையும் ரசித்தது இவள் மனது. எல்லாவற்றையும் விடக் கணவனை ரசித்தாள் என்றே சொல்ல வேண்டும். கோவிலில் கணவன் அன்புடன் மூவருக்கும் நெற்றியில் இட்ட திருநீற்றை ரசித்தாள், அருவியில் தனியே தாங்கள் குளிக்கச் செல்லும் போது பல முறை பாதுகாப்புடன் இருக்கும் படி எச்சரித்தவனை ரசித்தாள், எங்குச் சென்றாலும் தங்களுடனே காவலாய் வந்த அந்தக் காவலனை ரசித்தாள், படகில் பயணிக்கும் போது நீர்த்திவலைகளை ஒருவருக்கொருவர் வாரி இறைத்துக் கொண்டபோது தங்களுடன் இணைத்துக் கொண்ட அவனின் குழந்தைத் தனத்தை ரசித்தாள், சிறிதே தான் கால் இடறினாலும் பதறிய தன்னவனின் பயத்தை ரசித்தாள்.. மூன்று பேரும் கெஞ்சி கொஞ்சிப் பேச அதை ரசித்து அரவணைத்து உச்சி முகரும் கணவனின் அரவணைப்பை ரசித்தாள்… மொத்தத்தில் கணவனின் ரசிகையாய்.. இதுவரை தன்னவனின் அகத்தை ரசித்தவளுக்கு.. தற்போது அவனை ரசிக்க உள்ளம் விழைந்ததோ… அதில் இவள் திரும்பிக் கணவனைக் காண.. திராவிட நிறத்தில் அழகிய கிரேக்க சிற்பமாய் அமர்திருந்தவனின் அகண்ட நெற்றியில் முடி கற்றைகள் அசைந்தாட.. கூர் நாசியின் கீழ் கற்றை மீசை மிளிர.. இறுகிய உதடுகளும்.. முறுக்கேறிய தசைகளுமாய் ஒளிர்ந்தவனைக் காண காண தெவிட்டவில்லை பெண்ணவளுக்கு… மனைவியின் பார்வையில் உள்ளே குறுகுறுக்க.. அவளைப் பார்க்காமலே அதைக் கண்டு கொண்டவனோ “என்ன டி என்ன சைட் அடிக்கிறியா” இவன் உல்லாசமாய்க் கேட்க
கணவன் குரலில் எச்சரிக்கையுடன் சற்றே திரும்பி பின்னிருக்கையைத் தன்யா காண “ரெண்டும் கும்பகரணிங்க.. இப்போதைக்கு எழாதுங்க.. சரி சொல்லு என்னை சைட் அடிக்கிறியா டி” என்று இவன் மறுபடியும் கேட்க
அதில் அசடு வழிய “ஆமா.. இப்ப என்ன... என் புருஷன் நான் சைட் அடிக்கிறேன் உங்களுக்கு என்ன”
மனைவியின் பதிலில் முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்தவன் “வாவ்… இதை நான் எதிர்பார்க்கல ரிது டார்லிங்.. சரி தான் அப்ப நான் சைட் அடிக்கிற மாதிரி இருக்கேன்” என்றவன் குதூகலத்துடன் சீட்டி அடித்த படி வர
“சைட் அடிக்கிற மாதிரி மட்டும் இல்ல அதுக்கும் மேல நீங்க இருக்கிங்க” என்று காதலோடு மொழிந்தவள் சற்றே கணவனை நெருங்கி அவனின் கை புஜத்தில் ஒரு முத்தத்தைப் பதிக்க
மனைவியின் முதல் முத்தத்தில் உடல் எங்கும் மின்சாரம் பாய.. அவனின் கரங்களில் சற்றே தடுமாறியது அந்தக் கார். “ஓய்.. ரிது டார்லிங்… என்ன டி இது இப்படி ரோட்டுல வச்சி தான் கிஸ் அடிப்பியா உன் அத்தான பார்த்தா பாவமா இல்ல”
“இல்ல… இல்ல.. பாவமா எல்லாம் இல்ல.. ஆனா கொஞ்சமே கொஞ்சம் உங்கள பிடிச்சிருக்கு”
“ஆஹா.. அப்பவும் கொஞ்சம் தானா”
“எல்லாம் இது போதும்” என்று புன்னகையுடன் சொன்னவளுக்கு அன்று கணவன் சொன்ன 'நான் அதிகம் பேச மாட்டேன்... ஆனா யாருக்கு என்ன வேணுமோ அதைப் பார்த்துக் கவனித்துச் செய்வேன்' என்ற வார்த்தைகள் இன்று இவளுள் பிரவாகம் எடுக்க… அதில் தன்யாவின் அகம் கணவனிடம் தஞ்சம் புகுந்தது.