தாயின் அழைப்பில் எதிர்பார்ப்புடன் துள்ளிய இவள் மனது.. அவரின் வார்த்தையிலும்.. தந்தையின் எதிர்பார்ப்பிலும் நத்தையெனச் சுருண்டது. முன்பிருந்த மன அழுத்தத்தாலும்.. இன்றைய வாதத்தாலும்.. தன்யாவுக்குத் தலை வலி அதிகமாக.. குலமதி தவமதியிடம் கூட அதிகம் பேசிடாமல்.. இவள் படுத்துக் கொள்ள.. தங்கைகள் மூலம் இதை அறிந்தவன்.. இரவு விரைவாக வீட்டு வந்து.. மனைவியை உண்ண வைத்து.. மாத்திரை தந்து தானும் உண்டு.. தங்கள் அறையில் மௌனமாய் மனையாளின் தலையை மடி சாய்த்து.. இதமாய் நெற்றியை இவன் பிடித்து விட... கணவனின் செயல்களில் உள்ளம் நிறைந்தது தன்யாவுக்கு.
"இப்ப கொஞ்சம் தேவலையா டி" என்றவனுக்கு
இமை மூடிய நிலையிலேயே கணவனின் கரம் பற்றித் தன் கன்னத்தில் பதித்தபடி "ஹ்ம்ம்.." என்றிட
"இன்னும் நீ சின்னப் பிள்ளையா ரிது.. எனக்கு இது பிடிக்கல.. இது பிடிக்கும்.. இது வேணும்.. வேணாம்னு உனக்குச் சொல்லத் தெரியாதா டி.. நான் சொன்னதால ஆபிஸ் வர.. கடமையேன்னு எதையும் செய்யற.. கடனேன்னு பேசுற.. உன் கிட்ட சந்தோஷமோ, ஒன்றுதலோ, அர்ப்பணிப்போ இல்ல.. இதை எல்லாம் நானே தெரிஞ்சிகிட்டாலும்.. நீயே வந்து சொல்லுவன்னு நான் எதிர்பார்த்தேன்.. ஆனா நீ தலைவிதியேன்னு தாங்கிட்டு இருக்க" என்றவன் கண்டிக்க
அதில் இமை திறந்து இவள் கணவனைக் காண "பார்க்காத டி.. மத்ததுக்கு எல்லாம் சண்டி ராணி மாதிரி உனக்கு வாய் நீளும்.. ஆனா உனக்குத் தேவை உள்ள இடத்துல பேசாத" என்று அதட்டியவன் "நீ ஒன்னும் விதியேன்னு இனி ஆபிஸ் வர வேணாம்.. அதுக்காக வீட்டுல இருன்னு சொல்லுவன்னு மட்டும் நினைச்சிடாத.. எதாவது படிக்கனும்னு நினைச்சா படி.. இல்லையா உனக்கு வேற எதுல விரும்பம்னு சொல்லு அதுல சேர்த்து விடறேன்" என்றவன் "ஆனா எனக்கு ஒரு சந்தேகம்.. உனக்கு எதுல விருப்பம்னாவது தெரியுமா.. இல்ல அதுவும் இல்லையா" மனைவியை இவன் சீண்ட
அது சரியாக வேலை செய்ய.. அதில் ரோஷத்தோடு எழுந்து அமர்ந்தவள் "யாருக்குத் தெரியாது.. எனக்கா, எனக்குப் பிடிச்சத சொன்னா மட்டும்.. நீங்க சரின்னா சொல்லப் போறீங்க.. அதுக்கும் மம்மி மாதிரி நோ தான் வரும்"
என்றவளை "சும்மா எப்ப பாரு மம்மி மாதிரி மம்மி மாதிரின்னு உளறாத.. அவங்களும் நானும் ஒன்னு இல்ல.. நான் உன் புருசன்.. முதல்ல அதை மனசுல ஏத்து.. இதுவரை உன்னை நான் எங்காவது எதிலாவது விட்டுக் கொடுத்திருக்கனா.. இல்ல உன் விருப்பத்தை மீறிச் செய்து தான் ஆகனும்னு கட்டாயப்படுத்தி இருக்கனா.. நீயா எதையாவது மனசுல வச்சிகிட்டு.. நான் இப்படித் தான் என்ற முடிவுல நீ பேசறது இது தான் உனக்குக் கடைசியா இருக்கனும்" என்றவனின் குரலில் கோபம் சிறிதும் இல்லை. என்றாலும் அதற்குண்டான அழுத்தத்துடன் ஒலித்தது.
அவ்வார்த்தையில் முதலில் அளக்க மளக்க விழித்தவள் பின் "சாரிங்க.. இனி அப்படிப் பேச மாட்டேன்" என்றிட
"இந்தச் சாரிக்காக.. இவ்வளவும் நான் உன் கிட்ட பேசல ரிது.. என்ன புரிஞ்சிக்கன்னு தான் சொல்றேன்.. சரி அதை விடு.. இப்ப சொல்லு உனக்கு எதுல விருப்பம்" என்றிவன் மறுபடியும் கேட்க
சற்றும் யோசிக்காமல் "அன்னைக்கு ஹோம் அழைச்சிட்டுப் போனிங்க இல்ல.. அங்க போகனும்.. எனக்கு அந்தக் குழந்தைங்க கூட இருக்கப் பிடிக்குது" என்று பெண்ணவளும் மறையாமல் சொல்லிட
அங்கையா என்பது போல் பார்த்தவன் "உன்ன திட்டக் கூடாதுன்னு நினைச்சாலும் நீ என்ன விட மாட்ட போல டி.. நான் உன் career பற்றிக் கேட்டா.. நீ என்றாவது போய் வர இடத்த சொல்ற.. அங்க உன்னால என்ன டி கத்துக்க முடியும்.. நீ அங்க என்ன செய்வ"
என்று கேட்டவனை முறைத்த பாவை "ஏன் செய்ய மாட்டேன்.. அந்தக் குட்டி பசங்கள கொஞ்சப் பிடிக்கும்.. அப்பத்தா எனக்குச் சொன்ன கதை எல்லாம் நான் அவங்களுக்குச் சொல்லுவேன்.. கூட சேர்ந்து விளையாடுவேன்.. குழந்தைகள பத்திரமா பார்த்துப்பேன்.. எழுதப் படிக்கக் கத்துத் தருவேன்.. ரைம்ஸ் எல்லாம் நல்லா பாடுவேன் தெரியுமா" என ரோஷத்துடன் தனக்குத் தெரிந்ததை எல்லாம் அடுக்கியவள்.. இறுதியாக "எனக்குப் பிடிச்சதை சொன்னா.. பிறகு இப்படி எல்லாம் கேள்வி கேட்க வேண்டியது.. சரி தான் போங்க ப்பா" என்றவள் வெளிப்படையாவே நொடித்துக் கொள்ள
மனைவியின் பாவனையில் வாய் விட்டு சிரித்தவன், சுண்டு விரலால் அவளின் நுனி மூக்கை வருடி "அப்ப மேடம் மழலை ஆசிரியரா ஆகனும்னு நினைக்கிறீங்க.. இதை என் கிட்ட நீ தெளிவா சொல்லி இருக்கலாமே டி" என்றிட
அதில் கணவனைத் திகைப்புடன் பார்த்தவள் "ஓ.. இதை இப்படியும் சொல்லலாம் இல்ல.. ஆனா எனக்கு இது தோனவே இல்ல பார்த்திங்களா" என்று கேட்டவளும் தன் உள்ளத்தை மறையாது சொல்ல
"அது எப்படித் தோனும்.. மேடத்துக்குத் தான் தன் விஷயம்னா எதுவும் தோனாதே" என்றவன் மென்னகையுடன் சீண்ட
"அதுக்குத் தான் நீங்க இருக்கீங்களே" என்று அசடு வழிய ஒத்துக் கொண்டவள்.. சலுகையாய் கணவன் மடியில் படுத்து விழிகளை மூடிக் கொள்ள.. சின்னச் சிரிப்புடன் இதமாய் மனைவியின் நெற்றியைப் பிடித்து விட்டவன் "சரி father கிட்ட பேசறேன்.. நீ போய் வா.. உன்னோட திறமையையும்.. அவரோட கண்ணோட்டத்தையும் வச்சி பிறகு உன் career பத்தி முடிவு செய்யலாம்" என்றவனின் பேச்சு அடுத்தடுத்த திட்டங்களை இட.. கணவனின் ஆதுரியத்தில் அகம் நிறைந்தாலும் அதை மறைத்துக் கொண்டு "போதும் விதுன்.. விடுங்க.. சும்மா பேசிகிட்டு.. எனக்குத் தூக்கம் வருது" என்றவள் போலியாய் சிணுங்க
"ஓ.. என் செல்லம்மாவுக்குத் தூக்கம் வந்துடுச்சா" எனக் கேட்டவன் குனிந்து தன்னவளின் நெற்றியில் முத்தம் இட.. அதில் கணவனின் கழுத்தை கட்டி கொண்ட பெண்ணவள் எக்கி.. காதலோடு கணவனின் இதழை சிறை செய்திட.. தன்னவளின் முதல் முத்தத்தில் விருப்பத்தோடு கரைந்து தான் போனான் அந்தக் காதல் கணவன்.
தான் சொன்ன படியே திபாகரன் father இடம் பேசி.. மனைவிக்கு அனைத்தும் செய்து தர.. அகம் நிறையக் காப்பகதுக்குச் சென்று வந்தாள் தன்யா.. இடையில் தொழில் முறை மீட்டிங் சம்பந்தமாக.. திபாகரன் மும்பையில் நான்கு தினங்கள் தங்க வேண்டியதாக.. கணவனைப் பிரிய மனம் இல்லாமல், அவன் கிளம்பும் நாள் அன்று சோக சித்திரமென.. கணவனையே தன்யா சுற்றி வர.. மனைவியை இழுத்துத் தன் கை வளைவில் வைத்தவன் "சில் பேபி.. இதோ இங்க இருக்கற மும்பை டி செல்லம்.. நாளே நாளுல நான் திரும்ப வந்துடப் போறேன்.. என்னமோ நான் போருக்குப் போற மாதிரி feel பண்ற.. அம்மு இப்படி இருக்காத டி.. என் கண்ணு இல்ல கொஞ்சம் சிரி டி.. எனக்கு மட்டும் கஷ்டமா இல்லயா.. இது பிஸினஸ் மீட் டி" என மனைவியைக் கொஞ்சி, கெஞ்சி, தாஜா செய்த பிறகே கிளம்பினான்.
மனைவியிடம் பல சமாதானம் சொல்லி மும்பை வந்தவன்.. ஏனோ அவளின் நினைவாகவே இருந்தான்.. இருவரும் சேர்ந்து வசித்த பிறகு வரும் முதல் பிரிவு அல்லவா.. மனைவியும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று எண்ணியவன்.. தன் மாமானாருக்கு அழைத்துத் தன்யா மும்பை வர நம்பகமான ஆட்கள் மூலம் ஏற்பாடு செய்யச் சொல்ல.. அதற்குள் விரைவில் இவன் தன் வேலைகளை முடிக்க.. மறுப்பின்றி மகளைத் தானே அழைத்துக் கொண்டு மும்பை வந்து சேர்ந்தார் மகிழ்வரதன். திபாகரனை சந்தித்து மீட்டிங் சம்பந்தமாகப் பேசியவர் இறுதியில் "இது நம்ம கெஸ்ட் ஹவுஸ் தான் திபா.. நீங்க இங்கையே தங்கிக்கலாமே" மருமகனின் மனம் அறிந்து கேட்டிட
"இல்ல அங்கிள்.. நான் வேற ஒரு plan போட்டு இருக்கேன்" என்ற மருமகனையும்.. வந்ததில் இருந்து கணவனின் கை கோர்த்து அமர்ந்திருக்கும் மகளையும் பார்த்தவர் புன்னகையுடன் "enjoy your moment" என்று வாழ்த்திட
அதை மென்னகையுடன் தலை அசைத்து ஏற்றுக் கொண்டான் இவன். தனிமையில் மனைவி என்ன plan என்று கேட்க.. வசீகரப் புன்னகையுடன் கண் சிமிட்டி suprise என்ற சொல்லுடன் முடித்துக் கொண்டான். அவர்கள் செல்ல அவன் தேர்ந்தெடுத்த இடம் பாவ்னா ஏரி ஆகும்.
திபாகரனின் நண்பர் அஜய் பட்டேலும், அவர் மனைவி சுந்தரியும்.. இவர்களுடன் பயணத்தில் கலந்து கொள்ள.. நாற்பதுகளின் தொடக்கத்தில் இருந்த அவர்களின் பேச்சும் சிரிப்பும்.. இவர்கள் இருவரையும் உற்சாகப்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
Lonavala வழியாக இவர்கள் பாவ்னா ஏரி பயணிக்க.. மாலை கடந்து இருள் சூழ்ந்த பிறகே வந்து சேர்ந்தார்கள். இருளில் அங்குள்ள மலை.. ஏரிகளின் அழகு முழுமையாகத் தன்யாவுக்குப் புலப்படவில்லை என்றாலும்.. குளிர் காற்றும், வண்டுகளின் ரீங்காரமும், அழகிய நிலவொளியில் சலசலத்து ஓடும் ஏரி நீரின் மென்மையும் பெண்ணவளைக் கவர தான் செய்தது. தாங்கள் தங்க கூடாரத்தைத் திபாகரன் தேர்ந்தெடுக்க.. பார்பிக்யூ முறையில் கேம்ப்ஃபயர் முன் அமர்ந்து.. அங்கு இருந்தவர்கள் அனைவரும் ஆடல் பாடலுடன் இரவு உணவை உண்ண.. கணவன் மனைவி இருவரின் சந்தோஷத்துக்கும் அளவில்லாமல் போனது. நேரம் கடந்த பிறகே தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வந்து தங்கள் கூடாரத்து வாசலில் இருந்த கேம்ப்ஃபயர் முன் மௌனமாய் இருவரும் அமர்ந்து கொள்ள... இருள் சூழ்ந்த வானில் நட்சத்திரம் மின்ன.. பனியுடன் சேர்ந்து பால் நிலா பொழிய.. எங்கோ ஓரிடத்தில் ஒருவர் கிதார் வாசிக்க.. அவ்விசை காற்றின் ஊடே இவர்களையும் வந்து சேர.. ஆங்காங்கே தெரிந்த கூடாரத்தின் ஒளியிலும்.. இவர்கள் முன்னே பற்றி எரிந்த தீயின் ஜீவாலையிலும்.. ஒரே சால்வையின் கீழ்.. மனையாளின் இடையில் கை கொடுத்து.. தன்னவளின் முதுகும்.. தன் நெஞ்சும் ஒட்டி கொண்ட நிலையில்.. இவன் மனைவியைப் பின்னிருந்து தழுவி கொள்ள.. அந்த இறுகிய அணைப்பில் மெய்மறந்து இருந்த இருவருக்கும் இது தான் சொர்க்கலோகமோ என்று தோன்றியது. காதல் சீண்டலே அங்கு இல்லை எனும் போது.. காம தீண்டலுக்கு வழி ஏது.. தேகங்கள் உரசிக் கொள்ள... இருவரும் இமை மூடிய நிலையில்.. மனைவியின் கன்னத்தோடு தன் கன்னம் இழைய.. அவளின் தாடையிலும் கழுத்திலும்.. தன் மீசை பதிய.. ஒருவித மௌன நிலையில் இருவரும் இருக்க.. அவ்விடமே தேவலோகமாகத் தான் அவர்களுக்குக் காட்சியளித்தது... நேரம் செல்ல மிதந்து வந்த கிதார் இசையும் நின்று விட.. ஆனால் இருவரின் தவம் மட்டும் கலையவில்லை.
"பிடிச்சிருக்கா.." அம்மௌனத்தைக் காதோடு உரசிய குரலில் ஆண்மகன் கலைக்க
"ஹ்ம்ம்" பெண்ணால் இயல்பாய் பேச முடியவில்லை.. தன் தேகம் முழுவதும் கணவனே அப்பியிருக்க.. கணவனின் உஷ்ண மூச்சிலும்.. அவளின் தேகச் சூட்டிலும்.. இவளால் எப்படிப் பேச முடியும்... இந்நிலை விடியும் வரை நீடித்திருக்கும்.. அதற்குள் திடீரென மழை தூர.. மனமேயின்றி இருவரும் விலகி கூடாரத்தின் உள்ளே பிரவேசித்தார்கள்.. அங்கும் மனைவியை அணைத்து படுத்திருந்தவன்.. சரியாக இரவு பன்னிரண்டு மணியைத் தொடவும்... தன்னவளை இறுக்கி அணைத்து காதலோடு அவளின் நெற்றியில் முத்தம் பதித்து "இனிய திருமண நாள் வாழ்த்துகள் மிஸஸ் திபாகரன்" என்றிட
கணவனின் வாழ்த்தில் முதலில் திகைத்து விழித்தவள்.. பின் இன்று தங்களுடைய திருமண நாள் என்பதை உணர்ந்து.. மகிழ்வோடு இவளும் "ஓ.. உங்களுக்கும்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள் மிஸ்டர் தன்யா" என்க
தன்னவளின் குறும்பில் வாய்விட்டே சிரித்தவன்.. எழுந்து அமர்ந்து.. தான் வாங்கி வந்த திருமண நாள் பரிசான மெட்டியையும்.. கொலுசையும் அவளுக்குப் போட்டு இவன் அழகு பார்க்க..
திருமணத்தன்று மனைவிக்கு மெட்டி இடும் முன்பே அவள் மயங்கி சரிந்ததால்.. தன்யா இதுவரை மெட்டி அணியாமல் இருக்க அதன் பொருட்டே அதை இன்று வாங்கி அணிவித்து இருந்தான் அவள் கணவன்... அதில் மெய்மறந்து இவள் கணவனையே ரசித்துக் கொண்டிருக்க..
"என்ன டி பிடிச்சிருக்கா.. தங்கத்துல வாங்கி இருப்பேன்.. ஆனா வெள்ளியில போட்டா தான் சத்தம் வருமாம்.. எனக்கு உன் பாத சிணுங்கல் சத்தம் எப்பவும் வேணும்.. அதான் வெள்ளியில வாங்கினேன்" என்றவன் அதை அணிவித்து.. மனையாளின் கால் சிணுங்கலை இவன் கேட்டிட.. நெஞ்சம் விம்ப.. காதலுடன் கண்ணில் நீர் தேங்க.. பேச்சற்று காதலோடு இரு கரம் நீட்டி வா என்று கணவனை இவள் அழைக்க.. பாந்தமாகவே தன்னவளின் கைகளுக்குள் காதலோடு அடங்கியவனின் முகம் எங்கும் முத்தாடலை நடத்தினாள் பாவை.
அதில் கரைந்தவன் "பிடிச்சிருக்கா" என்று கேட்க
"ஹ்ம்ம்.. எல்லாமே பிடிச்சிருக்கு.. கூடவே உங்களையும்" என்றவள் "ஆனா நான் உங்களுக்கு gift எதுவும் வாங்கலையே" எனச் சுணங்கிட
அதில் தன் விழிகளை, மனையாளின் விழிகளோடு கலந்தவன் "இருக்கே.. எனக்கு வேண்டியது உன் கிட்ட இருக்கு.. நான் கேட்டா.. அதுக்கு நீ ஒத்துக்கனுமே" என்றவனின் குரலில் தயக்கமே இழையோட
அதை உணர்ந்தவள் "என் கிட்ட என்ன தயக்கம் விதுன்.. நீங்க கேளுங்க" என்றவளின் குரலும் நாணத்தோடு மிளிர
இன்னும் தயக்கம் மேலிட மனையாளின் காதோடு ரகசியமாய் இவன் கேட்டிட.. இந்த ஏகாந்த இரவில்.. தனிமையில்.. இருவருக்குமான இன்றைய நெகிழ்வில் கணவன் தங்களுடனான கூடலைப் பற்றிக் கேட்பான் என இவள் நினைத்திருக்க.. ஆனால் தன்னவன் கேட்டதில் முதலில் திகைத்தவள்.. பின் அகம் பூரிக்க.. கணவனின் தயக்கம் உடைக்க.. தன் வெட்டகத்தைத் துறந்து.. தன் ஆடைகளை நெகிழ்த்தி.. கணவன் தன் நெஞ்சத் தழும்புகளைக் காண வழி செய்து தந்தாள் பெண்ணவள்.
ஆமாம்.. தன்யாவுக்கு அன்று நடந்த அறுவை சிகிச்சையின் போது உதித்த.. அவள் நெஞ்சில் நீங்கா தடமாய்ப் பதிந்திருக்கும்.. இதுவரை இவன் காணாத அத்தழும்புகளை இன்று காண தான் தயக்கத்துடன் கேட்டிருந்தான் ஆண்மகன்... கூடலின் போது அதை அவன் கண்டிருந்தால்.. அதுவும் அவள் உடலில் ஓர் அங்கம் என இவன் கடந்திருப்பான்.. காதல் இல்லாமல்... காமம் அற்று... அன்பின் பரிதவிப்போடு.. ஒரு தாயின் வலியோடு முற்றும் துறந்த தன்னவளின் நெஞ்சின் கூட்டை இவன் காண வேண்டும்.. அதன் பொருட்டே இந்தத் தயக்கம்..
என்ன தான் கணவனுக்குப் பெண்ணவள் வழி செய்து தந்தாலும் கூச்சம் மேலிட.. கணவனைக் காண தயங்கி இவள் முகத்தைப் பக்கவாட்டில் திருப்பிக் கொள்ள... அதெல்லாம் ஆண் மகன் கருத்தில் பதியவேயில்லை... அன்று எத்தனை வலித்திருக்கும்.. எவ்வளவு ரணங்களைத் தாங்கியிருப்பாள்.. அதிலேயே அகம் ரணப்பட்டது இவனுக்கு... வெளியே கூடாரத்தின் மீது மழை துளி "டப் - டப்" எனத் தாள லயத்துடன் விழுந்திட.. உள்ளே இவன் தன்னவளின் இதயபீடத்தைக் கண்ணீரால் அபிஷேகம் செய்து.. உதடுகளால் அர்ச்சித்து.. பரிவுடன் விரல்களால் ஆராதித்துக் கொண்டிருக்க.. அதில் மனையாளின் சமாதானம் எதுவும் அவன் செவிகளைச் சென்றடைவதாகவே இல்லை... மொத்தத்தில் இருவரும் கூடலின்று உணர்வுகளின் குவியலாய் அன்றைய இரவை கழித்தார்கள்.