நிச்சயம் இப்படி ஒரு surprise சை தன்யா கணவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.. இன்று அவள் இருப்பது மும்பைக்கு அருகே இருக்கும் weekend gateway இல். நேற்று இரவின் இருளில் கண்டு ரசிக்க முடியாத ஏரியின் அழகை எல்லாம்.. காலை எங்கும் பனி படர்ந்து.. புகை மூட்டமாய்க் காட்சி அளிக்கும் இயற்கையைத் தன் உடல் வாகுக்குத் தோதாய்.. ஜீன்ஸ் பேன்ட்.. க்ராப் டாப்பின் மேலே குளிருக்கு இதமாய் ஸ்வெட்டர் அணிந்து.. தலை முடியைத் தூக்கிக் கட்டி மெர்ஸி பன்னில் அடக்கியவள்.. அவ்வப்போது தன் உள்ளங் கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் பதித்த படி ஏரியை ரசித்துக் கொண்டிருந்தவளின் எண்ணங்களோ நேற்றைய இரவை நோக்கிப் பயணித்தது.. இரவு தன்னவன் தந்த அன்பிலும்.. காட்டிய அரவணைப்பிலும்.. பொழிந்த காதல் மொழிகளிலும் திளைத்தவளின் நெஞ்சமோ கணவன் அடுத்தப் பரிமாணத்தை நோக்கிச் செல்லாததைக் கண்டு அவளின் அகம் திடுக்கிடத் தான் செய்தது. ஏன்.. இன்னும் என்ன கோபம்.. அதிலும் இவ்வளவு அந்நியோன்யமான நேரத்திலும் என்று கலங்கியவள் மறந்தும் அவனிடம் எக்கேள்விகளையும் கேட்கவில்லை.
எழுந்தது முதல் பனியில் நனைந்த புத்தம் புது மலராய் காட்சி தரும் மனைவியைத் தான் ரசித்துக் கொண்டிருந்தான் திபாகரன். அந்நேர குளிருக்கு இதமாய்க் கணவன் கொடுத்த காபியை இவள் பருக... தன்னவளைத் தான் பார்வையால் பருகிக் கொண்டிருந்தான் திபாகரன். அவனின் மனதிலும் நேற்றைய இரவின் தடங்கள். என்ன சொல்வான்... இரவு மனைவி தன் காதலில் கிறங்கி.. தன் அணைப்பில் உருகி.. தன் செயலில் மயங்கி உருகி.. தன்னுடன் தன்னவள் இணக்கமாக இருந்தாலும்.. ஏனோ மனையாளை ஆள இவனுக்கு விருப்பமில்லை.. காரணம் அவள் கேட்ட விவாகரத்து.. அதற்கான காரணக் காரியங்கள் இவனுக்குத் தெரிய வேண்டுமே.. அதன் பொருட்டே தன்னவளின் மதிமுகம் இவனை மயக்கினாலும்.. எதையும் கேட்டு அன்றைய சூழலை கெடுக்க விரும்பவில்லை இவன்.. அதேநேரம் இனியும் மனையாளை விட்டு தூர இருப்பானா என்பதும் சந்தேகம் தான்.
அந்நேரம் இருவரின் எண்ணங்களைத் தடை செய்தது அஜய், சுந்தரியின் வருகை.. பிறகான நேரங்கள் அவர்களுடனே செல்ல.. அஜய் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்.. சுந்தரி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். மதியம் உணவுக்குப் பிறகு சுந்தரி.. தான் பிறந்த ஊரைப் பற்றிக் கதை பேசவும், கேட்கவும்.. தன்யாவைத் தன்னுடனே அமர்த்திக் கொள்ள.. அந்நேரத்தைப் போக்க ஆண்கள் இருவரும் சிறிய துடுப்புப் படகை எடுத்துக் கொண்டு படகு சவாரி செல்ல எத்தனிக்க.. அதற்குத் தன்யா விழியாலேயே அணைகட்ட
மனையாளின் விழியில் பயத்தைப் படித்தவன் "பயப்படாத ரிது.. இது எனக்குப் பழக்கம் தான்.. you don't worry" என்று தைரியம் சொல்லியே சென்றான் திபாகரன்.
இருந்தும் தன்யாவின் நெஞ்சை பயம் மையம் கொள்ளத் தான் செய்தது.. என்ன தான் சுந்தரியுடன் இவள் வார்த்தை ஆடினாலும்.. விழிகளோ அவ்வப்போது ஏரிக்கரை ஓரமே சென்று மீண்டது.. பெண்ணவளின் பயத்தை அதிகப்படுத்தவென திடீரென வானிலை மாற்றத்தின் காரணமாக ஏரியில் தண்ணீரின் ஓட்டம் அதிகம் எனச் சிலர் பேசிக்கொள்ள.. தவித்துத் தான் போனாள் இவள்.. அதிலும் கணவனைத் தவிர மற்றவர்களுடன் அஜய்யும் திரும்பி வந்து விட.. முழுமையாக உடைந்தே போனாள் தன்யா.. நேரம் செல்ல செல்ல தன் இயலாமையால் உருவான அழுகையில் கரைந்தவள்.. கணவனைத் தேடச் சொல்லி ரிசாட் நிர்வாகியிடமும், அஜய்யிடமும் இவள் கெஞ்சிக் கொண்டிருந்த நேரம் எவ்வித சேதாரமும் இன்றித் திபாகரன் வந்து சேர.. அவனைக் காணவும் நெஞ்சம் படபடக்க, "அத்தான்" என்ற அழைப்புடன்.. கண்ணீரில் உடல் நடுங்க ஓடிச் சென்று கணவனைக் கட்டிக் கொண்டாள் பெண்ணவள். அவனின் பரந்த நெஞ்சில் புதைந்திருந்த அவளின் முகத்தை.. எந்தச் சமாதான வார்த்தையும் நிமிர்த்த வில்லை.. அவளுள் ஆழிப் பேரலையாய் அத்தனை நடுக்கம்.. அதை அறிந்தவன்.. பேச்சற்று தன்னவளை அணைத்துக் கொள்ள
"ரொம்பப் பயந்துட்டா திபாகர்" என்ற சுந்தரி
"அட போப்பா.. என்ன நீ.. எல்லாரையும் கலங்க வச்சிட்ட" என்ற அஜய் ஆசுவாசமாய் அவனின் தோளைத் தட்டிக் கொடுக்க
"என்ன சார் இப்படிப் பயப்பட வச்சிட்டிங்க.. at last thank God" என்ற ரிசாட் நிர்வாகி.. என ஏனையோரின் வார்த்தைகள் எதுவும் தன்யாவின் செவியைச் சென்றடையவில்லை. அவளுக்கு அவளின் கணவன் எவ்வித சேதாரமும் இன்றித் திரும்பக் கிடைத்து விட்டான்.. அதன் நினைவில்.. அவனைத் தொட்டு வருடி.. கேவலுடன் உணர்ந்து கொண்டிருந்தாள் இவள்.
மற்றவருடனான பேச்சுகள் முடிந்ததும்.. இவன் மனைவியைத் தங்கள் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்ல எத்தனிக்க "அது எப்படித் தான் உங்க ஊர் பொண்ணுங்க எல்லாம் எங்கள மாதிரி அப்பாவிகள அத்தான்னு கூப்பிட்டே தலை குப்புற விழ வைக்கிறீங்களோ" என்று அஜய் கேலியுடன் சுந்தரியை சீண்டிய படி செல்வது இவனுக்குக் கேட்கவும்.. மெல்ல தானும் புன்னகைத்துக் கொண்டான் திபாகரன்.
கூடாரத்தின் உள்ளே வந்ததும் இவன் "ரிது.. பிளீஸ் அழாத ம்மா.. என்ன பாரு டா.. எனக்கு ஒன்னும் இல்ல கண்ணம்மா" என்று இவன் தன்னவளின் கேசம் கோதி சாமாதனப் படுத்த
அவளோ பெருங்கேவலுடன்.. தன்னவனின் நெஞ்சில் அடித்து "என்ன காரியம் செய்துட்டிங்க நீங்க.. ஒரு நிமிஷம் என் உசுரே என் கிட்ட இல்ல.. போங்க.. போங்க.. நீங்க திரும்ப வரலனா நான் இந்த இடத்த விட்டுப் போயிருக்க மாட்டேன் அத்தான்.. because I madly love you அத்தான்" என்று பெண்ணவள் கண்ணீருடன் தன் காதலை பெரும் வலியோடு சொல்ல
அதில் நெக்குருகிப் போனவன் "அப்படி எல்லாம் சொல்லாத டி தங்கம்" என்று பொய்யாய் அதட்டி.. தன்னவளைத் தன் மடி தாங்கி ஏரியின் மறு திசையில் படகைச் செலுத்தி தான் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததை இவன் விவரிக்க
"ஆமா இவரு பெரிய ஹீரோ.. கதை சொல்றாரு" என்று இவள் நொடிக்க
"ஹா.. ஹா.." வாய் விட்டே சிரித்தவன் "சரி சொல்லு கண்ணம்மா.. என் மேல இந்த அளவுகு உயிரே வச்சிருக்கற நீ.. பிறகு ஏன் டி விவாகரத்து கேட்ட"
கணவனின் அழுத்தமான கேள்வியில் அவனின் முகம் காண தயங்கி ஒரு நொடி மௌனித்தவளோ.. பின் அன்று தங்கள் இல்லத்திற்கு வந்து இவன் தாய் பேசிய அனைத்தையும் சொல்ல.. உடல் இறுகியது ஆண்மகனுக்கு. அதில் பதட்டத்துடன் கணவனை இறுக அணைத்துக் கொண்டவள் "இல்ல... இல்ல.. பிளீஸ் கோபப் படாதிங்க.. அன்றிருந்த சூழ்நிலையில் அதை நிஜம்னு நம்பி தான்.. அப்படிச் செய்தேன்.. தப்பு தான்.. நான் மனசார கேட்கலங்க.. இப்ப உங்கள புரிஞ்சிகிட்டேன் I know you loves me" இவள் உணர்ந்து சொல்ல.. இவனிடம் எவ்வித எதிர்வினையும் இல்லை.. முற்றிலும் கோபம்.. கோபம்.. கோபம் மட்டும் தான்.. "நீங்க தான் விவாகரத்து கேட்குறீங்கன்னு சொல்லும் போது.. பிறகு நான் என்ன செய்ய.. அதிலும் உங்க அம்மாவே வந்து சொல்லும் போது" இவள் அழுத்தத்துடன் கேட்டிட
மனைவி தன்னை முழுமையாக வெறுத்ததால் விவாகரத்து கேட்கவில்லை என்பதை இவன் அகம் உணர்ந்து கொண்டாலும் "அடடே.. மேடம்க்குக் கோபம் எல்லாம் வருது பாரேன்" என்று போலியாய் வியந்தவன் "இந்த வியக்கியானத்துக்கு ஒன்னும் குறைச்சலில்ல.. நானே உன் கிட்ட வந்து விவகாரத்த கேட்டிருந்தாலும்.. நீ சண்டை போட்டிருக்கனும்.. குறைந்த பட்சம் என்னைய நேருக்கு நேர் பார்த்து.. ஏன் டா மடையா.. உனக்கு அவ்வளவு திமிரா.. தாலி கட்டிய அன்றே பொண்டாட்டி முகத்தைக் கூடப் பார்க்காம ஓடிப் போனவன் தான நீ.. இப்ப மட்டும் எந்த முகத்தை வச்சிட்டு வந்து விவாகரத்து கேட்குற.. உனக்கு எல்லாம் கல்யாணம் ஒரு கேடா.. உனக்குக் கல்யாணம்ணா அவ்வளவு ஈசியா போய்டுச்சான்னு.. என் சட்டையப் பிடிச்சி நீ கேட்டிருக்கனும்.. அதை விட்டுட்டு நான் கேட்டனா.. இவ இந்தாங்கன்னு.. தூக்கித் தந்தாளாம்" என்று முதலில் கோபத்தில் காட்டமாகக் கேட்டவன்.. இறுதியில் நக்கலில் முடிக்க
கணவனின் புது வித பரிமாணத்தில் இவள் பே.. என்று முழிக்கவும் "சும்மா.. சும்மா.. இப்படி எல்லாம் பார்க்காத டி எனக்குக் கோபம் வருது" என்றவன் "இன்னும் மேடம் அதே எண்ணத்தில் தான் இருக்கீங்களா" கோபத்துடன் இவன் கேட்க
இல்லையென்று மனைவி பரிதாபத்துடன் தலையை உருட்டவும்.. அதில் மனம் வருந்த "இனியும் அப்படி ஓர் எண்ணம் உனக்கு வரவே கூடாது.. நான் அம்மா கிட்ட பேசுறேன்.. அப்பாவுக்காக முதலில் அவங்க நம்ம திருமணத்தை ஏத்துகிட்டாலும்.. அவர் இறப்புக்குப் பிறகு அவங்களால ஏத்துக்க முடியல.. விடு.. நான் அவங்க கிட்ட சொல்லி இருக்கேன் என் வாழ்வில் ஒரு முறை தான் திருமணம்.. அதுவும் அது தன்யாவோட முடிஞ்சிடுச்சின்னு.. உனக்கும் சொல்றேன்" என்ற கணவனின் வாயை அவசரமாகத் தன் கை கொண்டு அடைத்தவள் "நான் புரிஞ்சிகிட்டங்க.. அதனால தான் I love you madly" என்று இடைவெட்டியவள் உணர்ந்து காதலோடு சொல்ல.. அதில் கிறுக்கனானவன்.. அடுத்து கணவன் என்ற பரிமாணத்தில் தன்னவளையும் இவன் கிறுக்காக்க.. அதில் மயங்கி.. கிறங்கி.. உருகியவளின் தேகம் தகித்திட.. கணவனின் மெய் நிகரா காதலிலும்.. இதழ் தீண்டலிலும்... விரல் வருடலிலும்.. இவள் தன்னை மறந்து "அத்தான்.. அத்தான்.." என்று பிதற்ற.. அதில் உன்மத்தம் கொண்டவனோ முழுமையாகத் தன்னவளை ஆள.. இனிதே அங்கொரு அழகிய சங்கமம் நடந்தேறியது.
அயர்வுடன் கணவனின் நெஞ்சில் தலை வைத்து உறக்கத்தில் இருந்தவள்.. திடீரெனத் தன்னவனின் நெஞ்சை வருட.. அதில் சுகம் கண்டவன் உறக்கதிலே "ஹ்ம்ம்..." என்ற முனகலுடன்.. மனைவியின் முகம் நிமிர்த்தி இவன் அவள் இதழில் முத்தாட.. முத்தத்தில் கிறங்கியவள் பசியின் நினைவில் வலுக்கட்டாயமாய் இதழைப் பிரித்து.. "விதுன்.. எனக்குப் பசிக்குது" என்றிட
"அடிப் பாவி அது என்ன டி.. இவ்வளவு நேரம் அத்தான்.. அத்தான்னு கொஞ்சிட்டு.. இப்ப மட்டும் விதுன்னு பேர சொல்ற" என்றிட
பதட்டத்திலும்.. கிறக்கத்திலும் கூறியது எது தான் பெண்ணவளுக்கு நினைவு இருக்கு.. அது அந்த நேரத்தில் கூறியவை.. அது வேறு வாய் இது வேறு வாய் என்று பாவம் திபாகரனுக்குத் தெரியவில்லை..
"யாரு நானா.. இல்லையே.." கணவன் தன்னை அறிந்து கொண்டதில் இவள் வெட்கத்துடன் மறுக்க
"அடிப் பாவி.. என்னம்மா கொஞ்சிட்டு.. இப்ப என்னம்மா ரீல் விடற நீ"
"நான் தான் இல்லன்னு சொல்றேன்.. சும்மா நீங்க தான் ரீல் சுத்துறீங்க" செம்மை பூசிய தன் முகத்தைக் கணவனுக்குக் காட்டாமல் இவள் மீண்டும் மீண்டும் பொய்யாய் மறுக்க
"யாரு நானா ரீல் சுத்தறேன்.. மேடம் நீங்க இன்னைக்கு மட்டும் அப்படிக் கொஞ்சலங்க.. ஊருல எத்தனை நாள் ராத்திரி நீ என் உதட்ட கடிச்சிருக்கத் தெரியுமா.. நான் கூட என்ன டா இப்படி உதடு வீங்கிப் போகுதே எதாவது எறும்பு கடிச்சிருக்குமோன்னு காலையில் எழுந்ததும் நினைப்பேன்.. பிறகு தான் தெரிந்தது அது நான் கட்டிக்கிட்ட இந்தச் சித்தெறும்புன்னு.. ஆனா ஒன்னு டி.. அத்தான்.. அத்தான்னு என்னம்மா ராத்திரியில என் உதட்ட கடிச்சி வச்சிட்டு.. காலையில ஒன்னும் தெரியாத மாதிரி இருப்ப தெரியுமா" அவள் மறுக்கவும் இவன் கேலி கிண்டலில் இறங்கித் தன்னவளைச் சீண்ட
அதை உண்மை என்று நம்பிய மனையாட்டியும்.. கண்ணீல் நீர் தேங்க.. மாட்டிக் கொண்ட பாவனையுடன்.. அப்பாவியாய்க் கணவனைக் காண.. அதில் மயக்கத்தோடு தன்னவளின் நெற்றியில் இதழ் பதித்தவன் "சரி.. சரி.. அதை நான் மன்னிச்சிட்டேன் மறந்துட்டேன்.. இப்ப அத்தான்னு கூப்பிட்டு ஒரு முத்தம் கொடு" என்றவன் பாவனையோடு தன் இதழைச் சுட்டிக் காட்ட
அதில் தான் கணவனின் கள்ளத்தனத்தை அறிந்தவளோ "fraud மனுஷா.. என்ன சொன்னிங்க.. நான் சித்தெறும்பா உங்கள கடிச்சன்னா.. நான் செய்யாதத சொன்னீங்க இல்ல.. இனி பாருங்க தினமும்.. இந்தச் சித்தெறும்பு உங்கள என்ன செய்துன்னு பாருங்க" இவளும் தன்னவனுக்கு நிகராக வாயாட
"I am always waiting கண்ணு" என்று இவன் காதலோடு மொழிய
அதில் கணவனின் முகம் பார்த்தவள் "அப்பத்தா தான் உங்கள அப்படிக் கூப்பிட சொன்னாங்க.. அதுவே எனக்குப் பழகிடுச்சி.. ஆனா அது உங்களுக்குப் பிடிக்குமோன்னு முன்ன தயக்கம் இருந்தது.. இப்ப இல்ல"
"ஹ்ம்ம்.. பிடிச்சிருக்கு கண்ணம்மா.. அப்பத்தா தீர்க்கதரிசி இல்ல.. நாம ரெண்டு பேரும் வாழ்வில் இணைந்தா நல்லா இருப்போம்னு அவங்களுக்குத் தெரிந்திருக்கு பாரு"
"ஹ்ம்ம்.. ஆனா அப்பத்தா இப்ப நம்ம கூட இல்லையே"
என்ற மனைவிக்கு "அவங்க ஆசீர்வாதம் என்னைக்கும் நமக்கு இருக்கும் கண்ணம்மா.. வா நாம சாப்பிட போகலாம்" என்றவன் பேச்சின் திசையை மாற்ற அதை ஆமோதிப்பது போல் தன்னவனை இறுக்க அணைத்துக் கொண்டாள் பெண்ணவள்.