மேலும் நான்கு தினங்கள் அந்த ரிசாட்டிலே தங்கி.. தீரா கூடலில் தான் களித்தார்கள் இருவரும்.. முதல் நாள் கணவனிடம் இருந்த தயக்கம் எல்லாம் விலக.. பிறகான அவனின் ஆலிங்கனத்தில்.. தான் கேட்ட விவாகரத்து தான் கணவனின் தயக்கத்துக் காரணம் என்பதை அவன் சொல்லாமலே.. தன்னவனின் காதலில் புரிந்து கொண்டாள் இவள்.
மறக்க முடியாத இனிமையான தேனிலவு நினைவுகளுடன் மனமே இல்லாமல் அங்கிருந்து விடைபெற்றவர்கள் அந்தி பொழுது தங்கள் இல்லத்திற்கு வர.. வீடு முழுக்க நெய் மணம் கமழ... முறுக்கு, லட்டு, பால்கோவா எனத் தின்பண்டங்களை அதற்கெனத் தூக்குகளில் பரபரப்புடன் அடைத்துக் கொண்டிருந்தார் தமிழரசி.. மகனைக் கண்டதும் "டேய் திபா... வா.. வா.. என்ன சொல்ல.. இந்தா சாமி லட்டு.. சாப்பிடு" வந்தததும் வராததுமாகத் தாயின் ஆர்ப்பாட்டத்தில் அவரை இவன் கேள்வியாய் நோக்க
வாயெல்லாம் பல்லாக "எல்லாம் சந்தோஷமான விஷயம் தான் டா.. நம்ம சித்ரா உண்டாகி இருக்கா.. நீ மாமா ஆகப் போறடா.. அதான் சித்ராவுக்குப் பிடித்தது எல்லாம் செய்தேன்.. காலையில முதல் வேலையா நான் அவ வீட்டுக்குக் கிளம்பறேன் டா" என்றவரின் மகிழ்ச்சியில்.. கணவன் மனைவி இருவருமே மகிழ்ந்து தான் போனார்கள்.
அதில் தன்யா "ரொம்ப.. ரொம்ப.. சந்தோஷம் அத்த.. அண்ணிய கவனமா இருங்கச் சொல்லுங்க" என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படையாகவே காட்ட
மருமகளை முறைத்தவர் "வா டி யம்மா.. வா.. உனக்காகத் தான் காத்துகிட்டு இருந்தேன்.. இதோ நேத்து கட்டின என் பொண்ணு உண்டாகிட்டா.. ஆனா உன் வயித்துல ஒரு புழு பூச்சிய கூடக் காணோம்.. எல்லாம் நாங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி" என்றவரின் கூற்றில்
தன்யா அதிர்ந்து நின்றாள் என்றால்.. மகனோ உடல் இறுக.. கோபத்துடன் "எப்படி ம்மா இப்படி எல்லாம் பேசுற நீ.. எப்பவும் சராசரி மாமியாரா தான் இருப்பியா" என்று கேட்டவன் "அப்புறம் என்ன கேட்ட புழு.. பூச்சியா.. அது தங்கறதுக்கு நாங்க சேர்ந்து வாழனும். என்னைக்காவது நாங்க வாழனும்னு நீ நினைச்சிருக்கியா" என்று அழுத்தத்துடன் கேட்டவன் "உன் கிட்ட போய்க் கேட்குறேன் பாரு நீ தான் உலகத்திலே இல்லாத அம்மாவாச்சே.. மருமக வீட்டுப் படி ஏறிப் போய்.. மகனுக்கு விவாகரத்து தரச் சொன்ன புண்ணியவதி தான நீங்க.. ஆமா விவாகரத்துத் தர சொல்லி கேட்ட உன் மருமக கிட்டயே.. வம்சம் தழைக்கப் பிள்ளைய பெத்துக் கொடுக்கச் சொல்றியே.. இது என்னம்மா உன் நியாயம்"
மகனின் நக்கலில் "என்ன டா வாய் நீளுது.. ஆமா நான் தான் கேட்டேன்.. எனக்குப் பிடிக்கல.. ஒரு நோயாளியான இவ என் வீட்டு மருமகளா.. இவ கழுத்துல தாலி ஏறவும்.. என் தாலி இறங்கிடுச்சே.. பிறகு எப்படி டா நான் இவள ஏத்துப்பேன்" தமிழரசியும் விடுவதாய் இல்லை தன் மன வக்கிரத்தை அவர் கொட்ட
"உங்களுக்குப் பிடிக்குது.. பிடிக்கல அது எனக்குத் தேவையில்ல.. எனக்கு அவளப் பிடிச்சிருக்கு.. அது போதும் எங்க வாழ்க்கைக்கு. தன்யா தான் உன் மருமக.. அவள நீ வேணாம்னு சொன்னா.. உன் பிள்ள தனி மரமா தான் நிற்பேன். இல்ல அது கூட வேணாம்.. என்னைய எங்கனா காவி உடுத்திட்டுப் போகச் சொல்றனா.. நீ இப்படியே பேசிட்டு இரு. என்ன பேச வைக்கிற ம்மா.. அப்ப உண்மை கசக்கத் தான் செய்யும்.. போதும் ம்மா இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்.. இனி நான் சொல்லாததை அவ கிட்ட திரிச்சிப் பேசி, சொல்லி வைக்காத. இப்ப மாதியே நான் எப்பவும் பொறுமையா இருக்க மாட்டேன்" என்றவனின் குரலில் கோபம் இல்லை.. நிதானத்துடன் ஒலித்த அக்குரலே தான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதைப் பறைசாற்ற
"என்னங்க" தன்யா கணவனைக் கட்டுப்படுத்த வர
மகனின் புது அவதாரத்தில் அதிர்ந்த தமிழரசி "என்ன டி.. எல்லாத்தையும் போட்டுக் கொடுத்திட்டியா.. அப்படி என்ன டி மாய்மாலம் செய்த.. பாரு என் மகன் எப்படி எல்லாம் பேசுறான்" அதற்கும் மருமகளையே தமிழரசி சாட
"ம்மா.. உனக்கு விவஸ்தை இருக்கா.. மகன் கிட்ட பேசுறோம்னு கூறு வேணாம்.. அவ வாய் இல்லா பூச்சிமா அதான் நான் பேசுறேன். இதே அவ கேட்குற மாதிரி இருந்தா.. இந்நேரம் மாமியாரும்.. மருமகளும் குடுமியப் பிடிச்சிக்கங்கன்னு நான் ஒதுங்கிப் போயிருப்பேன்.. இதோட இந்தப் பேச்ச விடுங்க.. இனி எங்க விஷயத்துல தலையிடாதிங்க" என்று தாயை எச்சரித்தவன் "வா ரிது" என்ற படி கையோடு மனைவியையும் அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் சென்று மறைந்தான் திபாகரன்.
தாய் சொன்ன செய்தியை கேட்டு.. சந்தோஷத்தில் இவன் மனைவியோடு சென்று தங்கையைப் பார்த்து நலம் விசாரித்தவன்.. நண்பனான தங்கை கணவனைத் தனியே சந்தித்து.. முகம் கொள்ளா சிரிப்புடன் "மாப்பிள்ளைக்கு அம்புட்டு அவசரம்.. அதான் என்ன ஒரே மாதத்திலே மாமாவா ஆக்கிட்ட" என்று இவன் கேலி கிண்டலுடன் சீண்ட
கார்த்திக்கு வெட்கம் மேலிட.. விரிந்த புன்னகையோடு "மச்சான்.." என்ற அழைப்புடன் நண்பனை அணைத்துக் கொண்டான் அவன்
அப்படி இப்படி என்று நாட்கள் அதன் போக்கில் நகர.. தன்யாவின் திறமையைப் பார்த்து ஃபாதரும் மழலையர் ஆசியருக்கான படிப்பை எடுத்து அவளைப் படிக்கச் சொல்ல.. மனைவியின் விருப்பத்தின் பேரில்.. ஒரு வருட மாண்டிசோரி கோர்சில் அவளைச் சேர்த்து விட.. வழக்கம் போல அதற்கும் கடுகடுத்தார் தமிழரசி. ஆனால் தன்யா ஆர்வத்துடன் படிக்கவும்.. மனைவியை அவள் போக்கிலே விட்டான் இவன்.
தாங்கள் விட்டதுக்கு எல்லாம் சேர்த்து.. திகட்ட திகட்ட காதலில் கரைந்தார்கள் கணவன் மனைவி இருவரும். திபாகரனின் தொழில்.. தன்யாவின் படிப்பு.. இவர்களின் காதல் என்று நாட்கள் ரெக்கை கட்டி தான் பறந்தன. இதற்கிடையில் சித்ராவுக்கு ஏழாம் மாதமே வளைகாப்பு செய்வது என முடிவாக.. அந்நாளும் வர.. இருவீட்டாரும் நிறைவுடன் அனைத்தும் செய்ய இனிதே நடந்தேறியது அந்நிகழ்வு. மண்டபத்தில் சோர்வுடன் வலம் வந்த மனைவியைக் கண்ட திபாகரன்.. வீட்டுக்கு வந்ததும் தனிமையில் விசாரிக்க.. அப்போது தான் பல்ப் எரிந்தது தன்யாவுக்கு "அச்சோ அத்தான் இதை எப்படி நான் மறந்தேன்.. படிப்பு வேலைன்னு இருந்ததுல இதை நான் கவனிக்கல போல" என்றவள் சந்தோஷத்தில் அப்பாவியாய் விழிகள் விரிக்க
"என்னத்த டி மறந்த" இவனுக்கு எதுவும் பிடிபடவில்லை.
"க்கும்.. பேர் தான் பெரிய பிசினஸ் மேக்னட்டு.. ஆனா இந்தச் சின்ன விஷயத்தைக் கூட நான் தான் சொல்லனும்" என்றவள் காதலோடு கணவனை நெருங்கி வெட்கத்துடன் அவனின் காதோரம் ரகசியம் பேச
அடுத்த நொடியே "யாஹூ..." என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த படி.. மனைவியைத் தன் கைகளில் ஏந்தி சுற்றியவன்.. பின் நிதானித்துடன் மனையாளை கீழே நிற்கவைத்து "இதனால நம்ம பாப்பாவுக்கு எதுவும் ஆகாது இல்ல" என்று கவலை கொள்ள
"எதுவும் ஆகாதுன்னு தான் நினைக்கிறேன்" என்றவளோ சிறு யோசனையோடு மனக்கணக்கிட்டவள்.. "56 நாள் தான் தள்ளி இருக்கு.. எப்படியும் அறுபது நாள் ஆனா தானே உறுதியாகும்ன்னு சொல்லுவாங்க" என்ற மனைவியின் குரலில் கலக்கத்தை உணர்ந்தவன்
"அதெல்லாம் பாப்பா நல்லா தான் இருக்கும்.. கவலைப்படாத.. நான் வேணா கிட் வாங்கிட்டு வரேன்.. பாரு"
"இல்ல.. இல்ல.. வேணாம்.. நாம லதா ஆன்ட்டிய.. போய்ப் பார்த்து confirm செய்துக்கலாம்" ஏனோ தனக்கு நடந்த ஆபரேஷன் வைத்து தன்யாவினுள் பயம்.. மற்றும் இன்னும் சில சந்தேகங்கள் இவளுக்குள் இருக்க.. அதன் பொருட்டே லதாவிடம் செல்ல நினைத்தாள் பெண்.
பரிசோதனையில் டாக்டர் லதா குழந்தை என உறுதிப்படுத்தியவர்.. மாதங்கள் கடந்த பிறகு மேற்கொண்டு மற்ற பரிசோதனைகளுக்கு வரச் சொல்லியவர்.. தன்யாவின் பயத்தையும்.. சில சந்தேகங்களையும் தீர்த்தவர்.. மறக்காமல் திபாகரனிடமும் கவனமாக இருக்கும் படி சில அறிவுரைகளையும் வழங்கத் தவறவில்லை அவர்.
வீட்டுக்கு வந்து தாயிடம் சொல்ல.. மகிழ்ந்து தான் போனார் தமிழரசி. பின்னே அவர் வீட்டு வாரிசு இல்ல வரப் போகுது... ஓடிச் சென்று கணவன் படத்தின் முன்னிருந்த திருநீறை எடுத்து வந்து சந்தோஷத்துடன் மகன்.. மருமகளுக்குப் பூசியவர்.. "எல்லாம் நம்ம சித்ரா உண்டாகி இருக்கற நேரம்" என்க
புன்னகையுடன் கணவன் மனைவி இருவருமே அதை ஆமோதிப்பது போல் தலை அசைத்துக் கொண்டனர். தனிமையில் கணவனின் மெல்லிய அணைப்பில் இவள் இருக்க "ரொம்ப சந்தோஷம் கண்ணம்மா.. நமக்குன்னு ஓர் உலகம்.. அதுல குட்டியா நம்ம பாப்பா வரப் போகுது.. இப்படி ஒரு வாழ்வ தான் டி நான் கேட்டேன். ஆனா இடையில் ஏதேதோ நடந்து போச்சி.. தாங்க்ஸ் டி கண்ணம்மா" காதலோடு உணர்ந்து சொல்லி மனைவியின் நெற்றியில் முத்தம் பதிக்க
அதில் நெகிழ்ச்சியுடன் கணவனின் கழுத்தை இவள் கட்டிக் கொள்ள "உன் அப்பத்தா நமக்கு வந்து பிறக்கப் போறாங்க பாரு" கணவன் திடீரென ஆருடம் சொல்ல
"ஏன் பொண்ணு.. பையனா இருக்கக் கூடாதா"
"பையன்னாலும் இஷ்டம் தான்.. ஆனா உனக்குத் தான் அப்பத்தாவ ரொம்பப் பிடிக்குமே.. அதனால தான் சொன்னேன்.. நமக்குக் குட்டி தேவதை பிறப்பான்னு" இவன் உணர்ந்து அகம் தொட்டுச் சொல்ல
"ஹ்ம்ம்.. பையன்னா உங்க அப்பா பிறப்பார்னு எடுத்துக்கலாம்" என்றவள் "நான் கேட்கனும்னு நினைப்பேன்.. நீங்க உங்க அப்பாவ மிஸ் பண்றிங்களா" என்று கேட்டிட
"இல்லாம போகுமா.. ரொம்ப.. ரொம்ப.. அவர் எனக்கு எல்லாமாக இருந்தவர் ரிது" ஆத்மார்த்தமாய்ச் சொன்னவன் "சரி நாம எப்பவும் அவர் விஷயம் பேச வேணாம்.. நாம நமக்கு வரப் போற பாப்பா பற்றி மட்டும் பேசுவோம்" என்று அந்நேரம் தன் அகம் மறைத்துக் கொண்டான் அந்தக் காதல் கணவன்.
இந்த சந்தோஷ செய்தியைக் கேட்டதும் மறுநாளே.. தன்யாவைக் காண வந்தார்கள் வல்லவன், அவர் மனைவி மற்றும் மகிழ்வரதன். முதல் முறை மகள் வீட்டுக்குச் செல்வதால்.. கூடவே இந்த சந்தோஷ செய்தியும் சேர.. பழம்.. தின்பண்டம் என்று இல்லாமல் நகையும் சேர்த்து அமர்க்களப்படுத்தி விட்டார் மகிழ்வரதன். முறையாய் தமிழரசி அனைவரையும் வரவேற்க.. முகம் கொள்ளா புன்னகையுடன் ஓடி வந்து தன் தந்தையைக் கட்டிக் கொண்டாள் தன்யா. அதில் "இவ்வளவு வேகம் கூடாது பேபி.. சில்" என்றவர் மகளின் தலை வருடி உச்சிமுகர்ந்து "ஹெல்த்தப் பார்த்துக்க.. உனக்கு என்ன வேணுமோ டாடி கிட்ட கேளு" என்று பரிவாய் அவர் சொல்ல
வல்லவன் தன்யாவை வாழ்த்த, அவர் மனைவியோ அவளை அணைத்துக் கொண்டு "உனக்கு எதாவது சாப்பிட வேணும்னா.. எனக்கு ஒரு போன் போட்டு சொல்லு.. செய்து எடுத்து வரேன்.. பயப்படாத.. எதையும் நினைச்சி கவலைப்படாத.. நாங்க இருக்கோம்" என்று ஒரு தாயாய் அவளை அவர் ஆறுதல் படுத்த நெஞ்சம் நெகிழ்ந்தது இவளுக்கு.
இடையில் "படிப்ப என்ன செய்யப் போற பேபி" என்று வல்லவன் கேட்க
தன்யா, "இன்னும் four monthல exam வந்துடும் அங்கிள்.. எனக்கும் இப்ப பெருசா மயக்கம், சோர்வு இல்ல.. சோ நான் continue பண்றேன்"
"குட்.. பட் அதே நேரம் உன் ஹெல்த்தையும் பார்த்துக்க" என்றவரின் அறிவுரையை ஏற்றுக் கொண்டாள் இவள்.
எல்லோருக்கும் வீட்டில் மதியம் விருந்துக்கு ஏற்பாடு ஆக.. கணவனை மதிய உணவுக்கு இவள் வரச் சொல்ல.. மறுக்காமல் வந்த திபாகரனும்.. வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று.. அனைவருடனும் சேர்ந்து உணவை உண்டு முடிக்க.. தந்தை கிளம்பும் நேரம் இவள் தாயைப் பற்றி யாரும் அறியாமல் அவரிடம் கேட்க
"Leave it baby, மம்மி கோபத்துல இருக்கா.. நீ நம்ம கம்பெனி வர மாட்டேன்னு சொன்ன இல்ல அந்தக் கோபம்.. பேரக்குழந்தைங்க வரப் போறாங்கன்னு சொன்னா சந்தோஷப்படுவா.. இப்ப மம்மி மஸ்கட்ல இருக்கா" என்று விளக்கம் தந்தவர் "உனக்கு வேண்டிய பக்குவத்துக்கு.. வாய்க்கு ருசியா நீ சாப்பிட நினைப்ப.. அதான் நம்ம வீட்டுல வேலை செய்த.. அன்னம்மாவை இங்க அனுப்ப இருக்கேன்.. திபா கிட்ட சொல்லிட்டேன்.. உனக்கு நேரத்துக்கு என்ன வேணுமோ அவங்க கிட்ட கேளு உடம்பப் பார்த்துக்க" என்றிட மனம் சுணங்க அதைத் தலை அசைத்து ஏற்றுக் கொண்டாள் பெண்ணவள்.
ஒரு நாள் பிரசவ நேர போராட்டத்திற்குப் பின் சித்ரா ஓர் ஆண் குழந்தையைப் பெற்றடுக்க.. அனைவருமே புது வரவை கொண்டாடி தான் தீர்த்தார்கள்.. அதிலும் கார்த்திக் முதன் முதலில் தன் மகனைக் கையில் ஏந்திய உடன்.. நண்பனிடம் வந்து மகனை திபாகரனிடம் தந்தவன் "thanks da மச்சான்" என்றிட.. நெகிழ்ந்து தான் போனான் திபாகரன்.. தாய் வீட்டில் சீராடிக் கொண்டிருந்த சித்ராவுக்கு.. முன்ன மாதிரி தாய் தன்யாவைப் பேசாததில்.. தன்யாவின் மேல் வெறுப்பு தான் அதிகமானது அவளுக்கு. ஆமாம் முன்பு மாதிரி தமிழரசி மருமகளை எதுவும் பேசுவது இல்லை தான். அதற்காகத் தன்யாவைத் தாங்கினார்... அவர் மாறி விட்டார் என்றெல்லாம் சொன்னால் அது தான் இல்லை.. தன் வீட்டு வாரிசின் வருகைக்காகச் சற்றே தன் முணுமுணுப்பைக் குறைத்துக் கொண்டார் என்றே சொல்லலாம். தன்யாவும் தேர்வை முடித்து விட.. அவளின் வளைகாப்பு நாளும் நெருங்க.. இன்று வரையிலும் மகளிடம் பேசவில்லை சசிரேகா.