நெஞ்சம் 29

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாதங்கள் உருண்டோட, தன்யாவுக்குப் பெரிய அளவில் மசக்கை உபாதைகள் இல்லை என்றாலும், சில சிறு உபாதைகள் இருக்கவே செய்ய, அந்நேரம் அவள் மனது பெற்ற தாயைத் தேட தான் செய்தது. ஆனால் அந்தத் தேடலைக் கூட முழுமையாக உருப்பெற விடாமல் அவளைத் தன் மடி தாங்கினான் அவள் கணவன். அன்று அவளுக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது உடனிருக்காத தன் நிலைக்கெல்லாம் ஈடு செய்வது போல்.. இன்று இவன் மனைவியைத் தாங்க.. பார்த்த சித்ராவுக்கு உள்ளுக்குள் புகைந்து கொண்டு தான் இருந்தது, அதில் இவள் தன்யாவைச் சீண்ட, அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை பெண்ணவள். எங்கே... அவளைத் தான் வீட்டுக்குப் புதிதாய் வந்திருக்கும் அந்தக் குட்டிக் கண்ணன் தன் குட்டிக் கண்களாலும், செப்பு உதட்டாலும், மெத்தென்ற பால் சதையாலும் மொத்தமாய் அவளின் எண்ணங்களைக் கட்டி போட்டிருந்தானே, தன்யாவின் அகம் எல்லாம் 'ஓ.. நமக்குப் பாப்பா பிறந்தா.. நம்ம பாப்பாவும் இப்படித் தான் இருக்குமா, இப்படித் தான் சிணுங்குமா, இப்படித் தான் சிரிக்குமா' என்ற சிந்தனைகள் தான்.



இதை எல்லாம் தினம், தினம் இவள் கணவனிடம் சொல்ல "ஆமா ரிது.. நமக்குப் பாப்பா பிறந்தாலும் இப்படித் தான் இருக்கும்.. அழகா ரோஜா பூ மொட்டா. ஆனா என்ன... நீயும், நானும், அமைதி பிள்ளைங்க.. ஆனா நம்ம பாப்பா சேட்டைக்காரியா இருக்கும் பாரேன்" அவனும் மகிழ்ந்து சொல்ல



"ஓ.. அதிகம் படுத்துவாளா பாப்பா.. ஆனா குட்டிப் பையா அப்படி இல்லையே" இவள் தன் சந்தேகத்தைக் கேட்க



"அவரு இன்னும் வளரல அதான்.. but you don't worry, உன்னையும்.. பாப்பாவையும் நான் நல்லா பார்த்துப்பேன்" இவன் நேசத்தோடு சொல்ல.. கணவனை இறுக்க அணைத்துக் கொண்டாள் பெண்ணவள்.



வளைகாப்பு நாளும் நெருங்க.. வளைகாப்புக்குப் பிறகு மனைவியை அவள் பிறந்த வீட்டுக்கு அனுப்பும் நோக்கமில்லை திபாகரனுக்கு.. தாங்களே அனைத்தும் பார்த்துக் கொள்வதாகத் திட்டவட்டமாகச் சொல்லிட.. அதற்கு யாரும் மறுக்கவில்லை.



ஒரு நாள் சித்ரா தான் "ஏன் தன்யா.. நாங்க எல்லாம் வளைகாப்பு முடிச்சி அம்மா வீட்டுக்குப் போகத் தான் ஆசைப்படுவோம்.. நீ என்ன இங்கே இருக்கேன்னு சொல்ற" என்று கேட்க



"என்னால உங்க அண்ணன விட்டு இருக்க முடியாது அண்ணி" தன்யா உண்மையைப் பகிர




"ஓ.. அப்ப நான் மட்டும் என்ன.. என் புருஷன எக்கேடாவது கெட்டுப் போன்னு.. தண்ணி தெளிச்சி விட்டு வந்த மாதிரி இல்ல பேசுற" சித்ரா சண்டைக்குத் தயாராக




'அதுக்கு இது பதில் இல்லையே' என்ற எண்ணத்தில் இருக்க... வாயை மூடிக் கொண்டாள் தன்யா.




உண்மையும் அது தானே.. கணவனை விட்டு அவளாலும்.. இவளை விட்டு அவனாலும் இருக்க முடியாதே.. அது மட்டும் இல்லாமல்.. இதுவரையிலும் தன்னை அழைத்துப் பேசாத.. தான் அழைத்தாலும் எடுக்காத தாயின் வீட்டுக்குச் செல்ல பெண்ணவள் விரும்பவில்லை.



தங்கள் திருமணத்தின் போது அழைக்காததற்கு எல்லாம் சேர்த்து.. உற்றார் உறவினர், சொந்த பந்தம், நண்பர்கள் என அனைவரையும் வளைகாப்புக்கு அழைத்தான் திபாகரன்.. பெரிய மண்டபத்திலே நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்க.. உறவினர்களின் ஆரவாரத்திற்கு அங்கு அளவேயில்லை.



கணவரின் வற்புறுத்தலுக்காகவும்.. மகளிடம் பேச வேண்டும் என்பதற்காகவும் வேற வழியேயில்லாமல்.. வேண்டா வெறுப்பாய் வளைகாப்புக்கு வந்தார் சசிரேகா.



வந்தவர் முதல் வேலையாக மகளைத் தேடி.. அவள் இருக்கும் அறைக்குச் செல்ல.. அங்குக் கண்ணாடி முன் அமர்ந்து தவமதி, குலமதியுடன் சேர்ந்து தனக்குத் தெரிந்த வரை தன்யா முகத்துக்கு மேக்கப் செய்து கொண்டிருக்க.



அதில் அங்கிருந்த இருவரையும் வெளியே போகச் சொல்லி விரட்டியவர் "make-up ஆர்டிஸ்ட் வரலை" என்று எடுத்ததும் சசிரேகா மகளிடம் கேட்க



தாய் தன்னைத் தேடி வந்ததில் சந்தோஷித்த தன்யா.. தாய் கேள்வியில் மனம் சுருங்க "நான் தான் மம்மி வேணாம் சொன்னேன்.. அது கெமிக்கல் தான.. வயித்துல இருக்கற பாப்பாவுக்கு ஒத்துக்காம போய்ட்டா அதான்" இவள் சின்னக் குரலில் எடுத்துரைக்க



"ரப்பீஷ்.. லோ கிளாஸ் பீப்பிள் மாதிரி பேசாத.. நாம எப்படிப் பட்ட சொசைட்டியில வாழறோம்.. நமக்குன்னு ஒரு ஸ்டேடஸ் இருக்கு. அதுபடி நடந்துக்க உனக்கு எப்ப தான் தெரியப் போது.. எல்லாம் அந்தக் கிழவி கூட வளர்ந்து வளர்ந்து அது புத்தி தான் உனக்கு இருக்கு.. உன்ன தாங்கி.. தாங்கி.. செல்லம் கொஞ்சியே.. இப்படி ஒன்னும் இல்லாதவளா ஆக்கி என் தலையில கட்டிட்டு அது போய் சேர்ந்துடுச்சி"



இன்னும் என்னவெல்லாம் சசிரேகா பேசி இருப்பாரோ அதற்குள் தன்யா, "மம்மி.. அப்பத்தாவ பத்தி எதுவும் பேசாதிங்க" என்று சீர



"அரைஞ்சனா.. என்னையே எதிர்த்துப் பேசுறியா நீ.. இந்தக் கல்யாணம் வேணாம்னு சொன்னதக் கேட்காம செய்துட்டு.. இப்ப பேபி உண்டாகிடுச்சின்னு உட்கார்ந்துட்டு இருக்க.. அதுவும் ஒன்னும் இல்லாத அந்தக் குடும்பத்து வாரிச சுமந்துட்டு இருக்க.. என் தாத்தா மார்த்தாண்ட பூபதி வம்சத்த பத்தி தெரிஞ்சும் இப்படி இருக்க நீ... எல்லாம் அந்தக் கிழவி வளர்ப்பு.. இதுல தொழில பார்த்துக்க வர மாட்டன்னு ஜம்பம் பேசினியாமே டாடி கிட்ட.. என்ன அந்த அளவுக்கு வளர்ந்துட்டியா நீ"



"மம்மி இப்ப நான் பாப்பாவோட.. இருக்கேன்" தாயின் திட்டிலிருந்து தப்பிக்க இவள் தான் உண்டாகி இருப்பதைக் கண்ணீர் குரலில் நினைவுபடுத்த



"என்ன பெரிய பேபி.. நீ என் வயித்துல இருக்கும் போது.. எத்தனை டீலிங்கை முடிச்சிக் கொடுத்து.. நம்ம கம்பெனிய நம்பர் ஒன் கம்பெனியா கொண்டு வந்தேன் தெரியுமா.. do you know"




என்றவரின் பேச்சை இடைவெட்டுவது போல் "என்ன ரிது ரெடியா" என்று கேட்டபடி அங்கு வந்த திபாகரன்.. இறுக்கத்துடன் இருந்த மாமியாரையும்.. விழிகள் கலங்க நின்றிருந்த மனைவியையும் கண்டவன்




ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து.. பதட்டத்துடன் தன்னவளை நெருங்கி "என்ன ஆச்சி ரிது.. என்ன செய்து உனக்கு.. எங்கனா வலிக்குதா.. ஏன் டா ம்மா கண்ணு கலங்குற" அங்கிருந்த இருக்கையில் மனையாளை அமர வைத்து.. இவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவளின் கையையும்.. வயிற்றையும் வருடிக் கொடுத்த படி பரிவுடன் கேட்க



"ஒன்னும் இல்ல விதுன்.. நீங்க இப்படி மேல வந்து உட்காருங்க.. உங்க பட்டு வேஷ்டி கசங்குது பாருங்க" மனைவி சோர்வுடன் சொல்ல



"அது கசங்கினா ஒன்னும் இல்ல" என்றவன் தன் கைப்பேசியை எடுத்து வல்லவனுக்கு அழைத்து "அங்கிள்.. என்னன்னு தெரியல.. ரிது சோர்ந்து தெரியறா" என்ற கணவனை மேற்கொண்டு பேச விடாமல் "அச்சோ" என்ற கூக்குரலுடன் தன்னவனின் கைப்பேசியைப் பறித்த தன்யா.. கணவனைக் கண்டன பார்வை பார்த்துக் கொண்டே "நோ.. நோ.. அங்கிள் I am alright.. எனக்கு ஒன்னும் இல்ல.. யா.. யா.. ஓகே.. ஓகே அங்கிள்.. நீங்க ஆன்ட்டிய அனுப்புங்க" இவள் தெளிவாய் பேசி அழைப்பைத் துண்டிக்க.. அதில் திபாகரன் மனையாளை முறைக்க.. அவளும் தன்னவனைப் பொய்யாய் முறைக்க



இதை எல்லாம் பார்த்தும் பார்க்காத மாதிரி அமர்ந்திருந்த சசிரேகாவை கண்டுகொள்ளாதது போல் இருவரும் அவரவர் உலகில் சஞ்சரிக்க.. இதைக் கண்ட சசிரேகாவுக்கு சந்தோஷத்திற்குப் பதில் மனதிற்குள் புகைச்சல் தான்..




சிறிது நேரம் கழித்துக் கையில் பழரசத்துடன் உள்ளே வந்த வல்லவன் மனைவி "என்ன தன்யா என்ன செய்து உனக்கு.. இந்தா இதைக் குடி.." என்றவர். "ஓ.. சசி நீ இங்க தான் இருக்கியா" என்று சசிரேகாவையும் கேட்டபடி தன்யா பருக குளிர்பானத்தைத் தர.. மறுக்காமல் அதை வாங்கித் தன்யா பருகியதும் "இந்த நேரத்துல உடல் சோர்வு இருக்கத் தான் செய்யும் திபா.. நீ பயந்து.. அவளையும் டென்ஷன் பண்ணாத.. போ.. அங்க எல்லாம் சரியா இருக்கான்னு பாரு.. நான் தன்யாவ அழைச்சிட்டு வரேன்" என்று அவர் சிறு அதட்டல் தொனியில் சொல்ல.. மனமேயில்லாமல் அங்கிருந்து விலகிச் சென்றான் திபாகரன்.



மிதமான ஒப்பனையில்.. மேடிட்ட வயிறுடன்.. தங்கச் சிலையென இருந்தாள் தன்யா.. மகளைக் காண.. காண.. கண்கள் பனித்தது மகிழ்வரதனுக்கு.. கணவன், மனைவி இருவரையும் அமர வைத்து முறையாய் நலங்கு வைத்து.. தன்யாவுக்கு வளையல் பூட்ட.. மகிழ்வரதன் தம்பதியினர் முறையாய் மகளுக்குப் பிளாட்டினம் செட்டைப் பரிசளிக்க.. வல்லவன் தம்பதியினர் தங்கத்தினால் ஆன தவழும் அழகிய கண்ணன் சிலையைப் பரிசளிக்க.. திபாகரனோ தன் மனையாளுக்கு ரூபி கல் பதித்த வளையலை அவளின் இருகரங்களுக்கும் பூட்டி அழகு பார்த்தான். எல்லாம் நிறைவாய் முடிய.. இறுதியாய் ஆலம் எடுத்ததும்.. அங்கு வைத்திருந்த ஒன்பது வகைச் சாதத்தையும்.. சிறிதே ஆனாலும் பெற்ற தாயான சசிரேகாவை அங்கிருந்தவர்கள் மகளுக்கு ஊட்ட சொல்ல.. அதில் தன்யா கணவனைக் காண.. தன்னவளின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவனோ.. வெகு இயல்பாய் நடப்பது போல்.. இவன் அங்கிருந்த கலவை சோறுகளை எடுத்து மனையாளுக்கு ஊட்டி விட.. கண்கள் பனித்தது பெண்ணவளுக்கு.. இதையும் சூழ்ந்திருந்தவர்கள் கேலி கிண்டலுடனே எடுத்துக் கொள்ள சிரிப்பொலி தவழ்ந்தது அவ்விழா மண்டபத்தில்.




நாட்கள் நகர.. தன்யா ஒன்பதாம் மாதம் தொடக்கத்தில் இருக்கும் போது.. சசிரேகாவின் கம்பெனி ஆண்டு விழா ஒன்று நடக்க இருக்க.. அதற்குக் கணவன் மனைவி இருவரையும் சசிரேகா அழைத்திருந்தார்.. 'பார் இது தான் எங்க status' என்பதை மருமகனுக்குக் காட்டவும் 'இப்படிப் பட்ட கம்பெனிக்கு வரலன்னு சொன்னியே பார் நம் கம்பெனியை' என்று மகளுக்கு எடுத்துக் காட்டவும் வரச் சொல்ல.



அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை இருவருமே.. அவர்கள் செல்ல காரணம் மகிழ்வரதனுக்காக மட்டுமே. தவிர்க்க முடியாத ஒரு வேலையாய் அவர் வெளிநாடு சென்றிருக்க.. இந்நிகழ்வை எடுத்து நடத்தும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருக்கு விபத்து ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்க.. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் வருகை தர உள்ளதால்.. முடிந்தால் விழாவுக்குச் சென்று திபாகரனை மேற்பார்வையிட சொல்ல.. அவரின் வார்த்தையை மதித்து விழாவுக்கு வந்திருந்தார்கள் கணவன் மனைவி இருவரும்.



வந்தவர்கள் கண்டது அங்கு அனைவரும் ஆளுக்கொரு மனநிலையில் இருக்க.. சசிரேகா பதற்றத்தில் எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்ள.. அனைத்தையும் புரிந்து கொண்ட பெண்ணவள்.. சடுதியில் தாயின் PA வையும், சோஃபியாவையும் அழைத்து.. நிலைமையைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டாள் தன்யா. சசிரேகாவுக்குக் கலக்கம் தான்.. அதைவிட மகளை அவர் நம்பவில்லை.. அது தெரிந்ததும்.. தாய்க்கு தக்கபடி பேசி உறுதியளித்த தன்யா அவரை மேடைக்கு அனுப்பி.. அமைச்சரை சிறப்பாய் வரவேற்று.. விழாவை ஆரம்பித்தவள். கணவனின் உதவியோடும்.. வேலையாட்களின் உழைப்பாலும் அனைத்தும் இவள் செய்ய.. விழா சிறப்பாகவே நடந்தேறியது.. இவள் பெரிதாக அங்கு எதுவும் செய்ய வேண்டியது இல்லை தான்.. அனைத்துக்கும் ஆட்கள் இருந்தார்கள்.. ஆனால் அவர்களை மேற்பார்வை இட்டு இதைச் செய் அதைச் செய் எனச் சொல்ல ஒருவர் வேண்டுமே.. அதைத் தான் மேடையின் கீழே ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டு செய்தாள் தன்யா.. அதுவே தற்போது அவள் இருக்கும் நிலைக்கு அதிகம் இல்லையா. ஆனாலும் எவ்வித சுணக்கமும் காட்டாமல் அனைத்தும் செய்தாள் பாவை.. மனைவியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு.. நேரத்துக்கே அவளை இல்லம் நோக்கி அனுப்பி வைத்து.. மீதியைத் தனதாக்கிக் கொண்டான் திபாகரன். விழாவும் சிறப்பாக முடிய அதில் சசிரேகாவுக்கு ஏக சந்தோஷம்.. அதைப் பகிர்ந்து கொள்ள மறுநாளே.. இதுவரை தான் வந்திராத மகளின் வீட்டுக்கு வந்தார் சசிரேகா.. அதுவும் எப்படிப் பெரிய பூங்கொத்துடன் தொழில் முறை சந்திப்பு போல்.. அந்நேரம் வீட்டில் தன்யாவும், சித்ராவும் மட்டும் இருக்க..




தாயை வரவேற்று தன்யா உபசரிக்க.. அவரோ எடுத்ததும் "என்ன சொல்ல பேபி.. நேத்து function நல்லா முடிய.. மினிஸ்டருக்கு அத்தனை சந்தோஷம்.. நம்ம வேலையாட்கள் கூட அப்படிப் புகழ்ந்து பேசினாங்க உன்ன.. மம்மிக்கு எவ்வளவு பெருமை தெரியுமா.. you nailed it baby.. nailed it.." என்று ஆர்ப்பரித்த தாயை.. எவ்வித பாவனையும் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் தன்யா.



"இத.. இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்.. நீ இப்படித் தான் bold ஆ இருக்கனும்.. you have a special gift within you.. ஆனா அதை எல்லாம் அந்தக் கிழவி தான் வெளி வராம தடுத்தது"



என்று கோபப்பட்ட தாயை "மம்மி அப்பாத்தாவை எதுவும் சொல்லாதிங்க" என்று சின்னவள் கண்டிக்க




"யா.. யா.. இப்ப எதுக்குக் கிழவி பேச்சி.. நீ ஏன் இங்க இருக்கனும்.. நம்ம வீட்டுக்கு வந்துடு.. வேணும்னா உன் புருஷனையும் கூட்டிட்டு வா.. அங்க நமக்கு மாளிகை போல வீடு இருக்கு.. ஒன்னும் இல்லாத இந்த வீட்டுல நம்ம வீட்டு குழந்தை பிறக்கிறத விட.. நம்ம மாளிகையில பிறந்தா.. நாளு கேர் டேக்கர வச்சி பார்த்துக்கலாம்.. உனக்குத் தொழிலையும் மம்மி சொல்லித் தர easy யா இருக்கும்.. நீ வா பேபி" என்று மகளை சசிரேகா ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்க



இவ்வளவு நாள் தன்னை வந்து பார்க்காத.. தாயை இன்று அற்ப புழுவைப் போல் பார்த்த தன்யா "எதுக்கு என்ன மாதிரியே என் மகளும் வளரவா.. என்ன வளர்க்கவாது அப்பத்தா இருந்தாங்க.. என் குழந்தைய யார் வளர்ப்பா.. அட வளர்க்குறது எல்லாம் பெரிய வார்த்த.. முதல்ல என் குழந்தைய யார் பார்த்துப்பா" என்று கேட்டவள் "உங்க குணம் பிடிக்காம தான் அப்பத்தா என்ன இப்படி வளர்த்தாங்க.. உங்களுக்கு நேர் எதிரா.. அதனால என்ன... இப்ப நான் நல்லா தான் இருக்கேன்.. எனக்குப் பிடிச்சத செய்ய.. இந்த வீட்டுல தான் முடியும். என் தாய் வீடு தராத முழுச் சுதந்திரத்தை என் புருஷன் எனக்குத் தந்திருக்கார்.. நிச்சயம் உங்கள மாதிரி நம்பர் ஒன் தொழிலதிபரா நான் வராம போனாலும் ஏதோ என் தகுதிக்கு நிச்சயம் சாதிச்சிக் காட்டுவேன் அது போதும் எனக்கு" என்று அழுத்தத்துடன் அறிவித்தவள் "அப்புறம் என்ன சொன்னிங்க உங்க மாளிகையில வந்து நாங்க இருக்கனுமா.. எதுக்கு எப்ப வேணா எங்கள வீட்டை விட்டுத் துரத்தவா.. வேணாம் சாமி... உங்க மாளிகையில நான் அடிமையா இருக்கறத விட.. என் வீட்டுல நான் ராணியா இருக்கேன்.. அதுவும் என் புருஷனுக்கு மகாராணியா இருப்பேன்.. எனக்கு இங்க என்ன குறை.. தான் பிறப்பு எடுத்ததே ஏதோ என்ன தாங்க தான் என்பது போல் என் புருஷன் என்னைத் தாங்கி அரவணைக்கிறாரே.. இதுக்கு மேல எனக்கு என்ன வேணும்.. என் அப்பத்தா கிட்ட கிடைச்ச பாசத்தையும்.. அரவணைப்பையும் நான் என் விதுன் கிட்ட அனுபவிக்கிறேன் மம்மி.. இந்தப் பிறவிக்கு அவர் தான் எனக்கு எல்லாம்.. சோ பிளீஸ் எங்கள விட்டுடுங்க நாங்க இப்படியே சந்தோஷமா எங்க வாழ்க்கையை வாழ்ந்துக்கிறோம்" என்று முதலில் தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டிய தன்யா இறுதியில் கெஞ்சலில் முடிக்க



மகள் இவ்வளவு பேசுவாளா என்ற நிலையில் வாயடைத்து தான் போனார் சசிரேகா.. அதன் பிறகும் அங்கு நிற்க அவருக்கு என்ன பைத்தியமா.. மகளை வசைபாடிக் கொண்டே சசிரேகா சென்றிட



இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சித்ராவுக்கு உள்ளுக்குள் கொண்டாட்டமாகிப் போனது.. அதில் "என்ன தன்யா இப்படிப் பேசிட்ட.. என்ன இருந்தாலும் பொண்ணுக்குப் பிறந்த வீடு மாதிரி வருமா.. நீ என்னமோ இந்த வீட்டை கோட்டைன்ற உன்ன ராணின்ற.. இப்படி எல்லாம் உளற எங்க கத்துக்கிட்ட" உள்ளுக்குள் பொறாமையில் சித்ரா வெந்தாலும் தன்மையாகக் கேட்க



"உளறல் இல்ல அண்ணி உண்மை தான்.. நான் என் புருஷனுக்கு மகாராணி தான் அண்ணி" தன்யா நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல



"அப்படியா" என்று தன் அப்பாவித்தனத்தைக் காட்டிய சித்ரா "என் அண்ணன் உன்ன எதுக்காகக் கல்யாணம் செய்தார்னு உனக்குத் தெரியுமா" என்று விஷமமாகக் கேட்க



தான் அறிந்த மாமனார் விஷயத்தை மறைத்து.. "பணத்துக்காகன்னு சொல்லப் போறிங்க, அதான" என்று தன்யா மிடுக்காய் கேட்க



அவளை ஒரு வித குரூரத்துடன் பார்த்தவள் "என் அண்ணன் மத்தவங்க பணத்துக்கு எல்லாம் ஆசைப்படுவாரா.. அது இல்ல" என்று நிறுத்த



எப்பவும் சித்ராவுடன் இவ்வளவு தூரத்திற்கு எல்லாம் நின்று பேச மாட்டாள் தன்யா.. ஆனால் இன்று தன் தாயிடம் பேசியதன் விளைவால்.. இவள் சித்ராவை நீயே அதையும் சொல் என்பது போல் பார்க்க "என் அண்ணன் ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சார்.. அந்தப் பொண்ணும் தான்.. இரண்டு பேரும் ஈருடல் ஓர் உயிரா காதலிச்சாங்க.. கடைசியில அந்தப் பொண்ணு செத்துப் போச்சி.. அதோட இதயத்த தான் உனக்கு வச்சிருக்காங்க.. அதான் என் அண்ணன் உன்ன கல்யாணம் செய்து உன்னையே சுத்தி சுத்தி வரார்.. எல்லாம் அவர் காதலிச்ச அந்தப் பொண்ணோட இதயத்துக்காகத் தான்.. ஆனா இதை எல்லாம் நீ நிஜம்னு நம்பிட்டு இருக்கியே என்ன சொல்ல" என்று சொல்லி சித்ரா தன் புகைச்சலைத் தீர்த்துக் கொள்ள.. விளைவு உண்மை நிலை அறியாமலே கால் இடறி வயிற்றில் நிறைமாத பிள்ளையுடன் "அம்மாஆஆஆ" என்ற கதறலுடன் கீழே சரிந்தாள் திபாகரனின் மனைவி தன்யரித்விகா.
 
Back
Top