நெஞ்சம் 30

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நேற்றைய விழா முடிய இரவு தாமதமானதால்.. காலையில் மகளை அழைத்தார் மகிழ்வரதன்.. தன்யா அதை ஏற்க "I know you will make me proud, champ!" எடுத்ததும் அவர் தம் பாராட்டை வழங்க



"டாடி ஈஈஈ.." மகள் ஆர்ப்பரிக்க



"You are very talented, my princess" எனப் பெருமிதம் கொண்டவர் "நேற்று விழாவில் கலந்து கொண்டவங்க எல்லாம் உன்னை எவ்வளவு பாராட்டிப் பேசினாங்க தெரியுமா.. டாடி தான் பக்கத்துல இல்ல.. மம்மிக்கும் அவ்வளவு சந்தோஷம்.. உன்ன பார்க்க வீட்டுக்கு வரேன்னு சொன்னா" என்றவரை



திகைப்புடன் "என் வீட்டுக்கா.." இதுவரை வராத மம்மியா என்ற ரீதியில் இருந்தது அவள் கேள்வி.



"Yes.. my child.. take care உடம்பப் பார்த்துக்க.. டாடி சீக்கிரம் வந்து பாக்கறேன்" என்ற தகவலுடன் மகிழ்வரதன் அழைப்பைத் துண்டிக்க




அதில் ஆரவாரத்துடன் கணவனைக் கட்டிக் கொண்டு.. தந்தை சொன்னதை இவள் சொல்ல "வாவ் அப்படியா.. நீ சாதிச்சிட்ட பொண்டாட்டி.. வல்லவன் சார் வாழ்த்தினாரு.. இப்ப உன் டாடி.. இதோ உன் மம்மியும் உன்ன பாராட்ட நம்ம வீட்டுக்கு வராங்க.. நீ எங்கையோ போய்ட்ட டி ரிது" கணவனின் கேலி கலந்த பாராட்டில்




"சும்மா என்ன கேலி செய்யாதிங்க விதுன்.. நான் எங்கையும் போகல இதோ உங்கள ஒட்டிக்கிட்டு தான் இருக்கேன்"




"அது தெரியுது.. பட் இது உனக்கான சின்னதோர் அங்கீகாரம்.. நாளைக்கு இது பெரிதாகவும் ஆகலாம்.. இல்ல ஆகாமலும் போகலாம்.. but, now you are proving that you are an achiever" என்றிவன் உணர்ந்து சொல்ல




அகமகிழ்ந்து தான் போனாள் பெண்ணவள்.. அதே மகிழ்ச்சியுடன் இவள் தன் தாயை வரவேற்க.. அவரோ கையில் பெரிய பூங்கொத்துடன்.. நுனி நாக்கு ஆங்கிலத்தில்.. மகளின் கண்ணம் அணைத்து பேசியதுடன்.. தன்யாவைக் கம்பெனிக்கு வரச் சொல்லி வற்புறுத்த.. தன் அகம் தொட்ட மகிழ்வெல்லாம் வடிந்தது பெண்ணவளுக்கு.



ஒரு தாயும் மகளும் பேசிக்கொள்ள எத்தனை இருக்கும்.. தன் உடல்நிலை பற்றிய அக்கறையோ.. அல்லது வயிற்றில் உள்ள குழந்தை பற்றிய விசாரிப்போ.. ஏன் பிரசவ காலப் பயத்தைக் குறித்த பேச்சோ.. இல்லை கவலையோ.. இப்படி எத்தனை.. எத்தனை.. ஆனால் அவள் தாய் இது எதுவும் அற்று வெறும் தொழில் முறையாக மட்டும் பேசவும்.. வெறுத்து தான் போனாள் இவள். தப்பு தான் 'இதுவரை எனக்காக யோசிக்காத.. எதுவும் செய்யாத தாயிடம் எதிர்பார்ப்பை வைத்தது தப்பு தான்' என்று மனதளவில் வருந்தியதின் வெளிப்பாடு தான்.. தன் தாயிடம் கொட்டிய வார்த்தைகள்



அதில் ஏனோ தன் மேலே தன்னிரக்கம் கொண்டுருந்த நேரத்தில் தான் சித்ரா.. அப்படியான ஒரு செய்தியைச் இவளிடம் சொல்லவும்.. 'அப்போ என்னை யாருக்குமே பிடிக்காதா' என்ற தன்னிரக்கத்தில் கணவன் அவளுக்குக் கொடுத்த அன்பு, பாசம், நேசம், பரிவு, எல்லாம் இந்த இதயத்துக்காகத் தானா என்ற கேள்வியில்.. தன் நெஞ்சில் முகம் புதைத்து கணவன் தந்த காதல் முத்தமும்.. love you my sweetheart என்ற காதல் மொழியும் இறுதியில் இந்த இதயத்துக்காகத் தான என்ற நிதர்சனத்தில்.. கணவனாய் கூடலில் தன்னை ஸ்பரிசிக்கும் முன் ஒரு தாயாய் தன் நெஞ்சத்தை ஆராதித்தது எல்லாம் இந்த இதயத்திற்காகத் தான் என ஒரே ஒரு நொடிக்கான தடுமாற்றத்தில் உள்ளம் நொறுங்க.. கண்கள் சொருக.. அதன் தாக்கம் அவள் பாகத்தையும் தடுமாற வைக்க.. விளைவு தன்னினைவை இழந்து மயங்கித் தரையில் சரிந்தாள் தன்யா.



வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இப்படி நடக்கவும்.. சித்ரா பயத்தில்.. நடந்தைச் சொல்லாமல்.. மறைத்துத் தன்யா தவறி விழுந்ததாகத் திபாகரனுக்குத் தகவல் சொல்ல.. அதிர்ச்சியுடன் இவன் டாக்டர் லதாவுக்கு அழைத்துச் சொல்ல.. இவன் வீடு வருவதற்குள்.. தானே ஆம்புலன்ஸ் உடன் வீட்டுக்கு வந்து தன்யாவை விரைவாகவே மருத்துவமனை அழைத்துச் சென்றாள் டாக்டர் லதா.




விரைவாகப் பதட்டத்துடன், வேர்வையில் நனைந்த படி மருத்துவமனை வந்தவன்.. மனைவியை அனுமதித்திருக்கும் அறை வாயிலிலேயே இவன் ஒரு வித வேண்டுதலுடன் காத்திருக்க.. அதற்குள் விஷயம் அறிந்து வக்கீல் வல்லவன், அவர் மனைவி.. கார்த்திக், அவன் தாய், தந்தை மற்றும் தமிழரசி என அனைவரும் அங்கு வந்திருக்க.. அவர்கள் யாரையும் அறியும் நிலையில்லை திபாகரன். அவனின் அகம் எல்லாம் மனைவி.. தன் குழந்தையின் நலனில் மட்டுமே இருந்தது. பயத்தில் முகம் வெளிர.. உடல் இறுக.. கண் கலங்க.. சோர்வுடன் கதவில் சாய்ந்தபடி இருந்த அவனைக் கார்த்திக்கால் கூட தேற்ற முடியவில்லை. உள்ளே முதல் கட்ட பரிசோதனைகள் முடியவும் வெளியே வந்த டாக்டர் லதா.. அவருடனே வந்த மகப்பேறு மருத்துவர் காவேரி.. ஒரு காதிதத்தைத் திபாகரனிடம் தந்து கையோப்பபம் இடச் சொல்ல.. அந்நொடி முழுமையாக நொருங்கி தான் போனான் அந்த ஆண்மகன். முகத்தில் கலக்கம் சூழ அதிர்ச்சியில் கை நடுங்க.. அவனின் உதடுகளோ "டாக்டர்" என்று அழைத்திட




"கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன் தான் சார்.. குழந்தை பிரசவத்திற்குத் தயாரா இருக்கு.. ஆனா தன்யா மயக்கத்துல இருக்கா.. இங்க அவளோட முழு ஒத்துழைப்பு இருந்தா தான் எங்களால தாய் சேய் இருவரையும் காப்பாத்த முடியும்.. பட் அது நடக்கலனா ஆபரேஷன்ல இரண்டு பேர்ல ஒருவரை தான் காப்பாத்த முடியும். இது ஃபார்மாலிடிஸ்க்கு தான்.. நான் என்னால ஆன முயற்சிய செய்றேன்" என்று அந்த மகப்பேறு மருத்துவர் சொல்ல



"Yes திபாகர்... கூட நான் இருக்கேன்.. you don't worry.. எங்களால முடிந்தத நாங்க செய்றோம்" என்று டாக்டர் லதாவும் வாக்களிக்க




ஏனோ திபாகரனால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. ஒரு யூகத்தில் கூட அவனால் அக்காகிதத்தில் கையொப்பம் இட முடியவில்லை. அதில், "டாக்டர் பிளீஸ்.. நான் அவ கிட்ட பேசணும்.. என்ன அனுமதிங்க.. நான் அவ கிட்ட பேசறேன்.. பிறகு எதுவாக" என்றவன் மேற்கொண்டு பேச முடியாமல்.. ஒருவித அச்சத்துடன் இவன் அவர்களிடம் வேண்டிட



அதற்கு அவர்களும் அனுமதி தர.. பயத்தில் கால்கள் நடுங்க இவன் உள்ளே செல்ல.. நிர்மலமான முகத்துடன்.. மருத்துவனை உடையில்.. சில பல உபகரணங்களுடன் கட்டிலில் இருந்தாள் அவள்.. அவன் காதல் மனைவி.. பார்த்தவனுக்கு இதயம் அதி வேகத்தில் அடித்துக் கொண்டது.. என்ன சொல்லி தேற்றுவான்.. கால் இடறி விழும் அளவுக்கு அப்படி என்ன அவளுக்குக் கவனக் குறைவு.. குழந்தைக்காகப் பார்த்து பார்த்து எப்படி எல்லாம் யோசித்து ஒவ்வொன்றையும் செய்வாளே.. இன்று எப்படித் தவறினாள்.. வீட்டில் நடந்தது எதுவும் தெரியாததால் இவனுள் இப்படியான பல கேள்விகள்.. அதை எல்லாம் ஒதுக்கியவன்.. மனைவியை நெருங்கி.. நடுங்கும் விரலால் அவளின் முகத்தை வருடியவன் "ரிது டார்லிங்.. எதுவும் பயம் இல்ல டா.. உன் அத்தான் நான் பக்கத்திலே இருக்கேன்.. உனக்கோ நம்ம பாப்பாவுக்கோ எதுவும் ஆகாது.. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கிங்க.. சரியாகி என் கிட்ட வந்" என்றவனின் குரலோ மேற்கொண்டு பேச முடியாமல் துக்கத்தில் அடைத்துக் கொள்ளவும்.. அதைச் சீர் செய்தவன்.. கண்ணீரோடு மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு "வந்துடுவிங்க தான.. என்ன ஏமாத்த மாட்டிங்களே.. நான் தாங்க மாட்டேன் டி கண்ணம்மா.. சத்தியமா சொல்றேன் நீ இல்லனா நான் வெறும் கூடு டி.. நம்ம குழந்தைக்காகக் கூட நான் வாழ்வேனா.. இல்ல டி முடியாது டி அம்மு.. வந்துடு டி என் கிட்ட திரும்ப வந்துடு டி" என்று உல்லார்ந்து சொன்னவன்.. தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு.. வயிற்றில் உள்ள தன் குழந்தையிடம் வந்தவன் "அம்மாடி அபூர்வா.. நான் அப்பா வந்திருக்கேன் டா தங்கம்" என்றவனின் குரலோ ஏகத்துக்கு உடைந்து ஒரு கேவலை வெளிப்படுத்த.. தான் இருக்கும் இடம் உணர்ந்து அதைத் தன்னுள்ளே கட்டுப்படுத்தியவன்.. கண்ணீரோடு "என்ன டா எப்பவும் பாப்பா.. பாப்பான்னு கூப்பிடுற அப்பா.. இன்னைக்கு அபூர்வான்னு பெயர் வச்சி அழைக்கிறனு யோசிக்கிறியா.. நீ எங்க வாழ்வில் கிடைத்த அபூர்வமானா பொக்கிஷம் டா.. எங்களுடைய ஆழமான காதலுக்கும்.. திகட்டாத நேசத்துக்கும்.. முடிவில்லாத அன்புக்கும்.. இன்னும் சொல்லனும்னா.. எங்க வசந்த காலத்தில் உதித்த ஈடு இணையில்லா ஆபூர்வமான மலர் டா நீ. உன் அம்மாவும் நானும்.. உனக்கு இந்தப் பெயரிட தான் முடிவு செய்தோம்.. உன்ன என் கையில் ஏந்தி.. இந்தப் பெயரிட்டு உன்னை நான் அழைக்கும் பாக்கியத்தை உன் அப்பாவுக்குத் தா தங்கம்.. நீ இல்லனா உன் அம்மாவும் நானும் இல்ல டா செல்லம்மா.. எங்க கிட்ட வந்துடு தங்கம்.. அம்மா பாவம் டா உன்ன மாதிரி அவளும் ஒரு குட்டிக் குழந்தை தான்.. அவளுக்கு அதிகம் கஷ்டத்தைத் தந்துடாத பாப்பா" என்றவன் நேசத்துடன் கண்ணீரில் நனைந்த தன் இதழை மனைவியின் வயிற்றில் மெல்ல புதைத்துக் கரைந்திட




அந்நொடி உள்ளே உள்ள அவனின் சின்னச் சிட்டோ எப்போதும் கேட்கும் தன் தந்தையின் குரலுக்குக் கட்டுப்பட்டு.. மெல்ல அசைந்திட.. அதில் தன்யாவுக்கு ஏற்பட்ட பெரும் வலியில் அவள் "ம்மாஆஆஆஆ" என்று பெருங்குரலில் கதற.. இது பிரசவலியின் அறிகுறி என்பதால்.. தங்கள் கடமையைச் செய்ய ஆயத்தமானார்கள் மருத்துவர்கள்.



திபாகரன் அறையிலேயே இருப்பதாகச் சொல்ல.. அவனின் பதட்டத்தில்.. தன்யாவும் பதட்டம் கொள்வாள் என்பதால்.. டாக்டர் லதா அதற்கு அனுமதிக்கவில்லை.




இவன் வெளியே வர.. ஊரில் உள்ள தெய்வத்தை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தார் தமிழரசி "ஒரு பொம்பள சித்த இப்படி வெளிய போனேன்.. அதுக்குள்ள இந்தக் கூத்து பண்ணி வச்சிருக்கா.. எங்க.. இங்க தான் வயித்துல புள்ளைய வச்சிகிட்டு பேக் மாட்டிகிட்டு போனாளே.. அப்ப யார் என் பேச்ச கேட்டா.. இப்ப வந்து படுத்திருக்கா.. மகமாயி.. மாரியாத்தா.. காளியாத்தா.. என் வம்சத்த நல்ல மாதிரி காப்பாத்திக் குடு ம்மா.. சொரிமுத்து அய்யனார் அப்பா.. தாயும் பிள்ளையையும் காப்பாத்திக் கொடுத்துடு.. என்னைக்கும் என் குலத்தோட பெயர சொல்ற மாதிரி.. உன் கோவில்ல மணி வாங்கிக் கட்றேன்" என்று தமிழரசி ஒரு பக்கம் மூக்கை சிந்திக் கொண்டு ஒப்பாரி வைக்க.. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சசிரேகாவுக்கு.. தான் இவர்களுடைய உறவு என்ற வட்டத்தில் கலந்து நிற்கவே ஒரு வித ஒவ்வாமை தந்தது.




சில பல போராட்டங்களுக்குப் பிறகு தன்யா அவர்களின் விருப்பப்படியே பெண் குழந்தையைப் பெற்றெடுக்க.. முதல் ஆளாக வெளியே வந்து தாய் சேய் இருவரும் நலம் என்ற செய்தியைச் சொன்னார் டாக்டர் லதா.. அதன் பிறகு தான் தெளிந்தான் திபாகரன்.



முதல் ஆளாகத் திபாகரன் உள்ளே சென்று மனைவி மகளைக் காண.. தன்யா மயக்கத்தில் இருக்க.. மனையாளின் கன்னம் வருடி நெற்றியில் ஒரு முத்தத்தைப் பதித்தவன் பின் மகளைக் காண அவளோ உறக்கத்தில் இருக்க.. அந்தப் பூ குவியலின் பாதத்தை மட்டும் பட்டும் படாமல் தொட்டு இதழில் ஒற்றியவனின் கண்ணிலோ கண்ணீர்.. இது ஆனந்தக் கண்ணீரின் வெளிப்பாடு.. அதில் மகள் நெளியவும்.. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியேறினான் இவன்.. பின் ஒவ்வொருவராகச் சென்று இருவரையும் பார்த்து வர.. இரவு மகிழ்வதனும் வந்து மகளைக் காண.. அப்போது தான் கண் விழித்தாள் தன்யா. இவள் தந்தையைப் பார்த்து புன்னைகைதபடி கணவனைத் தேட.. அந்நேரம் மகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் திபாகரன். "என்ன பேபி நீ எல்லாரையும் இப்படிப் பயப்படுத்திட்ட" என்று மகிழ்வரதன் மகளிடம் கேட்டுக் கொண்டிருக்க.. இவள் கலக்கத்துடன் கணவனைக் காண.. "விடுங்க அங்கிள் அதான் இப்ப ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க தான" என்றவன் அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திட.. அதன் பிறகு யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை.



சுகப்பிரசவம் என்பதால்.. இரண்டு நாட்களில்.. தன்யா குழந்தையுடன் வீட்டுக்கு வர.. அதுவரை பொதுவான பேச்சு வார்த்தைகள் தான் கணவன் மனைவி இருவருக்குள்ளும்.



தங்கள் அறையில்.. மகள் உறங்கிய பிறகு மனைவிடம் வந்து அமர்ந்தவன் "என்ன ஆச்சி ரிது நீ என் கிட்ட என்ன மறைக்கிற.. ஏன் நீ ஒரு மாதிரி இருக்க.. குழந்தை பிறந்த சந்தோஷம் உன் கிட்ட இல்லையே.. பாப்பா வயித்துல இருக்கும் போது நீ எப்படி இருந்தன்னு எனக்குத் தெரியும்.. ஆனா அது இப்ப உன் கிட்ட இல்ல.. என்ன நேருக்கு நேர் பார்க்க மாட்டேங்கிற.. எப்பவும் உன் பார்வையில ஒரு வித தவிப்பும்.. கலக்கமும் இருக்கு.. நீ அஜாக்கிரதையானவ இல்ல... சொல்லு ரிது அன்னைக்கு என்ன நடந்தது" என்று இவன் தன் கேள்விகளை அதட்டல் இல்லாமல் அழுத்தத்துடன் அடுத்து அடுத்து கேட்க.. அடுத்து நிகழப் போகும் கலவரத்தை நினைத்து உடலும், உள்ளமும் ஒரு சேர கலங்கிய படி செய்வதறியாது பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றாள் தன்யரித்விகா.
 
Back
Top