கணவனின் கேள்வியில் அதிர்ந்து.. பயத்தில் முகம் வெளிர "இல்..ல..ங்க.. நான் நல்..லா தான் இருக்கேன்.. ஒன்..னும் ஆகல..ங்க" என்று தன்யா திக்கித் திணற
"இல்ல நீ பொய் சொல்ற.. உனக்குப் பொய் சொல்ல வராது ரிது.. என்னனு சொல்லு" ஆழ்ந்து நோக்கி இவன் அழுத்தம் திருத்தமாய்க் கேட்க
உள்ளே உதறியது தன்யாவுக்கு. இருந்தும் மறைத்தவள் "என்ன என்னென்னமோ பேசறிங்க.. தடுக்கி தான் விழுந்தேன்.. போங்க போய்ப் பாப்பாவ பாருங்க.. எனக்கும் அசதியா இருக்கு" என்றிவள் போலியாய் அதட்ட
மனைவியை நேர் கொண்டு பார்த்தவன் "அப்ப நீ சொல்ல மாட்ட.. சரி அன்னைக்குச் சித்ரா தான உன் கூட இருந்தது நான் சித்ரா கிட்ட கேட்டுக்கிறேன்" என்றவன்.. சொன்னது போல் எழுந்து வெளியே செல்ல எத்தனிக்க
அவ்வளவு தான் வெளிப்படையாகவே தன்யாவின் உடல் நடுங்கியது.. அதில் பதட்டத்துடன் கணவனின் கையை இறுக்கப் பற்றியவள் முகம் வேர்க்க "என்ன.. நான் சொன்னா நம்ப மாட்டிங்களா.. அதெல்லாம் நீங்க போய் எதுவும் கேட்கக் கூடது" இவள் பதறி அதட்டி கட்டளையிட
மனைவியின் செயலில் தன் இரு புருவங்களை நெரித்தவனோ "ஓ.. எனக்கே கட்டளையா அதுவும் அதட்டலோட.. ஹ்ம்ம்.. இந்த நாளு நாளும் என் முகத்தக் கூடப் பார்க்கத் தயங்கின ரிதுவா நீ இல்லையே.. அப்ப ஏதோ நடந்திருக்கு என்ன விடு" என்றவன் அவளை விலக்கிக் கொண்டு வெளியே செல்ல
"விதுன் நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. என்னன்னு கேளுங்க" என்ற மனைவியின் வார்த்தையை அலட்சியம் செய்த படி இவன் ஹாலுக்கு வந்து சித்ராவை அழைக்க.. அந்நேரம் கார்த்திக்கும் வீட்டில் இருந்ததால்.. இருவரும் ஹாலுக்கு வர
எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இவன் "அன்னைக்கு என்ன நடந்தது சித்ரா.. எதையும் மறைக்காம சொல்லு" என்று அதட்டி கேட்க
ஏற்கனவே தன் பேச்சால் தன்யாவுக்கும் குழந்தைக்கும் என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருந்த சித்ரா.. பின் இருவரும் நல்ல முறையில் வீட்டுக்கு வரவும் தான் சற்றே ஆசுவாசம் ஆனாள். அதுவரை அவளுமே பெரிதாக இல்லை என்றாலும்.. சிறிதே குற்றவுணர்வில் தவித்திருக்க.. இதில் தமையன் மிரட்டலுடன் கேட்கவும்.. தான் பேசிய அனைத்தையும் ஒப்புவித்து விட்டாள்.
கேட்டவன் ருத்ரனாய் மாறி.. நண்பனை அறைய.. பார்த்த தன்யாவும், சித்ராவும் விக்கித்து நின்றார்கள் என்றாள் தமிழரசி தான் "ஜயோ.. வீட்டு மாப்பிள்ளைய கை நீட்டி அடிக்கிறானே.. என்ன சொல்ல.. என்னென்னமோ சொல்றியே" என்று அவர் ஒப்பாரி வைக்க
"இந்த அடி உன் மகளுக்கு விழ வேண்டியது" என்று தங்கையைப் பார்த்துக் கொண்டே தாய்க்குப் பதில் அளித்தவன்
"என்ன சித்ரா.. என்ன இது புதுக் கதை.. ஹ்ம்.. எதுக்கு இப்படி இல்லாத ஒரு பொய்யச் சொன்ன.. உனக்கு என் மேல அப்படி என்ன வன்மம்" திபாகரன் பொறுமையற்றுக் கேட்க
"நான் என்ன செய்திருந்தாலும்.. அதுக்காக நீ என் புருஷன அடிப்பியா.. எனக்கு எதுக்கு உன் மேல வன்மம்.. நான் என்ன இல்லாததையா சொன்னன்.. உண்மைய தான சொன்னேன்.. அதைக் கேட்டு உன் மனைவி நம்பினா தான.. அப்ப அவள எதாவது நீ கேட்டியா" சித்ரா தன் கணவனை அடித்த கோபத்தில்.. ஏதோ துளியாய் இருந்த குற்றவுணர்வு கூட சித்ராவிடம் இருந்து தூரப் போய் விட்டது.
அதற்குப் 'பார்த்தியா இவ்வளவு தான் நம் வாழ்வு.. நாளைக்கு யார் என்ன வந்து சொன்னாலும் நீ நம்புவ.. இவ்வளவு தான என் மேலுள்ள உன்னுடைய நம்பிக்கை.. அப்ப நம்மளோட புரிதலும் இவ்வளவு தான டி' என்று இவன் பார்வை மனைவியைக் குற்றம் சாட்ட.. அவளோ குற்றவுணர்வில் தலை கவிழ்ந்தாள்.
"நீ சொன்னதுல எதுவுமே உண்மையில்லை சித்ரா.. என்னால அதை நிரூபிக்க முடியும்.. ஆனா நீ சொன்ன பொய்ய உன்னால நிரூபிக்க முடியாது"
என்ற தமையனின் வார்த்தையில் இடையிட்டி "யார் நானா பொய் சொல்றேன்.. நீ காதலிச்சது உண்மை.. அந்தப் பொண்ணு இறந்து போக அதோட இதயத்த தன்யாவுக்கு மாற்றி இருக்கறது உண்மை.. இதெல்லாம் உன் ஆருயிர் தோழனான என் புருஷன் சொல்லி தான் எனக்குத் தெரியும்" என்று ஆங்காரத்துடன் ஆடிய தங்கையை விடுத்து.. "அப்படியா" என்ற பார்வையை இவன் தன் நண்பன் மீது வீச
அதில் முதலில் அதிர்ந்து.. பின் கோபத்துடன் தன் மனைவியைக் கார்த்திக் அறைய.. அந்நொடி சித்ராவினுள் சகலமும் நொறுங்க.. அவள் நடுங்கி நின்ற நேரம்.. தாயாய் தமிழரசி தான் "ஜயோ என் பொண்ண போட்டு இப்படி மாடு மாதிரி அடிக்கிறானே" என்றவரை திபாகரன் ஒருவித அழுத்தத்துடன் பார்க்க.. அடுத்த நொடி வாயை இறுக்க மூடிக் கொண்டார் அவர்.
"சொல்லுங்க மிஸ்டர்.. என் ஆருயிர் நண்பனான நீங்க தான் சொன்னீங்களாம்.. பொய்யான இந்தப் புதுக் கதைக்கு screenplay நீங்க தான் போல சொல்லுங்க.. உங்க திருவாய் திறந்து சொல்லுங்க சார்"
நண்பனின் அந்நிய பேச்சில் அவசரத்துடன் "டேய் திபா நான் எதையும் வேணும்னு சொல்லல டா.. என்ன நம்பு.. இது எதார்த்தமா நடந்தது"
என்றவனின் பேச்சை இடைவெட்டிய தன்யா "அண்ணா.. எனக்கு எதுவும் தெரிய வேணாம்.. நான் அவர நம்பறேன்.. நான் அன்று விழுந்தது தடுமாறி தான்.. பிளீஸ் இதோட இந்தப் பேச்சு வேணாம்"
என்று இறைஞ்சியவளின் பேச்சை இடைவெட்டி "அப்ப நீ சொல்லியிருக்க.. எனக்குக் காதலே இல்லாத போது.. அதில் காதலி எங்கிருந்து டா வந்தா.. எனக்குப் புரியல" என்று மனைவியின் பேச்சை விடுத்து திபாகரன் நண்பனை கூர்மையுடன் கேட்க
"திபா நான் தான் misunderstand செய்துட்டேன். தப்பு எல்லாம் என் மேல தான்.. நானும் தப்பான அர்த்தத்தில் சொல்லல" என்று வருத்தத்துடன் தன் தவறை ஒத்துக் கொண்ட கார்த்திக் "நாம டென்த் படிக்கும் போது கிரிக்கெட் விளையாட கிரவுண்ட் போவோம் இல்ல.. உனக்கு ஞாபகம் இருக்கா" என்று பழைய கதையை ஆரம்பித்துக் கேள்வி கேட்ட நண்பனை.. 'எதுவா இருந்தாலும் சொல்லி முடி' என்பது போல் திபாகரன் கோபத்துடன் பார்க்க
அதில் எச்சில் விழுங்கி தன் தொண்டையைச் சீர் செய்த கார்த்திக் "அந்தக் கிரவுண்ட் எதிர்ல ஒரு டியூஷன் சென்டர் இருக்கும்.. அங்க பெண் பிள்ளைகளும் படிக்க வருவாங்க.. நாம சில பொண்ணுங்கள" என்றவனோ மேற்கொண்டு பேச முடியாமல் தயங்க
"அண்ணா.. எதுவும் வேணாம் பிளீஸ்.. அவர் என் மேல் வைத்த நேசத்தை நான் என்னைக்கும் சந்தேகப்பட மாட்டேன்" என்று தன்யா இடையிட
"ஹ்ம்ம்.. நாம.. அங்க என்ன நடந்தது சொல்லு டா" திபாகரன் விடுவதாய் இல்லை.. எனவே ஒருவித அழுத்தத்துடன் இவன் நண்பனுக்கு எடுத்து தர
நண்பனின் குரலில் உறுதியைக் கண்ட கார்த்திக் "அங்க படிக்கிற பொண்ணுங்கள நாம சைட் அடிச்சி மார்க் போடுவோம்.. சும்மா நமக்குள்ள.. இது உன் ஆளு இது என் ஆளுன்னு விளையாட்டா பேசுவோம்.. அப்ப அதுல சிகப்பு சுடி உன் ஆளுன்னு நீ எப்பவும் ஒரு பொண்ண சொல்லுவ.. ஆனா அது காதல் இல்லன்னு எங்களுக்குத் தெரியும்.. அதனாலே டீப்பா பேசிக்க மாட்டோம் சும்மா கலாட்டாவா தான். அப்பவே அந்தப் பேச்ச நீ மறந்துட்ட. நம்ம கேங்கும் பிரிஞ்சிடுச்சி... நானும் மறந்துட்டேன். ஆனா பிறகு ஒருநாள் எதேச்சையா அந்தப் பொண்ணுக்கு திருமணம் முடிந்து டெல்லியில வாழறதா தெரியவந்தது.. அப்பவும் நான் எதையும் பெருசா எடுத்துக்கல. இப்பவும் நான் எதையும் பெருசா எடுத்துக்கல டா.. அது.. அது வந்து.. பிறகு அந்தப் பொண்ணு இறந்து அதோட இதயத்த தன்யாவுக்கு வைக்கவும்.. சாரி டா மச்சான் நான் தப்பா சொல்லல.. உனக்குப் பிடிச்ச பொண்ணோட இதயம்ன்னு தான்" என்று குற்றவுணர்வில் கார்த்திக் அனைத்தையும் ஒப்புவிக்க
நண்பனை ஒருவித இயலாமையுடன் பார்த்த திபாகர்.. ஒரு பெருமூச்சுடன்.. இவ்வளவு தானா.. இதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம் என நினைத்தவன் தன் தலையைத் தாங்கிய படி ஆசுவாசத்துடன் ஸோஃபாவில் அமர்ந்து கொண்டு "இதுல நான் காதலிச்ச பொண்ணுன்னு எங்கடா வருது.. எனக்குப் பிடிச்ச பொண்ணுன்னு தான டா சொல்லியிருக்கேன்.. அதுவும் எப்பவோ அறியாத, தெரியாத, புரியாத சின்ன வயசுல.. நண்பர்களோட சேர்ந்து கேலி கிண்டல்னு இருக்கும் போது" என்றவனை
"நான் தான் சொல்றனே டா.. இதை எதார்த்தமா.. கடவுளோட நாடகத்தைப் பாரேன்னு நான் சித்ரா கிட்ட சொல்ல.. அவ இப்படி அர்த்தம் எடுத்து அனர்த்தம் பண்ணுவான்னு நான் நினைக்கல டா" என்று உள்ளார்ந்து சொன்ன நண்பனை விடுத்து
"திரிச்சிப் பேசி கதை சொல்ற உன் புத்தி இன்னும் மாறல இல்ல.. நாங்க உயிருக்கு உயிரா காதலிச்சி பிரிந்ததா கதை சொல்லி இருக்க.. போதாதுக்கு அந்தப் பொண்ணோட இதயத்துக்காகத் தான் தன்யாவ கல்யாணம் செய்தேன்னு வேற சொல்லி இருக்க... முட்டாள்... நல்லா யோசி... எங்களுக்குக் கல்யாணம் நடந்தப்ப தன்யாவுக்கு ஆப்பரேஷனே நடந்திருக்கல.. அப்புறம் எப்படி நான் அந்தப் பொண்ணோட இதயத்துக்காக தன்யாவ கல்யாணம் செய்தேன்னு சொல்லுவ... அதுவும் அந்த நேரத்துல.. உனக்கு என் மனைவியப் பிடிக்கல.. அதான் கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி ஒரு கதையை நீயே யோசிச்சு தன்யா கிட்ட சொல்லி மனதளவில் டார்ச்சர் குடுத்திருக்க.. அதான சித்ரா?" என்று உள்ளது உள்ளபடி கேட்ட தமையனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் சித்ரா தலை குனியவும்
ஒரு நொடி அப்போது தான் தன்யாவுக்கும் அந்த விஷயம் உறைத்தது. 'ஆமா... கரெக்ட் தான்.. நான் ஏன் இந்தப் பாய்ன்ட் அன்னைக்கு யோசிக்கல.. ச்சே! நானும் ஒரு முட்டாளா இருந்திட்டேனே' என தன்யா தன்னுள் வருந்த
"சரி தான்.. இதுல எல்லாருமா சேர்ந்து என் மகளைக் கொல்லப் பார்த்திருக்கீங்க..
என்ற தமையைனிடம் சித்ரா "சும்மா ஏன் ண்ணா எங்களையே குறை சொல்ற.. உன் பொண்டாட்டி எதுக்கு நம்பினா.. அவள எதுவும் பேசாம.. எப்பவும் அவளை இப்படித் தாங்கு தாங்குன்னு தாங்குற"
"சித்ரா அது எனக்கும் அவளுக்குமானது அதை நாங்க பேசிக்கிறோம்.. அப்புறம் என்ன சொன்ன நான் என் பொண்டாட்டிய தாங்கறனா.. ஆமா தாங்குவேன் தான்.. இதுல நான் அசிங்கப்பட என்ன இருக்கு.. என்னில் சரிபாதி அவ.. என் கஷ்டநஷ்டம் எல்லாத்திலும் கடைசிவரை என் கூட வரப் போறவ அவ.. அவள நான் தாங்கறதுல எனக்கு எதுக்கு வெட்கம்" என்றவன் "போதும் இனி எந்தப் பேச்சும் வேணாம்.. உனக்கு இந்த அண்ணனோட உறவு வேணும்.. பிறந்த வீட்டு சீராட்டல் வேணும்னா இதோட.. உன் தந்திரத்தை எல்லாம் நிறுத்திக்க.. எனக்கு என் மனைவி மகள் தான் முக்கியம்.. நீ இப்படியே தான் இருப்பன்னு சொன்னா.. பிறகு நீ என்ன வேற மாதிரி அண்ணணா தான் பார்ப்ப" என்று தங்கையை எச்சரித்தவன் பின் தன் நண்பனை நெருங்கி "சாரி டா மச்சான்.. அந்த நேரத்து கோபத்துல அடிச்சிட்டேன்" என்று உணர்ந்து திபாகரன் மன்னிப்பு கேட்க.. "நமக்குள்ள என்ன டா" என்ற படி நண்பனை அணைத்துக் கொண்டான் கார்த்திக்.
அந்நேரம் மகள் பசிக்கு அழ.. தன்யா உள்ளே விரைய.. யாரிடமும் எப்பேச்சும் இன்றித் தன் மனக்காயம் ஆற.. தன் மன புழுக்கத்தில் இருந்து வெளி வந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள.. வீட்டை விட்டு வெளியேறி விட்டான் திபாகரன்.. மதியம் சென்றவன்.. நேரம் கடந்தும் வரவில்லை.. அவன் தன் கைப்பேசியையும் எடுத்துச் செல்லவில்லை.. வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் இருக்க.. தன்யா தான் தவித்துப் போனாள். கணவனின் நேசத்தை அன்று ஒரு நொடியேனாலும் இவள் சந்தேகம் கொண்டிருக்க.. அதன் தாக்கத்தில் தான் இவள் கணவனை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கியது. அவன் விளக்கம் தராமலே.. அவன் காதலை இவள் உணர்ந்து தான் இருந்தாள்.. அதன் பொருட்டே தன்யா இதைப் பற்றிப் பேச முயலவில்லை. ஆனால் இன்று அனைத்தையும் பேசி தன்னிலை விளக்கத்தைத் தந்து விட்டான் திபாகரன்.. தன்யாவினுள்ளும் குற்றவுணர்வு.. அன்று அவள் மனம் தடுமாறியதில்.. இன்று தன் அன்பு மகளை அல்லவா இழந்திருப்பாள். அப்படி எதுவும் நடந்திருந்தால் அவளே அவளை மன்னிப்பாளா என்ன.. கணவன் சற்று அழுத்திக் கேட்டாலே மடைதிறந்த வெள்ளமாய் அனைத்தும் கொட்டியிருப்பாள் இவள். ஆனால் தற்போது வேறு எப்படியோ அல்லவா முடிந்து.. கணவனுக்குத் தீராத மனவேதனையைத் தந்து விட்டாள். என்ன செய்து.. எதைச் சொல்லி அதைப் போக்குவாள்.
மாலை இருள் கவிழும் நேரத்திற்குத் தான் வீட்டுக்கு வந்தான் திபாகரன். மகனைப் பார்த்த தமிழரசி "இது என்ன டா புதுப் பழக்கம் சொல்லாம போறது.. குடும்பம்னா பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும். அதுக்காக இப்படியா.. பேத்திய தொட்டில்ல இட்டு பேரு வைக்கனும்.. அதுக்கு வேண்டியத சீக்கிரம் பாரு.. நீ போனதும் ஆரம்பிச்ச அழுகையை இன்னும் உன் மக நிறுத்தல.. யார் சமாதனத்துக்கும் அடங்கல டா.. நல்லா உன்னைய தெரிஞ்சி வச்சிருக்கு.. அந்தச் சின்னச் சிட்டு.. போ.. போ.. போய் என் பேத்திய சமாதானப் படுத்து" என்றவர் தன் பேச்சு முடிந்தது என்பதாக விலகிட
இவன் தங்கள் அறைக்கு வர தாய் சொன்னது போல்.. பெருங்குரல் எடுத்து அழுது கொண்டு தான் இருந்தாள் அவன் மகள்.. கூடவே மனைவியும்.. தன்னவளை கண்டு கொள்ளாமல் "தங்கம் அப்பா வந்துட்டேன் டா.. இதோ இதோ அப்பா குளிச்சிட்டு வரேன் டா" என்று மகளுக்குப் பேச்சு கொடுத்தவன் தான் சொன்னது போல் விரைவாகக் குளித்து வந்து இவன் மகளைத் தன் கையில் ஏந்திக் கொள்ள.. அப்போது தான் அழுகையை நிறுத்தியது அந்தச் சின்னச் சிட்டு. மகள் உறங்கியதும் குழந்தையைத் தொட்டிலில் இட்டவன்.. பின் எதுவும் நடவாதது போல் இவன் நெற்றியில் கை வைத்து.. கண்கள் மூடி.. கட்டிலில் படுத்துக் கொள்ள.. துவண்டு தான் போனாள் தன்யா.
குற்றவுணர்வில் கணவனை நெருங்கவே இவளுக்குப் அச்சமாக இருந்தது.. தான் செய்ததற்குத் தன்னவன் ஏதோ தன்னைப் பேசுவான்.. திட்டுவான்.. சண்டையிடுவான் என இவள் நினைத்திருக்க.. அவனோ பாரமுகத்துடன் நடந்து கொள்ள.. கணவனின் ஒதுக்கத்தில் முழுமையாக உடைந்து தான் போனாள் இவள். இருந்தும் தன்யா அவனை நெருங்கி "விதுன்" என்று அழைத்துத் தன்னிலை விளக்கம் தர முயல.. அவனிடம் எவ்வித எதிர்வினையும் இல்லை.. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவன் தன் நிலையில் இருந்து அசைய கூட இல்லை.. அதில் இவளின் கண்ணிலிருந்து கண்ணீர் இறங்கி கன்னம் தொட்டது.
அழுகையுடன் "அம்மாடி அபூர்வா" என்று அன்று மருத்துவமனையில் கணவன் அழைத்தது போல் தானும் மகளை அழைத்து இவள் ஆரம்பிக்க.. உடல் இறுகியது திபாகரனுக்கு
"அம்மா செய்தது தப்பு தான் பாப்பா.. ஒரு நொடியேனாலும் உன் அப்பாவோட நேசத்த நான் சந்தேகப் பட்டது உண்மை தான்.. அப்படி நான் நினைத்திருக்கக் கூடாது தான்.. உன் அம்மா தான் தத்தி ஆச்சே.. இல்ல.. இல்ல.. அப்படி சொல்லக் கூடாது.. நான் பேராசைக்காரி டா.. உன் அப்பாவோட மொத்த அன்பும் எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கனும் என்ற பேராசையில ஒரு நொடி நான் தவறிட்டேன் தங்கம்" என்று நிறுத்தி மகளைத் தங்களுக்குள் மையமாய் வைத்து இவள் கணவனைக் காண.. அவனிடம் எவ்வித மாற்றமும் இல்லை.. அதே இறுகிய உடலுடனே திபாகரன் படுத்திருக்க...
தன்னை நிலைப்படுத்தியவள் "அன்று ஒவ்வொரு நாளும் உன் அப்பா என்ன வந்து பார்க்க மாட்டாறா.. பேச மாட்டாறா.. நேசிக்க மாட்டாறான்னு.. நான் ஏங்கி இருக்கேன் டா பாப்பா. ஆனா அந்தத் தவத்துக்கெல்லாம் வரம் போல் உன் அப்பா எனக்குக் கிடைச்சாரு... என்னைய ஆராதிச்சாரு.. ஆனா இதெல்லாம் என்னுள் இருக்கிற என் இதயத்துக்காக தான்னு நினைச்சி ஒரு நொடி அம்மா தடுமாறிட்டேன் டா.. ஏன்னா உன் அம்மாவுக்கு எதுவும் கிடைத்தது இல்ல பாப்பா" என்றவள் கேவ
அந்த நிமிடமே படுக்கியில் இருந்து எழுந்து அமர்ந்தவன்.. ரத்தமெனச் சிவந்திருந்த தன் விழியால் உணர்வற்ற பார்வையால் மனைவியை ஆவானித்தபடியே தன் கைகளை இறுக கட்டிக் கொண்டு இவன் அமர்ந்திருக்க
அதில் சற்றே ஆசுவாசமானவள் "என்னுடைய தடுமாற்றத்தில்.. அதன் பிறகு நான் உன் அப்பா நேசத்தை உணர்ந்து என்னைத் திடப்படுத்துறதுக்குள்ள அன்று எல்லாம் நடந்து போய்டுச்சி பாப்பா.. அதில் நான் உன்னையே இழக்க இருந்தேன்.. அதை உன் அப்பாவும் நானும் தாங்கியிருக்க மாட்டோம் தங்கம். அதன் பிறகு நானும் இருந்திருக்கவே மாட்டேன் பாப்பா.. நான் செய்த தப்புக்கு என்ன மன்னிக்க வேணாம்.. ஆனா இப்படி ஒதுக்க வேணாம் சொல்லு.. என்னால தாங்க முடியல.. இந்த ஒரு நாளே எனக்குச் செத்துடலாம் போல இருக்கு" என்று கேவியவளை.. அந்த நொடியே இழுத்து இறுக்க அணைத்திருந்தான் திபாகரன்.
அதில் இவள் பெருங்குரலெடுத்து தன் கேவலுடன் "சாரி.. சாரிங்க.. நான் உங்க நேசத்த சந்தேகப்பட்டு இருக்கக் கூடாது" என மன்னிப்பை வேண்ட.. அதில் அங்குத் தொட்டிலில் இருந்த மகள் சிணுங்க.. "ஷ்ஷ்.. ரிது பாப்பா சிணுங்குறா பார்" என்ற கணவனின் முகத்தைத் தன் நெஞ்சாங்கூட்டில் புதைத்துக் கொண்டவள்,
"என்னை மன்னிச்சிருங்க.. இதுதான் கடைசி முறையா நான் உங்க அன்பை சந்தேகிப்பது.. இனி இந்த ஜென்மத்தில் மட்டும் இல்ல எத்தனை ஜென்மத்திலும் இந்தத் தப்பை செய்ய மாட்டேன். ஏன்னா எல்லா ஜென்மத்திலும் இதே கணவனான உங்களோட அன்பு, தாய்மை பாசம், காதல், அரவணைப்பு, எல்லாமே... எல்லாமே... எனக்கு வேணும்" என்று சொல்லியவள், கணவனின் தலை உயர்த்தி அவன் நெற்றியில் கண்ணீருடன் கூடிய முத்தம் பதித்து அழுது கரைய
பிறகான நேரத்தில் இவன் மனைவியைச் சமாதானப்படுத்தினானா.. அல்லது அவள் கணவனைச் சமாதானப்படுத்தினாளா என்று வரையறுக்க முடியா நிலையில் இருவரும்.. பேச்சாலும், செயலாலும் தங்களுக்குள் புதைந்து தான் போனார்கள்.
அதில் முதலில் தெளிந்த திபாகரன்.. தன்னவளின் நெஞ்சில் முகம் புதைந்து.. முத்தமிட்டு நிமிர்ந்து.. மனையாளின் விழியோடு தன் விழி கலந்தவனின் விரல்களோ.. மனைவியின் நெஞ்சாங்கூட்டைத் தான் வருடிக் கொண்டிருந்தது.. அதில் அவளும் சலைக்காமல் கணவனை நேர் கொண்டு பார்க்க "என்ன டி.. இப்படி எல்லாம் நான் நடந்துகிட்டா.. அது இந்த இதயத்துக்காகன்னு நீ நினைப்பியா.. சரி நினைச்சிக்க அதுல தப்பு என்ன டி இருக்கு" என்று கூர்மையுடன் கேட்டவன் "இப்ப கேட்டுக்க.. இந்த இதயம் யாரோடதுன்னு எல்லாம் எனக்குத் தெரிய வேணாம்.. நான் தெரிஞ்சிக்கவும் விரும்பல.. இந்த இதயத்தின் காரணமா தான் நம்ம திருமணம் நடந்தது.. இந்த இதயம் தான் எங்கோ பிறந்த நம்மள சேர்த்து வச்சது.. உன்னுள் புதைந்திருக்கிற இந்த இதயம் தான்.. உன்னைய என்ன தேட வச்சது.. ஏங்க வச்சது.. காதலிக்க வச்சது.. நான் உனக்கே உனக்குன்னு உன்ன உருக வச்சது. அதனால உன்னுள் இருக்க.. நீ சுவாசிக்கிற உன் இதயம் எனக்கே எனக்குச் சொந்தமான ஒன்று.. அதை நான் தினம் தினம் காதலோடு ஆரதிப்பேன்.. மூச்சு முட்ட காதலோடு ஆராதிப்பேன்..
ஏன் உடல் தளர்ந்து.. முகம் வெளுத்து.. தோல் சுருங்கி.. என்னுடைய பார்வை மங்கிய பிறகும்.. ஏன் நான் தடி ஊன்றி கிழவனான பிறகும் உன் இதயத்தை.. நான் சாகும் நிலையிலும் காதலோடு ஆராதிப்பேன் டி. ஏன்னா இது எனக்குக் காதலை சொல்லி தந்த இதயம்.. எனக்கான இதயம்.. என் தேவதையை எனக்குக் கொடுத்த இதயம்.. உன்னால என்ன டி செய்ய முடியும்" என்று வீம்புடன் அதட்டிக் கேட்டவனின்.. குரலோ மாறாக ஏகத்துக்குக் காதலைப் பொழிய.. அவன் இதழ்களோ மனையாளின் இதயக் கூட்டை காதலோடு ஆராதிக்க.. கணவனின் காதலில் தேகம் சிலிர்க்க.. விழிகள் பனிக்க.. இந்தத் தத்தையின் நெஞ்சம் தித்திக்கத்.. தான் செய்தது.
சுபம்
முற்றும்
குறிப்பு :
வணக்கம் தோழமைகளே அனைவரும் நலமா.. நானும் இங்கு நலமே.. இதோ இன்றுடன் விதுனதிபாகரனும் தன்யரித்விகாவும்.. உங்களிடமிருந்து விடைபெறுகிறார்கள். ஆனால் இருவரும் உங்கள் அனைவரின் இதயத்தில் நீங்கா இடம் பெறுவார்கள் என்றே நம்புகிறேன். இக்கதையில் என்னுடன் பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மிக நீண்ட நெடிய இடைவேளைக்குப் பிறகு இக்கதையை எழுதுகிறேன். அதனால் என் எழுத்து உங்களுக்குப் பிடித்துள்ளதா.. முன்பிருந்த எழுதும் திறமை இப்பொழுதும் எனக்கு உள்ளதா.. இல்லை என்னுடைய எழுத்துக் கலையை நான் இழந்து விட்டேனா.. என்று இரண்டொரு வார்த்தைகளில் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். ஏனென்றால் என் தந்தையின் இறப்பு என்னை மிகவும் புரட்டிப் போட்டு... நானே இன்னும் முழுமையாக மீளாத நிலையில்... என்னுடைய எழுத்தை நான் எந்தளவு மீட்டெடுத்துள்ளேன் என்ற சந்தேகம் என்னுள் உள்ளதால் தான் வாசகராகிய உங்களைக் கேட்கிறேன். என் எழுத்து உங்களை வசீகரித்தது என்றால் ஆம் என்று சொல்லுங்கள் என் எழுத்தைத் தொடர்கிறேன். இல்லை என்றால்.. என் எழுத்துப் பயணத்தை முடித்துக் கொள்கிறேன்.
என்றும் உங்கள் ஆதரவுடன்
ஜெயயுவனிகா
நன்றி