Review - தத்தை நெஞ்சே.. தித்தித்ததா..

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வணக்கம் தோழமைகளே அனைவரும் நலமா 💞

#StoryReview
#tamilnovels
#தத்தை_நெஞ்சே_தித்தித்ததா

இதோ "தத்தை நெஞ்சே தித்தித்ததா.." என்ற என் கதைக்கு காஞ்சனா சகோதரி தந்த review 😍😍🤗🤗 உங்கள் பேரன்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ம்மா 🫂🌹💚💟

கதை : தத்தை நெஞ்சே தித்தித்ததா
நாயகன்: விதுனதிபாகரன்
நாயகி : தன்யரித்விகா

Feel good story வேணுமா.. அப்ப miss பண்ணாம இந்த கதையைப் படிங்க..
கதையைப் பற்றி என்ன சொல்ல.. அதுக்கு முன்னாடி நாயகன் நாயகி பற்றி சொல்லனும்னா மிக இயல்பான தம்பதிகள் இருவரும்..
எனக்கு அப்படி தான் தோனுச்சி..

As usual கதை.. பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு தன்யா..
பாசத்துக்காக அரவணைப்புக்காக ஏங்குறா.. அந்த ஏக்கத்துக்கு எல்லாம் வரமா அவள் வாழ்வில் entry ஆகிறான் திபாகர்..
இதைக் கதையின் இறுதியில் நாயகி சொல்லும் போது..
நமக்கும் மனசுல ஒரு சந்தோஷம் வருது.

மிடில் கிளாஸ் குடும்பத்துல பிறந்து.. திகட்ட திகட்ட பாசத்துல வளர்றான் திபாகர்.. இதெல்லாம் சரி தான்..
சும்மா எங்கையோ இருந்த இந்த இரண்டு பேரையும் ஆத்தர் ஜி கல்யாணம் செய்து வெச்சாங்க பாருங்க அங்க ஆரம்பிக்குது கதை.

நாயகன் தன் தந்தைக்காகத் திருமணம் செய்ய.. நாயகி தனக்கு இருக்கும் நோய்க்காக திருமணம் செய்ய.. ஸ்ஸ்ஸப்பா முடியல..
இதுல ஹீரோ தாலி கட்டியதும் அவ முகத்தைக் கூடப் பார்க்காம பேசாம..
தன் லட்சியம் தான் முக்கியம்னு வெளிநாடு போகும் போது..
அவன சப்பு சப்புன்னு நாளு அறை விடத் தோனும் நமக்கு. என்ன செய்ய.. ஹீரோவா இருக்கானே.

அதன் பிறகு அவன் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு..
நாயகிக்கு அன்பு.. பாசம்.. காதல் .. காதல்.. காதல்னு தந்து என்னதான் அவன் உருகோ உருகுன்னு உருகினாலும்😍😍😍😍 நமக்கு சரி தான் போடான்னு சொல்லத் தோனும்.

அதே சமயம் ஆஹா ஓஹோன்னு ஹீரோயிசம் காட்டாம.. இயல்பா அவன் வெளிப்படுத்துற காதல் நமக்குப் பிடிக்கும்..🧡🧡🧡

ஹீரோயின அவ வழிக்கே போய்..
அவள அரவணைக்கிற இடத்தில் எல்லாம் திபாகர் பாஸ் மார்க் வாங்குறான்.

அதைப் படிக்கும் போது நாம தான் ஏன் டா
உனக்கு மனைவி மேல கோபமே வராதான்னு கேட்கத் தோனுது..

அப்புறம் இந்தக் கதைக்கு ஏத்த தத்தையின் குணம் தான் நம் ஹீரோயின்..
எம்மா நீ கணவன் கிட்ட மட்டும் தான் வாய் பேசுவியான்னு
நம்மள கேட்க வைக்கிற மெட்டீரியல் தன்யா.

I love அப்பத்தா🌹🍁🌹🌻
வக்கீல் வல்லவன்.. நண்பன் கார்த்திக் இருவரையும் நமக்குப் பிடிக்கும்..

கடலழகன்.. மகிழ்வரதன் இருவரும் பாசக்கார தந்தைகள்..

சசிரேகா.. தமிழரசி இருவரும் மாமியார்னா அது நாங்க தான்னு ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் வாழ்ந்து காட்றாங்க.

கதை முடியும் போது கூட சித்ரா செய்ற அலப்பறை இருக்கே..
இந்தா டி உன் பெட்டி நீ உன் மாமியார் வீட்டுக்குக் கிளம்புனு நம்மள சொல்ல வைக்கிறா..

அழகான பெயர் அபூர்வா.. இறுதியா வர்ற அந்த ஆஸ்பிடல் சீன் நம்ம மனச தொடும்🥹😥😭💖♥️

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை நாயகன் காதலை நாம உணர முடியுது.. 🌈🥳🎉

அதிலும் இறுதியா அவன் சொல்ற மனைவியின் இதயத்துக்கான வரிகள் 💫💫🫶🫶🫰🫰👌👌👏👏🍃🍃🪻🪻🌻🌻செம்ம ஜி. மொத்தத்தில் அழகிய கதையைக் குடுத்த ரைட்டருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்.

🔗Story link
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...

📢🔔 For more update join my WhatsApp channel friends 🔔📣Jayayuvanika Novel's
 
Back
Top