அக்னிசாகரிக்கு இப்படியான அனுபவமெல்லாம் புதிது.. அதிலும் மகன் தன் காலைக் கட்டிக் கொண்டு அழவும்.. ஒரு நொடி செய்வதறியாது ஸ்தம்பித்தவள்.. பின் "யுவன் அம்மாவை விட்டுத் தூர போ" என்ற கட்டளையுடன் இவள் தன் மொத்த பலத்தையும் கொண்டு போராடியபடி "டேய் எதுக்கு டா.. என்னைய இப்படிச் செய்றீங்க.. என் மேல கையை வச்சதுக்கு உங்களை நான் சும்மா விட மாட்டேன் டா" என அதிகார தோரணையில் அக்னி எச்சரிக்க
"ஐயயோ.. நாங்க பயந்துட்டோம்.. எதுக்குனா கேட்ட நீ தான் வியாபாரம் பண்றேன்னு வெங்காயக் கூடையையும்.. வெண்டைக்காய் கூடையையும் பங்கு போட்டு.. எங்க பொழப்பில் மண்ணை அள்ளிப் போடறியே.. அதுக்குத் தான்" என இருவரில் ஒருவன்.. பெண்ணவளிடம் சவடாலாகப் பேசிய நேரம்
"சபாஷ்.. இப்ப இந்தப் பொண்ணு கிட்ட காட்டின உங்க வீரத்த.. இப்ப இங்க போலீஸ் வரும் அவங்ககிட்ட காட்டுங்கடா" நக்கலுடன் மேலிருந்து அந்தப் புதியவனின் குரல் கணீர் என ஒலிக்க
தங்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன்.. இவன் தான் என்ற எண்ணத்தில் யுவன் தாயை விட்டு அந்தப் புதியவனை நோக்கி அம்பெனப் பாய்ந்து படிகளில் ஏற.. அதில் ஒருவன் அக்னியை விட்டுக் குழந்தையை நோக்கி "ஏய்..." என்ற மிரட்டலுடன் விரட்டிப் பிடிக்க எத்தனிக்க
பயத்தில் குழந்தை படியில் தடுமாற.. ஒரு கையில் கைப்பேசியுடன் கீழே இறங்கிக் கொண்டிருந்த அந்த ஆடவன்.. சூழ்நிலை புரிய ஒரே தாவில் குழந்தையை வாரி தன் கையில் ஏந்திக் கொண்டு.. பின்தொடர்ந்த ரவுடியை எட்டி உதைக்க.. அதில் ரவுடி தூரப் போய் விழுந்த நேரம்.. கண்முன்னே கண்ட காட்சியில் குழந்தை இன்னும் வீரிட்டு அழுது பயத்தில் அந்தப் புதியவனை விட்டு இறங்க எத்தனிக்க.. அவ்வளவு தான் இந்தக் கணநேர தடுமாற்றத்தில் இவன் சரிந்தால் குழந்தைக்கும் ஆபத்து என்பதை உணர்ந்தவன்.. இடதுபுறமாகக் குழந்தையை அணைத்துப் பிடித்தபடி.. தன் உடலைக் குறுக்கி வலதுபுறமாகச் சரிந்தான் இவன்.
இங்கே தன்னிடம் சிக்கியவனை அக்னி வெளுத்து வாங்க.. அந்த இரண்டு பேரும் போலீஸ் என்ற வார்த்தையில் தப்பித்தோம்.. பிழைத்தோம் என்ற நிலையில் தெறித்து ஓடினர்.
இவள் மகனைக் காண.. அவனோ பயத்தில் தேகம் நடுங்க கங்காரு குட்டியைப் போல் அந்தப் புதியவனின் நெஞ்சில் கன்னம் பதிய.. அவனின் மடியில் அமர்ந்திருந்தான்.
இருவரையும் நெருங்கியவள் "ஹே.. தங்கம்.. ஒன்னும் இல்ல யுவன்.. என் ராஜா இல்ல.. பயப்படாத செல்லம்.. அம்மா அவங்களை அடிச்சிட்டேன்.. இங்க வா... அம்மா டா ப்பா" என்றவள் மகனின் தலையை முதுகை வருடி கெஞ்சலாய் அழைக்க
"ம்மாஆஆ" என்றபடி யுவன் தாவிய நொடியே.. குழந்தையின் கண்ணீரைத் துடைத்து.. தன் தோளில் இட்டுத் தட்டிக் கொடுத்த படி அக்னி அந்தப் புதியவனைக் காண..
அவனின் வலக்கை எங்கும் சிராய்ந்த நிலையில், சட்டையின் தோள்பகுதி கிழிந்திருக்க.. வலது பாத பெருவிரலில் ரத்தம் கசிய.. வலி நிறைந்த முகத்துடன் படியில் அமரந்திருந்தான் அந்த ஆண்மகன்.
பெண்ணவளின் கவனம் எல்லாம் மகனிடம் இருக்கவும்.. புதியவனின் நிலையை அறியவில்லை.. பார்த்த பின் அவனின் வேதனை புரிய "அச்சோ.. ரத்தம்.. என்ன உட்கார்ந்துட்டிங்க.. எழுந்திரிங்க ஆஸ்பிட்டல் போகலாம்" என்றவளின் குரலோ கலக்கத்துடன் ஒலிக்க
அவனுக்கோ எழுந்து கொள்ள முடியா நிலை.. அது ஏன் என்று அவன் சொல்லாமலே உணர்ந்த அக்னி "ஆபத்துக்குப் பாவம் இல்ல.. என் கையை பிடிச்சிக்கங்க" என்றவள் உதவிக் கரம் நீட்ட.. அந்நொடியே தாயோடு சேர்த்து யுவனும் தன் பிஞ்சுக் கரத்தை அந்தப் புதியவன் முன் நீட்ட
ஓர் ஆழ்ந்த பார்வையோடு அந்த இருவரின் கரத்தையும் ஒன்று சேர்த்து பற்றியபடி எழுந்து கொண்டான் இவன்.
இவள் மருத்துவமனை செல்ல.. அங்குப் பரிசோதித்த மருத்துவர்.. அவனின் வலது கையில் சதை பிரண்டு உள்ளது என்றும் மற்றும் வலது காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாகச் சொன்னவர்.. சிராய்ப்புக்கும்.. நகம் உடைந்து ரத்தம் வெளியான அவனின் பெருவிரலுக்கும் மருந்திட்டு அனுப்ப.. சற்றே ஆசுவாசமானாள் அக்னிசாகரி.
பின்னே தங்களைக் காப்பாற்ற வந்தவனுக்குப் பெரியதாய் கஷ்டம் என்றால் இவளுக்கும் மனவேதனை தானே.. "ரொம்ப நன்றி சார்.. அந்த நேரம் நீங்க வரலனா.. குழந்தையை வச்சிட்டு என்னால் அவனுங்களை சமாளிக்க முடியாது.. நல்லவேளை நீங்க இருந்தீங்க" இவள் உணர்ந்து சொல்ல
அதை ஏற்காமல்.. அழுத்தத்துடன் கூடிய கூரிய விழிகளால் அவளை நோக்கியவன் "யாரு அவனுங்க.. என் பேர் ஆதி.. உன் பேர் என்ன.. இது தான் நீ குழந்தையை வளர்க்கிற லட்சணமா" என அந்தப் புதியவன் பேசும் முதல் வார்த்தையே ஏகவசனத்தில் இப்படியாக வந்தது.
அக்னி 'இவன் யார் என்னை குற்றம் குறையோடு கேள்வி கேட்பது' என்ற நினைப்பில் ஒரு திடுக்கிடலோடு அவனை நோக்க.. அவனோ மிக இயல்பாய் இருக்கவும்.. இது சாதாரண உரையாடல் என்பதை உணர்ந்தவள்
"என் பேர் அக்னிசாகரி.. இவன் என் மகன் யுவராஜன்.. சரி ஆதி நாங்க கிளம்பறோம்.. உனக்குச் சாப்பிட ஏதாவது வேணும்னா சொல்லு வாங்கித் தந்திட்டுப் போறேன்" இவளும் ஏக வசனத்தில் விளித்து.. ஆதி செய்ததுக்கு நன்றிக் கடனாய் அவன் உண்ண ஏதாவது வாங்கித் தர நினைக்க
"எனக்கு பிரியாணி வேணும்" என்றவன் "நீ இன்னும் அவனுங்க யாருன்னு சொல்லல.. குழந்தையைப் பாதுகாப்பா அழைச்சிட்டு போய்டுவ தான" என அக்கறையுடன் கேட்க
"நீ வேணா இந்த ஊருக்குப் புதுசா இருக்கலாம்.. எனக்கு இது பழகின ஊர் தான்.. அது தொழில் போட்டி.. எனக்கும் சண்முகம் டிரான்ஸ்போர்ட் ஓனருக்கும் பிரச்சனை.. வந்தவனுங்க அந்த ஆளு கிட்ட கூலிக்கு வேலை செய்றவனுங்களா இருக்கும்" என்று பல்லைக் கடித்துக் கொண்டு தகவல் போல் சொன்னவள்.. அவனின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த மகனை நெருங்கி.. வாஞ்சையுடன் குழந்தையின் தலை கோதி "யுவன் குட்டி.. உனக்கு சாப்பிட என்ன வேணும் சொல்லு.. ம்மா வாங்கிட்டு வரேன்" என்று மகனிடம் கனிவாக இவள் கேட்க
மகனோ தன் வலது கையில் உள்ள ஆறு விரல்களையும் ஒவ்வொன்றாய் நீட்டி "ஜூஸ்.. கடலை மிட்டாய்.. தேங்காய் கேக்.. குருவி பிஸ்கெட்.. அப்புறம்" என்றவன் தன் சுட்டு விரலால் தாடையைத் தட்டிக் கொண்டு ராகம் இழுக்க
மதிய உணவுக்கான நேரமும் கடந்து செல்ல.. மகன் சகஜநிலைக்கு வந்துவிட்டானா என அறிய தான் அக்னி அவனைக் கேள்வி கேட்டது.. அதில் யுவன் பழையபடி வாயடிக்க.. நிம்மதியானவள், "போதும் டா போக்கிரி.. நான் கேட்டது சாப்பிட என்ன புவா வேணும்னு.. சரி சாம்பார் புவா வாங்கிட்டு வரேன்" என்றவள் மகனையும் அள்ளிக் கொண்டு விலகியிருந்தாள் அக்னிசாகரி.
இருவரும் திரும்பி வர.. இவள் கையில் மகன் கேட்டது அனைத்தும் இருக்க.. யுவன் கையிலோ நூலால் கட்டிய காற்றடைத்த பலூன் ஒன்று இருந்தது.. ஆதியிடம் பிரியாணியைத் தந்தவள் "இந்தா சாப்பிடு.. உனக்கு வேண்டியவங்க யாராவது இருந்தா வரச் சொல்லி கிளம்பு.. நாங்க கிளம்பறோம்" என்றவள் மகனுடன் கிளம்ப எத்தனித்த நேரம்
ஆதி, "எனக்கு யாரும் இல்ல.. என்னோட திருட்டுப் போன பொருளை.. கண்டுபிடிச்சித் தரச் சொல்லி உதவி கேட்க தான்.. உங்க ஊர் தலைவர் நாராயணன் சாரை பார்க்க வந்தேன்.. என் போன் டிஸ்பிளே உடைஞ்சிருக்கு.. உன் கிட்ட அவர் நம்பர் இருக்குனா.. கால் போட்டு குடு நான் பேசுறேன்" என்றவனின் குரலில் பணிவு இல்லை.. கெஞ்சல் இல்லை.. அதே சமயத்தில் அதிகாரமும் இல்லை.
'இது என்ன டா வம்பா போச்சு.. காப்பாத்தினதுக்கு ஏதோ நம்மால் ஆனதுன்னு செய்தா.. இவன் இன்னும் இல்ல.. தொல்லையா இருக்கான்' என்று அக்னிசாகரி நினைத்ததை அவள் முகம் காட்டிக் கொடுக்க
ஆதி, "இங்க பார்.. சட்டை கிழிஞ்சி பார்க்கவே நான் எப்படி இருக்கேன் பார்.. போனும் வேலை செய்யல.. பத்தாததுக்கு என்னால நடக்கக் கூட முடியல.. அதான் உன் கிட்ட கேட்டேன்" இம்முறை சிறு அதட்டலிட்டதோ அவன் குரல்.. அக்னியால் அதை அறிய முடியவில்லை.
வேறு வழியில்லாமல் அவன் சொன்னதைச் செய்தாள் பெண்ணவள்.. இவள் நாராயணனை அழைத்து இரண்டொரு வார்த்தை பேசி கைப்பேசியை ஆதியிடம் தந்தவள்.. நேரம் ஆவதை உணர்ந்து மகனுக்கு உணவை ஊட்ட..
தாமதிக்காமல் விரைந்தே இவ்விடம் வந்த நாராயணன் "என்ன அக்னி என்னென்னமோ நடந்திருக்கு.. நீ பார்த்து கவனமா இரு.. எதுக்கும் போகும் போது.. இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஒரு கம்ப்ளைண்ட் கொடு.. அப்ப தான் அந்த சண்முகம் அடங்குவான்.. நானும் அவனைக் கூப்பிட்டுப் பேசுறேன்.. ஏதோ புருஷன் இல்லாம குழந்தையை வச்சிட்டு ஒரு பொண்ணு வேலை செய்து பிழைச்சா.. இவனுக்கு எங்க வலிக்குது" என்று கோபத்துடன் படபடக்க
"கம்ப்ளைண்ட் எதுவும் தர வேணாங்க ஐயா... ஒரே ஊர்க்காரங்க.. நாளபின்ன பிரச்சனை பெருசா போகும்.. எனக்கும் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் ஏறி இறங்குறதுல விருப்பம் இல்லங்க ஐயா" என்று பயம், வெறுப்பு, கோபம் என அனைத்து உணர்வுகளும் கலந்த குரலில் சொன்னவள் "இதோ இவர் தான் போனில் உங்க கிட்ட பேசினவர்" என்று ஆதியை அவருக்கு அறிமுகப்படுத்த
அவனை ஏற இறங்கப் பார்த்த நாராயணன் "சொல்லு தம்பி என்ன விஷயமா என்னய தேடி வந்திங்க" எனக் கேட்க
அனைத்தும் சொன்னான் அவன்.. ஆதியின் பூர்வீகம் விருதுநகர்.. அவனின் சிறு வயதிலேயே தாய் தந்தையர் தவறிவிட.. உடன்பிறப்புகளும் இல்லாத அவனுக்குத் தாய் மாமன் தான் அடைக்கலம் தர.. பத்தாம் வகுப்பு வரை அவர் வீட்டில் தங்கிப் படித்தவன்.. பின் சூழ்நிலை காரணமாய் வீட்டை விட்டு வெளியே வந்தவன்.. மேற்கொண்டு வேலை செய்யும் இடத்திலும்.. நண்பர்களுடனும் தங்கி தன் படிப்பை முன்னேற்றி தொழிற்கல்வியில் டிப்ளமோ முடிக்கவும்.. பின் அதன் தொடர்பான சில வேலைகளைப் பார்த்து வந்தவனுக்குத் தற்சமயம் வெளிநாட்டில் வேலை கிடைத்திருக்க.. அதன் பொருட்டே திருவாரூரில் இருக்கும் தன் நண்பனைக் காண இவன் விருதுநகரிலிருந்து பயணித்துக் காரைக்குடிக்கு வந்து.. இங்கிருந்து வேறு பஸ் மூலம் திருவாரூருக்குச் செல்லவிருந்த நேரம்.. இவனின் பயணப் பையை யாரோ திருடிட..
அதில் ஆதியின் பாஸ்போர்ட் மற்றும் வேலைக்கான மற்ற சான்றிதழ்களும் திருடு போக.. முதலில் செய்வதறியாது தவித்தவன் பின் போலீஸில் கம்ப்ளைண்ட் தர.. அவர்களோ வழக்கம் போல்.. இவன் பொருளைத் தேடித் தருவதில் இன்று நாளை என்று இழுத்தடிக்க.. விளைவு பொருள் கிடைக்கும் வரை இவன் இந்த ஊரிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை உருவாக.. அதன் பொருட்டே ஏட்டு பெருமாள் சொல்லி ஊர் தலைவர் நாராயணனிடம் உதவி கேட்க வந்தவன்.. அவரைக் காண முடியா நிலையில் தான் கோவிலில் தங்கியது வரை சொன்னவன்
"நான் ஸ்டேஷன் போய்க் கம்ப்ளைண்ட் தரும் போது.. ஏட்டு பெருமாள் சார் லீவில் இருந்தார்.. இன்று தான் அவரைப் பார்த்தேன்.. எனக்கு வேண்டியவர் தான்.. அவர் தான் உங்களைப் பார்க்கச் சொன்னார்" என்பதையும் கூடுதல் தகவலாகச் சொல்ல
கேட்ட நாராயணன் "அட நம்ம ஏட்டு பெருமாளுக்குத் தெரிந்த தம்பியா நீங்க" என்றவர் அக்னியைப் பார்த்து "அக்னி.. நீ இப்ப இவரை ஸ்டேஷன் கூட்டிட்டுப் போ.. எனக்கு இப்ப ஒரு ஜோலி இருக்கு.. அதை முடிச்சிட்டு அங்கே வரேன்.. பிறகு பெருமாள் கிட்ட பேசிக்கலாம்" என்றிட
"ஐயா, நான் தான் கம்ப்ளைண்ட் கொடுக்கலைனு சொன்னனே.. வேணும்னா நான் அவரை ஸ்டேஷன் வாசலில் இறக்கி விடறேன்.. அவர் போகட்டுமே.. நான் எதுக்கு" என வெட்டி விடப் பார்க்கும் வகையில் பேச
நாராயணணோ, "அட என்னம்மா நீ.. உனக்காக இந்தத் தம்பி இம்புட்டு கஷ்டப்பட்டிருக்கான்.. நீ ஒரு சின்ன உதவி செய்ய கூடச் சுணங்குற.. என்னாச்சு உனக்கு.. நடந்த சண்டையில் ரொம்பப் பயந்து இருக்கு.. அதுக்குத் தான் புகார் கொடுக்கச் சொன்னா அதுவும் வேணாங்கிற.. சரி.. அவரை இறக்கி விட்டு ஓர் ஓரமா வண்டியில் இருந்துக்க.. நான் வந்து எல்லாம் முடிஞ்ச பெறவு சொல்றேன்" எனவும்,
வேண்டா வெறுப்பாகச் சரி என்று தலை அசைத்தாள் அக்னி.
இவர்கள் ஸ்டேஷன் செல்ல.. சொன்ன நேரத்திற்கு எல்லாம் நாராயணனும் அங்கு வந்தவர் உள்ளே சென்று பெருமாளையும் சந்தித்துப் பேசி... பின் வெளியே அக்னியிடம் வந்தவர்.. "சரி தான் எல்லாம் நமக்குத் தெரிந்த பிள்ளையா தான் இருக்கு.. அக்னி அப்ப நீ என்ன செய்ற.. உன் வீட்டுக்கு வடக்கே உள்ள காட்டுல ஒரு மோட்டார் அறை இருக்கு இல்ல.. அதை ஒதுக்கி நம்ம ஆதி தங்க ஏற்பாடு செய்து தா.. எல்லாம் அதோட பொருள் கிடைக்கிற வரைக்கும் தான்.. அதான் நமக்கு வேண்டிய தம்பியா இருக்கே செய்துடு" அலுங்காமல் நலுங்காமல் அவர் அக்னிக்குக் கட்டளையிட
அவரின் வார்த்தையைக் கேட்டு 'என்னது.. என் வீட்டுப் பின்னாடி இருக்கிற அந்த மோட்டார் ரூமா!?' என்ற எண்ணத்தில் விக்கித்து நின்றாள் பெண்ணவள்.

Last edited: