காலையில் கண் விழித்ததும் யுவன் கண்டது தங்கள் வீட்டு வாசலில் கட்டிலில் அமர்ந்திருந்த ஆதியைத் தான்.. பார்த்ததும் 'யார் டா இது' என்ற எண்ணம் ஒரு நொடி தான் அடுத்த நொடியே கண்டு கொண்டான்.
குட்டிக் கண்களை உருட்டி தன்னை அறியாதவன் போல்.. முழித்தவனைக் கண்ட ஆதி மென்னகையுடன் கரங்களை நீட்டி "இங்க வா யுவன்" என்றழைக்க
அந்த அழைப்பில் புன்னகையுடன் "ஆதிஈஈஈ" என்ற படி ஓடி வந்து ஆதியின் காலை யுவன் கட்டிக் கொள்ள.. வாகாய் குழந்தையைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டு நெற்றியோடு நெற்றி முட்டி அவனிடம் ஆதி கதை பேச.. யுவனும் சரிக்குச் சமமாய்ப் பெரியவனுடன் வாயடித்த நேரம்.. ஆதிக்கு காபியையும்.. மகனுக்குச் சத்துமாவுக் கஞ்சியையும் எடுத்து வந்து கொடுத்த அக்னி "ஆதி சொல்ல கூடாது.. அங்கிள்னு கூப்பிடு" என மகனை திருத்த
"இல்ல.. அங்கிள் வேணாம்.. யுவன் என்னை முதன் முதல்ல ஆதின்னு கூப்டது அதுவே இருக்கட்டும்.. நீ என்னை இப்படியே கூப்பிடு யுவன்" என்று ஆதியே சின்னவனுக்கு அனுமதி தர.. யுவனுக்குக் கொள்ளை ஆனந்தம்.
தாய் விலகிச் செல்லவும், ஆதியின் கையிலிருப்பதையும் தன் கையிலிருப்பதையும் மாறி.. மாறி பார்த்த யுவன் "எனக்கு இது வேணாம்.. அது தா ஆதி" என்று மழலைக் குரலில் கண்ணையும் மூக்கையும் சுருக்கிக் கொண்டு கேட்டவனின் பாவனையில் வாய் விட்டு சிரித்த ஆதியின் புன்னகையை இமை சிமிட்டாமல் ஒரு நொடியேனும் கண்டிருப்பாள் அக்னிசாகரி.
தன் வேலைகள் முடிய.. "யுவன் நேரமாகுது வா கிளம்பு" என அழைத்த தாயிடம்
"ம்மா.. இன்னைக்கு ஸ்கூல் லீவா" எனக் கேட்ட மகனுக்கு
"லீவ் இல்ல டா.. இன்னைக்கு ஸ்கூல் இருக்கு வா.. வா.. மணியாகுது பார்" மறுமுறையும் அக்னி அழைக்க
அதில் பாவமாய் யுவன் ஆதியைக் காணவும் "இல்ல டா.. எல்லாம் சும்மா.. இன்னைக்கு லீவ் தான் யுவன்" என்று ஆதி கண்ணைச் சிமிட்டி சின்னவனைச் சமாதானப்படுத்த
அதை உண்மை என்று நம்பிய அந்த வாண்டு, "ம்மா.. ஸ்கூல் லீவாம் ஆதி சொல்றான்" எனப் போட்டுக் கொடுக்கவும் பாவம் எனத் தன் முகபாவத்தை மாற்றிக் கையால் வாய் பொத்தி சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டான் ஆதி.
"அது ஆதிக்கு லீவ்.. உனக்கு இல்ல" என்றவள்.. மகனைக் குளிக்க வைத்து உணவு ஊட்டி பள்ளிக்குத் தயார் செய்த நேரம்.. இவர்களின் வீட்டு வாசலில் தன் ஸ்கூட்டியுடன் வந்து நின்றாள் யுவராஜனின் வகுப்பு ஆசிரியர் ரின்சி.
ரின்சிக்கு யுவன் என்றால் அவ்வளவு பிடித்தம்.. யாருக்கு தான் இந்த யுவராஜனைப் பிடிக்காது.. இவர்களின் வீட்டைத் தாண்டி தான் ரின்சி பள்ளி செல்ல வேண்டும். ரின்சியும், அக்னியும் நட்புடன் பழகி வர.. அக்னியின் வேலையை அறிந்ததிலிருந்து.. ரின்சியே யுவனைத் தினமும் காலையில் பள்ளிக்கு அழைத்துச் சென்று மதியம் பள்ளி முடியவும் அழைத்து வந்து வீட்டில் விட்டுச் செல்வாள்.
ரின்சியைப் பார்த்ததும்.. தான் கேட்ட லீவ் எல்லாம் மறக்க "பாய் பாட்டி.. பாய் ம்மா.. பாய் ஆதி" எனக் குதூகலத்துடன் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் பாய் சொன்ன யுவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டான் ஆதி.
ஆதி, "யுவன் என்ன படிக்கிறான் சாகரி?" எனக் கேட்க
"பால்வாடி போறான்"
"ஏன் பால்வாடி? அவனுக்கு ஐந்து வயதாகிடுச்சு தானே.. அப்ப நீ ஸ்கூலில் சேர்த்திருக்கனுமே"
அவனின் கேள்வியில் "ஹ்ம்ம்.. ஆமாம் ஸ்கூல் தான் சேர்த்திருக்கனும்.. ஆனா அவன் குழந்தை தானே.. எதுக்கு இப்பவே அவனைப் படி படின்னு படுத்தி எடுக்கனும்.. மெதுவா அடுத்த வருஷம் ஒண்ணாவது சேர்த்தா போதும்" என்றவளின் பதிலில்.. இதென்னடா பதில் என்பது போல் ஆதி அவளைப் பார்த்து வைக்க.. அதையெல்லாம் அவள் கண்டு கொண்டாள் தானே
பிறகு அக்னியும் கிளம்பிச் செல்ல.. சந்தையிலுள்ள வேலைகள் பொறுத்து மதியம் இவள் திரும்பி வருவதற்குள் யுவன் வந்திருப்பான்.. உணவுக்குப் பின் தன்னிடமுள்ள தையல் இயந்திரத்தின் உதவியுடன் சிலருக்கு அவர்கள் கொடுத்த ஆடைகளைத் தைத்துத் தருவாள். அவளின் இந்த அன்றாட வாழ்க்கை முறையை இந்த இரண்டு தினங்களில் அறிந்திருந்தான் ஆதி.
அதே இந்த இரண்டு தினங்களில் ஆதியும், யுவனும் நண்பர்களாகிப் போனார்கள்.. பிறந்தது முதல் யுவன் சமத்து பிள்ளை பசிக்கு தவிர எதற்கும் அழ மாட்டான்.. தெரிந்தவர்கள் புன்னகை முகமாய்ப் பேசி.. இவனை வர சொல்லி கையை நீட்டினால் மறுகனமே கன்னம் குழியும் சிரிப்புடன் தாவி விடுவான்.. அழுமூஞ்சி பிள்ளையில்லை.. சிடு மூஞ்சி பிள்ளையிள்ளை.. யாரிடமும் ஒட்டாத பிள்ளையும் இல்லை இந்த யுவராஜன்.. அதனால் யுவன் ஆதி கூட்டணி பலமாகவே இருந்தது.. யுவன் பள்ளி முடிந்து வந்தால் விளையாடுவது ஆதியோடு தான்.. அதிலும் ஆதி இருக்கும் உயரத்துக்கு யுவனைத் தோளில் அமர வைத்தால் போதும்.. தான் பெரிய மனிதனாய் வளர்ந்ததாக ஆர்ப்பரிப்பான்.. அதிலும் உயர இருக்கும் பூக்களையும்.. இலைகளையும் பறிப்பது தான் இந்தப் போக்கிரியின் தலையாய வேலை. ஆதி பம்பரம் விட.. அது சுற்றி வரும் அழகில் இடிப்பில் கையை வைத்துக் கொண்டு யுவனும் இடுப்பைச் சுழற்றி சுழற்றி மகிழ்வான்.
அது மட்டுமா.. மெனக்கெட்டு ஆதி ஊதி தரும் பலூன்களை.. நூலில் கட்டி அதை ஆதியின் கழுத்துக்கே மாலையாக்கிப் பின் ஒவ்வொன்றையும் வெடிப்பது என அமர்க்களப்படும் அந்த இடம்.
ஒரு முறை யுவன் கட்டிலின் விளிம்பில் அமர்ந்து அதைக் காராகப் பாவித்து ஓட்டுவது போல் பாவனைச் செய்தவன்.. தன்னுடனே அமர்ந்திருந்த ஆதியிடம்.. "ஆதி.. எல்லாருக்கும் டிக்கெட் தா.. நீ விசில் ஊதின பிறகு நாம போகலாம்" என வாயடித்துக் கொண்டிருந்த நேரம்.. அங்கு வந்தாள் அக்னி.
தாயைக் கண்டதும் மகன், "ம்மா.. நீயும் வா.. கார்ல போலாம்" என்றழைக்க
"போடா போக்கிரி.. நீ பெரியவனா வளர்ந்து நிஜ கார் வாங்கு அம்மா வரேன்.. ஆனா அப்ப அம்மாவைக் கூட்டிட்டுப் போவியா யுவன்?"
எனக் கேட்ட தாயின் கேள்விக்கு "ஹ்ம்ம்.. ம்மா நிஜ கார் வாங்கி உன்னைக் கூட்டிட்டுப் போவேன்.. ஆதி நீயும் வா" என்ற பிள்ளையின் பதிலில் புன்னகைத்துக் கொண்டாள் தாய்.
உடனே கார் ஓட்டுவதை நிறுத்தி விட்டு.. மெல்ல ஆதியை நெருங்கிய யுவன், "நாம இப்ப கார் வாங்கலாமா ஆதி.. அம்மா கூடப் போலாம்" என்று கிசுகிசுப்பாக ஏதோ கார் தினமும் அவன் வாங்கி உண்ணும் குருவி பிஸ்கெட் விற்கும் கடையில் கிடைக்கும் பொருள் என நினைத்து வாங்குவதற்காக அழைக்க.. வழக்கம் போல் யுவன் பாவனையை ரசித்தவனாக வாய் விட்டே சிரித்த ஆதி
யுவனைத் தன் கையில் ஏந்திக் கொண்டவன், "உனக்குக் கார் னா பிடிக்குமா my boy" எனக் கேட்க
"ஹ்ம்ம்.. அம்மா ஓட்டுற மாதிரி.. நானும் கார் ஓட்டனும்" என்று பாவனையோடு சொன்னவனின் உச்சந்தலையில் மென்னகையோடு தன் இதழைப் பதித்தான் இவன்.
ஒரு வாரத்தில் ஆதியின் உடல்நிலை முழுமையாகக் குணமடையவும்.. இந்த ஊரிலேயே அக்னியின் வீட்டுக்கு எதிர் திசையில் இயங்கிய மர அறுவை ஆலையில் கணக்கு பார்க்கும் வேலையை வாங்கித் தந்தார் நாராயணன். இடையில் உள்ள சாலையைக் கடந்தால் ஆலை என்பதால் ஆதிக்கும் சௌகரியமாக இருந்தது. இதனால் யுவனின் இயக்கம் தான் குறைந்தது என்றே சொல்லலாம் பின்னே அவனுடன் விளையாடிய தோழன் தற்போது இல்லையே.
வேலையின் நடுவே அவ்வப்போது ஆலையில்யிருந்து யுவனின் நடவடிக்கைகளைக் கவனிப்பான் ஆதி.. நாளைய தினம் எனக்குப் பிறந்த நாள் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த யுவனுக்கு என்ன பரிசு வாங்கித் தரலாம் என ஆதி சிந்தனையில் இருந்த நேரம்.. அங்கு வீட்டில் யுவன் பெருங்குரலில் அலறும் சத்ததில் ஆதி பதறித் துடித்துச் சென்று கண்டதில் தெரு நாய் ஒன்று யுவனைக் கடிக்கத் துரத்திக் கொண்டிருக்கவும்.. ஜானகியை முந்திக் கொண்டு ஆதி யுவனைத் தன் கையில் அள்ளிக் கொண்டவன்... நாயை அடித்து விரட்டிய பின்னே செய்த எந்தச் சமாதானமும் யுவனின் பயத்தையோ.. அழுகையோ.. உடல் நடுக்கத்தையோ நிறுத்தாமல் போகவும்
மதியம் உணவு இடைவேளை என்பதால்.. ஆலையில் வேலை செய்பவரிடமிருந்து டூவீலரைக் கேட்டு வாங்கிய ஆதி குழந்தையைச் சமாதானப்படுத்த வெளியே அழைத்துச் செல்ல.. கொண்டாட்டம் தான் யுவனுக்கு. பின்ன யமஹா பைக்கில் செல்வது இது தானே முதல் முறை.. அதுவும் அவனுக்குப் பிடித்த ஆதியுடன். யுவன் கேட்டதை எல்லாம் வாங்கித் தந்தவன்.. பின் எங்குப் போகலாம் என்று கேட்க.. யுவன் சொன்ன பதிலில் ஒரு நொடி ஸ்தம்பித்துத் தான் போனான் ஆதி.
"உனக்கு அங்க பிடிக்குமா.. ஏன்?"
ஆதியின் கேள்வியில், "மீன் அழகா நீந்தும் தான.. இப்படி இப்படிக் குதிச்சி குதிச்சிப் போகும்" என்பதைத் தன் பிஞ்சுக் கையால் வளைத்து வளைத்துச் செய்து காட்டியவன் "அப்பறம் இப்படி ஹாப்.. ஹாப்ன்னு சாப்டும்" என்றவன் தன் வாயை மீன் போல் செய்து காட்டியவனைத் தன் நெஞ்சில் வைத்து இறுக்க அணைத்த ஆதியின் விழியில் நீர் படர்ந்தது. யுவன் கேட்டதை நிறைவேற்ற ஏரி கரைக்கு அழைத்து வர.. மீனைக் கண்ட சந்தோஷத்தில் ஆதியின் கரத்தில் மீனாகத் துள்ளினான் யுவராஜன்.
பின் இருவரும் வீட்டுக்கு வரும் நேரம் அக்னியும் வர.. மகனைக் கை நிறையத் திண்பண்டங்களுடன்.. ஆதியுடன் வண்டியில் கண்டவளுக்கு ஆத்திரம் கரைபுரண்டது.. முன்பே அக்னிக்கு ஆதியைக் கண்டால் பிடிக்காது.. அதிலும் அவன் யுவனிடம் நெருங்கி இப்படியெல்லாம் பழகக் கோபம் கண்ணை மறைக்க நிதானம் இழந்தவள்
"ஏய்.. யார் நீ.. ஏதோ எங்களைக் காப்பாத்தின.. வீட்டுக்கு வந்த.. உடம்பு நல்லா தேறின பிறகு போய்டுவன்னு பார்த்தா.. என்னமோ பிள்ளைப் பிடிக்கிறவன் மாதிரி என் பையனையே சுத்தி சுத்தி வர.. யாரைக் கேட்டு என் மகனை அழைச்சிட்டுப் போன? எங்க போய்ட்டு வர... யார் டா நீ.. குழந்தைகளைக் கடத்தி விக்கிறவனா.. அதான் யுவன விடாம சுத்தி வரியா.. அப்பன் இல்லாத குழந்தை.. ஆத்தா என்ன செய்துடுவான்னு நினைச்சியா.. நான் எல்லாம் பத்து ஆம்பளைக்குச் சமம் டா.. ஏதோ போலீஸ்க்கு பயந்து நான் சும்மா இருப்பன்னு நினைக்காத.. என் பிள்ளையை நெருங்கிறவனோட குடலை உருவி மாலையா
போட்டுட்டுத் தான் ஓய்வாள் இந்த அக்னிசாகரி" தன் பெயருக்கு ஏற்றார்போல் அக்னியாய் மாறி பெண்ணவள் வார்த்தையால் ஆதியைப் பொசுக்கியவள்..
மகனையும் இழுத்து வைத்து,
"யார் கூட்டிட்டு போனாலும் போவியா.. யார் என்ன வாங்கித் தந்தாலும் வாங்கிப்பியா.. என்ன பழக்கம் இது யுவன்?" எனக் கேட்டவளின் கரமோ தன் கோபம் தீரும் மட்டும் குழந்தையை அடிக்க..
தாயின் புது அவதாரத்தில் பயந்து நடுங்கி யுவன் அழுகையோடு ஆதியின் காலைக் கட்டிக் கொள்ள.. அவ்வளவு தான் இங்கு முழு ருத்திரனாய் மாறியவன் நிதானம் இழந்து ஓங்கி அக்னியை அறைந்திருக்க.. அதிர்ச்சியில் கண்ணில் பூச்சி பறக்க கீழே விழுந்தாள் அவள்.
அடித்தும் கோபம் தீராதவனாக "ஏய்.. யாரை டி.. டா போட்டுப் பேசுற.. கொன்னுடுவேன் உன்னை.. என்ன டி பிரச்சனை உனக்கு.. குழந்தை அழவேதான் அவனைச் சமாதானப்படுத்த வெளியே அழைச்சிட்டுப் போனேன்.. நான் ஒன்னும் யாரோட பிள்ளையைத் தூக்கிட்டு போகல.. எனக்குத் தெரிந்த என் கிட்ட நல்லா பழகின யுவனைத் தான் கூட்டிட்டுப் போனேன்.. அதுவும் ஜானும்மா கிட்ட சொல்லிட்டுத் தான்.. இதை எதையும் தெரியாம பேசினது நீ தான் டி.. என்னவோ என்னைய கெட்டவன் மாதிரி சித்தரிக்கிற.. நீ தான் கரண்ட்டு கம்பியில கையை வெச்சவ மாதிரி கையைக் காலை வெட்டி வெட்டி ஆட்டம் ஆடுற. இங்க பார் இதுமாதிரி என் முன்னாடி நீ நடந்துகிட்டது இது தான் கடைசியா இருக்கனும். மறுபடி இப்படி ஒரு ஆட்டத்தை இனி நான் பார்த்தேன்.. உன்னைக் கொன்னு புதைச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்" என ஆங்கார கர்ஜனையுடன் கட்டளையிட்டவனைக் கீழே விழுந்த நிலையிலேயே திகைப்புடன் பார்த்திருந்தவளை மிக நிதானமாக நெருங்கி அவள் முன் சொடக்கிட்டவன் "அப்படி உன்னை செய்தா கூட ஏன்னு கேட்க.. ஒரு நாயும் வராது" என மிக மிக நிதானத்துடன் ஆதி மொழிய.. அந்தக் குரலில் தன்னுள் சர்வமும் ஒடுங்கியது அக்னிசாகரிக்கு.
அப்படி ஸ்தம்பித்து இவள் நின்றது ஒரு நொடி தான்.. அடுத்த வினாடியே தன் முன் நீட்டியிருந்த ஆதியின் கையைத் தட்டி விட்டவள்.. ஆங்காரத்துடன் தன் பலம் கொண்ட மட்டும் ஆதியைத் திரும்ப அறைந்தவள், "என்ன பார்க்கிற.. எனக்கும் திருப்பித் தந்து தான் பழக்கம்.. அப்பறம் என்ன சொன்ன.. எனக்காகப் பேச ஒரு நாயும் வராதா.. சரி அப்ப உனக்காக மட்டும் என்ன ஊரே வருமா" எனப் பெண் சிங்கமென இவளும் கர்ஜிக்க
அறை வாங்கிய அவமானத்தில்.. முகம் கருக்க ஆதி மூர்க்கனாய் அவளை நெருங்கிய தருணம்..
இருவருக்கும் இடையில் வந்த ஜானகி, "தம்பி.. தம்பி.. விட்டுடுங்க இதுக்கு மேல இதைப் பெருசு படுத்தாதிங்க.. என்ன இருந்தாலும் நீங்க பொட்டபிள்ள மேல கை வச்சியிருக்கக் கூடாது.. உங்களுக்கு யார் தந்த தைரியம் இது.. அவ பேசினது தப்பு தான்.. அதுக்கு நீங்க அவளை அடிச்சதும் தப்பு.. நீங்க அடிக்கவும் அவளும் திரும்ப அப்படி நடந்துகிட்டா.. தப்பு தான்.. நான் அவளை மன்னிப்பு கேட்க சொல்றேன்.. இதோட இதை விடுங்க" என்றவரின் பேச்சை இருவரும் கேட்கும் நிலையில் இல்லை.
ஆனால் அழுகையுடன் யுவன் ஓடி வந்து தாயின் காலைக் கட்டிக் கொண்டதில் தன் சுயம் பெற்ற ஆதி.. தன்னுடைய தணியாத கோபத்திற்கு எல்லாம்.. வடிகாலாய் அங்கிருந்த மரத்தில் இவன் ஓங்கி இரண்டு முறை குத்திக் கொள்ள
கலக்கத்துடன் அதைக் கண்ட ஜானகி, "வேணாம் தம்பி.. இவ்வளவு கோபம் நல்லதுக்கு இல்ல ப்பா" என அவனுக்கு எடுத்துச் சொல்லியவர்
"அக்னி நீ செய்தது பெரிய தப்பு.. கருவேல மரத்துக்கு வாங்கின கோடாரி... வேப்பமரத்தை வெட்டி சாய்த்ததாம்.. அப்படி இருக்கு உன் கோபம்.. என்னனு தெரிஞ்சிக்காம நீ பேசினது எல்லாம் அதிகம். அந்தத் தம்பி கிட்ட மன்னிப்பு கேளு.. யுவனை நாய் துரத்தவோ குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். அதான் அந்தத் தம்பி நான் சொல்லி அழைச்சிட்டுப் போனார்.. அதற்கு நீ என்னவெல்லாம் பேசிட்ட.. மன்னிப்பு கேளு அக்னி" என்று நடந்ததற்கான விளக்கத்தைத் தந்து ஜானகி அக்னியை வற்புறுத்த
நிதர்சனம் உரைக்கப் புரிய, "நான் பேசினது தப்பு தான் சாரி" என மன்னிப்பு கேட்டவள் "ஆனா இது நான் உன்னை அடிச்சதுக்காகக் கேட்கல.. உன் கிட்ட அப்படிப் பேசினதுக்காகத் தான்" என ஆதிக்கு விளக்கமும் தர.. வன்மத்துடன் மண் தரையைத் தன் காலால் ஓங்கி உதைத்தபடி அங்கிருந்து விலகியிருந்தான் ஆதி.
அழகிய நந்தவனமாய் இருந்த இந்த வீடு
இன்று அக்னியின் அவசரத்தால்.. ஆதியின் கோபத்தால் இன்று போர்க்களமாய்க் காட்சியளித்தது.