பிறந்த நாளுக்கு ஆதி தந்த பரிசும், செய்த செயலும் யுவனை விண்ணுக்கும் மண்ணுக்கும் ரங்கராட்டினமாய் ஆட வைத்ததில், முன்னமே சேட்டைக்காரனான இந்த யுவராஜனை.. இப்போது சொல்லவா வேண்டும். காலையில் எழுந்ததும் ஆதியுடன் சேர்ந்து வேப்பங்குச்சியால், பல் தேய்க்கிறேன் என்ற பெயரில் வயல் வரப்பில் பட்டாம்பூச்சியையும் குருவியையும் விரட்டுபவன் ஆதியைப் போலவே சிறுசிறு சேட்டைகளோடு உடற்பயிற்சி செய்பவனைப் பார்த்து ஆதி சிரிக்க, அவனைப் போலவே மகனும் கலகலத்து நகைக்கும் ஒலி கேட்டு அக்னியின் இதழும் புன்னகைக்கும். யுவனைக் குளிக்க வைத்து, உடலைத் துடைத்து ஒரு டவுசரை மாட்டி ஆதி அவனை அனுப்ப. தாயிடம் வந்து தான் செய்த சேட்டைகளைத் தலையசைத்தபடி மழலையில் சொல்லும் மகனின் அழகை இமை சிமிட்டாமல் ரசிப்பாள் அக்னி.
யுவன் தாயை போல் மாநிறமாக இல்லாமல் பாலுடன் கலந்த குங்குமப்பூ நிறத்தில் சிரித்தால் குழி விழும் குண்டு கன்னத்துடன்.. துரு துரு பார்வையுடன்.. அக்னியை போலவே தலை கேசம் சுருண்டு.. நெலிநெலியாய் நெற்றியை வருடி நிற்க.. தலை சாய்த்து.. "ம்மா எனக்கு ஆம்ஸ் பார்" என்று மகன் கையை மடக்கி புஜத்தை தொட்டு காட்டும் அழகில் ஒரு தாயாய் முழுமையாகக் கரைந்து தான் போவாள் பாவை.
இப்படித் தாயாய் மகனின் செயலை கண்டு ரசிக்கும் ஒரு மனது மற்றோர் புறம் கலக்கம் கொள்ளும். என்ன தான் அன்பு, பாசத்தைக் காட்டினாலும்.. கூடவே கண்டிப்பும் அதட்டலும் இருக்கும் இவளிடம். அதே தற்போது ஆதரவுக்கு ஒரு ஆள் கிடைக்கவும் சொல்லவா வேண்டும் அடம் அடம் அடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடித்தான் இந்தப் போக்கிரி. தாய் அதட்டினால் ஆதி இல்லாத நேரம் அமைதி காப்பவன்.. அதே ஆதி இருக்கும் வேலையில் தன் அழுகையால் ஊரையே கூட்டி விடுகிறான்.. கண்டிப்பின்றிக் குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கித் தருவதில் தான் தங்களின் அன்பும்.. பாசமும் நிறைந்துள்ளது என்ற கோட்பாட்டில் உள்ளவன் ஆதி.
இதன் பொருட்டே அக்னிக்கும் ஆதிக்கும்.. இடையே கருத்து வேறுபாட்டால்.. சில நேரங்களில் வார்த்தைகள் தடித்துச் சண்டையில் முடியும்.
இன்று நண்பன் ஒருவன் வைத்திருப்பதைப் போல் உயர்ரகச் செருப்பை வாங்கித் தர சொல்லி கேட்ட மகனை இவள் மறுத்ததோடு மட்டுமில்லாமல் அதட்ட அதில் பிடிவாதத்துடன் உணவு உண்ணாமல்.. ஆதியின் வரவுக்காகக் காத்திருந்தவன் ஆதியை கண்டதும் அழுகையோடு தாய் அடிக்காமலே அடித்ததாகப் பொய் புகார் படித்தில் கோபம் கனற்ற அதைக் கட்டுபடுத்திய ஆதி, "சாகரி, குழந்தைக்குச் செய்யறதுல உனக்கு ஏன் கஞ்சத்தனம்.. நீ சம்பாதிக்கிறது எல்லாம் அவனுக்குத் தான.. வாங்கிக் கொடு" தன்மையாய் எடுத்து சொல்ல
"ஆமா நான் சம்பாதிக்கிறது எல்லாம் அவனுக்குத் தான்.. அதுக்காக எதை வாங்கித் தரனும்.. தர கூடாதுன்னு இருக்கில்ல.. நான் என்ன லட்சம் லட்சமாவா சம்பாதிக்கிறேன்.. பார்க்கறத எல்லாம் வாங்கித் தர.. அப்படியே லட்சக் கணக்குல இங்குக் கொட்டியிருந்தாலும்.. இப்படிக் கேட்குறதை எல்லாம் வாங்கித் தந்துட மாட்டேன்" என்றவளின் வாதத்தில்
"சாகரி இது சரியில்ல.. யுவனோட சந்தோஷத்தை விட உனக்கு அப்படி என்ன பணம் முக்கியம்.. பெத்த தாய் இப்படி எல்லாம் கணக்கு பார்க்க மாட்டா.." இவனும் விடுவதாக இல்லை
"நான் யோசிப்பேன் சார்.. நான் இருப்பேன்.. தாய் பாசம்ங்கிற பேர்ல உன்னை மாதிரி நடந்துக்க மாட்டேன்.. நீ இதுல தலையிடாத" என்றவள் மகனிடம்
"டேய் யுவன் எங்கிருந்து வந்தது உனக்கு இத்தனை பிடிவாதம்.. தொலைச்சிடுவேன் தொலைச்சி.. நீ என்னவேனா செய்துக்க.. அந்த ஷூவை அம்மா வாங்கித் தர மாட்டேன்" என்றவளின் கண்டிப்பில்.. யுவன் அழுது ஆர்ப்பாட்டம் செய்திட.. அக்னியின் மேலுள்ள கோபத்தில் ஒரு முறைப்புடன் நான் செய்வேன் உன்னால் என்னைத் தடுக்க முடியாது என்ற பார்வையுடன் பிடிவாதமாக அந்த நொடியே யுவனை அழைத்துச் சென்று ஷூவை ஆதி வாங்கித் தர.. எத்தனை திமிர் இவனுக்கு என்ற எண்ணத்தில் முற்றும் முழுமையாக மகனின் வாழ்விலிருந்து ஆதியை விலக்க நினைத்தாள் அக்னிசாகரி.
நாட்கள் நகர.. வருடா வருடம் இன்றைய தினம் ஏன் விடிகிறது என்ற எண்ணம் மனதில் துயரத்துடன் ஓங்கி ஒலிக்க.. அதைக் கடக்க முயன்றும் முடியா நிலை அக்னிக்கு.
எழுந்தது முதல் தான் செய்யும் வேலைகளை உணர்ந்து செய்யும் நிலையின்றி.. நடுங்கும் விரல்களால் மகனுக்கு வேண்டியதை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தவளின் ஜீவனற்ற விழிகளில் அவ்வப்போது நீர் தேங்க தண்ணீரை கூட அருந்தாதிருப்பவளை கண்ட ஜானகி "என்ன டி யம்மா செய்யறது.. கலங்காத.. பிறந்த யாரா இருந்தாலும் ஒரு நாள் சாகத் தான் வேணும்.. அதுல நீ முந்தியா.. நான் பிந்தியானு தான் இருக்கு வாழ்வு.. மனச தேத்திக்க. நீ இப்படி இருந்தா போன உசுரு திரும்ப வந்துடுமா என்ன.. எல்லாம் மேல இருக்கவன் செயல். அதான் அந்த உசுருக்கு ஈடா உனக்கு ராசா கணக்கா பிள்ளைய குடுத்திருக்கார் கடவுள்.. அவனைப் பிடிச்சிட்டு மீண்டு வா ஆத்தா.." என அவளை அணைத்து தேற்ற
அந்த அனைப்புக்காகவே காத்திருந்தவள் போல் மகன் முன் அழுகிறோம் என்ற சிந்தனையின்றித் தன் கட்டுப்பாட்டையும் மீறி உடல் குலுங்க கதறினாள் அக்னி.. தாயின் அழுகையைக் காணவும் யுவனும் அழுகையோடு ஆதியை நோக்கி வெளியே வந்தவன் "ஆதி.. ம்மா அழறாங்க.. ஏன்.. யாரு அடிச்சா" என விம்மலுடன் உதட்டை பிதுக்கி கேட்க
"அம்மாவ யாரும் அடிக்கல.. அம்மாவுக்குக் காய்ச்சல்.. அதான். சீக்கிரம் சரியாகிடும்.. இப்ப நாம வெளிய போலாமா.. அங்க நீ சமத்து பையனா என்னோடவே இருக்கனும் சரியா" இன்று செய்யப் போவதை முன்னமே ஜானகி இவனிடம் தெரியப்படுத்தியிருக்க அதன் பொருட்டே சின்னவனைத் தேற்றினான் ஆதி.
அங்கு அக்னியோடு வந்த ஜானகி, "தம்பி.. அக்னி தடுமாறி போறாப்பு.. இந்த மூட்டு வலி இல்லனா நான் வந்திருப்பேன்.. நீ செத்த ரெண்டு பேரையும் பார்த்துக்க.. பெத்தவனுக்குத் திதி கொடுக்கற வயசா யுவனுக்கு.. இல்ல இவளுக்குத் தான் புருஷனுக்குக் காரியம் பண்ற வயசா.. எல்லாம் விதி என்னத்த சொல்ல.. பார்த்துச் சூதானமா போய்ட்டு வாங்க" என வழியனுப்ப.. பொருள் விளங்கா பார்வையுடன் தலையசைத்துக் கொண்டான் ஆதி.
இன்று திதி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தாள் அக்னி. அதன் பொருட்டு இவர்கள் மூவரும் கோவில் தெப்பக்குளத்திற்கு வரவும் பூஜைக்கு வேண்டிய வசதிகளுடன் தயராக இருந்த புரோகிதர்.. ஆதி தான் திதி கொடுக்க வந்தவன் என நினைத்து அவனை மனையில் அமரச் சொல்ல..
"இல்ல.. என் பையன் செய்யனும்" என அக்னி இன்றைய நாளின் முதல் வார்த்தையென ஒற்றை வரியில் பதில் தந்தவளை ஆழ்ந்து நோக்கிய ஆதி இவர்களை விட்டு விலகி நின்று கொண்டான்.
யுவனைப் பார்த்த புரோகிதரின் மனது 'இந்த வயசுல இப்படிச் செய்யுறது எல்லாம் எவ்வளவு கொடுமை' என வருத்தத்துடன் நினைத்தது. அவர் சொல்ல சொல்ல அக்னி மகனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு அவனின் கையால் அனைத்தையும் செய்ய..
யுவனை ஓரிடத்தில் நிறுத்தி வைத்ததில் முதலில் அமைதியின் இலக்கணமாய் இருந்த யுவன் பின் தாயின் பிடியில் அழ ஆரம்பிக்க.. மகனை தேற்றவும் இன்றி அமர்ந்திருந்தாள் அக்னிசாகரி.. அதைவிடத் தற்போது இருக்கும் மன நிலைக்கு மகனை கையாளும் நிலையைக் கூட மறந்திருந்தாள் என்றே சொல்லலாம்.
இதையெல்லாம் தூரயிருந்து கண்ட ஆதி இவர்களை நெருங்கி பேச்சற்று.. யுவனைத் தன் மடி மாற்றிக் கொள்ள.. மறந்தும் மகனின் கரத்தை விடாமல் அனைத்தும் மகனின் கரம் பிடித்தே செய்தாள் அக்னி.
வெளி பார்வைக்கு அக்னி அமைதியாக அமர்ந்திருந்தாலும்.. அவளின் உள்ளமோ 'இப்படி ஒன்ற நான் செய்வன்னு நினைக்கலையே.. அந்தச் சாமி எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனைய தரனும்.. பிறந்ததிலிருந்து யாருமற்ற அநாதையாகவே நான் வாழ்ந்திருப்பனே.. எதுக்கு இப்படி ஒரு பந்தத்தைத் தந்து அதைப் பாதியிலேயே பறிக்கனும்.. நான் எப்படி இதைத் தாங்கி வாழறேன்.. இந்நாள் என்னை நடைபிணமா மாத்தவா அப்படி ஒன்று நடந்தது... ஏன்.. ஏன்.. ஏன் அப்படி ஒன்று நடக்கனும்.. நீ ஏன் பிறந்த.. இப்ப ஏன் என்னை விட்டு போன' என்று தன் முன் நடக்கும் கொடுமையைக் காண முடியாமல் துயரத்தில் அரற்றி கொண்டிருந்தவளின் மனதை யார் அறிவாரோ அன்றி அவள் துயர் தீர்ப்பவர் தான் யாரோ.
ஆதி என்றதும் சமத்தாய் அமர்ந்து கொண்டான் குட்டி வாண்டு. இறுதியில் பிண்டங்களைக் குளக்கரை நீரில் கரைக்க நீர் நிறைந்த படியில் மூவரும் நின்ற நேரம் கையில் தட்டுடன் அக்னி தடுமாற.. "ஹேய்.. பார்த்து சாகரி" என்ற சொல்லுடன் இடது கரத்தில் யுவனை வைத்திருந்தவன் வலது கரத்தால் இயல்பாய் அக்னியின் தோள் பற்றி ஆதி அவளைத் தாங்கி கொள்ள.. அதை உணரும் நிலையில் கூட அக்னியில்லை.. குளத்தில் மீன்களைக் கண்டு வழமை போல்.. துள்ளி குதித்து ஆர்ப்பாட்டம் செய்த யுவனைக் கொஞ்சி தழுவி கொண்ட ஆதியின் மனமோ முதல் முறையாக வேதனை தத்தெடுத்தது.
பூஜை முடியவும் மூவரும் உணவகத்திற்குச் செல்ல.. நாலு பேருக்கு உணவை வாங்கி யுவன் கையால் தந்த ஆதி.. அக்னி உண்ண என்ன வேண்டும் என்று கேட்க.. அவள் பசியில்லை என்று மறுத்ததில் நான் கேட்டேன் அதோடு என் கடமை முடிந்தது என்ற நிலைப்பாட்டில் ஒரு தோள் குலுக்கலில் யுவனுடன் விலகியிருந்தான் ஆதி. பின்னே அக்னியின் மேல் அக்கறை கொள்ள இவனுக்கு என்ன பைத்தியமா..
உணவு மேஜையில் எதிர் எதிர் இருக்கையில் இருவரும் அமர மேஜையின் மேல் யுவன் அமர்ந்து கொள்ள.. அக்னியை காண வைத்து தான் உண்ணுவது அநாகரிகம் என்று கருதி அவளின் அனுமதியின்றிப் பழச்சாற்றை இவன் வர வழைக்க அதை அவளும் மறுக்காமல் அருந்திய நேரம் உணவை யுவனுக்கு ஊட்டி விட்ட படி தானும் உண்டவனின் செயலை தான் விழி சிமிட்டாமல் கண்டு கொண்டிருந்தாள் பாவை.. ஓரிடத்தில் கூட யுவனை அவளிடம் தனித்து விடவில்லை ஆண்மகன். இவளின் வேதனை புரிந்து நடந்து கொண்டவனை முதல் முறையாகத் துளி அளவேனும் வேறு கோணத்தில் கண்டது அக்னியின் அகம்.
ஆதி நேர்த்தியாய் உணவை அள்ளி.. யுவனிடம் நயந்து பேசி.. பாசத்தோடு உணவை ஊட்டும் காட்சி கவிதையாய் இருக்க.. அதைக் கண்டவளின் முகத்தில் கொதி நீரை கொட்டியது போல் விதிர்விதிர்த்து போனவள்.. சீறும் பாம்பென ஆதியின் வலது கை விரல்களைக் கண்டு.. முற்றும் முழுவதுமாகத் தன்னைத் தொலைத்திட, அதில் தேகம் விரைக்கத் தானிருக்கும் சூழ்நிலை உணராமல் அந்நொடியே மகனை தன் கையில் அள்ளி கொண்டு இவள் உணவு மேஜையை விட்டு விரைய..
அக்னியின் செயலில் ஒன்றும் புரியாமல் இரண்டே அடியில் அவளைத் தடுத்து நிறுத்திய ஆதி கோபத்துடன், "திடீர்னு உனக்கு என்னாச்சு சாகரி.. எதுக்குச் சாப்பிட்டு இருக்கிற குழந்தையை இப்படித் தூக்கிட்டு போற.. நாம் இருக்கிறது பொது இடம்.. இங்கே எப்படி நடந்துக்கனுங்கிற நாகரிகம் கூட உனக்கு இல்லையா.. குழந்தை முன்னாடி நாம என்ன செய்கிறோமோ அது தான் நாளைக்கு அவன் செய்யக் காரணமா இருக்கும்.. போய் உட்கார்" எனச் சீற்றத்துடன் அதிகார தோரணையில் கட்டளையிட்டவனின் முகத்திலும் குரலிலும் துளியும் அந்தக் கோபமோ சீற்றமோ துளியுமில்லை.. மாறாக ஏதோ இயல்பாகப் பேசுபவன் போலவே இருக்க இயல்பாகத் தன்னைக் கட்டுக்குள் வைத்திருந்தான் ஆதி. அக்கூடத்தில் அதிக அளவில் ஆட்களில்லாமல் போக அப்படி எஞ்சியிருந்த ஒன்றிரண்டு பேரும்.. இவனின் இயல்பான தோரணையில் அவர்களின் வேலைகளைக் காண.
"நான் போகனும் என்னை விடு" அக்னி அவனின் எச்சரிக்கையும் மீறி கோபத்தில் சீற
"நீ போகனும்னா போ.. ஆனா இப்ப நீ இருக்க மனநிலையில் யுவனை நான் அனுப்ப மாட்டேன்.. அவனை விட்டுட்டு போ" அதாவது நீ எக்கேடாவது போ.. எனக்கு யுவன் முக்கியம் என்ற ஆதியின் தோணியில் எரிச்சல் மிக
"ஒரு தாயை விட நீ அவனைப் பார்ப்பாயோ.. என் மகனை கவனமா கூட்டிக்கொண்டு போக எனக்குத் தெரியும்" என்றவளின் வார்த்தையில்
"இன்று முழுக்க நீ அவனைப் பார்த்த லட்சணம் தான் தெரியுமே" ஆதி எள்ளி நகையாட
அதில் இவள் கோபத்துடன் அவனை முறைத்திருந்த நேரம் யுவன் அழ ஆரம்பிக்கவும்
ஆதி, "இங்க பார்.. யுவனுக்குப் பசி.. அதோடவே நான் அவனைத் தூக்கிட்டு உன் கூட வருவேன்னு நினைக்குறியா.. உனக்கு என்ன பிரச்சனைன்னு உட்கார்ந்து சொல்லு.. இப்படிக் குழந்தை முன்னாடி நடந்து அவனுக்கு முன்னுதாரணமாகாத.. இங்க பார் எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க.. நாம யாருக்கும் காட்சி பொருளாக இருக்கக் கூடாது.. யுவன் சாப்பிடுற வரை உட்கார் சாகரி" என்று மெல்லிய குரலில் எடுத்து சொல்ல
அப்போது தான் பாவையின் அகத்தில் தான் எதற்கு அப்படி நடந்து கொண்டோம் என்பது புரிய.. அடுத்த நொடியே பேச்சற்று உக்கிர பார்வையுடன் ஆதியின் வலதுகையையே இவள் இமை சிமிட்டாமல் நோக்கவும்.. அக்னியின் பார்வையை உணர்ந்து.. யோசனையுடன் ஆதி மிக இயல்பாய் அவனின் வலது கையைத் தூக்கி முகத்தருகே காண.. அங்கே வீற்றிருந்தது ஐந்து விரலோடு சேர்த்து குட்டி விரலாக ஆறாம் விரல்.