இதுவரையில் அக்னிசாகரி ஆதியை ஊன்றி கவனித்தில்லை.. பிறகு எங்கிருந்து அவன் விரல்களைக் காண்பது.. இதோ இன்று அவனின் கையிலிருந்த ஆறு விரல்களைக் காணவும் அதிர்ந்தவளுக்குள் பயம் பற்றிக் கொள்ளவும் சூழல் மறந்த நிலையில் செய்த செயலால் இருவருக்கும் இடையில் நடந்த வார்த்தை போரிலும் ஆதியின் இறுக்கமான பிடியிலும் இவளுக்கு விழியில் நீர் தேங்கிய நொடி யுவன் அழுகையோடு ஆதியை நோக்கி கை நீட்ட.. மகன் செயலில் மனம் உடைய வேறு வழியின்றி.. துளியும் விருப்பமின்றி இருக்கையில் அமர்ந்து கொண்டாள் அக்னி.
இவளின் உள்ளமோ உலைகலமாய்க் கொதித்துக் கொண்டிருக்க.. ஆதியோ எதுவும் நடவாதது போன்ற பாவனையில் யுவனைச் சமாதானம் செய்து.. உணவை ஊட்ட அது இவள் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை.
உணவை முடித்து மூவரும் வீட்டுக்கு வந்ததும் தங்களுக்குக் கிடைத்த தனிமையில் தான் கொண்ட தைரியம் எல்லாம் வடிய.. முகத்தில் பயம் மட்டுமே ஆட்சி செய்ய ஆதியிடம் வந்த அக்னி, "நான் இழந்த வரை போதும்.. ப்ளீஸ் ஆதி.. எனக்கு இருக்கற ஒரே உறவு என் மகன் மட்டும் தான் அவனை என் கிட்டயிருந்து பிரிச்சிடாத" என்றவளின் குரல் அவளையும் மீறி கெஞ்சியது.
அவளின் குரலில் மன்றாடலை காணவும்.. ஆதியின் முகத்தில் ஒரு நொடியேனும் கர்வம் வந்து குடி கொள்ள.. அது பொய்யோ என்னும் வகையில் அடுத்த நொடியே அவனின் முகம் பாராங்கல்லாய் இறுகிட, "எனக்குப் புரியல.. நான் ஏன் யுவனைப் பிரிக்கப் போறேன்" எனக் கேட்டவன் "தப்பு செய்தவங்க தான் பயப்படனும் நீ ஏன் சாகரி பயம் கொள்ற?" எனக் கேட்டவனின் குரலோ அத்துனை ஏளனத்துடன் ஒலித்தது.
இந்நேரம் அவனின் முன்னே பழைய அக்னிசாகரி நின்றிருந்தால்.. கேட்டவனின் குரல்வலையை அழுத்தி 'நான் அப்படி என்ன டா தப்புச் செய்தேன்.. யாரு.. எனக்கா டா பயம்?' எனக் கேட்டிருப்பாள்.. ஆனால் தற்போது நின்றிருப்பது பாசத்தால் தன்னிலை இழந்து பயம் என்னும் பிடியில் சிக்கி தவிக்கும் அக்னியாச்சே.
"நான் தப்பு செய்யல.. ஆனா என்னை மாதிரி ஏழைக்கு அதை நிரூபிக்க வாய்ப்பு இல்லையே சார்.. குறைந்த பட்சம் எங்கள் தரப்பு நியாயத்தைக் காது கொடுத்து கேட்கவாது இங்கு யாராவது இருக்காங்களா.. நான் ஏழை மட்டும் இல்ல ஆதி.. யாருமற்ற அநாதை. தனக்கு ஒரு தீங்கு நேரும் போது.. எதுவும் செய்ய முடியாமல் நிற்கதியா நீ நின்னு இருக்கியா ஆதி.. நான் இருந்தேன்" என அழுகையின் ஊடே கேட்டவள் ஒரு அந்நிய ஆடவன் முன் அழுகிறோம் என்ற சிந்தனை கொஞ்சமும் இன்றிக் கண்ணில் நீர் வடிய.. கைகளால் முகத்தை மூடிய நிலையில் ஒரு கேவலை அக்னி வெளிப்படுத்த
அவளின் குமுறலில் ஆதியோ எவ்வித சலனமுமின்றி இரும்பென நின்றிருக்க.. "அதிலும் சமூக அறிவை தவிரப் பெரியதாகப் படிப்பறிவு இல்லாதவ நான்.. அப்பப்பா.. அப்படியான சூழலில் நான் தவிச்சி நின்றதெல்லாம் போதும்.. எங்களை விட்டுடு" எனக் கை கூப்பியவள் நின்று அவனின் பதிலை எதிர்பார்க்காமல் கண்ணீரோடு அங்கிருந்து விலகியிருக்க.. முதல் முறையாகச் சிந்தனையைத் தத்தெடுத்தது ஆதியின் முகம்.
அதன்பிறகு அக்னி ஆற்றுவார் தேற்றுவார் இன்றிக் கண்ணீரில் கரைய.. யாரும் அவளை நெருங்கவில்லை. யுவன் கூடத் தாயை தொல்லை செய்யாமல் ஜானகி மற்றும் ஆதியுடனே இருந்து கொண்டான்.. இன்று ஒரு நாள் அழுது கரைந்து அவளின் மனபாரத்தைத் தீர்த்து கொள்ளட்டும் என நினைத்து இரவில் துணையாக அவளுடனே படுத்துக் கொண்டார் ஜானகி.
அக்னிக்கு நாள் முழுக்க இருந்த மன உளைச்சலில் நடுச் சாமத்தில் காய்ச்சலில் அனத்தியவளை கண்டவர் விரைந்து சென்று.. ஆதியை எழுப்ப.. உறக்கத்திலிருந்து கலைந்தவன் கேட்டது "என்னாச்சு.. யுவனுக்கு எதாவது பிரச்சினையா" என்பது தான்.. ஜானகி விவரம் சொல்ல.. "யுவனை என் கிட்ட தூக்கி வந்து தாங்க" என்றவன் தன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்துப் பேச.. அடுத்தச் சில நிமிடங்களில் எல்லாம் பிரட், ஜாம் பாட்டில் சகிதம் காய்ச்சலுக்கான மருந்துகளுடன் ஆதி முன் நின்றிருந்தான் ஒருவன்.
அதை வாங்கி ஜானகியிடம் தந்தவன், "இன்று முழுக்கச் சாகரி எதுவும் சாப்பிடல.. அழுதது வேற.. அதான் காய்ச்சல் கண்டிருக்கு.. முடிந்தா இந்த ரொட்டியை கொடுத்து மருந்து தாங்க.. மில்லுல கூட வேலை செய்யற பையன் கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொன்னன்.. காலை வரை காய்ச்சல் சரியாகலனா ஆஸ்பிடல் அழைச்சிட்டுப் போகலாம்" என்றவனின் குரல் பட்டும் படாமல் ஒலித்தது.
காலையில் தாமதமாகக் கண் விழித்த அக்னிக்கு காய்ச்சல் சற்றே மட்டுப்பட்ட போதும் உடல் சோர்வடைய.. அதைக் கண்ட ஜானகி மாத்திரையுடன் கஞ்சி வைத்து தரவும் வாங்கிப் பருகியவள் மகனை பற்றி விசாரிக்க
ஜானகி, "வெளிய ஆதியோட தான் விளையாடிகிட்டு இருக்கான் கண்ணு.. காய்ச்சல் இன்னும் உன்னை விட்டு போகல.. நீ கொஞ்ச நேரம் உறங்கி எழுந்திரு" என்றவரின் பரிவில்.. விழி மூடி உறக்கத்தைத் தொடர்ந்தாள் அக்னி.
அக்னி மீண்டும் எழவும் காய்ச்சல் சரியாகி இருந்தது. மகனை பற்றி இவள் மறுபடியும் விசாரித்ததில் ஜானகியின் தயக்கத்தைக் கண்டவள், "என்ன ஆத்தா.. எதுக்குத் தயங்கற.. உன் கிட்ட எதையாவது கேட்டு அடம் பிடித்து உட்கார்ந்திருக்கா அந்தக் கழுதை" என்றவள் மகனை சாட
"அப்படி எல்லாம் எதுவும் இல்ல டி அக்னி.. குழந்தை சமத்தா தான் இருந்தான்.. அது.. அது வந்து.. இன்னைக்கு ஞாயிறு இல்லையா.. ஆதிக்கும் வேலை இல்ல பாரு.. அதான் உன் வண்டிய எடுத்துட்டு.. யுவனை அழைச்சிட்டு சந்தைக்குப் போயிருக்கு அந்தத் தம்பி" என்றவரின் குரலில் தான் எத்தனை தயக்கம்.. பின்னே அவருக்குத் தெரியாதா ஆதிக்கும்.. அக்னிக்கும் ஏழாம் பொருத்தம் என்று.
அவ்வளவு தான் கேட்ட அக்னி கோபத்தில் மலையேறியவள், "என்ன ஆத்தா செய்து வச்சிருக்க நீ.. என் வண்டிய எடுத்து போக அவன் யாரு.. நான் ஆதியை வீட்டை விட்டு அனுப்பற முடிவுல இருக்கேன்.. நீ என்னனா யுவனை அவன் கூட அனுப்பி வச்சிருக்க" என்றவளை
"செத்த சும்மா இருடி யம்மா.. திரும்ப அந்தத் தம்பி கிட்ட சண்டைக்கு நிக்காத.. இப்படியே யாரும் இல்லாம ஒண்டி கட்டையா எத்தனை நாளைக்கு இருக்கப் போற.. உடம்பு நோவுன்னு படுத்தா.. உனக்குக் கஞ்சி வச்சி கொடுக்க இன்னைக்கு நான் இருக்கேன்.. நாளைக்கு யாரு இருப்பா.. நான் மட்டும் என்ன சாகா வரமா வாங்கிட்டு வந்திருக்கேன்.. அந்தத் தம்பி யுவனை என்னமா தாங்குது.. நான் சொல்றத கேளு.. என்ன டா ஆத்தா இப்படிச் சொல்றாளேன்னு நினைக்காத.. நீ புருஷன் வேணாம்னு இருக்கலாம்.. ஆனா யுவனுக்கு நிச்சயம் அப்பா வேணும். இத்தனை மாத பழக்கத்துல ஆதி எனக்குக் குறையா தோனல.. அநாதைக்கு அநாதை உறவா இருந்துக்கங்க.. இன்னும் நீ கடந்து வந்த வாழ்க்கையையே நினைச்சிட்டு இருக்காம.. அந்தத் தம்பிய கல்யாணம் பண்ணி வாழ்க்கையில ஒரு பிடிப்போட வாழ பாரு" எனத் தன் மனதை எதார்த்தத்தோடு எடுத்து சொன்ன ஜானகி ஆதியோடு இவளின் வாழ்வை பிணைத்துக் கொள்ளச் சொல்ல இன்னும் உக்கிரமானாள் அக்னி.
அந்நேரம் வெளியே வாகனத்தின் ஒலி கேட்கவும்.. அதே வேகத்துடன் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தவள்.. வந்தவரை நோக்கி, "ஏன் சார்.. உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா.. எதுக்கு என் மகனை அழைச்சிட்டு.. என் வண்டிய எடுத்துட்டு போன.. நான் தான் என் மகனை விட்டு விலகி போன்னு சொல்றனே.. அது உனக்குக் கேட்கல.. இல்ல புரியலையா.. போதும் நீ இங்கயிருந்தது.. நான் தலைவர் கிட்ட பேசறேன்.. உன் வேலைய பார்த்துட்டு நீ கிளம்பு" எனச் சாடியவள் ஆதியின் கையில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் மகனை கண்டு
"டேய் யுவன் உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா.. என்ன ஜென்மம் டா நீ.. சூடு சுரணை இல்லாம இப்படித் தான் கண்டவனோட வால் பிடிச்சிட்டு சுத்துவியா.. இறங்கி வா டா அம்மாட்டா" என்றவளின் மறைமுகமாக வார்த்தை எல்லாம் தனக்கானது என்பதை உணர்ந்ததும்
உடல் இறுக ஏழுந்த கோபத்தைத் தன்னுள் கட்டுப்படுத்தியவன் முகமோ சலனமின்றி இருக்க மிக இயல்பான குரலில், "என்ன சாகரி உனக்குக் காய்ச்சல் சரியாகிடுச்சா.. எதுக்கு உனக்கு இப்ப இவ்வளவு கோபம்.. அதை விட என்ன மாதிரி வார்த்தைகள்.. பெற்ற பிள்ளையைப் பார்த்து பேசுற பேச்சா அது.. இது தான் உனக்கு முதலும் கடைசியுமா இருக்கனும்.. இனி யுவனை இப்படியாகக் கீழ்த்தரமான வார்த்தையில் பேசின.. நான் இப்ப கேட்டுட்டு இருப்பது போல் எப்பவும் சும்மா இருக்க மாட்டேன்" எனக் கட்டளை தொனியில் குரலை உயர்த்தாமல்.. அழுத்தத்துடன் ஒலித்த ஆதியின் வார்த்தையில் இவளையும் மீறி நடுக்கம் கொண்டது அக்னியின் தேகம்.
நேற்றிலிருந்து மகனை என்னிடமிருந்து பிரிக்காதே என்ற சொல்லை இவளும் விட்ட பாடில்லை.. அவனும் அந்த வாக்குறுதியை தந்தபாடில்லை. இருவரும் அவரவர் நிலையிலேயே நின்றனர்.
இதில் இவளின் கோபத்திற்கு மேலும் தூபமிடுவது போல்.. தான் அதட்டியும் ஆதியின் கழுத்தை கட்டி கொண்டிருக்கும் மகனை கண்டவள் ஒரு வேகத்துடன் ஆதியை நெருங்கிய அடுத்த நொடியே காய்ச்சலின் தாக்கத்தில் மயங்கி சரிய இருந்தவளை ஆதி "ஹெய் சாகரி" எனத் தாங்க வந்த நேரம்.. அந்த மயக்க நிலையிலும் தன்னைத் தொட நீண்ட அவனின் கரத்தை விலக்கியவளுக்குத் தெரியாது ஒரு நாள் இதே ஆதியின் கையணைப்பு தான் தன் தவிப்பையும்.. துயரத்தையும் போக்க உள்ளது என்று. பாவம் அக்னிசாகரி அதை உணரவில்லை.
அக்னியை மருத்துவமனை அழைத்துச் செல்ல.. வைரல் ஜூரம் என்றார் மருத்துவர்.. பின் படிப்படியாக ஜானகியின் கவனிப்பில் தேறியவளின் மனது முதல் முறையாகத் தனக்கொரு துணை அவசியமோ என்று கேட்டுக் கொண்டது. இதற்கிடையில் மில் வேலையையும் விட்டு யுவனையும்.. இவளின் தொழிலையும் தன் கையில் எடுத்துக் கொண்டான் ஆதி.
சற்றே அக்னி குணமடைந்ததும் தன்னுடைய பிடிவாதத்திலிருந்து விலகாமல்.. நேரம் பார்த்து இவள் ஊர் தலைவரை சந்தித்து ஆதியை அனுப்பிட சொல்லி பேச
அவரோ, "என்ன அக்னி இப்படிச் சொல்ற.. அந்தத் தம்பியால உனக்கு என்ன பிரச்சனை.. இன்னும் சொல்ல போனா அந்தத் தம்பியாவ உனக்கு நல்லது தான் நடந்திருக்கு.. இன்னைக்கு நீ சண்முகத்தோட தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கனா அதுக்கு நான் அவனுங்க கிட்ட பேசினது தான் காரணம்னு நீ நினைக்கலாம். அதுவும் ஒரு காரணம்.. ஆனா அதை விட ஆதி தம்பி அவனுங்களுக்குக் கத்து தந்த பாடம் தான் காரணம்.. இன்று கண் கொத்தி பாம்பா உங்க ரெண்டு பேரையும் அந்தத் தம்பி பார்த்துகிட்டது தான் காரணம். இப்படி உனக்கு நன்மை செய்த அந்தத் தம்பிய போய் அனுப்ப சொல்ற.. நீ எந்த மூலைக்குப் போனாலும் சண்முகம் மாதிரி ஆட்கள் இருப்பாங்க.. ஏன் இதை விட மோசமான ஆட்கள் இருக்கலாம்.. ஆதி நல்ல தம்பி.. இதுக்கு மேல நான் சொல்ல எதுவும் இல்ல.. யோசித்து நல்ல முடிவா எடு" என்று அவரும் தன் பங்குக்கு ஆதியை பற்றிப் புகழ்ந்து புத்தி சொல்ல.. ஆதி விஷயத்தில் முற்றும் முழுமையாகத் துவண்டு போனாள் அக்னி..
அதே அக்னி ஒன்றை மட்டும் நம்பினாள் என்றே சொல்லலாம்.. அது, இன்று சண்முகத்தின் பிரச்சனை இன்றி இவள் வாழ ஆதியே துணை செய்தான் என்பதை ஒருவித இதத்துடன் ஏற்றுக் கொண்டது பெண்ணின் அகம்.