நாட்கள் நகரக் காய்ச்சலின் தாக்கத்திலிருந்து முழுவதுமாகக் குணமடைந்தாள் அக்னிசாகரி. இந்த ஊரில் தங்கி தொழில் தொடங்க டிரஸ்ட் மூலம் வாகனம் வாங்க பண உதவி செய்தவர் சிஸ்டர் மரியம்.. கிறிஸ்துவ அறக்கட்டளையின் மூலம் இன்றும் பல உதவிகளையும் நன்மைகளையும் செய்து கொண்டிருப்பவர். அவர் அக்னியை அழைத்து.. சில பூந்தொட்டிகளை எடுத்து வந்து தர சொல்லியிருக்க.. அதற்குக் கிளம்பியவளை தனியே அனுப்ப மனமின்றி அவளுடனே ஆதியும் வாகனத்தில் ஏறினான். ஆனால் தற்போதெல்லாம் அதிகம் சண்டையிட்டு கொள்வதில்லை இருவரும்.. அதற்காக அமைதிபுறாவாகவும் இருக்கவில்லை.. வாக்குவாதமின்றி இருவரும் முறைத்துக் கொண்டு மட்டும் இருந்தனர்..
அக்னியும் இன்றைய ஆதியின் வருகைக்குப் பெரியதாக அலட்டி கொள்ளவில்லை.. அங்குச் சர்ச்சில் தொட்டிகளை இறக்கி வைக்க ஆட்கள் இல்லாமல் போனால் அதை இவள் தான் செய்ய வேண்டும்.. வழக்கம் போல் ஆட்கள் உதவிக்கு வராமல் போக.. தொட்டிகளை எடுக்க வந்தவளை தடுத்த ஆதி அனைத்தையும் இறக்கி வைக்க.. சற்றே ஆசுவாசமானள் பெண். பின்னே.. தற்சமயம் இவளால் இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியுமா என்ன..
ஆதி தன் வேலைகளை முடிக்கும் நேரம் அங்கு வந்த சிஸ்டர் மரியம்.. "வா.. அக்னி எப்படி இருக்க.. குட்டி பையனை அழைச்சிட்டு வரலையா.. பரவாயில்லையே நான் கேட்ட பூ செடி எல்லாமே வந்திருக்கே.. எல்லாம் நல்லா இருக்கு" எனப் பூந்தொட்டிகளைப் பார்வையிட்டவர் அங்கிருந்த ஆதியை காணவும் "அட நம்ம ஆதியா இது.. வா.. வா.. எப்படி இருக்க" என்று அவனை விசாரித்தவர் அக்னியை பார்த்து "என்ன அக்னி உனக்கு ஆதியை முன்னமே தெரியுமா" எனக் கேட்க, இவள் தெரியும் எனத் தலை அசைத்த நேரம்..
ஆதி, "நல்லா இருக்கேன் மதர்.. நீங்க எப்படி இருக்கீங்க.. மேல் தொட்டியிலயிருந்து கீழ ஒரு குழாய்க்கு மட்டும் தண்ணீர் சீரா வரலைன்னு சொல்லிட்டு இருந்திங்களே.. இப்ப அதை நான் பார்த்து சீர் செய்யவா" என்று கேட்டவனுக்கு அவர் சம்மதம் தர
அக்னி, "மதர் உங்களுக்கு முன்னமே ஆதியை தெரியுமா.. யுவன் பிறந்த நாள் அன்று ஆதியும் வந்திருந்தாரே" எனக் கேட்க
"அட.. ஆதியை எனக்கு இன்னைக்கு நேத்தா தெரியும் சின்ன வயசுல இருந்து தெரியுமே.. அங்க விருதுநகர் பக்கம் உள்ள சர்ச்சில் தான் நான் முன்னே இருந்தேன்.. ஆதிக்கு அப்பாம்மா இல்ல மாமா தான் இவனைப் பார்த்துகிட்டார்.. அவருக்கும் பெரிதா வசதி இல்ல.. இவன் நல்லா படிக்கிற பையன்.. அவர் இவனைப் பல முறை எங்க கான்வென்டுக்கு அழைச்சிட்டு வந்து இவனோட படிப்புக்கு எதாவது உதவி செய்ய முடியுமான்னு கேட்பார்.. அப்ப கான்வென்ட் விதிக்கு உட்பட்டு சிலதை செய்திருக்கோம்.. ஏன் சில நாட்களில்.. அதாவது இவன் மாமா மனைவி பெரியதா பிரச்சனை செய்யற அன்றெல்லாம் ஆதி அங்க உள்ள மடத்துல மற்ற பிள்ளைங்க கூடத் தான் தங்குவான்.. நல்ல பையன்.. இங்க நான் மாறி வந்தது இவனுக்குத் தெரியாது.. இப்ப கொஞ்ச நாள் முன்ன தான் பார்த்தேன்.. அப்போதிலிருந்து சர்ச்சுக்கு வேண்டிய சில வேலைகளைச் செய்வான்.. அன்று யுவன் பிறந்த நாள் அப்ப நான் வெளியூர்ல இருந்தனே அக்னி.. அதை நீ மறந்திட்டியா.. அதான் அன்றைக்கு நீ ஆதியோட வந்தது எனக்குத் தெரியல" என்ற மதரின் நீண்ட விளக்கத்திற்கு
'ஆமாம் மதர் இல்லையே.. அதை முழுவதாக உணரும் நிலையில் கூட.. அன்று நான் இல்லையே' என்று தான் இவளின் மனம் எண்ணமிட்டது.
மதர், "என்ன அக்னி அப்படி என்ன பலத்த யோசனை" எனக் கேட்க
"அது... ஆதியை பற்றி எனக்கு எதுவும் தெரியாதா.. அதான் நீங்க சொன்னதை யோசிச்சிட்டு இருந்தேன்"
"இதில் யோசிக்க என்ன இருக்கு.. உன்னை மாதிரி தான் ஆதியும் எனக்கு.. நீங்க இருவருமே யாரும் இல்லாம வாழறீங்க.. ஆதியோட அம்மா சீதாவை விட இவன் அப்பா ராமை எனக்கு நல்லா தெரியும்.. நல்லா வாழ்ந்த குடும்பம்.. இப்ப இவன் மட்டும் இப்படித் தனியா நிக்கறான்.. பஸ்ல இவனோட பொருள் எல்லாம் திருடு போனதால.. உங்க ஊர் தலைவர் தான் அவர் ஊர்ல தங்க அனுமதித்ததா சொன்னான்.. உனக்கு ஆதியை எப்படித் தெரியும் அக்னி?"
"அது.. ஆதி என் வீட்டுக்கு பின்னாடி இருக்க மோட்டார் ரூம்ல தான் தங்கி இருக்கார்" என்றவளுக்கு
"ஓ.. அந்தக் குட்டி பையன் நம்ம யுவராஜன் தானா.. ஆதி முழுதா சொல்லல.. இப்படிக் கொஞ்ச நாள் தங்கி இருக்கறதா மட்டும் சொன்னான்" என்றவர் "அடுத்த வாரம் சர்ச் வந்து ஸ்டோர் ரூமை ஒதுக்கி தா அக்னி.. துணைக்குத் தான் நம்ம ஆதி இருக்கானே.. ரெண்டு பேரும் சேர்ந்தா வேலை சீக்கிரம் முடிய போகுது" என வர சொல்லி கட்டளையிட்ட மதர் மரியத்தை 'இந்த மதருக்கு இதே வேலை.. ஒருத்தர் கிடைத்தா எல்லா வேலையையும் நம்ம தலையிலே கட்ட வேண்டியது' என்று மனதில் வருத்தெடுத்தாள் அக்னி.
வேலைகளை முடித்துச் சர்ச்சிலிருந்து இருவரும் கிளம்ப.. வரும் போது இருந்ததற்கு மாறாகத் தற்போது இருந்தது இருவரின் அகமும்.. மதரிடம் பேசியதில் ஆதியின் சிறு வயது வாழ்வை பற்றிய சிந்தனையில் அக்னி இருக்க ஆதி வாகனத்தை ஓட்டியபடி அவளிடம் தன் அகம் திறக்க காத்திருந்திருந்தான்.
"உன்னோட அம்மாப்பா பற்றி மதர் சொன்னாங்க.. அவங்க இறக்கும் போது உனக்கு என்ன வயசு.. என்னனாச்சு அவங்களுக்கு.. உனக்கு இப்பவும் அவங்க முகம் நினைவில் இருக்கா" எனக் கேட்டு அங்குச் சூழ்ந்திருந்த மௌனத்தை அக்னி தகர்க்க
முதல் முறையாகத் தன்னிடம் இயல்பாய் பேசும் அக்னியை.. சலனமின்றி நோக்கிய ஆதி, "ஹ்ம்ம்.. அம்மாப்பா முகம் மறக்குமா.. ஒரு விபத்துல இரண்டு பேரும் இறந்துட்டாங்க.. அப்ப எனக்குப் பத்து வயசு" என்க
"ஓ.. அப்ப பாவம் தான் நீ" என அவனுக்காகப் பரிதாபப்பட்டவள் "என்னுடைய அப்பாம்மா சாகும் போது எனக்கு எட்டு வயசு.. பிறகு நான் வளர்ந்தது எல்லாம் சர்ச் ஹோம்ல தான்.. நீ பெரிய படிப்பாளியாமே மதர் சொன்னாங்க.. அப்படியா" என்று இவள் சற்றே குரலில் ஆர்வத்தைக் கூட்டி கேட்க
அதில் அவளைப் பார்த்து கர்வத்தோடு தலையசைத்தவன், "எனக்குப் படிப்புனா அத்தனை இஷ்டம்.. என் அப்பாம்மா உயிரோட இருந்திருந்தா வெளிநாடு போய்ப் பெரிய படிப்பெல்லாம் படிச்சிருப்பேன். சரி நீ சொல்லு.. நீ என்ன படிச்சிருக்க"
"படிப்பாஆஆஆ" எனக் கேட்டு முகத்தைச் சுளித்தவள் "சாமி சத்தியமா அதுக்கும் எனக்கும் ஆகாது சாமி.. அது என் மண்டையில் ஏறினா தான.. அது ஏறல அதான் அதை எனக்கும் பிடிக்கல.. அப்ப நான் தங்கியிருந்த கான்வென்ட் மதரோட திட்டுக்கு பயந்து பத்தாவது வரை எப்படியோ பாஸாகிட்டேன்.. மதர் மேல படிக்கச் சொன்னாங்க தான்.. நானா விடுவேன் படக்குன்னு அவங்க கால்ல விழுந்து நான் அழ.. என் அழுகையில் அந்தக் கல் நெஞ்சு மதர் பாவம் பார்த்து விட்டுட்டாங்க.. அவங்க மட்டுமில்ல வேற யார் படிப்ப பற்றிப் பேச வந்தாலும் நான் காத தூரத்துக்கு ஓடி போய்டுவேன்" எனப் புன்னகை முகமாய்க் கதை சொன்னவளை ஆதி சுவாரஸ்யமாகக் காண
அதை உணர்ந்தார் போல், "என்ன டா ஏறாத படிப்பை இவ இப்படிப் பெருமையா சொல்றாளேன்னு தான பார்க்கற.. வேற என்ன சொல்ல சொல்ற அதானே நிஜம்.. என் மண்டையில் ஏறாத படிப்பை ஏறினதா நான் ஏன் உன் கிட்ட பொய் சொல்லனும்.. அப்படிச் சொல்லி அதனால எனக்கு எதாவது ஆதாயம் உண்டுன்னாலும் எனக்கு அந்த ஆதாயமே வேணாம்" என மிடுக்காய் பதில் தந்தவளை இவன் ஆழ்ந்து நோக்க..
அந்நேரம் ஆதியின் கைப்பேசி இசைக்கவும் வாகனத்தைச் சாலையோரம் நிறுத்தியபடி கைப்பேசியை எடுத்து பேசியவனின் தேகமோ இறுகி முகமோ பாறையென மாற அழைப்பை துண்டித்தவன் அக்னியிடம் "நான் உன் கிட்ட நிறையப் பேசனும்னு இருந்தேன் சாகரி.. யுவனுக்காக நான் சில முடிவுகள் எடுத்திருக்கேன் அதுக்கு உன்னுடைய சம்மதம் வேணும்.. இதுக்கு மேல விரிவா பேச எனக்கு நேரமில்ல.. தெரிந்த ஒருவருக்கு விபத்தாம் நான் இப்பவே கிளம்பியாகனும்.. ரெண்டு நாளில் வந்துடுவேன்.. யுவனைப் பார்த்துக்க.. நீயும் கவனமா இரு.. மீண்டும் சீக்கிரமே சந்திப்போம்.. அதுவரை காத்திரு" என்றவன்.. அங்கிருந்த அவளின் கைப்பேசியை எடுத்து.. அதில் அவனின் கைப்பேசி எண்களை அழுத்தி அழைப்பு விட்ட படி "இதுல என் நம்பரை சேவ் செய்திருக்கேன் சாகரி.. நான் அழைத்தா எடு.. தினமும் நான் யுவன் கிட்ட பேசணும்.. பார்த்துக் கவனமா போ.." என்றவன் இவளின் பதிலை எதிர்பார்க்காமல் வாகனத்தை விட்டு இறங்கி.. விரைந்து நடக்க
அவனின் இரண்டு நாள் பிரிவென்ற கூற்றில் திக்பிரமை பிடித்தவள் போல் இமை சிமிட்டாமல் செல்லும் ஆதியையே நோக்கினாள் அக்னி.. 'இதென்ன கனவா அவங்க போறது நிஜமா.. ஆமாம் நிஜம் தான்.. இதோ என் ஆதி கண்ணிலிருந்து மறையறாரே.. என்னது என் ஆதியா ஆமாம் என் ஆதி தான்' இதுவரை ஆதியின் அருகாமையில் மலராத ஒரு மலர் இன்று அவனின் பிரிவில் இவளுள் மலர்ந்து அகம் எங்கும் மணம் வீச.. அகம் உணர்த்தியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள் அக்னிசாகரி.
யுவனிடம் ஆதியின் பிரிவை பற்றிச் சொல்ல.. "எனக்கு ஆதி வேணும்.. ஏன் ஆதி போனான்.. வரமாட்டானா" என மீண்டும் மீண்டும் கேட்டு அழும் மகனை கண்டு இவளுக்கும் கண்கள் கலங்கியது.. தானாக அவனுக்கு அழைக்கவும் தயக்கம்.. என்ன செய்வாள்.. மகனை வேறு நிகழ்வில் திசை திருப்பிச் சமாதானம் சொல்லி உறங்க வைக்கும் நேரம் இவளுக்கு அழைத்தான் ஆதி.
அக்னி ஆர்வத்தில் முதல் ஒலியிலேயே அழைப்பை ஏற்றிட, அவனோ இவள் பேச இடம் தராமல் "என்ன சாகரி கவனமா வீட்டுக்கு வந்துட்டியா.. இங்க எனக்கு அதிக வேலை ம்மா அதான் வந்ததும் பேச முடியல.. நீ சாப்டியா.. யுவன் சாப்பிட்டானா.. என்ன செய்றான்.. என்னைக் கேட்டு அழுதானா" என அடுத்தடுத்து கேட்க
அவனின் அக்கரையில் இவளின் அகம் இதம் கொள்ள "ஹ்ம்ம்.. வந்துட்டேன்.. இதோ இருக்கான்.. நாங்க சாப்டோம் நீ சாப்டியா"
"இன்னும் இல்ல சாகரி நேரமாகும்.. போனை யுவன் கிட்ட தா"
இவள் கைப்பேசியை மகனிடம் தர.. "ஏன் போன.. எப்ப வருவ.. உனக்குக் கோபமா.. என் கிட்ட சண்டையா.. சீக்கிரம் வா" என இந்தச் சின்னச் சிட்டு ஆயிரம் வார்த்தைகளைத் தொடுக்க.. அனைத்திற்கும் ஆதி சுணங்கமல் பதில் தர.. இருவரின் உரையாடலையும் கேட்டு மென்னகையுன் ரசித்துக் கொண்டிருந்தாள் அக்னிசாகரி.
பேசும் அவசியத்திற்கு இது போதும் என்ற எண்ணத்தில் அக்னியிடம் பட்டன் போன் தான் உள்ளது.. அதே ஸ்மார்ட் போன் இருந்திருந்தால் வீடியோ காலில் பேசியிருப்பான் ஆதி.
ஆதியை முதல் முறை அழைக்கத் தான் இவளிடம் தயக்கம் எல்லாம்.. அதன் பிறகான நேரங்களில் இரவு பதினோரு மணி என்றாலும் யுவன் கேட்கும் போதெல்லாம் தயக்கமின்றி அவனை அழைத்திருக்க.. அவனும் முதலில் இவளிடம் பேசிய பிறகு தான் யுவனிடம் பேசுவான்.
இரண்டு தினங்களில் வருவேன் என்று சொல்லி சென்றவன் ஐந்து நாட்கள் கடந்தும் வராமலிருக்க.. அவனுக்கு என்னமோ ஏதோவென்று நினைத்து மனது கிடந்து தவித்தது இவளுக்கு.. இதற்கிடையில் ஊர் திருவிழா என ஊரே அமர்க்களப்பட.. அதில் பொறுமையின்றி ஆதிக்கு அழைத்தவள்.. அவன் பேச இடம் தராமல் "இங்க ஊர் திருவிழாவுக்கு.. ஊரே தயாரா இருக்கு" எனப் படபடக்க
"தெரியுமே சாகரி ஏன் அதனால என்ன" இவன் இயல்பாகக் கேட்க
"நாளைக்குக் காப்பு கட்டிட்டா.. பிறகு வெளியாட்கள் யாரும் ஊருக்குள்ள வர கூடாது" இவளும் சின்னக் குரலில் மொழிய
"அதுவும் தெரியுமே சாகரி" எனச் சொல்ல வந்தவன் பின் எதையோ உணர்ந்தவனாக "நாளைக்குக் காலையில தான காப்பு கட்றாங்க.. நான் இன்னைக்கு இரவே நம்ம வீட்டுல இருப்பேன்" என மென்னகையிட
அவன் சிரிப்பில் தன்னைக் கண்டு கொண்டதை உணர்ந்த பெண் "அது.. யுவன் உன்னைத் தேடுவான் அதான் சொன்னேன்" எனச் சமாளிக்க
"ஹா.. ஹா.. நானும் அவனுக்காகத் தான் சொன்னேன்" என இவனும் சமாளிக்க..
அதில் இயல்பு போல் "கள்ளன்" என்ற முணுமுணுப்புடன் அக்னிசாகரியின் இதழில் குறுநகை தவழ்ந்தது.