விதி தனக்கு விதித்திருப்பதை அறிந்ததும் ஆதியின் மேல் தான் கொண்ட எதிர்காலம் இல்லா நேசத்தை நினைத்து.. மகனின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கனத்த இதயத்தோடு.. அந்த நொடியே தன் நேசத்திற்கு முடிவுரை எழுதி கொண்டவளின் சங்கல்பம் எல்லாம் இனி ஆதியை விட்டு தூர இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவனின் அழைப்பை கண்டாலே எடுத்த சங்கல்பம் காற்றிலிட்ட கற்பூரமாய்க் கரைந்து விட.. ஒவ்வொரு நாளும் ஆதியின் வரவை இவளையும் மீறி அகம் எதிர்பார்த்ததில் உதித்த வார்த்தைகள் இவை.
இரவு வருவேன் என்றவன்.. அந்திமாலையே வந்து சேர்ந்ததில் ஆதியை கண்ட உற்சாகத்தில் யுவன் பெருங்குரலுடன் ஓடி சென்று அவனின் காலை கட்டி கொள்ள.. மகனின் குரலில் விரைந்து வந்தவளின் விழிகள் மென்னகையுடன் ஆதியை நிரப்பிக் கொண்டது.
"வா தம்பி.. இப்ப உன் நண்பன் நல்லா இருக்கானா" எனக் கேட்ட ஜானகிக்கு
யுவனைத் தன் கைகளில் அள்ளி கொண்டபடி "ஹ்ம்ம்.. நல்லா இருக்கான்" என்றவன் அவரிடம் ஒரு பையைத் தந்து "இதுல நீங்க உடுத்துற மாதிரி இரண்டு புடவை இருக்கு.. உங்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.. இந்தாங்க" என்க
"எனக்கு எதுக்குத் தம்பி இதெல்லாம்" என்றவர் மனம் நிறைய அதைப் பெற்றுக் கொள்ள
ஆதி "இதுல உனக்கு ஒரு புடவையும்.. இரண்டு செட் சுடிதாரும் இருக்கு.. யுவனுக்கும் வாங்கியிருக்கேன்.. மறுக்காத சாகரி. இந்தா.. திருவிழா அப்போ எல்லாரும் புதுத் துணி உடுத்துவாங்க.. அப்ப நாம உடுத்தாமா இருந்தா எப்படி" என்றவனின் குரலில் துளியும் கெஞ்சலில்லை.
மறுக்க நினைத்தாலும் முடியாமல் அவன் சொன்ன காரணத்திற்காகப் பையை வாங்கிக் கொண்டவள் "எனக்கு எதுக்கு இத்தனை.. ஆமா நீ இப்ப வரன்னு சொல்லவேயில்லையே.. எதாவது சாப்டியா" எனக் கேட்டவளுக்கு
"அதெல்லாம் ஆச்சு சாகரி.. நீ உடுத்துற நாலு சுடிதாரையே எப்பவும் மாத்தி மாத்தி உடுத்துற. அதான் வாங்கிட்டு வந்தேன்.. உனக்குப் பிடிச்சிருக்கான்னு பாரு" என்றவன் யுவனிடம் "என்ன பாஸ்.. எப்படி இருக்க.. ஓவர் சேட்டையா.. போன்ல என் கிட்ட என்னமா வாயடித்த.. பாஸ் கேட்ட பொம்மையெல்லாம் நான் வாங்கிட்டு வந்துட்டேன்.. வா.. பார்க்கலாம்" என்றவன் சின்னவனுக்குக் கிச்சு கிச்சு மூட்ட.. விரிந்த புன்னகையுடன் ஆதியின் கழுத்தை கட்டி கொண்ட மகனை கண்டு புன்னகைத்தபடி இந்தக் காட்சியை அழியா ஓவியமாய்த் தன் அகத்தில் பதித்துக் கொண்டாள் அக்னி.
மறுநாள் கோவிலில் காப்பு கட்டவும்.. ஊரே திருவிழா கொண்டாட்டத்தில் அமர்க்களப்பட்டது.. அதிகமாக இம்மாதிரி விழாக்களில் அக்னி கலந்து கொள்ள மாட்டாள்.. விழாவின் இறுதி நாள் அன்று மட்டும் மகனை அழைத்துச் சென்று சில பொம்மைகளை வாங்கித் தருவாள்.. அவ்வளவே. அதே இந்த வருடம் தினம் தினம் ஆதி யுவனைத் தன்னுடன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல.. தலை கால் புரியா நிலை தான் இந்தப் போக்கிரிக்கு. அக்னி கூட மகனிடம் "உனக்குச் சேட்டை கூடி இருக்கு" எனச் செல்லமாகத் திட்டினாலும் அகத்தினுள் அவனின் சேட்டைகளை ரசித்தாள்.
அம்மனுக்குப் பொங்கலிடும் நாளில் ஆதி அக்னியையும் கோவிலுக்கு அழைக்க, அக்னி தயங்க
ஜானகி "போய் வா அக்னி.. நீ எங்க போற.. வீடே கெதின்னு இருக்க.. நானாவது நாலு போரோட சேர்ந்துட்டு நாடகம் பார்த்துட்டு வரேன்.. ஆனா நீ எதுவுமில்ல.. தம்பி எடுத்து தந்த புடவைய கட்டிட்டு போ.. உன் தயக்கம் புரியுது.. ஊர் என்ன சொல்லும்.. உலகம் என்ன சொல்லும்னு பார்க்காத.. நமக்கான வாழ்கையை நாம தான் வாழனும்.. இந்த வருஷம் நம்ம ஊர் அம்மன் கிட்ட வேண்டுதல் வச்சிட்டு வா.. நான் மனசுல நினைத்திருக்கற மாதிரி கூடிய சீக்கிரம் உனக்கு ஒரு நல்லது நடக்கும்" என்றவர் எடுத்து சொல்ல.. யுவனும் ஆவலாய் தாயை கட்டி கொண்டு செல்லம் கொஞ்ச.. அவர்களுடன் கிளம்பி சென்றாள் அக்னி.
பொங்கலிடும் நாள் என்பதால் கோவிலை சுற்றி எங்கும் மனித தலைகள்.. எங்கிலும் கூட்டம். ஆதி, அக்னி இருவரும் யுவனைத் தங்களுக்கு இடையில் பாதுகாத்தபடி கைபற்றி நடந்தனர்.
தாய்.. மகன் இருவரும் ஆதி வாங்கித் தந்த ஆடையில் தான் மிளிர்ந்தார்கள்.. பிஸ்தா பச்சையில் சின்னக் கரையிட்டிருந்த கிரேப் சில்க் புடவை அக்னிக்குப் பாந்தமாய்ப் பொருந்தியது. ஒருசிலர் இவளை ஆர்வமாய்ப் பார்த்து செல்ல.. ஒருசிலர் நின்று பேச அதில் நல்ல உள்ளம் படைத்த சிலர் "தங்க சிலையாட்டம் இருக்க அக்னி.. நீ கட்டியிருக்கிற புடவை அழகா இருக்கு. யம்மா எம்மா நீட்டு முடி உனக்கு.. அதுவும் நீ கட்டியிருக்கற புடவைக்கு எடுப்பா இருக்க, துளியூண்டு தலையில பூ வை அக்னி.. இன்னும் அம்சமா இருப்ப" எனப் பல குரல்கள் இவளை கடந்து செல்ல
அனைத்தையும் கேட்டிருந்த ஆதியினுள் என்ன தோன்றியதோ யுவனோடு அங்கிருந்த பூ கடைக்குச் சென்றவன் ஒரு பந்து குண்டு மல்லி பூவை வாங்கி யுவனிடம் தந்து வைக்கச் சொல்ல.. அதிர்ந்து தான் போனாள் அக்னி. இந்த ஊருக்கு வந்தது முதல் இதுவரை இவள் பூ வைத்தது இல்லையே.. இன்று எப்படி அதைச் செய்வாள் அதிலும் இத்தனை பேர் காண பெண்ணிடம் தயக்கம்.
"நிஜமாவே அவங்க எல்லாரும் சொல்றா போல உனக்கு நீண்ட முடி சாகரி.. அதில் நீ இந்தப் பூவை வச்சா நல்லா இருக்கும் வாங்கிக்க" என்றவன் முதல் முறையாகப் பாவையின் கூந்தலை ரசனையோடு காண.. அவனின் பார்வையில் மூச்சடைத்தது இவளுக்கு. முதல் முதலாக மனங்கவர்ந்தவன் வாங்கித் தருவது.. அதையும் மகன் கையால் தந்த பண்பு பிடித்திட நிறைவாய் பூவை கூந்தலில் சூடி கொண்டாள் பாவை.
அக்னிக்கு அழகிய உடல் வாகு.. தற்போது இருபத்தி ஒன்பது என்னும் வயதின் வாசலில் நிற்பவள்.. இன்னும் சில மாதங்களில் முப்பதை எட்டயிருப்பவள். ஆனால் பார்ப்பவர் யாருமே இவளை அத்தனை வயது என்று சொல்லி விட முடியாது.. மாநிறத்தில் ஒளிர்ந்தாலும்.. கண்கள் , மூக்கு, உதடு எனச் செதுக்கி வைத்த சிற்பமாய் இருப்பாள். அதிலும் கருமேகமென இடை தாண்டி சுருண்டு நீண்டு தவழும் கருங்கூந்தல் அக்னியை பேரழகியாய் காட்டும்.
திருவிழாவில் ஓரிடத்தில் சூழ்ந்திருந்த சண்முகத்தின் ஆட்களை முறைத்தவனை அக்னி தான் பொது இடத்தில் பிரச்சனை வேண்டாம் என இழுத்து வர வேண்டியிருந்தது. அந்தளவுக்கு நல்ல பிள்ளையாய் அவளின் பேச்சை கேட்டவன் யுவன் விஷயத்தில் மட்டும் ஏட்டிக்கு போட்டியாய் நின்றான். திருவிழா என்பதால் காணும் இடமெல்லாம் கடைகள் இருக்க.. எதையும் விடுவதில்லை யுவன். கார், மண்ணு லாரி, பஸ், பந்து, பீப்பி, ஜேசிபி இப்படி அவன் கேட்பதை எல்லாம் வாங்கித் தந்த ஆதி ஒரு கட்டத்தில் யுவன் ஆசையாய் ஒரு பொருளை பார்த்தாலே வாங்கிக் குவிக்க.. அக்னிக்கு சொல்லவும் வேண்டுமா அவளின் பொறுமை கரை கடந்து தான் போனது.
இருந்தும் "ஆதி இது சரியில்ல.. யுவன் கேட்கிறதை எல்லாம் இப்படி வாங்கித் தராத.. வேணாம்.. முடியாதுன்னு சொல்லி பழகு" பொறுமையாய் எடுத்து சொல்ல
"குழந்தை கிட்ட போய் யாராவது முடியாதுன்னு சொல்லுவாங்களா.. அவங்க சந்தோஷம் தான் நமக்கு முக்கியம். அவன் முகத்தைப் பார்.. இந்தச் சிரிப்புக்கு என்ன வேணா செய்யலாம்" என்றவனும் தன் பிடிவாதத்தை விட்டுத் தருவதாக இல்லை.. அதற்கு முழு முதல் காரணம்.. மற்ற பொம்மைகளை விட மீன் பொம்மைகளை யுவன் அதிகம் விரும்பி வாங்கியது தான்.. அதிலும் டால்பினை கண்டால்.. உடனே அதை எடுத்துக் கையில் வைத்து கொள்வான் பிறகு எங்கிருந்து ஆதிக்கு மறுக்கத் தோன்றும்.
ஆனாலும் விடாமல் "ஆதி.. நீ இப்படிச் செய்யறதால.. நாம என்ன கேட்டாலும் கிடைக்குங்கிற மனநிலை யுவனுக்கு வளர ஆரம்பிக்கும். கிடைக்கலனா அதுவே அவனின் மனநிலையைப் பாதிக்கும்.. அது மட்டுமில்ல நாம நம்ம கஷடத்தைச் சொல்லி கொடுத்து வளர்க்கனும் புரிஞ்சிக்க" என்றவளின் குரலில் கோபம் இழையோடியது.
"யப்பா.. எது.. ஐந்து வயசு குழந்தை கிட்ட இதையெல்லாம் எதிர்பார்க்கறியா நீ.. குழந்தைய குழந்தையா வளர விடு.. நீ சொல்றது எல்லாம் கதைக்கு, சினிமாவுக்கு, மேடை பேச்சுக்கு வேணா சரியா வரும். அங்க வேணா கை தட்டி பாராட்டுவாங்க. கஷ்டத்தைச் சொல்லி வளர்க்கனுமாம்.. அப்படி என்ன அவனுக்குத் தலையெழுத்து. நிஜ வாழ்வுக்குன்னு சில நிதர்சனம் இருக்கு.. இயல்பு இருக்கு. அதோட தான் நாம வாழனும். யுவனுக்கு இல்லாதது என் கிட்ட எதுவுமில்ல.. அவன் இந்த உலகத்துல கிடைக்கற எல்லா சந்தோஷத்தையும் அனுபவிக்கனும்.. அது தான் எனக்கு வேணும்" என்றவனின் குரலோ அழுத்தத்தோடு ஒலிக்கவும் அதிர்ந்து போனாள் அக்னி.
'இதென்ன மாதிரியான மனநிலை.. இதற்குப் பேர் பாசமா.. இந்த வளர்ப்பு யுவனைப் பாழும் கிணற்றில் தானே தள்ளும்' என இவளால் நினைக்கத் தான் முடிந்தது.. இதை வாய் விட்டு கேட்டு பொது இடத்தில் மேற்கொண்டு அவனிடம் வாதாடவும் விரும்பவில்லை.
அதை ஆதி அவளின் முகம் கொண்டே அறிந்தவனாக "சாகரி போ.. நீ சிலது உனக்கு வாங்கனும்னு சொன்னியே.. போய் வாங்கு.. நான் யுவனைப் பார்த்துக்கிறேன்" என்றிட
மற்ற நேரம் என்றால் நீ என்ன என்னைய போகச் சொல்வது எனச் சண்டைக்கு நின்றிருப்பாள்.. தற்போதிருக்கும் மனநிலைக்கு.. அமைதியாக அவன் சொன்னதைச் செய்தாள் அக்னி.
இருவரையும் விட்டு இரண்டு கடை தள்ளி தனக்கு வேண்டியதை இவள் வாங்க
அந்நேரம் திருவிழாவுக்கு என்று வரும் இளங்கன்னியரை சினிமா பாடலோடு ரசிக்க ஓரிடத்தில் சில இளவட்டங்கள் மியூசிக் சிஸ்டத்தோடு அமர்ந்து தங்களுக்குப் பிடித்த பாடலை பாட விட்டு திருவிழாவை கொண்டாடிய படி இருக்க.. அதில் அக்னியை தனியே பார்த்த ஒருவன்
அவளுக்காக
ஆ: அரே ஹா
பெ: யம்மம்மா
ஆ: அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
என்ற பாடலை ஒலிக்க விட.. அந்தப் பாடல் வரிகள் அக்னியை சென்றடைந்ததோ இல்லையோ.. ஆனால் தவறாமல் ஆதியை சென்றடைய.. அவனுக்கா தெரியாது இளசுகளின் சேட்டைகள்.
இவன் முதலில் யாருக்கோ இப்பாடல் தூது போல என்று நினைத்து உதட்டில் மெல்லிய புன்னகையுடன் அக்கூட்டத்தைக் காண.. அதில் ஒருவன் வக்கிர பார்வையோடு அக்னியை நோக்கிய நிலையில்
ஆ: ஆ கட்டிலிருக்கு
பெ: ஆஹ
ஆ: மெத்தையிருக்கு
பெ: ஆஹ
ஆ: கட்டளைய கேட்ட பின்பு
சொர்க்கம் இருக்கு
என்ற வரிகளில் பாடலோடு அவனும் சேர்ந்து பாட
அவ்வளவு தான்.. விழிகள் சிவக்க ஆதிக்கு வந்த கோபத்திற்கு அவர்களை நொறுக்கி இருப்பான். இருக்கும் சூழல் உணர்ந்து, யுவனும் உடனிருப்பதால்.. கோபத்தில் உடல் இறுக அவர்களை முறைத்த படி அக்னியிடம் வந்தவன் "நீ வாங்கின வரை போதும் கிளம்பு சாகரி போகலாம்" என அழைத்திட
"ஆஹ்.. நான் இன்னும் வாங்கவே இல்ல பார்த்துட்டு தான் இருந்தேன்.. நீ என்ன கிளம்பச் சொல்ற.. நீ வேணா கிளம்பி போ நான் பிறகு வரேன்" தன்னைச் சுற்றி நடப்பது எதையும் காணாததால் மிகவும் இயல்பாயிருந்தது அக்னியின் வார்த்தைகள்.
"நான் சொல்லிட்டே இருக்கேன்.. நீ கேட்க மாட்டியா" எனப் பல்லை கடித்தவன் "வா.." என்ற நிலையில் அவளின் கையைப் பற்றி இழுத்து செல்ல
அவன் செயலில் முதலில் திகைத்தவள் "ஐய்யோ ஆதி.. என்ன நீ இப்படி நடந்துக்கிற.. நான் எதையும் வாங்க மாட்டேன் சும்மா பார்த்துட்டு தான் இருப்பேன்" என்று சொல்லிக் கொண்டே வர
எதையும் காதில் வாங்காமல்.. அந்தக் கூட்டத்திடமிருந்து தூர இழுத்து வர.. அப்போது ஒருவன் "என்னடா மாப்ள ரூட் எல்லாம் பலமா இருக்கு மடக்கிடுவ தான" என்றவனின் வார்த்தையில் திரும்பி பார்த்தவள் அவர்களின் பார்வையில் உடல் அருவருக்க நின்றிருக்க
"அங்க எதுவும் நல்லா இல்ல சாகரி.. அதான் உன்னைக் கூட்டி வந்தேன்.. இதோ இங்க எல்லாம் நல்லா இருக்கு பார்.. உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்க.. இல்ல நான் உனக்குச் செலக்ட் செய்து தரவா" என இயல்பு போல் பேசிய ஆதியும் முகத்தில் கோபத்தைக் காணவும்.. அது தனக்காக அவர்கள் மேல் உதித்த கோபம் என்பதை உணர்ந்து அகம் மகிழ்ந்தவள் அதை மறைத்து
"என்னது கூட்டி வந்தியா.. தர தரன்னு இழுத்து வந்தன்னு சொல்லு.. கை வலிக்குது ஆதி.. விடு" என்றவளின் விழிகள் வலியால் கலங்க
"சாரி.. சாரி.. சாகரி உனக்கு வலிக்கும்னு நான் நினைக்கல.. இதோ இந்தக் கண்ணாடி வளையல் நல்லா இருக்கு பாரேன்.. இந்தக் கிளிப், ஹார் பேன்ட், இதோ பாசி மணி எல்லாம் நல்லா இருக்கு இல்ல" என அவளுக்கு வேண்டியதை எல்லாம் ஆதி பார்த்து பார்த்து வாங்கி அடுக்க.. இவன் என்ன மேக்கிங் என்பது போல் விழிவிரிய அவனைப் பார்த்து நின்றாள் அக்னி.
ஆதியுமே உணரவில்லை எதற்கு அந்த இளசுகளின் பார்வைக்குக் கோபப்பட்டு.. இவளை இப்படி இழுத்து வந்து சமாதான படுத்த இவ்வளவு வாங்கி அடுக்குகிறோம் என்று.