யுவன் ஆதியின் பிடியிலிருந்து தவறிய பிறகே இந்தத் தீ விபத்து நடந்தேற.. ஆண்மகன் கலங்கி நின்ற நேரம் குவியல் குவியலாய் எறிந்த சடலங்களைக் காணவும் முழுவதுமாகத் தளர்ந்து போனவனின் நெஞ்சமோ யுவனை நினைத்து அஞ்சி நடுங்கியது.வாழ் நாளில் முதல் முறையாகப் பயத்தைக் காண்கிறான்.. அது இப்படியா இருக்க வேண்டும். இப்படி ஒன்றை மறக்கத்தான் இவனால் இயலுமா.. ஊண் உறக்கமின்றி இவன் யுவராஜனைத் தேட.. இவனுக்கும் மேல் அதீத தவிப்பில் ஊண் உறக்கமின்றிக் கலங்கி நிற்கும் அக்னியைக் கண்டவனுக்கு நெஞ்சம் உலர்ந்தது.
தீ விபத்தால் நேர்ந்த கொடூரத்தில் சிக்கி சில குழந்தைகள் சிகிச்சை பலனின்றி அரசு பிணவறையில் இருக்க.. இந்நொடி வரை தேடியும் யுவனைக் கண்டு பிடிக்க முடியாததால்.. போலீஸ் அதிகாரி இருவரையும் அங்குச் சென்று காண சொல்ல.. கேட்ட ஆதியே சகலமும் நொருங்க வெறும் கூடாக நிற்கிறானென்றால்.. அக்னியிடம் இச்செய்தியை எப்படிச் சொல்வான்.
சூழ்நிலை புரிந்து தன்னைத் தேற்றிக் கொண்டு இவன் அக்னியை நெருங்கிய நேரம் பிள்ளையைத் தொலைத்த இவனிடமே மகனைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லி பரிதாபமாகக் கெஞ்சியவளைக் கண்டு இவனின் இதயத்தில் பேரவலம் சூழந்தது.
அக்னியிடம் எதுவும் கூறாமல் யுவனை நினைத்து வாகனத்தை ஆதி ஓட்டி வந்ததே பிரம்ம பிரயத்தனம். இருவரும் பிணவறை வாசல் வர.. அந்த இடத்தைக் கண்டதும் அக்னி எதையும் கேட்க மறுத்தவளாக ஆதியை இறுக பற்றியபடி "என் பிள்ள இங்க இருக்க மாட்டான்.. அவனுக்கு எதுவும் ஆகாது.. என் பிள்ள வந்துடுவான்.. வேணாம் நாம உள்ள போக வேணாம்.. நான் வர மாட்டேன்" எனத் தன் கன்றை இழந்த தாய் பசுவாய் இவள் கதற
இதோ பெண்ணவள் வாய் திறந்து கதறிவிட்டாள்.. அதே வார்த்தைகளைத் தவிப்புடன் தன்னுள்ளே உருபோட்டபடி கதறிக் கொண்டிருந்தவனுக்கு ஏது ஆறுதல்.. அதில் தன்னை மீறி பெண்ணவளை இறுக்க அணைத்துக் கொண்டவன்.. கண்ணீரோடு "நிச்சயம் நம்ம யுவனுக்கு எதுவும் நடந்திருக்காது சாகரி.. அவன் நல்லா இருப்பான்.. இருக்கனும்.. அவன் கிடைக்கிற வரை நாம இப்படியான சூழ்நிலையைக் கடந்து தான் வரனும்.. தைரியமா இரு.. யுவனுக்கு ஒன்றும் ஆகல.. நான் உன் கூடவே இருக்கேன் இல்ல.. வா" என்றவனின் குரலில் அத்துனை வலியும் வேதனையும் நிறைந்திருக்க.. இவ்வாறான வார்த்தைகளில் அவளுக்கு ஆறுதல் சொன்னானா இல்லை தனக்குத் தானே சொல்லிக் கொண்டானா தெரியவில்லை.
இருள் சூழ்ந்த அவ்விடத்தில் பெற்ற மகனுக்காகக் கதறிய அக்னியையும்.. தன் நிழலாய் இருந்த குழந்தையை நினைத்து துடித்த ஆதியையும் அங்குக் கூடியிருந்த ஊரே பார்த்துக் கொண்டு தான் இருந்தது.
என்னதான் ஆதியின் வார்த்தையும்.. அணைப்பும் இவளுக்குத் திடத்தைக் கொடுத்தாலும். ஏனோ ஒரு அடியைக் கூட முன்னோக்கி வைக்க முடியவில்லை.. ஆதியே இவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல.. அங்கிருந்த உடலை நெருங்கிய தருணம்.. அதைக் காண தைரியம் அற்றவளாகப் பயத்தில் கண்களை மூடி ஆதியின் புஜத்திலேயே முகத்தைப் புதைத்தவளின் உதடுகளோ "முருகா.. முருகா" எனத் தன் வேண்டுதலை உருப்போட தேகமோ வெளிப்படையாகவே நடுங்கியது.
ஆதிக்குமே பயத்தில் தேகம் நடுக்கம் கொள்ள.. துணிந்து உடலைக் கண்டவனின் விழியிலிருந்து கண்ணீர் இறங்க சுவாசம் திணற.. நாக்கோ மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டதில் பேச்சிழந்தவனாக நின்றவனை
"என்ன சார் உங்க பிள்ளையா.. ஏழெட்டு குழந்தைங்க விபத்துல செத்துப் போய் வந்ததுங்க சார்.. மத்த எல்லாக் குழந்தையும் பெத்தவங்க வந்து பார்த்து எடுத்துட்டுப் போய்ட்டாங்க.. இந்தா இந்த ஒரு குழந்தைக்கு மட்டும் யாரும் வரல.. அதான் கேட்டேன்" என அங்கிருந்த ஊழியர் கேட்க
தன் மூச்சை இழுத்துபா பிடித்தபடி.. ஆதியின் வார்த்தைக்காக அக்னி காத்திருத்த நேரம், "இல்ல.. இது எங்க பிள்ள இல்ல.. இது நம்ம யுவன் இல்ல சாகரி" என நிம்மதியோடு மொழிந்தவன் தந்த நிறைவில் பெரும் பாரம் விலகிய நிம்மதியில்.. ஆசுவாசத்தோடு தன்னிலை இழந்து மயங்கி ஆதியின் மீதே சரிந்தாள் அக்னி.
சரிந்தவளை, "ஹே.. ய்.." என்றபடி தன் கைகளில் அள்ளிக் கொண்டவன் மருத்துவரைக் காணவும் அதிர்ச்சியால் நிகழ்ந்த மயக்கம் என்றார் அவர்.
பிறகும் மகனைத் தேடி ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடியவளின் உடல் ஓய்வுக்குக் கெஞ்சினால் மட்டுமே தன்னை மீறி அமர்ந்தவளை ஆதியின் தோளும் மடியும் தான் தாங்கிக் கொண்டது. இவளுக்குத் தான் ஆதி அகம் தொட்டவன்.. அதே இவன் தாங்கியது ஏனோ தெரியவில்லை. நேற்று இரவு ஆரம்பித்த தேடல் இதோ விடிந்து மதியம் உச்சியில் சூரியன் ஏறிய பிறகும் தொடர.. கேசம் கலைந்து.. சோர்வுடன் உடலிலும் உடையிலும் ஆங்காங்கே கறி படிந்திருந்த நிலையில் இருவரும் அநாதையாக அமர்ந்திருப்பதை ஊரே கண்டாலும்.. யாரும் இவர்களை நெருங்கி உதவ முன்வரவில்லை. ஊரே இங்கு மரண ஓலத்தில் இருக்க யாருக்கு யார் உதவ முடியும்..
ஆதியின் ஆட்களின் ஒருவன் யுவனைப் பற்றிய தகவலோடு வர.. செய்தி கேட்டு மகன் கிடைத்து விட்டானா என்ற நிம்மதியையும் மீறி அவனுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பயத்துடனே இருவரும் அங்கிருந்த இன்னோர் மருத்துவமனை நோக்கி விரைந்தார்கள்.. இங்கும் தீ விபத்தால் பாதிப்படைந்தவர்கள் நிறையப் பேர் இருக்க.. அவர்களோடு ஐசியு வில் இருந்தவனைக் கண்ணாடி வழியே பார்க்க அனுமதித்தார்களே தவிர.. குழந்தையை நெருங்க அனுமதிக்கவில்லை செவிலியர்.
"சார் புரிஞ்சிக்கங்க.. இது ஐசியு.. இப்படி உங்களை மாதிரி வர்றவங்க எல்லாரையும் நான் உள்ள அனுமதிச்சா.. அது மத்த குழந்தைகளுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கு.. நடந்தது தீ விபத்து வேற. சீக்கிரம் குழந்தைகளுக்கு இன்ஃபெக்ஷன் ஆகும்.. இங்கிருப்பது உங்க குழந்தைதான்னா.. நான் குழந்தையோட ரிப்போட்ட தரேன். டாக்டரைப் பார்த்துப் பேசுங்க.. அது தான் குழந்தைக்கும் நல்லது" என அங்கிருந்த தலைமை செவிலியர் பிடிவாதமாக இவர்களை உள்ளே அனுப்ப மறுத்திட
இருவரும் மருத்துவரை அனுக, "சீ.. மிஸ்டர் ஆதி.. உங்க குழந்தைக்கு விபத்தால் தீக்காயம் எதுவும் ஏற்படல.. அதிக நேரம் பட்டாசு புகையைச் சுவாசித்ததால மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கியிருக்கான். இதுவரை குழந்தைக்குப் பெரிதா எந்தப் பாதிப்பும் இல்ல.. ஆனா" என்றவரின் பேச்சு தடைபடவும்
"யுவனுக்கு என்னாச்சு டாக்டர்" இருவரும் ஒரு சேர பதற
"இங்கு அனுமதித்திருக்கற சில குழந்தைகள் தீப்பொறியால் கண் பார்வையை இழந்திருக்கறதா தெரியவந்திருக்கு.. இப்ப உங்க குழந்தை கண் முழிச்சா தான்.. குழந்தைக்குக் கண் பார்வை இருக்கா இல்லையா.. இது நிரந்தரமா இல்லை திரும்பப் பார்வை கிடைக்குமான்றதே பரிசோதனையில் தான் தெரியும். இதைக் கூட ஒரு வாய்ப்பா தான் சொல்றேன்.. நீங்க அதை ஏற்கும் மனநிலையில் இருந்துக்கங்க" என்ற டாக்டரிடம்
"அப்படி எதாவது நடந்தா நீங்க என் கண்ணை எடுத்துக்கங்க டாக்டர்" என இருவரும் ஒரு சேர மொழிய.. 'நான் தான் அவனுக்கு அம்மா.. நான் என் கண்ணைத் தரனு சொல்றது சரி.. ஆதி ஏன் தரன்னு சொல்லனும்?' என நினைத்து அந்த வார்த்தை தந்த அதிர்ச்சியில் உறைந்தாள் அக்னி.
இருவரையும் பார்த்த டாக்டர், "நீங்க ரெண்டு பேரும் குழந்தைக்கு என்ன உறவு" எனக் கேட்க
"நான் அம்மா" எனச் சொல்ல வந்தவளை முந்திக் கொண்டு "நாங்க ரெண்டு பேரும் யுவனோட அப்பாம்மா" என அழுத்தமாய் மொழிந்தவனைத் திகைப்போடு பெண்ணவள் காண.. ஆதியோ எவ்வித சலனமுமின்றி டாக்டரிடம் தன் பார்வையைப் பதித்திருந்தான்.
"அப்படி எதுவும் நடக்கக் கூடாது.. let we see" என்ற டாக்டரைக் கடந்து இருவரும் வெளியே வர
பெரிய பாதிப்பு ஏதுமின்றி மகன் உயிரோடு கிடைத்த நிம்மதியில் அக்னி இயல்புக்குத் திரும்ப.. ஆனால் ஆதி மட்டும் கலக்கத்துடன் சதா யோசனையில் இருக்கவும் கையில் டீயுடன் அவனை நெருங்கிய அக்னி "என்னாச்சு ஆதி.. அதான் யுவன் நல்லா இருக்கானே பிறகு என்ன யோசிக்கிற" என்றவளின் இயல்பான கேள்விக்கு
"யுவனுக்குக் கண் பார்வை போக வாய்ப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னாரே.. அது உனக்குப் புரியலையா"
"புரியாம.. டாக்டர் வாய்ப்பு இருக்குன்னு தான சொன்னார்.. உறுதியா எதுவும் சொல்லலையே.. யுவனுக்கு அப்படி எதுவும் நடக்காது.. நான் நம்பறேன்.. என் நம்பிக்கையும் மீறி அவனுக்கு அப்படி ஒன்னு நடந்தா.. என் மகனுக்கு மீண்டும் பார்வை வர நான் எந்த எல்லைக்கும் போவேன்.. கடைசிவரை கிடைக்கலையா இந்த உலகத்தைக் காண என் மகனுக்கு விழியா நான் இருப்பேன். என் விழியால் ஒவ்வொரு இடத்தையும் அவனுக்குச் செதுக்கி சொல்லுவேன். இது எல்லாத்தையும் விட இன்று என் மகன் உசுரோட கிடைத்ததே எனக்கு ஈடு இணை இல்லாதது.. என் உசுரு இருக்கற வரை என் பிள்ளைய நான் நல்லா பார்த்துப்பேன்" என்றவளின் உறுதியிலும் தன்னம்பிக்கையிலும் பழைய அக்னியாய் மிளிர்ந்தாள் பெண்.
இது தான் நம் நாயகி அக்னிசாகரி.. நமக்குக் கடவுள் கொடுத்த உயிர் இருக்கு. அதைவிடக் கை கால்கள் திவ்யமாய் இருக்கு.. இதற்கு மேல் எதைக் கண்டு கலங்கனும் தன்னம்பிக்கை இழக்கனும் என நினைப்பவள். அவளின் உலகமோ, எதிர்பார்ப்புகளோ மிகவும் சிறியது.. யாருக்காகவும் நான் வாழவில்லை எனக்காக நான் வாழ்கிறேன் என நினைத்து தனக்கான வாழ்வை ரசித்து வாழ்பவள். அவளின் எதிர்காலக் கனவு.. சிந்தனைகள்.. செயல்கள் எல்லாம் அவனின் மகனைச் சுற்றி மட்டுமே இயங்கும்.
இப்படிச் சொன்னவளை ஆதி பிரமிப்போடு இமை சிமிட்டாமல் நோக்கியவன், "தாங்க்ஸ் ம்மா.. தாங்க்ஸ்" என உணர்ந்து சொல்ல
அதில் முகம் மென்மையாக, "என் பிள்ளைக்காக நான் செய்வேன் சொன்னதற்கு நீ எனக்கு நன்றி சொல்வியா?" எனக் கேட்டவள் "இந்தா இந்த டீய குடி.. உனக்கும் கொஞ்சம் தெம்பா இருக்கும்" என்றவளை 'இவ்வளவு நேரம் என்னிடம் ஆறுதலில் தவித்தவளா இவள்' என்று நினைக்க வைத்தாள் அக்னி.
யுவனைச் சாதாரண அறைக்கு மாற்றவும் அவன் கண் விழிக்க.. இருவரும் அவனின் பக்கத்திலேயே பயத்தோடு காத்திருந்த நேரம்.. அந்தப் பயம் எல்லாம் தேவையற்றது என்று சொல்லாமல் சொல்வது போல் விழித்ததும் "ம்மா" என்ற அழைப்புடன் அக்னியை யுவன் கட்டிக்கொள்ள.. தாயான அவளுக்கு நிம்மதியில் கண்ணத்தில் கண்ணீரின் சுவடுகள்.. அதில் கண்ணீரோடு இவர்கள் இருவரையும் ஒருசேர அணைத்துக் கொண்டான் ஆதி.
திருவிழாவில் ஆதியிடமிருந்து தொலைந்து போன யுவன்.. அந்நேரம் ஏற்பட்ட பட்டாசு புகையில் சிக்கிக் கொள்ள.. தாமதிக்காமல் அந்நேரம் மீட்புப் பணியில் இருந்தவர்கள்.. மற்றவர்களோடு சேர்த்து இவனையும் இங்குள்ள மருத்துவமனையில் சேர்த்திட.. அதன் பொருட்டே யுவனைக் கண்டுபிப்பதில் தாமதம் ஆனது.. அதுவே யுவனை அதிக பாதிப்பு இல்லாமல் மீள வைக்க.. இதோ குணமாகி வந்துவிட்டான் அக்னிசாகரியின் மகன் யுவராஜன்.
மருத்துவரின் அலோசனைக்குப் பிறகு யுவனை அழைத்துக் கொண்டு இருவரும் வீட்டுக்கு வர.. வாசிலிலே மூவரையும் நிற்க வைத்து திருஷ்டி கழித்தார் ஜானகி.
"எப்பா சாமி எங்களை எல்லாம் என்னமா பயப்பட வச்சிட்ட டா ராஜா.. போதும் இனி எங்களை விட்டு எங்கனா போ.. பிறகு இருக்கு உனக்கு" என மிரட்டிய ஜானகியை யுவன் கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்ச.. "போ..டா போக்கிரி" என்றவரின் குரலோ நிம்மதியுடன் புன்னைகையில் ஒலித்தது.
அக்னி வீட்டினுள் நுழைய அங்குப் புதுக் கட்டில் கொசு வலையோடு மெத்தை வீற்றிருக்கக் கூடவே குழந்தைக்கான சிறிய ரக நாற்காலியும் விலை உயர்ந்த டேபிள் ஃபேனும் நிறைந்திருக்க, இது ஆதியின் உபயம் என்பதை அறிந்தவளோ.. அவனிடம் எதையும் கேட்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. நேற்றிலிருந்து அநாதையாய் தனித்து இருந்தவளுக்குத் துணையாய் இருந்தது இவன் தானே.. அதை உணர்ந்ததால் வந்த மௌனம் இது.