தீ விபத்தை நேரில் காண நேர்ந்ததால் பயத்தில் அடுத்து வந்த சில தினங்களில் காய்ச்சலிலிருந்த மகனை முழு நேரமும் அவனுடனேயிருந்து அக்னி கவனித்துக் கொள்ள.. ஆதி அவளின் தினசரி சந்தை பயணத்தைத் தனதாக்கி கொண்டவனின் கையில் பழங்கள்.. வகை வகையான சாக்லேட் மற்றும் பிஸ்கெட்.. பூஸ்ட்.. என அனைத்தையும் வாங்கி வீட்டை நிறைப்பதை கண்ட அக்னிக்கு வழமை போல் கோபம் எழ
"எதுக்கு ஆதி இத்தனை வாங்கி வந்த.. பழம் வாங்கின சரி.. யுவனுக்கு நான் எப்பவும் சத்து மாவு கஞ்சி தான் தரேன். எதுக்கு பூஸ்ட்" எனக் கேட்டவள் மகனிடம் "டேய் இத்தனை சாக்லேட்டையும் ஒரே மூச்சா தின்னா பல்லுல சொத்தை படும் டா.. வயித்துல பூச்சி வரும்.. இப்ப தான் உனக்குக் காய்ச்சல் விட்டிருக்கு.. அம்மா உனக்குத் தினம் ஒன்னு தருவேனாம் என்ன நீ சமத்து தான" என மகனுக்கு எடுத்து சொல்லி தாஜா பண்ண
மகன், தாயின் கெடுபிடியில் விருப்பமின்றி ஆதியை பாவமாகக் காண..
ஆதி, "ஆரம்பிச்சிட்டியா.. அவன் குழந்தை சாகரி.. இப்ப இதையெல்லாம் சாப்பிடாம எப்ப சாப்பிடுவான்.. அவனை அவன் இஷ்டம் போல வளர விடு.. ஒடச்ச கடலை கூடச் சர்க்கரை பொடித்துக் கலந்து தருவ இல்ல.. அது கூடச் சர்க்கரை இல்லாம பூஸ்ட் கலந்து தா அது யுவனுக்குப் பிடிக்கும்.. விருப்பமா சாப்பிடுவான்.. அதான் வாங்கி வந்தேன்" என்றவன் யுவனின் பிடித்தமெல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் பெருமை பேச
இது எப்பயிருந்து நடக்குது என்பது போல் இருவரையும் பார்த்த அக்னி "க்கும் இது வேறயா.. விளங்கின மாதிரி தான் உங்க கூட்டணி.. அவனை அவன் இஷ்டம் போல வளர விடவா நான் அம்மாவா இருக்கேன்.. நல்லா இருக்கே உங்க பேச்சு" என்றவளின் பேச்சு இன்னும் எவ்வளவு நேரம் தொடர்ந்திருக்குமோ
அந்நேரம் இவர்கள் வீட்டு சீனியப்பன் வர, "அட வாங்க வாங்க ண்ணா.. எப்ப ஊர்ல இருந்து வந்திங்க" என வரவேற்று விசாரித்தவளுக்கு
"நேத்து தான் அக்னி.. மனசே கஷ்டமா போச்சு அக்னி.. இந்தத் திருவிழா அப்ப நான் ஊருக்குப் போயிருக்கக் கூடாது.. நான் இங்க இருந்திருந்தா நம்ம யுவனையோ நாராயணன் ஐயாவையோ இப்படி விட்டிருக்க மாட்டேன்" என விபத்தின் போது தான் ஊரில் இல்லாததைச் சொல்லி சீனியப்பன் வருந்த
"அட விடுங்க ண்ணே நீங்க என்ன செய்ய முடியும்.. எல்லாம் எங்க போதாத காலம்.. யுவன் பிழைத்து வந்ததே தெய்வ சித்தம்.. நாராயணன் ஐயா தான் இன்னும் சீரியஸா இருக்கார்.. பாவம் நல்ல மனுஷர்" என்றளின் வார்த்தையை ஆமோதித்த சீனியப்பன்
"ஆமா ஏதோ போறாத நேரம்.. நாராயணன் ஐயாவை ஒரு எட்டு பார்த்துட்டு தான் வரேன்.. ஆமா இப்ப யுவன் எப்படி இருக்கான்" எனக் கேட்டவர் "என்ன டா பெரிய மனுஷா.. எல்லாரையும் பயப்பட வச்சிட்ட போல" என்று யுவனைச் சீண்ட
யுவன் வெட்கம் மிளிர தாயிடம் முகத்தைப் புதைத்துக் கொள்ள..
ஜானகி, "இப்ப அவன் நல்லா இருக்கான் சீனி.. நீ உன் மாமியாருக்கு முடியலன்னு ஊருக்கு போனியே இப்ப எப்படி இருக்காங்க.. நம்ம ஊருக்கு என்ன போறாத காலமோ தெரியல.. இந்த வருஷம் திருவிழா திருவிழாவா இல்ல" எனத் தன் மனவேதனையைக் கொட்ட
"அது என்னமோ உண்மை தான்" என்றவர் ஆதியை பார்த்து "நீங்க அக்னிக்கு மட்டும் உதவி செய்யல.. விபத்தப்ப உங்க நண்பர்கள் மூலம் நிறையப் பேருக்கு உதவி செய்திருக்கிங்க.. நிச்சயம் இது பெரிய விஷயம்.. எங்கிருந்தோ வந்து இன்று யுவனுக்காக அந்த நேரத்தில் அக்னிக்கு துணையா இருந்து தகுந்த உதவி செய்திருக்கிங்க.. இதெல்லாம் பெரிய உதவி" என்ற சீனியப்பனுக்கு
"இதென்ன இப்படிச் சொல்லிட்ட தம்பி என்ன வேற்று மனுஷனா.. அதெல்லாம் ஆதி நம்ம உறவாகப் போகுது அப்ப யுவனுக்குச் செய்யாம எப்படி..சீக்கிரம் நல்ல செய்தி இருக்கு சீனி" என்ற ஜானகியின் பூடகமான பேச்சில்
ஏதோ புரிந்தும் புரியா நிலையில் சீனியப்பன் ஆர்வத்தோடு அக்னியை காண அவளோ மண்ணை நோக்க.. பெண்ணவளை தான் சுவாரசியத்துடன் நோக்கி கொண்டிருந்தான் ஆதி.
யுவன் குணமாகவும்.. அக்னி மகனுக்காக வைத்த வேண்டுதலை நிறைவேற்ற அனைவரும் விடியலில் கோவில் செல்ல.. பல படிகள் கொண்ட மலை மேலுள்ள முருகன் கோவிலில் இவள் படி வழியே கடவுளை நினைத்து பக்தியுடனே முட்டியிட்டு.. மேலே சென்று வேண்டுதலை முடிக்கவும் கூட்டமின்று சாமி தரிசனமும் திவ்யமாய் இவர்களுக்குக் கிடைத்ததில் மனநிறைவோடு.. கீழே இறங்கும் வேளையில் அக்னி நடக்கச் சிரமப்படுவதைக் கண்ட ஆதி "ஜானும்மா நீங்க யுவனை அழைச்சிட்டு கீழ போங்க.. நான் சாகரியை கூடயிருந்து அழைச்சிட்டு வரேன்" என்றவனுக்குச் சம்மதித்து விலகி சென்ற இருவரும் தங்கள் பார்வையிலிருந்து மறைந்த நொடி பெண்ணவளை தன் கைகளில் ஏந்தியிருந்தான் இவன்.
இந்தத் திடீர் செயலில் அதிர்ந்த அக்னி "ஹே.. ஆதி என்ன செய்றீங்க.. இது கோவில்.. யார்னா பார்க்க போறாங்க" என்றவளின் குரலோ அதட்டலின்றிக் கூச்சத்தோடு குழைந்து ஒலித்தது.
"யார் பார்த்தா எனக்கென்ன.. உன்னால முடியல.. நான் உதவறேன்.. இங்க தான் யாருமே இல்லையே.. யுவனுக்காக உன்னை நீ இப்படி வருத்திக்கும் போது.. உனக்காக நான் இது கூடச் செய்யமாட்டேனா" எனப் பட்டும் படாமல் சொன்னவனைத் தான் இமை சிமிட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தாள் அக்னி.
ஆமாம் ரசித்தாள் தான்.. முப்பத்திரண்டு வயதை தொட்டவனைத் துளியும் அதன் சுவடில்லாமல் கட்டழகணாகத் தெரிபவனை.. ரசித்துத் தன் அகத்தில் படம் பிடித்துக் கொண்டாள் இவள். வெண்ணையைக் குழைத்து பூசிய தேகத்தில்.. அலை அலையான கேசத்துடன் சிறிதே வளர்ந்த தாடியுடன் கூடிய முறுக்கு மீசையில்.. குனித்த புருவங்களுடன்.. இறுகிய தோள்களில் வலுவேறிய கைகளில் தான் குழந்தையெனத் தவழ.. பக்கமே தெரிந்த தன் மனம் கவர்ந்தவனின் முகத்தை அனு அனுவாக ரசித்தவளின் உதடுகளோ "க்கும்.. நல்லா வெண்ணையில் செய்த கொழுக்கட்டை மாதிரி இருக்க வேண்டியது" என மெல்ல முணுமுணுக்க
அதைக் கேட்டவனோ "என்ன.. இப்ப என்ன சொன்ன சொல்லு" என அதட்ட
"அது.. உங்களுக்குக் கை வலிக்குதான்னு கேட்டேன்" என்று மழுப்பியவளின்
அவசர வார்த்தையை ஒதுக்கியவனாக "நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கலாம் சாகரி.. இன்னும் எத்தனை நாளைக்கு நான் இப்படித் தூரவே இருக்க.. என்னால இனி முடியாது.. உங்க அம்மா மகன் கூட்டுக்குள்ள நானும் இருக்கனும்னு நினைக்கிறன். அது எவ்வளவு விரைவில் நடக்க இருக்கோ அத்தனை விரைவில் நடக்கனும்" காதல் முன்மொழிவைக்கூட ஒரு தொழில் திட்டத்தைப் போல் இவன் எதார்த்த தொனியில் மொழிய..
குரலில் நேசமோ.. ஆர்வமோ துளியுமில்லை என்பதை நேசம் கொண்ட அக்னி உணரவில்லை. அதை விடச் சத்தியமா இப்படி ஒரு காதல் முன்மொழிதலை எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஆதி தன் விருப்பத்தைச் சொல்வான் என இவள் நினைத்திருக்க.. அவனோ திருமணத்தைப் பற்றிக் கேட்கவும்.. இவளின் அகமோ வானுலகில் சஞ்சரித்தது. தன் ஒப்புதலுக்கு முன் மகனை பற்றித் தெரியப்படுத்த நினைத்தவள் "நான் உன் கிட்ட கொஞ்சம் பேசனும்.. யுவன் விஷயமா.. நம்ம திருமணம் சம்பந்தமா" என்றவளின் கூற்றில் பெண்ணவளின் சம்மதத்தை உணர்ந்தவனோ
"பேசலாம் சீக்கிரமே போகலாம்" என்றவன் கீழே வந்திருக்க.. மனநிறைவுடன் அனைவரும் வீட்டுக்கு கிளம்பி சென்றார்கள்.
மறுநாளே அக்னியிடம், "இங்க பார் எனக்குன்னு யாருமில்ல.. எனக்கு யுவனை பிடிச்சிருக்கு.. நீ எப்படியும் யாரையிவது திருமணம் செய்யத் தான் போற.. அது ஏன் நானா இருக்கக் கூடாது.. யாரோ ஒருவன் யுவனுக்கு அப்பாவா இருக்கறத விட.. அவன் மேல பாசம் வச்சிருக்கற நான் அவனுக்கு அப்பாவா வரலாம் தான.. நாளைக்கு வேறு ஒரு ஆண் யுவனை தன் மகனா பார்ப்பானோ என்னமோ" எனத் தொடர்ந்தவனை
"ஆதி, ஸ்டாப்.. ஸ்டாப்.. நான் எப்ப திருமணம் செய்யப் போறன்னு சொன்னேன்.. நீ எப்படி அப்படி நினைக்கலாம்.. உன்னை என் வீட்டுல தங்க வச்சு.. உன் கிட்ட நெருங்கி பழகினதால இப்படி நினைத்தியா" என்றவளின் கோபத்திற்கு
"ப்ச்.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லல.. எப்படியும் ஒரு பெண் தனியா வாழ முடியாது.. இன்று இல்லைனாலும் நாளைக்கே உனக்கு விருப்பம் வரலாம்"
"வராது.. அப்படி வந்தா உனக்குத் தகவல் சொல்றேன்.. வந்து என்னோட கல்யாணத்தை நடத்தி வை"
"அது தான்.. அதுக்கு முன்ன நாம இப்பவே கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்றேன்" எந்த உணர்ச்சி வெளிப்பாடும் இன்றி, ஏதோ ஒரு பிசினஸ் டீல் போன்று வெகு சாதாரணமாய்க் கூற...
அதில் "உன்ன" எனப் பல்லை கடித்தவள் "சரி நீ சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லு" என்க
"இனி நான் சொல்ல என்ன இருக்கு.. நான் உங்க இரண்டு பேர் கூட்டுக்குள்ள அப்பாவா வர ஆசைப்படுறேன்.. யுவனுக்கு ஒரு அப்பாவா அவனுக்குக் கடைசிவரை எல்லாம் செய்ய விரும்பறேன்.. அன்னைக்கு அவன் இல்லாம நான் தவிச்ச தவிப்ப நீ பார்த்த தான.. அவன் மேல் நான் வைத்த நேசம் எதுவும் பொய் இல்ல சாகரி.. அன்றைய நிலையில் என் உதவி இல்லாம நீயும் மீண்டு வந்திருக்க மாட்ட.. அன்றைய சூழ்நிலை மாதிரி திரும்ப வந்தா நான் ஒவ்வெரு தடவையும் எல்லோரிடமும் வெறும் வாய் வார்த்தையா யுவனோட அப்பான்னு சொல்ல முடியாது.. அது நல்லாவும் இருக்காது. இன்னைக்கு யுவன் குழந்தை.. நாளைக்கே வளர்ந்து நம்ம உறவை பற்றி அவன் கேட்டா நீ.. நான் சொல்ல போறோம். வேணாம் யாருக்கும் நம் வாழ்வு காட்சி பொருளாக வேண்டாம்... யுவனோட நாளைய எதிர்கால வாழ்வுக்காக யோசித்துத் தான் நான் இதைச் சொல்றேன்.. அன்றைக்கே உன் கிட்ட பேசனும்னு சொன்னனே அது இதைப் பற்றித் தான்.. பிறகு சந்தர்ப்பம் அமையல அதான் இப்ப கேட்குறேன்" என்று கிஞ்சிதமும் பற்று இல்லாமல் பேசியவனை முறைத்தவள்
"அடடா எவ்வளவு பெரிய மனசு உனக்கு.. நாம ஏன் ஊர் பேச உலகம் பேச இடம் தரனும்.. இதுக்கு ஒரே வழி.. வந்த வழியே நீ திரும்பப் போய்டு.. ஊருக்காகக் கல்யாணமாம்.. இப்ப அவசரத்துல செய்துட்டு பிறகு அவதிப்படவா? வேணாம் சாமி நானும் என் பிள்ளையும் தனியாவே இருந்துக்கிறோம்" என்றவளை நெருங்கி கை பற்றி அவளின் விழியோடு தன் விழியைக் கலந்தவனோ "உனக்கு என்னய புரியலையா.. I can't.. என்னால தூர விலகியிருக்க முடியாது" என உயிரை உருக்கும் குரலில் சொல்ல
'இதற்கு முன்னமே இப்படித் தானே சொன்னான்.. எங்கள் இருவரையும் இப்போது போல் தூர நிறுத்த முடியாது என்று தானே' என்றவனின் வார்த்தைகளைத் தனக்குச் சாதகமாகத் தொடுத்தது அக்னியின் அகம்
"எனக்கு எல்லாமே யுவன் தான்.. அவனுக்காக நாம திருமணம் செய்தாலும்.. ஏதோ ஒரு சூழல்ல நீங்க அவனை விட்டு தந்துட்டா.. என்னால அத தாங்கிக்க முடியாது.. எனக்கு என் பிள்ளையா இல்ல நீங்களா என்று வரும் போது எனக்கு என் பிள்ள தான் வேணும்.. அந்த நேரம் நிச்சயம் நான் உங்களை விட்டு விலகவும் தயங்க மாட்டேன்.. இது தேவையா நல்லா யோசிச்சிக்கங்க" உன்னை விட எனக்கு மகன் தான் முக்கியம் என்பதை அக்னி விளக்கிட
"ஹேய்.. இதே தான் நானும் சொல்றேன்.. எனக்கு யுவன் மட்டும் தான் மகன்.. இங்க நீயா.. அவனா என்று வரும் போது நிச்சயம் அவனுக்குத் தான் நான் நிற்பேன்.. என் பிள்ளைய எந்த இடத்திலும் விட்டு தர மாட்டேன்.. இது சத்தியம் சாகரி" என்றவன் அவளின் உள்ளங்கையில் தன் வலது கையை வைத்துச் சத்தியம் செய்ய
அவனின் ஆறாம் விரலையே ஆழ்ந்து நோக்கியவள் "இந்த விரல முதன் முதல பார்த்தப்ப நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?" என்க
"இதுல பயப்பட என்ன இருக்கு.. உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாம்.. ஆறு விரல் இருக்கக் கூடாதா.. நானும் என் பிள்ளையும் எதாவது விழாவுல ஒரே நேரத்துல யாரோடாவது கை குலுக்கும் போது ஆச்சரியத்துல விழி விரிச்சு ஆடிப் போய்டுவாங்க தெரியுமா?" எனப் பெருமை பேச
ஆதி இவளின் பின்னே சுற்றி உருகி உருகி காதலை சொல்லியிருந்தாள்.. சற்றே யோசித்திருப்பாளோ என்னமோ.. இங்கு இவன் யுவனை முன்னிருத்தி ஒரு தந்தைக்கான கடமையோடு கல்யாணத்தை முன் வைக்கவும்.. மனிதர்களை எடை போட தெரிந்த அக்னி இங்கு சராசரி பெண்ணாக மாறினாள்.. காதல் கண்ணை மட்டும் இல்லை அறிவையும் மழுக்கும் போல.
அதிலும் ஆதியின் தொடுகையாலும் உருகி ஒலிக்கும் குரலாலும் இவளுக்கு மறுக்கும் திடத்தைத் தராமல் போக "சரி நான் திருமணத்துக்குச் சம்மதிக்கிறேன்.. அப்ப நான் உன் கிட்ட பேசனம்னு சொன்னது.. இந்த ஊர் நினைச்சிட்டு இருக்கற மாதிரி நான் விதவையில்ல.. அன்றைக்குத் திதி தந்ததும் யுவனோட தந்தைக்கு இல்ல. அது அவன் பிறப்பை பற்றி உன் கிட்ட சொல்றேன்" என்றவளின் இதழில் தன் ஆள் காட்டி விரல் கொண்டு தடுத்தவனோ
"வேணாம் எனக்குப் பழசு எதுவும் தெரிய வேணாம்.. இந்த நிமிடம் இந்த வாழ்வு எனக்குப் பிடிச்சிருக்கு.. இனி நாம மூவரும் பயணிக்கப் போற பயணம் தான் எனக்கு வேணும்.. நீ எதுவும் சொல்ல வேணாம்.. அதே நீ என் கடந்த காலத்தைப் பற்றித் தெரிஞ்சிக்க நினைத்து என்னைப் பற்றி விசாரிக்க நினைத்தா.. ஏட்டு பெருமாள் கிட்ட இல்லனா மதர் கிட்ட கேட்டுக்க" எனப் பெரிய மனதாகப் பேசியவனின் வார்த்தைகள் அகத்தை வெல்ல
"இல்ல.. இல்ல எனக்கும் உன் கடந்த காலம் எதுவும் தெரிய வேணாம்.. நீ சொன்ன மாதிரி இனி வரப் போகும் பயணம் நமக்கானதா இருக்கும்" என்றவளின் உணர்ச்சி ததும்பும் வார்த்தையில் ஒரு நெடுமூச்சை வெளியிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் ஆதி. இனி பெண்ணவளின் வாழ்வு...