ஆதிக்கு அளித்த வாக்கில் அக்னிக்குத் துளியும் மாறாட்டம் இல்லை. இவள் அகம் தீண்டிய முதல் ஆண்மகன் அவன்தான். அன்றைய மருத்துவமனைச் சூழலில், 'யுவனின் தந்தை நான், அவனுக்கு என் விழி தருவேன்' என அவன் உரைத்த கபடற்ற தவிப்பே இவளை இத்திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தது. அவன் மேலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையோடு, தெளிந்த சிந்தனையுடன் தன் திருமணநாளை எதிர்நோக்கியிருந்தாள் பெண்.
அக்னி சம்மதம் தந்த அடுத்த மூன்றாம் நாளே திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தான் ஆதி.. அத்தனை வேகம்.. அவனின் வேகத்தைக் கண்டு மிரண்டு தான் போனாள் பெண்.. இத்தனை வேகத்திற்குக் காரணம் ஆதி தங்களோடு குடும்பமாக வாழ ஆசை கொள்வதாக இவள் நினைத்திருக்க.. பாவம் அவனின் திட்டத்தை அறியவில்லை பெண்ணவள். ஆதியுமே அதைக் கொண்டு தான் அடுத்தடுத்து திட்டமிட்டுச் செயல்படுதினான் என்றே சொல்ல வேண்டும்.
ஜானகியிடம் இவள் விஷயத்தைப் பகிர "நான் நினைத்தேன்.. நினைத்தேன்.. அப்பவே எனக்கு இந்த எண்ணம் இருந்தது.. சீக்கிரமே நீயும் இத சொல்லுவன்னு காத்துகிட்டு இருந்தேன்.. நாராயணன் ஐயா கிட்ட விசாரித்த வரை ஆதியைப் பற்றி நல்லவிதமாகத் தான் சொன்னார். ஏன் நானே பார்க்கறனே.. ஆதி தங்கமான பிள்ளை.. நல்ல முடிவு அக்னி. யுவன் நாளைக்கு நல்லா இருப்பான் பார்" என்றவரிடம்
"என்னமோ ஆத்தா.. நீ முன்னயிருந்தே இப்படித் தான் சொல்லிட்டு இருக்க.. எனக்குத் தான் பயமா இருக்கு இது சரிப்பட்டு வருமா.. இன்று யுவனை என் மகன்னு சொல்றவர் நாளைக்கு வேறு மாதிரி நடந்துகிட்டா.. நான் என் பிள்ளைக்காகத் தான் சரின்னு சொன்னது.. முடிவைச் சொன்ன பிறகு நான் பின்வாங்கவும் முடியாதே" என்றவளின் மனதைப் புரிந்து
"அடி போடி போக்கத்தவளே.. வரப்போற சீதேவியை எட்டி உதைப்பியா.. நான் சொல்றேன் நீ நல்லாயிருப்ப.. ஆதியால மட்டும் தான் யுவனுக்கு அப்பாவா முழுதா வாழ முடியும்.. யுவனை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கும் ஆதி. இத்தனை வருஷம் கடந்து என் பிறந்த வீட்டுக்குப் போற குடுப்பினை இப்ப தான் எனக்குக் கிடைச்சிருக்கு.. நான் அங்க போய்ட்டா உனக்குன்னு யாரு இருக்கா.. அதான் கடவுளா பார்த்து நான் இருக்கும் போதே உனக்கு நல்லது செய்றான்.. எனக்கு அது போதும் அக்னி" தாயாய் பிள்ளையாய் பழகிய ஜானகி மனம் நெகிழ்ந்து சொல்ல
"அவரை நம்பறேன்.. எடுத்ததும் நாம கல்யாணம் செய்துக்கலாம்.. உங்க கூட்டுக்குள்ள நான் வரனும்.. யுவனுக்கு அப்பாவா நான் மட்டும் தான் கடைசிவரை இருக்கனும்னு தான் ஆத்தா அவர் கேட்டார்"
"பின்ன இந்த இடத்துல சினிமா வசனம் மாதிரி அக்னி ஐ லவ் யூனு சொல்லியிருந்தா.. உன் கால்ல இருக்கறத கழட்டி அடிச்சிருக்க மாட்ட.. அப்படியே சரின்னு சொன்னாலும் நாளைக்கு மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோன்னு பயம் இருக்கும்.. அதே ஆதி யுவனை முன்னிருத்தி திருமணம் என்று சொல்லவும் தான.. மனதில் இவ்வளவு கேள்விகள் இருந்தும் சம்மதம்னு சொல்லிட்ட எதையும் யோசிக்காத அக்னி நல்லதே நடக்கும். நான் சொல்றேன்.. யுவனை வைத்து நடக்கிற இந்தத் திருமணம்.. உங்க இரண்டு பேருக்கும் நல்லதோர் எதிர்காலத்தை அமைத்து தரும் பார்" என மனம் நிறைய வாழ்த்தி ஆருடம் சொன்னவரைத் தாவி அணைத்துக் கொண்டவள்
"எனக்காக இவ்வளவு யோசித்துச் செய்துட்டு.. இப்ப எங்களை விட்டுப் போறன்னு சொல்ற.. அங்க போகனுமா ஆத்தா? இங்க எங்களோடவே இரேன்" என உரிமை பாராட்டியவளின் தலையை வாஞ்சையோடு தடவிய ஜானகி
"உங்களுக்குன்னு ஒரு குடும்பம் வந்த பிறகு நான் இங்க இருந்தா சரி வராது. நான் எங்க போறேன்.. என் அண்ணன் வீடு தான.. அது என் பிறந்த வீடு.. அண்ணிக்கு தான் என்னைய கண்டா பிடிக்காது.. அண்ணனும் அவர் பையனும் அப்படி இல்லையே எப்பவாது வந்து என்னைய பார்த்துட்டு தான போனாங்க.. எனக்கென்ன பணத்துக்குக் குறையா சொல்லு.. ஏதோ என் கடைசிக் காலம் என் பிறந்த வீட்டுல கழியனும்னு நான் நினைக்கிறேன்" என்றவரிடம்
"சரி சரி உன் இஷ்டம் போலப் போய் வா ஆத்தா.. ஆனா அங்க உனக்குக் கஷ்டமோ சிரமமோ இருந்தா இங்க உன் பொண்ணு இருக்கேன் ஞாபகம் வச்சுக்க" என்றவளை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டார் ஜானகி.
ஜானகி காதல் திருமணம் செய்ததில் முன்பு பேசாமல் இருந்த அவரின் பிறந்த வீட்டு உறவுகள் எல்லாம் பிறகு பேச.. தற்போது அவரின் அண்ணன் மனைவி தவறியதில் குடும்பமே ஜானகியை அவர்களோடு தங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அக்னி - ஆதி திருமணம் முடிய மறுநாளே அங்குச் செல்லும் முடிவில் இருந்தார் ஜானகி.
அவர் செல்லவிருக்கும் செய்தி யுவனைப் பம்பரமாய்ச் சுழல வைத்தது.. "அம்மா ஜானு பாட்டி கூட நானும் போறனா.. இப்பவா.. நேத்திக்கா.. எப்ப போறேன்.. நான் சமத்தா இருப்பேன் ம்மா பாட்டியைத் தொல்லை செய்ய மாட்டேன்.. இந்தா இதெல்லாம் பையில வை எனக்கு வேணும்" என நொடிக்கு ஒரு முறை தன் விளையாட்டு பொம்மைகளை எடுத்து வந்து தந்து ஜானு பாட்டி பையில் வைக்கச் சொல்லிய மகனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் "ஆமாம்" போட்ட அக்னியைக் கண்ட ஆதி
"என்ன சாகரி.. அவனை எப்படி ஜானும்மா கூட அனுப்ப முடியும்.. மறுக்காம நீ இப்படிச் சரி சரின்னா எப்படி?" எனக் கேட்டவனுக்கு
"யாரு என் மகனா.. ஜானும்மா போற அன்னைக்கு என்ன நடக்குதுன்னு மட்டும் பாரு" என மென்னகை புரிந்தவளை ஆர்வத்துடன் நோக்கினான் ஆதி.
திருமண நாளும் விடிய.. பிள்ளையார்பட்டி கோயிலில் முதல் முகூர்த்தத்திலேயே இவர்களின் திருமணம் நடக்கவிருக்க.. அழகிய பாட்டில் கிரீன் நிற பட்டுப் புடவையில் உடலெங்கும் தங்கக் கட்டங்கள் ஓட இளஞ்சிவப்பு நிறத்தில் தங்க சரி வைத்த கோபுர பார்டரில்.. அதற்கேற்ற நகைகளுடன் தேவதையென ஒளிர்ந்தாள் அக்னிசாகரி.
இந்தத் தேவதையைக் காணவும்.. ஒரு நொடி ரசனையைத் தத்தெடுத்தது ஆதியின் விழிகள்.. ஆனால் அது பொய்யோ என்னும் வகையில் மறு நொடியே மாற.. மிக இயல்பாய் இவளை நோக்கி அவன் வர
தன் அகம் தொட்டவனை முதல் முறையாகப் பட்டுச் சட்டையில் அதற்குரிய மிடுக்குடன்.. ஒரு வித கம்பீரத்துடன் நடந்து வரும் அழகை ரசனையோடு இமை சிமிட்டாமல் இவள் பார்த்து ரசிக்க.. அந்தப் பார்வை தந்த குறுகுறுப்பில்.. இடது கையால் பின்னங்கழுத்தை வருடிய படி முகத்தில் கர்வத்துடன் கூடிய மென்னகை தவழ அக்னியை நெருங்கியவன்
"என்ன இவ்வளவு மேக்கப்.. எத்தனை டப்பா பவுடரை காலி செய்த?" எனக் கேலியாய் கேட்டதில்
விழிப்புற்று அவனை முறைத்தவள், "கஞ்சுஸ் இன்னும் உன் பொண்டாட்டி பவுடர் டப்பாவையா காலி பண்ணுவா.. பெரிய மேக்கப் ஆர்டிஸ்ட் செய்த மேக்கப் இது.. ஒரு லட்சம் பில் வரும் நீங்க தான் அந்தப் பணத்தைக் கட்டணும்.. இனி உங்கள் பணம் எல்லாம் காலி மன்னா" எனப் புன்னகைத்தவளை முகம் மாற விழிகள் இடுக்க
'உன் பேராசைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்' என்ற கூற்றை இவனின் முகம் காட்ட.. அதை உணரும் நிலையில் பெண்ணவளும் இல்லை.
"போதும்.. போதும் காலம் முழுக்க நீங்க பேசிக்க நேரம் இருக்கு.. இப்ப நேரம் ஆகுது கிளம்புங்க" என்ற ஜானகி அக்னியைப் பார்த்து "தங்க ரதம் போல இருக்க டி என் ராசாத்தி" என நெட்டி முறித்தவருக்கு வெட்கத்துடன் கூடிய ஒரு விரிந்த புன்னகையைத் தந்தாள் அக்னிசாகரி.
கோவிலில் ஜயர், மேடை அலங்காரம், புகைப்படம் முதல் வீடியோ வரை அனைத்து ஏற்பாட்டையும் ஆதி செய்திருக்க.. கூடவே அங்கிருந்த சில பெரிய இடத்து மனிதர்களைப் பார்த்து திகைத்தவள், "எதுக்கு ஆதி இத்தனை ஆடம்பரம்?" எனக் கேட்க
"எது இதுவே உனக்கு ஆடம்பரமா.. கல்யாணம்னா இதைக் கூடச் செய்யலனா எப்படிச் சாகரி.. வா.. வா.. நேரம் ஆகுது வந்து உட்கார்" என்றவன் இயல்பாய் அவளின் கை பற்றித் தானே மணவறை அழைத்துச் செல்ல.. ஓடி வந்து தாயின் இன்னோர் கையை யுவன் பற்ற.. இருவருமாக அவளை மணவறை அழைத்து வர அந்தக் காட்சி அழகிய ஓவியமாய் இருந்தது.
ஜானகி முன்னரே யுவனிடம் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதைச் சொன்னவர்.. 'இனி ஆதி உன் கூடத் தான் இருப்பாங்க.. உனக்குக் கதை சொல்லி தூங்க வச்சிப் பார்த்துப்பாங்க. உனக்கு என்ன வேணுமோ வாங்கித் தருவாங்க' எனச் சொல்லியிருக்க.. அதைப் புரிந்தும் புரியாத நிலையில்.. ஆதி எப்போதும் இருப்பாங்க என்ற வார்த்தையில் புன்னகையோடு தலையசைத்துக் கொண்டான் யுவன்.
ஜயர் மந்திரம் சொல்லி திருமாங்கல்யத்தைத் தர.. அதை வாங்கியவன் "உனக்குச் சம்மதம் தானே" எனப் பெண்ணவளின் விழி நோக்கி கேட்டவனுக்குக் காதல் பெருக
"எனக்கு முழுச் சம்மதம்" என்ற நொடி அவளின் பொன் கழுத்தில் தாலியிட்ட நேரம் அக்னியின் மெய்சிலிர்த்தடங்கியதை மூன்று முடிச்சிட்டவனும் உணர.. அதில் கர்வம் குடி கொண்டது ஆதியின் முகத்தில். பிறகான சடங்குகள் அனைத்தும் முடிய திருணத்தைப் பதிவு செய்ய எனச் சில கோப்புகளிலும்.. காகிதங்களிலும் வந்திருந்தவர்களில் ஒருவர் பவ்யமாய் இருவரிடமும் கையெழுத்து வாங்கவும் அக்னிக்குள் நெருடியது.
விருந்தினர்களிடம் பேசி.. உயர்தர ஹோட்டலில் உணவுக்கு ஏற்பாடு செய்து.. அனைவரையும் உபசரித்து ஆதி அனுப்ப.. இவளுள் எழுந்த நெருடல் விஸ்வரூபம் எடுத்தது என்றே சொல்லலாம்.
உணவு முடிய.. இவர்கள் அனைவரும் வீட்டுக்குச் செல்ல காரில் ஏறிய தருணம், "நான் ஆதி கூட.. நான் ஆதி கிட்ட" என ஆர்ப்பரித்த யுவனிடம்
"இனிமே ஆதின்னு சொல்லக்கூடாது அப்பான்னு தான் கூப்பிடனும்" என்ற ஜானகியை விட்டு
"அப்பா வா ம்மா" என யுவன் தாயைக் கேட்க
தற்சமயம் நடந்த பேச்சுகள் எதையும் அறிந்து கொள்ளும் நிலையில் அக்னி இல்லையே இதில் மகன் கேள்விக்கு என்னவென்று பதில் தருவாள்.. அவள்
மௌனம் காக்க
"அப்படியெல்லாம் உடனே மாத்திக்க வேணாம் ஜானும்மா.. இயல்பா அவன் என்னை அப்பான்னு அழைக்கிறது தான் எனக்கு வேணும்.. அது எப்ப நடந்தாலும் எனக்கு ஓகே" என்றவனை ஒரு வித தீவிரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்னி.
வீட்டுக்கு வந்ததும் சீனியப்பன் மனைவி வைதேகியின் உதவியால் பிறகான சம்பிரதாயங்கள் முடியவும் முதல் முறையாக உரிமை உள்ள அக்னியின் கணவனாக அந்த வீட்டுக்குள் நுழைந்தான் ஆதி. அதன் பிறகான சடங்கில் கணவன் மனைவி இருவருமே பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அக்னியின் யோசனை நிறைந்த முகத்தைக் கண்டு
"என்ன அக்னி யோசனை" என ஜானகி கேட்க..
"எதுவும் இல்ல ஆத்தா" என்றவளை ஊன்றி கவனித்தான் ஆதி.
இவர்களுக்குள் கிடைத்த தனிமையில் அக்னி, "நீ யார் ஆதி.. உனக்குச் சொந்தம்னு யாரும் இல்ல.. எனக்கும் அதே தான்.. ஆனா நம்ம கல்யாணத்துக்குப் பெரிய ஆளுங்க எல்லாம் வந்திருந்தாங்க.. நீ என் கிட்ட எதையோ மறைக்குறியா" என கேட்டிட
அதில் ஒரு நொடியேனும் மனைவியை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவனோ மிக இயல்பாய் தன்னவளை நெருங்கி.. அவளின் காதோர முடிகளை ஒதுக்கி மென்மையாய் கன்னம் வருடி,
"ஹேய்ஈஈ பியூட்டி .. என்ன இப்படிக் கேட்டுட்ட.. உன் கிட்ட நான் எதையும் மறைக்கல பேபி.. இன்றிலிருந்து என்னையவே நான் உன் கிட்ட ஒப்படைச்சிட்டேன் ஏஞ்சல்" என்றவனின் உதடுகளோ மனைவியின் செவிமடலை உரசி முத்தமிட்டு ரகசியம் பேச.. கணவனின் குரலில் மெய் உருக.. அகம் சிலிர்க்க.. விழி மூடி காதலில் கரைந்தாள் அக்னி.. அப்படித் தன் வார்த்தையாலும் செயலாலும் அவளைக் கரைய வைத்தான் ஆதி.