பேச்சும் சிரிப்புமாய் மூவரும் உணவை உண்டு முடித்த நேரம், "என்ன.. சேட்டை செய்தான் எங்க போக்கிரி.. சத்தம் வாசல் வரை கேட்குது" எனக் கேட்டபடி வந்த ஜானகியை,
"வா.. வா.. ஆத்தா.. தோசை ஊத்தவா" என அக்னி வரவேற்க,
"எதுவும் வேணாம்.. அதெல்லாம் ஆச்சு.. என்ன சொல்றான் இந்தப் போக்கிரி" என அவர் மறுமுறையும் கேட்க,
"பாட்டி நான் போக்கிரி இல்ல ராஜன்.. யுவராஜன்" என்று யுவன் புஷ்பா ஸ்டைலில் கையை முகத்துக்குக் கீழே கொண்டு சென்று சொல்லிக் காட்ட,
அந்தப் பாவனையில் அனைவரும் வாய் விட்டுச் சிரித்த நேரம்.. ஜானகியை அழைத்துச் செல்ல அவரின் அண்ணன் மகன் வந்ததில் அங்குப் பிரிவின் துயரமும்.. கவலையும் சூழ்ந்தது.
அக்னி கண் கலங்க, "இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போயேன் ஆத்தா" எனச் சொல்ல,
"எதுக்கு டி யம்மா கலங்குற.. இப்ப தான் கையில போன் இருக்கே.. நினைச்ச நேரம் பேசிக்கப் போறோம்.. என்னைப் பார்க்கணும்னு தோணினா எந்த நேரமானாலும் வீட்டுக்கு வா.. பிறகென்ன.. நீ ராசாத்தி கணக்கா வாழ்வ.. சீக்கிரம் பிள்ளையைப் பெத்துக்க.. ஆத்தா ஓடி வந்து உன்னைப் பார்த்துக்கிறேன்" என்றவரை இறுக்க அணைத்துக் கொண்டு அக்னி அழுதிட,
தாயைப் பார்த்த யுவன், "பாட்டி நீங்க ஊருக்குப் போகக் கூடாது.. பாரு அம்மாக்கு காய்ச்சல் வந்துடுச்சு.. போகாத" காய்ச்சல் வந்ததால் தான் அம்மா அழுகிறாள் என்று நினைத்து ஜானகியை அதிகாரம் செய்ய,
"சரி தான் டா போக்கிரி.. அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது பாரேன்" என்றவருக்கு
"நீ சந்தோஷமா போய் வா ஆத்தா.. நான் தான் மக்கு மாதிரி கண்ணுல தண்ணி வச்சிட்டேன்.. நான் தினமும் பேசுறேன்.. நேரத்துக்கு மாத்திரை எடுத்துக்க.. உடம்பைப் பார்த்துக்க.. நாங்க வந்து உன்னைப் பார்க்குறோம்" என்றவள் மகனை அள்ளித் தூக்கி, "அம்மா அழல யுவன்.. நீயும் சமத்தா பாட்டிக்கு டாடா காட்டு" என்க,
யுவன், "பாய் பாட்டி.. டாடா.. நேத்து வா" நாளைக்கு என்பதை நேற்று என்க,
"பார்த்தியா அக்னி.. இந்தப் பயல.. நேத்துவரை பாட்டி ஊருக்கு நானும் வரேன்.. என்னை விட்டுப் போகாத.. என்னைய கூட்டிட்டு போன்னு என் பின்னவே சுத்திட்டு இருந்த வாண்டு.. இப்ப போய்ட்டு வர சொல்லி டாடா காட்டுது.. டேய் நீ அம்மா பைத்தியம்னு தெரியும் டா.. பாட்டியால நடக்க முடியல.. எனக்கு யாரு தண்ணி எடுத்துட்டு வந்து தருவா.. தைலம் வேணும்னா நான் யாரைக் கேட்பேன்.. நீ பாட்டி கூட வந்துடு யுவன்.. அங்க பெரிய வீடு.. காரு.. நிறையப் பொம்மைங்க எல்லாம் இருக்கு.. பாட்டி உனக்குத் தரேன்" என அவனுக்கு ஜானகி ஆசை காட்ட,
யுவன், "ம்ஹும்.. எனக்கு அம்மா தான் வேணும்" என்று அழுத்தத்துடன் மறுத்தவன் தாயின் கழுத்தைக் கட்டிக் கொள்ள
ஜானகி புன்னகையுடன், "சரி தான்.. அப்ப யுவனுக்கு அப்பா வேணாமா?" எனக் கேட்க
தாயை ஒட்டி நின்றிருந்த ஆதியைத் திரும்பிப் பார்த்தவன், "எனக்கு அப்பாவும் வேணும்" என்றபடி ஆதியிடம் தாவ.. அவனும் வாகாய் யுவனைத் தன் கையில் ஏந்திக் கொள்ள.. நிறைந்த மனதுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ஜானகி.
அக்னியைக் கைப்பேசியில் அழைத்த வைதேகி, "என்ன அக்னி.. ஜானகிம்மா கிளம்பிட்டாங்களா?" எனக் கேட்டவர், "மதியம் எதுவும் சமைக்காத.. உனக்கும் ஆதிக்கும் எங்க வீட்டுல தான் மதியம் விருந்து.. மறுக்கக் கூடாது.. நான் எல்லாம் வாங்கி சமைக்க ஆரம்பிச்சிட்டேன்.. நீங்க மெல்ல வந்தா போதும்" என அன்பால் கட்டளையிட
அதைக் கணவனிடம் சொல்ல.. அவனுக்கு விருப்பம் இல்லையென்றாலும் அரை மனதாக ஒத்துக்கொண்டதில், இவள் மகனுக்கும் தனக்கும் வேண்டிய உடையை எடுத்து வைத்தவளின் பார்வையில் இதுவரை கண்டிராத கணவனின் பயணப் பை பட, அதைத் திறந்த நேரம் உள்ளே வந்த ஆதி,
"என்ன சாகரி செய்துட்டு இருக்க.. இதென்ன பழக்கம்.. என்னுடையதை எடுக்கிறது" எனச் சத்தமிட
"இது பெரிய.. அலிபாபா குகை.. ஏதோ நாலு சட்டை ரெண்டு பேண்ட் வச்சுகிட்டு ரொம்பத்தான் அதட்டுறீங்க.. நான் கட்டிக்கப் போற புடவைக்கு மேட்ச்சிங்கா நீங்களும் சட்டை போட நினைச்சு பையில பார்த்து எடுத்தேன்.. ரொம்பத்தான்.. நாம ஒரே கலர்ல போட்டுப்போமா?" என அவனின் அதட்டலை உணராமல் இவள் நேசத்தோடு கேட்க,
"பார்க்கவே கண்றாவியா இருக்கும்.. ஏன் தான் உனக்கு இப்படியெல்லாம் தோனுதோ.. எதுவும் வேணாம்.. நானும் என் மகனும் வேணா அப்படியே போறோம்.. உன்னை எல்லாம் எங்க கூட்டணில சேர்த்துக்கல.. என்ன டா மகனே.. நான் சொல்றது சரிதான?" என்றவன் இறுதியாக யுவனிடமே கேட்க..
தகப்பனின் கபடம் தெரியாமல் மகனும் மண்டையை ஆட்ட.. இதைச் சாதாரணக் கேலி என நினைத்து அக்னியும் புன்னகைத்துக் கொண்டாள்.
மூவரும் சீனியப்பன் வீட்டுக்கு வரவும், வாசலிலேயே இருவரும் தம்பதி சமேதராய் இவர்களை வரவேற்று உபசரித்த பிறகு, அங்கு ஆண்கள் இருவரும் பேசியது முழுவதும் பல உள்நாட்டு.. வெளிநாட்டு அரசியல் கதைகள்.
அக்னி அடுக்களையின் பக்கம் வர,
"நான் தான் உன்னை மெல்ல வரச் சொன்னேனே.. எதுக்கு இவ்வளவு வெரசா வந்த.. இப்படி வந்து நிக்கவா போ.. போய் உட்கார்ந்து டிவி பார் அக்னி" என வைதேகி சொல்லவும்
"நாமெல்லாம் என்னைக்கு அண்ணி சும்மா உட்கார்ந்து இருக்கோம்.. யுவன் கார்ட்டூன் பார்க்கறான்.. அதான் உங்களுக்கு உதவியா வந்தேன்."
"நல்லா சொன்ன போ.. இங்க சமையலே கனகம் தான்.. நானே அவளுக்கு ஒத்தாசையா இருக்கேன்.. நீ எனக்கு ஒத்தாசையா?" என்ற வைதேகி, "கேட்டுக்க கனகம்" என்று அந்த வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண்மணியிடம் சொல்லியதில் அவர் புன்னகைக்க, அக்னியும் சிநேகத்துடன் புன்னகைக்க
"உணவு முடிஞ்சதும் கொஞ்ச நேரம் ஓய்வுக்குப் பிறகு சினிமா போய் வாங்க.. மகிளா தான் ஆன்லைன்ல புக் பண்ணா.. யுவனை இங்க விட்டு போங்க.. காலேஜ் முடிஞ்சு வந்தா மகி பார்த்துக்குவா" என்றவருக்கு
"அண்ணி எதுக்கு சினிமாலாம்.. அவர் கிட்ட சொல்லலையே" அக்னிக்கும் ஆசை தான்.. ஆனால் கணவன் இங்கு வரவே தயங்கினானே.. இதுக்கு என்ன சொல்லப் போகிறான் என்ற எண்ணம் இவளுக்கு.
"அதெல்லாம் உன் அண்ணன் பேசிப்பார்.. ரெண்டு பேரும் சந்தோஷமா போய் வாங்க" என்றவர், அவளைத் தனியே அழைத்து வந்து, "உன் அண்ணன்.. நீ கல்யாணம் செய்துக்கப் போறன்னு சொன்னதும் எனக்கு அத்தனை சந்தோஷம்.. அதிலும் அது ஆதி தான்னு தெரிஞ்சதும் மனசுக்கு நிம்மதியா இருந்தது.. உன்னை அவங்க நல்லா பார்த்துக்கிறாங்களா.. நீ சந்தோஷமா தான இருந்த அக்னி?" என அன்போடு கேட்க,
அவர் எதைக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட அக்னி மெல்லிய குரலில், "அவங்க என்னை நல்லா தான் பார்த்துக்கிறாங்க அண்ணி.. நான் சந்தோஷமாதான் இருக்கேன்" என்றவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல்
"யுவன் மேல கொள்ளைப் பாசம் போல ஆதிக்கு.. என்னமா அவனைப் பார்த்துக்கிறார்.. அன்னைக்குக் கல்யாணத்தப்ப மணமேடையில் கூட யுவன் அவர் பக்கத்திலேயே தான் உட்கார்ந்து இருந்தான்" என்றவருக்கு
"ஆமா அண்ணி.. எனக்கு அது தானே வேணும்.. என் பிள்ளையோட எதிர்காலம் தான் எனக்கு முக்கியம்.. இப்ப தான் நிம்மதியா இருக்கு.. எங்க யுவனை அவர் பிரிச்சு பார்ப்பாரோன்னு நினைச்சேன்.. ஆனா அப்படி நினைச்சது கூடத் தப்புன்னு இப்ப தோனுது.. யுவனும் சின்ன வயசுலயிருந்தே எல்லாரிடமும் சட்டுனு பழகிடுவானே.. இப்ப அவரிடமும் ஒட்டிகிட்டான்.. இப்ப எல்லாம் அவங்க கூட்டணில என்னைய கூடச் சேர்த்துக்கிறது இல்லை.. அது எனக்குப் பெருமையா இருக்கு அண்ணி.. இதே பாசம்.. இதே ஒட்டுதலோட இவங்க ரெண்டு பேரும் கடைசிவரை இருக்கணும்.. அது தான் என் வேண்டுதல்" எனக் கணவனின் கபடம் அறியாமல் பூரித்த மனதுடன் இன்று சொன்னதை எல்லாம் நினைத்து ஒரு நாள் மனதால் கதறுவோம் என்று பாவம் அக்னிசாகரி உணரவில்லை.
உணவு முடிய யுவன் உறங்கவும்.. இவர்கள் இருவரும் சினிமாவுக்குக் கிளம்பியதில், கடமையே என வந்த ஆதி திரையரங்கில் கூட்டத்தைப் பார்த்து கவனமாய் மனைவியை அரவணைத்து உள்ளே அழைத்துச் சென்றவன், வேறு வழியின்றி அமர்ந்து படத்தைக் காண.. பெண்ணவளோ எதிர்மறை உணர்வில் இருந்தாள்.
இது தான் அக்னி விவரம் தெரிந்து தியேட்டரில் பார்க்கும் முதல் படம்.. அதையும் தன் மனம் கவர்ந்தவனோடு காணுவதில் மனதில் அத்தனை கொண்டாட்டம்.. படம் ஆரம்பிக்கவும் கணவனை ஒட்டி, அவனின் புஜத்தில் தலை சாய்த்துக் கொண்டு
"ஹேஈஈ.. இந்த மியூசிக் சூப்பரா இருக்கு இல்ல.. ஹீரோ என்ட்ரி மாஸ்ப்பா.. ஐயோ ஹீரோயின் அழுகாச்சி பொண்ணா இருக்கா.. செம லவ் ஹீரோக்கு ஹீரோயின் மேல.. இந்த சீன்ல ரெண்டு பேரும் க்யூட்டா இருக்காங்க இல்ல" எனத் தான் ரசித்ததை எல்லாம் அதே ரசிப்புக் குரலில் அவனிடம் சலசலக்கவும், எரிச்சல் மிகுதியில் தன் பொறுமையை இழந்தவனாக இடைவேளை நேரத்தில்
"சாகரி.. எனக்குத் தலை வலிக்குது.. நாம வீட்டுக்குக் கிளம்பலாம்" என்றதில் தன் சினிமா ஆசையெல்லாம் மறந்து போக,
"நாம வீட்டுக்கு போனா ஊரில் இருக்கிறவங்க பார்த்து அண்ணா அண்ணிகிட்ட சொன்னா வருத்தப்படுவாங்க.. சினிமா முடியும் வரை நாம இப்படிக் காத்தாட எங்கனா போய் வரலாமா.. உங்களுக்கு ஓகேவா?" என்றவளின் யோசனையில் வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாய் டூவீலரில் இருவரும் காடு மேடு என உலா வர..
திடீரென மழைக்கான அடையாளமாய்க் கருமேகங்கள் சூழ, காற்றுப் பலமாக வீசவும், நிலைமையை உணர்ந்த ஆதி,
"சாகரி.. மழை வர்ற மாதிரி இருக்கு.. இதுல நாம எங்காவது போய்ச் சிக்கிட்டா சரி வராது.. அதோ அங்க கல் மண்டபம் தெரியுதே.. அங்க கொஞ்ச நேரம் ஒதுங்கியிருந்து போகலாம் வா" என அழைத்ததில்
சூழ்நிலை புரிந்து அக்னி இறங்கவும், வண்டியை நிறுத்திவிட்டு திரும்பிய நேரம் மண் துகள்கள் ஆதியின் கண்ணில் படவும், கணவன் கண் கசக்குவதைக் கண்டவள்
"கண்ணுல தூசி விழுந்தா இப்படித் தான் கண்ணைக் கசக்குவாங்களா.. கையை எடுங்க.. நான் ஊதி விடறேன்" என்றவள் அவனை நெருங்கிய நொடியே தீ சுட்டாற்போல் விலகியவன்
"இல்ல.. இப்ப சரியாகிடுச்சு.. நான் பார்த்துக்கிறேன்" என இயந்திரத்தனமாய் மொழிந்தவன் அங்கிருந்த கல் இருக்கையில் அமர.. சிந்தனையுடன் அவனின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் அக்னி.
ஆதிக்கு யுவனைச் சீனியப்பன் வீட்டில் விட்டு வந்தது பிடிக்கவில்லை.. அதில் கோபம் துளிர்த்திருந்தவனை, அக்னி படம் பார்க்கும் போது இயல்பாய் நெருங்கிப் பேசி.. வண்டியில் வரும் போதும் கணவனின் இடுப்பில் கையிட்டு வர.. இதோ தற்போதும் அவனை நெருங்கி கண்ணை ஊத வரவும் எரிச்சலின் எல்லைக்கே சென்றவன், அதைப் போக்க கண்முன்னே விரிந்திருந்த இயற்கையையோ.. பக்கத்தில் அழகோவியமாய் மிளிர்ந்த புதுமனைவியையோ ரசிக்காமல் கைப்பேசியில் உள்ள ரீல்ஸில் மூழ்கிட
எதுவும் பேசாமல் எவ்வளவு நேரம் தான் இயற்கையை ரசித்துக் கொண்டு அக்னி சும்மா அமர்ந்திருப்பாள்.. ஒருநிலைக்கு மேல் அதை வெறுத்தவள் கணவனை நெருங்கி அமர்ந்து
"என்ன பார்க்கற ஆதி?" எனக் கேட்கவும்,
அந்நொடி விலகி எழுந்து நின்றவனைக் கண்டவள், "என்ன ஆச்சி.. எதுக்கு இவ்வளவு கோபம்?" எனக் கேட்க,
"எதுக்கா.. உனக்கு எதுவும் தெரியாத மாதிரி கேட்குற.. சீனியப்பன் வீட்டுல எதுக்கு யுவனை விட்டுட்டு வந்த.. அப்படியாவது நாம சினிமா பார்க்கணுமா?" இவன் ஏகத்துக்கு எகிற,
சந்தோஷத்தில் கையால் வாய் பொத்தி நின்றவளோ,
"அடேங்கப்பா.. இதுக்கா இத்தனை கோபம்.. யார் வீடு அது.. நம்ம சீனி அண்ணன் வீடு தான.. அவங்க மக மகிளாவுக்கு யுவனைப் பிடிக்கும்.. எதாவது அவசரம்னா யுவனை அங்க தான் விட்டுப் போவேன்.. அது யுவனுக்குப் பழக்கமான வீடு ஆதி" என்றவளின் பேச்சுக்கு ஒரு ஊஷ்ண மூச்சை வெளியிட்டவன்
"எனக்கு இதெல்லாம் பிடிக்காது சாகரி.. பெத்த தாய் தன் பிள்ளையை இப்படி எல்லாம் விட்டுட்டு இருக்க மாட்டா" எனச் சாடியவனை
"யப்பா சாமி.. இது தான் உங்க கோபமா.. இனி உன் பிள்ளையை யார் வீட்டிலும் விடமாட்டேன் .. போதுமா.. அதான் சொல்லிட்டேனே.. கொஞ்சம் சிரிக்கிறது" எனக் கணவனைத் தாஜா செய்தவள் உணரவில்லை.. இந்தக் கோபம் வெறும் மகன் மேல் உள்ள அக்கறையால் மட்டுமில்லை என்று.
நாம் ஒருவரை எந்தக் கோணத்தில் மனதில் நிலைநிறுத்துவோமோ.. அதை விட்டு ஒரு நூலிழையில் கூட எண்ணங்கள் பிறழாமல், அவர்களின் செயல்கள் நம் கண்ணிலும் கருத்திலும் பதியுமாம்.. அப்படி ஒரு நிலையில்தான் இருக்கிறாள் அக்னிசாகரி.