காலையில் எழுந்தது முதலே பள்ளிக்குச் செல்ல மறுத்து, சிணுங்கிக்கொண்டே இருந்த மகனைக் கண்ட அக்னி,
“என்ன ஆச்சு யுவன் உனக்கு… வர வர அதிகமா அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்ட… நீ இப்ப சமத்தா ஸ்கூல் போனா தான், அம்மா சாயங்காம் உன்னை வெளியே அழைச்சிட்டுப் போவேன்…” என ஆசை காட்டி, சமாதான வார்த்தைகளைக் கூற காரணம்...
ஏதோ ஒரு வேலை இருப்பதாகக் கூறி, விடியலிலேயே ஆதி வெளியே கிளம்பிச் சென்றிருந்ததால், இவள் தான் மகனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
பிறகு வீடு திரும்புகையில், அந்நேரம் வைதேகியும் மகிளாவும் வர, அக்னி, “வாங்க அண்ணி… வா மகிளா…” என இருவரையும் வரவேற்க,
வைதேகி, “ஹ்ம்ம்… என்ன அக்னி யுவனை ஸ்கூல்ல விட்டுட்டு வரீயா?” எனவும்
“ஆமா அண்ணி… அவங்க காலையிலேயே வெளி வேலைன்னு கிளம்பிட்டாங்க. பஞ்சருக்குப் போன நம்ம வண்டியும் இன்னும் வரல. அதான் நான் பெத்தது கிட்ட மல்லு கட்டி அழைச்சிட்டுப் போய் விட்டுட்டு வரேன். சொல்லுங்க அண்ணி…” என்றவள் இருவருக்கும் டீ போட்டுத் தர.
“ஏதோ காலேஜ் ஃபங்ஷன் வருதாம். இதோ இவ கேட்குறா போல, ஜாக்கெட் தச்சித் தா. அதைக் கொடுத்துட்டு, உன்னையும் அப்படியே பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்…” என வைதேகி சொல்லிட
“ஓ… அப்படியா? ஸ்பெஷல் டிசைன்ல தச்சித் தந்துடலாம். அப்புறம் மகி, உன் படிப்பெல்லாம் எப்படிப் போகுது? உனக்கு என்ன மாதிரி தைக்க?” என்று அக்னி கேட்டுக்கொண்டிருந்த நேரம், அவளின் கைப்பேசி இசைக்கவும், எடுத்துப் பார்த்தவள்...
“யுவன் ஸ்கூல் மிஸ் தான் கூப்பிடுறாங்க… என்னவா இருக்கும்?” என்ற முணுமுணுப்புடன் அழைப்பை ஏற்றவளின் முகம் மாறியது.
“அண்ணி, பெருசா எதுவும் பிரச்சனை இல்ல… நீங்க உடனே கிளம்பி வாங்கன்னு சொல்றாங்க. யுவன் அழற குரல் நல்லாவே கேட்குது. என்னன்னு தெரியல. அவன் கொஞ்ச நாளாவே சரியில்ல அண்ணி. அதிலும் ரின்ஸி டீச்சர் போய்ட்டு, இப்ப வேற மிஸ் வந்ததிலிருந்து யுவன் ஸ்கூல் போகவே அடம்பிடிக்கிறான்…” என்றவளின் குரலில் பதற்றத்தை உணர்ந்த வைதேகி,
“பதறாத அக்னி, ஒண்ணும் இருக்காது. மகிளா கூடப் போ. நான் வீட்டுல இருக்கேன்... மகி, வேகமா போகாத, கவனமா வண்டியை ஓட்டு…” என மகளுக்கும் அறிவுரை கூறி இருவரையும் அனுப்பி வைக்க
பள்ளியில் தாயைக் கண்டதும் ஓடி வந்து அவளது காலைக் கட்டிக்கொண்ட யுவன், “ம்மா… ம்மா…” என்று அழத் தொடங்கவும், இவளது நெஞ்சம் பதறியது.
“என்னாச்சு மிஸ்? எதுக்கு அழறான்?” என இவள் கோபமாகக் கேட்க,
“மேம்… கோபப்படாதீங்க. எங்க மேல எந்தத் தப்புமில்ல. கொஞ்ச நாளாவே யுவன் அதிகச் சேட்டை பண்றான். பசங்களோட நோட்டுல, லேபிள்ல எல்லாம் பேனாவால கிறுக்கி வைக்கிறான். எத்தனை முறை சொன்னாலும் மதிக்கிறதே இல்ல. இன்னைக்கு நான் HM-க்கு அனுப்ப வேண்டிய ஒரு ஃபைல்ல கிறுக்கி வச்சிருக்கான்.
பசங்க இவன்தான் செய்தான்னு சொல்றாங்க. ஆனா இவன் இல்லன்னு சாதிக்கிறான். அதுக்குப் பொய் சொல்றியான்னு சும்மா கையில ஒரு அடி தான் அடிச்சேன். அதிலிருந்து இவ்வளவு ஆர்ப்பாட்டம்.
அவன் பேக்குல பேனா இருக்கு. எதுக்குச் சின்னப் பசங்க கையில பேனா தரீங்க? இப்ப ஹெட்மாஸ்டர்க்கு நான் தான் பதில் சொல்லணும்…” என்ற ஆசிரியரின் குரலில், குழந்தையின் மீதான எரிச்சலும் கோபமும் வெளிப்படையாகத் தெரிந்தது.
“நான் தரல மிஸ். ஒருவேளை இவன் அப்பா தந்திருக்கலாம். யுவனுக்கு ரின்ஸி மிஸ்ஸைப் பிடிக்கும். அவங்க போயிட்டு, புதுசா நீங்க வரவோ, இப்படியெல்லாம் நடந்துக்கிறான். அவன் பழகக் கொஞ்ச நாளாகுமே மிஸ். அதுக்காக ஏன் குழந்தையை அடிச்சிங்க?”
“மேம், சும்மா உங்க பிள்ளைக்கு ஏந்திட்டுப் பேசாதீங்க. நாளைக்கு மேலதிகாரி என்னைக் கூப்பிட்டு வச்சு வண்ண வண்ணமா திட்டுவாரு. இது எனக்குத் தேவையா?
உங்க பிள்ளையை அழைச்சிட்டுப் போங்க. அவன் பழகின பிறகு அனுப்பி வையுங்க. இவன் என்னைப் பழகற வரைக்கும் நான் எல்லாத்தையும் பூட்டுப் போட்டுப் பாதுகாக்கணும் போல. நல்லா இருக்கு உங்க பேச்சு… அழைச்சிட்டுப் போங்க மேம்…” என்று குதித்த ஆசிரியையிடம்,
“நீங்க அதிகமாப் பேசுறீங்க. என் பிள்ளை செய்தது தப்பு தான். Principal கிட்ட வந்து பேசச் சொல்லியிருந்தா, நான் வந்து விளக்கியிருப்பேன். ஏதோ குழந்தை தெரியாம செய்துட்டான். அதுக்கு இவ்வளவு பேசுறீங்க.
என் கிட்டவே இத்தனை பேசுறீங்கன்னா, அவனை எத்தனை மிரட்டியிருப்பீங்க?” என்றாள் அக்னி.
“மிரட்டாம கொஞ்சுவாங்களா? இவங்க வந்து விளக்கம் தரப் போறாங்களாம்…” என முணங்கிய ஆசிரியர்,
“அழைச்சிட்டுப் போங்க மேம். நான் மத்தப் பிள்ளைகளைக் கவனிக்கணும்…” என்றிட.
இவளுக்கு வந்த கோபத்திற்கு, வீட்டுக்கு வந்ததும் மகனை நாலு அடி அடித்திருப்பாள். அதற்குள் யுவன் வைதேகியிடம் அடைக்கலம் அடைந்துவிட, அவரை மீறி மகனை எதுவும் செய்ய முடியாமல் போன நிலையில், மகனை ஏகத்துக்கும் திட்டிக்கொண்டிருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தான் ஆதி.
“வாங்க…” என்று வந்தவர்களை வரவேற்றவன்,
“எதுக்கு இவ்வளவு கோபம் சாகரி? என்னாச்சு? என்ன விஷயம்?” என்று இயல்பாய்க் கேட்க.,.
அக்னி தயங்க, ஆதியைக் கண்டதும் யுவன் இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் உடைந்த அணை போல வெளியேறியது.
“ஆதி… மிஸ் என்னை அடிச்சிட்டாங்க. இங்க… இங்க… இங்க எல்லாம் அடிச்சாங்க. அம்மாவும் திட்டினாங்க…” என ஒவ்வொரு இடமாகத் தொட்டுக் காட்டி, அழுகையின் ஊடே நடந்த அனைத்தையும் யுவன் பகிர...
“வாட்… என் பிள்ளையை அடிச்சாங்களா? என்ன திமிர் அதுங்களுக்கு! இதைப் பார்த்துட்டு சும்மா வந்ததும் இல்லாம, யுவனை வேற திட்டுவியா நீ?” எனக் கேட்டு, அடுத்த நொடியே ஐயனாராக மாறினான் ஆதி.
இப்படியெல்லாம் குதிப்பான் எனத் தெரிந்துதான் அக்னி சொல்லத் தயங்கியது.
“ஆதி… யுவன் தப்புச் செய்திருக்கான்…” என்று சிறு குரலில் அக்னி எடுத்துச் சொல்ல,
“அவன் என்ன தப்பு வேணா செய்யட்டும். அதுக்காக யுவனை அடிப்பாங்களா? யாரா இருந்தாலும் கொன்னுடுவேன்… கொன்னு. அவன் தப்பே செய்தாலும், அதை என் கிட்டச் சொல்றதுதான் முறை…” என்று எகிறிக்கொண்டு வந்தவனிடம்,
“இது தப்பு ஆதி, அது வந்து…” என்ற மனைவியை,
“ஹேய்! பேசாதே… பேசாதே. நான் யாருன்னு தெரியல இப்ப இருக்கு அந்த மிஸ்க்கு…” என்று உறுத்து விழித்தவனை நெருங்கவே அக்னிக்கு அச்சமாக இருந்தது.
அத்தனை ரௌத்திரமும் அவனது உடல்மொழியிலும் முகத்திலும் வெளிப்பட்டிருக்க, அந்தக் கணமே பள்ளியை நோக்கி விரைந்தான்.
அனைத்தையும் பார்த்த வைதேகி,
“அக்னி, தம்பி கோபமாப் போறான். ஆம்பளைங்க சட்டுன்னு கை நீட்டிடுவாங்க. எதாவது பிரச்சனை ஆகப் போகுது. அக்னியை அழைச்சிட்டுப் போய் அங்க விட்டுட்டு வந்துடு மகி…” என்க.
‘யுவன்னா இவர் சாமி ஆடுவாரே… இப்ப இந்த மனுஷன் என்ன செய்து வைப்பார்ன்னு தெரியலையே…’ எனக் கலங்கியபடி இவள் மீண்டும் பள்ளிக்கு வந்து சேர...
இங்கே தலைமை ஆசிரியர் தன் அறையில், ஆதி முன்னிலையில் யுவனின் வகுப்பு ஆசிரியரைத் திட்டிக் கண்டித்துக்கொண்டிருந்தார்.
அக்னியிடம் சற்று முன் எப்படியெல்லாம் திமிராகப் பேசிய ஆசிரியரின் வாய், இப்போது சிப் போட்டு மூடியதைப் போல இருந்தது. உடல்மொழியிலோ அத்தனை பவ்யம்.
இந்தப் பவ்யம் தன்னுடைய மேலதிகாரிக்காக என்று நாம் நினைத்தால்… அது தான் இல்லை.
அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ள விரும்பாமல், வேறு வழியின்றித் தலைகுனிந்து நிற்கும் நிலை அது.
தலைமை ஆசிரியர் அறைக்குள் இவள் நுழைய ப்யூன் அனுமதிக்காததால், வெளியே நின்றவளுக்கு உள்ளே என்ன நடக்கிறதோ என்ற படபடப்பில் நெஞ்சுக்குள் ரயில்வண்டியே ஓடியது.
இவளுக்கு எங்கே தெரியும்?
உள்ளே ஆதி, பாட்ஷா படத்தில் மாணிக்கமாக வாழ்ந்த கதையைச் சொல்வது போல, தான் யார் என்பதை அங்கே சொல்லிக்கொண்டிருக்கிறான் என்று… நேரம் கடந்து, கலங்கிய கண்களுடன் வெளியே வந்த ஆசிரியர் அக்னியைக் கண்டதும்,
“இவ்வளவு பணபலமும் அதிகாரபலமும் வச்சிருக்கிற நீங்க எல்லாம் எதுக்கு உங்க பிள்ளைகளை இந்த மாதிரி சாதாரண ஸ்கூலுக்கு அனுப்புறீங்க? உங்க புருஷனால எனக்கு வேலை போச்சு. நீங்க என் வயித்துல அடிச்சிட்டீங்க. நாளைக்கு உங்க பையன் வளர்ந்து எத்தனை பேரோட குடும்பத்தைக் கெடுத்து, யார் யார் வாழ்க்கையையெல்லாம் நாசம் செய்யப் போறானோ… நல்லா இருக்க மாட்டீங்க…” என்று மனக்குமுறலோடு அந்தப் பெண்மணி சாபமிட்டுச் செல்ல,
முற்றிலும் அதிர்ச்சியில் உடைந்தே போனாள் அக்னி.
எந்த வாழ்க்கை மகனின் நிழலைக்கூடத் தொடக்கூடாது என்று நினைத்துக் கதறினாளோ… மகன் எப்படிப்பட்ட வாழ்வு வாழ வேண்டும் என்று பாடுபட்டாளோ…
நல்ல மனிதனாகத் தன் மகன் வளர வேண்டும் என்ற கனவுக்காகத் தன் வாழ்க்கையையே பின்னுக்குத் தள்ளினாளோ… அந்தக் கனவுகள் அனைத்தும் ஒரே நொடியில் கானல் நீராகி மறைந்ததுபோல் தோன்றவும்,
உள்ளம் துடிக்க, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட...
ஆதியுடன் வெளியே வந்த தலைமை ஆசிரியர் இவளைக் கண்டு விசாரிக்க,
ஆதி, “My wife…” என்றதும்,
“ஓ… சாரி சாரி மேம். தப்பெல்லாம் எங்க பக்கம் தான். இனி இப்படி நடக்காது…” எனப் பவ்யம் காட்டவும்...
இதுவோ, அந்த ஆசிரியர் சொன்ன முன்பாதி வார்த்தைகளோ எதுவும் அக்னியின் கருத்தில் பதியவில்லை.
அவளது உள்ளமெல்லாம் மகனின் எதிர்காலத்தை நினைத்தே குமுறிக்கொண்டிருந்தது.
மனைவியின் நிலையை உணராமல் ஆதி, “மகன் விஷயத்தால அவங்க கொஞ்சம் disturb-ஆ இருக்காங்க. It's okay, நாங்க கிளம்பறோம்…” என்றவனின் மிடுக்கான தோரணையில், உடல் குழைய, வாயெல்லாம் பல்லாக இருவரையும் வழியனுப்பி வைத்தார் அந்தத் தலைமை ஆசிரியர்.
வெளியே வந்ததும், “உள்ளே என்ன நடந்தது ஆதி? அந்த மிஸ்க்கு எதுக்கு வேலை போச்சு?” எனச் சீற்றத்துடன் கேட்ட மனைவியின் வார்த்தையை அலட்சியம் செய்தவனாக,
“இங்க வச்சு இப்படிக் கத்திப் பேசறது என்ன பழக்கம் சாகரி? வீட்டுக்கு வா. பேசிக்கலாம்…” என்றவன், தான் வந்த இருசக்கர வாகனத்தை இயக்க...
கணவனிடம் பேச வேண்டுமே என்ற நிலைப்பாட்டில், வேறு வழியில்லாமல் அவன் பின்னால் அமர்ந்தவளின் சிந்தனையெல்லாம் ஒரே இடத்தில் சிக்கிக்கொண்டது.
‘இப்படியான சாபம் என் மகனைத் தொடரக் கூடாதுன்னு தான் நான் ஓடி ஒளிந்தேன். கடைசியில் அதுவே நடந்துடுச்சே… இல்ல… இதைத் தொடர விடக்கூடாது.’ என முடிவெடுத்தவள்,
“ஆதி, வண்டியை நிறுத்துங்க. நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்க.
அவனோ அதைக் காதிலேயே வாங்காமல் செல்ல,
“உங்க கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்… வண்டியை நிறுத்துங்க…”
“வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம் சாகரி…” என்ற கணவனின் பதிலில் ஆத்திரம் மேலிட,
“முதல்ல வண்டியை நிறுத்துங்க. அங்கே போய்ப் பேசினா மட்டும் நீங்க என் பேச்சைக் கேட்கப் போறீங்களா? அவனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க. அது அவனுக்கு நல்லது இல்ல ஆதி. அதுவும் இல்லாம, குழந்தை எதிரே நாம சண்டை போடுற விஷயமெல்லாம் அவனின் மனநிலைக்கு ஆரோக்கியமானது இல்ல. நான் பேசணும்… நிறுத்துங்க.” என்றவளின் அதிகாரக் குரலுக்கு வண்டியை நிறுத்தியவன்,
“அப்ப நீ பேசுற நிலையில இல்ல… என் கிட்ட சண்டை போடுற மனநிலையில் இருக்க. அப்படித்தானா?” எனக் கேட்க,
“ஆமா… அப்படித்தான்.” என்றவள்,
“நீங்க செய்தது தப்பு ஆதி. அந்தப் பொண்ணு வயித்துல அடிச்சிருக்கீங்க. நம்ம யுவனின் மேலையும் தவறு இருக்கு. அவனைக் கண்டிங்க. அதை விட்டுட்டு அங்கே போய் அவங்களை மிரட்ட… நீங்க என்ன ரவுடியா?”
“நான் ரவுடி இல்ல. ஆனா நான் இப்படித்தான். யுவனை அடிக்க அவங்க யாரு?”
“அவங்க அவனோட கிளாஸ் மிஸ். தப்பு செய்தா அடிப்பாங்க தான்.”
“தப்பே செய்திருந்தாலும், அவனைக் கண்டிக்க அவங்க யாரு… இதுல என் பிள்ளைய அடிச்சிருக்காங்க. என் பையன் எப்படியெல்லாம் அழுது துடிச்சிருப்பானோ… அதான்.”
“அவன் உடம்புல எந்தத் தழும்பும் இல்ல ஆதி. அவங்க சும்மா மிரட்டித்தான் இருக்காங்க.”
“போதும் சாகரி. இதோடு இந்தப் பேச்சை விடு. என்னைப் பொறுத்தவரை, என் பிள்ளையை அவங்க மிரட்டக் கூடாது. அவ்வளவுதான். அப்புறம் என்ன சொன்ன? தழும்பு இல்லையா?
அப்படி மட்டும் யுவனுக்கு ஏதாவது நடந்திருந்தா… உயிரோட அங்கே இருக்கிற எல்லாத்தையும் ஸ்கூலோடு கொளுத்தியிருப்பேன்…”
என்று சிங்கத்தின் கர்ஜனை போல விழிகள் பளிச்சிடச் சொன்னவனைக் காணவும், அக்னியின் முதுகுத்தண்டு சில்லிட்டது.
“வேணாம் ஆதி. நீங்க இப்படி நடந்துக்கிறது யுவனோட எதிர்காலத்தையே அழிச்சிடும். நீங்க செய்யுற சப்போர்ட் எல்லாம் அவனைத் தப்பு செய்ய வழிவகுக்கும். முதல்ல பொய்ல ஆரம்பிக்கும். பிறகு யாரையும் மதிக்க மாட்டான், திருடுவான், மறைப்பான். அப்படியே நாளைக்கு அவன் பொறுக்கியா மாறவும் வழி இருக்கு…” என முழுமையாகத் தான் சொல்ல வந்ததை அக்னி முடிப்பதற்குள்… அவளை அறைந்திருந்தான் ஆதி.
“ஏய்… ச்சீச்சீ… வாயை மூடு! உன்னைக் கொன்னுடுவேன். யாரைப் பார்த்துப் பொறுக்கியாப் போவான்னு சொல்ற? ஒரு பெத்த தாய் தன் பிள்ளைக்கு இப்படியெல்லாம் சாபம் கொடுக்க மாட்டா. போதும்... இதோடு நிறுத்திக்க. எப்போ பார்த்தாலும் அவனுக்கு நல்லது செய்றேன்னு சர்க்கஸ்காரி மாதிரி யுவனை அடக்கியே வச்சிருக்க.
இனி யுவனைப் பத்தி ஒரு வார்த்தை பேசக் கூடாது. உன் குரலைக் கேட்கவே எனக்கு எரிச்சலா இருக்கு. எப்போ பார்த்தாலும் நச்சு நச்சுன்னு… உனக்கு வாய் வலிக்காதோ என்னமோ. எனக்குக் கேட்டுக் கேட்டு காது வலிக்குது…” எனத் தணலை வாரி இறைத்தவன், மனைவியைப் பற்றி அக்கறையே இல்லாமல் பாதி வழியிலேயே அவளை விட்டுச் சென்றான்.
அடித்த அடியை விட… கணவன் கொட்டிய தணலின் வெப்பம் தாங்காமல் துடிதுடித்து... தனித்து நின்றாள் அக்னிசாகரி.