தூத்துக்குடி என்றாலே கடலும் துறைமுகமும் மட்டுமல்ல... அந்நகரின் தொழில் உலகில் சில பெயர்கள் உச்சரிக்கப்படும்போதே, அந்தப் பெயர்களுக்குள் ஒரு தனிக் கம்பீரம் ஒலிக்கும். அப்படிப்பட்ட பெயர்களில் முதன்மையானது- “நாதன்” குழுமம். அதன் தலைவர்-தர்மாதித்தன்.
தூத்துக்குடியின் இளம் தொழிலதிபர். துறைமுகத்தைச் சுற்றியிருந்த Logistics, Cargo Handling, Warehousing, Shipping எனப் பல துறைகளில் இவனது குடும்பம் கட்டியெழுப்பியிருந்த சாம்ராஜ்யத்தை, தன் காலத்தில் இன்னும் பல மடங்கு விரிவுபடுத்தியவன்.
வியாபார உலகில் மட்டுமல்ல... தன் அகவாழ்விலும் நேர்மையையும் கண்ணியத்தையும்.. கடைப்பிடிப்பவன். ஆனால் இதை இவனை நெருங்கியவர்கள் மட்டுமே அறிவார்கள்.
தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு சரக்கு நகர வேண்டுமென்றால் நூறு கையெழுத்துகள் தேவைப்படலாம். ஆனால்... நாதன் குழுமத்தின் ஒரு முடிவு, அந்த நூறு கையெழுத்துகளுக்குச் சமம்.
“கடல் இவனுக்குத் தொழில் அல்ல... சாம்ராஜ்யம்.
அந்தச் சாம்ராஜ்யத்தின் ஒரே மைந்தன் — தர்மாதித்தன்.”
நல்லவர்களுக்குத் தர்மன். எதிரிகளுக்கு— ஆதி அந்தமில்லாத வீரன்.
காருக்குள் அமர்ந்ததும், இத்தனை நேரம் தன்னை ஆட்கொண்டிருந்த அதிர்ச்சியை உதறித் தள்ளி "யார் நீ? எதுக்காகப் பொய் சொல்லி என்னை ஏமாத்துன?” எனக் கேட்டவளின் குரலில் கோபம் கொப்பளித்தது.
ஆதியிடம் பதில் இல்லை. அவனது மௌனம் இவளது கோபத்தை இன்னும் தூண்ட.
“உன் பெயரே ஆதி தானா? என்னால உனக்கு என்ன ஆக வேண்டியிருந்தது?” அத்தனை கேள்விக்கும் இவளது முகம் சிவந்து, விழிகள் விரிய...
“டேய்! உன்னைத்தான் டா கேட்குறேன்! வேஷக்காரா... துரோகி...” என்றவளின் குரல் காரையே அதிரச் செய்தது.
யுவன் உறக்கத்தில் அசைய. அதைக் கவனித்தவன், எதுவுமே நடக்காதது போலக் குழந்தையின் தோளை மெதுவாகத் தட்டிக் கொடுத்தபடி வர... அவனின் நிதானம் அக்னிக்கு மேலும் வெறியேற்ற
“எப்படி எல்லாம் நடிச்சிருக்க? என்னை ஏமாத்தி இருக்க... யார் டா நீ?” இம்முறை உச்சஸ்தாயியில் கத்தவும்,
இவன் தன் குரலை உயர்த்தாமல் “நிர்மல்... You go fast.” என்று தன் PA-வுக்கு உத்தரவிட. வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த நிர்மல் சூழ்நிலையை உணர்ந்து, வேகத்தை அதிகரித்தான்.
“ஷ்ஷ்... எதுக்கு இப்படித் தொண்டை தண்ணி வத்துற அளவுக்குக் கத்துற?” இவளை பாராமலே கேட்டவன் “எனக்குச் சத்தம் பிடிக்காது. யுவன் முழிச்சுக்கப் போறான்.” என்றவன் சில நொடி அமைதிக்குப் பின் மனைவியை நோக்கி திரும்பி “இத்தனை நாள் நான் யாருன்னு தெரியாம தான இருந்த?” எனக் கேட்டவனை இவள் வெறிக்க.
“இன்னும் கொஞ்சம் நேரம் அமைதியா வா. வீடு வந்ததும்... உனக்கு நான் யாருன்னு... தானாவே தெரிஞ்சிடும்.” என்றவனின் உதட்டில் மெல்லிய புன்னகையின் சாயல்
அவனின் ஏளனத்தில் அக்னியின் கோபம் ஒரு கணம் வார்த்தைகளை இழக்க. “அமைதி... அமைதி...” என முணுமுணுத்து தன்னைத்தானே அடக்கிக் கொள்ள முயல.
ஆனால்.. பாவம்.. பெண்ணவளுக்குத் தெரியாது. அடுத்தச் சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளப் போகும் உண்மை, இவள் இதுவரை அறிந்திருந்த உலகையே தலைகீழாக மாற்றப் போகிறது என்று.
பழைய காலத்து வீடு என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில், இன்றைய நவீன மாளிகையின் பளபளப்பும் இல்லாமல். இரண்டுக்கும் இடைப்பட்ட அழகோடு, சுற்றிலும் பரந்த தோட்டத்துடன் கம்பீரமாக நின்றிருந்த அந்த வீட்டின் முன் கார் வந்து நிற்க.
சுவாதினமாகத் தன் இயல்பில் இறங்கிய ஆதி, யுவனைத் தோளில் சுமந்தபடி தன் வேக எட்டுகளுடன் உள்ளே நுழைந்து. மகனுக்குரிய அறையில் யுவனை மெதுவாகப் படுக்க வைத்தான்.
விமான நிலையத்திலேயே கணவனுக்குக் கிடைத்த வரவேற்பில் அதிர்ந்து போயிருந்த அக்னியை, காரில் அவன் காட்டிய அலட்சியம் உள்ளுக்குள் சுக்குநூறாக உடைத்திருக்க. தற்போது... ‘வீடு’ என அழைக்கப்பட்ட அந்த மாளிகையைப் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது. மெல்ல... விருப்பமின்றி... அதன் உள்ளே காலடி எடுத்து வைத்தவளை ஆள் அரவமற்ற அந்தப் பிரம்மாண்டமான வரவேற்பறையே, இவளை வரவேற்க. இருபுறமும் வளைந்து மேலே சென்ற படிக்கட்டின் ஒன்றில் யுவனைத் தூக்கிக்கொண்டு மேலே ஏறிக்கொண்டிருந்த கணவனைப் பார்த்தபடியே நின்ற அக்னியின் உள்ளம் திடீரென வலித்தது.
அழையா விருந்தாளி போல... தன் கணவனின் வீட்டிலேயே தான் நின்றிருப்பதை அந்த நொடி இவள் உணர்ந்த அதே நேரம் இவளது பார்வை படிக்கட்டுகளின் கீழே செல்ல... அங்கே... இருபுறமும் வளைந்த படிகளுக்கு நடுவே, நடுநாயகமாக ஒரு பிரம்மாண்டமான புகைப்படம் மாட்டப்பட்டிருக்க.. அந்தப் புகைப்படத்தில்...
இவள் இதுவரை அறிந்திருந்த ‘ஆதி’ இருந்தான் கூடவே அவனது தோளில் கைபோட்டு, உரிமையோடு அவனருகில் நின்றிருந்த இன்னொருவனைக் கண்ட நொடி அக்னியின் தேகம் நடுங்கியது. பாதத்தின் கீழே பூமி நழுவ இவள் ஸ்தம்பித்து நின்றது ஒரு நொடி தான்.. அடுத்த நொடி... இவளுள் ஏதோ வெடிக்க. அருகிலிருந்த பூஜாடியை எடுத்து தாக்கவும்
"சடாக்!" புகைப்படம் சிதற... அதன் எதிரே மேஜையிலிருந்த இரண்டு யானைத் தந்தங்களையும் இவள் ஓங்கி அடித்து நொறுக்கவும்.
சத்தம் கேட்டு வேலையாட்கள் ஓடி வந்தனர்.. உள்ளே வந்த நிர்மல், சூழ்நிலை புரிந்து எல்லாரையும் வெளியே அனுப்ப வேலையாட்கள் தயக்கத்துடன் வெளியேறவும்.
இதை எதையுமே அக்னி உணரவில்லை. அவளது கண்களுக்கு முன்னால் அந்தப் புகைப்படத்திலிருந்த முகம் மட்டுமே ஆக்ரமிக்க உடைந்து கிடந்த கண்ணாடித் துண்டை கையில் எடுத்தவள் “சாவுடா... சாவு!" கோபம் மிகுந்த கலந்த குரலில் அந்தப் புகைப்படத்தில் இருந்தவனின் முகத்தில் ஓங்கி ஓங்கி குத்தியதில் கண்ணாடிச் சில்லு புகைப்படத்தைக் கிழித்ததோடு இவளது உள்ளங்கையையும் கிழிக்க ரத்தம் கொட்டியது.. கையின் ரணம் கூட இவளின் கருத்தில் பதியாமல் போனது
“மேம்... கொஞ்சம் அமைதியா இருங்க...” என்ற நிர்மலின் குரல் இவளது செவிகளுக்குள் செல்லவே இல்லை.
அவளது கையில் அதீத ரத்தத்தைப் பார்த்ததும் பதறியவன்
“பாஸ்...” என அழைத்தபடி மேலே காண...
சத்தம் கேட்டு கீழே வந்த தர்மாதித்தன் “என்ன சத்தம் நிர்மல்?” எனக் கேட்டபடி படிகளில் இறங்க...
அடுத்த நொடி தன் மனைவியின் ரத்தம் சொட்டும் கையைப் பார்த்ததும் முகம் மாற “ஹேய்... ராட்சஸி! கையில ரத்தம் டி!” என்றபடி அவளிடம் விரைந்தவன் நிர்மலை நோக்கி “நிர்மல், first aid box எடுத்துட்டு வா.” எனக் கட்டளையிட்டபடி
இவன் மனைவியின் கையைப் பிடிக்க முயலவும், “ச்சீ!... என்னைத் தொடாத!” என்று கையை உதறியவளின் விழிகள் நெருப்பாய் எரிந்தது
“துரோகி!” என்றவளின் வார்த்தையில் அவன் அசையாமல் பார்க்க
“கூட இருந்தே நல்லவன் மாதிரி நடிச்சு... வஞ்சம் வச்சு என் கழுத்தை அறுத்துட்ட இல்ல?” குரல் உடைய ஒரு அடி முன்னே வந்தவள்
“எதையோ சாதிச்சுட்டேன்னு நினைக்காத!” அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டா இந்த அக்னிசாகரி!” என விரல்கள் நடுங்க சொல்லியதில்
“ம்ஹும்...” என்று மீண்டும் அதே அலட்சியபாவத்தை காட்டியவன், கையைப் பற்ற முயல
“ஏய்! சொல்றேன்ல..." என்று பின்வாங்கியவள்
“இதுவரை நீ பார்த்த சாகரி வேற! இனி.. நீ யாருன்னு தெரிஞ்ச பிறகு, உன் முன்னாடி நிக்கிற சாகரி வேற!” என்றவளின் குரலில் ஒலித்த ஒவ்வொரு வார்த்தையும் கத்தியாய் விழுந்தது.
இவன் மீண்டும் நெருங்க, “கிட்ட வராத!” கையிலிருந்த கண்ணாடிச் சில்லை உயர்ந்தியவள் “வந்தா... இதால உன்னைக் குத்திக் கொல்லவும் தயங்க மாட்டேன்!” என்று சீறிய நொடி மனைவியின் கரத்தை மின்னல் வேகத்தில் பற்றியவனின் பிடியின் அழுத்தத்தில் இவளது விரல்கள் தளர கண்ணாடிச் சில்லு கீழே விழுந்து நொறுங்கியது.
மனைவியை இழுத்து அருகிலிருந்த இருக்கையில் அமர வைத்தவன் முன் நிர்மல் first aid box-ஐ நீட்ட.. அதை ஆக்ரோஷமாகத் தட்டி விட்டவள்
“இந்த ஈனப்பிறவி வீட்டுலிருந்து எனக்கு எதுவுமே வேண்டாம்!” என்றவளின் வார்த்தை முடியவும்
இதுவரை அவனிடமிருந்த இலகுத்தன்மை முழுவதுமாக மறைந்தது, “எது பேசுறதா இருந்தாலும் பார்த்துப் பேசு, சாகரி.” எனத் தாழ்ந்து ஒலித்த குரலில் இருந்த எச்சரிக்கை இவளை சில்லிட வைத்தது
“நான் இதே மாதிரி அமைதியாவே இருப்பேன்னு நினைக்காத.” என்றவனின் கண்கள் கூர்மையாக
“உன்னை இதே இடத்துல கொன்று புதைக்கவும் நான் தயங்க மாட்டேன்" என எச்சரித்தவன் தூர விலக...
கோபம் அடங்காமல் கசப்பாய் சிரித்தவள், “ஓ... அந்தப் பொறுக்கி நாயை சொன்னதும் உங்களுக்குக் கோபம் வருதா?” வார்த்தை முழுவதுமாக முடிக்கும் முன்னே
“என் வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்துட்டு... என் தம்பியையே பேசுவியா? உன் கூட பழகின நாட்கள்ல என்னைக்காவது நான் உன்னை தப்பான பார்வை பார்த்திருப்பேனா? அவ்வளவு ஏன்.. தாலி கட்டி கணவனான பிறகும் கூட நான் உன்கிட்ட எந்த உரிமையும் எடுத்துக்கலையே. நானே அவ்வளவு கண்ணியமா இருக்கும் போது.. என் தம்பி என்னுடைய வளர்ப்பு. அப்புறம் எப்படி அவன் மட்டும் பொறுக்கியா இருப்பான்?!”
எனச் சீறியபடி இவளது கழுத்தைப் பிடிக்க அவனின் கை உயர்ந்த நொடி கரத்தைத் தட்டி விட்டுத் தன் முழு உயரத்துக்கும் எழுந்து நின்றவள்
விழிகளில் நெருப்பு மிளிர ஒரு கணம் அவனை நேராகப் பார்த்து
“என்ன சொன்ன? உன் வீடா? ஏதோ... உன் வீட்டுக்கு நானா வந்து நின்ன மாதிரி பேசுற! பொய்யா நடிச்சு... நாடகமாடி... என்னை இழுத்துட்டு வந்தது நீ! இது உன் வீடுன்னு இப்பதான் எனக்குத் தெரியும். நான் செத்து சாம்பலானாலும்... என் சாம்பல்கூட இந்த வீட்டுத் திசைப் பக்கம் ஒதுங்காது!” கண்கள் கலங்க தன் நெஞ்சில் விரல் வைத்து சுட்டி காட்டி பின் வாசலை நோக்கி கை நீட்டியவளின் குரல் மாளிகை முழுவதும் எதிரொலித்தது.
மனைவியின் வார்த்தைகளில் இருந்த வெறியைப் பார்த்தும் தர்மாதித்தன் அசையவில்லை.
“எப்படி இவ்வளவு நல்லவ மாதிரி பேசுற?” நீ இந்த வீட்டுக்கு வந்தது இல்ல...” எனக் கேட்டு நக்கலாகச் சிரித்தவன்,
“நீ என் தம்பிக்கிட்ட பணம் கேட்டு மிரட்டல?" பணத்துக்காக எதையும் செய்யத் தயங்காதவ நீன்னு எனக்குத் தெரியும்.” பெண்ணவள் முகம் வெளிறி
உறைந்து நிற்க
“இப்ப மட்டும் என்ன... ஏகத்துக்கும் நல்லவ மாதிரி பேசுற? உன் வேஷம் கலைஞ்சிடுச்சு, சாகரி. அப்புறம்... நான் உன்னை ஏமாத்தினேன்னு என்ன பேச்சு?” ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாய் உச்சரித்தவனின் பார்வை அவளை ஊடுருவி பேச்சை சற்றே நிறுத்தில்... இவள் அமைதியாகப் பார்க்க.
“நான் உன்னைக் காதலிக்கிறேன்னு எப்பவாவது சொல்லியிருக்கனா? தாலி கட்டுற நொடியில்கூட உன் விருப்பத்தைக் கேட்டுத்தான் கட்டினேன்.” என இறுமாப்புடன் மொழிந்தவன் சில நொடி அமைதிக்குப் பின்
“உண்மையிலேயே உன்னை ஏமாத்தினேன்னு சொல்ற அளவுக்கு... நான் செய்த தப்பு ஒண்ணே.. ஒண்ணுதான். என்னைப் பற்றிய உண்மையை மட்டும் உன்கிட்ட மறைச்சேன். அதுவும் ஒரு குத்தமா?” என மெல்லிய புன்னகையுடன் நையாண்டி பேசவும்
நாணேறிய வில்லாய் நிமிர்ந்தவள், “உண்மைதான்...” எனக் கசந்த குரலில் ஒற்று கொண்டவள்
"உன் தப்பு இங்க எதுவும் இல்ல... அதே சமயம் நான் உனக்கு நல்லவளா... கெட்டவளா என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.” குரல் இறுக சொன்னவள்
“எனக்கு என் பிள்ளையை மட்டும் கொடு... நான் போறேன்.” துக்கத்தை விழுங்கி உதிர்த்த வார்த்தைகளை கேட்டதும் தர்மாதித்தனின் புருவம் உயர
“எது... யுவனா?" உன் பிள்ளையா? அவன் இந்த வீட்டு வாரிசு. எங்க வர வேண்டியவனோ... அங்கே வந்து சேர்ந்துட்டான்.” என்றவனின் குரல் உரிமை கொள்ள, அக்னியின் நெஞ்சம் அதிர்ந்தது.
“நான் ஒரு அப்பாவா அவன் மனசுல பதிஞ்சு... கடைசிவரை அவன் வாழ்க்கையில நான் நிலைக்கணும்னுதான் உன் வீட்டுக்கு வந்து பொய்யா நடிச்சேன்.
நீ என் தம்பிக்குச் செய்த துரோகத்தை... நான் உனக்குத் திருப்பிக் கொடுத்தேன். என்னோட கணக்கு முடிஞ்சது. நீ போறதா இருந்தா... தாராளமா வெளியே போலாம். உன்னை இங்கே இருக்க வைக்க யாருக்கும் விருப்பமில்லை. இதோ வாசல்... Out" என்றவன் எழுந்து நின்று இவளுக்கு வாசலைச் சுட்டிக்காட்ட
உள்ளம் நொறுங்கியவளாய் கணவனைப் பார்த்தவள்,
“நீ செய்யறது பாவம், ஆதி...பச்சைத் துரோகம்... என் ஆதிப் பாவத்துக்குத் துணையா போகலாமா?” கண்ணீர் துளிகள் விழிகளின் விளிம்பைத் தொட அவள் கேட்டதும், முகத்திலிருந்த இலகுத்தன்மை நொடியில் மறைய.. கால் மேல் கால் போட்டு தோரணையுடன் அமர்ந்தவன், இவளை நோக்கி
“ஹா... ஹா... உன் ஆதியா நான்?” நான் தர்மாதித்தன். என் ரேஞ்ச் தெரியுமா உனக்கு?” என தன் மார்பைச் சுட்டிக்காட்டியவனின் குரலில் பெருமிதம் தாண்டவமாட, ஏளனத்துடன் சிரித்துசற்றே முன்வந்தவன்
"The Great Industrialist’ன்னு பேர் வாங்கியிருக்கிற நாதன் குழுமத்தைப் பற்றித் உனக்குத் தெரியாதா?” எல்லாம் தெரிஞ்சவ தானே நீ?”
“என் உயரத்தை மறைச்சுட்டு... ஒண்ணுமே இல்லாத உன் வீட்டுக்கு நான் வந்ததுக்குக் காரணம் யாரு? யுவன்!... அவன் எங்க வீட்டு இளவரசன்.. என் தம்பி அர்ஜுனோட ரத்தம் அவன்.” என்ற நொடி வெகுண்டெழுந்தவள்
“இல்ல! இல்லவே.. இல்ல.." என அலறியவள் அங்கிருந்த இறுக்கையைப் பற்று கோலாய் பிடித்துக் கொண்டு “என்னைக்கும் யுவன் அவனோட ரத்தமாக முடியாது!” என்றவளின் குரல் கதறலாக மாறியது.
“யுவன் என் ரத்தம்! என் புள்ள! அவனுக்கு அப்பாவும்... அம்மாவும்... எல்லாமே நான் மட்டும் தான்!” நெஞ்சில் அடித்துக் கொண்டு கண்ணீர் வழிய நின்றவளின் அருகில் இயல்பாக வந்து நின்றவன்
“ச்சு... ச்சு...” தப்பா சொல்றியே, சாகரி செல்லம். நீ அம்மானா... நான் அப்பா.” ஆள்காட்டி விரலை அவள் முன் நீட்டி பிறகு அந்த விரல் மெதுவாகத் தனது மார்பை நோக்கிச் செலுத்தியவன் சிறிய இடைவெளிக்கு பிறகு முடிக்க...
அந்த இறுதி வார்த்தை இவளது நெஞ்சைத் துளைக்க நிதர்சனம் உரைக்க அந்த நொடி இத்தனை நேரம் இவளுக்குள் எரிந்து கொண்டிருந்த கோபம் கூடத் தாங்க முடியாமல் தளர்ந்து போக.. இதுவரை வராத கண்ணீர்... இந்த நொடியில்தான் அக்னியின் விழிகளிலிருந்து இறங்கியது.
அந்தக் கண்ணீர் இவள் தன் வாழ்வை இழந்ததற்காக அல்ல. தன் மகனை இழக்கப் போகிறாளோ என்ற பயத்திற்காக.
“Enough.” என்ற தர்மாதித்தனின் குரல் மீண்டும் ஓங்கி ஒலித்தது
“என் வாழ்வில் திருமணம் ஒருமுறைதான். அது உன்னோட முடிஞ்சது. அதுக்காக என் வாழ்வில் கடைசிவரை உனக்கு இடம் கிடைக்கும்னு கனவு காணாத.. பயப்படாத. அப்படியே சும்மா எல்லாம் உன்னை விட்டுட மாட்டேன். அதிக்கத்துக்கு ஆசைப்படாதன்னுதான் சொல்றேன்.” என்றதும் இவளுள் ஏதோ ஒன்று மடிய அது இவளின் விழியில் வெளிச்சமிட்டு காட்ட.. அந்தப் பார்வை ஒரு நொடியேனும் தர்மாதித்தனை தடுமாற வைத்தது
அப்படி அவள் விழிகளில் இருந்தது அழுகை மட்டுமல்ல. தன் குழந்தைக்காக உயிரையும் பணயம் வைக்கத் தயாரான ஒரு தாயின் வெறி. தன் பார்வையை விலக்கிக்கொண்டு தொண்டையைச் செருமிக்கொண்டவன்
“என் தம்பிக்குத் துரோகம் செய்த உனக்கு... என் வாழ்வில் மட்டும் இல்ல... இந்த வீட்டிலும் இடம் இல்ல. வெளியே போ.”
“என் பிள்ளையைத் தந்துடு... நான் போய்டுறேன்.." எனக் கேட்டவளின் குரல் நடுங்கியது
"அவன் உன் மகன் இல்ல. என் மகன்.. தர முடியாது.” என ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாகச் வர
“என் பிள்ளை இல்லாம நான் போக மாட்டேன்.” இந்த முறை அக்னியின் குரலில் கண்ணீரை விட உறுதி அதிகமாக ஒலிக்க.. அதை உணர்ந்த தர்மாதித்தன் சற்றே வியந்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவன்
“போலீஸைக் கூப்பிடவும் நான் தயங்க மாட்டேன்.. பிறகு எதுக்கும் நான் பொறுப்பாகவும் மாட்டேன். எப்படி வசதி?” எனக் கேட்டதில்
விளுக்கென நிமிர்ந்தவளின் தேகம் வெளிப்படையாகவே பயத்தில் நடுங்கியது.. அதிகாரம்... பணம்.. போலீஸ்... எல்லாமே தன்னைவிடப் பல மடங்கு வலிமையானவை என்பதை இவள் உணர்ந்த நொடி தன் கூட்டை இழந்த பறவையைப் போல... ஒரு கணம் இவள் நிற்க
ஆனால் அது.. ஒரே ஒரு கணம்தான்.. அடுத்த நொடி... மீண்டும் நிமிர்ந்தவளின் விழிகளில், இவளது பெயரைப் போலவே.. அணையாத அக்னி எரிய
“இதுக்கெல்லாம்... ஒரு நாள் நீ பதில் சொல்லியே ஆகணும், மிஸ்டர் தர்மாதித்தன்... சொல்ல வைப்பேன்.” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து குரலை உயர்த்தி
“இந்த அக்னிசாகரி சொல்ல வைப்பேன்! நான் முன்னயிருந்த சாகரின்னு நினைச்சுத் தப்பு கணக்கு போட்டுட்ட, தர்மாதித்தன்.” என்றவளின் விழிகளில் தற்போது கண்ணீர் இல்லை... நெருப்பு மட்டுமே ஒளிர
“உன் அதிகாரத்துக்குப் பயந்து.. இருந்த ஒரே உறவையும் இழந்து... கண்ணீர்ல கரைஞ்சு ஓடி ஒளிஞ்சவ தான். ஆனா... எப்போ யுவனை என் கையில வாங்கினேனோ... அப்பவே அந்தச் சாகரி செத்துட்டா" குரலில் உறுதியுடன் நேராக அவனது விழிகளைப் பார்த்தவள்
“இப்போ உன் முன்னாடி நிக்கிறவ... யுவராஜனோட அம்மா.. தன் பிள்ளைக்காக எதையும் துணிஞ்சு செய்யத் தயாரா இருக்கிறவ. உன்னிடம் பணமிருக்கு... அதிகாரம் இருக்கு... ஆள் பலமிருக்கு.. ஆனா... என் கிட்ட.. என் பிள்ளைக்காகப் போராடுற ஒரு தாயோட வெறி இருக்கு.. அது உனக்குத் தெரியாது.. கூடிய சீக்கிரம் தெரிஞ்சிக்குவ. பார்க்கலாம்.. இந்த இடத்துல... நீயா? நானா?" எனச் சவால் விட்டவளின் விழிகள் நெருப்பாய் எரிய..
நேருக்கு நேர் எனப் பார்த்து மொழிந்தவளின் வார்த்தைகள் மாளிகையின் அமைதிக்குள் அதிர்ந்து விழுந்த.. இவளின் குரலில் அடக்கப்பட்ட வலியோடு கலந்த அந்த நிமிர்வு... இந்தப் போரின் தொடக்கத்தை அறிவித்தது.