தென்றல் 21

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கழுத்தில் கிடந்த தாலி, கணவன் வீசிய தூக்குக்கயிறாய் இவளை நெரிக்க, “என் நேசம் எங்கே தோற்றது? அவனின் வார்த்தைகளை எப்படி வேதமாய் நம்பினேன்?” என்ற கேள்விகள் இவளது ஆன்மாவையே துளைத்தன.



பூங்கா பெஞ்சில் அநாதையாய் அமர்ந்திருந்தவளின் கையிலிருந்த ரத்தக் காயத்தின் வலியைவிட, தான் ஏமாற்றப்பட்ட வலி அக்னியை கொன்றது. தன் அத்தனை தன்னம்பிக்கையையும் ஒரு ஏமாற்றுக்காரனிடம் அடகு வைத்துவிட்டோமே என்ற சுயவெறுப்பு, இவளுக்குள் எரிமலையாய்ப் பொங்கியது.



தகுதியற்றவர் மீது நாம் வைக்கும் நேசமும்… கண்மூடித்தனமான நம்பிக்கையால் நமக்குக் கிடைக்கும் பரிசும் இதுதான். இதில் அக்னி மட்டும் விதிவிலக்கா என்ன?



அடக்கப்பட்ட கோபத்துடன் தன் கையறு நிலையை நினைத்துக் குமுறியவளாய், தன் முட்டாள்தனத்தால் கணவன் என்றானவனின் வாயிலிருந்து ஆணவத்துடன் உதித்த ஏளன வார்த்தைகள் நெஞ்சை உளியாய் குத்த, தன்மானத்தை இழந்து… அதைவிட உயிரான மகனை இழந்து… நடைப்பிணமாய் அமர்ந்திருந்தவளின் தேகம் முழுவதும் மகனை நினைத்து ஏதாவது செய்யச் சொல்லி உந்தியது.




ஆனால் என்ன செய்வாள் பெண்ணவள்? பணபலம், அதிகாரபலம், ஆள்பலம் அனைத்தையும் தன் கையில் வைத்திருப்பவர்களுக்கு முன்னால் இவளால் என்னதான் செய்துவிட முடியும்? இப்படி ஒரு நிலை வரும் என்று இன்றைய விடியல் கூட இவளிடம் சொல்லவில்லையே! ஒரு நொடியேனும் மகன் இல்லாமல் இவளால் வாழ முடியாதே… பிறகு எப்படி வாழ்வாள்? அதன்பிறகு எதற்காக இந்த வாழ்வு? ஒரு கணம், தன்னையே அழித்துக் கொள்ளும் எண்ணமும் இவளுக்குள் வந்து போனது.




இங்கு இவள் இப்படியொரு மனநிலையில் இருக்க… அங்கு ஆணின் மனமோ வெற்றிக் களிப்பில் மிதந்தது. மனைவி வெளியேறிய அடுத்த நொடி ஆணவத்துடன் கொக்கரித்த தர்மாவின் இதயமோ கணத்துப் போனது.
நெஞ்சை நீவிக்கொண்டவனின் பார்வையில், சேதமடைந்த புகைப்படத்துடன் சிதறிக் கிடந்த பொருட்களுக்கு நடுவே மனைவியின் துப்பட்டா தென்பட, அதை எடுத்தவனின் விரல்கள் மட்டும் மெல்ல நடுங்கின.



“நிர்மல்…”



“பாஸ்…”

“மேடமை வாட்ச் பண்ணு.”



“எஸ் பாஸ்.”



கையில் துப்பட்டாவுடன் மகனின் அறைக்குள் நுழைந்தவன், அங்கிருந்த இருக்கையில் அதை வீசிவிட்டு யுவனை நெருங்கினான். அவனது தலையைக் கோதிய கரங்கள், காய்ச்சலால் உண்டான வெப்பத்தை உணர்ந்ததும்…



“ஓ மை காட்…” என முணுமுணுத்தவன், உடனே மருத்துவரை அழைக்கச் சொன்னான்.



இடமாற்றமும் விமானப் பயணமும் சேர்ந்து உண்டான சாதாரணக் காய்ச்சல் என மருத்துவர் கூறிய நொடி முதல், மகனை விட்டு இம்மியும் விலகவில்லை தர்மாதித்தன். தனக்கு மனைவி வேண்டாம் என்று மனம் எவ்வளவுதான் பிடிவாதம் பிடித்தாலும்…



'ஆனா… இவனுக்கு நான் அநியாயம் செய்யறனோ?' என்ற எண்ணம் மட்டும் இவனின் நெஞ்சை இறுக்கிப் பிடித்து மூச்சை முட்ட வைத்தது. இரவு உணவு முடிந்து, மருந்தின் உபயத்தால் உறங்கிக்கொண்டிருந்த மகனை நெஞ்சில் கிடத்தியபடி கட்டிலில் அமர்ந்திருந்த நேரம், நிர்மலின் கைப்பேசி அழைப்பு வரவும்…
“பாஸ்… மேம் ரொம்ப நேரமா நம்ம வீட்டை நோட்டம் பார்த்துட்டு இருக்காங்க.” என்றவனிடம்,



“ஓ… I see.” என்றவன், நேரத்தைப் பார்க்க, இரவு 9.30 என்று காட்டியது.



“இப்பதான் வந்தாளா?”



“எஸ் பாஸ். முன்னாடி பார்க்கில் இருந்தாங்க. இப்பதான் வீட்டுப் பக்கம் வந்தாங்க. ஆனா முன் கேட் பக்கம் வராம… ரொம்ப நேரமா சுற்றிச் சுற்றி காம்பவுண்டையும் பின்னாடி கேட்டையும் பார்த்துட்டு இருக்காங்க.”



“வாட்! ridiculous... Gate watchman-ஐ எதையும் கண்டுக்க வேண்டாம்னு சொல்லு. நாய்களைக் கட்டிப் போட சொல்லு. முன் வாசல் கதவை லாக் பண்ண வேண்டாம். அங்க எந்த guards-ம் இருக்கக் கூடாது. எல்லாரையும் போகச் சொல்லு. என் அறையைத் தவிர வீட்ல எங்கையும் லைட் எரியக் கூடாது. எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணச் சொல்லு.” எனக் கட்டளையிட்டபடியே பரபரப்புடன் iPad-ஐ தேடி எடுத்தவன், அதிலிருந்த CCTV footage-களைப் பார்க்க ஆரம்பித்தான்.




அக்னிசாகரி ஒன்றும் முட்டாள் இல்லை. ஆனால் இன்று… மகன் மீதான பாசத்தில் முட்டாளாக மாறியிருந்தாள். இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதேபோல், ஒருவர்மீது வைத்த பாசமும் பயமறியாது. இதோ… மகனைப் பிரிந்திருக்க முடியாத அசட்டுத் தைரியத்தில், முதலும் கடைசியுமாக ஒரு வாய்ப்பாக வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைய முயல்கிறாள். அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் இவள் இல்லை.




நேரம் நகர்ந்து, நடுநிசியை நெருங்கியபோது… ஆள் அரவமற்ற அந்த மையிருட்டில், மதிலை ஒட்டி சாலையிலிருந்த மரத்தைப் பற்றியேறி மதிலை அடைந்த அக்னி, வீட்டை நோக்கிப் பார்க்க… ஒரே ஒரு அறையில் மட்டும் விளக்கு எரிந்தது.




புது இடத்தில் மகன் பயப்படக் கூடாது என்பதற்காக அது அணைக்கப்படாமல் இருப்பதாக நினைத்தவள், மெல்ல மதிலின் மேல் தவழ்ந்து, அங்கிருந்த மற்றொரு மரத்தின் வழியே கீழிறங்கியவளின் கையிலும் காலிலும் அத்தனை சிராய்ப்புகள்.




கொஞ்ச நேரம் நின்று யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்தபடி, தோட்டத்தின் வழியே இவள் அந்த அறைக்குச் செல்ல வழி தேட… காய்ச்சலில் இருந்த மகனைத் தன் அறையிலேயே படுக்க வைத்திருந்த தர்மாவின் படுக்கையறை இருக்கும் பால்கனி வழியாகத் தோட்டத்திற்குச் செல்லும் படிகள் இருக்க, அதைக் கண்டு வேகமாகப் படியேறி அறையினுள் வந்தவள், உறக்கத்தில் கிடந்த மகனைப் பார்த்த கணமே அவனை அள்ளித் தூக்கிக்கொண்டவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி, தான் வந்த வழியே திரும்ப எத்தனிக்க…




“உனக்கு நேர் வழியே தெரியாதா?”
திடீரென ஒலித்த கணவனின் குரலில் தேகம் தூக்கிவாரிப் போட்டது. இவள் நிமிர்ந்து பார்க்க… பால்கனி வாயிலிலேயே தன் முழு உயரத்திற்கும் நின்றிருந்தான் தர்மா.



“உன்னைத்தான் கேட்கிறேன்.”



“உங்களுக்குப் பதில் சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.”



“பெருசா சவால் விட்டுட்டுப் போன… இப்ப மதில் ஏறிக் குதிச்சு… இப்படித் திருடி மாதிரி வரியே. உனக்கு வெட்கமா இல்லையா?”



“திருடுறவங்கதான் முகத்தை மறைப்பாங்க. யுவன் எனக்கு உரிமையானவன். அவனைக் கூட்டிட்டுப் போகத்தான் வந்தேன்”




“என்னை ஏமாத்திட்டு யுவனோட நீ இங்கிருந்து போய்டுவன்னு நினைக்கிறியா?”



“முடியும்”



“ஓ… சபாஷ். யார் கொடுத்த தைரியம் இது?”



“என் மகன் கொடுத்த தைரியம். என் மகனை விட்டுத் தர முடியாததால் வந்த தைரியம்.” இவளது ஒவ்வொரு வார்த்தையும் அவன் ஆணவத்தின் மீது விழுந்த சாட்டையாய் மிளிர,



“என்னை வெல்ல முடியும்னு நினைக்கிறியா?”



“நிச்சயமா. உன்னை நான் ஜெயிப்பேன். ஆனா உன் அதிகாரத்தையும்… ஆள்பலத்தையும் தான் என்னால நெருங்க முடியாது. ஆனா நான் அக்னிசாகரி. காற்றாற்று வெள்ளமாய் நான் வீறுகொண்டு பிரவாகம் எடுத்தா, எப்படிப்பட்ட கோட்டையையும் அரித்து மண்ணோடு மண்ணாக்கிடுவேன். காலம் கடைசி வரைக்கும் உனக்கு துணையிருக்காது. நிச்சயம் ஒருநாள் என் வசம் மாறும்.



எல்லாத்துக்கும் மேல எனக்கும் சட்டம் தெரியும் சார். குழந்தை, குறிப்பிட்ட வயது வரைக்கும் கட்டாயம் அம்மாகிட்டதான் இருக்கணும். உங்களுக்கு ஒன்று தெரியுமா? நீங்க எனக்குக் கணவன் என்ற பந்தத்துலதான் யுவன் உங்களுக்கு மகன் என்ற உறவு. அந்த உரிமை நான் உங்களுக்குப் போட்ட பிச்சை. இனியும் அந்த இடத்தை உங்களுக்கு நான் தருவேன்னு கனவுல கூட நினைக்காதீங்க.” என்றவள், கணவனைத் தாண்டிச் செல்ல முற்பட…



“இப்பவும் நீ அடங்கலயே... எவ்வளவு திமிர் உனக்கு!” எனக் கர்ஜித்தவன் இவளைப் பற்றியிழுக்க எத்தனிக்க, லாவகமாக அவனிடமிருந்து விலகியவள் குழந்தையுடன் அவசரமாகப் படியிறங்கி ஓடவும்



“You idiot!” என முணுமுணுத்தவன், “Guards! Catch her!” என்று கட்டளையிட…



அடுத்த நொடி நான்கு திடகாத்திரமான ஆண்கள் அக்னியைச் சூழ்ந்தவர்கள்... பாஸின் கட்டளையை மீறி யுவனை இவளிடமிருந்து பறிக்க முயன்றபோது, அந்தத் திடீர் தாக்குதலில் முதலில் தடுமாறியவள்… அடுத்தக் கணமே மகனை மட்டும் விடாமல் இறுகப் பற்றிக்கொள்ளவும், இவளது நல்ல நேரம்… மருந்தின் உபயத்தால் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த யுவனுக்கு எதுவும் புரியவில்லை.



அவனைப் பறிக்க முயன்ற கரங்களால் வலி ஏற்பட்டபோது மட்டும் தான் மகன் சிணுங்கினான்… அதை உணரும் நிலையில் கூட அக்னி இல்லை. அவளது சிந்தனை முழுவதும் ஒன்றே ஒன்றுதான் 'தன் மகனை விடக்கூடாது'.



நான்கு ஆண்களுடனும் தனியொரு பெண்ணாக இவள் போராடுவதைப் பார்த்த தர்மா, ஒரு கணம் பேச்சிழந்து நின்றவன், அடுத்த நொடியே கோபம் வெடிக்க…



“You bitch! Move all! இவளைப் போக விடாம சுத்துப் போடத்தான டா சொன்னேன்… மேலே கை வைக்கச் சொன்னேனா? யார் மேல கை வச்சிங்க?!” என்றவனது கர்ஜனையில் இரவு நேரத் தோட்டமே கிடுகிடுத்தது.



யாரோ ஒரு பெண்ணை இந்த நிலையில் கண்டாலே தர்மா அமைதியாக இருக்க மாட்டான்… ஆனால் இன்று… அவனது கையால் தாலி வாங்கி, பேருக்கு மனைவியாக வந்தவளைத் தொட்டிருக்கிறார்கள்... அந்த நிதர்சனம் அவனுள் வேரூன்ற, மேலும் கோபத்தை எழுப்பியது.



நான்கு பேரும் விலகிய பிறகும், சூழ்நிலையை உணராமல் விழிகளை இறுக்க மூடியபடி தேகம் நடுங்க, மகனை நெஞ்சோடு புதைத்துக்கொண்டிருந்தவள்,



“நான் என் பிள்ளையைத் தர மாட்டேன்…” என முணுமுணுத்தபடி அசையாமல் நின்ற நேரம், யுவன் அழ ஆரம்பிக்க…



மனைவியை நெருங்கியவன் குரலை மென்மையாக்கி,
“எதுவும் பயமில்ல சாகரி… Now you are okay.” எனக் கூற… இவள் அசையவில்லை.



“யுவன் அழறான் பார்… ஒண்ணும் இல்ல. அவனை என்கிட்ட குடு”
இவள் தான் எதையும் உணரும் நிலையில் இல்லையே. இவளது உடல் மட்டும் பயத்தில் உறைந்து நிற்பதைப் பார்த்தவனுக்கு உள்ளே ஏதோ உடைந்தது.



“யுவனை உன்கிட்டயிருந்து பிரிக்க மாட்டேன் ம்மா… இது சத்தியம். அவன் அழறான் பார்… குடு”
அந்தக் குரல் இவளைச் சென்றடைந்த கணம்… இவளது உடலிலிருந்த மொத்த பலமும் வடிய, கணவன் மீதே மூர்ச்சையாகச் சரிந்தாள் அக்னி.



எதிர்பாராத மனைவியின் சரிவில் இருவரையும் தாங்கியபடி அவன் தரையில் மண்டியிட… அப்போதுதான் மனைவியின் கோலத்தை முழுமையாகப் பார்த்தான் தர்மாதித்தன்.
இதுவரை இவள் அவனை நோக்கியே நின்றதால், இவளது முதுகு அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் தற்போது நடந்த போராட்டத்தில் இவள் அணிந்திருந்த சுடிதாரின் வலது கைப்பகுதியும் முதுகுப்பகுதியும் கிழிந்து தொங்க… அதில் வெளிப்பட்ட முதுகைக் கண்டவனுக்கு ரத்தம் கொதித்தது.



“நிர்ம்ம்ம்ம்ம்மல்ல்ல்!”
அவனது பெருங்குரலில் நிர்மலுக்கே தேகம் நடுங்கியது.



“பாஸ்…”



“யுவன் உன் பொறுப்பு. கவனமா பார்த்துக்க.” என்றவன், மகனை அள்ளி நிர்மலிடம் கொடுத்தான்.



பின்னர், தன் இரவு உடையின் மேலிருந்த ஆடையைக் கழற்றி மனைவிக்கு அணிவித்து, பதட்டத்துடன் கன்னம் தட்டி, “சாகரி… சாகரி…” என எழுப்ப முயல… இவளிடம் அசைவே இல்லை.



அவனின் பார்வை மனைவியின் முகத்திலிருந்து விலகவில்லை. ஒரு சில நொடிகளுக்கு முன்பு வரை தன்னை எதிர்த்து நிமிர்ந்து நின்ற பெண்… தற்போது தன் கைகளுக்குள் உணர்வற்றவளாய் கிடப்பதைப் பார்த்தவனின் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று துடித்தது.



“You scoundrel…” எனக் கர்ஜித்தவனின் குரல் அதீத கோபத்தில் நடுங்கியது.



“நிர்மல்… எவனும் நாளைய விடியலைப் பார்க்கக்கூடாது. டேமிட்… எல்லாரையும் இப்பவே சுட்டுத் தள்ளு. என் சாகரி மேல கை வச்சவன் எவனும் உயிரோட இருக்கக் கூடாது!” என்றவனின் குரல் அடுத்த நொடியே மீண்டும் கட்டளையாக மாறியது.



“கார் எடுக்கச் சொல்லு. டாக்டருக்கு போன் பண்ணி கெஸ்ட் ஹவுஸ் வரச் சொல்லு. Move! நான் திரும்பி வர்ற வரை யுவன் உன் பொறுப்பு.”



மனைவியைக் கையில் அள்ளிக்கொண்டு காரை நோக்கி விரைந்தவன்… எதிர்ப்பட்ட அந்த நான்கு பேரில் ஒருவனை எட்டி உதைத்துவிட்டே நடந்தான்.



நிர்மல் அவனது பதட்டத்தைப் புரிந்துகொண்டு, அக்னியின் துணிப்பையையும் தேவையான அனைத்தையும் எடுத்து வைக்க… மனைவியைத் தன் நெஞ்சில் தாங்கியபடி காரில் அமர்ந்தவனுக்கு, உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது.



தம்பியின் விபத்துக்குப் பிறகு இப்படியொரு மூச்சுத்திணறலை இன்று தான் மீண்டும் உணர்கிறான்.
தாய், தந்தையின் இழப்பைக்கூட விதி என்ற பெயரில் சகித்துக்கொண்டவன்… இன்று தன் கரங்களுக்குள் கிடக்கும் இவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற ஒரே எண்ணத்தில், மூச்சுக்குழாயை யாரோ இறுக்கிப் பிடித்ததுபோல் சுவாசிக்கவே திணறினான்.



பேச்சு மூச்சின்றித் தன் அணைப்பில் கிடக்கும் மனைவியைப் பார்த்தபடி இருந்தவனுக்குள், குற்றவுணர்வு என்னும் தீ கொழுந்துவிட்டு எரிய… அதில் தன்னையே பொசுக்கிக்கொள்ளத் தயாராக இருந்தான்—

இந்த அக்னிசாகரியின் அரசன்.​
 
Back
Top