மதிய நேர உச்சி வெயிலின் வெப்பம் தன் முகத்தைத் தாக்காதபடி, ஜன்னல் கண்ணாடிக்கு அப்பால் தொலைவில் தெரிந்த கடலை வெறித்தபடி நின்றிருந்தான் தர்மாதித்தன்...
இரவு மனைவியை அள்ளிக்கொண்டு வந்த நொடி முதல் தற்போது வரை ஒரு நொடியும் கண் மூடவில்லை அவன்... மூட முடியவில்லை என்பதுதான் உண்மை.
நேற்று இரவு... காரின் பின்னிருக்கையில், மனைவி தன் கைகளில் அந்த நிலையில் கிடந்ததைப் பார்த்த நொடி, தர்மாதித்தனின் தேகமே பயத்தில் நடுங்கிப் போனது.
உடல் முழுவதும் வியர்வையில் நனைய... ‘My angel...’ என்ற முணுமுணுப்புடன் மனைவியை அள்ளியபோது, உயிரோடு இருக்கிறாளா என்ற அச்சமே அவனை மூச்சுவிட அனுமதிக்கவில்லை.
“இங்க பார்... இங்க பார்... சாகரிஈஈ... என்னைப் பாருடி...” என்று கன்னம் தட்டி... முகம் வருடி... நெஞ்சை நீவி... தலை கோதி என அழைக்க... எதற்கும் அவள் அசையவில்லை. அந்த நொடி அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.
மனைவியை நெஞ்சோடு புதைத்துக்கொண்டவன், தன் கண்களில் வழிந்த கண்ணீரைக்கூடத் துடைக்க மறந்தான்.
இவள் தனக்கு யார்? இதுவரை இந்தக் கேள்வியை அவன் தனக்குள் கேட்டதே இல்லை.
ஆனால் இன்று... ‘என் மனைவி’ என்ற நிதர்சனம் உரைக்க... இந்த ஒரு உறவுக்குள் எல்லாவற்றையும் அறிந்து கொண்டான். இந்த இரவு இவளை இழந்துவிடலாம் என்ற எண்ணம் வந்தபோது, ‘மனைவி’ என்ற வார்த்தையைத் தாண்டி ஏதோ ஒன்று அவனுள் உயிரோடு துடிக்க வைத்தது...
அவளது மூச்சு சீராக இருக்கிறதா என்று மீண்டும் மீண்டும் பார்த்தவன், மனைவியின் விரல்கள் அசைகிறதா என்பதையும் கவனிக்கத் தவறவில்லை. அவளது முகத்தில் இருந்த ஒவ்வொரு கீறலும் இவன் நெஞ்சில் விழுந்த காயமாகவே இருந்தது.
பெண்களின் தைரியமும் நிமிர்வும் தர்மாதித்தனுக்கு எப்போதுமே பிடிக்கும்... உள்நாடாக இருந்தாலும், வெளிநாடாக இருந்தாலும் தன் துறையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக நின்று சாதிப்பதைப் பார்க்கும்போது அவனுக்குள் ஒரு பெருமிதம் பிறக்கும்.
அதிலும் சாகரி... கேட்க வேண்டிய இடத்தில் தன்னையே கேள்வி கேட்டு நிமிர்ந்து நிற்பவள்... அவளை அப்படித்தான் அவன் எத்தனையோ முறை ரசித்திருக்கிறான். இன்று கூட, மகனுக்காகத் தன்னையே எதிர்த்து நிற்பேன் என்று சொன்னாளே...
பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவன் அல்ல அவன். தன் கீழ் பணிபுரியும் பெண்களையும் ஆண்களுக்குக் கொடுக்கும் அதே மரியாதையோடு நடத்துபவன்.
ஆனால்... இன்று... இந்த இரவு தன் மனைவியை இப்படி ஒரு நிலையில் அள்ளிக்கொண்டு வந்தது யார்? வேறு யாருமல்ல... தானே...
அந்த உண்மை அவனையே சிதைத்தது.
தனது தனிப்பட்ட கெஸ்ட் ஹவுஸிற்கு வந்ததும், மனைவியைக் கட்டிலில் படுக்க வைத்து, அவளுக்குத் தானே உடைகளை மாற்றிவிட... அந்த நேரத்தில்தான் அவனுடைய அனுமதியுடன் உள்ளே வந்த குடும்ப மருத்துவர், அக்னியைப் பரிசோதித்ததில் அவளது நிலையைப் பார்த்ததும் முகம் இறுகியது.
“Dehydration ஆகியிருக்கு. இவங்க எதுவும் சாப்பிடலையா? கழுத்திலும் கையிலும் நகக் கீறல்கள் இருக்கு... யாராவது இந்தப் பொண்ணை abuse செய்ய முயற்சி பண்ணாங்களா?” என்று கேள்விகள் அவனை நோக்கி அடுத்தடுத்து விழ...
“ஆமா... நீ எப்ப இந்தியா வந்த? யார் இந்தப் பொண்ணு?” என்று கேட்க,
தர்மாதித்தன் தயக்கமின்றி, “My wife, அங்கிள். இன்னைக்குத்தான் இந்தியா வந்தேன். இவளுக்குப் பயப்படுற மாதிரி எதுவும் இல்லையே... கொஞ்சம் நல்லா பாருங்க.”
மருத்துவர் அவனை ஒரு பார்வை பார்த்தவர், “வாட்!? நீ எப்ப என்ன செய்வன்னு எங்களுக்குத் தெரியாது தான். அதுக்காகக் கல்யாணம் முடிப்பியா? இது உன் தாத்தா பாட்டிக்கு தெரியுமா? உன் அப்பன் இல்லன்னா நாங்க எதுவும் கேட்க மாட்டோம்னு நினைச்சிட்டியா?” என்றவர், பின் குரலை மென்மையாக்கி,
“இல்ல... உனக்காக நாங்க எதுவும் செய்ய மாட்டோம்னு நினைச்சியா?” என்றார்.
தர்மாவின் தந்தை ராமின் பால்ய நண்பர் என்பதால் அந்த உரிமை அவருக்கு இருந்தது.
“எனக்கு ஒரு பையன் இருக்கான் அங்கிள். தாத்தா பாட்டிக்குத் தெரியாது. நாளைக்குப் பேப்பர்ல வரும் போது தெரிஞ்சிக்கட்டும். இப்ப இவளைப் பற்றிச் சொல்லுங்க. எப்படி இருக்கா? Anything serious? ஏன் கண்ணு திறக்க மாட்டேங்கிறா?”
“டேய் படுவா... மயக்கத்துல இருந்தா எப்படி டா கண்ணு முழிப்பா? என்னத்த தொழில் பண்றியோ!” என்றவர், சலிப்புடன் சிரித்தபடி,
“போ. உன் தாத்தாவுக்காக வச்சிருக்கிற ட்ரிப்ஸ் ஸ்டாண்டை எடுத்துட்டு வா. ட்ரிப்ஸ் போடணும்.” என்றபடி அவளுக்குத் தேவையான சிகிச்சையைத் தொடங்கியவர்,
“ஆனா ஒன்னு... நிர்மல் ஸ்மார்ட் டா. அதனாலதான் உன் கிட்ட PA-வா இருக்கான். பையன் எனக்குப் போன் பண்ணி, ‘அவசரம்... this is confidential... நீங்கதான் போகணும்’னு சொல்லி, விவரம் சொல்லி தேவையான எல்லாத்தையும் எடுத்துட்டு வரச் சொன்னான். அதனாலதான் நான் தயாரா வர முடிஞ்சது.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், மீண்டும் அவனைப் பார்த்து,
“என்ன நடந்தது தர்மா? சின்ன வயசுல இருந்து உன்னைப் பார்க்கிறேன். நீ ஒழுக்கம்... நெறி தவறாதவன். வேறு யாரு இப்படிச் செய்தது? உன் எதிரிகளா? நீ சொன்னா உன் மனைவிக்கு full check-up செய்திடலாம்.”
அந்த வார்த்தைகள் அவன் நெஞ்சில் கத்தியாய் இறங்க,
“நோ... நோ... அங்கிள்... She is all right. இவ கண் முழிச்சா அதுவே எனக்குப் போதும்.”
அவனது தோளைத் தட்டியவர், “சீக்கிரம் குணமாகிடும். கவலைப்படாத.” என்று தைரியம் தந்து வெளியேறினார்.
அதன்பிறகு ஒரு நொடியும் மனைவியை விட்டு தர்மாதித்தன் விலகவில்லை.
அக்னியின் விரல்கள் அசைந்து... சிறு முனகலோடு... மூடியிருந்த இமைகளுக்குள் விழிகள் உருளவும், இவனது விழிகள் அதனை நாடிய நொடி, இரண்டே எட்டில் அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.
புருவங்கள் நெறிய, மெதுவாகக் கண்களைத் திறந்த அக்னி, கணவனைக் காணவும் முகம் சட்டென வெளிறியது.
“என் பிள்ள...” அவளது கைகள் பதற்றத்துடன் மகனைத் தேட, அவளின் அவசரத்தில் கையில் இருந்த ட்ரிப்ஸ் ஊசி சுறுக்கென வலியைத் தர,
“ஸ்ஸப்பா...” என்று முனகியவளை,
“என்னாச்சு?” எனப் பதறியவன் எழுந்து அமரச் செய்து, கையிலிருந்த பிளாஸ்திரியை இதமாக அகற்றினான்.
ஆனால், அவளது கவனம் அதில் இல்லை... சுற்றும் முற்றும் ஓடிய விழிகள் மகனைத் தேடின.
“என் பிள்ள எங்க சார்? நாங்க எங்காவது போய்டுறோம்... எங்கள விட்டுடுங்க. உங்களுக்குப் புண்ணியமா போகும் சார்... எங்கள விட்டுடுங்க...” என்றவளின் வார்த்தைகள் இவனை உறைய வைத்தன.
யாரோ அந்நிய ஆணிடம் பேசுவது போல மனைவி பேச, ‘ஒருவேளை தலையில எதாவது அடி பட்டிருச்சா? என்னை மறந்துட்டாளா?’ எனப் பயந்தவன், பரிவுடன் அவளது தலையை வருடி,
“சாகரி... என்னம்மா? என்னைத் தெரியுதா? சொல்லு... நான் யார்?” எனக் கேட்க,
இவள் அவனைப் பார்த்த பார்வையில் துளியும் காதல் இல்லை... நம்பிக்கை இல்லை... முழுவதும் வெறுப்பும் பயமும் மட்டுமே சுமந்த வெற்றுப்பார்வை அது.
“ஏன் தெரியாது? உங்களை எனக்கு நல்லாவே தெரியுமே! நடிச்சு என்னை ஏமாத்தி கல்யாணம் செய்ததும் இல்லாம, பொய் சொல்லி என்னை இங்க அழைச்சிட்டு வந்து, என் பிள்ளையை பறிச்சுகிட்டு... நாலு பேரை வச்சு என்னைய மிரட்டின ரவுடி... the great தர்மாதித்தன் சார் தானே நீங்க?”
என்றவளின் குரல் நடுங்கியது. “துரோகி... பச்சைத் துரோகி... எல்லாம் எனக்குத் தெரியும் சார்.”
இவனது நெஞ்சம் பிசைய, “இங்க பார்... நான் உன் கிட்ட பேசணும். அதுக்கு முன்னாடி இந்த ஜூஸையாவது குடி.”
“மாட்டேன்" முகத்தைத் திருப்பிக்கொண்டவள், “உங்க கையால எதையும் சாப்பிட மாட்டேன். என்னை விஷம் வச்சிக் கொன்னாலும் கொல்லுவீங்க. நான் வாழணும் சார்... என் மகனுக்காக நான் வாழணும்.” கேட்டவனின் தேகம் முழுவதும் ஆடியது...
‘என்ன வார்த்தை சொல்லிட்டா...’ “யுவனைப் பார்க்கணும்னா இதைக் குடி. அவனை அழைச்சிட்டு வரச் சொல்றேன்.”
அவன் சொல்லி முடிப்பதற்குள், “ஐயோ! அப்ப என் பிள்ளை இங்க இல்லையா? அவனை எங்க அடைச்சு வச்சிருக்கீங்க? வேணாம் சார்... அவன் குழந்தை . என்னைப் போல அவனை எதுவும் செய்திடாதீங்க. நானில்லாம அவன் இருக்க மாட்டான். என்னைத் தேடுவான்... நான் போறேன்.” பதறியபடி எழ முயன்றவளின் உடல் ஒத்துழைக்காமல் போக,
“ஹேய்...” மனைவியின் தோள்களைத் தாங்கிப் பிடித்து மீண்டும் அமர வைத்தவன்,
“நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன் இல்ல சாகரி. குழந்தையை அடைச்சு வைக்க? அதிலும் யுவனைச் செய்வனா? அவன் நல்லா இருக்கான்.”
“நல்லா இருக்கானா?” எனக் கேட்டவள் அவனைப் பார்த்து, “அப்ப என் பிள்ள என்னைத் தேடலையா? இல்ல சார்... அவன் என்னைக் காணாம அழுவான். நீங்க பொய் சொல்றீங்க.”
இந்தக் கேள்விக்கு நேராக அவளது கண்களைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தான் தர்மா.
உண்மைதான்... அவளது சின்னச் சிட்டுத் தாயைத்தான் தேடிக்கொண்டிருந்தான்...
மகனுக்காக... மகனுக்காக... என்று சொல்லிக்கொண்டு இங்கு வந்தவன், இந்தச் சில மணி நேரங்களில் மகனைப் பற்றியே மறந்துவிட்டான் தர்மா.
நேற்று காய்ச்சலில் இருந்ததால் யுவனுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்று காலையில் புதிதான இடத்தில் தாயைக் காணாமல் அவன் அழுத அழுகையைச் சமாளிக்க முடியாமல் நிர்மல் தர்மாவுக்கு அழைக்க, இவனின் சமாதான வார்த்தைகள் எதுவும் அவனைச் சென்றடையாமல் போக... வீடியோ காலில் யுவனுக்கு அக்னியைக் காட்டிய பிறகுதான் அமைதியானான் அவன்.
அதன்பிறகுதான் தர்மாவுக்கும் தன் மகன் நினைவுக்கு வந்தான்.
‘இந்தச் சில மணி நேரத்திலேயே மகனைச் சமாளிக்க முடியல... காலம் முழுக்க எப்படிச் சமாளிக்கப் போறேன்?’
அதிலும் நிர்மல் சொன்ன அந்த ஒரு வார்த்தை அவனுள் இன்னும் பயத்தை விதைத்திருந்தது.
“உங்களைத் தேடவே இல்ல பாஸ்.” அந்த வார்த்தையின் அர்த்தம் அவனுக்குள் அப்போது முழுமையாகப் புரியவில்லை... ஆனால் இப்போது...
“இதோ இங்க பார். யுவன் நல்லா இருக்கான். உன்னைக் கேட்டு அழுதாலும், இப்ப சமத்தா இருக்கான். இதோ பார்.” தன் கைபேசியில் இருந்த வீடியோவை அவளிடம் நீட்ட, அதை வாங்கியவள் ஆசை தீர மகனைப் பார்த்தாள்.
யுவன் சமத்தாக விளையாடிக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது கட்டிலில் கிடந்த தாயின் துப்பட்டாவை எடுத்துத் தன் முகத்தில் புதைத்துக்கொண்டு,
“ம்மா... ம்மா...” என்று அவனது மெல்லிய முனகல் அக்னியின் நெஞ்சை உடைத்தது.
“பாருங்க சார்... என் பிள்ளை என்னைத் தேடுறான்...”
இவள் கண்ணீரோடு சுட்டிக் காட்ட, இவன் தலையசைத்த நொடி அக்னி கேள்வியாய் அவனைப் பார்க்க, அதைப் புரிந்துகொண்டவனோ,
“இது யுவனோட தனி அறை. குழந்தைகளுக்குத் தேவையான எல்லா வசதியோடும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். ஒரு கேர் டேக்கரும் இருக்காங்க. நான் இல்லாதப்ப அவன் எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்க, அறையில் கேமராவும் fix பண்ணியிருக்கேன்.” என்றதும் அதிர்ச்சியுடன் வாயின் மேல் கை வைத்தவள்,
“அப்போ ... எல்லாமே பக்கா பிளானா? இவ்வளவும் செய்துட்டுத்தான் அங்க நடிக்க வந்தீங்களா? பெரிய சாதனைதான் போங்க சார்!” என்றவளின் எள்ளலை இவன் கண்டுகொள்ளவில்லை.
“சரி... யுவனைப் பார்த்துட்ட இல்ல. இப்ப ஜூஸ் எடுத்துட்டு வரேன்... குடி”
“இல்ல. எனக்கு என் பிள்ளை வேணும். அழைச்சிட்டு வாங்க” இவளது பிடிவாதத்தில் தாயின் உரிமை மட்டுமே இருந்தது.
தர்மா அவளை ஆழ்ந்து நோக்கியவன், “சாகரி... நான் உன் கிட்ட பேசணும். உன்னையும் யுவனையும் இனி பிரிக்கிற எண்ணம் எனக்கு இல்ல. அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் பேசிப்போம்.”
“முடியாது. முதல்ல என் பிள்ளை வரட்டும். அதுக்குப் பிறகு தான் எதுவும்.” அவளது உறுதியைப் பார்த்தவன், வேறு வழியின்றி நிர்மலுக்கு அழைத்து
“யுவனை அழைச்சிட்டு வா.” எனவும்,
சிறுது நேரத்தில் கதவு திறந்தது.
அப்போது தன்னைக் கேட்காத பிள்ளை, இப்போது தன்னைக் கண்டு தேடி ஓடி வருவானோ என்ற எதிர்பார்ப்பில் தர்மா விரைந்து சென்று அறை வாயிலில் நிற்க... யுவன் உள்ளே வந்ததும், தந்தையைப் பார்த்தவன் அடுத்த நொடியே,
“ஆதி... அம்மா எங்க?” எனக் கேட்டவனின் விழிகள் கட்டிலில் இருந்த தாயைக் காணவும் மலர்ந்தன.
“ம்மா!” எனக் கூச்சலிட்டபடி ஓடி வந்து அக்னியின் மேல் ஏறி அமர்ந்தவன்,
“ம்மா... யுவன் சமத்து... நோ கோபம்”
எனத் தாயின் தாடையைப் பிடித்துச் சமாதானப்படுத்த முயல, அக்னியின் முகம் கண்ணீரால் நனைந்தது.
“என் ராஜா... என் சாமி... என் தங்கம்... என் பட்டு...” மகனை வாரி அணைத்தவள், அவனது முகம் முழுவதும் முத்தமழை பொழியவும்
அந்தத் தாய்–மகன் பாசப் போராட்டத்தைப் பார்த்தபடி நின்றவனின் எண்ணம் எல்லாம், ‘அப்போ இவர்களின் கூட்டுக்குள் நான் இல்லையா?’ என்ற ஏக்கமாக அவனுள் உருப் பெற்றது. தன் மகனிடம் கூட உரிமை கொண்டாட முடியாத நிலை.
தாயின் மார்பில் முகம் புதைத்துக்கொண்டிருந்த யுவனைப் பார்த்தபடி, தன் உள்ளத்தில் பிறந்த அந்தச் சிறு வலியை யாரிடமும் சொல்லவும் முடியாமல் விழுங்கியவன், அவர்களின் உலகத்தில் தானொரு அந்நியன் போல உணர்ந்தான்.
ஒருபுறம் தன்னைப் பார்த்தாலே பயந்து ஒதுங்கும் மனைவி... மறுபுறம் தன்னைத் தேடக்கூட நினைக்காத மகன்...
இருவரையும் தன்னுடையவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை இருந்தும்... அவர்களின் கூட்டில் தான் இல்லை என்ற உண்மை இவனை உள்ளுக்குள் கொன்றது.
அவர்களைத் தன்னிடமிருந்து பிரித்து நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, எப்போது அவர்களைத் தன் உயிரோடு இணைத்துக் கொண்டான் என்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை.
இதுவரை தான் இழக்கக்கூடாதது என்ன என்று அவன் அறிந்ததே இல்லை.
இப்போது அறிந்தான்... தெளிந்தான்... அது... சாகரி...
அவளின் பிணைப்பாய் உயிரோடு இணைந்திருந்த அந்தச் சிறு உயிர்... அது தந்த பந்தம்... இது என் குடும்பம்...
இதைக் காதல் என்று சொல்ல அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால், அதே இந்த நொடி... அவள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற ஒரு எண்ணமே அவனது நெஞ்சை வெறுமையான பாழ்நிலமாக்கியது...
அது தந்த வலியில், மரணத்தின் பிடியில் சிக்குண்டவனைப் போலத் தவித்தான் தர்மாதித்தன்.