ஐந்து வயது பிஞ்சுப் பாலகனான யுவனுக்குத் தெரிந்த ஒரே பிரபஞ்சம், அவன் தாயின் மடி மட்டும்தான்... காலையில் கண் விழித்த நொடி முதல், இரவில் உறங்கச் செல்லும் நேரம் வரை, அவனது ஒவ்வொரு தேடலும் ஒரே வார்த்தையில்தான் தொடங்கும்... “அம்மா…”
அக்னி சமைக்கும்போது அவளது சேலைத் தலைப்பைப் பற்றிக்கொண்டு பின்னாலேயே நடப்பது… அவள் ஊட்டிவிட்டால் மட்டுமே சாப்பிடுவேன் என்று அடம்பிடிப்பது… விளையாடிக்கொண்டிருக்கும்போது ஓடிவந்து அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமிடுவது… என, யுவனின் ஒட்டுமொத்த உலகமும் அவளைச் சுற்றியே சுழன்றது.
அப்படிப்பட்ட ஒரு குழந்தையிடமிருந்து அவன் தாயைப் பிரித்து, தனக்குப் பிடித்தபடி ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துத் தரப்போகிறானாம் இந்தத் தர்மாதித்தன்!
தாயின் அன்பில் திளைத்த மகன், “பசிக்குது…” என்று சொன்னதும், ஆதி தந்த உணவை மறுக்க மனமில்லாமல், சிரித்தபடியே அவனுக்கு ஊட்டினாள் அக்னி.
ஒரு வாய் உணவு… ஒரு கதை… இடையிடையே சிரிப்பு… மகனுக்கு ஊட்டிக்கொண்டே தானும் உண்ண… அவர்களின் பேச்சும் சிரிப்பும் அந்த அறையையே நிறைத்திருக்க, எதிரே நின்றிருந்தவன் மட்டும் அந்த உலகத்தின் எல்லைக்கு வெளியே நிற்பவனாய் அந்நியப்பட்டுப் போனான்.
யுவன் உறங்கியதும், மகனின் கேசத்தை வருடிக்கொண்டிருந்தவளைப் பார்த்தவன், ஏதோ ஒரு முடிவை எடுத்தவனாய் முகத்தில் இறுக்கத்தைத் தேக்கி,
“சாகரி… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றான்.
அக்னியின் விரல்கள் ஒரு கணம் அசைவிழந்தன... அடுத்த நொடியே எதுவும் நடக்காதது போல மகனின் தலைமுடியை வருடுவதைத் தொடர்ந்தவள், அவனை நிமிர்ந்து பார்க்கக்கூட இல்லை.
“உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன். சில முடிவுகள் எடுத்திருக்கேன். அது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதா இருக்கும்”
“உங்களால் கிடைக்கிற எந்த நல்லதும் எனக்கு வேண்டாம்”
தலையை உயர்த்தாமலேயே வார்த்தைகளை வாளாய் வீசினாள்.
“ம்ப்ச்… சரி. உனக்கு இல்ல… எனக்கு, யுவனுக்கு இருக்கு. போதுமா? நான் என்ன சொல்ல வரேன்னு முதல்ல கேளு”
இதுவரை அவன் குரலில் இருந்திராத ஓர் அமைதி அதில் குடிகொண்டிருந்தது.
அக்னி அமைதியாக இருக்க… அறைக்குள் நிலவிய மௌனத்தில், கடலின் பேரிரைச்சல் கூடக் கண்ணாடிக்கு அப்பாலிருந்த ஓர் உலகத்தின் சத்தமாகவே கேட்டது.
“முதல்ல… நடந்ததையெல்லாம் மறந்துடு”
“எதை?”
“நான் உன் வீட்டுக்கு வந்தது… நீ இங்க வந்தது… நேற்றைய நிகழ்வு… உன் மேல எனக்கிருந்த கோபம்… எல்லாத்தையும்...”
“மறந்துட்டு…” என்றவள், நிதானமாகக் கேட்க,
“நானும் மறந்திடறேன். நீ என் தம்பிக்குச் செஞ்ச துரோகத்தையும் இனி பேச வேண்டாம். நடந்தது எதுவும் மாற்ற முடியாது. அதுக்காக உன்னை வாழ்நாள் முழுக்கத் தண்டிக்கணும்னு நினைக்கிற எண்ணம் எனக்கு இப்ப இல்லை”
அக்னியின் விழிகள் மெல்ல உயர்ந்தன...
“ஓ… நான் செய்த துரோகம்…” எனத் தனக்குள் முணுமுணுத்தவள், “உங்களுக்குப் பெரிய மனசு சார். நீங்க மறந்துட்டா மட்டும் போதுமா?” எனக் கசப்பான ஏளனத்துடன் கேட்கவும்...
“உனக்கு முன்னயிருந்த பணத் தேவைக்காக நீ அப்படி நடந்திருக்கலாம். இனிமேல் நீ பணத்துக்காகக் கஷ்டப்பட வேண்டாம். என்கிட்டயும் நிறைய இருக்கு.” என்றவன், சிறு இடைவெளிக்குப் பிறகு,
“எனக்கு உன் மேல கோபம் இருந்தது... இன்னும் இருக்கு. ஆனா எனக்கு யுவன் வேணும். நாம ரெண்டு பேரும் அவனுக்கு வேணும். நல்ல அம்மாவா… நல்ல மனைவியா… நீ இரு. நாம கடைசி வரைக்கும் யுவனுக்கு நல்ல அப்பா, அம்மாவா ஒரு உதாரணமா வாழலாம். இங்கயே… என்னோடவே இரு.”
என்றவனின் பார்வை அவள்மீது ஆழமாகப் பதிந்தது.
“நான் உன்னை மன்னிச்சிட்டேன் சாகரி.”
அந்தக் குரலில், மனைவியை மன்னிக்கும் வள்ளலின் பெருந்தன்மை ததும்பியது.
“அடடே…” வாய் விட்டே சிலாகித்தவள்,
“நீங்க அப்பாவாமே… அப்படி முழுசா நீங்க என் பிள்ளை மனசுல பதிஞ்சிட்டீங்கன்னு நினைக்கிறீங்களா?” என்ற கேள்வியில் அவனது உடல் இறுக,
“சாகரி!” என அதட்டியவனிடம்,
“சும்மா கத்தாதிங்க… வேற ஏதோ சொன்னீங்களே… என்ன சொன்னீங்க?” என ஒன்றும் புரியாதவள் போலக் கேட்கவும்...
“நீ இனிமேல் தனியா இருக்க வேண்டாம். இந்த வீட்டுல… என் குடும்பத்தோட நீயும் இருக்கலாம். நான் உன்னை மன்னிச்சிட்டேன்.”
“எதுக்கு?” எனக் கேட்டபடி கட்டிலின் தலைமாட்டைப் பற்றிக்கொண்டு மெல்ல எழுந்து நின்றவள், தள்ளாடிய கால்களைத் தரையில் அழுத்தமாக ஊன்றியபடி,
“நான் செய்த தப்பு என்ன? துரோகம் தான் என்ன? யாருக்குச் செய்தேன்?”
உடல் தளர்ந்திருந்தாலும், அவளது குரலில் இருந்த உறுதி மட்டும் சிறிதும் தளரவில்லை.
“என் தம்பிக்கு… உன் மனசாட்சிக்குத் தெரியும். சரி, திரும்பத் திரும்ப அதையே பேசாத. நான் தான் உன்னை மன்னிச்சிட்டேன்னு சொல்றேனே”
“ஏன் பேசக்கூடாது? அந்த உத்தம சிகாமணி சொன்னதைக் கேட்டு என்னை மன்னிக்க நீங்க யார்… முட்டாள்… நீங்க ஒரு முட்டாள். இப்பவும் நீங்களே தீர விசாரித்து கடைசியா அவன்கிட்ட கேளுங்க.. இப்பவும் அதே கதை தான் சொல்றானானு பார்ப்போம்...”
தீர்க்கமான பார்வையுடன் சொல்லி முடிக்க
"நான் ஏன் திரும்ப என் தம்பி கிட்ட கேட்கனும்? அப்போ.. அவன் பொய்யான கதையை சொன்னானு சொல்றியா?"
அவளது குரல் இப்போது இன்னும் கூர்மையாகவும்,
“ஐயா தர்மப் பிரபு… நான் செய்யாத தப்புக்கு என்னை மன்னிக்கிற உங்க பெரிய மனசுக்கிட்ட, என் பக்கத்தையும் கேட்கக் கொஞ்சம் இடம் தரச் சொல்லுங்க.”
முகம் இறுக, “நீ சொல்லப்போற கட்டுக்கதையையோ பொய்யையையோ கேட்க எனக்கு விருப்பமில்லை” என்றவனைப் பார்த்து
கசப்பாய் சிரித்தவள்,
“பொய்க்காரி… வேஷக்காரி… அப்பப்பா… எத்தனை வார்த்தைகள்! நீங்க உங்க தம்பியை நம்புங்க… ஆனா, அதைக் கண்மூடித்தனமா நம்பாதிங்க.”
ஒரு கணம் மூச்சைச் சீராக்கிக்கொண்டவள்,
“செய்யாத தப்புக்கு என் குணத்தை மாத்திக்கணுமா? ஒரு வார்த்தை என்கிட்ட கேட்காம… என் பக்கத்தை விசாரிக்காம… தீர்ப்பு எழுதிட்டு என்னை மன்னிச்சிட்ட உங்க பெருந்தன்மையைப் பார்த்து பூரிச்சுப்போய், உங்க தாராள மனசைக் கொண்டாடி உங்க பின்னாடி நான் வரணுமா?”
எனக் கேட்டவளின் விழிகள் கோபக் கனலில் சிவந்தன.
“என் மகனுக்காக என்றாலும்… உங்க மன்னிப்பு எனக்கு வேணாம் சார். அது எனக்கு அவமானம்”
“நீ இங்கிருந்து போயிடுவன்னு நினைக்கிறியா? இல்ல, நான் உன்னை விட்டுடுவேன்னு நினைக்கிறியா? என் மனைவியையும் மகனையும் நான் விட்டுத்தர மாட்டேன்”
“சும்மா பூச்சாண்டி காட்டாதீங்க சார். நீங்க பொய் சொல்லி என்னை ஏமாத்தினதை சீனி அண்ணாகிட்டையோ, ஜானு அம்மாகிட்டையோ சொல்ல எனக்கு ரொம்ப நேரமாகாது. உங்க பணபலத்திலும் ஆள்பலத்திலும் அவங்க சிக்கிக்கக்கூடாதுன்னுதான் நான் அமைதியா இருக்கேன்”
“ம்ஹூம்…” என்றபடி எழுந்தவன், மனைவியை நெருங்கி, தனது கைப்பேசியை அவளது கையில் திணித்தவன்...
“இங்க வந்த பிறகும் நான் அவங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசிட்டு தான் இருக்கேன். நீயும் பேசு. நான் உனக்குச் செய்த எல்லாத்தையும் சொல்லு.”
என்றவனின் விழிகள் மின்ன,
“ஆனா அதை உன்னால செய்ய முடியாது.” என்றவனை இவள் புருவம் நெறித்துப் பார்க்க...
“ஏன்னா…” இவனது சுட்டுவிரல் அவளது நெஞ்சைத் தொட்டது.
“நாம் சந்தித்த முதல் நாளே… நான் இங்க வந்துட்டேன்.”
என இறுமாப்புடன் மொழிந்தவன், பின் அவளது இரு விழிகளையும் சுட்டிக்காட்டி,
“அந்த நேசம் இங்க தெரிஞ்ச பிறகுதான் நான் உன்னை நெருங்கினதே”
என்றவனின் குரலிலிருந்த மமதை, அக்னியின் எரிச்சலை மேலும் கிளறியது.
கணவனின் கையைத் தட்டிவிட்டு தூர விலகி நின்றவளோ,
“அது அப்போ. இப்போ நான் என் பிள்ளைக்காக எதையும் செய்வேன். ஆனா எனக்கு அது தேவையில்லை”
என்றவள்,
“நீங்க என் மேல சுமத்தின குற்றத்தை, என் மகனுக்காக நான் நிரபராதின்னு நிரூபிச்சுத்தான் ஆகணும். நிரூபிப்பேன். அதுக்குப் பிறகு நான் எதுக்காக இந்தச் சிறையில் இருக்கணும்? நான் யாருக்கும் கட்டுப்பட்டவள் இல்லை”
“ஓ… நீ அப்படி வரியா? அதாவது, நீ குற்றவாளின்னு நிரூபணமானா நீ போக மாட்ட… இங்கதான் இருப்ப?”
“ஆமாம்” என்றவளின் குரலில் இம்மியளவும் தயக்கமில்லை.
“ஆனா ஒரு நிபந்தனை. உன் தம்பிக்குத் துணை போகாம… மூன்றாவது மனிதனா நின்னு, நீ தீர விசாரிச்சுத் தீர்ப்பு சொன்னா அதுக்கு நான் உடன்படுறேன்.”
அதைக் கேட்டவனின் முகத்தில் லேசான இறுக்கம் படர்ந்தது.
“உண்மை என்னன்னு தெரிஞ்ச பிறகு, அதை முதல்ல நீங்க நம்பணும். முழுசா ஏத்துக்கணும். அந்தப் பக்குவத்துக்கு நீங்க தயாரா இருங்க.”
என்றவளின் வார்த்தை இவனை உள்ளுக்குள் அறைய...
இவள் தன்னை நிரபராதி என்று மட்டும் சொல்லவில்லை… உண்மையைத் தேடி விசாரிக்கச் சொல்லி அவனுக்கே சவால் விடுகிறாள்.
அந்தச் சவால்தான், இவனது மனதில் முதல் முறையாகத் தம்பி மேல் ஒரு சிறு சந்தேகத் தீயைப் பற்ற வைத்தது. அதை ஏற்க மனமில்லாமல், உடனே கோபத்தில்,
“ப்பப்பா… என்னமா பேசுற! நான் பக்குவமாகணுமா? உனக்காக இல்ல. நீ சொல்ற பொய்யைப் பொய்யின்னு நிரூபிக்கவும்… என் தம்பி மாசு மரு இல்லாத தங்கம்னு நிரூபிக்கவும்… இந்த விஷயத்தை மறுபடியும் தொடர்றேன்”
“நல்லது. இவ்வளவுதான் என் வாதம். வேற எதையும் நான் சொல்ல விரும்பல. என்ன நடந்ததுன்னு உங்க தம்பிகிட்ட போய்க் கேளுங்க”
“கேட்கத்தான் போறேன். கேட்டுட்டு வந்து உன்னை என்ன செய்றேன்னு பாரு”
“என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்றவள், அடுத்தக் கணமே தள்ளாடி சாய முற்பட, இவனின் கை யோசனையின்றித் தானாகவே மனைவியைத் தாங்க நீளவும்...
அதை உதறியவள், சுவரைப் பற்றிக்கொண்டு தெம்பற்ற உடலுடன் தலைநிமிர்ந்து நின்றபோதும், அந்த நிமிர்வு மட்டும் சிறிதும் தளரவில்லை.
மனைவியின் விழிகளை இத்தனை நாள் காணாத ஒரு கோணத்தில் நேருக்கு நேர் சந்தித்தான் இவன்...
அதில் பொய் சொல்பவளின் பயமில்லை... குற்றம் செய்தவளின் தவிப்பில்லை...
மாறாக, “உண்மையைத் தேடிப் பாருங்கள்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே இருந்தது.
அந்த நம்பிக்கையே இவனது மனதை உறுத்தவும்...
'உண்மையில் ஏதோ நடந்திருக்குமோ?' என்று யோசித்தபடியே வெளியே செல்லத் திரும்பிய நேரத்தில்,
“ஒரு நிமிஷம், மிஸ்டர் தர்மாதித்தன்…”
அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு இவன் நின்றான்.
“இதையும் கேட்டுட்டுப் போங்க. நான் நிரபராதின்னு நிரூபணமாகிட்டா… ஒரு நொடி கூட நானும் என் பிள்ளையும் இந்த வீட்டுல இருக்க மாட்டோம் தெரிஞ்சிக்கங்க”
என்றவளின் குரலில் இருந்த உறுதி, இவனது நெஞ்சை அறுத்தது.
எவ்வித வார்த்தையும் இன்றித் தர்மா அங்கிருந்து விலகிச் செல்ல,
கட்டிலில் தளர்ந்து அமர்ந்தவளின் மனதிலிருந்த பாரம் கொஞ்சம் விலகியதுபோல் கண்களை மூடியவள்,
இனி தன் வாழ்வில் தன் மகனுக்கு மட்டுமே இடம் என்ற உறுதியை மனதுக்குள் ஏற்றுக்கொண்டாள்.
மறுநாள் காலை, இவன் தன் வீட்டுக்குள் நுழைந்த நொடி,
“தர்மா!” என்று அதிர்ந்து ஒலித்தது தாத்தாவின் குரல். எண்பத்தைந்து வயதிலும் அந்தக் குரலுக்கு அந்த வீட்டையே கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்தது.
தர்மா நின்று, “என்ன தாத்தா?”
வாஞ்சிநாதன் கையில் மடித்திருந்த நாளிதழை அவன் முன்னால் வீசி எறிய, பாட்டி அவருடைய சக்கர நாற்காலியை இறுகப் பற்றியபடி பதற்றத்துடன் இருக்க, நாளிதழின் முதல் பக்கத்தில்… நேற்று விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் ஒளிர்ந்தது.
இவனது கண்கள் அதிலேயே நிலைத்தன. “இது உண்மையா?” கேட்டவரின் குரல் நடுங்கியது.
“ம்…”
“‘ம்’னா என்ன? உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”
“ஆயிடுச்சு… பையனும் இருக்கான்.”
அந்தப் பதில் தாத்தாவின் கோபத்தை இன்னும் கொழுந்துவிட்டெரியச் செய்ய...
“நானும் உன் பாட்டியும் இன்னும் உயிரோடதான் இருக்கோம் டா! உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு… பிள்ளை இருக்கு… இதெல்லாம் ஊர் பத்திரிக்கையில போட்டு நான் தெரிஞ்சுக்கணுமா?”
“என் சூழ்நிலை அப்படி”
“என்ன டா பெரிய சூழ்நிலை? நான் உனக்கு என்ன பண்ணல? உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு எவ்வளவு பார்த்தேன் தெரியுமா? நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வைக்கலாம்னு இருந்தேன். எல்லாம் நம்ம தகுதிக்குள்ள இருக்கிறவங்க. ஆனா நீ அந்தஸ்து… குடும்பக் கௌரவம்… மரியாதை… எதையும் யோசிக்கலையா? எங்கிருந்தோ ஒரு வட்டுச் சிறுக்கியை கட்டிட்டு வந்திருக்க!”
“என்னங்க…” பாட்டி அடக்க முயல,
முகம் கல்லென இறுக, “அவளைப் பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசாதீங்க.”
என்றவனின் குரல் வீடெங்கும் எதிரொலித்தது.
“இந்தக் குடும்பத்துக்கு மருமகளாவும்… எனக்கு மனைவியாவும் வர சாகரிக்கு மட்டும்தான் தகுதி இருக்கு. வேற எந்தப் பொண்ணுக்கும் அந்தத் தகுதி இல்லை.”
“அவளா? யாரு அவள்? எந்தக் குடும்பம்? எந்த அந்தஸ்து? பெத்தவங்க யாருன்னாவது தெரியுமா அவளுக்கு?”
“எனக்கு எதுவும் தெரிய வேணாம். அவ என் மனைவி. அது போதும் எனக்கு.”
“இல்ல! இது சரி வராது… நீ வேற யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கோ. இவளை இரண்டாம் தாரமா வைத்துக்கோ… இல்ல, தவறான முறையில்கூட இருக்கட்டும்… இது உன் வாழ்க்கை மட்டுமில்ல. இந்த வீட்டோட கௌரவம். அதனால அவளை இந்த வீட்டோட மருமகளா ஏத்துக்க நான் தயாரா இல்ல. இந்த வீட்டு வாசலைத் தாண்டி அவளைக் கொண்டு வரக்கூடாது.”
கண்கள் சிவக்க, “தாத்தா… பார்த்துப் பேசுங்க. என் வாழ்க்கையில திருமணம் ஒரு முறைதான். அது சாகரியோடதான்.”
என்றவன், சற்று தயங்கி,
“இது என் வீடு. இங்க என் மனைவி, என் பிள்ளை வரக்கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. உங்களுக்கு இங்க இருக்க விருப்பம் இல்லன்னா… நீங்க உங்க வீட்டுக்குப் போங்க.”
“அவரு கோபத்துல பேசுறாரு தர்மா…” பாட்டியின் குரலில் வலி வழிந்தது. “நீ ஏன் எங்களைப் பிரிச்சுப் பேசுற? நீ இப்படியெல்லாம் செய்வன்னு நாங்க நினைக்கல டா.”
அவர்களின் பாசம் இவனை ஒரு கணம் பேச்சிழக்கச் செய்தது.
“எனக்குச் சாகரி பிடிச்சிருந்தது பாட்டி. அதான் திருமணம் செய்துகிட்டேன். உங்ககிட்ட சொல்லி செய்திருந்தா, தாத்தா நிச்சயம் தடுத்திருப்பார். அவளும் நம்ம அந்தஸ்தைப் பார்த்துப் பயந்து ஒதுங்கியிருப்பா. அதான் யாராலும் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு… பத்திரிக்கையில வர்ற மாதிரி செய்தேன்.”
“நீ இப்படிச் செய்தது எனக்கு எவ்வளவு பெரிய தலைக்குனிவு தெரியுமா? நாளைக்கு நான் போற இடமெல்லாம் எல்லாரும் என் காதுபடப் பேசுவாங்க. வாஞ்சிநாதன் தன் பேரனுக்கு ஒன்றுமில்லாத அநாதையைக் கட்டிவச்சிருக்கார்… குலம் கோத்திரம் தெரியாதவதான் மருமகள்னு பேசுவாங்க. அது எனக்கு எவ்வளவு அசிங்கம் தெரியுமா? ஏன் டா எனக்குப் போய் நீ பேரனா வந்த?”
“சும்மா இருங்க!” பாட்டியின் குரல் இம்முறை ஓங்கி ஒலித்தது.
“இப்ப என்ன நடந்துடுச்சுன்னு அசிங்கம்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க. கௌரவமாம்… மரியாதையாம்… அந்தக் கௌரவத்தையும் மரியாதையையும் யார் தந்தது? நம்ம பேரன் தர்மா தந்தது.
பிள்ளையை இழந்து நாம நின்னப்போ… பல கோடி மதிப்புள்ள சரக்குக் கப்பலோட கப்பலா கடல்ல கரைஞ்சு போனப்போ… படிச்சுக்கிட்டிருந்த இவன்தான் நம்ம குடும்பத்தையும் தொழிலையும் மீட்டவன். அவனுக்குத் தெரியும் எது சரி… எது தப்புன்னு.”
என்றவர் பேரனிடம்,
“நீ போ தர்மா. நீ போய் ரெஸ்ட் எடு. அவங்க ரெண்டு பேரும் இப்ப எங்க இருக்காங்க?”
எனக் கேட்டவரின் குரலில் கோபத்தின் சுவடுகூட இல்லை. வருத்தம் மட்டுமே மேலோங்கி இருந்தது.
“எனக்குத் தாத்தா மாதிரி கோபம் இல்ல டா, வருத்தம்தான். உன் கல்யாணத்தைக் கண்குளிரப் பார்க்கக் கொடுத்து வைக்கலையேன்னு தான் கஷ்டமா இருக்கு. எனக்கு இருக்கிற ரெண்டு பேரனோட திருமணத்தையும் நடத்துற கொடுப்பினை எனக்கு இல்லையே… அதான்.”
“கங்கா… எதுவும் வருத்தப்படாத. இவன் ப்ளான் போட்டு நம்மளை ஊருக்கு அனுப்பிட்டு இவ்வளவும் செய்திருக்கான். அப்பவே அவளை ஓட ஓட விரட்டினவன் நான். இப்ப விரட்ட எவ்வளவு நேரம் ஆகும்?”
“அன்று அவ வெறும் அக்னிசாகரி… இன்று இந்தத் தர்மாதித்தன் மனைவி.”
என இவன் எச்சரிக்க,
“யார் கிட்டடா நெஞ்சை நிமிர்த்திச் சவால் விடுற?”
என்று மீசையை முறுக்கிக்கொண்டவர்,
“நீ என் பேரனா நடந்துக்கவே இல்ல. அர்ஜுன்தான் என் பேரன். எனக்குத் தப்பாம பிறந்தவன். நான் சொல்றவளைத்தான் கட்டணும்னு சொல்லியிருந்தா… அதை அப்படியே கேட்டு நடப்பான். எத்தனை பொண்ணுங்களை என் பேச்சைக் கேட்டு அவன் வாழ்க்கையிலிருந்து வெட்டி விட்டிருக்கான் தெரியுமா?”
என்றவரின் இறுமாப்பான பேச்சில், இத்தனை வருடங்களாகப் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வைத்திருந்த தம்பியின் பிம்பம்… மெல்ல… துளி துளியாக… விரிசல் விட ஆரம்பித்தது.