கடலூர், தேவனாம்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் வாஞ்சிநாதன்–கங்காதேவி தம்பதியர். கடல் வணிகத்தில் அக்காலத்திலேயே தனக்கென ஒரு செல்வாக்கை உருவாக்கிய குடும்பம் அது... இவர்களுக்கு ராம், லக்ஷ்மணன் என இரு மகன்கள்.
மூத்த மகன் ராமுக்கு, தங்கள் குடும்பத்தின் அந்தஸ்துக்கும் செல்வச் செழிப்புக்கும் சற்றும் குறையாத குடும்பத்தைச் சேர்ந்த சீதாவைப் பார்த்து மணம் முடித்தார் வாஞ்சிநாதன். அவர்களுக்குத் தர்மாதித்தன், அர்ஜுன் என இரு மகன்கள்.
இளைய மகன் லக்ஷ்மணன் கனடா சென்று படித்தபோது, அங்குள்ள கிறிஸ்தவப் பெண்ணான இவாலினைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள, அதை ஏற்றுக்கொள்ள முடியாத கோபம் இன்றுவரை அவருக்குள் நீடித்தது.
மகனிடமே பேசவில்லை... அவன் குடும்பத்தையும் தன் வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ளவில்லை... அந்தளவுக்கு ரோஷத்தையும் அந்தஸ்தையும் விட்டுக்கொடுக்காதவர் வாஞ்சிநாதன். எண்பத்தைந்து வயதிலும் தன் பிடிவாதத்திலும் குடும்பக் கௌரவத்திலும் சிறிதும் தளராதவர்.
───
தங்கள் அறையில் அக்னி, யுவனுடன் இருந்த நேரம்... அவளது அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த வேலையாள், கையிலிருந்த பைகளை அங்கிருந்த இருக்கையில் வைத்துவிட்டு,
“மேம்... உங்களைப் பார்க்க பெரியம்மா வந்திருக்காங்க...” என்றான்.
“பெரியம்மாவா?” ஒன்றும் புரியாமல் அக்னி விழித்திருக்க, அடுத்த நொடியே அறைக்குள் நுழைந்தார் கங்காதேவி.
யாரிவர் என்ற குழப்பத்தோடு அக்னி அவரைப் பார்த்து நிற்க, அருகிலிருந்த யுவன் வந்தவரை ஆர்வமாகப் பார்த்தபடி தாயின் காலைக் கட்டிக்கொண்டான்.
பெரியவரின் பார்வை முழுவதும் யுவன் மீதே நிலைத்தது... அந்தச் சிறு முகத்தைப் பார்த்த நொடியில், அவரது கண்களில் பாசம் பொங்கியது.
“என் கொள்ளுப்பேரனா நீ?” என்று கேட்டவரின் குரலில் அத்தனை மகிழ்ச்சி.
“வாடா... என் பேராண்டி...” என்று ஆசையோடு அழைத்தவரை அக்னி குழப்பத்துடன் பார்த்திருக்க,
“நீங்க... நீங்க யாருங்கம்மா?”
“என்னைப் பற்றி உன் புருஷன் எதுவும் சொல்லலையா?” சிறு புன்னகையுடன் கேட்டவர், “என் பேர் கங்காதேவி. தர்மாவோட பாட்டி... இவனோட கொள்ளுப்பாட்டி.” என்றார்.
அந்த வார்த்தை அக்னியின் உள்ளத்தில் மின்னலாய் இறங்கியது. பயத்தில் மகனை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
அதை உணர்ந்த கங்காதேவி உடனே தன் குரலை மென்மையாக்கி,
“பயப்படாதம்மா... நான் உன்னை எதுவும் கேட்க வரல. இப்படி வந்து உட்கார்... உன்னையும் இவனையும் பார்த்துட்டுப் போகத்தான் வந்தேன். உன் பேர் ஏதோ சொன்னான் தர்மா... நான் தான் மறந்துட்டேன். வயசாகுது இல்ல... உன் பேர் என்னம்மா? என் குட்டிப் பேரன் பேர் என்ன?” என்று அடுத்தடுத்து கேள்விகளை அடுக்க, தடுமாறிப்போனவளாக...
“என் பேர் அக்னிசாகரி... இவன் பேர் யுவராஜன்.”
“சரியான பேருதான்...” என்று பேரனைப் பார்த்துக் கண் கலங்கியவர், “எங்க வீட்டு ராஜகுமாரனுக்கு ராஜா பேருதான் வைத்திருக்கீங்க.” என்றபடி தன் கையிலிருந்த பையைத் திறந்து காட்டினார்.
“வாடா கண்ணா... பாட்டி உனக்காக என்னவெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாரு. சாக்லேட்... டிரஸ்... பொம்மை...” என்று இன்னும் அக்னியிடமே இருந்தவனை ஆசையோடு அழைத்தவர்,
“உன் அப்பன் உன்னைப் பற்றிச் சொன்னதுல இருந்து, உன்னை எப்போ பார்ப்போம்னு என் மனசே துடிச்சிட்டு இருந்துச்சு. இப்பதான் என் கண்ணால பார்க்குறேன்.” என்றார்.
பின்னர் இன்னொரு பையை அக்னியிடம் நீட்டி, “இந்தா... இது உனக்கு.”
அக்னி தயங்க, “முதல் முதலா என் பேத்தியைப் பார்க்க வர்றேன். எங்க வீட்டு மூத்த மருமக நீ. அதான் புடவையும் நகையும் வாங்கிட்டு வந்தேன்.” என்றவரின் பாசம் அக்னியை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவளது கண்கள் விரிந்தன.
“எதுக்கு இப்படிப் பார்க்கிற? தர்மா எதையுமே யோசிக்காம செய்யுறவன் கிடையாது. அவன் எடுத்த முடிவுக்குப் பின்னாடி ஒரு காரணம் இருக்கும். அதை எல்லாராலையும் புரிஞ்சிக்க முடியாது... ஆனா அவன் மனசு தப்பான வழிக்குப் போகாது.”
அக்னி பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நிற்க,
“நேத்து அவன் தாத்தா கிட்ட பேசும்போது, அவன் குரலிலிருந்த பிடிவாதம் சாதாரணப் பிடிவாதம் இல்லம்மா. ‘அவள் எனக்குப் பிடிச்சவள்’ன்னு மட்டும் சொல்லல... ‘அவள்தான் எனக்கு ஏற்றவள்’ன்னு நின்னு பேசினான்.” என்றவரின் குரலில் இப்போது மென்மை கூடியது.
“என் பேரன் இப்படி யாருக்காகவும் பிடிவாதமா நின்னது இல்ல... அதான் அவன் தேர்ந்தெடுத்தவள் எப்படி இருப்பாளோன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு வந்தேன்.” என்றவர் அக்னியின் முகத்தை உற்று நோக்கியவர்...
“இப்ப உன்னைப் பார்த்ததும் புரிஞ்சிடுச்சு... என் பேரன் தப்பான முடிவு எடுக்கல. அவனுக்கு ஏத்த துணையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான். எனக்கு அதுவே போதும். நீ அவனுக்கு ஏத்த பொண்டாட்டிதான்.
என்ன... அந்தக் கிழவனுக்குத்தான் ஆ... ஊனா... மூக்குக்கு மேல கோபம் வந்துடும். அதைத் தர்மா பார்த்துப்பான். பேரனை நேர்ல பார்த்ததும் அந்த மனுஷன் என்ன ஆகப்போறார்னு எனக்குத் தெரியாதா?”
என்றபடி யுவனை வாரி அணைத்து மடியில் அமர்த்திக்கொண்டு, அவன் கன்னத்தில் முத்தமிட்டவர்.
“யாரு என்ன சொன்னாலும் பரவாயில்லை. நீ எங்க வீட்டு மருமக... அதை மட்டும் மறந்துடாதே.”
அந்த வார்த்தைகள் அக்னியின் உள்ளத்தை எதிர்பாராத விதமாக நெகிழச் செய்தன.
ஆனால், தன்னைப் பற்றி எதையும் விசாரிக்காமல்... தான் யார், எங்கிருந்து வந்தவள், எதற்காக இந்த வீட்டுக்குள் வந்தாள் என்று துருவித் துருவி கேட்காமல்... தன் கொள்ளுப்பேரனைப் பார்த்த மகிழ்ச்சியை மட்டுமே முகத்தில் சுமந்து நிற்பவரை நம்ப அவளது மனம் இடம் தரவில்லை.
'எப்படி நம்புவது? இந்தக் குடும்பத்திலிருந்து வந்த ஆதியே அதற்கு உதாரணம் தானே... திரும்பத் திரும்ப என்னை முட்டாளாக்க நினைக்கிறார்களா போதும்... நேசத்தின் பலனாய் நான் ஆதியிடம் ஏமாந்தது போதும். ஆனால் இனி என்னை ஏமாற்ற இவர்களிடம் என்ன இருக்கு? ஓ... கொள்ளுப்பேரனா?
அவனை என்னிடமிருந்து பிரிக்க முடியாது என்பதை இவங்களும் தெரிஞ்சுக்கட்டும். கடைசி ஒரு வாய்ப்பாக உதவி கேட்டுப் பார்ப்போம்... செய்தால் நல்லது... இல்லன்னா நம்ம வழியைப் பார்த்துட்டுப் போய்கிட்டே இருப்போம்...'
என்று முடிவெடுத்தவளின் உதடுகள் தானாகவே அசைந்து ...
“ம்மா... எனக்கு ஒரு உதவி செய்றீங்களா?”
“என்னம்மா?”
“நானும் என் பிள்ளையும்... இங்கிருந்து தப்பிச்சுப் போக உதவுறீங்களா?”
பெரியவரின் முகத்திலிருந்த புன்னகை நொடியில் உறைய.
“என்னம்மா சொல்ற நீ? அப்ப... நீ என் பேரன் பொண்டாட்டி இல்லையா? இவன் எங்க பேரன் இல்லையா? ஆனா தர்மா சொன்னானே...” குரல் தடுமாற
“உங்களுக்குள்ள என்ன நடந்தது? இந்தக் கிழவிக்குக் கொஞ்சம் புரியும்படி சொல்லு.”
“நான் உங்ககிட்ட எல்லா உண்மையும் சொல்லிடறேன். அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு வாக்கு கொடுங்க. இந்த வீட்டை விட்டு எங்களைப் பாதுகாப்பா அனுப்பி வைப்பேன்னு வாக்கு கொடுங்க... ப்ளீஸ் ம்மா.” என்று கெஞ்சியது அவளது குரல்.
“அது முடியாதும்மா. நிச்சயம் தர்மா உங்களை விட்டுத் தர மாட்டான்... எனக்குப் பதில் சொல்லு. யாரோ ஒரு பெண்ணை விருப்பம் இல்லாம இப்படி அழைச்சிட்டு வந்து மனைவின்னு என் பேரன் சொல்ல மாட்டான்... உண்மையைச் சொல்லு... நீ அவன் மனைவி தானே? விரும்பித்தானே கட்டிக்கிட்ட?”
“கல்யாணம்... மனைவி... விருப்பம்... இதெல்லாம் இல்லைன்னு நான் மறுக்க மாட்டேன்.” என்றவளின் குரலில் சொல்ல முடியாத துயரம் கலந்திருந்தது.
“இது எதுவும் சரி வராது ம்மா... இனி நாங்க இங்கிருக்க மாட்டோம். எப்படியோ நான் போகத்தான் போறேன். அது பாதுகாப்பா இருக்கணும்னு நினைச்சேன். சரி... விடுங்க. நான் பார்த்துக்கிறேன்.”
அவளது குரலில் இருந்த உறுதி கங்காதேவியின் கவனத்தை ஈர்த்தது.
இது வெறும் கோபத்தில் கணவனை விட்டு விலகத் தீர்மானித்துவிட்ட ஒரு பெண்ணின் குரலாகத் தெரியவில்லை.
“இல்ல... இல்லம்மா. நான் உதவுறேன். சரி... சொல்லு. உனக்கும் தர்மாவுக்கும் என்ன பிரச்சனை? என்ன நடந்தது?” என்று அழுத்தமாகக் கேட்கவும்.
மகனை வெளியே அனுப்பியவள், கடந்த இரண்டு நாட்களாகத் தன் நெஞ்சுக்குள் புதைத்து வைத்திருந்த வேதனையை, வார்த்தைகளாக உடைத்துக் கொட்டினாள்.
கணவன் தன் மீது சுமத்திய ‘துரோகி’ என்ற பழியைத் துடைத்தெறிய... இத்தனை வருடங்களாகத் தன் உயிரோடு சேர்த்து சுமந்து வந்த அந்த ரகசியத்தை, நெஞ்சை அறுக்கும் வலியோடு அவள் வெளிப்படுத்தத் தொடங்கினாள்.
அங்கே, அவள் சொல்லத் துணிந்த அதே ரகசியத்தின் தடத்தைத் தேடி, தன் தம்பியிடம் விடாப்பிடியாக கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தான் தர்மாதித்தன்.
───
இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு...
கஷ்ட ஜீவனில் பிறந்தவர்கள் வேலன்–பூமயில் தம்பதியர்... உழைப்பைத் தவிர வேறெதையும் நம்பாதவர்கள். உறவுகளும் கைவிட... சொந்தமாக வீடு, வாசல் என்று எதுவுமில்லாமல், தங்களுக்குச் சொந்தமான குட்டி யானை வண்டியில் குடும்பத்துடன் ஊர் ஊராகச் சென்று, கூடாரம் அமைத்து, கிடைக்கும் வேலைகளைச் செய்து, இருந்ததைக் கொண்டு நிறைவாக வாழ்ந்த நாடோடிகள்.
தனக்கு மூத்த மகள் பிறந்ததும், இந்த வறுமையையும் கஷ்டத்தையும் கடந்து, நெருப்பைப் போலத் தைரியமாகவும், கடலைப் போலப் பரந்த உலகத்தோடும் வாழ வேண்டும் என்ற ஆசையில் அவளுக்கு ‘அக்னிசாகரி’ என்று பெயர் வைத்திருந்தார் வேலன்.
அன்றும் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி திருச்சி நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது அந்தக் குட்டி யானை வண்டி.
வண்டியை ஓட்டும் தந்தையின் பக்கத்தில் எட்டு வயது அக்னிசாகரி அமர்ந்திருக்க, மறுபக்கம் பூமயிலின் கையில் இரண்டு வயது கயல்விழி...
திடீரென வண்டியின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வண்டி தாறுமாறாகச் செல்ல, குழந்தைகளைப் பாதுகாக்கும் பதற்றத்தில் வேலன்,
“பூவு... நீ கயலோட அந்தப் பக்கம் குதி!” என்று மனைவிக்குக் கட்டளையிட்டு, அக்னியைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு மறுபக்கம் குதித்தார்.
அதில், வேகமாகச் சென்ற வண்டியிலிருந்து குழந்தையைக் காப்பாற்ற தன்னைச் சுருட்டிக்கொண்டு குதித்த பூமயில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வேலன் பல நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடியபின் அவரும் இறந்துபோக... அந்த நாளோடு... எட்டு வயது அக்னிசாகரியும், இரண்டு வயது கயல்விழியும் ஆதரவற்றவர்களானார்கள்.
காவலர்கள் வந்தார்கள்... யார் யாரோ ஏதேதோ கூடி நின்று பேசினார்கள்.
சிறு பிள்ளைகள் என்பதால் சிலர் உதவ முன்வந்தார்கள்... இந்தக் காப்பகம் போ... அந்தக் காப்பகம் போ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு விரட்டியடிக்க... இறுதியில் இருவரும் கடலூர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.
அங்கிருந்துதான் அவர்களின் மீதி வாழ்க்கை தொடங்கியது.
அக்னிக்காவது... தாய், தந்தை இருவரும் இனி திரும்பி வரப்போவதில்லை என்பது புரிந்திருந்தது. வலித்தாலும், இனிமேல் தனக்கு யாருமில்லை என்ற உண்மையை அவளால் மெல்ல ஏற்றுக்கொள்ள முடிந்தது.
ஆனால், இரண்டு வயதுக் கயல்விழிக்கு அந்தப் புரிதல் ஏது? தாய் எங்கே போனாள் என்பதுகூடத் தெரியாமல், அவளைத் தேடி ஏங்கியபடி அழும் ஒவ்வொரு முறையும், அக்னியின் மனம் துடித்தது.
அந்தப் பிஞ்சு உயிருக்கு இனி தாயைத் தேடும் ஏக்கம் இருக்கக் கூடாது... தாயின் மடிக்காக ஏங்கும் குழந்தைக்கு, தன்னால் முடிந்தவரை அந்த அரவணைப்பாகவே இருக்க வேண்டும் என்று எட்டு வயதிலேயே மனதுக்குள் முடிவு செய்தாள் அக்னி. அன்றிலிருந்து, கயல்விழிக்கு அவள் அக்கா மட்டுமல்ல... அவளுக்கான அத்தனை உறவுமாகிப் போனாள்.
“நாங்க கயல்விழியைப் பார்த்துக்கிறோம்... நீ போய்ப் படி.” என்று மதர் எத்தனை முறை சொன்னாலும், அக்னியால் தங்கையை விட்டுவிட்டு நகர முடியவில்லை. தாய், தந்தையை இழந்த பிறகு தனக்கென மிஞ்சியிருந்த ஒரே உயிர் அவள் என்பதால்... கயல்விழியைப் பிரிவது, இன்னொரு முறை தன் உலகத்தையே இழப்பது போலிருந்தது.
கயலுக்கு ஊசி போடும்போது அக்னியின் கண்கள் கலங்கும்... அக்காவை யாராவது கடிந்து கொண்டால், கயல்விழியின் கண்களில் கண்ணீர் தேங்கும். ஒருத்தியின் வலி இன்னொருத்தியின் நெஞ்சைத் தொடும் அளவுக்கு, ரத்த உறவையும் தாண்டி அவர்களுக்குள் ஒரு பந்தம் மெல்ல மெல்ல உயிராகிப் போனது.
கயல்விழி பள்ளி செல்லும் வயதை எட்டியதும், இருவரும் காப்பகப் பள்ளியிலேயே படித்தனர். வகுப்புகள் வேறாக இருந்தாலும், சிறு இடைவேளை கிடைத்தாலே போதும்... தங்களுக்காகக் காத்திருக்கும் ஒரே உயிரைத் தேடி இருவரும் ஓடி வந்துவிடுவார்கள்.
தனக்குக் கிடைத்த தின்பண்டத்தை காக்காக் கடி கடித்து அக்காவுக்கும் கொடுத்து, அவள் ருசி பார்த்ததைப் பார்த்து மகிழ்வாள் கயல். காப்பகத்தில் தனக்குக் கிடைக்கும் சின்னச் சின்னப் பொருட்களைக்கூடத் தங்கைக்காகச் சேர்த்து வைத்து, அவளுக்கு அணிவித்து அழகு பார்ப்பாள் அக்னி.
வாழ்க்கை அவர்களுக்குப் பெரிதாக எதையும் கொடுக்கவில்லை... ஆனால், ஒருவரை ஒருவர் மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. ஒரே போர்வைக்குள் வளர்ந்த இரு பாசப் பறவைகள் என்பதைக் காட்டிலும்... ஒருவரை ஒருவர் அணைத்தபடியே தங்கள் தனிமையை மறந்து வளர்ந்த இரு உயிர்களாகிப் போனார்கள்.
நாட்கள் வருடங்களாக உருண்டன.
சிரித்தால் குழி விழும் குண்டுக் கன்னங்கள்... துருதுருப்பான கண்கள்... வெள்ளந்தியான பேச்சு... அப்பாவித்தனமான சிரிப்பு என்று கயல்விழி காப்பகத்துக்கே பிடித்த குழந்தையாகிவிட...
அக்னியோ அவளை,
“என் பொம்மாயி...” என்றுதான் கொஞ்சுவாள்.
காப்பகத்துக்கு வருபவர்கள் யாராவது கயலின் கன்னத்தைக் கிள்ளி, இரண்டு வார்த்தை அன்பாகப் பேசிவிட்டாலே போதும்...
அன்று முழுவதும்,
“அந்த அண்ணன் எவ்வளவு அன்பா பேசினாருல்ல... வந்த அக்காவும் எவ்வளவு பாசமா நடந்துக்கிட்டாங்க இல்ல...” என்று சொல்லிக்கொண்டிருப்பாள்.
வெளியுலகம் தெரியாத அந்தச் சின்னச் சிட்டுக்கு, அன்பாகப் பேசும் ஒவ்வொரு மனிதரும் தங்கள் உறவாகவே தெரிந்தார்கள்.
ஒருநாள், பத்து வயது கயல்விழியை ஒரு மருத்துவ தம்பதியர் தத்தெடுக்க முன்வந்தபோது, மதர் அக்னியை அழைத்து,
“அக்னி... தயங்காதே. கயல் நல்லா படிக்கிற பொண்ணு. அவங்களைப் பார்த்தாலே வசதியான குடும்பம்னு தெரியுது. சமூகத்துல நல்ல அந்தஸ்தும் இருக்கு. நாளைக்கு உன் தங்கையைக் கூட டாக்டருக்குப் படிக்க வைக்கலாம். உன் தங்கை டாக்டர் ஆனா, உனக்குப் பெருமை தானே?” என்று எடுத்துச் சொல்ல,
அக்னி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கவும்...
“இங்க இருக்கிற எல்லாருக்கும் இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது. கயலுக்கு இப்ப கிடைச்சிருக்கு. அவ சின்னப் பொண்ணு... அவளுக்கு எது நல்லதுன்னு இப்ப நீ தான் முடிவு செய்யணும்.”
மதரின் ஒவ்வொரு வார்த்தையும் இவளது மனதைத் துளைத்தது. பதில் சொல்ல முடியாமல் தனிமையில் வந்து அமர்ந்தவளின் கண்களில், அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்து வழிந்தது.
‘தங்கையை விட்டுப் பிரிந்து நான் எப்படி வாழ்வது...?
தாய், தந்தையை இழந்த அந்த நாளில், என்னைத் தனியா விட்டுப் போகாமல் எனக்குத் துணையா இருந்தது என் தங்கைதானே...
இப்ப அவளையும் இழந்துட்டா... எனக்கு யார் இருக்கா?
அப்போ... நானும் அநாதை தானே?’
என்ற எண்ணமே அவளது நெஞ்சைச் சிதைத்தது.
ஒருபுறம், தங்கையைத் தன்னைவிட்டு பிரிக்க மனம் கதறியது.
மறுபுறம்...
தன் கண்முன்னே விரிந்தது... கயல்விழிக்குக் கிடைக்கப்போகும் வசதியான எதிர்காலம்.
தான் பட்ட பசியையும்... அனுபவித்த வறுமையையும்... கயல் ஒருநாளும் அனுபவிக்கக் கூடாது. தன் வாழ்க்கை எப்படிப் போனாலும் பரவாயில்லை... தங்கையின் வாழ்க்கையாவது நன்றாக அமைய வேண்டும்.
அந்த எண்ணம், அவளது பாசத்தையே அவளுக்கு எதிராக நிறுத்தியது.
கடைசியில், தங்கையின் எதிர்காலத்துக்காகத் தன் அன்பையே தியாகம் செய்ய முடிவு செய்தாள் அக்னி.
தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ஒன்றும் நடக்காததுபோல் கயல்விழியிடம் அனைத்தையும் பொறுமையாக எடுத்துச் சொல்ல...
கயல் அக்காவையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்கவும், அவளது விழிகளில் தெரிந்த கேள்விக்கு, அக்னியால் பதில் சொல்ல முடியவில்லை.
அந்த இரவு முழுவதும் கயல் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
அக்னியோ...
தங்கையை இழக்கப்போகும் வலியை நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டு, விடியும்வரை அவளருகிலேயே இருந்தாள்.
மறுநாள்...
அந்த மருத்துவர் தம்பதியர் கயல்விழியை அழைத்துச் செல்ல வந்தபோது,
“உனக்கு எங்களோட வர விருப்பம்தானே?” என்று கேட்டனர்.
கயல் பதில் சொல்லாமல்.. அக்னியைப் பார்க்க...
தங்கையின் விழிகளிலிருந்த ஏக்கத்தைப் பார்த்ததும், அக்னியின் இதயம் உடையத் துவங்க...
ஆனாலும், தன் அழுகையை மறைத்து சிரிக்க முயன்றவளாக,
“விருப்பம்னு சொல்லு கயல்... போ. நீ அங்க நல்லா இருப்ப.”
அந்த ஒரு வார்த்தை...
அக்னியின் இதயத்திலிருந்து வந்தது தான்.. ஆனால் முழுமையாக வந்ததா என்று கேட்டாள்?
அடுத்த நொடியே, கயல்விழி அக்னியின் கையை இறுகப் பற்றிய படி
“நான் உன்னை விட்டுப் போக மாட்டேன் க்கா!” என்று கதறியவள்,
“எனக்கு எதுவும் வேணாம்... எனக்கு என் அக்கா தான் வேணும் மதர்... நான் உங்க கூட வரல!” என்று கண்ணீரோடு அழுது கரைய...
அந்த வார்த்தைகளில், கயலின் உலகமே அவளது அக்காதான் என்பது அப்பட்டமாகத் தெரிந்திட, செய்வதறியாமல் நின்ற அந்த மருத்துவ தம்பதியர், இறுதியில் அங்கிருந்து நகர்ந்தனர்.
அக்னியால் அதற்குமேல் தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல், தங்கையை வாரி அணைத்துக்கொண்டு கதறி அழுதிட,
யாருமற்ற அந்த இரு உயிர்களும், அன்றைய நாளில் ஒருவரையொருவர் மட்டுமே தங்களுக்கான உலகமாக எண்ணி, தங்களுக்குத் தாங்களே ஆறுதலாகி, இறுகப் பற்றிக்கொண்டனர்.
ஆனால்...
அன்று தங்கையின் எதிர்காலத்துக்காக எடுத்த அந்த முடிவே, பின்னாளில் அக்னியின் நெஞ்சுக்குள் ஆறாத காயமாக மாறியது.
கயல்விழியின் வாழ்க்கையில் நடந்த அந்தக் கருப்புச் சம்பவத்தை நினைக்கும் ஒவ்வொரு முறையும்,
‘அன்றே கயலைத் தத்துக் கொடுத்திருக்கலாமே...’ என்ற எண்ணம் மட்டும், காலம் கடந்தும் அக்னிசாகரியை விடவில்லை. ஒவ்வொரு முறையும் நினைவுக்கு வரும்போது அவளின் நெஞ்சை மீண்டும் மீண்டும் கிழித்தது.